Wednesday, November 19, 2008

குறள் கதைக்கான வியாக்கியானங்களும், சில சிறு குறிப்புகளும்..:)

எங்களது பாசக்கார குடும்பத்து கயல்விழி முத்துலக்ஷ்மி அக்காவுக்கு இன்று பிறந்தநாள். வேடந்தாங்கல் உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

***************************************************************************

சமீபத்தில் ஒரு குறள் கதை எழுதினேன். மனிதனின் மறு பிறவியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது அந்த கதை. குறளில் கூறப்படும் எழுமையும் ஏமாப்புடைத்து என்ற வாசகத்திற்கு தோதுவாக வருவது போல் அமைத்து இருந்தேன்.

அதில் கடல் குதிரை (Sea Horse) பற்றிய ஒரு கதை வரும். அதற்கு சில விளக்கங்கள் தர வேண்டியது முக்கியமாகின்றது. உலகில் இருக்கும் உயிரினங்களில் கடல்குதிரை போண்றவை சில சிறப்புகளைப் பெறுகின்றன. கடல் குதிரையின் சிறப்பம்சம் ஆண் கரு கொள்ளும் என்பது தான். ஆண் கடல்குதிரையின் வயிற்றில் இதற்கான பை அமைப்பு இருக்கும். பெண் கடல் குதிரை ஆணின் வயிற்றில் முட்டைகளை இட்டு விடும். ஆண் கடல் குதிரை தன் கருப்பையில் உள்ள முட்டைகளின் மீது தனது செமனை விடும். பின்னர் கருவுற்று, குட்டி கடல் குதிரைகளை பிரசவிக்கும்.




பெண் கடல் குதிரையின் வயிற்றில் இருக்கும் முட்டை அதன் எடையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இருக்குமாம். இதனால் முட்டையிடும் காலம் பெண் கடல் குதிரைக்கு பாதி பிரசமத்திற்கு சமமாகி விடும். ஆண் அந்த முட்டைகளை வயிற்றில் வைத்து, நிறைய கஷ்டத்துடன் பிரசவிக்கும்.

இன்னொரு வித்தியாசம் ஆண் கருவுற்றதும், பெண் இன்னொரு இணையைத் தேடி சென்று விடும். ஆனாலும் தனது கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும் ஆணை தினமும் வந்து சந்தித்து விட்டு செல்லும் என கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

***************************************************************************

அந்த குறள் கதையோடு சேர்ந்த இன்னொரு செய்தி... ஏழு பிறவிகள் என்று சொல்லும் குறளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கைப் படி மனிதன் பிறக்கிறான். இறந்ததும் இறுதி காலத்தில் இறைவனிடம் சென்று நாம் பூமியில் செய்த நன்மை தீமைக்கு தகுந்தாற் போல் சொர்க்கம், நரகம் கிடைக்கும். மனிதன் மீண்டும் ஏதாவது உயிராகவோ, தாவரமாகவோ பூமியிலேயே மறுபிறவி எடுப்பான் என்பதில் நம்பிக்கையில்லை.

மேலும் திருக்குறள் தொடர்பாக ஒரு பதிவு எழுதும் திட்டமும் உள்ளது. நேரம் கிடைத்தால் எழுதலாம்.

***************************************************************************

ராமலக்ஷ்மி அக்கா, ஈழம் தொடர்பாக ஒரு கவிதை எழுதி இருந்தார்கள். அதன் கருத்தாக்கம் கவர்ந்து விட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள்

***************************************************************************

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்கள் கொடூரமாக இருந்தது. இதைப் பற்றிப் பல பதிவர்களும் எழுதி உள்ளனர். எனவே அதைப் பற்றி எழுத விருப்பமில்லை. ஆனால் இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

***************************************************************************

சுப்ரமணியபுரம் படம் பார்த்ததற்குப் பிறகு வேறு தமிழ் படம் பார்க்கும் மூடு வரவில்லை. ஒரு மலையாள நண்பரின் வற்புறுத்தலால் கத பறயும் போல் (കഥ പറയുമ് മ്പോല് )படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படம். ரசித்துப் பார்த்தேன். சரி தமிழில் எப்படி எடுத்துள்ளார்கள் எனப் பார்க்க குசேலனை பதிவிறக்கினேன். ஓட விட்டு, ஓட விட்டு அரை மணி நேரத்தில் குசேலனை பார்த்தேன். ஒரு படம் எவ்வளவு அழகாக எடுக்கலாம் என்பதற்கு கத பறயும் போல் உதாரணம். அதே படத்தை எவ்வளவு அசிங்கமாக எடுக்கலாம் என்பதற்கு குசேலன் உதாரணம்.



***************************************************************************

இவையெல்லாம் தனித் தனி பதிவுகளாக போட வேண்டி நினைத்தவை. தமிழ் மணம் சரியாக வேலை செய்யாததால் எழுதும் மூடு வரவில்லை.. எனவே மக்களே தப்பி விட்டீர்கள்... :))

33 comments:

Unknown said...

Me the 1st?? :)

Unknown said...

அக்காவுக்கு இங்கயும் வாழ்த்து சொல்லிக்கிறேன் :))

Unknown said...

கடல் குதிரை பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியுமே... அத தான் நீங்களும் சொல்லிருக்கீங்க.. பட் குட்.. ;))))))))

Unknown said...

எனக்கெல்லாம் இனிமே ஒரு பிறவியே வேண்டாம்ன்னு தான் இருக்கேன்... போதும் இனிமேலும் இங்க வர வேண்டாம்.. :((

Unknown said...

அச்சச்சோ நல்லவேள நீங்க அந்த சட்டக்கல்லூரி விவகாரம் பத்தி ஒன்னும் போடல... போட்ருந்தா இங்க வந்துருக்கவே மாட்டேன்... அத டிவில போட்டு.. எல்லா நியூஸ்லையும் அதையே சொல்லி.. டிவி பார்க்கரதையே நிறுத்திட்டேன் நானு.... எனக்கு இவ்ளோ கொடூரத்த பார்க்கற அளவு சக்தி இல்ல.. :(((((((

Unknown said...

மம்மூ ரொம்ப அழகு.. நீங்க எழுதினத நான் படிக்கவே இல்ல.. ஹி ஹி... ;)))))

Unknown said...

//இவையெல்லாம் தனித் தனி பதிவுகளாக போட வேண்டி நினைத்தவை. தமிழ் மணம் சரியாக வேலை செய்யாததால் எழுதும் மூடு வரவில்லை.. எனவே மக்களே தப்பி விட்டீர்கள்... :))//

நல்லவேள ஒரே பதிவா போட்டீங்க.. தனி தனியா போட்ருந்தா ஒரு கமெண்ட் தான் வந்துருக்கும்.. ;))))))))

Unknown said...

கடமை என்ன வா வான்னு கூப்பிடறதால... நான் போறேன்... பை... :))))))

Unknown said...

me the 9:):)

Unknown said...

me the 10:):)

Anonymous said...

ஸ்ரீமதி தனி ஆளா விளையாடறாங்க.

தமிழன்-கறுப்பி... said...

\\
எங்களது பாசக்கார குடும்பத்து கயல்விழி முத்துலக்ஷ்மி அக்காவுக்கு இன்று பிறந்தநாள். வேடந்தாங்கல் உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
\\

நம்ம சொந்தக்காரய்ங்க சார்பா நானும் வாழ்த்துக்களை
தெரிவிச்சுக்கறேன்...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
அதில் கடல் குதிரை (Sea Horse) பற்றிய ஒரு கதை வரும். அதற்கு சில விளக்கங்கள் தர வேண்டியது முக்கியமாகின்றது.
\\

அப்பிடியே கடல்கன்னி அப்படின்னா என்னாங்கிறதுக்கும் விளக்கம் தந்துடுங்க...;)

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் வந்துட்டு போயிருக்காரு...!

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நீங்க ஊருக்கு போய் இருக்கறதா சொன்னாய்ங்க...?

தமிழன்-கறுப்பி... said...

\\
ஏழு பிறவிகள் என்று சொல்லும் குறளில் எனக்கு நம்பிக்கை இல்லை
\\
எத்தனை பிறவியாக இருந்தாலும் அது இதே பிறவியாத்தான் இருக்கணும்...

ஆனால் அது...

மீண்டும்
பிறவாமை வேண்டும்
பிறந்தால்
உன்னை மறவாமை வேண்டும்...

தமிழன்-கறுப்பி... said...

\\
மேலும் திருக்குறள் தொடர்பாக ஒரு பதிவு எழுதும் திட்டமும் உள்ளது. நேரம் கிடைத்தால் எழுதலாம்.
\\

எழுதுங்க...எழுதுங்க...!

தமிழன்-கறுப்பி... said...

\\
ராமலக்ஷ்மி அக்கா, ஈழம் தொடர்பாக ஒரு கவிதை எழுதி இருந்தார்கள். அதன் கருத்தாக்கம் கவர்ந்து விட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள்
\\

படிச்சுட்டாப்போச்சு...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்கள் கொடூரமாக இருந்தது.
\\

பிரச்சனையின் அடிப்படை சாதிய
அரசியல் சார்ந்ததாக இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

\\
ஒரு படம் எவ்வளவு அழகாக எடுக்கலாம் என்பதற்கு கத பறயும் போல் உதாரணம். அதே படத்தை எவ்வளவு அசிங்கமாக எடுக்கலாம் என்பதற்கு குசேலன் உதாரணம்.
\\

கதையை தின்னுட்டானுங்க...;)

தமிழன்-கறுப்பி... said...

\\
இவையெல்லாம் தனித் தனி பதிவுகளாக போட வேண்டி நினைத்தவை. தமிழ் மணம் சரியாக வேலை செய்யாததால் எழுதும் மூடு வரவில்லை.. எனவே மக்களே தப்பி விட்டீர்கள்... :))
\\

தமிழ் மணத்துக்கு நன்றி...;)

கண்மணி/kanmani said...

தப்பிச்சோம்....
ரொம்ப எழுத நினைச்சா இப்படித்தான் .

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமியை நேற்றே அட்வான்ஸாக வாழ்த்தியாயிற்று.
-------------------------------
குறள் கதை விளக்கத்துக்கு நன்றி. புதிய தகவல்கள்.
-------------------------------
நானும் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேனே, மறுபிறவி பற்றி ஒரு சொல் உண்டென்று. நிச்சயமாக இது அவரவர் சொந்த நம்பிக்கையைப் பொறுத்ததுதான்.
-------------------------------
திருக்குறள் தொடர்பான பதிவுக்கு எல்லோரும் வெயிட்டிங்.
-------------------------------
ஈழம் பற்றிய பதிவுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் வந்தன. அவற்றை மட்டுறுத்தி விட்டிருந்தாலும் நான் சொல்ல வந்தது இதுதான். இப்போதைய நிலையில் நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பதை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் தீர்வு பிறக்கவே வழியின்றி போய் விடும். அக்கவிதையில் யார் பக்கமும் பேசாமல் இருபக்கத்து குறைகளையும் சுட்டிக் காட்டி வேண்டுதல்தான் வைத்திருந்தேன். யாரையும் தனிப்பட்ட முறையில் வருத்த வேண்டுமென நினைக்கவில்லை.
---------------------------------
//சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்கள் கொடூரமாக இருந்தது. இதைப் பற்றிப் பல பதிவர்களும் எழுதி உள்ளனர். எனவே அதைப் பற்றி எழுத விருப்பமில்லை.//

சரி.எனது அடுத்த பதிவு இச்சம்பவத்தைச் சார்ந்தது. ஆனால் எண்ணங்கள் உங்களைப் போன்றே அமைந்த போனது ஆச்சரியம்.

//ஆனால் இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.//

இதைத்தான் சொல்லப் போறேன் ஆனா ஒரு கதையோடு.

கபீஷ் said...

//ஏழு பிறவிகள் என்று சொல்லும் குறளில் எனக்கு நம்பிக்கை இல்லை.//

literal ஆ அர்த்தம் கொள்ள முடியாது. இதை விளக்க நீண்ட பதிவு தேவைப்படும். மேலும் நம்பிக்கை சார்ந்தது.

ஆயில்யன் said...

எனக்கெல்லாம் இனிமே ஒரு பிறவியே வேண்டாம்ன்னு தான் இருக்கேன்... போதும் இனிமேலும் இங்க வர வேண்டாம்..


அருமை!

மீண்டும் சொல்லி செல்கிறேன்

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...
ஸ்ரீமதி தனி ஆளா விளையாடறாங்க.
//

ஆமாம் அம்மிணி ஆபிஸ்ல கூட அவுங்க மட்டும்தான் இப்படியாக பிளாக்கிக்கிட்டிருக்கிறதாம் மத்தவங்கெல்லாம் வாங்குற சம்பளத்துக்கு மீறி வேலை பார்க்குறாங்களாமாம் :)))))))))))))

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
\\
ராமலக்ஷ்மி அக்கா, ஈழம் தொடர்பாக ஒரு கவிதை எழுதி இருந்தார்கள். அதன் கருத்தாக்கம் கவர்ந்து விட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள்
\\

படிச்சுட்டாப்போச்சு...:)
///


போய் படிங்க :))

Anonymous said...

தமிழ்,

கடல் குதிரை (Sea Horse) பற்றி சமீபத்தில் படித்தேன் உங்கள் பதிவில் பார்த்ததும் மகிழ்ச்சி.

கதை பறயும் போல் ஸ்ரீனிவாசனின் மற்ற படங்களையும் பாருங்கள்; குறிப்பா உதயனானு தாரம் (வெள்ளித் திரை)

தமிழ்ல அது மாதிரி முயற்சியாவது (காப்பி அல்ல) செய்வார்களா?

Thamiz Priyan said...

டெஸ்ட்

Unknown said...

//தமிழ் பிரியன் said...
டெஸ்ட்//

இந்த டெஸ்ட் எதுக்குன்னு எனக்குத் தெரியுமே.... ;)))))))))

நாமக்கல் சிபி said...

//டெஸ்ட்//

பிளட் டெஸ்ட்/ யூரின் டெஸ்ட் ?

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

வெண்பூ said...

ஒரு வாரத்துக்கு அப்புறம் வந்ததால ஒரு பிரசன்ட் சார் மட்டும் போட்டுக்கிறேன் தமிழ்...