Monday, November 3, 2008

அமெரிக்க தேர்தல் கார்ட்டூன் + கேம்ஸ் + அரபி இலக்கணம் + டீச்சர்ஸ்

கண்மணி டீச்சர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க.. அதைப் படித்ததும் கொஞ்சம் பழைய நினைவு வந்து விட்டது. ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு போகும் போது எனக்கு H செக்சன் தான் கிடைத்தது. A,B,C செக்சன் எல்லாம் நல்லா படிக்கிற பசங்களுக்கு என்று சொல்லி விட்டார்கள். D,G, H போன்றவை எல்லாம் சரியில்லாத பசங்களுக்கானது என்று ஆசிரியர்களுக்கு நினைப்பு.

பத்தாம் வகுப்பில் 80 சதத்துக்கு கொஞ்சம் குறையா மார்க் வாங்கி இருந்தேன். அடுத்து +1 க்கு அப்ளை செய்ததில் பர்ஸ்ட் குரூப் எனப்படும் கணக்கு, இயற், வேதி, உயிரியல் உள்ள பிரிவு கிடைக்கவில்லை. செகண்ட் குரூப் எனப்படும் இயற், வேதி,தாவர, விலங்கியல் பிரிவே கிடைத்தது. சரி மார்க் குறைவா வாங்கியதால் தான் செகண்ட் குரூப் என்று தேற்றிக் கொண்டு சென்றால் பர்ஸ்ட் குரூப்பில் என்னை விட மார்க் குறைவாக வாங்கினவெல்லாம் இருக்கின்றான்.

அதில் பெரும்பாலோர் ‘அந்த’ குறிப்பிட்ட உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.. ஏனெனில் அவர்களின் உறவினர்கள் அந்த பள்ளியில் நிறைய பேர் ஆசிரியர்கள். என்னடா வென்று இது சம்பந்தமான வேலைக்கவனிக்கும் இயற்பியல் ஆசிரியரிடம் சென்றேன். வடிவேல் பாணியில் கூறினார். “உனக்கு பர்ஸ்ட் குரூப் எடுத்துக்க... ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விடு” ஆனா எனக்கு இந்த டீலிங் பிடிக்கலை. வீட்டுக்கு சென்று கேட்டதில் “உன்னை படிக்க வைப்பதே பெருசு.. இதில் குரூப் மாற்றனுமா? போய் வேலையைப் பாரு” என்று சொல்லி விட்டார்கள்.

அந்த இயற்பியல் ஆசிரியருக்கு வாழ்க்கையில் மூன்றே குறிக்கோள் தான்.. முதல் குறிக்கோள் பணம், இரண்டாம் குறிக்கோள் பணம், மூன்றாம் குறிக்கோள் பணம். இதில் அவரது மனைவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியை வேறு.

இங்கு இன்னொரு தமாஷையும் கண்டிப்பா சொல்லனும்... நான்கு வருடங்களுக்கு முன் வீட்டில் இருந்த போது என் தம்பி டென்சனா புலம்பிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.. “என்னடா ஆச்சு?” என்று கேட்டதற்கு அவனுக்கு தெரிந்த ஒரு பையன் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தததால் வேறு குரூப் கொடுத்து விட்டார்களாம். இவன் சென்று அதை மாற்றி கொடுத்து விட்டு வந்தானாம். அதனால் ஏற்பட்ட டென்சனாம். எப்படிடா என்றால் என் நண்பனின் அப்பா கருவூல அதிகாரி. கருவூலத்தில் தான் பள்ளி சம்பந்தமான பில்கள் அனைத்தும் வருமாம். அவரைத் தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியையிடம் பேசி குரூப்பை மாற்றி விட்டானாம். அவர் என் நண்பனின் தந்தை.. இதெல்லாம் யோசிக்கும் வயசு அப்ப நமக்கு இல்லை பாருங்க... எல்லாம் நன்மைக்கே!..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் சில சிறப்புகள் இருக்கும். சில சிறப்பியல்புகளும் இருக்கும்... அரபி மொழி உலகில் பேசப்படும் முக்கிய மொழிகளில் ஒன்று. இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. பொதுவாக மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படும். ஆனால் அரபி, உருது இன்னும் சில மொழிகள் இடமிருந்து வலமாக எழுத, படிக்கப்படும். இதுவா வித்தியாசம் என்றால் அதில்லை. அரபி மொழி இலக்கணத்தில் இருக்கும் “இருமை” தான் வித்தியாசம்.

அதென்ன இருமை... எடுத்துக்காட்டுக்கு தமிழில் கலாவும், சீதாவும் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம். இதை ஆங்கிலத்தில் Kala and Seetha are eating என்று சொல்லலாம். இந்தியில் कला और सीता खाते है! (சீதா அவ்ர் கலா காதே ஹைன்) என சொல்லலாம்.

இப்போது இதில் இருந்து நமது திட்டத்திற்கு வினையை மட்டும் எடுக்கின்றோம். கலா மற்றும் சீதாவை மறந்து விடலாம். நாம் எடுத்துக் கொள்வது சாப்பிடுகிறார்கள், खाते है(காதே ஹைன்) , are eating. இந்த வாக்கிய அமைப்பில், இந்த வினைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு தெரிய வருவது இது பன்மை, நிகழ்காலத்தில் நடக்கின்றது என்று. இது மேலே நான் எழுதிய (எனக்கு தெரிந்த) மூன்று மொழிகளுக்கும் பொருந்தும். இந்த வினைச் சொல்லில் பால் தெரிவதில்லை. முன்னிலையா படர்க்கையா என்று தெரியவில்லை. சாப்பிடுபவர்கள் அவர்களா, இவர்களா என்றும் தெரிவதில்லை. ஒன்றுக்கு மேல் என்று தெரிந்தாலும் எத்தனை என்று தெரியவில்லை.

அரபியில் இதை எழுதும் போது اكلتا كلا و سيتا அகல்தா கலா வ சீதா என்று எழுதலாம். இதில் வினைச் சொல்லான اكلتا (அகல்தா) என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் இதில் இருந்து தெரிய வருபவை அந்த இரு பெண்கள் சாப்பிடுகிறார்கள். இது மேலே நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலைத் தந்து விடும். அரபியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கின்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அமெரிக்க தேர்தல் பற்றிய ஒரு கார்ட்டூனுக்கு அப்புறம் செய்திகள் தொடரும்...




நன்றி : அரப் நியூஸ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செல் போனிலோ, கணிணியிலோ கேம்ஸ் விளையாடும் ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவரின் செல்லை நோண்டிக் கொண்டு இருந்த போது ஒரு கேம்ஸ் பற்றி சொன்னார். canal_control நன்றாக இருப்பதாகச் சொன்னதால் நானும் விளையாடிப் பார்த்தேன். ஈர்த்து விட்டது. சில தினங்களாக சைட்டில் கொஞ்ச நேரம் அதில் விளையாடுவேன்.



மாறி மாறி வரும் ப்ளாக்களை அடுக்கும் சாதாரண விளையாட்டு தான்.. தேவைப்படுபவர்கள் டிரை செய்து பாருங்கள். செல்லில் இருந்து இணையத்தை தொடர்பு கொண்டு http://wap.mobiles24.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் முகப்பில் இருக்கும் Download by ID என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பாக்ஸில் 108447 என்ற எண்ணைத் தட்டி Download Item கிளிக் செய்யுங்கள். வெறும் 61 Kb அளவுள்ள கோப்பு தான்.. பதிவிறக்கு விளையாடிப் பாருங்கள்.
http://www.mobiles24.com/downloads/s/108447-109-canal_control_128x160

16 comments:

வால்பையன் said...

”அந்த” என்றில்லாமல் அது எந்த வகையறாவாக இருந்தாலும், அதிகார துஸ்பிரயோகம் தவறு.

அரசாங்கம் கல்வியை காசுக்கு விற்பதை முதலில் தடை செய்யவேண்டும்

குட்டிபிசாசு said...

நிறைய தகவல்கள்! நன்றி!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அட போங்கண்ணே, தெரியாதனமா முதல் குரூப் எடுத்தாச்சி, கணக்கும் புரியல வேதியும் புரியல....

என்னடா இது அகல கால் வைச்சிட்டோமே, தலையும் புரியல வாலும் புரியலன்னு குரூப் சேஞ்ஜ் பண்ணி கேட்டா முடியாதுன்னுட்டாங்க!

ஏதோ தத்தி தத்தி பாஸாயிட்டோம்!

அட போங்க பழைய நினைவுகள கிளறிடிச்சி இந்த பதிவு.....

மஸ்தூக்கா said...

அரபி மொழியைப் போலவே சமஸ்கிருத மொழியிலும் ஒருமைக்கும் பன்மைக்கும் இடையில் 'இருமை' உண்டு.

ராமலக்ஷ்மி said...

//எல்லாம் நன்மைக்கே!..//

சரியாச் சொன்னீங்க. விகடனில் வரக் கூடாத கிறுக்கல்களில், இப்பவும் '1+1=2 சரிதானா' என எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணக்கு எடுக்காமல் இருந்தது நன்மைக்குதானே:)?

புதுகை.அப்துல்லா said...

super :)

Unknown said...

:)))

கபீஷ் said...

இது எல்லா இடத்துலயும் நடக்குது. இதுல எந்த ஜாதியும் perfect இல்ல.

வெண்பூ said...

முதல் நியூஸ்.. :((( வேறென்ன சொல்றதுன்னு தெரியல..

அரபி மொழியோட தனித்தன்மை வித்தியாசமா இருக்கு. முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.. பகிர்தலுக்கு நன்றி..

Thamira said...

"அகல்தா" என்ற ஒரு சொல்லில் "இரண்டு", "பெண்கள்", "சாப்பிடுகிறார்கள்" ஆகிய மூன்று சொற்கள் அடங்கியிருக்கின்றனவா? அடே.. என்ன ஆச்சரியம். அப்பிடின்னா அது கத்துக்க எவ்வளவு கஷ்டமான மொழியாக இருக்கும்.. எப்பிடிங்க கத்துக்கிட்டீங்க..

சின்னப் பையன் said...

//அரபி மொழியைப் போலவே சமஸ்கிருத மொழியிலும் ஒருமைக்கும் பன்மைக்கும் இடையில் 'இருமை' உண்டு.//

இதைத்தான் சொல்ல வந்தேன்...

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா எம்புட்டு தகவல்கள் :))) - அப்ப அரபி டிரைப்பண்ணி பார்க்கலாமா கஷ்டமா இருக்குமோன்னு எப்பவுமே தோணுது எனக்கு ! :)

தமிழன்-கறுப்பி... said...

எவ்வளவு தகவல்கள்!
அண்ணே எப்படி உங்களால இதல்லாம் முடியுது...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்களுக்கு பிலிப்பைன் பாஷையும் தெரியுமாமே உண்மையா...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா அரபில 'ஐ லவ் யூ' வை எப்படி சொல்லுவாய்ங்க...;)

தமிழன்-கறுப்பி... said...

அரபி பேசப்பழகணும்னு ஆசை ஆனால் என்ன பண்ண உருதே வரமாட்டேங்குது...:)