கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது. அப்போது நாங்கள் சென்னையில் புறநகரில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம். அந்த கல்லூரியில் சிறப்பாக சொல்ல நிறைய விடயங்கள் இருந்தாலும் மிக முக்கியமான விஷயமாக எங்களுக்குப் பட்டது அது ஒரு கோ-எட் காலேஜ். கல்லூரியைச் சுற்றி பரபரப்பான ஏரியா.
கல்லூரிக்கு எதிரே விடுதி. விடுதியைச் சுற்றி வதவதவென வீடுகள். எங்கள் விடுதி இரண்டு மாடி. விடுதியை ஒட்டியே வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள் இருக்கும். அவற்றிற்கு ஒரே மாடி. நீளமாக இருக்கும். பலவற்றின் வீடுகளின் படிகள் வெளியே இருக்கும் என்பதால் அதன் வழியாக வந்து, விடுதியின் மேலே வந்து விடலாம். இரவு பத்து மணிக்கு மேல் விடுதி மூடப்படுமாதலால் அது தான் வழி. இரண்டாம் ஆட்டம் சினிமா போகிறவர்களுக்கு அதுதான் தினசரி வழி. அந்த லைன் வீட்டின் ஓனர் ஒரு பிரபல வக்கீல். கீழ்த் தளங்களை வாடகைக்கு விட்டுவிட்டு மேலே பாதி மாடியில் விடு கட்டி குடி இருக்கிறார். சில நேரங்களில் அவர் மாடியில் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் இரவு பேசிக் கொண்டு இருப்பார். அப்ப மட்டும் நம்ம பசங்க அந்த பக்கம் இறங்க மாட்டானுக., நாம அந்த வழியை எல்லாம் சோதித்து பார்த்ததில்லை... ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க
சரி நேரடியா மேட்டருக்குப் போகலாம். விடுதிக்கு அடுத்த தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அந்த ஆண்டு அங்கு சிறப்பான திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். லக்ஷ்மன்-ஸ்ருதியின் மெல்லிசைக் கச்சேரி, பட்டிமன்றம் என்று இரவு களை கட்டி இருந்தது. நம்ம மூன்றாவது வீட்டு வக்கீல் தான் திருவிழாவிற்குத் தலைமை. கல்லூரியில் அன்று மட்டும் விடுதியில் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இருந்தது.
பசங்க எல்லாம் இரவு உணவுக்குப் பின் ரெடியாகிக்கிட்டு இருந்தோம். ஏன்னா அந்த ஏரியா பிகர்களெல்லாம் அப்ப தானே மொத்தமா ஒரே இடத்தில் பார்க்கலாம். .. ;) எல்லாரும் கிளம்பின நேரம் பரணி மட்டும் படுத்துக் கிடந்தான். என்னடான்னா அவனுக்கு தலைவலியாம்... ஊருல இருக்குற எல்லா ஸ்கூல் பொண்ணுகளையும் காலையில் வீடு to ஸ்கூல், வீடு To பஸ் ஸ்டாப் வழி அனுப்புவது தான் அவன் முதல் வேலை. அதே போல் மாலையில் vice versa. அவன் வரலைன்னா நிறைய பொண்ணுங்க வருத்தப்படுமே என்று நாங்கள் வருத்தப்பட்டுக் கொண்டே சென்று விட்டோம்.
இரவுப் பொழுது இனிமையாகக் கழிந்தது. சுமார் ஒரு மணிப் போல் சில பசங்க தூக்கம் வந்து விடுதிக்கு திரும்ப வந்துக்கிட்டு இருக்கும் போது வழியில் வக்கீல் வீட்டில் இருந்து ‘திருடன்’ ‘திருடன்’ என்று சத்தம். நம்ம பசங்க வேகமா வக்கீல் வீட்டு மாடிக்கு ஏறிப் போய் இருக்காங்க... கச்சேரியில் இருந்து ஏனோ இடையில் வக்கீல், வீட்டுக்கு வரும் போது ஹால் ஜன்னல் வழியே வெளியே மாடியில் யாரோ ஓடியது போல் இருந்திருக்கின்றது. நம்ம பசங்க மாடி பூராவும் தேடிப் பார்த்துட்டு யாரையும் காணலைன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க... இதில் என்ன மேட்டர் இருக்குன்னா... இதில ஒரு ஆன்ட்டி சென்டிமெண்ட் இருக்கு.. அதைக் கடைசியில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்ம பரணியைப் பற்றி தெரிஞ்சுக்குங்க...
நானும் பரணியும் ஊரிலேயே ஒண்ணா படிச்சவர்கள். தமிழ் மீடியம். ஊரிலேயே அவனுக்கு பொண்ணுக பின்னாடி சுற்றுவது தான் முழு நேர வேலையே.. ஆனால் படிப்பில் கெட்டி. +1 படிக்கும் போது எனக்கு காதல் மலர்ந்து இருந்தது. அது என்னோடு இந்தி படிக்கும் பொண்ணு. அந்த பொண்ணு பேரு.. வேண்டாமே... அதே இந்தி கிளாஸில் எனக்கு ஜூனியர் பெண்ணை பரணி லவ்ஸ் விட ஆரம்பிச்சு இருந்தான். அந்த பெண் பெயர் சுதா. இந்த இரண்டு பெண்களும் ஒரே மெட்ரிக்குலேசன் ஸ்கூலில் படிப்பதால் பிரண்ட்ஸ். வசதியான வீட்டுப் பெண்கள்.
பரணி தைரியமா சுதாகிட்ட போய் லவ்ஸை சொல்லிட்டான். அவன் துபாய் போய் வேலை செய்யப் போவதாகவும், அவனை கல்யாணம் முடித்தால் அவளுக்கும் துபாய் போகும் வாய்ப்பு கிடைக்கும் என்று சாமர்த்தியமாக பேசி இருக்கிறார். ஆனா சுதா விவரமான ஆளு... ‘எங்களுக்கு வெளிநாட்டுக்கு போற எல்லாம் வேணாம். உள்ளூர் ஆள் போதும்.. வேலையைப் பார்த்துட்டு போ’ன்னு சொல்லிடுச்சு.. பரணி வெக்ஸ் ஆகிப் போகிட்டான். ஆனா என்கிட்ட சொல்லை.
சுதா என் ஆள்கிட்ட சொல்ல அவள் வந்து என்னிடம் உளறிட்டாள்.. கொஞ்சம் லொட லொட கேஸ்.. ;))) .. அதுக்கு அப்புறம் சுதாவை நீங்க எல்லாம் பெரிய இடம்.. துபாய் போய் செட்டில் ஆகப் போறீங்க என்று கலாய்த்த கதை எல்லாம் இங்கே வாணாம்.. இதில் பாதிக்கப்பட்டது நான் தான்.. இந்த ஐடியாவை வச்சு இருந்தது நான் தான்... என் ஆள்கிட்ட இப்படிச் சொல்லி புரோபஸ் பண்ணலாம்ன்னு நினைத்து இருந்தேன். பரணி முந்திக்கிட்டு சொதப்பிட்டான்... அப்புறம் கடைசி வரை எப்படி சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டே கடைசி வரை சொல்லாம விட்டுட்டேன்னு வச்சுக்கங்க.. அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..
சரி பழையக் கதைக்கு வரலாம். நம்ம பசங்க திருடனைத் தேடி மாடி பூரா சுத்தி இருக்காங்க.. ஒரு தண்ணீர் தொட்டிக்கு பின்னாடி யாரோ பதுங்கி இருப்பதைப் பார்த்ததும் எல்லாம் உசாரா அங்க போனா.. அந்த ஆள் டக்கென்று இவர்கள் காலில் விழுந்து விட்டான். பார்த்தால் நம்ம பரணி. வக்கீல் வீட்டில் இல்லாததால் வக்கீல் வீட்டுக்கு வந்தேன். திடீரென்று வக்கீல் வந்துட்டார். எஸ்கேப்பாகும் போது ஜன்னல் வழியா பார்த்துட்டார். காட்டிக் கொடுக்காதீங்கடான்னு ஒரே அழுகை. பசங்க நல்லா ஒளிஞ்சுங்க அப்புறம் தப்பி ஓடிப் போன்னு மன்னிச்சு யாரும் இல்லாத மாதிரி காட்டிக்கிட்டு வந்துட்டாங்க... மறுநாள் முதல் அவன் இறந்த 2003 மார்ச் வரை இதை வைத்து அவனைக் கலாய்த்த லூட்டி எல்லாம் காலத்தால் அழியாதது.
டிஸ்கி : கதையில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனையானவை.
57 comments:
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஆஹா.இப்படி ஒரு ஓபனிங் யாருமே இதுவரைக்கும் எழுதியிருக்க மாட்டாங்க..
//சுதா என் ஆள்கிட்ட சொல்ல அவள் வந்து என்னிடம் உளறிட்டாள்.. கொஞ்சம் லொட லொட கேஸ்.. ;))) ..//
இண்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் வெளிய வருதே..
//அப்புறம் கடைசி வரை எப்படி சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டே கடைசி வரை சொல்லாம விட்டுட்டேன்னு வச்சுக்கங்க.. //
இந்த விசயம் இதயம் முரளிக்கு தெரியுமா...
//டிஸ்கி : கதையில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனையானவை. //
கதையிலே இந்த வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தது.
இன்னும் உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
ஆமா நேத்து ஒரு கவிதை லிங்க் தரேனு வேற ஏதோ சிறுகதை லிங்க் மாத்தி தந்துட்டீங்களே !!!!!!
உங்க ஆள்??!!!
உடைத்துச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.ஆமாம்,வக்கீல் வீட்டுக்குப் பரணி எதற்காகப் போனான்?அந்த இடம் எனக்குப் புரியவில்லை,ப்ரியன்.
உடைத்துச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.ஆமாம்,வக்கீல் வீட்டுக்குப் பரணி எதற்காகப் போனான்?அந்த இடம் எனக்குப் புரியவில்லை,ப்ரியன்.
நல்லா இருந்தது நண்பா.. நீங்களும் மதுரைன்னு நினைக்கிறேன்.... ஆனா உங்க நண்பர் அகலாமா இறந்து போனதை நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு..
\\அ.மு.செய்யது said...
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஆஹா.இப்படி ஒரு ஓபனிங் யாருமே இதுவரைக்கும் எழுதியிருக்க மாட்டாங்க//
ஆமால்ல.. :)
முதல் வரில பாதி மட்டும் படிச்சுட்டு ஏதோ சரித்திரக் கதைன்னு நினைச்ச உங்க சரித்திரமா இருக்கு! :-)
முதல்வரியைப் படிச்ச உடனே உங்கள ஃபாலோ பண்ணலாமுன்னு நினைச்சேன். ஆனா......
ஏற்கனவே பிந்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
:))))))))))
சொந்த அனுபவங்களை சுவாரசியமான நடையில் எழுதியிருப்பது அருமை...
இதுக்கு தனியா யோசிப்பிங்களா தல ?
கலக்கலான ஆரம்பம்!
பரணியைப்பற்றி நிறைய கதைகள் இருக்கும் போல....?
பரணியின் கதைகள் சொல்லுறப்பதான் உங்க கதைகளும் வெளில வருது so..
அடிக்கடி பரணி கதை சொல்லுங்க அண்ணே...
\\
அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..
\\
ஆமா இப்ப பெங்களூர்ல இருக்கறதா கேள்விப்பட்டேன்... :)
சுவாரஸ்யமா,
கதை சொல்லுறிங்க தல
i like it...!
இண்ட்ரஸ்டிங்
/ தமிழன்-கறுப்பி... said...
\\
அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..
\\
ஆமா இப்ப பெங்களூர்ல இருக்கறதா கேள்விப்பட்டேன்... :)/
உங்க கிட்டயும் சொல்லிட்டாரா???? என்கிட்டே சொல்லும் போது நான் வேற யாருக்கும் சொல்லலைன்னு சொன்னாரே?????
/ தமிழன்-கறுப்பி... said...
சுவாரஸ்யமா,
கதை சொல்லுறிங்க தல
i like it...!/
me too..like it...thala!
:-)))
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கவிதையை எதிர்பார்த்தேன்....
அன்புடன் அருணா
///கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது.///
எதோ சரித்திர கதை போல ன்னு நெனைச்சு வந்தா?
உங்க வரலாறு!!!
\\அது ஒரு கோ-எட் காலேஜ்.\\
கடைசி வரைக்கும் அந்த குடுப்பனையே இல்லாமா போச்சு அண்ணே....
\\ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க\\
இது ரொம்ப ஓவரு....
அப்ப பரணி,வக்கீல் வீட்டுக்கு போனதுதான் 'ஆன்டி'சென்டிமென்டா.....?
என்ன கொடுமை வக்கீல் ஸார்ர்ர்ர்ர்ர்ர்ர்? (தலையில் அடித்துக் கொண்டு!?!)
வித்தியாசமான ஆரம்பம் - திடுக்கிட வைத்த முடிவு!
நினைவஞ்சலி கதையா? அந்த நண்பர் இறந்து போனது வக்கிலம்மாவுக்கு தெரியுமா?
nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)
///அ.மு.செய்யது said...
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஆஹா.இப்படி ஒரு ஓபனிங் யாருமே இதுவரைக்கும் எழுதியிருக்க மாட்டாங்க.///
நாங்க எல்லாம் சோழர் காலத்துல இருந்தே கிரிமினல்களாக்கும்.. :-)))
///அ.மு.செய்யது said...
//சுதா என் ஆள்கிட்ட சொல்ல அவள் வந்து என்னிடம் உளறிட்டாள்.. கொஞ்சம் லொட லொட கேஸ்.. ;))) ..//
இண்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் வெளிய வருதே..////
இண்ட்ரஸ்டிங் மேட்டரா? இதெல்லாம் புனைவு அண்ணே.. படிச்சு அனுபவிங்க... ஆராயக் கூடாது.. :))
/// அ.மு.செய்யது said...
//அப்புறம் கடைசி வரை எப்படி சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டே கடைசி வரை சொல்லாம விட்டுட்டேன்னு வச்சுக்கங்க.. //
இந்த விசயம் இதயம் முரளிக்கு தெரியுமா...///
ஹிஹிஹி.. நான் வாழ்க்கையில் செஞ்ச நல்ல காரியம் அது ஒன்னு தான்... அந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கு இப்ப.. :)
///அ.மு.செய்யது said...
//டிஸ்கி : கதையில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனையானவை. //
கதையிலே இந்த வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தது.
இன்னும் உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.///
இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே... ;-)))
///அ.மு.செய்யது said...
ஆமா நேத்து ஒரு கவிதை லிங்க் தரேனு வேற ஏதோ சிறுகதை லிங்க் மாத்தி தந்துட்டீங்களே !!!!!!///
அது சிறுகதை தான்.. கவிதை மாதிரி ஒரு சிறுகதை..ஓவரா இருக்கோ.. ;-)
/// Thooya said...
உங்க ஆள்??!!!///
ஹிஹிஹி..உங்க நாட்டுக்கு பக்கத்து நாட்டுல தான் இருக்காங்க இப்ப. ;-)
///ஷண்முகப்ரியன் said...
உடைத்துச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.ஆமாம்,வக்கீல் வீட்டுக்குப் பரணி எதற்காகப் போனான்?அந்த இடம் எனக்குப் புரியவில்லை,ப்ரியன்.///
சார், இதுக்கு மேல உடைச்சு சொல்ல முடியாது.. எங்க ஆடியன்ஸ் எல்லாம் A செண்டர் ஆளுங்க... சிட்டி ஆளுங்க.. புரிஞ்சுப்பாங்க
///கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருந்தது நண்பா.. நீங்களும் மதுரைன்னு நினைக்கிறேன்.... ஆனா உங்க நண்பர் அகலாமா இறந்து போனதை நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு..///
நன்றி நண்பரே! அது துரதிருஷ்டமான சம்பவம்!
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
\\அ.மு.செய்யது said...
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஆஹா.இப்படி ஒரு ஓபனிங் யாருமே இதுவரைக்கும் எழுதியிருக்க மாட்டாங்க//
ஆமால்ல.. :)///
எல்லாம் நம்ம வலையுலகம் கத்துக் கொடுத்தது தானே அக்கா.. ;-)
/// சந்தனமுல்லை said...
முதல் வரில பாதி மட்டும் படிச்சுட்டு ஏதோ சரித்திரக் கதைன்னு நினைச்ச உங்க சரித்திரமா இருக்கு! :-)///
நிஜமும், நிழலும் கலந்த அற்புதக் காவியம்... இப்படி ஏதாவது சொல்லலாம்ல.. ;-)
///SUREஷ் said...
முதல்வரியைப் படிச்ச உடனே உங்கள ஃபாலோ பண்ணலாமுன்னு நினைச்சேன். ஆனா.....///
மிக்க நன்றி சுரேஷ்!
// ஸ்ரீமதி said...
:))))))))))///
நன்றி ஸ்ரீ!
///புதியவன் said...
சொந்த அனுபவங்களை சுவாரசியமான நடையில் எழுதியிருப்பது அருமை...////
நன்றி புதியவன்!
/// தமிழன்-கறுப்பி... said...
இதுக்கு தனியா யோசிப்பிங்களா தல ?
கலக்கலான ஆரம்பம்!///
நன்றி தல!
///தமிழன்-கறுப்பி... said...
பரணியைப்பற்றி நிறைய கதைகள் இருக்கும் போல....?///
இன்னும் நிறைய நிறைய இருக்கு.. ;-))
///தமிழன்-கறுப்பி... said...
\\
அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..
\\
ஆமா இப்ப பெங்களூர்ல இருக்கறதா கேள்விப்பட்டேன்... :)///
யோவ்.. நானு 11000 கி.மீ தள்ளி இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா பெங்களூர் மங்களூருன்னு சொல்லிக்கிட்டு இருக்க... தூயா அக்காவுக்கு போட்ட பதிலைப் படிச்சிக்கங்க
///தமிழன்-கறுப்பி... said...
சுவாரஸ்யமா,
கதை சொல்லுறிங்க தல
i like it...!///
நன்றி தல!
///நிஜமா நல்லவன் said...
இண்ட்ரஸ்டிங்///
நன்றி தல!
///நிஜமா நல்லவன் said...
/ தமிழன்-கறுப்பி... said...
\\
அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..
\\
ஆமா இப்ப பெங்களூர்ல இருக்கறதா கேள்விப்பட்டேன்... :)/
உங்க கிட்டயும் சொல்லிட்டாரா???? என்கிட்டே சொல்லும் போது நான் வேற யாருக்கும் சொல்லலைன்னு சொன்னாரே?????///
யோவ்.. எல்லாம் கூட்டணி போடுறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்
///ச்சின்னப் பையன் said...
:-)))////
நன்றி ச்சின்னப் பையன் !
///அன்புடன் அருணா said...
//கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது//
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கவிதையை எதிர்பார்த்தேன்....
அன்புடன் அருணா///
ஒரு 1000 வருடம் கழித்து என் இந்த பதிவு கூட பாடப் புத்தகத்தில் வந்தால் ஆச்சர்யமில்லை டீச்சர்!
///ஜீவன் said...
///கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது.///
எதோ சரித்திர கதை போல ன்னு நெனைச்சு வந்தா?
உங்க வரலாறு!!!///
ஹிஹிஹி
///டக்ளஸ்....... said...
\\அது ஒரு கோ-எட் காலேஜ்.\\
கடைசி வரைக்கும் அந்த குடுப்பனையே இல்லாமா போச்சு அண்ணே....
\\ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க\\
இது ரொம்ப ஓவரு....
அப்ப பரணி,வக்கீல் வீட்டுக்கு போனதுதான் 'ஆன்டி'சென்டிமென்டா.....?
என்ன கொடுமை வக்கீல் ஸார்ர்ர்ர்ர்ர்ர்ர்? (தலையில் அடித்துக் கொண்டு!?!)///
ஹிஹிஹிஹீ..
///vraa said...
வித்தியாசமான ஆரம்பம் - திடுக்கிட வைத்த முடிவு!///
ரொம்ப ரசிச்சு படிச்ச மாதிரி இருக்கு.. நன்றி!
//கவின் said...
:)///
நன்றி கவின்~!
////KVR said...
நினைவஞ்சலி கதையா? அந்த நண்பர் இறந்து போனது வக்கிலம்மாவுக்கு தெரியுமா?///
சென்னையை விட்டு துபாய் போய்தான் இறந்தான் என்பதால் தெரிய வாய்ப்பு இல்லை.
///Suresh said...
nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)///
நன்றி சுரேஷ்! நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்.
ரூம் போட்டு யோசிப்பிங்களோ..?
Post a Comment