Friday, March 20, 2009

1001 ஹிட்ஸ், தமிழ் மணமா? தமிழிஷா? ஹிட்ஸ் ஒப்பீடு

நேற்று ஒரு பிரபல பதிவரின் பதிவு ஹேக் செய்யப்பட்டதாக நம் நண்பரின் பதிவு ஒன்று வந்தது. யாரோ ஒருவன் ஒரு சக பதிவரின் பதிவில் அதர் ஆப்ஷனில் சென்று பிரபல பதிவரின் பெயரில் கமெண்ட் போட்டுள்ளான். இதன் தொடர்ச்சியாகவே அந்த பதிவு. அதர் ஆப்ஷனின் யார் வேண்டுமானாலும் கமெண்ட் போடலாம்.. அதே போல் பதிவரின் பெயரிலேயே அதே புரோபைல் படத்துடன் கமெண்ட் போடலாம். (எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்).

அக்கவுண்ட் நம்பரை வாலாக சேர்ப்பது, எலிக் குட்டி, பூனைக்குட்டி, மொசக் குட்டி சோதனைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட காலம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஆனாலும் யாரோ ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை பதற்றமுறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டால் அமைதியாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கி விடுங்கள். அல்லது கண்டும் காணாமல் போய் விடுங்கள்.
*********************************************************
நேற்று நண்பர் ஆதிமூலகிருஷ்ணனின் (தாமிரா) ஒரு பதிவைப் படித்தேன். மிக நல்ல சப்ஜெக்ட். ஆனால் நட்சத்திரம் பதட்டத்தில் எழுதி இருக்கின்றது. இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம். ஆனாலும் அழகாகவே இருந்தது. கமெண்ட் போடப் போனால் கும்மி, குமுறி வைத்திருக்கின்றார்கள். ஏனோ மனம் வலித்தது. இருந்தாலும் கமெண்ட் போட்டு விட்டு திரும்பினேன்.

கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே... ப்ளீஸ்.. சில புதியவர்கள் படித்து இம்ப்ரஸ் ஆகிக் கமெண்ட் போடுவது நம்மால் தவிர்ந்து போகக் கூடாது.


*********************************************************

என்னோட பதிவுக்கு வரும் ஹிட்ஸ்களை எப்பவுமே கண்காணிப்பேன். அதில் நிறைவேறாத ஒரு தேடல் இருப்பதாகக் கூட நினைத்துக் கொள்ளுங்கள். பதிவு போட்ட நாட்களில் 400 முதல் 600 வரை ஹிட்ஸ் வரும். மற்ற நாட்களில் 100 முதல் 200 வரை எதிர்பார்க்கலாம். ஊரில் இருந்து வந்ததில் இருந்து சொல்லிக் கொள்ளும்படியாக பதிவு எதுவும் எழுத இயலவில்லை... இனி எழுதலாம்..எச்சரிக்கையாக இருங்கள்... ;-)

நேற்று முன் தினம் திடீரென்று ஹிட்ஸ் அதிகமாக வந்தது. 24 மணி நேரத்தில் சுமார் 1001 ஹிட்ஸ். இதில் தனி நபர்கள் மட்டும் 797 பேர். எப்படி இத்தனை சாத்தியமானது என்று புரியவில்லை... (நம்ம லிமிட்டுக்கு இதெல்லாம் ஓவர்ங்ண்ணா.. ;-) ) அன்று இட்ட இடுகை சாதாரணமானது தான்.. துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது?




ஹிட்ஸ் கவுண்டரைப் பார்த்த போது அதிகப்பட்டியான வருகை தமிழிஷின் வழியேவே இருந்தது. தமிழ் மணத்தில் இருந்து மிகக் குறைவான ஹிட்ஸ்களே இருந்தன. 1000 ஹிட்ஸில் 150 ஹிட்ஸ் கூட தமிழ் மணத்தின் வழியே இல்லை.. :( 150 ல் இருந்து 200 வரை ஹிட்ஸ் இருந்தாலே தமிழ் மணத்தில் இடுகை சூடாகி விடும். ஆனால் பதிவு சூடாகவில்லை.

நேற்று பதிவு ஏதும் இடவில்லை. ஆனாலும் ஹிட்ஸ் 500 க்கும் மேல் வந்தது. அதை கொஞ்சம் குடைந்த போது பெரும்பாலனவை தமிழிஷின் வழியே இருந்தது. தமிழ் மணத்தின் முகப்பில் இருந்து மட்டுமே அனைத்து ஹிட்ஸூம் இருந்தது. அதே வேலையில் தமிழிஷின் பல பக்கங்களில் இருந்தும் ஹிட்ஸ் வந்துள்ளது.



தமிழ் மணத்தின் வலைத் தளம் திறக்கும் நேரமும், பயனாளர்களுக்கு இலகுவாகவும் இல்லாமல் இருக்கின்றதோ என்ற ஐயம் தோன்றுகின்றது. பதிவர்களுக்கு மட்டுமேயான ஒரு தளமாக தமிழ் மணம் மாறி விடக்கூடாது என்பதே நம் நோக்கம். என்னதான் இருந்தாலும் இன்னும் தமிழ் மணம் வழியே தான் பதிவுகளைப் படிக்கின்றேன். தமிழிஷில் பதிவைக் கொடுக்கப் போகும் போது மட்டும் ஒரு பார்வை பார்ப்பது தான்.

*******************************************************************



கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா அல்மோரா மலைப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். வழக்கம் போல் அழகான படங்களுடன் பதிவு இட்டு வருகின்றார்.. பாருங்கள்.http://sirumuyarchi.blogspot.com/search/label/அல்மோரா

அவரது பதிவுகளைப் பார்த்த போது நான் வேலை செய்யும் இடம் தான் நினைவுக்கு வந்தது. கீழே உள்ள படம் சென்ற புதன்கிழமை எடுத்தது.வளைகுடாவில் வெயில் அடிக்க ஆரம்பித்தும் இங்கு இன்னும் வெயில் உறைக்க வில்லை. தினமும் மாலையில் மலை ஓரத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து மிதந்து செல்லும் மேகங்களைப் பார்ப்பது நல்லா ஜாலியா இருக்கும்.. ;-)) அனுபவிச்சா தான் தெரியும்..


*********************************************************************

எங்க துளசி டீச்சர் நிறைய ஊர்களை சுற்றிப் பார்த்து விட்டு நியூஸிலாந்துக்கு திரும்பி விட்டார்கள்.. இனி கிளாஸுக்கு மட்டம் போடாமல் போகனுமாம்.. ஊருக்கு போய் இருந்த போது டீச்சர் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட இடத்திற்கு அருகில் மகனை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.. ;-)



*********************************************************

தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போட்டு விட்டு செல்லலாமே


படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்.

31 comments:

நட்புடன் ஜமால் said...

எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்\\

சந்தேகமே வேண்டாம் ...

Anonymous said...

பொரியல் அருமை..
ஓட்டு போட்டாசுண்ணா..

முரளிகண்ணன் said...

ஓட்டு போட்டுறேன்

நட்புடன் ஜமால் said...

\\கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே... ப்ளீஸ்.. சில புதியவர்கள் படித்து இம்ப்ரஸ் ஆகிக் கமெண்ட் போடுவது நம்மால் தவிர்ந்து போகக் கூடாது\\

நல்ல அட்வைஸ் - முதலில் நான் கடைப்பிடிக்கிறேன் ...

cheena (சீனா) said...

aakaa படிசுட்டேன் - மறுமொழி அப்புறமா வரேன்
சரியா

வால்பையன் said...

//கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.//

இப்ப நான் என்ன செய்ய
(தம்பி பட மாதவன் போல் படிக்கவும்)

அ.மு.செய்யது said...

நீங்கள் ஒரு இணைய டாக்டர்..வலைப்பூக்கள் தொழில்முறை குறித்து விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் போல...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

நாமக்கல் சிபி said...

ஹிட்ஸ் அனாலிஸிஸ் எப்படி எடுக்குறீங்க?

எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்!

Unknown said...

//அ.மு.செய்யது said...
நீங்கள் ஒரு இணைய டாக்டர்..//

Repeatu... :))

நல்ல பதிவு அண்ணா :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தாமிரா பதிவைப்பற்றிய ஆதங்கம் உண்மை தான்..

ஹிட்ஸ் விசயத்தில் ... நம்ம தமிழ்மண ப்ளாக்கர்ஸ் பலரும் ஃபாலோவரின் மூலம் கூகிள் ரீடரின் மூலம் படித்துவிடுவதால்.. தமிழ்மணம் மூலமாக வந்த ஹிட்ஸ் கம்மியாக இருக்கலாம் இல்லையா??

SurveySan said...

//தமிழ் மணத்தின் வலைத் தளம் திறக்கும் நேரமும், பயனாளர்களுக்கு இலகுவாகவும் இல்லாமல் இருக்கின்றதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.//

எனக்கு வேக வித்யாசம் தெரியலை.
பாக்கரதுக்கும், உபயோகிப்பதர்க்கும், தமிழ்மணமே அழகு :)

ஆயில்யன் said...

//SurveySan on March 20, 2009 10:18 AM said...
//தமிழ் மணத்தின் வலைத் தளம் திறக்கும் நேரமும், பயனாளர்களுக்கு இலகுவாகவும் இல்லாமல் இருக்கின்றதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.//

எனக்கு வேக வித்யாசம் தெரியலை.
பாக்கரதுக்கும், உபயோகிப்பதர்க்கும், தமிழ்மணமே அழகு :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

Anonymous said...

// அ.மு.செய்யது said...

நீங்கள் ஒரு இணைய டாக்டர்..வலைப்பூக்கள் தொழில்முறை குறித்து விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் போல...//

டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்பிரியனுக்குப் பாராட்டுக்கள்.

ஷண்முகப்ரியன் said...

அடேங்கப்பா.இவ்வளவு டெக்னிகல் சமாசாரங்கள் இருக்கிறதா ப்ரியன்?நான் எழுதுவதோடு சரி.உங்களைப் போல் யாரிடமாவது மேற்படிப்புப் படித்தால்தான் இதெல்லாம் புரியும்போல. நன்றி ப்ரியன்.

சந்தனமுல்லை said...

பொரியல் நல்ல சுவை! :-)

BIGLE ! பிகில் said...

ரெண்டும் வேற வேறங்க.
அக்ரிகேட்டரையும் புக்மார்க்கையும் ஒன்னா வச்சு பாக்காதிங்களேன்.

நிஜமா நல்லவன் said...

/ நட்புடன் ஜமால் said...

எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்\\

சந்தேகமே வேண்டாம் .../


rippeettu...:)

ராமலக்ஷ்மி said...

துளசி மேடம் நின்ற இடத்தில் வைத்து படம் எடுத்த ராசி அவங்களை மாதிரி பேரும் புகழும் பெற்று பெரிய ஆளா வருவார் பாருங்க உங்க ஜூனியர்.

மங்களூர் சிவா said...

/
எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்\\
/

:)))

தமிழன்-கறுப்பி... said...

\\
எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்).
\\

அட அவரா... :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழிஷ் பக்கமே போனதில்லை நான் இனிமேல்தான் போய் பாக்கணும்..

தமிழன்-கறுப்பி... said...

ஓட்டா அதை எப்படி போடுறது...?

:)

ங்கொய்யா..!! said...

:)
:):)

அன்புடன் அருணா said...

நாமக்கல் சிபி said...
//ஹிட்ஸ் அனாலிஸிஸ் எப்படி எடுக்குறீங்க?
எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்!//

எனக்கும்தான் சொல்லிக் கொடுங்களேன்!........
அன்புடன் அருணா

பட்டாம்பூச்சி said...

அருமையான சுவையான பொரியல் :))

கிரி said...

//கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே//

வழிமொழிகிறேன்

ஆதவா said...

அப்ப்டியே வருகையை அதிகப்படுத்துவது எப்படினு சொல்லியிருந்தீங்கன்னா.... நன்னா இருக்கும்..

எனக்கும் ஹிட்ஸ் தமிழிஷிலிருந்துதான் அதிகம் வருது!. உதாரணத்திற்கு..

நேற்று போட்ட பதிவுக்கு தமிழ்மணத்திலுருந்து பார்த்தவர் 80 க்கும் குறைவுதான்.. இன்று காலை தமிழிஷில் பிரபல இடுகை ஆகிவிட்டதால், இன்னும் விடியவே இல்லை, அதற்குள் 100 ஐ தாண்டிவிட்டது... அநேகமாக, இன்று என் வலையில் அதிக ஹிட்ஸ் பெறும் நாள் என்று நினைக்கிறேன்..

உங்களுக்கு நெகட்டிவ் வாக்குகள் விழுந்திருக்கின்றன. நான் நினைக்கிறேன் இதில் ஏதோ சதி இருக்குமென்று!! நீங்க என்ன நினைக்கிறீங்க?

Sanjai Gandhi said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க டாக்டர் தமிழ்பிரியனாரே( தேர்தல் நேரமாச்சே :) .. :)

அந்த துபாய் பதிவு யூத் விகடன்ல இருக்கு. ஹிட்ஸ்க்கு அதும் காரணமா இருக்கும். தமிழ்மணம் சூடாண இடுகைல வந்தா மட்டுமே அதுல இருந்து நிறைய பேர் வராங்க. இல்லைனா தமிழிஷ்ல இருந்து தான் நிறைய வறாங்க. எனக்கு இது ரெண்டையும் விட ரீடர் மாதிர் ஃபீட் ரீடர்ல இருந்து தான் நிறைய வராங்க.

Tech Shankar said...

Dr. அய்யா. வணக்கம்.

இவ்வளவு புள்ளி விவரங்கள்.. கலக்கிட்டீங்க.

ஒரு நாளில் 1000 ஹிட்ஸ் - இன்னும் ஒரு நாளில் ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்குவதற்கு வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன் - வாழ்க வளமுடன்
த.நெ.

பனித்துளி சங்கர் said...

அப்படியா சங்கதி இது தெரியாம போச்சே ? . பகிர்வுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

அப்படியா சங்கதி இது தெரியாம போச்சே ? . பகிர்வுக்கு நன்றி