Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Sunday, October 14, 2012

Hunt for hint... நன்றிகள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்போது எப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. இந்த நிமிடம் மகிழ்ச்சியா இருப்பவன் அடுத்த நிமிடம் துன்பப்படலாம்... vice-versa ..

ஆனால் வாழ்க்கையில் உட்சபட்ச மகிழ்ச்சி என்பது எப்போது வரும்ன்னு யாருக்கும் சொல்ல முடியாது.. அப்படியான ஒரு மகிழ்வான கணத்தை ஏற்படுத்திக் கொடுத்த டெரர்கும்மி குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் பல..

இந்தூர் ஐ.ஐ.எம் நடத்தும் Klueless போன்ற ஒரு முயற்சியை Hunt for Hint என்ற பெயரில் டெரர்கும்மி குழுவினர் முயற்சி செய்து அற்புதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதில் ஏனோ சுவாரஸ்யமின்றி தான் கலந்து கொண்டேன். செப்டம்பர் 12 ல் தொடங்கிய போட்டி.. அடுத்த நான்கு நாட்களும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.. கடைசியில் இரண்டாவதாக வெற்றி பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை அளக்க கருவியே இல்லை.. :)

அதுவும் நான் இருந்த நிலையில்...
1. மொபைல் இண்டர்நெட் மூலம் மொபைலை மோடமாக பாவித்து இணையத்தில் தொடர்பு
2. எப்போதாவது இருக்கும் மின்சாரம்
3. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு அறுந்து விடும் இணைய இணைப்பு
 4. கூகுள் திறக்கக் கூட ஒரு நிமிட ஆகும் மொபைல் இணைப்பு
5. பிரவுசரில் ப்டங்கள் வருவதை டிஸேபிள் செய்து தான் பயன்படுத்த இயலும் 6. அடிக்கடி வந்து தொல்லை(?) தரும் கடை வாடிக்கையாளர்கள். (கடையில் தான் கணிணி.. வீட்டில் தடா)

இப்படியெல்லாம் இருக்கும் சூழலில் HFH 2 வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று செக்கை வாங்கி காசும் பார்த்தாகி விட்டது. அந்த அனுபவத்தை உணர அந்த வேளையில் அனுபவத்தால் தான் தெரியும்.


ImageShack.us

HFH 2 குழுவினருக்கு மிக்க நன்றிகள்!

டிஸ்கி : IIM இந்தூர் நடத்தும் Klueless போட்டி வரும் 19 ந்தேதி ஆரம்பமாகின்றதாம்.. அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில் மின்சாரம் தங்கத்தை விட உயர்வானது.. இதில் கலந்து கொள்வது எல்லாம் கனவில் தான் நடக்கும்.. :-(

Klueless 8 போட்டிக்கான இணைப்பு
IIM Indore முகநூல் பக்கம்


 

Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.

Friday, June 12, 2009

அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)

"வாய்யா ! வா! என்ன திடீர்னு இந்த பக்கம்.. எப்பவுமே கூட இருக்கிற ஆளு தானே.. ஸ்பெஷலா வெளியே இருந்து வந்து உட்கார்ந்து இருக்க”

“ஒரு அழைப்பு கொடுக்க வந்தேன் ... நீங்க ரொம்ப முக்கியமான ஆளாச்சே.. அதான் ஸ்பெஷலா கூப்பிடலாமுன்னு”

“அதுவும் சரி தான்... சொல்லு.. என்ன விஷயம்?”

“எனக்கு அடுத்த வாரம் சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க... எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பசங்க, பேரக் குழந்தைகளுக்காக இதையெல்லாம் ஒத்துக்க வேண்டி இருக்கே.... என்னோட கனவு வாழ்க்கையில் அடுத்த மாதத்தோடு 60 வயசு முடியுது..கண்டிப்பா வரனும்”

“என்னோட நெற்றியில் ஏதாவது இருக்கா பாருங்க..”

“நெற்றியில்.....ம்ம்ம் ஒன்றுமில்லை.. புருவத்திற்கு மேல் ஒரு சிறு தழும்பு மட்டும் உள்ளது”

“அதில்லை... நெற்றியில் இளிச்சவாயன், ஏமாளி இப்படி ஏதாவது எழுதி இருக்கா?

“என்ன இப்படி சொல்றீங்க?”

“ஆமா.. நீ பிறந்தது முதல் 30 வருடமா என்னிடமே இருக்குற மனசாட்சி நீ.. என்னிடமே அறுபதாம் கல்யாணம் என்கிறாயே?”


“ம்ம்ம் அதுவும் உண்மை தான். உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“இருந்தாலும் நீயே சொல்லு என்ன விஷயம்ன்னு”

“எல்லாமே ஒரு கனவு வாழ்க்கையா இருக்கு.. இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவளை சந்தித்த அந்த முதல் கணங்கள்.. இந்தி தேர்வுகள் பிப், ஆகஸ்ட் இரண்டாம் சனி, ஞாயிறில் தான் நடக்கும்.. அப்படியான ஒரு 1991 ஆகஸ்ட் 11 ந்தேதி.. ஞாயிற்றுக் கிழமை தான் அவளைப் பார்த்தேன். என்னோட பிரவேசிகா தேர்வுக்கான நேரம். நான் தேர்வு எழுதும் இடத்தில் தான் அவளும் தேர்வு எழுதினாள். முதலில் பார்த்ததுமே ஏனோ ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விட்டு இருந்தது.”

“ம்”

“முதலில் கூப்பிட்டதே ‘அண்ணா’ என்று தான்.. இப்போதும் பேசும் போது சொல்லி கிண்டல் செய்வாள். Viva தேர்வுக்கு எனக்கு அடுத்து அவளது பெயர். சீக்கிரம் போக வேண்டுமென்பதற்காக என்னிடம் வந்து அவள் முதலில் போக அனுமதி கேட்டாள்.. விடலையே நானு.. ஆண் வர்க்க திமிர் அப்பமே..”

“தெரிந்தது தானே.. மேலே சொல்”

“1979 ல் பிறந்த எனக்கு அப்ப என்ன வயசு இருக்கும்ன்னு நீங்களே பார்த்துக்கங்க.. அடுத்த விசாரத் வகுப்பு போகும் போது பார்த்தால் அவளும் எங்க வகுப்பிலேயே சேர்ந்து இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி... அப்போது ஆரம்பித்தது அந்த பிணைப்பு. கண்களால் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட நேரம். அடுத்த இரண்டு ஆண்டுகள் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த காலம். அவளது சிரிப்பும், முகமும் என்னை அவளை நோக்கி மேலும் மேலும் இழுத்துச் சென்றது. சொல்லாமலேயே இருமனங்கள் இணைந்தன. வாழ்க்கையின் ஏதோ புரியாத எல்லைகளை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.. அவள் பிரிந்து செல்லும் வரை.”

“நல்லவேளை... அந்த பொண்ணு தப்பிச்சிட்டா”

“ஆமா.. பிரவீன் முடிந்ததும் அவள் பறந்து விட்டாள். 1993 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இன்று வரை அவளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கோ மாயமாகி விட்டாள். அவளது சதை, இரத்தம், எலும்பாலான உடல் மட்டுமே என்னை விட்டுப் பிரிந்து இருந்தது. ஆனால் அவளுடனான எனது கனவு வாழ்வுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஒரு மானசீக உறவாக, நல்ல நிலத்தில் இடப்பட்ட விதையாக, அந்த நினைவுகள் ஒரு விருட்சமாக மாறி இருந்தன. அவ்விருட்சம் நிலத்தில் ஆழப் புதையப் போகும் ஒரு பரந்து விரிந்த ஆலமரமாக ஊன்றப் போவதை அறியாமலேயே இருந்தேன்.”

“ம்ம்ம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.. மேல சொல்லு”

“அவளுடைய கண்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டே எனது வாழ்வு கழிந்தது. ரம்மியமான வாழ்க்கை. அவளுடனான எனது பிணைப்பை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் அதற்கான வார்த்தையைத் தேடி களைத்துப் போய் விட்டேன். காதல், பாசம், நேசம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ குறைவுடையவையாகவே எனக்கு தோன்றுகின்றது.”

“அந்த உறவு விருட்சம் மெல்ல மெல்ல வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்தது. இலையுதிர்காலமும், வசந்தகாலமும் மாறி மாறி வரத் துவங்கி இருந்தன. எப்போது எப்படி எங்கு துவங்கியது என்று சொல்லத் தெரியவில்லை. அவளை நினைக்காத கணங்கள் கடினமானதாக இருந்தன. அவளது நினைவுகள் என்னை விட்டு அகலாமல் இருக்க எனது கணிணியில் கடவுச்சொல்லாகவே அவளது பெயர் மாறி இருந்தது.”

“என்ன இழவோ.. இலக்கியம் மாதிரி என்னவோ பின்னாத்தற.. நேரா மேட்டருக்கு வா”

“வேலை நிமித்தம் 1998 ல் துபாயில் போய் இறங்கினேன் என் கனவு வாழ்க்கையையும் மனதில் நிறைத்தபடி.. பெற்றோர்களின் தீவிர எதிர்ப்பை முறியடித்து.. அவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம், பின்னர் குழந்தைகள் என கண ஜோராக வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்தது. என்னவளின் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீடு.. வீட்டின் முன் தோட்டம், மொட்டை மாடி ஊஞ்சல்கள் என நினைவுகளில் மறக்காதவை.”

“நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன.”

“வெயிட்..வெயிட்... இதெல்லாம் என்னது? கற்பனையிலேயே இம்புட்டு வாழ்க்கையா வாழ்ந்த?”

“ஆமாம்.. தனிமையாக இருக்கும் நேரங்களில் எல்லாம் நான் தனிமையை சிறிது கூட உணரவில்லை. இருவரும் இணைந்து சுற்றிய ஊர்கள், ஜாலியாக சுற்றிய வெளிநாடுகள் என அசை போட வைக்கும் நினைவுகள். அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்கும் அந்த கணங்களும், அவளது கை விரல்களின் கோதுதல்களில் லயித்து உறங்கி விடும் பொழுதுகளும், அவ்வாறு தூங்கிப் போய் எழும் போது அவள் காட்டும் பொய்க் கோபமும், மொட்டை மாடி மழைத் தூறல் நனைதல்களும், அதீத உணர்ச்சிகளுடனான மதிய நேர கூடல்களும் நெஞ்சை நிறைத்து இருக்கின்றன.”

“எனக்கே ஒரு மாதிரி இருக்குய்யா... மேல சொல்லு”

“இரண்டு குழந்தைகள்.. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக.. குழலினிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது நம் மூத்தோர் சொன்னது. முற்றிலும் உண்மை. நான் குழந்தைகளை கண்டிக்கும் போது அவளும், அவள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நானும் குழந்தைகளுக்காக பரிந்து பேசுவதும், பின்னர் ரகசியமாக சமிக்ஞை செய்து கொள்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில உணர்வுகள்.”

“ம்”

“உடல் ரீதியான எந்த தேவைகளும், நினைவுகளும் அற்றதாகவே அந்த வாழ்க்கை இருந்தது. அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை அவள் செய்வதில்லை. புகை, மது, சூது,பிற மாது போன்றவை அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லாதவை. அவளுக்கு பிடிக்காது என்பதற்காக இவைகளை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன். எனது கனவு வாழ்வில் மட்டும் இன்றி நிஜத்திலும் அவளுக்காக இவைகளை விட்டும் தள்ளியே இருந்தேன். ஒரு அறிஞன் கூறுவான் “ ஒருவன் தவறு செய்யவில்லை என்று கூறினால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்”. ஆனால் மேற்சொன்னவைகளுக்கு வாய்ப்புகள் தானாகவே வந்த போதும் எந்த சிறு குழப்பமும் இல்லாமல் அவைகளை உதறித் தள்ளினேன்.. எல்லாம் எனது கண்ணம்மாவிற்காக.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்.. என்னவளை செல்லமாக கண்ணம்மா என்று தான் கூப்பிடுவேன். எனக்கும், அவளுக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும்.”

“பாரதியின் அடிமையா நீ.. அதான் இப்படி கற்பனையில மிதக்குற”

“ஆம்.. இருவருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் ஊடல்களுடன் சண்டை நடக்கும். எனக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் சட்டைகளும், அவளுக்கு பிடிக்காத கலரில் எனக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் நீல நிற சேலைகளும் சண்டைகளை வளர்க்கும்.. ஒரு விதமான இன்ப அனுபவங்களோடு.. எனக்காக அவள் வாங்கி வந்த கல்கி, அசோகமித்திரன், JK, சுந்தர ராமசாமி, முதல் கொண்டு சுஜாதா, வைரமுத்து வரையிலானவைகளும், அவளுக்காக நான் வாங்கிய Mills & Boon, Ayn Rand, Jeffery Archer, Sidney Sheldon, J._K.Rowling போன்றவை எங்களது வீட்டை நிறைத்து வைத்திருக்கும்.”

“வாவ்... ரசனையான தம்பதிகளா இருந்து இருக்கீங்களே..”

“இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. இருவரின் மூலமும் எங்களுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை இன்பகரமாக சென்று கொண்டு இருந்தது.. 2005 வரை..”

“ஏன்? என்னாச்சு?”

“அப்போது தான் நிகழ்காலம் உறைக்க ஆரம்பித்தது. உலக வாழ்க்கையும், கனவு வாழ்க்கையும் இணையாதாமே... வீட்டில் எனக்கு பெண் பார்க்கத் துவங்கி இருந்தனர். அவர்களிடம் சொல்லவா முடியும்.. எனது கனவு வாழ்க்கையில் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று.. இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.. அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரிந்திருந்தாலும் பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டுமென்றோ தோன்றாத அளவில் அவள் என்னுள் தொடச்சியான கணங்களில் நிறைந்து இருக்கின்றாள்”

“திருமணமும் நடந்தது. நிஜ வாழ்க்கைத் திருமணம் என்னை ஏமாற்றிடவில்லை. அன்பான கணவனாக மனைவிக்கும், பாசமுள்ள தந்தையாக மகனுக்கும் வாழ்கின்றேன்.”

“அடப்பாவி.. நல்லவேளை அப்பவாவது நிகழ்காலத்திற்கு வந்தியே”

“அதே நேரத்தில் கனவு வாழ்க்கை எந்த குறையும் இலலாமல் இன்று சஷ்டியப்த பூர்த்தி வரை வந்து விட்டது. கண்டிப்பாக அதற்கு வந்து விடுங்கள்”

“நான் இல்லாமலா.. கண்டிப்பா உன் கூடவே எப்போதும் போல் இருப்பேன்.. ஜமாய்!.. வாழ்த்துக்கள்.. உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது”

“சொல்லுங்களேன்”

“நகுலனின் டைரியில் இருந்து..
27-12-73
வரிகள்

எப்பொழுதும் உன் நினைவு - நீ எங்கேயோ இருக்கிறாய் - நான் எங்கேயோ இருக்கிறேன் - நீ மணமானவள் - நான் மணமாகாதவன் - நான் உன்னைக் காதலித்தேன் என்பதில் தவறில்லை.. (இப்போதும் காதலிக்கிறேன் - என்று சொல்வதில் பொய்யில்லை) -அதைப் போலவே நீ என்னைக் காதலிக்கவில்லை, என்னிடம் அன்பு காட்டவில்லை, அலக்ஷியம் செய்கிறாய் என்று சொல்வதும் தவறு. நம்மிடையே உள்ள உறவு தான் என்ன?...
என்றோ ஒருநாள் உன்னை நான் பார்த்தேன். அன்று என் கதை முடிந்தது.”

முற்றும்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Wednesday, April 15, 2009

உணர்வைக் காட்டனுமாமே? PIT போட்டிக்காக

இந்த மாத PIT புகைப்படப் போட்டிக்கான படங்கள்... வழக்கம் போல் வரலாறு முக்கியம் அமைச்சரே என்பதற்காக

PIT போட்டி



சொல்லுங்க.. முதல் படத்தை அனுப்பலாம் என்று உள்ளேன்.. அதில் தான் பல்லைக் காட்டிக் கொண்டு சிரித்து, ஆனந்தமாய் உணர்வைக் காட்டுகின்றார் போல உள்ளது. இரண்டாவது படத்தில் முன்னால் நின்று எடுத்து இருந்தால் நன்றாக வந்து இருக்கும் போல் உள்ளது.

Friday, March 13, 2009

PIT மார்ச் மாத போட்டி - கருப்பு வெள்ளைப் படம்





இதில் எந்த படத்தைக் கொடுக்கலாம்ன்னு சொல்லுங்க.. போட்டியில் வெல்ல தேவையில்லையெனினும் ஒரு பங்களிப்புக்காக கடைசியில் தரலாம்ன்னு காத்திருந்தேன்.

படத்தின் மீது கிளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.

http://photography-in-tamil.blogspot.com/2009/02/pit-2009.html

Thursday, October 9, 2008

துர்காவின் லாலல்லாலாவும், புதிரும், கேமராவுமாக கலவையான சிந்தனைகள்

.

கலவை 1

ஈத் விடுமுறையில் நண்பர் தமிழனையும், இன்னும் சில பதிவர்களையும் சந்திப்பதற்க்காக ஜித்தா சென்றிருந்தேன். ஜித்தாவை அடைந்து தமிழனக்கு போன் செய்த போது வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன்.
என் அருகில் என்னைப் போலவே ஒரு மலையாளியும் ஒருவருக்காக காத்திருந்தார். அவருடன் சம்சாரித்துக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்று ஆகி விட்டது எனக் கூறி அவரை சாப்பிட்டுவிட்டு வரும்படிக் கூறினேன். அவரும் 1/2 மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு வந்தார். என்னையும் சாப்பிட்டுவிட்டு வரும்படி அவர் வற்புறுத்திய போது, நண்பருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவர் வரும்வரை காத்திருந்து அவருடன் தான் சாப்பிடுவேன் என்று கூறி விட்டேன். மணி இரண்டானது, இரண்டரையானது, மூன்றும் ஆகியது.

பசி சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டு இருந்தது. அப்போது எங்கு ஒரு சிறுவன் வந்தான். நான் அமர்ந்திருக்கும் நிலையில், என் உயரத்திற்கு கொஞ்சம் குறைவாக...
“அண்ணே”
“தம்பி அந்தாண்ட தள்ளிப் போ! என் நண்பனுக்காக காத்துக் கிட்டு இருக்கேன்”
“அண்ணே அது வந்து....”
‘சொன்னா கேக்க மாட்டீயா? போ..போ”
“அதிலைண்ணே! அது வந்து....”
“தம்பி உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு! உன்னை மாதிரி சின்ன ப்சங்களெல்லாம் இப்படி தனியா சுத்தக் கூடாது. பிள்ளை பிடிப்பவன் தூக்கிட்டுப் போய்டுவான்... வீடு எங்க இருக்கு? உங்க அப்பா, அம்மா எங்க? ஒழுங்கா வீட்டுக்கு போ”
“அண்ணே நான் சொல்வதை முழுசா கேளுங்க....”
“நானே என் நண்பனுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்...உன் கதையை எல்லாம் கேக்க முடியாது.. தள்ளிப் போ..”
“யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!”
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

கலவை 2

தமிழ் மணத்தில் சில பதிவர்கள் சில புதுமையாக குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளனர். அவைகளைப் பார்த்ததும் ஓடியே போய் விடுவேன். நண்பர் நிஜமா நல்லவன் சமீபத்தில் ஒரு புதிர் போட்டார். வழக்கம் போல் ஓடி வந்து விட்டேன். அப்போது சாட்டிங்கில் இருந்த சுமதி அக்கா, விடாப்பிடியாக அந்த புதிரைக் கண்டுபிடிக்கக் கூறினார்கள். இருவரும் இணைந்து விரைவிலேயே கண்டுபிடித்து விட்டோம்... சுலபமாக தெரிந்தது.

அதே போல் இலவச கொத்தனாரும், யோசிப்பவரும் புதிர் போட்டிருந்தனர். அதையும் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டேன். அப்போது வடகரை வேலன் அவர்கள் அதை கண்டுபிடிக்குமாறு கூற, அதிலும் மூக்கை நுழைத்துப் பார்த்தேன். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், பின்னர் சுலபமாகவே இருந்தது. யோசிப்பவரின் புதிரில் ஒன்றைத் தவிர மற்றவைக்கு பதில் சொல்லி விட்டேன்.

அடுத்த தடவைகளில் நீங்களும் முயற்சி செய்யுங்கள்... கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...

தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க...இனி நாமலும் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்... வேண்டாமா? அப்ப இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க

புதிர் : 1

கரத்தைக் குறுக்கி, உழுவதின் முதல் ஓசையை மாற்றி, வேய்ந்தால் எழுதலாம் (3)

கலவை 3

ஏஷியா நெட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் வரும்.. அதைப் பார்ப்பது வழக்கம்..இப்போது நமது தொலைக்காட்சியில் வருவதில்லை. அதில் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி. இதைப் பற்றி ஒரு பதிவு கூட முன் காலத்தில் இட்டேன்.

இசையில்லாத அல்லது குரலுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள பாடல்களை மட்டுமே விரும்பி ரசிப்பேன்... அந்த வரிசையில் கானா அண்ணனின் ஒரு பதிவின் மூலம் கிடைத்த இந்த பாடல் எனது ஆல் டைம் பேவரைட் லிஸ்ட்டில் சமீபத்தில் இடம் பிடித்துள்ளது. ( மொத்தமே 20, 25 பாடல்கள் தான் பேவரைட் லிஸ்ட்டில்)... நீங்களும் துர்கா விஸ்வநாத்தின் இந்த பாடலை ரசியுங்கள்... கடைசியில் வரும் லாலால்லால்ல்ல்லால்லால்லா வை விட்டு விடாதீர்கள்.






http://www.durgaviswanath.com/

கலவை 4


விரைவில் டிஜிட்டல் கேமரா வாங்கலாம் என்று எண்ணியுள்ளேன். சமீபத்தில் நந்து சார் எடுத்த நிலாவின் படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே என்று தான். ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி Panasonic Lumix DMC-FZ18 என்ற கேமரா பட்ஜெட்டுக்குள் வரும்போல் தெரிகின்றது.

விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.

Thursday, August 14, 2008

PIT மெகா போட்டிக்கு நம்ம படங்கள்

.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவின் இந்த மாத மெகா போட்டிக்கு நம்முடைய படங்கள்... எல்லாம் செல்போன் கேமராவில் எடுத்தது தான்... எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க








Monday, July 21, 2008

அறிவியல் கதை - போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

இது சிறில் அலெக்ஸ் அவர்களின் அறிவியல் புனைக் கதைப் போட்டிக்காக

Monday, July 7, 2008

கண்ணில் வைரம் மின்னும் பூனையார் - PIT போட்டி

.

எங்கள் ஊரில் சிறுவர்கள் விளையாடும் போது ஒன்னும் உதவாத உதவாக்கரைகளை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். அது போல தான் PIT போட்டிக்கு நம்ம புகைப்படங்கள். நி.நல்லவன் அண்ணன் மாதிரி காசு போட்டெல்லாம் கேமரா வாங்கலை. செல் போனை வைத்து எடுப்பது தான் எல்லாம்..... :))))
இருட்டை வைத்து PIT போட்டிக்கு போட்டோ எடுக்க இருட்டான இடங்களில் எல்லாம் பேய் மாதிரி சுத்தி போட்டோ எடுத்ததில் தேறியது இவை தான்.

1. இந்த பூனையை போட்டோவுக்கு போஸ் கொடுக்க செய்வதற்கு பொறிச்ச கோழியும், வறுத்த மீனும் கேக்குது.... என்ன கொடுமைங்க இது....


2. பணி செய்யும் இடத்தில் இயந்திர அறையில் நண்பர் ஒருவர் இருட்டில் வெளிச்சத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த போது கிளிக்க்கியது.

3. இவர் கொஞ்சம் சமத்தானவர். கோழி மீனெல்லாம் கேக்கலை. ஆனா போஸ் கொடுக்காம ஓடி ஓடி போனவர்.


இதில் முதலில் உள்ள பூனையார் தான் போட்டிக்கு.

Thursday, April 24, 2008

சங்கம்னா இரண்டாமே.... இலக்கியத்தில் ‘இரண்டு'

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு 'இரண்டு” என்பதை மையமாகக் கொண்டு போட்டி நடக்குதாம். நமக்கும் இதில் கலந்து கொள்ள எழுந்த ஆசையில் தேறியது இது தான்....

தமிழ் இலக்கியங்களில் 'இரண்டு'

.... முதலில் திருக்குறள்

தானம் தவம்ரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின். 19

(19. இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்பு ஆகிய இரண்டுக்கும் தடங்கலாகும்(.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப வ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

(392. எண், எழுத்து எனப்படும் இரண்டு அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

(393. கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவர்களுக்கு முகத்தில் இருக்கும் இரண்டு் கண்களும் புண் என்றே கருதப்படும்.)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

ல்லாதாள் பெண்காமுற் றற்று. 402

(402. கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, இரண்டு மார்பகங்களுமே இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.)

மனந்துய்மை செய்வினை துய்மை ரண்டும்

னந்துய்மை துவா வரும். 455

(455. ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனம் செயல் ஆகிய இரண்டும் தூய்மையானவையாக இருக்கும்.)

ஒற்றும் உரைசான்ற நுலும் வையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். 581

(581. நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றர், நீதியுரைக்கும் அறநூல் ஆகிய இரண்டும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை வ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

(662. இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.)

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். 674

(674. எற்ற செயல், எதிர்கொண்ட பகை ஆகிய இரண்டையும் முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.)

ஒண்பொருள் காழ்ப்ப யற்றியார்க்கு எண்பொருள்

ஏனை ரண்டும் ஒருங்கு. 760

(760. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழிகளில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் எளிதில் வந்து சேரும்)

தன்துணை ன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

ன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875

(875. தனது பகைவர்கள் இரண்டு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்(.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. 992

(992. அன்புடையவராக இருப்பது மற்றும் , உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பது முதலிய இரண்டும் தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனரண்டின்

நீள்வினையால் நீளும் குடி. 1022

(1022. ஆழ்ந்த அறிவு, விடாமுயற்சி ஆகிய இரண்டும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.)

காமம் விடுஒன்றோ நாண்வடு நன்னெஞ்சே

யானோ பொறேன்வ் விரண்டு. 1247

(1247. நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது. )

தமிழ் இலக்கியம் என்று சொல்லி விட்டு புறநானூறை விட்டு விட்டால் எனக்கு மனது ஆறாது. எனவே....

................ புறநானூற்றில் இரண்டு

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.

திணை : பாடாண். துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,

திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு

இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,

பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,

நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,

விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,

மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்

கைமான் கொள்ளு மோ? என

உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர்.

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர் : மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்

தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று

நிறையருந் தானை வேந்தரைத்

திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.

பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெணியன் விண்ணந்தாயன்.

திணை: வாகை. துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

வினைக்கு வேண்டி நீ பூண்ட

புலப் புல்வாய்க் கலைப் பச்சை

சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;

மறம் கடிந்த அருங் கற்பின்,

அறம் புகழ்ந்த வலை சூடிச்,

சிறு நுதல், பேர் அகல் அல்குல்,

சில சொல்லின் பல கூந்தல், நின்

நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்

தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;

காடு என்றா நாடுஎன்று ஆங்கு

ஈரேழின் இடம் முட்டாது,

நீர் நாண நெய் வழங்கியும்,

எண் நாணப் பல வேட்டும்,

மண் நாணப் புகழ் பரப்பியும்,

அருங் கடிப் பெருங் காலை,

விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,

என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;

செல்வல் அத்தை யானே; செல்லாது,

மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவளர் இமயம்போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

189. உண்பதும் உடுப்பதும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.

பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில் அத்தை

அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,

வெயிலென முனியேன், பனியென மடியேன்,

கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,

நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்

மெல்லியல் குறுமகள் உள்ளிச்

செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!

260. கேண்மதி பாண!

பாடியவர்: வடமோதங்கிழார்

திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;

கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,

விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்

தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்

உளரும் கூந்தல் நோக்கி, களர

கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்

பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,

காணலென் கொல் ? என வினவினை வரூஉம்

பாண ! கேண்மதி, யாணரது நிலையே;

புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,

எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,

கையுள போலும் கடிதுஅண் மையவே;

முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்

நெடுநிரை தழீஇய மீளி யாளர்

விடுகணை நீத்தம் துடிபுணை யாக,

வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்

வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்

கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்

நிரையொடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவ மானத், தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,

கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,

கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,

அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;

உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,

இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,

படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

288. மொய்த்தன பருந்தே!

பாடியவர்: கழாத்தலையார்

திணை: தும்பை துறை: மூதின் முல்லை

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,

வென்றதன் பச்சை சீவாது போர்த்த

திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,

ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,

அருகுகை .. .. .. .. .. .. மன்ற

குருதியொடு துயல்வரும் மார்பின்

முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

304. எம்முன் தப்பியோன்!

பாடியவர்: அரிசில்கிழார்

திணை: தும்பை துறை : குதிரை மறம்

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,

நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,

வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி

பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை

எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு

நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,

புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்

கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,

வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்

இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;

இரண்டா காது அவன் கூறியது எனவே.

344. இரண்டினுள் ஒன்று!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.

திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,

செறிவளை மகளிர், பறந்தெழுந்து,

துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,

நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;

புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து,

பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;

இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,

காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-

கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

புறநானூற்றைக் குறிப்பிட்டாலும் தொல்காப்பியத்தில் தான் எத்த்த்த்த்னை இரண்டு..........

............. தொல் காப்பியத்தில் 'இரண்டு'

ரண்டு றந்து சைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் சைக்கும். 2

அவற்றுள்,

அ ஆ ஆயிரண்டு அங்காந்து யலும். 3

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

நுனி நா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

மூன்று தலை ட்ட முப்பதிற்று எழுத்தின்

ரண்டு தலை ட்ட முதல் ஆகு ருபஃது

அறு நான்கு ஈறொடு நெறி நின்று யலும்

எல்லா மொழிக்கும் றுதியும் முதலும்

மெய்யே உயிர் என்று ஆயீர் யல. 1

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று

ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15

புள்ளி றுதியும் உயிர் று கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்

மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்

அம் முறை ரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்

பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா டை

ஒன்றிய வகரம் வருதலும் ரண்டும்

மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30

தாம் நாம் என்னும் மகர றுதியும்

யாம் என் றுதியும் அதன் ஓரன்ன

ஆ எ ஆகும் யாம் என் றுதி

ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்

ஏனை ரண்டும் நெடு முதல் குறுகும். 16

வேற்றுமை ஆயின் ஏனை ரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை- 34

தேன் என் கிளவி வல்லெழுத்து யையின்

மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

உண்டு என் கிளவி உண்மை செப்பின்

முந்தை றுதி மெய்யொடும் கெடுதலும்

மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து வரூஉம் காலையான. 25

ஒன்று முதல் ஆக எட்டன் றுதி

எல்லா எண்ணும் பத்தன் முன் வரின்

குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே

முற்ற ன் வரூஉம் ரண்டு அலங்கடையே. 28

பத்தன் ஒற்றுக் கெட னகாரம் ரட்டல்

ஒத்தது என்ப ரண்டு வரு காலை. 29

டை நிலை ரகரம் ரண்டு என் எண்ணிற்கு

நடை மருங்கு ன்றே பொருள்வயினான. 34

ரண்டு முதல் ஒன்பான் றுதி முன்னர்

வழங்கு யல் மா என் கிளவி தோன்றின்

மகர அளவொடு நிகரலும் உரித்தே. 74

ஏனை ரண்டும் ஏனை டத்த. 30

ரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்

ரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10

தடுமாறு தொழிற்பெயர்க்கு ரண்டும் மூன்றும்

கடி நிலை லவே பொருள்வயினான. 12

அச்சக் கிளவிக்கு ஐந்தும் ரண்டும்

எச்சம் லவே பொருள்வயினான. 17

அன்ன மரபின் ரண்டொடும் தொகை

ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29

எஞ்சிய ரண்டின் றுதிப் பெயரே

நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். 27

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4

நான்கே யற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி ரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25

மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை

அப் பால் ரண்டு என மொழிமனார் புலவர். 14

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று

ஆயிரண்டு ஆகும் யற்கைத்து என்ப. 19

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. 13

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 21

லம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. 62

அம் மூ டத்தான் வினையினும் குறிப்பினும்

மெய்ம்மையானும் வ் ரண்டு ஆகும்

முதல் எனப்படுவது நிலம் பொழுது ரண்டின்

யல்பு என மொழிப யல்பு உணர்ந்தோரே. 4

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை ரண்டு உடைத்தே. 19

நாட்டம் ரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்

எத் திறத்தானும் கிழத்திக்கு ல்லை

முற்பட வகுத்த ரண்டு அலங்கடையே. 39

யலசை முதல் ரண்டு ஏனவை உரியசை. 5

மண்டிலம் குட்டம் என்று வை ரண்டும்

செந்தூக்கு யல என்மனார் புலவர். 113

செய்யுள்தாமே ரண்டு என மொழிப. 123

தரவேதானும் நால் அடி ழிபு ஆய்

ஆறு ரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை

கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

ரண்டு அறிவதுவே அதனொடு நாவே

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை

சூழும் காலை அளகு எனல் அமையா. 56

நூல்களுக்கு நன்றி : தமிழ் டாட் நெட்