Wednesday, August 13, 2008

நிஜமா நல்லவனுக்கு ஒரு பகிரங்க (அ) அந்தரங்க கடிதம்

இந்த கடிதத்தை எழுத வேண்டாம் என்று நினைத்து போனிலும், சாட்டிலும், மெயில் மூலமும், நண்பர்கள் மூலமும் இது விடயமாகஅண்ணன் நிஜமா நல்லவனுக்கு ஞாபகமூட்டியும், அவர் அதை அசட்டை செய்த காரணத்தால் இதை மக்கள் மத்தியில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த பகிரங்க கடிதத்தை எழுதுவதற்காக ரூம் போட்டு யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய எங்கள் ‘தல' கவிஞர் நிஜமா நல்லவன் பாரதிக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் நிஜமா நல்லவனுக்கு,
நலம். நலமறிய ஆவல்....
இக்கடிதத்தை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும். இத்தகைய இக்கட்டான நிலைக்கு என்னைத் தள்ளியது தாங்கள் தான் என்பதை இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன். ஏனெனில் நான் சாதாரணமாக எழுதும் கடிதங்கள் கூட தங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்ற தோற்ற மாறுபாடு என்னுள் எழுந்துள்ளது.

நிற்க... தங்களது வலைப் பூவை தாங்கள் மொக்கையாக எழுத ஆரம்பிக்கும் போது நான் அறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள். சில தொழில் நுட்ப உதவிகள் செய்ததையும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை என எனது உள்மனது சொல்கின்றது. ஆனால் தற்போது நீங்கள் செய்து வரும் காரியங்கள் எனக்கு மன உளைச்சலை அதிகமாகி விட்டது என நீங்கள் அறிந்தால் வருத்தப்படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் சில நாட்களுக்கு தங்களது அன்பான வாசகர்கள் அடங்கிய நிஜமா நல்லவனைக் கலாய்ப்பவர்கள் சங்கம் (நி.ந.க.ச) தங்களது பேராதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதை ஆரம்பிக்க தங்களது உறுதுணையும் இருந்தது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இந்நிலையில் நி.ந.க.சங்கத்தில் சேரும் அனைவருக்கும் ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி வாங்கித் தரப்படும் என்று தாங்கள் உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன். தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்கும் போது இதை நீங்கள் சொன்னதை நீங்கள் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை.

அணி அணியாக தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷூக்கு ரசிகர் சேர்ந்தது போல் நி.ந.க.சங்கத்திற்கு ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு சேரவில்லை என்றாலும், தானைத் தலைவர் அஞ்சா நெஞ்சன் வலையுலக சூப்பர் ஸ்டார் தல நிஜமா நல்லவன் அறிவித்த அறிவிப்பு எக்காலத்திலும் பொய்யாகி விடக் கூடாது என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையில் ஐந்து பவுன் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்படுகின்றனர்.

இங்கு இரண்டு முக்கிய விடயங்களை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன்.
1. தமிழர்களின் தொண்டு தொட்டு வரும் மரபுக்கு ஏற்ப தங்களது ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தர தயாராக இருக்கும் எங்களுக்கு அந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஒரு பொருட்டல்ல
2. தங்கத்தின் விலை சரிந்துள்ள இந்த நாட்களில் தங்கச் சங்கிலி கொடுக்கத் தொடங்கினால் நிறைய ரசிகர்களை சேர்க்க இயலும் .

அதே போல் கடந்த மாதம் நடந்த நி.ந.க.சங்க மாநில மாநாட்டிற்கு வந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு வழங்கிய பிரியாணி பொட்டலத்திற்கும் இன்னும் பணம் செட்டில் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இவைகளை எனது சொந்த நலன் கருதி இங்கு சொல்லவில்லை. நி.ந.க.சங்கத்திற்கு ஆட்களை அலைகடலென திரட்டும் நோக்கிலும், தலயின் புகழ் எட்டு திக்கும் பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கிலுமே இதை எழுதுகிறேன்.

தங்களின் மேலான பதிலுக்காக தமிழ் மணத்தின் பல சீனியர் உறுப்பினர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

'தல'யின் புகழ் பாடும் அணியின் தலைவர்

தமிழ் பிரியன் சவுதி அரேபியக் கிளை

வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.

122 comments:

மது... said...

நானும் வழிமொழிகிறேன்
மது - குவைத் கிளை

மது... said...

மீ த பஸ்ர்ட்

மது... said...

//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

இது சூப்பர்

மது... said...

//என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.//

ஒன்னும் புரியலையே... சரி விடுங்க எதுவா இருந்த என்ன தங்க சங்கிலி கிடைத்தால் சரி

VIKNESHWARAN said...

மலேசிய கிளை.

வால்பையன் said...

எனக்கும் ஒரு நல்ல பொறுப்பா கொடுங்கப்பா
(ஐஞ்சு பவுன் செயின் வந்துரனும்)

மது... said...

//நி.க.ச//

நி. ந. க. ச.

மது... said...

//சவுதி அரேபியக் கிளை
குவைத் கிளை
மலேசிய கிளை.//

உலகம் முழுவதும் ரசிகர் இருக்காங்க என்று சொன்ன நம்பனும்

நாமக்கல் சிபி said...

வழிமொழிகிறேன்!

நி.ந.க.ச,

திருமங்கலம் கிளை,
சென்னை 600040

மது... said...

நிஜமா நல்லவர் நிஜமாவே நல்லவர்தான் அது எல்லாம் கரெக்டா கொடுத்துடுவார். நீங்க பண்ணவேண்டியது எல்லாம் கிளைவாரியா உறுப்பினர் பெயர்களையும் தலைவர் பெயரையும் பதிவு செய்தால் போதும்.

எதாவது பிரச்சனை என்றால் தமிழ்பிரியன் ஒருங்கிணைப்பாளரிடம் தொடர்பு கொள்ளவும்.

ஆயில்யன் said...

யாருப்பா அது என் சிங்கை அண்ணனை கலாய்க்க என்னியவே கூப்பிடறது!

ரொம்ப வற்புறுத்துனா நான் வேணும்னா வெளியிலேர்ந்து ஆதரவு கொடுக்கிறேன் :)

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

நான் இச்சங்கத்தில் சேர விரும்புகிறேன்

தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு அல்ல

உறுப்பினராக ஆக வேண்டும் என்ற தீராத அவாவினால்

சேர்ந்த பின் தங்கச் சங்கிலியா அல்லது சேரும் போதே தங்கச் சங்கிலியா

எப்போ டெலிவரி

தமிழன்... said...

எத்தனை பேருப்பா இன்னைக்கு கடிதம் எழுதி இருக்காங்க...

தமிழன்... said...

பாவம்யா அந்த அங்கிள்...

தமிழன்... said...

பாவம்னு நான் நிஜமா நல்லவனை சொல்லலை...

தமிழ் பிரியன் said...

///மது... said...

நானும் வழிமொழிகிறேன்
மது - குவைத் கிளை///
கிளைக்கான அடையாள அட்டையைக் காட்டும் படி சகோதரியிடம் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தமிழ் பிரியன் said...

///மது... said...

மீ த பஸ்ர்ட்///
ஆமாம்... நி.ந.க.சங்கத்தின் முதல் பதிவுக்கு முதல் கமெண்ட் போட்ட தங்களுக்கு கோல்டு கார்டு தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழன்... said...

அண்ணே நீங்க எழுதப்போறதா சொன்ன கடிதம் இந்த மாட்டர்தானா

தமிழன்... said...

முதல்லயே சொல்லிருக்கலாம்ல...

தமிழன்... said...

சங்கத்துக்கு நிதி சேத்து அதை தன்னோட எக்கவுண்டுல போட்டதை விட்டுட்டிங்களே...

தமிழ் பிரியன் said...

///மது... said...

//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

இது சூப்பர்///
வரலாற்றின் புரட்டிப் போடும் பக்கங்களில் நி.ந.க.சங்கம் இடம் பெறும் என்பதை இங்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

தமிழன்... said...

///நி.ந.க.சங்கத்தில் சேரும் அனைவருக்கும் ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி வாங்கித் தரப்படும் என்று தாங்கள் உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன்///

ஆமா ஆமா..
(விசயத்துல கவனமா இருப்பம்ல)

தமிழ் பிரியன் said...

///மது... said...

//என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.//

ஒன்னும் புரியலையே... சரி விடுங்க எதுவா இருந்த என்ன தங்க சங்கிலி கிடைத்தால் சரி///
'தல'யைப் போலவே காரியத்தில் கண்ணாய் இருக்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

//VIKNESHWARAN said...

மலேசிய கிளை.///
நன்றி கிளையில் நிறைய உறுப்பினர்களைச் சேர்க்கும் படி சங்கத் தலைமை கேட்டுக் கொள்கின்றது.

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கப்பூர் கிளையில இப்பவே 20 பேரு இருக்காங்க, அவர்களுக்கு உடனடியாக 20 ஐந்துபவுன் சங்கிலிகள் அனுப்பிவைக்கும்படியும், இன்னும் ஆர்வமுடன் சேர காத்திருக்கும் ஆயிரக்கணக்காண ரசிகர்களுக்கு கொடுக்க வசதியாக ஒரு 20000 ஐந்துபவுன் சங்கிலிகளை முன்கூட்டியே அனுப்பும்மாறும் உலகத்தலைமையகத்தை சிங்கப்பூர் கிளை சார்பாக கேட்டுக்கொள்(ல்)கிறோம்.

ஜோசப் பால்ராஜ் said...

//உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.//


பின்நவீனத்துவத்தையெல்லாம் கழட்டிவைச்சாத்தான் தல தரப்போற தங்கசங்கிலிய மாட்டிக்க முடியுங்களா?

மங்களூர் சிவா said...

பட்டையை கிளப்பிட்டீங்க...

மங்களூர் சிவா said...

ஜூப்பர்

மங்களூர் சிவா said...

//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

நன்றி நன்றி

மங்களூர் சிவா said...

மங்களூர் கிளை

மங்களூர் சிவா said...

/
மது... said...

உலகம் முழுவதும் ரசிகர் இருக்காங்க என்று சொன்ன நம்பனும்
/

கொலை வெறி ரசிகர்கள்!!!

பரிசல்காரன் said...

அஞ்சு பவுனா? சொக்காஆஆஆஆஆஆஆஅ

அரை கிராமைக் கண்ணுல காட்டினாலே போதுமே..

நானும் வரேன்.. நானும் வரேன்...

தமிழன்... said...

ஆமா நல்லவரை காணலையே எங்க போனார்...

பரிசல்காரன் said...

தமிழ்மணத்துல ”சமையல்” ல கூட இந்தப் பதிவு வருது!

என்ன கொடுமை சரவணா இது!

பரிசல்காரன் said...

தமிழன் இங்க வந்தாச்சா?

தமிழன்... said...

///தங்களது வலைப் பூவை தாங்கள் மொக்கையாக எழுத ஆரம்பிக்கும் போது நான் அறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள்///

அப்ப இப்ப எழுதறதுக்கு பெயர் என்னவாம்...

தமிழன்... said...

பரிசல்காரன் said...
\
தமிழன் இங்க வந்தாச்சா?
\
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்போம்...

தமிழன்... said...

இனி கொஞ்ச நாளைக்கு கடிதங்களாகவே எழுதறதன்னு முடிவு பண்ணிட்டேன்...

தமிழன்... said...

ஆமா என்கையில ஸ்கூல் லீவு லெட்டர் கொஞ்சம் இருக்கு பதிவா போடலாமா...?

தமிழன்... said...

தமிழ் பிரியன் வாங்க வாங்க...

தமிழன்... said...

ஆமா தங்கம் தாறது இருக்கட்டும் சங்கத்துக்கு ஒரு கொடி செய்யுங்கப்பா..?

தமிழன்... said...

உடல் மண்ணுக்கு உயிர் நமீ....

தமிழன்... said...

உடல் மண்ணுக்கு உயிர் நமீதா...

தமிழன்... said...

அடச்சே...

தமிழன்... said...

கோச்சுக்காதிங்க தல...

தமிழன்... said...

உடல் மண்ணுக்க உயிர் நிஜமா நல்லவனுக்கு...

தமிழன்... said...

உடல் மண்ணுக்கு
உயிர் நிஜமா நல்லவனுக்கு...

தமிழன்... said...

மொக்கைப்பதிவுகள் கண்ட எங்கள் சங்கத்தலைவன்...

தமிழன்... said...

நிஜமா நல்லவன்...

தமிழன்... said...

வாழ்க...!

Anonymous said...

ippave kannai kadduthu. innum ennvellaam seyya porangalo

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

எனக்கும் ஒரு நல்ல பொறுப்பா கொடுங்கப்பா
(ஐஞ்சு பவுன் செயின் வந்துரனும்)///
கொங்கு மண்டலத்தில் நண்பர் பரிசலுடன் இணைந்து சங்க பணிகள் செய்யும்படி தலைமை பரிந்துரை செய்கின்றது.

தமிழ் பிரியன் said...

///மது... said...

//நி.க.ச//

நி. ந. க. ச.///
சகோதரியின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் பிரியன் said...

///மது... said...

//சவுதி அரேபியக் கிளை
குவைத் கிளை
மலேசிய கிளை.//

உலகம் முழுவதும் ரசிகர் இருக்காங்க என்று சொன்ன நம்பனும்///
உலக முழுவதும் மட்டுமல்ல... அண்ட சராசரங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கை படிவம் கேட்டு மெயில் தலைமைக்கு மெயில் வந்துள்ளது.

தமிழ் பிரியன் said...

///நாமக்கல் சிபி said...

வழிமொழிகிறேன்!

நி.ந.க.ச,

திருமங்கலம் கிளை,
சென்னை 600040////
சென்னையின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளையும் சேர்த்து கவனிக்கும்படி தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது

தமிழ் பிரியன் said...

///மது... said...

நிஜமா நல்லவர் நிஜமாவே நல்லவர்தான் அது எல்லாம் கரெக்டா கொடுத்துடுவார். நீங்க பண்ணவேண்டியது எல்லாம் கிளைவாரியா உறுப்பினர் பெயர்களையும் தலைவர் பெயரையும் பதிவு செய்தால் போதும்.

எதாவது பிரச்சனை என்றால் தமிழ்பிரியன் ஒருங்கிணைப்பாளரிடம் தொடர்பு கொள்ளவும்.///

நன்றி! நன்றி! நன்றி! நன்றி!நன்றி! நன்றி!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
யாருப்பா அது என் சிங்கை அண்ணனை கலாய்க்க என்னியவே கூப்பிடறது!
ரொம்ப வற்புறுத்துனா நான் வேணும்னா வெளியிலேர்ந்து ஆதரவு கொடுக்கிறேன் :)///
பதிவைப் போட ஐடியாவும், பிழை திருத்தமும் செய்து கொடுத்து விட்டு இப்படியா வெளியே இருந்து ஆதரவு தருவது? சங்க பொதுக்குழுவைக் கூட்டி உங்களை சங்கத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...
அன்பின் தமிழ்பிரியன்
நான் இச்சங்கத்தில் சேர விரும்புகிறேன்
தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு அல்ல
உறுப்பினராக ஆக வேண்டும் என்ற தீராத அவாவினால்
சேர்ந்த பின் தங்கச் சங்கிலியா அல்லது சேரும் போதே தங்கச் சங்கிலியா/
எப்போ டெலிவரி///

உங்களுடைய ஆர்வத்துக்கு நன்றி!
///எப்போ டெலிவரி///
சீ சீ சீ வெக்கமா இருக்கு சார்

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

எத்தனை பேருப்பா இன்னைக்கு கடிதம் எழுதி இருக்காங்க...///
முடியலையே நண்பா! இதையும் மற்ற கடிதங்களுடன் ஒப்பீடு செய்வது சங்கத்தை அசிங்கப்படுத்துவதாக அமையும். எனவேஏதாவது சொல்வதாக இருந்தால் 'தல'யை குறி வைத்து சொல்லவும்.

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

பாவம்யா அந்த அங்கிள்...///
அன்ணே! இதில் ஏதும் நுண்ணரசியல் இல்லையே?... அவ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

அண்ணே நீங்க எழுதப்போறதா சொன்ன கடிதம் இந்த மாட்டர்தானா///
இது சங்கத்து லெட்டர் பேடில் எழுதப்பட்ட அதிகாரப் பூர்வமான கடிதம்

தமிழ் பிரியன் said...

//தமிழன்... said...

முதல்லயே சொல்லிருக்கலாம்ல...///
நானும் முதலிலேயே அந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கொடுத்து விடும்படிக் கூறினேன். ‘தல' கெட்கவில்லை அதனால் தான் இந்த பகிரங்க கடிதம்

தமிழ் பிரியன் said...

தமிழன்... said...

///நி.ந.க.சங்கத்தில் சேரும் அனைவருக்கும் ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி வாங்கித் தரப்படும் என்று தாங்கள் உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன்///

ஆமா ஆமா..
(விசயத்துல கவனமா இருப்பம்ல)///
அதே அதே

தமிழ் பிரியன் said...

/// ஜோசப் பால்ராஜ் said...

சிங்கப்பூர் கிளையில இப்பவே 20 பேரு இருக்காங்க, அவர்களுக்கு உடனடியாக 20 ஐந்துபவுன் சங்கிலிகள் அனுப்பிவைக்கும்படியும், இன்னும் ஆர்வமுடன் சேர காத்திருக்கும் ஆயிரக்கணக்காண ரசிகர்களுக்கு கொடுக்க வசதியாக ஒரு 20000 ஐந்துபவுன் சங்கிலிகளை முன்கூட்டியே அனுப்பும்மாறும் உலகத்தலைமையகத்தை சிங்கப்பூர் கிளை சார்பாக கேட்டுக்கொள்(ல்)கிறோம்.////

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! தல சிங்கையில் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதால் அங்கேயே பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் பிரியன் said...

///ஜோசப் பால்ராஜ் said...
//உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.//
பின்நவீனத்துவத்தையெல்லாம் கழட்டிவைச்சாத்தான் தல தரப்போற தங்கசங்கிலிய மாட்டிக்க முடியுங்களா?///

சங்கத்து செய்லபாடுகளை ஒருங்கிணைக்கும் போது மனவியல் சார்ந்த உள்ளார்ந்த விடயங்களில் இருக்கக் கூடிய முரண்பாடுகளின் கோட்பாடுகளையும், பின்நவீனத்துவ சிலாக்கிய சிக்கல்களையும் அவிழ்த்து விட்டு விட்டு களத்தில் இறங்கி தலயின் பெருமையை நிலைநாட்ட வேண்டி வருகின்றது.

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
பட்டையை கிளப்பிட்டீங்க...///
மங்களூர் கிளைக்கு எச்சரிக்கை! எக்காரணம் கொண்டு பொதுக் கூட்டங்களில் பட்டை சப்ளை இல்லை. தேவைப்பட்டால் டாஸ்மார்க் சரக்கும். மெரினாவில் கூட்டம் நடக்கும் போது மட்டும் சுண்டகஞ்சியும் சப்ளை செய்யப்ப்படும்.

தமிழ் பிரியன் said...

/// மங்களூர் சிவா said...

ஜூப்பர்///
நன்றி நன்றி

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//
நன்றி நன்றி///
:)

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
/
மது... said...

உலகம் முழுவதும் ரசிகர் இருக்காங்க என்று சொன்ன நம்பனும்
/
கொலை வெறி ரசிகர்கள்!!!///
நமது கொள்கைகளுக்காக தல யை தீக்குளிக்க வைக்கவும் தயங்க மாட்டார்கல் என தெரிவ்த்துக் கொள்கிறோம்.

தமிழ் பிரியன் said...

///பரிசல்காரன் said...
அஞ்சு பவுனா? சொக்காஆஆஆஆஆஆஆஅ
அரை கிராமைக் கண்ணுல காட்டினாலே போதுமே..
நானும் வரேன்.. நானும் வரேன்...///
ஏனுங்ண்ணா! யாருங்ண்ணா நீங்க? இம்புட்டு ஆர்வத்தோடு வந்தி இருக்கீகளே? அண்ணிகிட்ட சொல்லிப்புட்டீங்களா கமெண்ட் போட?

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...
ஆமா நல்லவரை காணலையே எங்க போனார்...///
ரசிகர்களின் அன்பில் 'புல்'லடித்து விட்டதாம்

தமிழ் பிரியன் said...

///பரிசல்காரன் said...

தமிழ்மணத்துல ”சமையல்” ல கூட இந்தப் பதிவு வருது!

என்ன கொடுமை சரவணா இது!///
இதிலென்ன ஆச்சரியம்... தமிழ்மணத்தில் அனைத்து பகுப்புகளிலும் இந்த பதிவை வர வைத்து விட்டோமே?

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...
///தங்களது வலைப் பூவை தாங்கள் மொக்கையாக எழுத ஆரம்பிக்கும் போது நான் அறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள்///
அப்ப இப்ப எழுதறதுக்கு பெயர் என்னவாம்...///

அப்பவேன்னா அப்பவும் இப்பவும்ன்னு தான் அர்ததமாகும்.... :))))

குசும்பன் said...

//கூட தங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்ற தோற்ற மாறுபாடு என்னுள் எழுந்துள்ளது.

நிற்க... //

படிச்சிக்கிட்டே வரும் பொழுது எது ஒய் நிற்க சொல்றீர்? நின்னுக்கிட்டு எல்லாம் என்னால குனிஞ்சு மானிட்டரை பார்த்து படிக்க முடியாது!!!

குசும்பன் said...

//இத்தகைய இக்கட்டான நிலைக்கு என்னைத் தள்ளியது தாங்கள் தான் என்பதை இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள ஆசைப்படுகிறேன். //

தள்ளுரதுதான் தள்றீங்க ஒரு நல்ல ஏரி, குளம், குட்டையா பார்த்து தள்ள கூடாது!!!:(((

குசும்பன் said...

//உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன். தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்கும் போது இதை நீங்கள் சொன்னதை நீங்கள் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை.//

அல்ரெடி அவரை ஸ்ட்டேட்டஸ் மெசேஜில் மைனஸ் பத்து பைசாவுக்கு ஏலம் விட்டாச்சு! அவரை ஏலம் எடுத்தவர் வால் பையன், இனி அவரிடம் தான் உரிமை இருக்கிறது, யாரும் அவர் உரிமை இல்லாமல் கலாய்தால் அது பிளாக் சட்டபடி குற்றம்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தங்கமெல்லாம் எங்க ஊரில் சேஃப்டி இல்லங்க..வேறெதும் தரச்சொல்லுங்க :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அணி அணியாக தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷூக்கு ரசிகர் சேர்ந்தது போல்
//

எங்கள் வெயிட்டை உலகிற்கு உணர்த்திய அண்ணன் தமிழ்ப்பிரியனுக்கு நன்றி!நன்றி!நன்றி!


அப்புறம் சங்கம் வைக்கும் அளவிற்கு பாரதி என்ன எங்க தல ரித்தீஷ்ச விட கவர்ச்சியா?

அப்துல்லா
பொருளாளர்
அகில உலக அண்ணன் ரித்தீஷ் மன்றம்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அய்யய்யோ! பழக்க தோஷத்தில முழுசா படிக்காம முதல்ல இரண்டு பின்னூட்டம் போட்டுட்டேன்.ஐந்து பவுனா? சங்கத்தில என்னையும் சேர்த்துக்கங்க!என்னையும் சேர்த்துக்கங்க!என்னையும் சேர்த்துக்கங்க!
ரித்தீஷவிட பாரதிதான் கவர்ச்சி.என்னையும் சேர்த்துக்கங்க!

மது... said...

////தமிழ் பிரியன் said...
///மது... said...

நானும் வழிமொழிகிறேன்
மது - குவைத் கிளை///
கிளைக்கான அடையாள அட்டையைக் காட்டும் படி சகோதரியிடம் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.///

அகில உலக நி. ந. க. ச. நிர்வாகியிடமே நீங்க அடையாள அட்டை கேட்கறீங்க. சரி பரவாயில்லை தனி மடலில் அனுப்பி வைக்கிறேன்.

sumathi said...

ஹலோ
மே ஐ கம் இன்? என்ன நடக்குது இங்க?

எல்லாம் சரி பெங்களூர் கிளைக்கு யாரும் இன்னும் போட்டி போடவில்லையா? அல்லது முன் வரவில்லையா?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

அப்ப நானும் கும்மிக் கொல்கிறேன்.. :P

கிரி said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

அப்ப நானும் கும்மிக் கொல்கிறேன்.. :P//

:-)))))))))

குரங்கு said...

====
இவைகளை எனது சொந்த நலன் கருதி இங்கு சொல்லவில்லை. நி.ந.க.சங்கத்திற்கு ஆட்களை அலைகடலென திரட்டும் நோக்கிலும், தலயின் புகழ் எட்டு திக்கும் பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கிலுமே இதை எழுதுகிறேன்.

தங்களின் மேலான பதிலுக்காக தமிழ் மணத்தின் பல சீனியர் உறுப்பினர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
====

நானும் வழிமொழிகிறேன்.

குரங்கும் காத்துக்கிட்டு இருக்குங்கிறத சேத்துக்குங்க தமிழ் பிரியன் :)

மிருகத்தையெல்லம் வெயிட் பன்ன வச்ச பாவம் சும்மாவிடாது நிஜமா நல்லவன்.

புதுகைத் தென்றல் said...

நான் இந்தப் பதிவைப் படிக்கலை. நான் இல்ல.

நான் இந்தக் கூட்டத்தில சேரலை நிஜமா நல்லவன். (அக்கான்னு அழகா கூப்பிடுவீங்க. அதனால 5 பவுன் செயினை மாமன் சீரா அம்ருதாவுக்கு கொடுத்திடுங்க. யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்.)

யாருப்பா அது? தம்பியை கலாய்ப்பது.

புதுகைத் தென்றல் said...

நான் சொன்னதை மட்டும் மறந்திடாதீங்க நிஜமா நல்லவன்.

குரங்கு said...

மரக் கிளை

NewBee said...

தம்பி,

நலமா? :)

நி.ந. பாவம்...:(((

(நி.ந., நான் உங்கள சப்போர்ட்டு பண்ணியிருக்கேன் ஞாபகம் இருக்கட்டும். 5 தடவை நல்லா (நல்ல டிசைனாத் தேடி, 5 தங்க பிஸ்கெட்டா) ஞாபகம் வச்சுக்குங்க :P)

வடகரை வேலன் said...

ஏம்பா,

கோவைப் பகுதிய எனக்குக் கொடுத்திடுங்க. எவ்வளவு த்ங்கம் தாரீங்களோ அவ்வளவு உறுப்பினர் நம கைவசம் ரெடியா இருக்கங்க.

தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

அடப்பாவிகளா ஒரு அப்பாவிய இப்படியா கும்முறது?

மது... said...

யாரோ அப்பாவியாம்...

நிஜமா நல்லவன் said...

//மது... said...
நானும் வழிமொழிகிறேன்
மது - குவைத் கிளை//


அடிப்பாவி தங்கச்சி....நல்ல பதிவு(கண்டுக்காதீங்க) எல்லாம் போட்டுட்டு படிக்க சொன்னா கண்டுக்காம போயிட்டு எனக்கு ஆப்பு வச்சிருக்கிற பதிவுல முத கமென்ட் போட்டிருக்கியே....நல்லா இரு தாயி!!!

நிஜமா நல்லவன் said...

//மது... said...
மீ த பஸ்ர்ட்//


ரொம்ப முக்கியம்:)

மது... said...

சரி அப்போ நூறாவது கமெண்ட் என்னோடதுதான

மது... said...

//'தல'யைப் போலவே காரியத்தில் கண்ணாய் இருக்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள்.//

அண்ணன் வழி தங்கைக்கும் ஆகும்

மது... said...

நிஜமா நல்லவன் said...
//மது... said...
மீ த பஸ்ர்ட்//


ரொம்ப முக்கியம்:)

முக்கியம் இல்லையா பின்ன ?

மது... said...

me the 100th

மது... said...

now i feel happy

நிஜமா நல்லவன் said...

//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//


ஆமா பெரிய உலக வரலாறு....பொட்டி தொறக்கலைன்னா ஒருத்தரும் எட்டி பார்க்க போறது இல்ல.....அத ஒத்துக்கோங்க:)

நிஜமா நல்லவன் said...

//மது... said...
now i feel ஹாப்பி//

நீ தான் நூறு....நான் ஜஸ்ட் மிஸ்ஸு:(

மது... said...

//அடிப்பாவி தங்கச்சி....நல்ல பதிவு(கண்டுக்காதீங்க) எல்லாம் போட்டுட்டு படிக்க சொன்னா கண்டுக்காம போயிட்டு எனக்கு ஆப்பு வச்சிருக்கிற பதிவுல முத கமென்ட் போட்டிருக்கியே....நல்லா இரு தாயி!!!//

சரி சரி கண்டுகாதீங்க.. எனக்கு புரியறமாதிரி இருக்கிற பதிவுலதானே கமெண்ட் போடமுடியும்

நிஜமா நல்லவன் said...

//மது... said...
யாரோ அப்பாவியாம்...//

ஹலோ யாரோ அப்பாவி இல்ல உன்னோட அண்ணன் தான்:)

நிஜமா நல்லவன் said...

///மது... said...
//என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.//

ஒன்னும் புரியலையே... /////மது... said...
சரி சரி கண்டுகாதீங்க.. எனக்கு புரியறமாதிரி இருக்கிற பதிவுலதானே கமெண்ட் போடமுடியும்//


சரியா சொல்லு...உனக்கு பதிவு புரியுதா..இல்லையா?

நிஜமா நல்லவன் said...

///VIKNESHWARAN said...
மலேசிய கிளை.//

விக்கி அண்ணே உங்க ஆர்வத்தை பார்த்து புல்லடித்து..ச்சே புல்லரித்து போயிட்டேன்:)

மது... said...

//சரியா சொல்லு...உனக்கு பதிவு புரியுதா..இல்லையா?//

ஆப்பு உங்களுக்கா எனக்கா ?

நிஜமா நல்லவன் said...

//மது... said...
//நி.க.ச//

நி. ந. க. ச.///

அட கொடுமையே ...எல்லாம் உன்னோட ஐடியா தானா?

நிஜமா நல்லவன் said...

///மது... said...
நிஜமா நல்லவர் நிஜமாவே நல்லவர்தான் அது எல்லாம் கரெக்டா கொடுத்துடுவார். நீங்க பண்ணவேண்டியது எல்லாம் கிளைவாரியா உறுப்பினர் பெயர்களையும் தலைவர் பெயரையும் பதிவு செய்தால் போதும்.

எதாவது பிரச்சனை என்றால் தமிழ்பிரியன் ஒருங்கிணைப்பாளரிடம் தொடர்பு கொள்ளவும்.///


ஆமா...எல்லோருக்கும் சங்கலி ரெடி ஆகிட்டு இருக்கு....வந்து சேரும்போது உங்களுக்கே புரியும் இங்க கும்முனது எவ்ளோ தவறுன்னு!

நிஜமா நல்லவன் said...

//தமிழன்... said...
அண்ணே நீங்க எழுதப்போறதா சொன்ன கடிதம் இந்த மாட்டர்தானா//

தமிழா...நீயும் உடந்தையா? பழி வாங்கிட்டியே! இரு உனக்கு அடுத்த ஆப்பு ரெடி பண்ணுறேன்!

நிஜமா நல்லவன் said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

அப்ப நானும் கும்மிக் கொல்கிறேன்.. :///


ரிஷான் அண்ணே நீங்க என்னைய அந்த வெள்ளை சுவத்தில் வச்சி கும்முனதே இன்னும் வலிக்குது...விட்டுடுங்க நான் பாவம்ம்னே:)

நிஜமா நல்லவன் said...

//தமிழன்... said...
ஆமா நல்லவரை காணலையே எங்க போனார்...//

உன்னைய மாதிரியே எல்லோரையும் நினைக்குறியே? என்ன கொடும குசேலா இது?

SanJai said...

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்..

யாரிந்த நிஜமா நல்லவன்?

(ஸ்மைலி போட வில்லை.. ஆகவே இது சீரியஸ் கேள்வி? )

தாமிரா said...

cheena (சீனா) said...
அன்பின் தமிழ்பிரியன்

நான் இச்சங்கத்தில் சேர விரும்புகிறேன்

தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு அல்ல

உறுப்பினராக ஆக வேண்டும் என்ற தீராத அவாவினால்

சேர்ந்த பின் தங்கச் சங்கிலியா அல்லது சேரும் போதே தங்கச் சங்கிலியா

எப்போ டெலிவரி

// ரிப்பீட்டு 1

தாமிரா said...

ஜோசப் பால்ராஜ் said...
சிங்கப்பூர் கிளையில இப்பவே 20 பேரு இருக்காங்க, அவர்களுக்கு உடனடியாக 20 ஐந்துபவுன் சங்கிலிகள் அனுப்பிவைக்கும்படியும், இன்னும் ஆர்வமுடன் சேர காத்திருக்கும் ஆயிரக்கணக்காண ரசிகர்களுக்கு கொடுக்க வசதியாக ஒரு 20000 ஐந்துபவுன் சங்கிலிகளை முன்கூட்டியே அனுப்பும்மாறும் உலகத்தலைமையகத்தை சிங்கப்பூர் கிளை சார்பாக கேட்டுக்கொள்(ல்)கிறோம்.//
ரிப்பீட்டு 2

தாமிரா said...

மங்களூர் சிவா said...
//வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.//

நன்றி நன்றி//
ரிப்பீட்டு 3

தாமிரா said...

பரிசல்காரன் said...
அஞ்சு பவுனா? சொக்காஆஆஆஆஆஆஆஅ

அரை கிராமைக் கண்ணுல காட்டினாலே போதுமே..

நானும் வரேன்.. நானும் வரேன்...//
ரிப்பீட்டு 4

தாமிரா said...

வடகரை வேலன் said...
ஏம்பா,

கோவைப் பகுதிய எனக்குக் கொடுத்திடுங்க. எவ்வளவு த்ங்கம் தாரீங்களோ அவ்வளவு உறுப்பினர் நம கைவசம் ரெடியா இருக்கங்க.//

ரிப்பீட்டு 5

தாமிரா said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அய்யய்யோ! பழக்க தோஷத்தில முழுசா படிக்காம முதல்ல இரண்டு பின்னூட்டம் போட்டுட்டேன்.ஐந்து பவுனா? சங்கத்தில என்னையும் சேர்த்துக்கங்க!என்னையும் சேர்த்துக்கங்க!என்னையும் சேர்த்துக்கங்க!
ரித்தீஷவிட பாரதிதான் கவர்ச்சி.என்னையும் சேர்த்துக்கங்க!//
ரிப்பீட்டு 6

நிஜமா நல்லவன் said...

வகை தொகை இல்லாமல் ஆளாளுக்கு கும்மி இருந்தாலும் கும்மி தாண்டிய உங்கள் அன்பிற்காக எனது நீலாங்கரை பங்களாவை விற்று மொத்த பணத்தையும் தமிழ்பிரியன் அக்கவுண்டில் போட்டுவிட்டேன்.

ஒருத்தருக்கு ஐந்து பவுன் சங்கிலி என்று மட்டும் சொன்னால் ஒரு சிலர் ஸ்மைலி மட்டும் போட்டு விட்டு வாங்கி சென்றுவிடும் அபாயம் இருப்பதையும் ஒன்றிற்கு மேற்பட்ட பின்னூட்டம் போட்டவர்களின் மனக்குமுறலை சந்திக்க நேரிடும் என்பதையும் 'கடிதப்புயல்' தமிழி பிரியன் எச்சரித்ததால் ஓரிரு வார்த்தைகளுக்கு மிகுந்த ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஐந்து பவுன் சங்கிலி கொடுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சிறந்த பின்னூட்டம்(திட்டியோ, பாராட்டியோ, கும்மியோ எதோ ஒண்ணு) போட்ட பதிவரை தேர்ந்தெடுத்து குடும்பத்தோடு ஒரு மாதகாலம் காஷ்மீர் சுற்றுலா சென்று வர எல்லா செலவுகளும் சங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பதிவுலகம் இருக்கும் வரையில் இந்த பதிவில் விழும் கடைசி பின்னூட்டத்திற்கும் தங்கச்சங்கிலி கொடுக்கும் அளவிற்கு பணம் இருப்பதால்.....அனைவரும் தமிழ் பிரியனை தொடர்புகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்!

சிரிப்பான் எதுவும் போடவில்லை....இது என்ன வகையான பின்னூட்டம் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்!

மங்களூர் சிவா said...

தமிழ்பிரியன் வந்துகிட்டே இருக்கேன்!

SanJai said...

நிஜமா நல்லவன் said..
//வகை தொகை இல்லாமல் ஆளாளுக்கு கும்மி இருந்தாலும் கும்மி தாண்டிய உங்கள் அன்பிற்காக எனது நீலாங்கரை பங்களாவை விற்று மொத்த பணத்தையும் தமிழ்பிரியன் அக்கவுண்டில் போட்டுவிட்டேன்.//

டாக்டர்.ப்ரகாஷ் கிட்ட சொல்லிட்டிங்களா? அதுல தான அவர் பலான படம் எல்லம் எடுத்துட்டு இருந்தார். பாவம் ஜெயில்ல இருந்து வந்து வேற ஸ்டுடியோ தேட ரொம்ப கஷ்ட பட போறார். :P

LinkWithin

Related Posts with Thumbnails