Thursday, November 27, 2008

திருத்திய காதல் - (Caption - காதலின் கதை அல்ல... காதலர்களின் கதை)

“வசு, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைம்மா... இந்த இரண்டு வருடமும் என் மாமியாரை உன்னோட அம்மா மாதிரி பார்த்துக்கிட்ட.... இப்ப நீ இங்க இருந்து போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா”

“ஆன்ட்டி, நான் உங்க மாமியாரை பார்த்துக் கொள்ள வந்தேன். உங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டேன். எதிர்பாராதவிதமா அவங்களும் இறந்ததால் நானும் கிளம்ப வேண்டி வந்துடுச்சு.. என்ன செய்ய கால ஓட்டத்தில் நாமளும் பயனிக்க வேண்டி இருக்கே... பாருங்க இந்த இரண்டு வருடத்தில் எனக்குள் தான் எவ்வளவு மாற்றங்கள்”

“ஆமாம் வசு... சரி நல்லபடியா ஊருக்கு போ.. போனதும் போன் செய்... அடிக்கடி வந்து போய் இருந்துக்க.”

“சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்குங்க”

வீட்டை விட்டுக் கிளம்பும் வசுவையை பார்த்துக் கொண்டு இருந்து மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் வர எத்தனித்திருந்தது. முன்னே சென்று கொண்டு இருந்த வசுமதிக்கு கன்னங்களின் வழியே ஓடிக் கொண்டு இருந்தது.

--------------------------------------------------

“அம்மா! நீ என்ன சொன்னாலும் கேக்க முடியாதும்மா... எனக்கு இப்ப கல்யாணம் தேவையில்லை... நான் எப்ப கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேனோ அப்ப கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றேன்.. இப்ப விடுங்கம்மா”

“வசு.. என்ன பேச்சுடி பேசுற.. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும். சும்மா கிட அடுத்த வாரம் திங்கட்கிழமை நல்ல நாள். அன்னைக்கு உன்னைப் பெண் பார்க்க வருகின்றார்கள்”

“அம்மா.. ப்ளீஸ்ம்மா... என்னை புரிஞ்சுக்கோயேன்.”

“என்னடி புரிஞ்சுக்க... முதல்ல கண் காணாத இடத்துக்கு வேலைக்கு போன.. அப்ப வீட்டில் கஷ்டம்.. அதனால் ஒன்னும் சொல்ல முடியலை. இப்பதான் பூர்வீகச் சொத்து எல்லாம் வந்து விட்டதே... வருமானதுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இப்ப நல்ல வசதியான வீட்டில் இருக்கோம். தங்கச்சிக எல்லாம் நல்லா படிக்குதுக... இனி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டுத் தான் எனக்கு வேற வேலை”

சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்த அம்மாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசு.
--------------------------------------------------
ஏனோ தூக்கம் வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் பிடிவாதத்தை தடுக்க இயலாமல் திணற வேண்டி இருந்தது. சில நாட்களாக அருணின் நினைவு வந்து கொண்டு இருந்தது. ராஜன் அங்கிள் இறந்த பிறகு வீடும் மாற்றி சென்று விட்டார்களாம். எங்கே சென்றார்கள் என கேட்கவும் தயக்கமாக இருந்தது.

டைரியைப் புரட்டிய போது எழுதிய கவிதைகள் முத்து முத்தாக இருந்தன. அனைத்திலும் ஏனோ அருணின் வாசனை வீசிக் கொண்டிருந்தது.

பசுமரமாய் இருந்த

கவிதைகளெல்லாம்

கழுமரமாயின

இன்று

காதலின் பிரிவால்...


--------------------------------------------------
அதே நேரம்,

“அம்மா, எனக்கு கல்யாணமும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..கொஞ்சம் சும்மா இருக்கியா?”

“ஏண்டா சும்மா இருக்கனும்... எனக்கும் என் மகனுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கனுனு ஆசை இருக்காதா? பேரன், பேத்திகளை தூக்கிக் கொஞ்சனுன்னு ஆசை இருக்காதா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.. உனக்கு சீக்கிரமே கல்யாணம் நடத்தி வைத்து விட்டுத்தான் எனக்கு வேற வேலை”

--------------------------------------------------

“அக்கா! அக்கா! உன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க....”

சொன்ன தங்கையை விரக்தியாய் பார்த்தாள் வசு. ஏற்கனவே அலங்காரம் முடிந்து உட்கார்ந்து இருந்தாள். ஏதோ சோளக் கொல்லை பொம்மை போல் தன்னை காட்சிப் பொருளாக ஆக்கப் போவது மட்டும் உணர முடிந்தது.

“ஏய்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.. இன்னும் என்ன முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க.... அந்த காப்பி தட்டை எடுத்துட்டுப் போய் எல்லாருக்கும் கொடு. அப்படியே மாப்பிள்ளையையும் ஒரு தடவை நல்லா பார்த்துக்க... அப்புறம் மாப்பிள்ளையை சரியா பார்க்கலைன்னு சொல்லக் கூடாது”

மகளுக்கு வரன் அமைந்து விடும் என மகிழ்வுடன் இருக்கும் தாயைப் பார்க்க வசுமதிக்கு ஏனோ பாவமாக இருந்தது. காப்பி தட்டை ஏந்திக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்த வசுவுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது. அருணும், அருணின் அம்மா, தங்கையும் அங்கு அமர்ந்திருந்தனர்.

பின்னால் திரும்பிப் பார்க்க அம்மா புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளது கண்களில் “என் மகளுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியாதா?” என்ற குறுகுறுப்பு ஓடிக் கொண்டு இருந்தது.

டிஸ்கி 1 : கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். சகோதரி ஸ்ரீமதியின் காதல் திருத்தத் தொடருக்கு எதிர் (அல்லது நேர்) பதிவு இது. காதல் திருத்தம்
சுலபமாக இங்கு சென்றும் படித்துக் கொள்ளலாம்.
http://docs.google.com/View?docID=df2ppmnt_16gkvxhdc2&revision=_latest&hgd=1

டிஸ்கி 2 : எப்ப எதை எழுதினாலும் அதில் சோகம் தான் வழிந்தோடும் என்பதை முறியடிக்க கொஞ்சம் சந்தோசமான முடிவு..:)) முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.... அப்புறமா முடிவை மாத்திட்டேன்.

44 comments:

அத்திரி said...

கதை ரொம்ப......நல்லாவே இருக்கு?????????!!!

ஆயில்யன் said...

//வீட்டை விட்டுக் கிளம்பும் வசுவையை பார்த்துக் கொண்டு இருந்து மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் வர எத்தனித்திருந்தது. முன்னே சென்று கொண்டு இருந்த வசுமதிக்கு கன்னங்களின் வழியே ஓடிக் கொண்டு இருந்தது.
///
ஒ.கே பாஸ் இதை அப்படியே விசுவலைஷ் பண்ணிப்பாக்குறோம்! இங்க கண்ணுல தண்ணியை காமிக்கிறோம் கேமரா கட் ! திரும்ப ஸ்டார் ஆக்‌ஷன் அங்க கன்னத்திலேர்ந்து தரை வரைக்கும் கண்ணீர் வந்து விழறது அப்படியே ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டுறோம்!


பாஸ் நாமளும் சினிமா ஃபீல்டுக்குள்ளாற நுழைஞ்சுடலாமா பாஸ்?????

ஆயில்யன் said...

//கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். ///


அங்கேயும் புரியலன்னா?

எங்க பாஸ் போறது.......?

ஆயில்யன் said...

//ஆன்ட்டி, நான் உங்க மாமியாரை பார்த்துக் கொள்ள வந்தேன். உங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டேன். எதிர்பாராதவிதமா அவங்களும் இறந்ததால்///

ம்ம் புரியுது பார்த்த லட்சணம்!

ஆயில்யன் said...

//சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்குங்க”///


ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து மத்த விசயங்களை செஞ்சு உங்கள முடிச்சுடறேன்!

(இது என்னோட திருத்தம் பாஸ்)

ஆயில்யன் said...

//அம்மா! நீ என்ன சொன்னாலும் கேக்க முடியாதும்மா... //

இத்தனை வருசமா அதைத்தானே நீ சொல்லிக்கிட்டிருக்க நானும் கேட்டிக்கிட்டிருக்கேன்!
(இது என்னோட திருத்தம் பாஸ்!)

ஆயில்யன் said...

//தங்கச்சிக எல்லாம் நல்லா படிக்குதுக...//


ம்ஹுக்கும் அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் அம்மா! அதுங்களுக்கு படிக்கிறதுல இண்ட்ரஸ்ட் இருக்கு நல்ல கற்பூர புத்தியும் கூட பட் எனக்கு......!

(இது என்னோட திருத்தம் பாஸ்)

ஆயில்யன் said...

//ஏதோ சோளக் கொல்லை பொம்மை போல் //


பாஸ் ஒரு வரியிலயே வசு’வை அழகா வர்ணிச்சிட்டீங்களே பாஸ்!

கலக்கல் பாஸ்!

ஆயில்யன் said...

//எப்ப எதை எழுதினாலும் அதில் சோகம் தான் வழிந்தோடும் என்பதை முறியடிக்க கொஞ்சம் சந்தோசமான முடிவு..:)) //


போங்க பாஸ் :((

ஆயில்யன் said...

//முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.... அப்புறமா முடிவை மாத்திட்டேன்//

ஏன் பாஸ் ???


ஆக்சிடெண்ட்ல போட்டுத்தள்ளியிருந்தா இன்னும் கலக்கலா முடிஞ்சுருக்கும் பாஸ் கதை !

இன்னொரு தடவை அது மாதிரி டிரைப்பண்ணுங்க பாஸ் நான் நொம்ப்ப்ப் ஆர்வமா இருக்கேன் படிக்கிறதுக்கு.....!

ஆயில்யன் said...

பத்து போட்டுக்கிட்டேன்ப்ப்பா


மீ த எஸ்கேப்!

Iyappan Krishnan said...

present sir :)

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஆயில்ஸ் ஐயா பயங்கர க்கொலவெறியோட இருக்க மாதிரி தெரியுதே...

கபீஷ் said...

ஆயில்யன் கமெண்ட்ஸ் வழக்கம்போல் கலக்கல்!!!

SK said...

படையப்பா லக்ஷ்மி ரஜினி கல்யாணம் முடிக்கற பீலிங் வருது தமிழ் பிரியன் :-)

SK said...

எழுத்து நடை அழகா இருக்கு :-)

தமிழ் தோழி said...

:))

Thamira said...

அப்படி ஒண்ணும் எதிர்பாராத முடிவு இல்லைன்னாலும், சந்தோஷ முடிவைப்படிக்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

கதை முடிவு மிக நன்றாக - எதிர்பார்ட்த்த படியே - அமைந்திருக்கிறது. நன்று நன்று

மகளுக்கு என்ன தேவை என்று தெரிந்த தாய்மார்கள் அதிகம்.

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\\முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.\\

பிரியருக்கு இவ்வளவு கொலைவெறி கூடாது

Unknown said...

சூப்பரா இருக்கு அண்ணா இந்த முடிவு... :))

Thamiz Priyan said...

///அத்திரி said...

கதை ரொம்ப......நல்லாவே இருக்கு?????????!!!///
ஹிஹிஹி நம்பிட்டோம்..:))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//வீட்டை விட்டுக் கிளம்பும் வசுவையை பார்த்துக் கொண்டு இருந்து மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் வர எத்தனித்திருந்தது. முன்னே சென்று கொண்டு இருந்த வசுமதிக்கு கன்னங்களின் வழியே ஓடிக் கொண்டு இருந்தது.
///
ஒ.கே பாஸ் இதை அப்படியே விசுவலைஷ் பண்ணிப்பாக்குறோம்! இங்க கண்ணுல தண்ணியை காமிக்கிறோம் கேமரா கட் ! திரும்ப ஸ்டார் ஆக்‌ஷன் அங்க கன்னத்திலேர்ந்து தரை வரைக்கும் கண்ணீர் வந்து விழறது அப்படியே ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டுறோம்!


பாஸ் நாமளும் சினிமா ஃபீல்டுக்குள்ளாற நுழைஞ்சுடலாமா பாஸ்?????///

அண்ணே! நாங்க எல்லாம் நல்லா இருக்க வேணாமா? உங்களுக்கு ஏனிந்த கொல வெறி..;)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். ///
அங்கேயும் புரியலன்னா?
எங்க பாஸ் போறது.......?////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
//ஆன்ட்டி, நான் உங்க மாமியாரை பார்த்துக் கொள்ள வந்தேன். உங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டேன். எதிர்பாராதவிதமா அவங்களும் இறந்ததால்///
ம்ம் புரியுது பார்த்த லட்சணம்!////
அண்ணே! வயசானவங்க.. இறந்த போய்ட்டாங்க.. அதுக்கு நம்ம வசு என்ன பண்ணுவா?...;)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்குங்க”///
ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து மத்த விசயங்களை செஞ்சு உங்கள முடிச்சுடறேன்!
(இது என்னோட திருத்தம் பாஸ்)///
திருத்தம் நல்லா இல்லப்பா... :(

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//தங்கச்சிக எல்லாம் நல்லா படிக்குதுக...//
ம்ஹுக்கும் அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் அம்மா! அதுங்களுக்கு படிக்கிறதுல இண்ட்ரஸ்ட் இருக்கு நல்ல கற்பூர புத்தியும் கூட பட் எனக்கு......!
(இது என்னோட திருத்தம் பாஸ்)///

அண்ணே! இது உங்க வாய்ஸூல எனக்கு கேக்குது..:))

Thamiz Priyan said...

/// ஆயில்யன் said...
//ஏதோ சோளக் கொல்லை பொம்மை போல் //
பாஸ் ஒரு வரியிலயே வசு’வை அழகா வர்ணிச்சிட்டீங்களே பாஸ்!
கலக்கல் பாஸ்!/////
அகலக்கல் பாஸ்..

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//எப்ப எதை எழுதினாலும் அதில் சோகம் தான் வழிந்தோடும் என்பதை முறியடிக்க கொஞ்சம் சந்தோசமான முடிவு..:)) //
போங்க பாஸ் :((///
அதான் மாத்தி சந்தோசமாக்கிட்டமே..:)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.... அப்புறமா முடிவை மாத்திட்டேன்//
ஏன் பாஸ் ???
ஆக்சிடெண்ட்ல போட்டுத்தள்ளியிருந்தா இன்னும் கலக்கலா முடிஞ்சுருக்கும் பாஸ் கதை !
இன்னொரு தடவை அது மாதிரி டிரைப்பண்ணுங்க பாஸ் நான் நொம்ப்ப்ப் ஆர்வமா இருக்கேன் படிக்கிறதுக்கு.....!///

உங்க ஆர்வத்துக்கு நன்றி! சீக்கிரமே ஒரு கதை எழுதிடலாம்...;))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
பத்து போட்டுக்கிட்டேன்ப்ப்பா
மீ த எஸ்கேப்!////
நன்னி அண்ணே!

Thamiz Priyan said...

///Jeeves said...

present sir :)///
நன்றி ஜீவ்ஸ்!

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...
:-)))...
ஆயில்ஸ் ஐயா பயங்கர க்கொலவெறியோட இருக்க மாதிரி தெரியுதே...///
ஆமாங்ண்ணா....:))

Thamiz Priyan said...

///கபீஷ் said...
ஆயில்யன் கமெண்ட்ஸ் வழக்கம்போல் கலக்கல்!!!///
ஹீஹிஹிஹி

Thamiz Priyan said...

///SK said...

படையப்பா லக்ஷ்மி ரஜினி கல்யாணம் முடிக்கற பீலிங் வருது தமிழ் பிரியன் :-)////
ஆமால்ல... இப்பதான் எனக்கும் உறைக்குது..:)

Thamiz Priyan said...

/// SK said...

எழுத்து நடை அழகா இருக்கு :-)////
நன்றி SK! கதை அழகா இல்லைன்னு எனக்கும் புரியுது..;)

Thamiz Priyan said...

///தமிழ் தோழி said...

:))///
நன்றி தோழி!

Thamiz Priyan said...

///தாமிரா said...

அப்படி ஒண்ணும் எதிர்பாராத முடிவு இல்லைன்னாலும், சந்தோஷ முடிவைப்படிக்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.///
கதை எழுதனும்னு சீரியஸா எழுதல தாமிரா... நன்றி!

Thamiz Priyan said...

/// cheena (சீனா) said...
அன்பின் தமிழ்பிரியன்
கதை முடிவு மிக நன்றாக - எதிர்பார்ட்த்த படியே - அமைந்திருக்கிறது. நன்று நன்று
மகளுக்கு என்ன தேவை என்று தெரிந்த தாய்மார்கள் அதிகம்.
நல்வாழ்த்துகள்////
நன்றி சீனா சார்!

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
\\முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.\\
பிரியருக்கு இவ்வளவு கொலைவெறி கூடாது///
ஹிஹிஹிஹிஹிஹி

Thamiz Priyan said...

/// ஸ்ரீமதி said...

சூப்பரா இருக்கு அண்ணா இந்த முடிவு... :))////
நன்றிம்மா!

கபீஷ் said...

ஹலோ! தமிழ், என்னோட பதிவுல ஒரு கேள்வி கேட்டிருக்கேன். நைஸா எஸ் ஆகிட்டீங்க. வந்து பதில் சொல்லிட்டு போங்க

நாணல் said...

ஹை..இந்த திருத்தம் கூட நல்லா இருக்கே... :)

மங்களூர் சிவா said...

/
ஆயில்யன் said...

//கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். ///


அங்கேயும் புரியலன்னா?

எங்க பாஸ் போறது.......?
/

ரிப்பீட்டு
:))