இதற்கு முதலில் கொஞ்சமா ப்ளாஸ்பேக்களைப் பார்த்தால் புரியும். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்தனர். காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு நாற்காலிக்காக அடித்துக் கொண்ட சண்டையில் முஸ்லிம் லீக் சிதறுண்டு போனது. அப்துல் சமது, அப்துல் லத்தீப் என பிற கழகங்களில் மறைவில் பதவி சுகம் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று விட்டனர். இது முஸ்லிம் லீக்கின் கதை.
1990 வரை முஸ்லிம்களிடன் அரசியல் விழிப்புணர்வு என்பதே சுத்தமாக இல்லை எனலாம். 1992 பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து கிடந்தது. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றியது. நிறைய பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் முஸ்லிம் லீக் சமுதாய மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் விழிப்புடன் இருந்தன. இதனால் மக்கள் முழுமையாக முஸ்லிம் லீக்கள் மீது விரக்தி அடைந்தனர்.
இந்த நேரத்தில் தான் சில இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் (இந்து முண்ணனி போல) என்ற அமைப்பை நிறுவ முயற்சித்தனர். அதில் இன்றைய PJ வும் இருந்தார். முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அதற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலைவராக தேர்தெடுத்தனர். அப்போதைய போலிஸ் கெடுபிடியில் பயந்து போய் அத்தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து PJ உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த அமைப்பை நடத்தி வந்தனர்.
அதன் பின்னர் மீண்டும் 1995 ல் புதிய அணி ஒன்று உருவானது. குணங்குடி ஹனிபா, பி.ஜெயினுலாபுதீன்,அலாவுதீன்,உள்ளிட்ட தலைவர்கள் கூடி புதிய அமைப்பு நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் போண்றோரும் இதில் அப்போது இணைந்தனர். குணங்குடி ஹனிபாவை நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்க்குடி தாங்கி அய்யா டாக்டர் ராமதாஸ் அரசியல் கத்துக்குட்டியாக இருந்த போது உடன் இருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளவும். ( மருத்துவர் அய்யா குணங்குடி ஹனிபா, பழனி பாபா எல்லாரையும் மறந்து ஏப்பம் விட்டது கிளைக் கதை). ஜவாஹிருல்லாஹ் சிமி அமைப்பில் மும்முரமாக இருந்தவர். அந்நேரத்தில் பாக்கர் சிறையில் இருந்தார்.
அவ்வமைப்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆலோசித்த போது குணங்குடி ஹனிபா தாம் பதிவு செய்து வீணாக இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொடுத்து உதவினார். 1995 ஆகஸ்ட்டில் த.மு.மு.க உருவானது. அதை அடுத்து மக்களிடையே தமுமுகவை எடுத்துச் செல்லும் முயற்சி தீவிரமாக அரங்கேறியது. ஏற்கனவே தவ்ஹீத் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்த PJ தமுமுகவின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தமுமுக பிரச்சாரப் பணிக்கு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் ஏற்கனவே இருந்த தவ்ஹீத் அமைப்பினர் தமுமுகவில் முழு மூச்சாக இறங்கினர்.
1997 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது. அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது. 1999 ல் சென்னை மெரினா கடற்கரையில் வாழ்வுரிமை மாநாடு என்ற ஒரு மாநாடு தமுமுக வால் நடத்தப்பட்டது. இதில் செல்வி.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டது மக்களை தமுமுகவினை திரும்பிப் பார்க்க வைத்தது.
2003 ல் தஞ்சையில் முஸ்லிம்களில் பெரும் பேரணி தமுமுகவால் நடத்தப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் பங்கெடுத்தனர். இந்நிலையில் PJ தனது தவ்ஹீத் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததால் புரோகித அடிப்படையிலான முஸ்லிம்கள் தமுமுகவை ஒரு சார்பான அமைப்பாக பார்க்கும் நிலை இருந்தது. இது தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது.
இதனை அடுத்து சிலபல டிராமாக்களுக்கு (பெருங்கதை அது..) PJ விலகிச் செல்ல தமுமுகவில் சில சுணக்கம் நிலவியது. 2006 தேர்தலில் ஒரு புதிய சூழல் நிலவியது. அதாவது முஸ்லிம்களிடம் தனி இட ஒதுக்கீடு என்ற கோஷம் வலுவாக இருந்தது. இது குறித்து தமுமுக, TNTJ உள்ளிட்டவை மக்களை பிரச்சாரங்கள் மூலம் தெளிவாக்கி வைத்து இருந்தனர். TNTJ அம்மா ஏற்படுத்திய இட ஒதுக்கீடு ஆராயும் ஆணையத்திற்காக அம்மாவிடம் தஞ்சம் புகுந்தது.
தமுமுகவிற்கு ஜெயலலிதா மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் 1999 வாழ்வுரிமை மாநாட்டில் அவர் “இனி BJP உடன் எப்போதும் கூட்டு வைக்க மாட்டேன்” என்று மெரினாவில் வைத்து கூறி இருந்தார். ஆனால் மீண்டும் BJP யுடன் கூட்டு சேர்ந்து விட்டிருந்தார். எனவே தமுமுக திமுக அணியுடன் சேர்ந்தது. அதன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்க பாடுபட்டனர்.
இத் தேர்தலிலேயே தமுமுக போட்டியிட முயற்சி செய்தது. வாணியம்பாடி, மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட எத்தனித்தது. ஆனால் கடைசி நேரக் குளறுபடியில் வாணியம்பாடி கைவிட்டுப் போனது. பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் துபாயைச் சேர்ந்த பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட (உண்மை இறைவனுக்குத் தெரியும்) ஒருவரை நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் கோபமடைந்த கலைஞர் திமுகவைச் சேர்ந்த மைதீன்கானை வேட்பாளராக அறிவித்தார். அவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
MLA ஐப் பறித்துக் கொண்டாலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை தமுமுகவிற்கு கலைஞர் வழங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அப்பதவிக்கு வந்தார். இந்து அறநிலையைத் துறையைப் போல் வக்ஃப் வாரியமும் பல கோடி சொத்துக்களை பராமரிக்கக் கூடியது என்பதால் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லாமல் போனது. மசூதிகளின் நிர்வாகிகளையே கண்காணிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு என்பதால் சுலபமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உள்ளும் தமுமுக நுழைந்தது.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததும் தமுமுகவின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்று சொல்லலாம்.
சமீபத்தில் பிப்ரவரி 2009 ல் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடும் வகையில் மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய அமைப்பை தமுமுக நிறுவியது. தாம்பரத்தில் திமுகவின் ஆசியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கபட்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் பேச்சு வார்த்தை உள்ளது.
கொசுறு செய்தி : ஏன் மனித நேய மக்கள் கட்சி??? தமுமுக என்ற பெயரே பரவலாக மக்களிடம் அறிமுகமானது தானே என்ற கேள்வி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை பதிந்து வைத்திருந்த குணங்குடி ஹனிபா கடந்த 12 ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். என்றாக இருந்தாலும் தமுமுக என்ற பெயருக்கு ஆபத்து உள்ளது. எனவே இச்சிக்கலைப் போக்க மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். |
கடைசிச் செய்தி : திமுக ஒன்றுக்கு மேல் எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாக இருப்பதாகவும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களை என்று டீல் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அம்மாவிடம் சரணடையுமா என தீர்மானமாகத் தெரியவில்லை.
டிஸ்கி : மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் செய்ய வேண்டியவை, வேண்டாதவை குறித்தும் விளக்கமாக பதிவு எழுதலாம்..
அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க.
30 comments:
//அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டெக்னிகலாவா
ரைட்டு!
(என் ஓட்டு செல்லாத ஓட்டு என்பதை சமூகத்திற்கு தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்:))))
//1992 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது //
1998 என்று எனக்கு நினைவுண்ணே.
///எம்.எம்.அப்துல்லா said...
//1992 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது //
1998 என்று எனக்கு நினைவுண்ணே.//
1992 பாபரி மஸ்ஜித் என்பதற்கு தவறுதலாக அப்படி எழுதி விட்டேன்..அரசியல் பதிவுகளுக்கு புதுசுண்ணே..அப்பப்ப திருத்துங்கண்ணே..நன்றி அண்ணே!
அருமையான அலசல்...
வருடங்களில் ஒரு சில பிழை இருந்தாலும் அதன் சாராம்சம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. த.மு.மு.க. என்பது ஒரு சமுதாயத்திற்கு உரிய பெயரை உணர்த்துவதால், மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. காரணம் இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட தலித் (சகோதர) சமுதாயத்திற்கும் ஒரு விடிவுகாலம் பிறக்க வழி செய்யவே இப்பெயர்.
நல்லா எழுதியிருக்கீங்க! உங்களுக்கு அரசியல் நல்லா வருதுங்ணா! :-))
நீங்கள் ஒரு செய்தி வங்கி..
அரசியல் தகவல்களில் புகுந்து விளையாடுறீங்க..
உங்க பேங்க்ல எனக்கு ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி தாங்களேன்.
//1992 பாபரி மஸ்ஜித் குண்டு வெடிப்புக்குப் பிறகு //
பாபர் மசூதி இடிப்பு என்று வந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
நேரத்திற்கேற்ற சரியான பதிவு. ஏராளமான தகவல்கள். பாராட்டுக்கள் அண்ணே.
அண்ணே , இந்த சிமி இயக்கத்தை பத்தி கொஞ்சம் விலாவாரியா எழுதுங்களேன். ஒரு மாணவர் அமைப்பு என்று சொல்லிக் கொண்டு ஏன் குண்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நிகழும் பெரும்பாலான குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இவர்கள் ஏன் உதவுகிறார்கள்? இந்த அமைப்பின் நோக்கம் தான் என்ன?
நல்ல கட்டுரை.
///Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அண்ணே , இந்த சிமி இயக்கத்தை பத்தி கொஞ்சம் விலாவாரியா எழுதுங்களேன். ஒரு மாணவர் அமைப்பு என்று சொல்லிக் கொண்டு ஏன் குண்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நிகழும் பெரும்பாலான குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இவர்கள் ஏன் உதவுகிறார்கள்? இந்த அமைப்பின் நோக்கம் தான் என்ன?///
அண்ணே! சிமி என்பது ஒரு மாணவர் அமைப்பு. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது இதன் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு விட்டன. சிமி ஆட்களை கைது செய்தோம் என்பது தடை செய்யப்பட்ட இயககத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் கோர்ட்டில் கேஸ் நிக்கும் என்பதால் தான். ஜவாஹிருல்லாஹ் இருந்தது 1995 க்கு முன்பு என்பதால் ஒரு தகவலுக்காகத் தான் அதைக் குறிப்பிட்டேன். மற்றபடி அவர் ஜனநாயகவாதி தான்..
//ஜவாஹிருல்லாஹ் இருந்தது 1995 க்கு முன்பு என்பதால் ஒரு தகவலுக்காகத் தான் அதைக் குறிப்பிட்டேன். மற்றபடி அவர் ஜனநாயகவாதி தான்.. //
என் வேண்டுகோளுக்கும் இதர்கும் சம்பந்தமே இல்லை. ஜவாஹிருல்லாவின் பேச்சை இன்று கூட வீரபாண்டியனின் விவாதத்தில் கேட்டேன். அவர் மற்ற இந்தியனைப் போன்ற தேசப் பற்றுடன் தான் பேசுகிறார். உலகிலேயே முஸ்லிம்களுக்கு அதிக பட்ச சட்ட பாதுகாப்பும் வசதியும் செய்து கொடுத்திருப்பது இந்தியா தான் என்று சொன்னார். முஸ்லிம்கள் தனிமைப் பட்டிருப்பதாக சொல்வது உண்மை இல்லை என்றும் சொன்னார்.
எனக்கு நிஜமாவே சிமி இயக்கம் பத்தி தெரியனும். அதுக்கு தான் கேட்டேன்.
ஒரு பக்க பார்வையாக உள்ளது..!!!
வாழைப்பழத்தில் ஊசி குத்தியது(ம்) வெளியில் தெரிகிறது :)
தாங்கள் யார் என்பதும் :)
///மின்னுது மின்னல் said...
ஒரு பக்க பார்வையாக உள்ளது..!!!
வாழைப்பழத்தில் ஊசி குத்தியது(ம்) வெளியில் தெரிகிறது :)
தாங்கள் யார் என்பதும் :)//
ஹா ஹா ஹா! பாருங்க உங்களால் பொறுக்கக் கூட முடியல... அப்ப கடப்பாறை குத்து வாங்கினவங்களுக்கு எப்படி இருக்கும்.
ஹா ஹா ஹா! பாருங்க உங்களால் பொறுக்கக் கூட முடியல... அப்ப கடப்பாறை குத்து வாங்கினவங்களுக்கு எப்படி இருக்கும்.
//
சில இடங்களில் வரலாறு பிசிறடிக்குது சொல்ல வந்தேன் தல
எனக்கு "ரெண்டுமே" ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்
//மின்னுது மின்னல் said...
ஹா ஹா ஹா! பாருங்க உங்களால் பொறுக்கக் கூட முடியல... அப்ப கடப்பாறை குத்து வாங்கினவங்களுக்கு எப்படி இருக்கும்.
//
சில இடங்களில் வரலாறு பிசிறடிக்குது சொல்ல வந்தேன் தல
எனக்கு "ரெண்டுமே" ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்///
ஆமாண்ணே! நானும் அந்த முடிவுக்கு வந்து சில காலம் ஆச்சு... 1997 ல் கொட்டும் மழையில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தில் ஏற்ப்பட்ட உறவுண்ணே... சமீபமாகத் தான் விட்டுச்சு... அப்புறம் வரலாறு ஒவ்வொருவர் பார்வைக்கும் வேற மாதிரி பிசிறடிக்கத் தான் செய்யுது.. ;-))
ஆயில்யன் said...
//அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டெக்னிகலாவா
ரைட்டு!
(என் ஓட்டு செல்லாத ஓட்டு என்பதை சமூகத்திற்கு தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்:))))
\\
ரிப்பீட்டு...
தல அரசியல்ல இவ்வளவு தெரியுமா உங்களுக்கு?!!!!
(தமிழன் அலர்ட் ஆகிக்க தம்பி)
நல்ல அலசல்
ஒரு பக்க பார்வையாக உள்ளது..!!!
வாழைப்பழத்தில் ஊசி குத்தியது(ம்) வெளியில் தெரிகிறது :)
தாங்கள் யார் என்பதும் :)
i too oppose you thamizh lover...
அப்படியே அந்த P.J கிளைக்கதை,
துபாய் பேர்வழியின் ( பசுல் இலாஹிதானெ) கதையையும் எடுத்து விடுங்கண்ணே
இவ்வளவு விரிவான கட்டுரையை எழுதிய ஆசிரியர் தமுமுக வின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு அதாவது 90,95 சதவிகிதம் வகித்தது பி.ஜே வும், பாக்கரும் என்பதை அந்த அளவுக்கு விளக்கிய மாதிரி தெரியவில்லை.
1. What about planning for murder of hindu leaders by hamid bakkiri of tmmk? what was his connection with terrorist imam ali?
2. what about the crores of property hider ali has earned and makkama hotel in ranipet and madurai?
3. what about the wealth accumulated by PJ in ramnad and chennai? what about the trust in his son's name?
4. what about the sexual exploitation of girl in their madrasas owned by bakar belonging to these muslim groups?
5. what about the hatred speech and bombing plan by syed sahi ali of another terrorist outfit called MNP?
hope you will be honest in accepting the atrocities of muslims in this hindu majority country because hindus are very accomodative people.
people like you should be more explicit and grow your children away from this fascist attachment. that is my request and othe hindus of this country
PARAMS
Mr. Params i accept your advice and at the same time just do not blame muslims for terrorism. first of all you should advice your hindu friends to be away from hates speeches about mislims & anti muslims activities, i think you understand what i mean.
Regarding your allegations about PJ,bakkar and others, normally people working in social activities, face this kind allegations everywhere. do you have any proof?
the first thing you have to take out of your mind & heart is, this country,hindu majority country. as long as you carry this idea in your mind you cant judge others fairly.
Mr.params,i believe that you are writing against minorities in a blogsite, am i right?
thanks brother
goreshi.
// Mr.params,i believe that you are writing against minorities in a blogsite, am i right? //
Mr. Goraish,
It is funny that you accuse me of writing without proof, but right away accuse me back without any proof.
I can give supporting references for all my allegations above on bakar, pj, hider ali, mnp, and many other islamic fascists.
i am merely trying to fight the stupid fundamentalism of muslims to save the culture, civilization, and broad mindedness of this country.
majority of you guys have always been a herd and deterrent.
PARAMS
Mr. Params do not mistake me, I saw a name like params in a blogsite where I found articles against Christianity and Islam, that’s why I questioned you.
//I can give supporting references for all my allegations above on bakar, pj, hider ali, mnp, and many other Islamic fascists.//
As I told you earlier people involving in social activities always face this kind of allegations everywhere, so give us the proof with relevant document,witness, date & time.
//i am merely trying to fight the stupid fundamentalism of muslims to save the culture, civilization, and broad mindedness of this country.//
First of all You guys must determine what is fundamentalism? Unity in diversity is the value of this great country.so you keep your ill activities away off minorities.then you will not get any problem from them. So first of all you guys should correct the mistakes of your own.
Think calmly, don’t be aggressive.
God bless you my dear friend.
இந்த பதிவுகளையும் படிக்கலாமே....
“CLICK”----> 2.ஸ்வாமிகளின் "நச்" கேள்வி..தீவிரவாதிகளை ஏன் இஸ்லாத்தை விட்டும் வெளியாக்கக்கூடாது.? <-----"CLICK"
“CLICK”----> “நச்” கேள்வி. முஸ்லீம்களுடன் பழகலாமா?முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகளா? <----"CLICK"
தனி சிவில் சட்டம் வேண்டும் எனும் முஸ்லிம்கள், இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏன் ஏற்பதில்லை? முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)? அகில இந்தியாவுக்கும் ஒரு பொது சட்டம் தானே..?
“CLICK”---> 4.“நச்” கேள்வி.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)? <----"CLICK"
சீதனம், வரதட்சணை, டவுரி என்ற கைகூலி..
“CLICK”---> 6) "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா? <----"CLICK"
முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே? உங்கள் சட்டம் பெண்ணுரிமைக்கு எதிராக இருக்கிறதே? இஸ்லாத்தில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?
“CLICK”---> 5.)”நச்”.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?
நண்பர் ராஜ் அவர்களே நீங்கள் கேள்வி வைக்கிறீர்களா அல்லது அந்த தொடுப்பை பார்வையிட சொல்கிறீர்களா புரிய வில்லை. ஒரு வேலை கேள்வி எழுப்பியிருக்கும் பட்சத்தில் என்னுடைய பதில்களாக நான் தருவது:
1.முஸ்லிம் அறிஞர்களின் பேச்சிலிருந்து, தீவிரவாதத்தை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது தெளிவாக பல சந்தர்பங்களில் உணர்த்தப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில் சில ஹிந்துக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் அத்வானியை பிரதமராக ஏற்று கொள்வது கூடுமா, மோடியை முதல்வராக நீடிக்க விடுவது கூடுமா என்று முதலில் முடிவெடுத்து மறுப்பை வெளியிடுங்கள்.
2.இரண்டாவது கேள்வி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளா? அப்போ அப்துல் கலாம், ரஹ்மான்,சானியா மிர்சா,குலாம் நபி ஆசாத், ஜாகிர் நாயக், எல்லாம் தீஎவிரவாதிகளா? இது ஒரு மடத்தனமான கேள்வியாக உங்களுக்கு தெரிய வில்லையா? எப்படி ஹிந்துக்கள் என்ற பெயரில் சில ஜந்துக்களும் இருக்கிறதோ அவ்வாறே இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத முட்டாள்களும் இருப்பார்கள்.
3.civil law பற்றி விளக்கம் பல முறை கொடுத்தாகி விட்டது. உங்களுக்கு அது புரிய வில்லையா அல்லது புரியாத மாதிரி இருக்கிறீர்களா ஆண்டவனுக்குதான் வெளிச்சம். என்ன சட்டம் பொதுவாக வேண்டும்? தெளிவாக சொல்லுங்கள் நண்பரே.
4.வரதட்சணை வாங்க கூடாது, கூடாது,கூடாது. மீறி வாங்குபவன் மானம் கேட்டவன், ஈன பிறவி. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை இந்த விஷயத்தில்.
5.நண்பரே எந்த காரணமும் இல்லாமல் தலாக் பண்ணுவதாக எப்படி சொல்லுகிறீர்கள்? எந்த காரணமும் இல்லை என்ற காரணத்தை உங்களுக்கு சொன்னது யார்? எங்காவது நடக்கும் ஒன்றிரண்டை பிடித்து கொண்டு மொத்த சமுதாயத்தையும் குறை சொல்வது அறிவுடைமையா?
குரைஷி, பரம்ஸ் ஆரோக்கியமான வாதம் செய்வதாக தெரியவில்லை. அவர் வீண் விதண்டாவாதம் செய்கிறார். விட்டுத் தள்ளுங்கள். இது சரியான முறை அல்ல
Post a Comment