Wednesday, March 18, 2009

துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது..??

பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன். நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு. அப்போது ஒரு படக்கதை வந்தது. அதன் பெயரை மறந்து விட்டேன். அதில் ஜானி என்று ஒரு சிறுவன் இருப்பான். அவன் இருந்த நகரமே ப்ளேக் நோயால் அழிந்து போய் இருக்கும். எங்கு பார்த்தாலும் எலிகள் துரத்தும். பல கெட்ட மிருங்கள் சுற்றி வரும். நகரில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பாழடைந்து மனிதர்களே இல்லாமல் போய் கிடைக்கும். இந்த சூழலில் அவன் எத்ரிகொள்ளும் பல சோதனைகளை அதில் படக்கதையாக காட்டி இருப்பார்கள். அழிவு என்றால் இப்படித் தானோ என்று எண்ணிக் கொள்வேன்.

**********************************************************************

ஹிந்தி சில வித்தியாசமான படங்கள் வரும். டர்னா மனா ஹை (डरना मना है)... அதாவது பயப்படுவதற்கு தடை என்று வைத்துக் கொள்ளலாம். சுற்றுலா வரும் ஒரு நண்பர்கள் குழுவினரின் வாகனம் பழுதாக காட்டில் ஒரு இடத்தில் இரவு தங்குகின்றனர். அதில் நம் வாள மீன் மாளவிகா கூட இருப்பார். கதை நமக்கு தேவை இல்லை. அதில் அனைவரும் ஆளுக்கு ஒரு பேய்க் கதை சொல்வார்கள். ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.

******************************************************************

நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை. மக்கள் தொகையும் குறைவாக இருந்தது. அரை மணி நேரத்தில் சார்ஜா வந்து விடலாம். அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்.

அடுத்தடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி ஆரம்பமானது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்கள். மக்கள் திரள். வீதிகளில் விலக இடமில்லாமல் மக்கள் திரள். உட்சபட்மாக டிராபிக் ஜாம். இது ஒரு புறமிருக்க அடிப்படைத் தேவையான இருக்கும் இடத்தின் வாடகை அமோகமான வருடா வருடம் ஏறிக் கொண்டே இருந்தது. கட்டிடங்களை 99 வருடத்திற்கு விலைக்கு விற்கும் புதிய முறை ஆரம்பமானது.

பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். கொஞ்சம் அப்பர் மிடிஸ் கிளாஸ் கூட பணத்தைச் சேர்ந்து ப்ளாட் வாங்கி வாடகை வாங்க ஆரம்பித்து இருந்ததனர். (இதில் நிறைய பேர் பாகிஸ்தான், இந்தியர்கள்)

ப்ளாட்களில் தேவை அதிகமாக, அதிகமாக கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமானது. கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதே பெரிய கடினமான வேலையாக மாறிவிட்டிருந்தது. தமிழ் சினிமா போல் எல்லா பெயர்களையும் அனைவரும் வைத்திருந்தனர்.

கடலுக்குள் வில்லாக்களையும், உயரமான கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு இருந்தனர். அதன் உச்சகட்டம் தான் பேரீச்சம் மரம் போன்ற அமைப்பில் வீடுகள், உலக மேப் அமைப்பில் வீடுகள், உலகின் உயரமான கட்டிடம் என்று.. தேரா பகுதியில் கடலில் கப்பல் மூலம் மண்ணைக் கொட்டிக் கொண்டு இருக்கும் போது பேசிக் கொள்வோம்.. கடலில் பணத்தை வாரி இறைக்கிறார்களே.. என்று.

அந்த நேரங்களில் அபுதாபி ரோட்டில் செல்லும் போதெல்லாம் எனக்கு மேலே நான் சொன்ன இரண்டு கதைகள் தான் நினைவுக்கு வரும். துபாய் இருக்கும் மக்கள் தொகைக்கும் இங்கு கட்டப்பட்டுக் கொண்டு வரும் கட்டிடங்களுக்கும் விகிதாச்சாரம் அதிக வித்தியாசமாக இருக்கின்றதே..இதையெல்லாம் யார் வந்து நிரப்பப் போகின்றனர் என்று... எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையென்றால்.... கட்டிடங்கள் பாழடைந்து , தெருக்கள் வெறிச்சோடி மயான அமைதியாகி விடும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்க வில்லை. முதலில் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. துபாய் வரைத் திரும்பி விட்டது. ரியல் எஸ்டேட் சரிவு என்ற உடன் மக்கள் துபாயில் முதலீடு செய்யத் தயங்க, வங்கிகள் அடுத்த கட்ட லோனை நிறுத்த ஆரம்பித்தன. கட்டிய கட்டிடங்கள் விற்கப்படாமல் தேங்க வங்கிகள் பண முடைக்கு ஆளாகின. வாங்கியவர்கள் விற்க எத்தனிக்கின்றனர். வங்கிக்கு பணம் கட்ட முடியாமலும், கட்டியதை விற்க முடியாமலும் நிறுவனங்கள் தவிக்க கூடவே இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளப் பிரச்சினை.
வேலை இல்லாததால் பெரும்பாலானோரை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் காலியானதால் அவர்கள் இருந்த கட்டிடங்களும் காலியாகின்றன. அவர்களை டார்கெட்டாக வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களும் வியாபாரமின்றி தவிக்கின்றனர். எப்போதும் அமர்க்களமாக இருக்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

நிறுவனங்கள் ஆட்களை வேலை விட்டு தூக்குகின்றனர். இல்லையேல் நீண்ட விடுமுறை கொடுத்து தற்காலிகமான தங்களை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர்... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது போல் துபாய் தனது உச்சத்தை எட்டி விட்டது... துபாயுடன் சேர்ந்து சார்ஜா, அஜ்மான் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. அபுதாபியின் எண்ணைய் வளம் அதைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குர்ஆன் 2:276)

77 comments:

நட்புடன் ஜமால் said...

நோக்கியாவா

சாம்சங்கா

இங்க சோனி எரிக்ஸன் தான் அதிகம்

:)

நட்புடன் ஜமால் said...

\\டர்னா மனா ஹை\\

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்ட

நட்புடன் ஜமால் said...

\\“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன் 2:276)\\

அருமை ’தல’

islam said...

நல்ல பதிவு அண்ணா.

islam said...

////நட்புடன் ஜமால் said...
\\டர்னா மனா ஹை\\

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்ட///

என்ன்ன்ன............
:)

நட்புடன் ஜமால் said...

\\islam said...

////நட்புடன் ஜமால் said...
\\டர்னா மனா ஹை\\

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்ட///

என்ன்ன்ன............\\

அந்த படத்தை பற்றிய விமர்சணம் சொன்னேன் ...

தமிழ் தோழி said...

அண்ணா பதிவு சூப்பர்.

வால்பையன் said...

அந்த படக்கதையை நானும் படித்திருக்கிறேன். அதில் ஒருவித ரத்தவகை உள்ளவர்கள் மட்டும் பிழைப்பார்கள், அம்மாறி பிழைத்தவர்களை தேடி ஜானி அலைவான்.
இப்போ அந்த மாதிரி நிறைய சினிமாக்கள் வந்துவிட்டது.

ரெஸிடெண்ட்ஸ் எவில் அதில் ஒருவகை

தமிழ் தோழி said...

////ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.//////

என்ன அண்ணா பேய் படத்தோட கதைய சொல்லி பயம்காட்ரீங்க.
நான் ரொம்ப.........பயந்துட்டேன்..........

எம்.எம்.அப்துல்லா said...

சென்ற ஆண்டு துபாய் சென்று இருந்தபோது நண்பர்கள் மாலிக்(பதிவர் அபுஅப்சர்)போன்றோரிடம் முன் கணித்து சொன்னேன். நான் சொன்ன நேரத்தில் சொன்னது நடந்தது. எனக்கு பொருளியல் பயிற்றுவித்த எனது வணிக மேலாண்மைப் பேராசிரியர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

ஆயில்யன் said...

//பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன். நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு. அப்போது ஒரு படக்கதை வந்தது. அதன் பெயரை மறந்து விட்டேன். அதில் ஜானி என்று ஒரு சிறுவன் இருப்பான். அவன் இருந்த நகரமே ப்ளேக் நோயால் அழிந்து போய் இருக்கும். எங்கு பார்த்தாலும் எலிகள் துரத்தும். பல கெட்ட மிருங்கள் சுற்றி வரும். நகரில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பாழடைந்து மனிதர்களே இல்லாமல் போய் கிடைக்கும்//

ஹைய்ய்ய்ய்ய்ய் !

ஸேம் ஸேம்!

நானெல்லாம் அந்த படக்கதையை சிறுவர்மலர்லேர்ந்து பிச்சு எடுத்து பெரிய புக்கா பைண்ட் பண்ணி நொம்ப நாள் வைச்சிருந்தோமே :))))

ஆயில்யன் said...

//ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.
//

அப்புறம்...........

ஆயில்யன் said...

//நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை.///

அந்த காலகட்டத்தில் எல்லாம் அவ்ளோவா கிடையாதாம்ல !

இப்ப சமீபத்திய 20 வருட வளர்ச்சித்தான் இம்புட்டு வாகனங்கள்

:))

ஆயில்யன் said...

//மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.//

:((((

அப்ப நான் துபாய் போக சான்ஸே இல்லியா :(

நிஜமா நல்லவன் said...

உள்ளேன் ஐயா...!

நிஜமா நல்லவன் said...

பதிவு சற்றே பெரிதாக இருக்கிறது!

நிஜமா நல்லவன் said...

படித்துவிட்டு வருகிறேன்!

நிஜமா நல்லவன் said...

/பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன்/

நானும் கூட விரும்பி படிப்பேன் தல!

நிஜமா நல்லவன் said...

/நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு./

அட...எல்லோரும் இப்படித்தானா???

நிஜமா நல்லவன் said...

ஜானி கதையா????

நீங்க ரொம்ப மூத்தவர் போல....:))

நிஜமா நல்லவன் said...

/கதை நமக்கு தேவை இல்லை./

இல்லாத ஒன்று நமக்கு எதற்கு என்று விட்டுவிட்டீர்கள் போலும்...நன்று!

நிஜமா நல்லவன் said...

/நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை./

இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பு சென்றீர்களா தல????

நிஜமா நல்லவன் said...

/அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்./

இறுதி கட்டம் என்ற ஒன்று இல்லாது போயின் நல்லது...:)

நிஜமா நல்லவன் said...

/பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். /

தல நீங்க துபாயை சுத்தி சுத்தி வந்ததுக்கு இப்ப தான் காரணம் புரியுது...:))

நிஜமா நல்லவன் said...

/துபாய் இருக்கும் மக்கள் தொகைக்கும் இங்கு கட்டப்பட்டுக் கொண்டு வரும் கட்டிடங்களுக்கும் விகிதாச்சாரம் அதிக வித்தியாசமாக இருக்கின்றதே..இதையெல்லாம் யார் வந்து நிரப்பப் போகின்றனர் என்று... எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையென்றால்.... கட்டிடங்கள் பாழடைந்து , தெருக்கள் வெறிச்சோடி மயான அமைதியாகி விடும் என்று நினைத்துக் கொள்வேன்./

இப்ப என்ன சொல்ல வாறீங்க????உங்க நினைப்பு தான் வீழ்ச்சிக்கு காரணமா????

நவநீத்(அ)கிருஷ்ணன் said...

/பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன்/

அந்த கதயின் பெயர் -உயிரைத்தேடி

அ.மு.செய்யது said...

அகலக்கால் வைத்து விட்டு இப்போ அவதிப்படுகிறார்கள்...

நல்ல பதிவு அண்ணே !!!!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
நோக்கியாவா

சாம்சங்கா

இங்க சோனி எரிக்ஸன் தான் அதிகம்

:)
//

உங்கள தான் தேடிட்ருக்காங்களாமா...என்னா வில்லத்தனம்..

வடுவூர் குமார் said...

அவ்வளவு சீக்கிரம் விழாது என்றே நினைக்கிறேன் இருந்தாலும் பல உள்/வெளி காரணிகளை பொருத்தே அமையும்.(அபுதாபி , துபாய் நிறுவனங்களை வாங்கவில்லை-செய்திதாளில் வந்தது)
இங்கு பாருங்க இன்றைய நிலமையை.
எல்லா ஆட்களும் போய்விட்டா இங்கு என்ன இருக்கும் என்பதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.ஆட்களுக்கா பஞ்சம் பக்கத்து நாடுகளில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நாணல் said...

நிஜமா நல்லவன் on March 18, 2009 4:18 PM said...

/பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். /

தல நீங்க துபாயை சுத்தி சுத்தி வந்ததுக்கு இப்ப தான் காரணம் புரியுது...:))

:))))

தேனியார் said...

தமிழ் பிரியன்,

அந்த ஈச்சமர வீட்ல ஒரு வீடு வாடகைக்கு கிடைக்குமா? எங்க கட்சிக்கு ஆபிஸ் போடனும்..

அப்படியே நீங்க வாடகை கொடுத்துட்டா புண்ணியமாப் போகும்.

Shajahan.S. said...

\\“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன் 2:276)\\

மிகச்சரியான பதிப்பு.

வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன்) //

நல்ல பஞ்ச்!

பொறுத்திருந்தி பார்ப்போம்! இறைவனின் விருப்பம் என்னவென்று!

இறைவன் கருணையுள்ளவன்!

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. பொறுத்திருந்து பார்ப்போம்.

நசரேயன் said...

நல்ல பதிவு.

தமிழன்-கறுப்பி... said...

நானும் அந்த படக்கதை படிச்சிருக்கேன்னு ஞாபகம்..

தமிழன்-கறுப்பி... said...

இந்த டுபாய் கதையும் கேள்விப்பட்டதுதான். நிறையப்பேருக்கு வாழ்க்கை கொடுத்த நாடு பொறுத்திருந்து பார்க்கலாம் தல.....

தமிழன்-கறுப்பி... said...

எழுத்து நடை வலு...

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏதோ அவியல் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சுருக்கீங்கன்னு பாத்தா.. ஒரு தேசத்தின் எதிர்காலம் குறித்து சீரியஸான பதிவு.. நியாயமான பயத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுக்குரிய பதிவு. (ரெண்டாவது முறை ஃப்ரூப் பாக்க மாட்டிங்களா? சிறுசிறு பிழைகள் உள்ளன..)

பை தி வே.. அந்த தொடரின் பெயர்.. ‘உயிரைத்தேடி..’

வல்லிசிம்ஹன் said...

நல்ல காலம் வரட்டூம்.
இறைவன் அருள் கிடைக்கட்டும்.
அருமையாக இருக்கிறது பதிவு.

ராமலக்ஷ்மி said...

அருமையான ஆய்வு. விகடன் good blog-லும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அதற்கும் என் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

params said...

//அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன்) //

Entire Saudi income is coming from the interest of the oil income invested in western countries.

In fact the leader of your muslim country prince walid is the principal owner of the interest business giant citigroup.

If the interest income dies, most of the muslim countries will die, especially saudi arabia. Even the mecca is built from such income only.

If this koran verse is true, Your mecca will be destroyed also. Could any serious muslim tell me whether this verse is true and mecca will be destroyed or false and hence koran if false

PARAMS

தமிழ் பிரியன் said...

///params said...

PARAMS///

தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி PARAMS!

வட்டி என்பது இஸ்லாத்தில் கடுமையாக தண்டனைக்குண்டான தண்டனை. சவுதி அரசாங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்படுவது அல்ல... எனவே வட்டியில் இயங்கினால் சவுதி அரேபியாவும், சிட்டி குரூப்பும் ஒருநாள் அழிந்தே தீரும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கண்டிப்பாக காபா ஒருநாள் இடிக்கப்பட்டே தீரும்... இதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகமில்லை.

///''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1595///

இது வருங்காலத்தைப் பற்றிய முகமது(நபி) அவர்களின் தீர்க்கத் தரிசனம்... இறைவனின் புறத்தில் இருந்து வந்தது.. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது உங்களது சந்ததிகளின் காலத்திலோ ஒருநாள் காபா சிறு சிறு கல் தூண்டுகளாக உடைக்கப்படும்.

ஜி said...

ஆமாங்க... அங்க புதிதாய் சேந்த என் தம்பியோட நண்பர்களெல்லாத்தையும் வேலைய விட்டு தூக்கி இந்தியாக்கு அனுப்பிட்டாங்களாம் :(((

தமிழ் பிரியன் said...

///நட்புடன் ஜமால் said...
நோக்கியாவா
சாம்சங்கா
இங்க சோனி எரிக்ஸன் தான் அதிகம்
:)///
அவ்வ்.. உங்க காமெடிக்கு அளவே இல்லியா? நான் கூட இப்படி யோசிக்கலயே...பெரிய ஞானிங்க நீங்க
(அப்பாடா..போட்டு விட்டாச்சி)

தமிழ் பிரியன் said...

///நட்புடன் ஜமால் said...

\\டர்னா மனா ஹை\\

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்ட////
என்னத்தை..பயத்தையா? அதெல்லாம் நிறைய இருக்குங்ண்ணா

தமிழ் பிரியன் said...

///நட்புடன் ஜமால் said...

\\“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன் 2:276)\\

அருமை ’தல’////
நன்றி ஜமால்!

தமிழ் பிரியன் said...

/// islam said...

நல்ல பதிவு அண்ணா.///
இது யாரு புதுசா? ஜமாலில் பிரதிநிதியா? யாரா இருந்தாலும் நன்றி!

தமிழ் பிரியன் said...

///தமிழ் தோழி said...

அண்ணா பதிவு சூப்பர்.///
மிக்க நன்றி!

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

அந்த படக்கதையை நானும் படித்திருக்கிறேன். அதில் ஒருவித ரத்தவகை உள்ளவர்கள் மட்டும் பிழைப்பார்கள், அம்மாறி பிழைத்தவர்களை தேடி ஜானி அலைவான்.
இப்போ அந்த மாதிரி நிறைய சினிமாக்கள் வந்துவிட்டது.

ரெஸிடெண்ட்ஸ் எவில் அதில் ஒருவகை///

சின்ன வயசில்(எனக்கு...உங்களுக்கு இல்ல) அது போன்ற படக்கதைகளை படிப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,.

தமிழ் பிரியன் said...

///தமிழ் தோழி said...

////ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.//////

என்ன அண்ணா பேய் படத்தோட கதைய சொல்லி பயம்காட்ரீங்க.
நான் ரொம்ப.........பயந்துட்டேன்........///

நீங்க...பயந்துட்டீங்க...சரி...சரி நம்பிட்டோம்..உங்களைப் பார்த்து தான் எல்லாரும் பயப்படுறோம்.

தமிழ் பிரியன் said...

///எம்.எம்.அப்துல்லா said...
சென்ற ஆண்டு துபாய் சென்று இருந்தபோது நண்பர்கள் மாலிக்(பதிவர் அபுஅப்சர்)போன்றோரிடம் முன் கணித்து சொன்னேன். நான் சொன்ன நேரத்தில் சொன்னது நடந்தது. எனக்கு பொருளியல் பயிற்றுவித்த எனது வணிக மேலாண்மைப் பேராசிரியர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.///
கிரேட்! தீர்க்கதரிசனம் ! ஆனால் இவ்வளவு சீக்கிரம் இந்த நீர்க்குமிழி உடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்பது தான் சோகம்,.

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன். நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு. அப்போது ஒரு படக்கதை வந்தது. அதன் பெயரை மறந்து விட்டேன். அதில் ஜானி என்று ஒரு சிறுவன் இருப்பான். அவன் இருந்த நகரமே ப்ளேக் நோயால் அழிந்து போய் இருக்கும். எங்கு பார்த்தாலும் எலிகள் துரத்தும். பல கெட்ட மிருங்கள் சுற்றி வரும். நகரில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பாழடைந்து மனிதர்களே இல்லாமல் போய் கிடைக்கும்//
ஹைய்ய்ய்ய்ய்ய் !
ஸேம் ஸேம்!
நானெல்லாம் அந்த படக்கதையை சிறுவர்மலர்லேர்ந்து பிச்சு எடுத்து பெரிய புக்கா பைண்ட் பண்ணி நொம்ப நாள் வைச்சிருந்தோமே :))))///

குட் பாய்! நாம பிச்சு இருந்தா லைப்ரரியன் நம்மை பிச்சு இருப்பாரு.. ;-))

வால்பையன் said...

//சின்ன வயசில்(எனக்கு...உங்களுக்கு இல்ல) அது போன்ற படக்கதைகளை படிப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,. //

ஏங்க! நான் மட்டும் சின்னவயசில கம்புயூட்டருல ப்ளாக்க படிச்சிகிட்டு இருந்தேன். எனக்கும் எல்லா காமிக்ஸும் பிடிக்கும்.

தமிழ் பிரியன் said...

//ஆயில்யன் said...
//ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.
//
அப்புறம்........////
அதுதானுங்க ட்விஸ்ட்டே

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை.///
அந்த காலகட்டத்தில் எல்லாம் அவ்ளோவா கிடையாதாம்ல !
இப்ப சமீபத்திய 20 வருட வளர்ச்சித்தான் இம்புட்டு வாகனங்கள்
:))///
அண்ணே..19 வயசுல துபாய் போய்ட்டோம்...பத்து வருஷத்துக்கு முன்னாடி கதை.

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.//

:((((

அப்ப நான் துபாய் போக சான்ஸே இல்லியா :(///

நாங்க என்ன கதையா சொல்றோம்..அதான் சொல்றோமே..இருப்பவர்களையே வெளியேற்றுகின்றார்கள்..இதில் போகவா? அவ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

/// நிஜமா நல்லவன் said...

உள்ளேன் ஐயா...!///
நல்ல பையனா இருக்கீங்களே!

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
ஜானி கதையா????
நீங்க ரொம்ப மூத்தவர் போல....:))//
யோவ்..மனசாட்சியைத் தொட்டு இதுக்கு பதில் சொல்லுங்க..அப்பப் புரியும்

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
/அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்./
இறுதி கட்டம் என்ற ஒன்று இல்லாது போயின் நல்லது...:)///
ஆமா..தல!

தமிழ் பிரியன் said...

///நவநீத்(அ)கிருஷ்ணன் said...

/பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன்/

அந்த கதயின் பெயர் -உயிரைத்தேடி////
மிக்க நன்றி நவநீத்(அ)கிருஷ்ணன்! நீங்கள் சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தமிழ் பிரியன் said...

///அ.மு.செய்யது said...

அகலக்கால் வைத்து விட்டு இப்போ அவதிப்படுகிறார்கள்...

நல்ல பதிவு அண்ணே !!!!///
நன்றி செய்யது!

தமிழ் பிரியன் said...

/// வடுவூர் குமார் said...

அவ்வளவு சீக்கிரம் விழாது என்றே நினைக்கிறேன் இருந்தாலும் பல உள்/வெளி காரணிகளை பொருத்தே அமையும்.(அபுதாபி , துபாய் நிறுவனங்களை வாங்கவில்லை-செய்திதாளில் வந்தது)
இங்கு பாருங்க இன்றைய நிலமையை.
எல்லா ஆட்களும் போய்விட்டா இங்கு என்ன இருக்கும் என்பதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.ஆட்களுக்கா பஞ்சம் பக்கத்து நாடுகளில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.///

அழிவு என்று சொல்ல இயலாது.. ஆனால் சுனாமி, புயல்,மழை இல்லாமல் ஓர் பேரிழப்பு என்பது தான் உண்மை.. மக்களிடம் நிலவும் பீதி,பரபரப்பாக வேலை நடந்த இடங்களில் குடி கொள்ளும் ஒரு மயான அமைதி, ஆட் குறைப்பு போன்ற்வையே இழப்பின் உட்சகட்டம்.

தமிழ் பிரியன் said...

///நாணல் said...
நிஜமா நல்லவன் on March 18, 2009 4:18 PM said...
/பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். /
தல நீங்க துபாயை சுத்தி சுத்தி வந்ததுக்கு இப்ப தான் காரணம் புரியுது...:))
:))))///

தங்கச்சி..வாணாம் நி.நல்லவன் அண்ணனோட சேராதீங்க..அவர் ரொம்ப கெட்டவரு..சொல்லிபுட்டேன்..;-))

தமிழ் பிரியன் said...

///தேனியார் said...
தமிழ் பிரியன்,
அந்த ஈச்சமர வீட்ல ஒரு வீடு வாடகைக்கு கிடைக்குமா? எங்க கட்சிக்கு ஆபிஸ் போடனும்..
அப்படியே நீங்க வாடகை கொடுத்துட்டா புண்ணியமாப் போகும்.////
ஈச்ச மரத்துல குருவி கூட அவ்வளவா கூடு கட்டாதுண்ணே..நீங்க எப்படி ஆபிஸ் எல்லாம்? ஓ.. மரத்துல உட்கார்ந்து ஏதாவது ஆராய்ச்சி பண்ணப் போறீங்களா?..;-)

தமிழ் பிரியன் said...

///Shajahan.S. said...

\\“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன் 2:276)\\
மிகச்சரியான பதிப்பு.
வாழ்த்துக்கள்///
வருகைக்கு மிக்க நன்றி Shajahan.S!

தமிழ் பிரியன் said...

/// நாமக்கல் சிபி said...
//அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குஆன்) //
நல்ல பஞ்ச்!
பொறுத்திருந்தி பார்ப்போம்! இறைவனின் விருப்பம் என்னவென்று!
இறைவன் கருணையுள்ளவன்!///
மனிதர்களுக்கு ஒன்றும் பிரச்சினை வராது தள..அந்த சமூக கட்டமைப்பு அழிந்து போய் விடும்..அவ்வளவு தான்.

தமிழ் பிரியன் said...

//மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. பொறுத்திருந்து பார்ப்போம்.///
நன்றிங்க அண்ணே!
(உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் அந்த பொருளாதார நிபுணரை கொஞ்சம் அப்பப்ப வெளிக்காட்டி பதிவு போடுங்க)

தமிழ் பிரியன் said...

///நசரேயன் said...

நல்ல பதிவு.///
நன்றி நசரேயன்!

தமிழ் பிரியன் said...

///தமிழன்-கறுப்பி... said...

இந்த டுபாய் கதையும் கேள்விப்பட்டதுதான். நிறையப்பேருக்கு வாழ்க்கை கொடுத்த நாடு பொறுத்திருந்து பார்க்கலாம் தல.....///
ஆமா தல... என்னை எல்லாம் உருவாக்கிய ஊர் அது..கஷ்டமாக இருக்கிறது. விரைவில் எல்லாம் சரியாக பிரார்த்திக்கலாம்.

தமிழ் பிரியன் said...

///தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
ஏதோ அவியல் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சுருக்கீங்கன்னு பாத்தா.. ஒரு தேசத்தின் எதிர்காலம் குறித்து சீரியஸான பதிவு.. நியாயமான பயத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுக்குரிய பதிவு. (ரெண்டாவது முறை ஃப்ரூப் பாக்க மாட்டிங்களா? சிறுசிறு பிழைகள் உள்ளன..)

பை தி வே.. அந்த தொடரின் பெயர்.. ‘உயிரைத்தேடி..’///

நன்றி ஆதி! ஓவர் கான்பிடன்ஸில் செய்யும் தவறுகள் பாருங்கள்..நீங்கள் சுட்டிக் காட்டியதால் திருத்தவில்லை. இதை ஒரு பாடமாக வைத்து அடுத்ததடுத்த பதிவுகளில் எழுத்துப் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்கின்றேன்.

தமிழ் பிரியன் said...

///வல்லிசிம்ஹன் said...

நல்ல காலம் வரட்டூம்.
இறைவன் அருள் கிடைக்கட்டும்.
அருமையாக இருக்கிறது பதிவு.////
ஆமாம் அம்மா! அதற்கு நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

தமிழ் பிரியன் said...

/// ராமலக்ஷ்மி said...

அருமையான ஆய்வு. விகடன் good blog-லும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அதற்கும் என் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.////
ரொம்ப நன்றிக்கா! இப்படி பாசம் காட்டும் அக்காக்கள் இருக்கும் போது என்ன கவலை..:)

தமிழ் பிரியன் said...

///params said...///
ஏற்கனவே உங்களுக்கு முதலில் பதில் சொல்லி இருக்கின்றேன். பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!

தமிழ் பிரியன் said...

///ஜி on March 23, 2009 9:42 AM said...

ஆமாங்க... அங்க புதிதாய் சேந்த என் தம்பியோட நண்பர்களெல்லாத்தையும் வேலைய விட்டு தூக்கி இந்தியாக்கு அனுப்பிட்டாங்களாம் :(((///
ஆமாம் ஜி! என் நண்பர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். சில ப்ளாக் நண்பர்கள் கூட் பெரிதும் பாதிக்கப்பட்டது வேதனை அளிக்கின்றது.

Mutharasan Ilango said...

நீங்க சொல்ற அந்த சிறுவர்மலர் கதை "உயிரைதேடி"னு நினைகிறேன்... சரியா? நானும் துபாயிலதான் குப்ப கொட்றேன்... நீங்க சொல்றது முழுக்க முழுக்க சரி

LinkWithin

Related Posts with Thumbnails