Thursday, March 12, 2009

மீள்பதிவு - முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு - சிறுகதை




.
வாசி இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மணி மாலை 5.30 ஐ நெருங்கி இருந்தது. வானம் சிலுசிலுப்பான காற்றுடன் மழை தூறிக் கொண்டு இருந்தது. தூறல் விழுந்து கொண்டிருந்தாலும் புழுக்கம் குறையாமலேயே இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மாலைக்கு உரிய சோம்பல் இல்லாமல் ரெயில் நிலையம் இருப்பதை காண முடிந்தது. நவி மும்பை, மும்பை கலாச்சாரத்தை விட்டு விலகி இருப்பதாகவே பட்டது.

ஜோடியாக மகிழ்ச்சி குதுகலிப்புடன் செல்லும் காதலர்களை பார்க்கும் போது ஏனோ பவித்ராவின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நேற்றிரவு முடிக்காமல் வைத்த முறிந்த சிறகுகளும் நினைவுக்கு வந்தது. எத்தனை முறைப் படித்திருந்தாலும் ஏனோ நிறைவு பெறாததாகவே தெரிகின்றது.

இரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த மூன்று மாடி ஷாப்பிங் மாலுக்குள் நுழையும் போது உள்ளே இருந்து வரும் குளிர்சாதன வசதி முகத்தில் அறைந்தது இதமாகவே இருந்தது. உள்ளிலும் இளசுகள் நிறைந்து காண முடிந்தது... ஓ..மனம் இளசு என்று மற்றவர்களை சுட்டும் போது, நமக்கு வயதாகி விட்டது போன்ற உணர்வு வருவதாகவே படுகின்றது.... அம்மா வேறு ‘ஏழு கழுதை வயசாகி விட்டது. சீக்கிரக் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று மூன்று பெண்களின் போட்டோக்களையும் அனுப்பி வைத்து விட்டிருக்கிறார்.... சிரித்துக் கொண்டேன்.

ஐஸ்கிரீம் பார்லரில் கூட்டம் அலை மோதியது. ஐஸ்கிரீம் சாப்பிடும் வழக்கம் விடுபட்டு விட்டது. அதை புன்னகையுடன் கடந்து பார்கார்ன் கடைக்கு வந்தேன். பதின்ம வயதில் சினிமா தியேட்டர் ஐஸ்கிரீமுக்காக பாக்கெட் மணி சேர்த்து வைத்த காலம் நினைவுக்கு வந்தது. இன்று பர்ஸ் நிறைய பணம் இருந்தும் ஏனோ மனம் ஐஸ்கிரீமை விரும்புவதில்லை. பவித்ராவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது என்பதாலோ?

வழக்கமாக பாப்கார்ன்வாங்கும் கடையிலும் கூட்டம் அலைமோதியது. கடைக்காரன் அங்கிருந்தே புன்னகை செய்தான்... “பாய் சாப்! தோ மினட் மே ஆப்கா பார்கார்ன் மிலேகா! சபர் கீஜியே”... கூட்டத்தில் நிற்காமலேயே பாப்கார்ன் கைக்கு வரும் என்பதால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.... கூட்டம் ஆவலுடன் பாப்கார்ன் வாங்க நின்றிருந்தது. அந்த கூட்டத்தில்..... ஓ.... அது கல்பனா தானே... ஆமாம் அவள் கல்பனா தான்.. இப்போது கொஞ்சம் பூசினாற் போல் இருக்கிறாள்... திருமணம் ஆகி இருக்கலாம். திருமணம் ஆனாலே இந்த பெண்கள் ஏன் குண்டாகி விடுகின்றனர்... பவித்ராவுக்கு திருமணம் ஆகி இருக்குமோ? ஏன் எதற்கெடுத்தாலும் பவித்ராவையே நினைக்கிறேன்...

கல்பனா பார்கார்ன் வாங்கி விட்டு வருவது தெரிந்தது. என்னைக் கடக்கும் போது கூப்பிட்டேன் “ எக்ஸ்கியூஸ்மீ! நீங்க கல்பனா தானே?” என்னை வேகமாக கடந்தவள் சட்டென்று நின்று திரும்பி கொஞ்சம் உற்று நோக்கினாள்.

“ஹேய்! தமிழ் தானே நீ! வாட் எ சர்பிரைஸ்! பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! இங்க என்ன செய்ற”

“இங்க தான் 5 வருசமா இருக்கேன். ஒரு மேன் பவர் கன்சல்டண்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலை! அது இருக்கட்டும்! நீ எப்படி இருக்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க! கல்யாணம் ஆச்சா”

“இன்னும் இல்லை கல்பனா! உன்னைப் பார்த்ததும் அடையாளமே தெரியலை.... முன்னெல்லாம் கட்டுப் பெட்டியா சேலையில் தான் காலேஜ் வருவ! இப்ப ஆம்பிளை மாதிரி டீ சர்ட், ஜீன்ஸோடு பார்க்கிறேன். எனக்கே சந்தேகமாயிடுச்சு”

“அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. நம்ம தேவகி தெரியும் தானே?”

“அந்த தேவகி மாமி தானே? நல்லாவே தெரியுமே”

“ அவள் ஒரு வருஷமா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா”

“என்னையா? அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே”

“தமிழ் கிண்டல் வேண்டாம்... பவித்ரா விஷயமா ஏதோ முக்கியமா பேசனுமாம்... உன் போன் நம்பர் கொடு. அவளிடம் கொடுத்து பேசச் சொல்றேன்”

பவித்ராவின் பெயரை நான் மட்டும் சொல்லி நெடுங்காலமாக கேட்டு வந்த என் காதுகள் வேறோருவர் சொன்னதும் ஏனோ காது மடல்கள் சிலிர்த்தன. என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டாள். ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து சுமாரான தொப்பையுடன், கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவர் அருகில் வந்தார். கையில் இருந்த குழந்தை கொஞ்சும் குரலில் “ மம்மி! உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது” சிரிப்புடன் கல்பனாவைப் பார்த்து கூறியது.

“தமிழ்! இவர் தான் என்னுடைய கணவர் ஆனந்த குமார்! இவள் என் மகள் ஹரிணி.. என்னங்க இவர் என்னோட காலேஜ் மேட் தமிழ் பிரியன்.. இங்க தான் இருக்காராம்”

பரஸ்பரம் இருவரும் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டோம். ஹரிணி அதே சிரிப்புடன் “ஹாய்! அங்கிள்” சொன்னாள். மீண்டும் கல்பனாவைப் பார்த்த போது அவளது பார்வையில் இனம்பிரியாத கோபம்,பயம், மிரட்சி, சந்தேகம், சோகம் ஏதோ ஒன்றை உணர முடிந்தது.

“சரி தமிழ்! நாங்க கிளம்பறோம்... தேவகியிடம் உன் போன்நம்பரையும், இ மெயிலையும் தர்ரேன்... அடுத்த வாரம் ஹரிணிக்கு பிறந்தநாள் வருது... உன்னை போனில் அழைக்கிறேன் அப்ப மீதியைப் பேசிக் கொள்ளலாம்”.

***************************************************************

அன்றிரவு ஏனோ பவித்ராவின் நினைவு அதிகமாகவே இருந்தது. மின் விளக்குகளை அணைத்து விட்டு, ஜன்னல்களைத் திறந்து வைத்தபடி படுத்து இருந்தேன். முழு நிலவு எனக்காகவே ஆசையுடன் வானில் இருந்து இறங்கி வருவது போல் இருந்தது. நெஞ்சில் மீது பாதி படித்த நிலையில் முறிந்த சிறகுகள் கிடந்தது.இப்படியும் கவிதை எழுத முடியுமா? வர்ணனைகளைத் தொடுக்க இயலுமா? என்ற யோசனை வந்த போது, பவித்ராவால் முடியும் என்று தோன்றியது. பவித்ரா நன்றாக கவிதை எழுதுவாள்.... அவளே ஒரு கவிதை என்பது என் கருத்து. அவள் அன்புடன் பவித்ரா என்று எழுதிக் கொடுத்த முறிந்த சிறகுகளை இது வரை எத்தனை முறை படித்துள்ளேன் என்று கணக்கு பார்த்து தோல்வியே அடைந்துள்ளேன்... அவள் நினைவாக புகைப்படத்திற்கு அப்புறம் இருப்பது இது ஒன்று தான்

ஜன்னல் வழியே தெரிந்து கொண்டிருந்த நிலா மெல்ல நகர்ந்தது. இப்போது வானம் வெறுமையாக தெரிந்ததது. மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. கண்களை மூடி, நேற்று விட்டுப் போன பவித்ராவுடன் வாழும் கனவைத் தொடர ஆரம்பித்திருந்தேன்... செல் போன் மெலிதாக சிணுங்கியது..

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே ....
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே...

புதிய எண்ணாக இருந்தது...
“ஹலோ! தமிழ் பிரியனா?” பெண் குரல்

“ஆமாம்! நீங்க யார் பேசிறீங்க”

“நான் தேவகி பேசறேன்... நல்லா இருக்கியா தமிழ்?”

“நான் நன்னா இருக்கேன்! நீங்கோ நல்லா இருக்கேளா மாமி”

சில வினாடிகள் தேவகியிடம் இருந்து எந்த பதிலுல் இல்லை

“ஹலோ தேவகி என்னாச்சு? சும்மா கிண்டல் பண்ணினேன்... சாரிப்பா”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை... உன்னிடம் பவித்ரா சம்பந்தமாக முக்கியமான விஷயம் பேசனும்.. ரூமில் இன்டர்நெட் இருக்கா? ”

எடுத்தவுடன் நேரடியாக பவித்ரா விஷயத்திற்கு வந்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மனம் மகிழ்வும், பயமும் கலந்த ஒருவித சிந்தனையில் ஆழ்ந்தது.

”இருக்கு! முக்கியமான விஷயம்ன்னா போனிலேயே சொல்லு தேவகி!”
“இல்லை தமிழ். உன்னோட ஜி மெயில் ஐடிக்கு என்னிடம் இருந்து இன்வைட் அனுப்பி உள்ளேன். அதை அக்சப்ட் பண்ணு.. நான் ஆன் லைனில் தான் இருக்கேன். அங்கே வா!”

போனை துண்டித்து விட்டாள்.. ஏனோ மனம் கலவரமாக இருந்தது. தேவகியை பல வருடங்களாக பார்க்கா விட்டாலும் அவளது ஜாலியான குணம் மாறி இருக்காது என்றே நினைத்து இருந்தேன்... அவளது குரலில் இருந்த ஒரு சோகம் என்னை வியர்வையில் நனைய வைத்தது.... என்னவோ கெட்ட செய்தி இருப்பதாகத் தோன்றியது

கணிணியை உயிரூட்டினேன்... காலேஜில் எடுத்த பவித்ரா இருக்கும் படத்துடன் கணிணி திறந்தது. ஜி டாக்கில் நுழைந்து தேவகியின் மின்னஞ்சலை அக்சர்ட் செய்ய சிவப்பு விளக்குடன் தேவகி இருந்தாள்..தட்டச்சினேன்

“ஹாய்! தேவகி எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் தமிழ்! நீ எப்படி இருக்க”

”நல்லாவே இருக்கேன்.. எங்க வீட்லயா இருக்க”

“ஆமா தமிழ்! கணவரும், பையனும் தூங்கி விட்டார்கள்... நான் இப்பதான் வேலை எல்லாம் முடித்து நெட்டில் அமர்ந்தேன்.. உடனே உனக்கு போன் செய்தேன்”

“என்ன ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்ன்னு சொன்னியே?

தேவகி அடுத்து சொன்ன அந்த விஷயத்தைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன்.
சட்டென்று பூமி தரைக்கு கீழே நழுவது போல் இருந்தது. வெளியே இடி இடித்து, மின்னல் கீற்று ஒன்று அறைக்குள் எட்டிப் பார்த்து சென்றது...

“பவித்ரா இறந்த விஷயம் உனக்கு தெரியும் தானே?”

தேவகி தட்டச்சு செய்ததும் சுக்கு நூறாக உடைந்த கண்ணாடி போல் என்னை உணர்ந்தேன்... என்னால் கணிணியின் மானிட்டரை பார்க்கவே இயலாத அளவு கண்களில் நீர் சேர்ந்திருந்தது. மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்த போது தேவகி தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்..

“சாரி தமிழ்! உன்னிடம் எப்படி சொல்வது என்றே தெரியலை.ஆனா சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஆனதால் தான் நம் காலேஜ் மேட் நிறைய பேரிடம் சொல்லி வைத்திருந்தேன்”

“இன்று தான் கல்பனா உன்னைக் கண்டுபிடித்து இருக்கிறாள்”

“பவித்ரா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது! ஸ்டவ் வெடித்து உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மூன்று மாதம் ஹாஸ்பிட்டலில் வைத்து இருந்தார்கள். பின்னர் கொஞ்சம் குணமானதும் வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார்கள்.. அடுத்த இரண்டு மாதத்தில் திடீரென்று ஒருநாள் இறந்து விட்டாள்.”

“தமிழ் ஆர் யூ தேர்?”

“ம் சொல்லு தேவகி”

“அவள் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் அவள் வீட்டுக்கு அவளைப் பார்க்க போய் இருந்தேன். எப்போதுமே அழாமல் இருப்பவள் அன்று என்னிடம் கதறிக் கதறி அழுதாள். ஏன் என்று கேட்டதற்கு ஏதும் சொல்ல மறுத்து விட்டாள்.”

“பின்னர் அவள் இறப்பதற்கு முதல் நாள் இரவு எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அதனுடன் ஒரு வேர்ட் அட்டாச்மெண்டும் இருந்தது. மெயிலில் இந்த அட்டாச்மெண்டை, உன்னைக் கண்டுபிடித்து சேர்க்கும்படிக் கூறி இருந்தாள். அதற்கு ஒரு பாஸ்வேர்டும் போட்டு இருக்கின்றாள். ஆனால் அதை கண்டுபிடித்து நீதான் திறந்து பார்க்க வேண்டுமாம்”

”நம் நண்பர்கள் அனைவரும் உன்னைத் தேடி களைத்துப் போய் விட்டோம்... பல நாட்களுக்குப் பின் நான் கூட அந்த அட்டாச்மெண்டில் உன்னைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கும் என்று திறக்க முயற்சி செய்தேன்... ஆனால் முடியவில்லை”

“தமிழ்! எதற்கும் கவலைப்படாதே... அந்த மெயிலை உனக்கு பார்வேர்ட் செய்கின்றேன்.... என்ன எழுதி இருக்கிறது என்று பார். அவள் கடைசி நேரத்தில் உன்னைத் தான் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றாள் போல் இருக்கு”

“தமிழ்! நேரமாச்சு... எதையும் மனசில் வைக்காம திடமா அதில் என்ன இருக்குன்னு பாரு... நாளைக்கு காலையில் உனக்கு போன் செய்கின்றேன்”

தேவகிக்கு பதில் சொல்ல கூட முடியாமல் விக்கித்துப் போய் இருந்தேன்.

“ஓகே தேவகி.. பை” என்று மட்டுமே தட்டச்ச முடிந்தது,

கண்களில் வெளியில் பெய்யத் தொடங்கி இருந்த மழை போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மெயில் இன்பாக்ஸில் தேவகி அனுப்பிய அட்டாச்மெண்ட் இருந்தது. இன்பாக்ஸை திறந்து பதிவிறக்க சொடுக்கினேன்... டெஸ்க்டாப்பில் பைல் வந்து விழுந்திருந்தது. அது உருவாக்கப்பட்ட தேதியைப் பார்த்த போது, ஒரு வருடமும், இரண்டு மாதங்களும் கடந்து போய் இருந்தன.

ஒரு நிமிடம் ஆயாசமாக இருந்தது... ஏனிந்த மறைமுக வாழ்க்கை வாழ வேண்டி வந்தது என எனக்கே புரியவில்லை. வேர்ட் பைலைத் திறக்க முயற்சி செய்தேன்...

முகப்பிலேயே அதற்கான பாஸ்வேர்ட் கேட்டு விண்டோ திறந்து இடைமறித்தது. சில வினாடிகள் யோசனைக்குப் பின் கை விரல்கள் தானாகவே தட்டச்ச துவங்கின.. murindhasiragukal.... எண்டரை தட்ட பைல் திறந்து கொள்ள சட்டென்று உடம்பு சிலிர்த்தது. கடிதத்தின் முகப்பில் அதே தேதி தட்டச்சியிருந்தாள்.

நானும் இப்படித்தான் கடிதம் எழுதினால் தேதி கண்டிப்பாக இடுவேன்.. பவித்ராவும் இடுவதால் தானோ?

அன்புள்ள தமிழ் பிரியனுக்கு,

நீ மிக்க நலத்துடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.. இந்த கடிதத்தை நீ வாசிக்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை.

கல்லூரி நாட்களில் நீ என்னிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தாயோ, அதையே நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். காலம் கடந்து விட்டது.

எனக்கு திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஒரு மிருகத்துடன் மூன்று ஆண்டுகள் நரக வாழ்க்கை வாழ்ந்தேன். ஸ்டவ் வெடித்ததாக வெளியில் நான் கூறினாலும், உண்மையில் தீக்குளிக்க வைக்கப்பட்டேன். ஆனாலும் விதி ஏனோ ஐந்து மாதமாக என்னை விடவில்லை. யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கடினம் தெரியுமா? எனவே விதியை வெல்லப் போகின்றேன்.

இந்த கடிதத்தை கடவுச் சொல் இட்டு மூடி வைத்திருந்தேன். நீ இன்றும் என் நினைவில் இருந்தால் மட்டுமே இதை திறந்து பார்த்திருக்க முடியும். எனது நம்பிக்கை வென்று விட்டது. நீ இதை படித்துக் கொண்டு இருக்கின்றாய்.

நான் உன்னிடம் சொல்ல முடியாமல் போனவைகளை என் நினைவிலேயே புதைத்துச் செல்கின்றேன். நீ இன்னும் திருமணம் முடிக்கவில்லையென்றால் விரைவில் திருமணம் முடித்துக் கொள்.

உன்னிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைக்க ஆசைப்படுகின்றேன்.

எனது ஒரு வயது மகள் தமிழ்ச்செல்வி எனது பெற்றோருடன் எங்கள் ஊரில் இருக்கிறாள். அவளை உன்னுடன் அழைத்துச் சென்று விடு. அவளை உன்னால் மட்டுமே சிறப்பாக வளர்க்க இயலும் என நம்புகிறேன்.

மரணத்திற்குப் பின் இரண்டு தமிழையும் ஒரே இடத்தில் பார்த்துக் கொண்டு இருக்க ஆசைப்படுகிறேன்.

எனது இந்த ஆசையையாவது நிறைவேற்றி வைப்பாயா?

அன்புடன் பவித்ரா

கடிதத்தை படித்து முடித்த போது கை,கால் எல்லாம் நடுங்கிக் கொண்டு இருந்தது. வெளியே பார்த்த போது , மழை விட்டு வானம் நிறம் மாறி இருந்தது. ஜன்னல் வழியே கீழ் வானத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் என்னைப் பார்த்து பிரகாசமாக கண்சிமிட்டிக் கொண்டு இருந்தது. அறையின் விளக்கை உயிர்ப்பித்து லெட்டர் பேடை எடுத்து எழுதத் துவங்கினேன்.

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

மகன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது,

நான் நலமாக இருக்கிறேன். அதுபோல் அங்கு அனைவரின் நலமறிய ஆவல். உங்களது கடிதம், பார்த்து வைத்துள்ள பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தன.

உங்களிடம் வெகுநாட்களாக ஒரு உண்மையை மறைத்து விட்டேன். எனக்கு மும்பையிலேயே திருமணமாகி விட்டது. இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். என் மனைவி சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டாள். என் மகளுக்காக வேறு திருமணம் செய்ய எண்ணியுள்ளேன்.

நீங்கள் பார்த்த பெண்களின் வீட்டில் இதைக் கூறுங்கள். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்திலேயே திருமணம் முடிக்க எண்ணியுள்ளேன். விரைவில் உங்களது பேத்தி தமிழ்ச் செல்வியுடன் ஊருக்கு வருவேன்.

அப்பா, அம்மா உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன் மகன்

தமிழ் பிரியன்


யூத் ஃபுல் விகடனில் வந்த பதிவு - மீள் பதிவாக இடப்படுகின்றது. பதிவு எழுத மேட்டர் கிடைக்கலைங்க மக்களே.. அதான் இந்த கொடுமை

32 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நெஞ்சம் கனக்கிறது தமிழ் பிரியன். இது இவ்வுலகில் யாருக்காவது நடக்காமலா இருக்கும்... நடந்திருக்கும் இப்படியும் :((

வெண்பூ said...

வாவ்.. அருமையான முடிவு தமிழ். பாராட்டுக்கள்.

விஜய் ஆனந்த் said...

அசத்தலான, நெகிழ வைத்த முடிவு...

:-(((

ப்ரெசன்ட் பண்ணிய விதம் டச்சிங்கா இருக்கு!!!

ஆயில்யன் said...

//பவித்ரா இறந்த விஷயம் உனக்கு தெரியும் தானே?”/

:(((((((((((

ராமலக்ஷ்மி said...

சிறப்பாக கதை எழுதும் நீங்கள் ஏன் அடிக்கடி எழுதுவதில்லை என்று கேட்டாலும் கேட்டேன், இப்படி ஒரு அருமையான கதையை வழங்கி பாராட்ட வார்த்தைகள் வராதபடி செய்து விட்டீர்கள். என்ன ஒரு உன்னதமான முடிவு!

"எனது நம்பிக்கை வென்று விட்டது. நீ இதை படித்துக் கொண்டு இருக்கின்றாய்." எனும் உறுதியான நம்பிக்கையோடு உருக்கமான முதல் கடிதம். "

"இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். " என அந்த நம்பிக்கையைத் தகர்க்காத... உயர்ந்த உள்ளத்தைக் காட்டும் அடுத்த கடிதம்.

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

Athisha said...

அண்ணா ..... !!!

என்னால எதுவும் சொல்லமுடியல அருமையா இருந்துச்சுண்ணா..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணா, கலக்கிட்டீங்க....
நல்ல கதை. காலை நேரத்திலேயே சோகக்கடலில் ஆழ்த்திவிட்டீரே...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இந்த கதையை 3 பாகமாக போட்டிருக்கலாம், காரணம் அதன் அடர்த்தி அதிகம். என்ன சரியா?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஏதோ ஒரு சின்ன சோக சம்பவம் எனக்கு நிகழ்ந்தது போல் உள்ளது...

கோபிநாத் said...

அருமை தமிழ்...;)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

முதல் பாக போட்டோவுக்கும் 2 ம் பாக போட்டோவுக்கும் என்ன அர்த்தம்... 2 ம் பாகத்தில் அலை காதலை அழித்து விட்டதா? ஆனால்
2 ம் பாகத்தில் தானே ஒரு உண்மையான் காதல் முழுமையடைகிறது. போட்டோவ மாத்தி போட்டா சரியா இருக்குமென நினைக்கிறேன்...

Anonymous said...

அருமையான கதை அழகா ப்ரெசென்ட் பண்ணியிருக்கீங்க! படித்து முடிக்கும் போது விழியோரம் துளிர்த்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அண்ணா. இந்த உலகத்தில் எங்கேனும் இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இப்படி பட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் இருந்து எழுந்ததினால் உங்கள் மீதான மதிப்பும் கூடுகிறது. இதுவரை நீங்க எழுதிய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். இக்கதை மனதை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். நிறைய கதைகள் எழுதுங்க.

புதுகை.அப்துல்லா said...

அண்ணே இந்தக் கதையினுடைய முதல் வாசகன் நாந்தான் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் திங்கள் அன்று வெளியிடுங்கள் சொன்னேன். நீஇங்க கேக்கவில்லை.இல்லாட்டி இன்னும் அதிக பேரை இந்தக்கதை சென்று அடைந்து இருக்கும்.

Unknown said...

சூப்பர் அண்ணா..!! :)) பட் கொஞ்சம் சோகம்..!! :(
//விஜய் ஆனந்த் said...
அசத்தலான, நெகிழ வைத்த முடிவு...

:-(((

ப்ரெசன்ட் பண்ணிய விதம் டச்சிங்கா இருக்கு!!!//

Repeattuuuuuu.....!! :))

NewBee said...

தமிழ் பிரியன்,

நல்ல நடை. தடையில்லாமல், முடி முதல் அடி வரை ஒரே மாதிரியான flow.கதை எடுத்துச் சென்ற விதமும் அருமை.

நல்லா எழுதுறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க.

வாழ்த்துகள் :)

கானா பிரபா said...

உங்கள் முதல் முயற்சியிலேயே சிறப்பான நடையைக் காட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

அண்ணே முன்னாடியே படிச்ச கதை தான்....எதிர்பாராத முடிவு...!

நாணல் said...

:( ஏன் இப்படி.. கடிதம் படித்து கண்கள் கலங்கி விட்டன..
எனினும் நல்ல கதை.... நல்ல முடிவு.... நிஜத்தில் தான் காதலர்கள் பிரிந்து அவச்த்தைப் படுகிறார்கள் என்றால் கதையிலுமா... :(

ஜியா said...

:(((

romba arumaiya ezuthirukeenga Thamiz Priyan....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு கதை..நெகிழ்ச்சியா இருந்தது படித்ததும். உடனே பின்னூட்டக்கூட முடியலன்னா பார்த்துக்குங்க..

Anonymous said...

தமிழ்,

நல்ல கதை. நல்ல கரு. நல்ல நடை.

அருமையாக ஆரம்பித்து, அதிர்ச்சியாக முடிந்தாலும், சிறப்பாக இருக்கிறது.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

சுரேகா.. said...

கலக்குறீங்களே!

உண்மையிலேயே
எழுத்து நடையும்
சம்பவங்களும்
வார்த்தைகளின் வலியும்...

சூப்பர்!

வாழ்த்துக்கள்!

தமிழன்-கறுப்பி... said...

கதை கனமாக இருக்கிறது தல...

தமிழன்-கறுப்பி... said...

நல்ல நடை...

தமிழன்-கறுப்பி... said...

காதலை சொல்லாம வைக்கக்கூடாது உண்மைதான் இல்லையா...?

தமிழன்-கறுப்பி... said...

//எனது ஒரு வயது மகள் தமிழ்ச்செல்வி//

"தமிழ்ச்செல்வி..."
தல இது தேவதைகளின் பெர் என்று நினைக்கிறேன் நல்ல பெயர்...

தமிழன்-கறுப்பி... said...

நல்ல நடை தல வாழ்த்துக்கள்...!

தமிழன்-கறுப்பி... said...

நல்ல நடை தல வாழ்த்துக்கள்...!

நசரேயன் said...

நல்ல நடை மற்றும் அருமையான முடிவு

Unknown said...

மீள் பதிவு ஓகே... அதுக்காக மீள் கமெண்ட்டுமா??

Thamiz Priyan said...

/// ஸ்ரீமதி said...

மீள் பதிவு ஓகே... அதுக்காக மீள் கமெண்ட்டுமா??///
மீள் பதிவுக்கு மீள் கமெண்டுக்கு மீள் நன்றிகள் ஸ்ரீமதி!

sri said...

Kadhal vali , kadhaliyin maranam , avloda vazhkai avalam, avloda kuzhadhainnu romba nerya vishyangalai chinna kadhaila soliteenga. Herovoda postive character, innoru kalayanam pannittu kozhadhai parthukaradhu ellam romba super - thodarndhu ezdhungal.