.
எப்போதும் நமக்கு இந்தியாவின் தேசிய கீதம் நாட்டின் சுதந்திர தினம் அல்லது குடியரசு தினங்களில் தான் நினைவுக்கு வரும். சில நேரங்களில் பள்ளிகளில் பாடப்படும் போது கேட்கலாம். முன்னெல்லாம் பள்ளி முடியும் வேலையில் ஜனகனமண என்ற இந்திய தேசிய கீதம் பாடப்படும்.
ஆனால் இப்போது நிறைய பள்ளிகளில் இந்த வழக்கம் வழக்கொழிந்து விட்டதாகவே தோன்றுகின்றது. சமீபத்தில் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தேசிய கீதம் பாடப் பெற்றது மிக மகிழ்ச்சியான விடயம்.
இனி இன்றைய சர்வே!
இது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளும் ஒரு விடயம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாடுங்கள். புலம் பெயர்ந்து இருப்பவர்கள் அந்த நாட்டின் குடிமக்களாக இருப்பின் உங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடுங்கள். இங்கு ஓட்டளியுங்கள். பார்ப்போம்.... எத்தனை பேரால் சரியாக பாட இயல்கின்றது என்று...... முடிந்தால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
டிஸ்கி : தேசிய கீதம் பாடத் தெரிந்தவர்கள் தான் தேசிய பக்தி உள்ளவர்கள் என்று நான் கருதுவதில்லை. மனிதன் மறதியாளன். பல்வேறு சூழலில்களில், காலகட்டங்களில், பல தேசங்களுக்கு செல்வதால் அதை மீண்டும் கேட்க வாய்ப்பு இன்றி மறந்து விட வாய்ப்புள்ளது.
மறந்தவர்கள், பாட இயலாமல் போனவ இந்தியர்கள் மட்டும் எங்களது தங்கை மாதினியின் பதிவுக்கு வந்து ஒரு முறை தேசிய கீதத்தை ஒழுங்காக பாடி விட்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.
http://sarigamapadhanisa.blogspot.com/2007/08/blog-post.html
30 comments:
பாடிவிடுவேன்! :))
ஆனா ஒரு கண்டிஷன்ல தான் பாடறது
ஆரம்பிக்கிறது நீராரும் கடலுடுத்த
முடிக்கிறது ஜனகனமண வாக இருக்கும் (ஏன்னா நாங்கெல்லாம் ஸ்கூல்ல அப்படித்தானே பழகியிருக்கோம்!)
பட் எப்பொழுதாவதுதான் :(
ஜனகனமண, தேசியக் கொடி போன்றவற்றுக்கெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள், ஏன் நீராரும் கடலுடுத்த குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பது குறித்து யோசித்தது உண்டா மிஸ்டர் தமிழ் பிரியன் ?
நீராரும் கடலுடுத்த என்ற தமிழ் பாடல் மீது ஏன் அவ்வளவு அலட்சியம் ? அதுவும் ஆங்கில வழி படித்தவர்களுக்கும், வடமொழியே தங்களின் தாய் மொழி என கொண்டவர்களுக்கும் அதிகம் உள்ளதே, அது ஏன் ?
யோசியுங்கள் தமிழ் பிரியன்
//தமிழ் மண பதிவர்களின் தேசிய உணர்வு - அதிரடி சர்வே//
மன்னிக்கவும் நான் தமிழ்வலைப் பதிவன் தான். தமிழ்மண பதிவன் இல்லை. ஆகவே இந்த சர்வே எனக்கானது இல்லை என்று முடிவு செய்து இதில் கலந்து கொள்ளவில்லை..
ஐயா சாமி.. இங்க யாரும் தமிழ்மணத்திலோ அல்லது தமிழ்மணத்திற்காகவோ எழுத வரவில்லை. தங்கள் மனதிற்காகத் தான் எழுதுகிறோம்...
முதலில் தலைப்பை மாற்றும்... பிறகு சர்வே நடத்தும்.. :(
நியூஸியின் தேசியகீதத்தை( ஆங்கிலம், மவொரி ரெண்டு வகையையும்) நல்லாப் பாடுவேன்.
ஜனகனமணவும் பாடினேன்.
நீராடும்..... தெரியாது(-:
சஞ்ஜய் சொன்ன கருத்து நெஞ்சை தொட்டது,
இதை நீங்களாகவே செய்யலாம்.
இதை விட தேசிய கீதத்திற்க்கும் தமிழ் தாய் வாழ்த்திற்கும் வேறுபாடு கேட்டிருக்கலாம்.
பின்னூட்டம் போட்டவர்களுக்கே இதன் வேறுபாடு தெரியவில்லை என நினைக்கிறேன்.
நாட்டு பற்றே நோட்டு பற்றான நாட்டில் தேசிய கீதத்தின் பொருள் என்ன என்று அடுத்த பதிவில் கேளுங்கள்...
அன்புடன்
தமிழ் பொறுக்கி...

என்னால் பாதிதான் முடிந்தது, ஓட்டும் போட்டுவிட்டேன்.
சொல்ல அசிங்கமாகதான் இருக்கிறது என்ன செய்ய:((
ஜனகணமன வை கடமுடானு வரிகள் மாற்றி பாடிமுடித்தேன் ஒருவழியாக. அதில் வருத்தமெல்லாம் எனக்கில்லை. ஆனால் நீராரும் பாடலை அழகாகவே பாடினேன். ரீமைண்டருக்கு நன்றி தமிழ்.!
நான் படித்த பாளை தூய இஞ்ஞாசியார் பள்ளியில் தினமும் அசெம்பிளி தேசியகீதத்துடன்தான் நிறைவு பெறும். எப்படி மறக்கும்?
அதே போல வாரம் ஒருமுறை வரும் இசை வகுப்பு தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் ஆரம்பமாகும். அதுவும் மறக்க வில்லை.
அடடா... அடடா...
நானும் தங்கமணியும் சேர்ந்து பாடினோம். இரண்டு பேருக்கும் இன்னும் ஜன கன வும், நீராரும் - இரண்டும் மறக்கவேயில்லை...
காலையில் 7.30 மணிக்கு எங்களை பாடவைத்ததற்கு நன்றி....
பாட முடியலை...:(
//ஜனகனமண, தேசியக் கொடி போன்றவற்றுக்கெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள், ஏன் நீராரும் கடலுடுத்த குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பது குறித்து யோசித்தது உண்டா?//
நீராரும் கடலுடுத்த, தமிழ் வழிக் கல்வி படிச்சவங்களுக்கு சுலபமா இருக்கும்.
எல்லாருக்கும் நினைவுப்படுத்திய படி மாதினியை தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட சொல்லிடலாம்.. :)
இங்கே இன்னமும் தமிழர்கள் கூடும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பா பாடப்படுகிறது..
//மன்னிக்கவும் நான் தமிழ்வலைப் பதிவன் தான். தமிழ்மண பதிவன் இல்லை. ஆகவே இந்த சர்வே எனக்கானது இல்லை என்று முடிவு செய்து இதில் கலந்து கொள்ளவில்லை..
ஐயா சாமி.. இங்க யாரும் தமிழ்மணத்திலோ அல்லது தமிழ்மணத்திற்காகவோ எழுத வரவில்லை. தங்கள் மனதிற்காகத் தான் எழுதுகிறோம்...
முதலில் தலைப்பை மாற்றும்... பிறகு சர்வே நடத்தும்.. :(//
ஜூடா இருக்கீங்க செல்லாண்ணா. அடிபட்ட மனசு ஆறணுமா. கூலா சாப்டுங்க. பொறவு சர்வே பத்தி பேசிக்கலாம். சர்வேக்கென்னா ஓடியா போவிடபோவுது
///ஆயில்யன் said..
பாடிவிடுவேன்! :))
ஆனா ஒரு கண்டிஷன்ல தான் பாடறது
ஆரம்பிக்கிறது நீராரும் கடலுடுத்த
முடிக்கிறது ஜனகனமண வாக இருக்கும் (ஏன்னா நாங்கெல்லாம் ஸ்கூல்ல அப்படித்தானே பழகியிருக்கோம்!)///+
பாடினீங்களா? இல்லையா? அதைச் சொல்லுங்க முதலில்.... :)
பட் எப்பொழுதாவதுதான் :(
///Anonymous said...
ஜனகனமண, தேசியக் கொடி போன்றவற்றுக்கெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள், ஏன் நீராரும் கடலுடுத்த குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பது குறித்து யோசித்தது உண்டா மிஸ்டர் தமிழ் பிரியன் ?
நீராரும் கடலுடுத்த என்ற தமிழ் பாடல் மீது ஏன் அவ்வளவு அலட்சியம் ? அதுவும் ஆங்கில வழி படித்தவர்களுக்கும், வடமொழியே தங்களின் தாய் மொழி என கொண்டவர்களுக்கும் அதிகம் உள்ளதே, அது ஏன் ?
யோசியுங்கள் தமிழ் பிரியன்///
அனானி அண்ணே! தமிழ்த்தாய் வாழ்த்தும் நாம் மறக்கக் கூடாத ஒன்று தான்... அதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டுடுவோம்.
///SanJai said...
//தமிழ் மண பதிவர்களின் தேசிய உணர்வு - அதிரடி சர்வே//
மன்னிக்கவும் நான் தமிழ்வலைப் பதிவன் தான். தமிழ்மண பதிவன் இல்லை. ஆகவே இந்த சர்வே எனக்கானது இல்லை என்று முடிவு செய்து இதில் கலந்து கொள்ளவில்லை..
ஐயா சாமி.. இங்க யாரும் தமிழ்மணத்திலோ அல்லது தமிழ்மணத்திற்காகவோ எழுத வரவில்லை. தங்கள் மனதிற்காகத் தான் எழுதுகிறோம்...
முதலில் தலைப்பை மாற்றும்... பிறகு சர்வே நடத்தும்.. :(///
ஏனுங்ண்ணா! அமைதியாகுங்க... மாத்திட்டேன்... அதெல்லாம் சூடாகுவதற்கு வைக்கும் தலைப்பு அண்ணே!
///துளசி கோபால் said...
நியூஸியின் தேசியகீதத்தை( ஆங்கிலம், மவொரி ரெண்டு வகையையும்) நல்லாப் பாடுவேன்.
ஜனகனமணவும் பாடினேன்.
நீராடும்..... தெரியாது(-: ///
நன்றி டீச்சர், உங்க நாட்டு (?) தேசிய கீதம் தெரிந்து இருப்பதோடு எங்க(?) நாட்டு தேசிய கீதமும் தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியா இருக்கு... :)
நீராரும்... :(
///தமிழ் பொறுக்கி said...
சஞ்ஜய் சொன்ன கருத்து நெஞ்சை தொட்டது,
இதை நீங்களாகவே செய்யலாம்.
இதை விட தேசிய கீதத்திற்க்கும் தமிழ் தாய் வாழ்த்திற்கும் வேறுபாடு கேட்டிருக்கலாம்.
பின்னூட்டம் போட்டவர்களுக்கே இதன் வேறுபாடு தெரியவில்லை என நினைக்கிறேன்.
நாட்டு பற்றே நோட்டு பற்றான நாட்டில் தேசிய கீதத்தின் பொருள் என்ன என்று அடுத்த பதிவில் கேளுங்கள்...
அன்புடன்
தமிழ் பொறுக்கி...///
வருகைக்கு நன்றி தமிழ் பொறுக்கி! சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு போடவில்லை. மனதில் தோன்றியதாலேயே இந்த பதிவை இட்டேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தனியாக பதிவிடலாம்,.
///குசும்பன் said...
என்னால் பாதிதான் முடிந்தது, ஓட்டும் போட்டுவிட்டேன்.
சொல்ல அசிங்கமாகதான் இருக்கிறது என்ன செய்ய:((///
மனசாட்சியோட ஒத்துக் கொண்டது அண்ணனோட பெருந்தன்மையைக் காட்டுது. அண்ணிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க...
//தாமிரா said...
ஜனகணமன வை கடமுடானு வரிகள் மாற்றி பாடிமுடித்தேன் ஒருவழியாக. அதில் வருத்தமெல்லாம் எனக்கில்லை. ஆனால் நீராரும் பாடலை அழகாகவே பாடினேன். ரீமைண்டருக்கு நன்றி தமிழ்.!///
இரண்டையும் சரியாக பாடினீர்கள் எனும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி தாமிரா!
///ராமலக்ஷ்மி said...
நான் படித்த பாளை தூய இஞ்ஞாசியார் பள்ளியில் தினமும் அசெம்பிளி தேசியகீதத்துடன்தான் நிறைவு பெறும். எப்படி மறக்கும்?
அதே போல வாரம் ஒருமுறை வரும் இசை வகுப்பு தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் ஆரம்பமாகும். அதுவும் மறக்க வில்லை.///
உங்க ஊர் ஆளுங்க எல்லாத்திலேயும் பெர்பெக்டா இருக்கீங்க... வாழ்த்துக்கள்! அதிலும் நீங்க ஸ்பெஷல் அக்கா!
// ச்சின்னப் பையன் said...
அடடா... அடடா...
நானும் தங்கமணியும் சேர்ந்து பாடினோம். இரண்டு பேருக்கும் இன்னும் ஜன கன வும், நீராரும் - இரண்டும் மறக்கவேயில்லை...
காலையில் 7.30 மணிக்கு எங்களை பாடவைத்ததற்கு நன்றி..///
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சதயா! அண்னியுடன் சேர்ந்தே பாடியது மிக்க மகிழ்ச்சி!
///தமிழன்... said...
பாட முடியலை...:(///
அடுத்த தடவை முயற்சி செய்ங்க தமிழன்!
/// வடகரை வேலன் said...
//ஜனகனமண, தேசியக் கொடி போன்றவற்றுக்கெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள், ஏன் நீராரும் கடலுடுத்த குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பது குறித்து யோசித்தது உண்டா?//
நீராரும் கடலுடுத்த, தமிழ் வழிக் கல்வி படிச்சவங்களுக்கு சுலபமா இருக்கும்.///
மிக்க நன்றி சார்! எனது தெருவில் இருந்த ஆங்கில மீடியத்தில் ஹிந்தியை விருப்பப் பாடமாக எடுத்து தமிழ் எழுதப் படிக்க திணறும் ஒரு பெண்ணைக் கூட எனக்குத் தெரியும் வேலன் சார்.
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
எல்லாருக்கும் நினைவுப்படுத்திய படி மாதினியை தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட சொல்லிடலாம்.. :)
இங்கே இன்னமும் தமிழர்கள் கூடும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பா பாடப்படுகிறது..///
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி அக்கா! மாதினியை தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடச் சொல்லி பதிவேற்றுங்கள்!
///Anonymous said...
//மன்னிக்கவும் நான் தமிழ்வலைப் பதிவன் தான். தமிழ்மண பதிவன் இல்லை. ஆகவே இந்த சர்வே எனக்கானது இல்லை என்று முடிவு செய்து இதில் கலந்து கொள்ளவில்லை..
ஐயா சாமி.. இங்க யாரும் தமிழ்மணத்திலோ அல்லது தமிழ்மணத்திற்காகவோ எழுத வரவில்லை. தங்கள் மனதிற்காகத் தான் எழுதுகிறோம்...
முதலில் தலைப்பை மாற்றும்... பிறகு சர்வே நடத்தும்.. :(//
ஜூடா இருக்கீங்க செல்லாண்ணா. அடிபட்ட மனசு ஆறணுமா. கூலா சாப்டுங்க. பொறவு சர்வே பத்தி பேசிக்கலாம். சர்வேக்கென்னா ஓடியா போவிடபோவுது//////
அண்ணே! நம்மை விட்டுடுங்க.. இந்த பொலிடிக்ஸ் எல்லாம் நமக்கு தெரியாது, வேணாம் அழுதுடுவேன்.
சஞ்சய் சொல்வது சரியெனப்படுகிறது!
//வாழ்க்கை said...
சஞ்சய் சொல்வது சரியெனப்படுகிறது!///
வாழ்க்கை வாழ்வதற்கே! அண்ணன் சொன்னா சரிதான்,,,,,,, :)
தேசிய கீதத்தை பாடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.
அது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்
பாடி முடித்தேன் என்று கூறியிருப்பவர்களில் எத்தனை சரியாக குறிப்பிட்ட நேரத்தில் பாடி முடித்தவர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.
இதற்கும் ஒரு சர்வே போடலாம்.
Post a Comment