Monday, March 23, 2009

தாமிரபரணி, நீச்சல், அருவிகள்....இன்னும் சில

எங்க ஊருக்கு நடுவில் ஒரு ஆறு ஓடும்... நல்ல அகலமான ஆறு... ஆற்றங்கரை முழுவதும் தென்னந்தோப்புகளாக இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அங்கே போய் ஆற்றில் குளிப்போம்.. வீட்டுக்குப் போகும் போது என்ன டிரிக்ஸ் செஞ்சாலும் பல மணி நேரம் குளிப்பதால் காலெல்லாம் கொரக்கலிச்சு(?)ப் போய் விடும்.. வீட்டுக்கு போகும் போது அதை வைத்து கண்டுபிடிச்சிடுவாங்க... அப்புறமென்னா அடி விழும்..

நமக்கு அடி எல்லாம் பாராட்டு மாதிரி அப்படியே உதிர்த்து விட்டு போய்டுவோம். அப்படி விழுந்த அடியில் மண்டை எல்லாம் உடைந்த கதை எல்லாம் கூட இருக்கு. அந்த அடியால் உண்டான தழும்பை மறைக்க வலது பக்கமாக வகிடு எடுக்கும் பழக்கம் கூட உண்டாச்சுன்னா பார்த்துக்கங்க... சரி மேட்டருக்கு வருகிறேன்.

என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை. என்னவோ அது மட்டும் தோணவே இல்லை. கொஞ்சம் பெரிதானதும் கும்பக்கரை அருவிக்கு சைக்கிளிலேயே நண்பர்களுடன் போவோம். அழகான அருவி..கூட்டமும் இருக்காது. ஜாலியாக குளிப்போம். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லாம் யானை கெஜம், குதிரை கெஜம் எல்லாவற்றிலும் டைவ் அடித்துக் குளிப்பார்கள். நான் அருவிலும், வலுக்குப் பாறைகளில் சறுக்கியும் குளிப்பேன். என் நண்பர்கள் கமலக்கண்ணன், அப்பாஸ் எல்லாரும் நீச்சல் கத்துக் கொடுக்க முயற்சித்து கடைசியில் தோல்வியைத் தழுவினர். என்னை கூட்டிக் கொண்டு சென்றதற்கே எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவானுக... ;)))

திருமணம் முடிந்து சில நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு முறை கும்பக்கரை அருவிக்குச் சென்றோம். அதற்குப் பிறகு ஒரு முறை மச்சினன் மற்றும் அவரது நண்பர்களுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அருவிகளுக்கு ஒரே நாளில் சென்றோம். காலையில் கிளம்பி ஒரு அருவில் ஒரு மணி நேரக் குளியல், சாப்பாடு, மீண்டும் பயணம், அடுத்த அருவி, மீண்டும் குளியல் மீண்டும் சாப்பாடு... இப்படியே கடைசியில் குற்றாலத்தில் முடிந்தது.

குற்றாலம் எப்பவுமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. கூட்டமான கூட்டம் இருக்கும். அருகிலேயே சோப்பு, சீயக்காய் நுரையுடன் ஆட்கள் என்று வெறுப்பாக இருக்கும். லைனில் சென்று உடனே திரும்ப வேண்டும். பெண்களுக்கு குளிக்க
சரியான வசதி இருக்காது.

கும்பக்கரைக்கு சென்றால் தனியாக ஒரு மணி நேரம் அருவியில் நிற்பேன். அது தான் உண்மையான இன்பம்... இதற்காகவே விடுமுறை இல்லாத நாட்களில் செல்வோம்.
தனியாக ஆனந்தக் குளியல்

*********************************************************************
தாமிரபரணிக்கும் நம்ம ஊருக்கும் சம்பந்தமே இல்லை... 10 வருடத்துக்கு முன்னாடி ஒரு தடவை டூர் போய் இருக்கும் போது நெல்லைக்கு அருகில் உள்ள வல்லநாடு அக்ரி காலேஜ் பக்கம் இருக்கும் ஆற்றில் குளித்தது தான் அதற்கிடையேயான தொடர்பு.

அந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் பாக்கியம் மீண்டும் சமீபத்தில் கிடைத்தது. சகோதரனுக்கு பிறந்துள்ள மகனைப் பார்க்க நெல்லைக்கு அருகில் உள்ள செய்துங்கநல்லூருக்கு சென்றோம். அந்த ஊரில் தாமிரபரணி ஓடாததால் அங்கிருந்து சாத்தான் குளம், ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ள கருங்குளம் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் நல்ல தண்ணீர் ஓடியது.

நல்லா ஜாலியான குளியல். அப்பாவுடன், சகோதரர்கள், மச்சான் எல்லாம் சென்றோம். நீச்சல் மட்டும் அடிக்க முடியல.. மகனையும், தம்பி மகனையும் ஆற்றில் இறக்கி குளிக்க வைக்கலாம் என்றால் இருவரும் கோரஸாக “அத்தா, இது பச்சத் தண்ணி.. குளிரா இருக்கும். அம்மா வைவாங்க.நாங்க வீட்ல போய் குளிச்சுக்கிறோம்” பயலுக காலைக் கூட ஆற்றில் வைக்க விடவில்லை.அன்று மாலையே மீண்டும் அதே தாமிரபரணி தரிசனம். இப்ப குளிக்க அல்ல. அந்த ஆற்றைக் கடந்து தான் ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமாம். உறவினர் வீட்டுக்கு. காலையில் குளிக்கும் போதே கவனித்தோம். நிறைய பேர் மறுகரையில் இருந்து இக்கரைக்கு ஆற்றைக் கடந்து சென்று கொண்டு இருந்தனர். பொதுவாக முஸ்லிம்கள். பெண்களும் இதில் அடங்குவர்.

அந்த ஊரின் பெயர் கொங்காராயகுறிச்சி(சரியா??). அதற்கு செல்ல பாலம் ஏதுமில்லை. செய்துங்கநாலூரில் இருந்து நெல்லை சென்று அங்கிருந்து வேறு வழியாக தான் பஸ் உள்ளது. நாங்கள் சென்ற ஊரில் இருந்து பஸ்ஸில் செல்ல வேண்டுமானால் பல கி.மீ சுற்ற வேண்டும். 10 நிமிடம் பிரயாணித்து ஆற்றில் இறங்கி நடந்தால் சிறிது நேரம் தான்... என்ன கொடுமய்யா...

அந்த பகுதி மக்கள் அங்கு பாலம் கட்டச் சொல்லி பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இயந்திரங்கள் செவி சாய்க்க வில்லையாம்.

அந்த கிராமத்தில் நிறைய வீடுகள் . பெரிது பெரிதாக உள்ளன. பழமையும் புதுமையும் கலந்த மக்கள். நாங்கள் சென்ற வீடு சினிமாவில் வரும் வீடு போல் பெரி...தாக இருந்தது. ஆனால் இரண்டு பேர் தான் இருக்கின்றனர். நல்ல அனுபவங்கள்.
டிஸ்கி 1 : அருவியில் நிற்கும் போட்டோ சமீபத்தில் தான் எடுத்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாரும் போட்டோவை காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டாம். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அதை விட அழகான போட்டோ அனுப்பி வைக்கப்படும்.
டிஸ்கி 2 : பிரபலமான ஒரு சக பதிவருக்கு அந்த கொங்கராயக்குறிச்சி தான் சொந்த ஊர்.. யார் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.
டிஸ்கி3: ஊரில் இருந்து வந்ததும் எழுதி டிராப்டில் போட்டது.. அனுஜன்யாவின் சமீபத்திய பதிவைப் பார்த்ததும் வெளியிட்டு விட்டேன்.

56 comments:

ஜி said...

தாமிரபரணில நீச்சலா? அங்க எப்போதுமே தண்ணி இருக்கும்.... ஆனா நீச்சல் அடிக்குற அளவுக்கு தண்ணி கெடயாதே...

//கொங்காராயகுறிச்சி(சரியா??). //

சரின்னுதான் நெனக்கிறேன் ;))

//பிரபலமான ஒரு சக பதிவருக்கு அந்த கொங்கராயக்குறிச்சி தான் சொந்த ஊர்.. //

ஓ!! யாருங்க அவரு??

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அந்த அழகான ஆறு , தோப்பு , பழமை புதுமை கலந்த வீடுகள் படங்களெல்லாம் போடாம உம்ம படத்தை போட்டுட்டு இதுல டிஸ்கி வேறயா..?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ தாமிரபரணியில் நீச்சல் அடிக்கமுடியாதா ஜி... எங்க வீட்டுல அதை சொல்லாம.. நாங்கள்ளாம் தாமிரபரணியில்ன்னு கதை விடுவாங்களே .. :)

நட்புடன் ஜமால் said...

டிஸ்கி1: அவசியம் நம்புறோம் ...

ஆயில்யன் said...

பல பதிவர்களை பதிவுக்கு வரவிடாமல் தடுக்கும் டிஸ்கி 1 ஐ தயவு செய்து நீக்கி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் !

இப்படிக்கு

பதிவர்கள் நலம் விரும்பும்....
ஆயில்யன்

ஆயில்யன் said...

//நமக்கு அடி எல்லாம் பாராட்டு மாதிரி அப்படியே உதிர்த்து விட்டு போய்டுவோம். //

பாஸ் இதுல ஏன் நமக்குன்னு எங்களையும் கூட சேர்த்துக்கிறீங்க நாங்கெல்லாம் கவரி மான் பரம்பரை ஒரு அடி விழுந்தாலே வூட்டை வுட்டு ஓடிப்போய்டுவோமாக்கும் :)

ஆயில்யன் said...

//என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அப்ப எப்படி குளிச்சீங்க

1.டப்பாவுல மொண்டு மொண்டு எடுத்து ஊத்திக்கிட்டா

2.இல்லை கயிறு அரைஞாண் கயிறுல கட்டிக்கிட்டா

3.அதுவும் இல்ல கரையில நின்னுக்கிட்டு நாமும் குளிச்சோம்ன்னு சொன்ன கதையாவா

எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும் :(((((((((

ஆயில்யன் said...

//குற்றாலம் எப்பவுமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. கூட்டமான கூட்டம் இருக்கும். அருகிலேயே சோப்பு, சீயக்காய் நுரையுடன் ஆட்கள் என்று வெறுப்பாக இருக்கும். //


ஸேம் !

ஸேம் !

ஃபீலிங்க்ஸ் :(

ஆயில்யன் said...

/தனியாக ஆனந்தக் குளியல்//


ம்!

ம்!

கானா பிரபா said...

ஆயில்யன் said...

பல பதிவர்களை பதிவுக்கு வரவிடாமல் தடுக்கும் டிஸ்கி 1 ஐ தயவு செய்து நீக்கி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் !//

ரிப்பீட்டே, கூடவே பலகீனமான இதயம் கொண்டோர் தயவு செய்து தவிர்க்கவும்னு டிஸ்கியும் போடவும்.

ஆயில்யன் said...

// கானா பிரபா said...
ஆயில்யன் said...

பல பதிவர்களை பதிவுக்கு வரவிடாமல் தடுக்கும் டிஸ்கி 1 ஐ தயவு செய்து நீக்கி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் !//

ரிப்பீட்டே, கூடவே பலகீனமான இதயம் கொண்டோர் தயவு செய்து தவிர்க்கவும்னு டிஸ்கியும் போடவும்//

குட் ஐடியா

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஜி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ தாமிரபரணியில் நீச்சல் அடிக்கமுடியாதா ஜி... எங்க வீட்டுல அதை சொல்லாம..//

நீச்சல் அடிக்கலாம்... ஆனா வருசத்துக்கு ரெண்டு மூனு தடவ மழை காலத்துல வெள்ளம் வந்தா :))

ஆயில்யன் said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//

வேணாம் விடுங்க பாஸ்!

அனுஜன்யா said...

நல்லா, சுவாரஸ்யமாக இருக்கு பதிவு. 'கொரக்கலிச்சு' - ??
கும்பக்கரைக்கு சைக்கிளில் போவதென்றால்.... உங்க ஊர் எது பாஸ்?

அனுஜன்யா

வெயிலான் said...

குற்றால அருவியில உங்களுக்கு குளிக்கத் தெரியல ஜின்னா!

இரவு 2 மணிக்கு அருவிக்கு போய்க் குளிக்கணும். அப்பத்தான் நல்லாருக்கும்.

நல்லதந்தி said...

//நல்லா, சுவாரஸ்யமாக இருக்கு பதிவு. 'கொரக்கலிச்சு' - ??
கும்பக்கரைக்கு சைக்கிளில் போவதென்றால்.... உங்க ஊர் எது பாஸ்? //

நான் கண்டுபிடிச்சிட்டேன் பெரியகுளம் தானே! அந்தத் தென்னந்தோப்பை மறக்கமுடியாது. இருந்தாலும் அகலமான ’ஆறு’ங்கிறது கொஞ்சம் ஓவர்தான்!

முகம்மது அமீன் said...

என்ன கொடுமை சரவணா இது.....
தாமிரபரணி ஒரு ஊரில் மட்டும் உள்ள ஒரு ஊரணி அல்ல. அது பல ஊருக்கு ஓடும் நதி. அவர் சென்று உள்ள ஊரில் அப்படி நீச்சல் அடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். அதற்காக தாமிரபரணியில் நீச்சல் அடிக்க முடியவே முடியாது என்று சொல்வது வருத்தம் அளிக்கிறது.

முகம்மது அமீன் said...

கொங்கராய குறிச்சிக்காரர் அண்ணன் தாமிரா என்று அழைக்கப்படுகிற ஆதிமூல கிருஷ்ணன் என்று எண்ணுகிறேன். சரியா?

ராமலக்ஷ்மி said...

நீங்கள் சென்ற ஆறு அருவிகளிலே குமரி மாவட்டத்துக்கருகேயுள்ள ‘திருப்பரப்பு’ அருவியும் சேர்த்தியா? அங்கும் இதே போல கூட்டம் இல்லாத குளியல் கிடைக்கும். கூடவே மிக அருமையான் இயற்கை சூழல்.

தம்பி மகனுக்கு வாழ்த்துக்கள்.

உங்க பசங்க ரொம்ப விவரமா இருக்காங்களே:))?

ஸ்ரீமதி said...

:)))))))))

டக்ளஸ்....... said...

\\குற்றால அருவியில உங்களுக்கு குளிக்கத் தெரியல ஜின்னா!
இரவு 2 மணிக்கு அருவிக்கு போய்க் குளிக்கணும். அப்பத்தான் நல்லாருக்கும்.\\

கரெக்டா சொன்னீங்க வெயிலான் ஸார்...
நம்ம ஜின்னா அண்ணனுக்கு குளிக்கத் தெரியல....(குற்றலத்தில் மட்டும்)...

நாணல் said...

:)))

ராஜா said...

//அப்ப எப்படி குளிச்சீங்க

1.டப்பாவுல மொண்டு மொண்டு எடுத்து ஊத்திக்கிட்டா

2.இல்லை கயிறு அரைஞாண் கயிறுல கட்டிக்கிட்டா

3.அதுவும் இல்ல கரையில நின்னுக்கிட்டு நாமும் குளிச்சோம்ன்னு சொன்ன கதையாவா //

தலைவா, முதல்ல ஆயில்யன் கேள்விக்கு பதிலச் சொல்லுங்க.

நிஜமா நல்லவன் said...

தல வணக்கம்

நிஜமா நல்லவன் said...

நலமா இருக்கீங்களா?

நிஜமா நல்லவன் said...

தல நீங்க எப்பவும் செய்ற ஒரு விஷயத்தை இன்னைக்கு நான் பண்ணலாம்னு இருக்கேன்!

நிஜமா நல்லவன் said...

அது என்னன்னு தெரியுமா?

நிஜமா நல்லவன் said...

சரி விடுங்க...தானா தெரிஞ்சிட போகுது...

நிஜமா நல்லவன் said...

அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை தல....

நிஜமா நல்லவன் said...

நீங்க பண்ணாததையா நாங்க பண்ணிட போறோம்....

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் உங்களை மாதிரி வராது தல...

நிஜமா நல்லவன் said...

எதோ என்னால முடிஞ்சது

நிஜமா நல்லவன் said...

உங்க ஊருல ஆறு எல்லாம் ஓடுதா?

நிஜமா நல்லவன் said...

/என்ன டிரிக்ஸ் செஞ்சாலும் பல மணி நேரம் குளிப்பதால் காலெல்லாம் கொரக்கலிச்சு(?)ப் போய் விடும்.. வீட்டுக்கு போகும் போது அதை வைத்து கண்டுபிடிச்சிடுவாங்க... அப்புறமென்னா அடி விழும்../

அட...நீங்களும் இப்படித்தானா?

நிஜமா நல்லவன் said...

/அப்படி விழுந்த அடியில் மண்டை எல்லாம் உடைந்த கதை எல்லாம் கூட இருக்கு. /

யூத் விகடனுக்கு எழுதி தட்டி விடுங்க தல...

நிஜமா நல்லவன் said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...

அந்த அழகான ஆறு , தோப்பு , பழமை புதுமை கலந்த வீடுகள் படங்களெல்லாம் போடாம உம்ம படத்தை போட்டுட்டு இதுல டிஸ்கி வேறயா..?/

ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

பல பதிவர்களை பதிவுக்கு வரவிடாமல் தடுக்கும் டிஸ்கி 1 ஐ தயவு செய்து நீக்கி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் !
/

ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//நமக்கு அடி எல்லாம் பாராட்டு மாதிரி அப்படியே உதிர்த்து விட்டு போய்டுவோம். //

பாஸ் இதுல ஏன் நமக்குன்னு எங்களையும் கூட சேர்த்துக்கிறீங்க நாங்கெல்லாம் கவரி மான் பரம்பரை ஒரு அடி விழுந்தாலே வூட்டை வுட்டு ஓடிப்போய்டுவோமாக்கும் :)/

ஆயில் அண்ணா....அப்படித்தான் கத்தாருக்கு ஓடிட்டார்...:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அப்ப எப்படி குளிச்சீங்க

1.டப்பாவுல மொண்டு மொண்டு எடுத்து ஊத்திக்கிட்டா

2.இல்லை கயிறு அரைஞாண் கயிறுல கட்டிக்கிட்டா

3.அதுவும் இல்ல கரையில நின்னுக்கிட்டு நாமும் குளிச்சோம்ன்னு சொன்ன கதையாவா

எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும் :(((((((((


ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

சரி தல...வரட்டுமா...வந்த வேலை முடிஞ்சுது...என்னன்னு இப்ப தெரிஞ்சி இருக்குமே...:))

ராஜா said...

//சரி தல...வரட்டுமா...வந்த வேலை முடிஞ்சுது...என்னன்னு இப்ப தெரிஞ்சி இருக்குமே...:))//

எனக்குத் தெரிஞ்சு போச்சு. தமிழ்மணத்திலே மறுமொழியப்பட்ட பதிவுகள்ல முன்னணில நிக்க வைக்கிற வேலை தானே!! வாழ்க வளமுடன்.

ராஜ நடராஜன் said...

//வீட்டுக்குப் போகும் போது என்ன டிரிக்ஸ் செஞ்சாலும் பல மணி நேரம் குளிப்பதால் காலெல்லாம் கொரக்கலிச்சு(?)ப் போய் விடும்.//

அய்!கொரக்கலிச்சு:)கூடவே டிரிக்ஸ் ன்னு என்னமோ சொன்னீங்களே?அது என்ன?

ராஜ நடராஜன் said...

//என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை. என்னவோ அது மட்டும் தோணவே இல்லை.//

நீச்சல்ங்கறது நண்பர்களோட தானா வர்றது.கத்துக்கறதில்ல.அதனால்தான் வரமாட்டேனுடுச்சு:)

ராஜ நடராஜன் said...

//நாங்கள் சென்ற ஊரில் இருந்து பஸ்ஸில் செல்ல வேண்டுமானால் பல கி.மீ சுற்ற வேண்டும். 10 நிமிடம் பிரயாணித்து ஆற்றில் இறங்கி நடந்தால் சிறிது நேரம் தான்... என்ன கொடுமய்யா..//

ஓட்டுக்கேட்டுட்டு இன்னும் ஒரு பய புள்ள வரலியா?

ராஜ நடராஜன் said...

//பாஸ் இதுல ஏன் நமக்குன்னு எங்களையும் கூட சேர்த்துக்கிறீங்க நாங்கெல்லாம் கவரி மான் பரம்பரை ஒரு அடி விழுந்தாலே வூட்டை வுட்டு ஓடிப்போய்டுவோமாக்கும் :)/

ஆயில் அண்ணா....அப்படித்தான் கத்தாருக்கு ஓடிட்டார்...:)//

சிரிச்சிக்கவா:)

புதுகைத் தென்றல் said...

அந்த பிரபல பதிவர் நம்ம இன்னாள் ஆதி முன்னாள் தாமிரா தானே!!

குசும்பன் said...

நல்ல வேளை இந்த புகைப்படத்தில் முகம் சரியாக தெரியவில்லை, ஆகவே இதையே வைத்துக்கொள்கிறோம் வேறு எதுவும் அனுப்பிவிடவேண்டாம்! இதுவே போதும்!

ச்சின்னப் பையன் said...

:-))))))

அன்புடன் அருணா said...

:))
அன்புடன் அருணா

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் தான் 50 அடிச்சேன்.. கோப்பை எனக்குத்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

மலரும் நினைவுகளா.. நடத்துங்க நண்பா..

எம்.எம்.அப்துல்லா said...

இப்பல்லாம் ஆத்துல தண்ணி எங்க ஓடறது???மணல் லாரிதான் ஓடுறது.

நன்றி - விவேக்

:)

வால்பையன் said...

//பிரபலமான ஒரு சக பதிவருக்கு அந்த கொங்கராயக்குறிச்சி தான் சொந்த ஊர்.. யார் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.//

ஆபாச தலைவர் தானே!

(ஆபாச=ஆண்கள் பாதுகாப்பு சங்கம்)

தமிழன்-கறுப்பி... said...

ஒட்டு மொத்தமா ஆயில்யன், நிஜமா நல்லவன் பின்னூட்டங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்யயயய ரிப்பீட்டு போட்டுக்கறேன்..

ரிப்பீட்டு!

தமிழன்-கறுப்பி... said...

55

நானானி said...

அருவிக்குளியல் எப்போதும் ஆனந்தம்தான். நாங்களும் கருங்குளம் அருகில் ஓடும் தாமிரபரணிக்குத்தான் போவோம். அல்லது வல்லநாடு.
குற்றாலம் இப்பெல்லாம் வேஸ்ட்!!
நிம்மதியான குளியலுக்கு மணிமுத்தாறு, இங்கு வருடம் முழுதும் தண்ணீர் இருக்கும். அதுவிட்டால் நாகர்கோயில் போகும் வழியில் உள்ள திற்பரப்பு. பிள்ளைகளோடு போய் பயமில்லாமல் குளிக்கலாம்.

கண்ணைக்கூடத் திறக்காத பச்சிளம் சிசுவுக்கு என் ஆசிகள்!!!

LinkWithin

Related Posts with Thumbnails