Friday, March 27, 2009

கலவையான சிந்தனைகள் - 27-03-2009

பதிவுகளில் கதையாகவோ, கட்டுரையாகவோ எழுதுவதைக் காட்டிலும் கலந்து கட்டி அடிப்பதில் தான் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. நண்பர்களுடன் பகிந்து கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற முடிகின்றது... ரொம்ப நாளாய் விட்டுப் போன கலவையான சிந்தனைகள் மீண்டும்...

************************************************************

ஊரில் இருந்து வந்ததில் இருந்து இப்ப தான் பதிவுகளை எழுதும் மனநிலைக்கு வந்து இருக்கேன். அதே சூட்டோடு ஒரு பதிவு எழுதினேன். சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பு. ஆனா அதைப் படித்த நம்ம பதிவுலக அண்ணன் ஒருத்தர் இந்த மாதிரி பதிவைப் போட்ட உன் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பேரிளங் காதலர் கூட தல... ஏனிந்த கொல வெறி பதிவை எடிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார். எனவே டிராப்ட்டில் போட்டாச்சு... கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணப் பதிவா தெரியும் போது வெளியிடலாம்.

**************************************************************

இரண்டு சிறுகதைகள் யூத் விகடனில் வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. விகடன் தனது முகப்பில் அதற்கான சிறு இடத்தையும் கொடுத்து வைத்திருந்தது ஒரு உற்சாகத்தை அளித்தது. நல்லா இருக்கோ இல்லியோ நமக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது எனும் போது மகிழ்ச்சி தானே.எனவே தொடர்ந்து எழுதி இம்சிப்போம்.

**************************************************************

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக IPL போட்டிக்கு பாதுகாப்பு தர இயலாத காரணத்தால் போட்டிகள் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் துணுக்கை சக பதிவர் ஸ்டேடஸில் போட்டு இருந்தார்..
பொது ஜனம் 1 : IPL போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து இரண்டு நாளார் சரியான தூக்கம், சாப்பாடு கூட இல்ல

பொது ஜனம் 2: நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சரியா பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதால் தான் மாத்தி இருக்காங்க

பொது ஜனம் 3 : தேர்தல்ன்னா அரசுக்கு செலவு. IPLன்னா வருமானம் தானே.பேசாம தேர்தலை தென் ஆப்பிரிக்காவுக்கு மாத்திட்டு IPL கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தி இருக்கலாம்.

மூலம் : தினமணி

**************************************************************
சமீபத்தில் இங்கு தாயிஃப் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பில் தமிழ்,சிங்கள மக்களின் கலாச்சார ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்து, புத்த, கிறித்தவ, முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடியவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்த ஒரு அறிமுக உரைக்குப் பின் பலவிதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது. முகமது லாபிர் உள்ளிட்ட இலங்கையின் தூதரக உயரதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கல்ந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

கயிறு இழுக்கும் போட்டி, உறி அடித்தல், வாலி பால், சாக்கு ஓட்டம், இப்படி பல போட்டிகள் நடந்தன.... திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம். வீடியோ இணைத்துள்ளேன். நான் எங்க இருக்கோம்ன்னு கண்டுபிடிங்க..



http://www.youtube.com/watch?v=4z5oj5B8aFk



**************************************************************
வீட்டில் சினிமா, பாடல்கள், சீரியல் இவைகளுக்கு அனுமதி இல்லை. பாடலைக் கேட்டு டான்ஸ் ஆடினால் மகனுக்கு அடி தான் விழும். அருகில் இருக்கும் அக்கா மகள்கள், எதிர், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவான். மண்ணிலும் தண்ணீரிலும் விளையாடுவது பிடித்தமானது... சில நேரங்களில் ஒரு பாடலை முணுமுணுப்பான்..ரொம்ப நாளாய் புரியவில்லை.. அப்புறம் தான் விளங்கியது.

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளே
தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி
கொட்டிக் கிடக்குது ஜாங்கிரி
கொல்லைப் பக்கம் போகாதே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

மகன் பிற குழந்தைகளுடன் விளையாடும் ring a ring a roses.. வீடியோ
http://ibnujinnah.blogspot.com/2009/03/ring-ring-roses.html

31 comments:

நட்புடன் ஜமால் said...

. நண்பர்களுடன் பகிந்து கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற முடிகின்றது\\

அழகா சொன்னீங்க ‘தல'

நட்புடன் ஜமால் said...

\\நல்லா இருக்கோ இல்லியோ நமக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது எனும் போது மகிழ்ச்சி தானே\\

நிதர்சனம்.

Anonymous said...

:)

நட்புடன் ஜமால் said...

\\சீரியல் இவைகளுக்கு அனுமதி இல்லை\\

நல்ல காரியம்.

நட்புடன் ஜமால் said...

ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

அழகு

விடீயோ வீட்டில் பார்க்கிறேன் ...

சந்தனமுல்லை said...

வாரிசு - :-))

அ.மு.செய்யது said...

வீடியோக்க‌ளை பார்க்க‌ முடிய‌வில்லை.

அலுவ‌ல‌க‌த்தில் காணொளிக்கு த‌டை.

ம‌ற்ற‌ப‌டி, உங்க‌ள் ப‌திவின் சுவார‌சிய‌த்திற்கு யாதொரு குறையுமில்லை.

அ.மு.செய்யது said...

//திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம்.//

எல்லாம் ஒரு கொல‌வெறி தான்.

Tech Shankar said...

s u p e r

//தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளே
தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி
கொட்டிக் கிடக்குது ஜாங்கிரி
கொல்லைப் பக்கம் போகாதே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

தமிழன்-கறுப்பி... said...

\\
பதிவுகளில் கதையாகவோ, கட்டுரையாகவோ எழுதுவதைக் காட்டிலும் கலந்து கட்டி அடிப்பதில் தான் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது.
\\

ஆமா...

தமிழன்-கறுப்பி... said...

\\
நம்ம பதிவுலக அண்ணன் ஒருத்தர் இந்த மாதிரி பதிவைப் போட்ட உன் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பேரிளங் காதலர் கூட
\\

உங்களுக்கு அண்ணனா அப்ப அவர் பேரிளங்காதலனா இருக்க முடியாதே?
:)

ஆமா அவரை எதுக்கு இங்கன இழுக்கறிங்க.. ;)

தமிழன்-கறுப்பி... said...

உங்களை கண்டுபிடிக்க முடியலை தல...

தமிழன்-கறுப்பி... said...

மருமகன் கலக்குறாரு...!

Unknown said...

எல்லாமே நல்லா இருந்தாலும்.. குட்டி பையன் பண்றது தான் ஹை லைட்.. :))) இன்னும் எழுதலாமே அண்ணா :))

ராமலக்ஷ்மி said...

சிந்தனைகள் சிறப்பு:)!

सुREஷ் कुMAர் said...

//
தேர்தல்ன்னா அரசுக்கு செலவு. IPLன்னா வருமானம் தானே.பேசாம தேர்தலை தென் ஆப்பிரிக்காவுக்கு மாத்திட்டு IPL கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தி இருக்கலாம்.
//
ஷோக்காகீது பா.. இன்னாமா யோசிக்கறாங்க..

ஆயில்யன் said...

//சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பு//

ரியலி இது சுவாரஸ்யமானதாக இருக்குமா பாஸ்....?!
:)

ஆயில்யன் said...

//நான் எங்க இருக்கோம்ன்னு கண்டுபிடிங்க..
//

பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

நீங்க வீடியோவுல இருக்கீங்க பாஸ்....!

(வீடியோவுக்கு எப்படி பயபுள்ள எட்டி எட்டி பாக்குது பாருங்களேன்!)

ஆயில்யன் said...

நூல் விட்டு ஃபிகர் இழுத்த காலமெல்லாம் போய் கடைசியில கயிறுல வந்து நிக்கிது! இதுல எங்களுக்கு போட்டி வைக்கிறீரா உம்ம என்ன பண்றதுன்னே தெரியலய்யா...!

ஆயில்யன் said...

மீ த டெவெண்ட்டீ:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

நூல் விட்டு ஃபிகர் இழுத்த காலமெல்லாம் போய் கடைசியில கயிறுல வந்து நிக்கிது! இதுல எங்களுக்கு போட்டி வைக்கிறீரா உம்ம என்ன பண்றதுன்னே தெரியலய்யா...!/

ரிப்பீட்டேய்

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு தல...:)

ALIF AHAMED said...

திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம்.
//


:)

:)))


திருமணமானவர்களே வெற்றி peruvarkaL enpathu ellaarukkum theriyume

:)

வெற்றி said...

தம்பி கலக்குறீங்க போங்க. பெருசுங்க தோத்தா நல்லாஇருக்காதுன்னு சிறுசுங்க விட்டதையெல்லாம் போட்டு கப்பல் ஏத்தினது நியாயமா?

மங்களூர் சிவா said...

தல செளக்கியமா??

மங்களூர் சிவா said...

நல்லாதான் கலந்து கட்டறீங்க!

:)

எம்.எம்.அப்துல்லா said...

ரத்த பூமிலேந்து போன ஆளு...நீங்க ஜெயிக்காட்டி எப்பிடி??

:))

சின்னப் பையன் said...

ஹாஹா... கயிறு இழுக்கும் போட்டி சூப்பர்..

அண்ணே.. நீங்க எங்கே இருக்கீங்கன்னு நீங்களே சொல்லிடுங்க... எனக்கு தெரியல...

Sanjai Gandhi said...

அண்ணாத்த, சிந்தனைகள் ஜூப்பரு..

விட்ஜெட்டுக்கு ரொம்ப நன்றி.. ;))
பிடிச்சிருக்கா? :)

Arun said...

கலந்து கட்டுவதும் புது முயற்சிகளும் அலுக்காது தானே...

மாதேவி said...

ring a ring a roses.. வீடியோ nice.