Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, June 17, 2010

ராவணன்

ராவணன் - ரொம்ப எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்... கதைக்காக மணிரத்னம் ரொம்ப மெனக்கெடவில்லை... ராமாயணத்தின் கதை தான்.... ராமன் (?) = பிருத்விராஜ், ராவணன்(?) = விக்ரம், சீதை(?) = ஐஸ்வர்யா, அனுமார்(?) = கார்த்திக், இப்படியும் எடுத்துக்கலாம்.

காவல்துறை உயர் அதிகாரியான பிருத்விராஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துவதுடன் படம் தொடங்குகின்றது.. அதில் நனைய ஆரம்பித்த ஐஸ் அதற்கு அடுத்து படம் முழுவதும் நீரில் நனைந்து கொண்டே இருக்கின்றார்... மணிரத்னத்தின் இருட்டுக்குப் பதில் மழை இந்த படத்தில்.

ஏன் ஐஸ்வர்யாவை விக்ரம் கடத்த வேண்டும்.... அதே ராமாயணக் கதைப் படி தங்கை(சூர்ப்பனகை = பிரியாமணி)க்கு ஏற்ப்பட்ட களங்கத்துக்கு பழிவாங்க... ஐஸைக் கடத்திய விக்ரமுக்கு ஐஸ் மீது ஒரு ஈர்ப்பு உருவாக.. கடைசியில் ஐஸை விடுவிக்கிறார் விக்ரம்.. விடுதலையான ஐஸின் நடத்தைக் குறித்து பிருத்விராஜ் சந்தேகம் எழுப்ப ஐஸ் கணவனைப் பிரிந்து விக்ரமைத் தேடி வருகின்றார்.... இறுதியில் என்ன நடந்தது என்பதே டிவிஸ்ட்.

படத்தின் கதை ஓட்டம் குறித்து முன்பே அனுமானிக்க முடிந்து இருப்பதால் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் படம் ஆரம்பிக்கின்றது.. ஜெட் வேகம்.. படம் போவதே தெரியவில்லை. நல்ல இயக்கம். ( ஒருவேளை எங்க கல்ஃப் சினிமா ஆப்ரேட்டர் ‘கை’ தேர்ந்தவரோ? படம் 2 மணி நேரத்தில் முடிந்ததால் டவுட்டு.. ;-) )..

படம் முழுவதும் காட்டில் தான்.. அழகான இடங்கள்.. நல்ல ஒளிப்பதிவு. கண்ணுக்குள் குளுமை நிற்கின்றது.. காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் மிகக் குறைவே.. நீர்வீழ்ச்சி காட்சிகள், பாலத்தில் கடைசி சண்டைக் காட்சி, மலை உச்சி பிரமிக்க வைக்கின்றது.

விக்ரம்.. இது போல் நரம்பு புடைக்க கத்தி நடிப்பதை பல படங்களில் பார்த்தாச்சு.. அவரே சொன்னது போல் பல படங்களில் அவர் நடித்ததின் கலவை.. ஆனாலும் நிறைய உழைத்து இருக்கின்றார்.

பிருத்விராஜ்.. போலிஸ் அதிகாரி... குழந்தைத் தனமான முகத்தில் இதுவரைப் பார்த்து வந்த நமக்கு இந்த கடுமை புதுசு.. எல்லாரும் இவரை இந்த வேடத்தில் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.

கார்த்திக் காமெடியாக ஆரம்பித்தாலும் நல்லவேலையாக காமெடி ரோல் செய்யவில்லை. சிம்பிளாக கலக்குகின்றார். பிரியாமணி அதே கிராமத்து கில்லி... வழக்கம் போல் வண்புணர்வு செய்யப்படுகின்றார்.

பிரபு குண்டாக வருகின்றார்.. ஆரம்ப பில்டப்புகள் மட்டுமே.. ரஞ்சிதா சீனுக்கு வந்ததுமே ஒரே சத்தம் தியேட்டரில்.. அதுக்கு அப்புறம் வேலையே இல்லை... வையாபுரி பெண் வேடத்தில்... ம்ஹூம்.



சொல்ல வேண்டியவர்கள் இன்னும் இருவர்.. ஒன்று ஐஸ்வர்யா... இத்தனை வயசாகி(?)யும் இன்னும் மிரட்டுகின்றார்.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போள் இருக்கின்றது.. இரண்டே இரண்டு காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளில் மேக்கப் இல்லாதது போல் தோற்றம்... காட்டில் கஷ்டப்பட்டும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்... இப்போது தான் முதன் முறைய தியேட்டரில் ஐஸைப் பார்ப்பதால் வந்த பிரமிப்பாக இருக்கலாம்.. ஐஸ்வர்யாவிற்கு முன்னால் விக்ரம், பிருத்விராஜ் இருவருக்குமே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி எதும் வேலை செய்யவில்லை.. ஐஸ் இஸ் கிரேட்.

இரண்டாவது ஏஆர் ரஹ்மான்... இப்போதெல்லாம் நிறைய மலையாள படங்கள் பார்க்கும் வழக்கம் ஆகி விட்டதால், தமிழ் பட அதிரடி பிண்ணனி இசை பயமாகி விட்டது. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு படத்தை பார்க்கத் துவங்கினேன். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டேன்.. இதமான பிண்ணனி இசை.. எந்த கர்ண் கொடூரமும் இல்லை.. விக்ரமின் சத்தம் தவிர

உசிரே பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது... ஆனால் அழகான அந்த பாடல் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் கொஞ்சம் உறுத்தியது. மற்ற பாடல்களும் ரசிக்கலாம்.. கெடா கறி பாட்டு கலக்கல். எந்த பாட்டுக்கும் யாரும் எழுந்து வெளியே செல்லவில்லை.

விக்ரம் ஏமாற்றினாலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்... பிருத்வி வேடத்தில் விக்ரம்... அதில் எப்படி இருக்கின்றது எனக் காண ஆவல்.. விக்ரமை அபிஷேக் முந்தி இருப்பார் என்று நினைக்கின்றேன்.

டிஸ்கி : 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற பெருமை இந்த படம் தட்டிச் செல்கின்றது.. வரலாறு முக்கியம் அமைச்சரே... கூட வந்தவர் டிவிட்டர்களின் ஆசான் ஆயில்யன் அவர்கள்.

பின் டிஸ்கி : ராம்ஜி யாஹூ என்ற பின்னூட்ட பிதாமகர் மட்டும் இந்த பதிவு குறித்து இங்கு கமெண்ட் போட்டால் அவருக்கு நோபல் பரிசு வாங்கித் தர ஏற்பாடு செய்யப்படும். அதோடு என்னோடு கெட்டிச் சட்னியும், செட் தோசையும் சாப்பிடும் அரும் பெரும் பாக்கியமும் வழங்கப்படும்.

Friday, May 21, 2010

மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லியாம்..

மாடு மேய்க்கறதைப் பற்றிப் பார்க்குறதுக்கு முன்னாடி போன பதிவோட சேர்ந்த ஒரு விஷயம்.. இராவணன் படத்துல பாட்டில் கொஞ்சம் தமிழ் தூக்கலாவே அழகா இருக்கு...

உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்..

”இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழிப் போட்ட மனசு புள்ள
விதி விலக்கில்லா விதியுமில்ல..


மேற்க்கண்டதில் விதிவிலக்கில்லாத என்பதைக் கேட்கும் போது ஒரு குழப்பம். பாடுபவர் விதி என்பதை பாடி விட்டு இடைவெளி விட்டு விளக்கில்லாத என்பது போல் கேட்கும்... முதல் இரண்டு முறை புரியல... அப்புறம் தான் புரிஞ்சது.. பாடல் எழுதியவர், இசையமைப்பாளர் இதைக் கொஞ்சம் கவனமா பார்த்து இருக்கலாம்.

இரண்டாவதாக கள்வரே எனத் தொடங்கும் பாடல்.. நல்லா இருக்கும்..

வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே!
வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா! ’

ஆகா.. என்ன இனிமையான வரிகள்.. அதோடு கள்வரே கள்வரே! கள்வரே கள்வரே! என்பதில் மூன்றாவதாக வரும் வார்த்தையைக் கள்வெறிக் கள்வரே என்று மாற்றி இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்ல..

கள்வரே கள்வரே
கள்வெறி கள்வரே
கண்புகும் கள்வரே

*********************************************************

அடுத்த மாடு மேய்க்கிற மேட்டரு..

என்னடா தலைப்பே இப்படி இருக்கேன்னு யோசிக்காதீங்க... நான் படிச்ச காலங்களில் எங்க வாத்தியார்களில் அதிகமானவர்கள் சொன்னதுக்கு எதிர்ப்பதமாத் தான் சொல்லி இருக்கேன்... எங்க குரூப்பையேப் பார்த்து எங்க வாத்தியார்கள் “நீங்களெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சொல்வது வழக்கமான ஒன்று தான்.. நாங்களும் அதை எல்லாம் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி அசால்ட்டா கண்டுக்காம போய்டுவோம்...

ரொம்ப நாள் கழிச்சு இப்பத் தான் புத்திக்கு உறைக்க ஆரம்பிச்சு இருக்கு... இப்ப வெளிநாட்டில் இருக்கோம்.. ஊருக்கு போனால் என்னவெல்லாம் செய்யலாம்ன்னு ஐடியா போட்டுக்கிட்டு இருக்கோம்... ஏகப்பட்ட ஐடியாக்கள்.. வீடு எல்லாம் சொந்தமா கட்டியாச்சு... இப்போதைக்கு குடி போகலைன்னு வாடகைக்கு விட்டு வச்சு இருக்கு... ஆசை ஆசையாக கட்டின புது வீட்டில் யாரையோ வாடகைக்கு வைக்க கஷ்டமாத் தான் இருக்கு... சரி நாமளே இந்தியாவில் போய் வீட்டில் செட்டில் ஆகிடலாம்ன்னு யோசனை செய்தால் நம்ம நலம்விரும்பிகள் கேட்கும் முதல் கேள்வியே “ஊரில் போயி... ( ஒரு இழுவை வருது.. ;-)) ) என்ன செய்றதா உத்தேசம்? ”

உடனே யோசனை எல்லாம் பலமா வருது.. ஆமா.. ஊருக்கு போய் என்ன செய்ய? நாம இங்க செய்ற வேலைக்கு ஊரில் வேலை கிடையாது... (யாருய்யா அது.. கக்கூஸ் கழுவுற வேலை இங்கயும் இருக்கும்ன்னு சவுண்ட் விடுறது?) சரி வேற ஏதாவது தொழில் செய்யலாம்ன்னா ஒன்னும் தெரியாது.. இல்லைன்னா பட்ஜெட் எல்லாம் எகிறும்.. சரி என்ன தான் செய்யலாம்ன்னு யோசிச்சப்ப தான் எங்க வாத்தியாருக சொன்ன மாடு மேய்க்கத் தான் லாயக்கு வாசகம் நினைப்புக்கு வந்தது. இயற்கையோடு சேர்ந்த தொழில்.. ஏற்கனவே விவசாயம் என்ற பெயரில் 2 ஏக்கர் வாங்கி அவதிப்பட்ட அனுபவம் இருந்தாலும் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம் என்று ஒரு நப்பாசை.

ஊரில் தண்ணீர் ஊற்றிய (1:1 அளவாம்.. என்ன கொடுமய்யா இது) பாலே 20 ரூபாயாம்.. பால் வியாபாரி எல்லாம் நல்லா சம்பாதிக்கிறார்களாம்.. வடிவேலு ஸ்டைலில் நாமலும் இதில் இறங்கிட்டா... வீடு கட்டினது போக பாதி இடம் வீட்டை ஒட்டிக் கிடக்கு... அதில் மாட்டுக் கொட்டகை கட்டி 4 பால் மாடு வாங்கிக் கட்டி விட்டா வாத்தியார்களோட ஆசையை தீர்த்த மாதிரியும் இருக்கும்.. வருமானமும் கிடைக்கும்ன்னு ரூம் மோட்டு வளையை பார்த்துக்கிட்டே சிந்தனை செய்தேன்.

சரி... எதுக்கும் வீட்டுக்காரம்மா கிட்ட ரோசனை கேட்கலாம்ன்னு போன் செஞ்சா , வழக்கம் போல் மண்டகப்படி நடக்காத குறை தான்... “மாடு வளர்க்குறதுன்னா லேசுப்பட்ட காரியமா? காலையில் பால் எடுக்கனும், பால் விக்கனும், சாணி அள்ளனும், தீனி போடனும், குளிப்பாட்டனும், மாட்டை மேய்ச்சலுக்கு விடனும், மீண்டும் மாலையில் முதலில் இருந்து ஆரம்பிக்கனும், இது தவிர மாட்டுக்கு நோய் ஏதாவது வந்தா கண்டுபிடிச்சு மருந்து தரனும்” லொட்டு லொசுக்குன்னு பெரிய லிஸ்ட்டே போட்டுட்டு “இதெல்லாம் உங்களுக்கு லாயக்கு இல்லை.... துன்ன தட்டையே நகர்த்தி வைக்கத் தெரியாது. இவரு மாடு வளர்க்கப் போறாராம்” என்று என்னோட திட்டத்தை ஆரம்பித்திலேயே நசுக்கி விட்டார்.

மீண்டும் அதே மோட்டு வளை.. அதே சிந்தனை.. எப்படி எங்க வாத்தியார் இப்படி சொல்லி இருப்பார்.. அப்ப தான் இந்த மறை பொருளின் அர்த்தம் புரிவது போல் இருந்தது... எங்க வாத்தியையும் அவரோடு வாத்தி இதே மாதிரி தான் திட்டி இருப்பார்ன்னு தோணுச்சு.. அதனால் தான் அவர் எங்களை எல்லாம் மேய்க்க வந்து இருந்திருக்காருன்னும் தோணுச்சு.. அப்ப இங்க கத்தாரில் நமக்கு கீழே வேலை செய்பவர்களை கட்டி மேய்ப்பதைத் தான் வாத்தியாரும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்ன்னு நினைச்சிக்கிட்டேன்.

Thursday, May 20, 2010

ராவணன் - கெடா அறுத்து பந்தி வைக்கலாம்..

ராவணனில் ஒரு பாட்டு.. எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல.. செம பட்டையைக் கெளப்புது.. ஹிந்தி வெர்சனைக் காட்டிலும் தமிழோடு ரொம்ப ஒட்டி இருக்கு.... படிச்சிக்கிட்டே கேட்கலாம் வாங்க


கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடாக் கள்ளு ஊத்து
இச்சான் இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாவப் பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப அப்புறம் பாப சேல மாத்துடி

இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூர்ப்பனக வம்சம்

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

எலுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு சிறுசு
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு
தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்
கற்பக மொட்டு கற்பக மொட்டு கன்னி கழியட்டும்
வாங்க .. மச்சினங்க கொட புடிக்க மாப்பிள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கல்லு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

பட்டு வேட்டி அழகப் பாரு
பாவி மகனுக்கு அட ஒத்த ரூபா சந்தனம் எதுக்கு
ஓணான் முதுகுக்கு... இந்த ஒதவா மூஞ்சிக்கு .. போடா ..

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

மந்தை ஆடு மறுக்கை நூறு சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட மேய்க்க தானே மாப்பிள வந்தாக
இந்த மாப்பிள வந்தாங்க
காள மாடும் காராம் பசுவும் கட்டி வெச்சுருக்கோம்
அதுக போட்ட சாணி அள்ளத் தானே பொண்ண புடிச்சுருகோம் ..
இந்த பொண்ண புடிசுருக்கோம் ..

கூற சேல கொமரி கோவப் பழ சிவப்பு
நாவப் பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத சூர்ப்பபனக வம்சம்

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து



Friday, April 9, 2010

தமன்னாவோடு லுங்கியுடன் பிரியாணி


பையா படம் பார்த்தேன்... கார்த்தி நல்லா தான் நடித்து உள்ளார். இந்த படத்தின் நாயகி தமன்னா.. இவருக்காக தூத்துகுடியில் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டு கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் எல்லாம் நடைபெற்று இருக்கின்றதாம்... சீக்கிரமே கோவில் கட்டுவாங்களான்னு தெரியல.. ;-)) தமன்னா நடித்து நான் பார்த்த முதல் படம் ஆனந்த தாண்டவம்.. குரு சுஜாதாவினுடைய பிரிவோம் சந்திப்போம் நாவலைப் படமாக்கி இருந்தார்கள்.. அப்படத்த்தில் பார்த்த போதே அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது.. பையா பார்த்தும் ஏதும் மாற்றமில்லை.

வயாசியிடுச்சோ..;-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் ஷார்ஜாவில் லுங்கி கட்டி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாம்.. அப்படி சென்றவரை போலிசார் கைது செய்தும் இருக்கிறார்களாம்.. கைலி\லுங்கி என்றாலே வட நாட்டவர்கள் முதல் கொண்டு ஒரு இளக்காரம் தான் இருக்கும்.. ஷார்ஜாவில் இருந்த போது நான் இருந்த இடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ரோலா தமிழ் பள்ளிக்கு வெள்ளை லிங்கியோடு வரும் வழக்கம் இருந்தது....

மற்ற நாட்டவர்களின் ஆடைகளோடு ஒப்பிடும் போது லுங்கி ஒரு நல்ல ஆடையாகவே இருந்திருக்கின்றது... அது அந்த கலாச்சாரத்திற்கு எப்படி மாற்றமானதாக இருக்கும் என்று தெரியவில்லை... அரபுகள் அணியும் தோப் போன்ற அமைப்பில் தான் லுங்கியும் இருக்கின்றது..

அரை நிர்வாணமாகவும், தொடை தெரியும் சாட்ஸ்களுடன் திரியும் மேற்கத்திய கலாச்சாரவர்களின் ஆடைகளுடன் ஒப்பிடும் போது லுங்கி எவ்வளவோ பெஸ்ட்.

இது தொடர்பான டிபிசிடியின் பழைய சுட்டி ஒன்று.

கல்ஃப்நியூஸ் செய்தி.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பிரியாணி... ஊரில் இருக்கும் போது ருசித்துச் சாப்பிடுவது... வளைகுடா வந்த பிறகு ருசியான சாப்பாடு என்பது எட்டாக்கனியாத் தான் இருக்கும்... சில,பல ஹோட்டல்கள் இருந்தாலும் ஏனோ ஊரின் சமையல் ருசி வருவதே இல்லை... அதனால் சில சமயங்களில் நாமே களத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்படித் தான் இரு வாரங்களுக்கு முன்பு களத்தில் இறங்கி வழக்கம் போல் சக பதிவர்களிடம் உதவி கேட்டால் எல்லாரும் பயந்து ஓடி விட்டார்கள்... எல்லாம் பிரியாணி என்ற பெயரில் புளியோதரை செய்து கொடுமை செய்பவர்கள் போல் இருக்கின்றது.. பாவம் தங்க மச்சான்கள்.. .;-)))

நேற்று நானே களத்தில் இறங்கி விட்டேன்... மட்டனை கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு குக்கரில் ஏற்றி 8 விசில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். பின்னர் பட்டை, ஏலம், கிராம்பை சுட்ட எண்ணையில் போட்டு, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பின்னர் வெறும் கறியை போட்டு, அதில் அரிசியைப் போல் ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்னர் அரிசியைப் போட்டு (அரிசியை முதலில் வேக வைக்கவில்லை) நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் தம் போட்டோம்.

20 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து விட்டு அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டோம். நல்லா தான் இருந்தது.. முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))



இரவு பிரியாணி சாப்பிட்ட அனைவரும் இந்த பதிவு போடும் வரை நலமாகவே இருப்பதால் இனி அடிக்கடி பிரியாணி டெஸ்ட்டிங் செய்யலாம் என்று ஐடியா.

Friday, April 2, 2010

அங்காடித் தெரு என்ற பதிவுலக அங்கலாய்ப்பு

சமீபத்தில் வந்த அங்காடித் தெரு படம் குறித்து பதிவுலகம் முழுவதும் நிறைய பதிவுகள்.. அவைகளை எல்லாம் படித்து விட்டு படம் பார்த்த போது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.... சமூக அவலங்களை எடுக்கப்பதாக.. அதுவும் மூணு வருடமாம்... சொல்லி ஒரே சோகமயம்... முதன் முறையாக சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றது எனது எண்ணங்கள்..

இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.

இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.

இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..

# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?

. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(


இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க


Thursday, February 11, 2010

வேங்கையின் மைந்தன், Apocalypto, கீரைக்காரன்

கேட்டது.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.

ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.

இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


படித்தது:

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.

இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. பதிவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://www.scribd.com/document_downloads/24812602?extension=pdf
நன்றி : பிகேபி வலைப்பதிவு

இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.

இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.

இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.

வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.

மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பார்த்தது :

சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.

பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.

இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.


இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.

Friday, January 15, 2010

ஆயிரத்தின் ஒருவன் படத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்க வேண்டும்,.

பண்டைய தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. சேரர்களைப் பற்றி அவ்வளவாக நமக்கு தெரியலை. ஆனால் சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் நிறைய படிச்சி இருக்கோம்.பள்ளியில் பாடமாகவும், அதற்குப் பிறகு பழைய சினிமா படங்களாகவும், பின்னர் வரலாற்று நாவலாகவும் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.

இப்படி பல வழிகளில் மூவேந்தர்களைப் பற்றிய வரலாறுகளைப் படித்ததில் ஏனோ சில காரணங்களால் பாண்டியர்கள் வில்லன்களாகவே காட்டப்பட்டு இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஒருக்கால் எழுதியவர்கள் சோழ நாட்டினராகவும், சோழ மன்னர்களை மையமாக வைத்தும் எழுதுவதால் இருக்கலாமோ தெரியவில்லை.

எடுத்துக்காட்டுக்காகச் சொன்னால் பொன்னியின் செல்வனில் சோழ நாட்டின் வனப்பைச் சொல்லும் போதெல்லாம் ஒரு விதமாக பொறாமையே வரும். மலையே இல்லாத அந்த நாட்டின் காவிரி பாய்வதால் தான் இவ்வளவு வளமும் என்று இருக்கும். நம் பாண்டிய நாட்டைக் குறித்து இப்படிப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

அதே போல் சோழ மன்னர்களை வீராதிவீரர்களாகவும், பாண்டிய மன்னர்களை ஏதோ ஓடி ஒளியும் சோப்ளாங்கிகளாகவும் காட்டி இருப்பார்கள். இதுவும் எரிச்சலைத் தரும். எங்கள் மன்னன் வீரபாண்டியனை 18 வயசுப் பொடிப்பயல் ஆதித்த கரிகாலன் ஓட ஓட விரட்டிக் கொல்வதாக வரும் பொன்னியின் செல்வன் காட்சிகளில் எல்லாம் என் கோபம் உச்சத்தில் இருக்கும்.

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் நீதி தவறி கோவலனை தண்டித்து, கண்ணகி மதுரையை எரித்து எல்லாம் எங்களுக்கு எதிராகவே அமையும். எங்கள் கோட்டைக் கொடிகள் கூட கண்ணகி மதுரைக்குள் வரும் போது மதுரைக்குள் வராதே என்பது போல் மறித்து கை காட்டுமாம். என்ன ஒரு துரோக சிந்தனை இளங்கோவுக்கு




மந்தாகினி, நந்தினி வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மீதான பாசம் பீறிட்டு எழும். அதே போல் வில்லன்களாக காட்டப்பட்டு இருக்கும் ரவிதாசன் மீது எனக்கு என்னவோ எப்போதும் ஒருவித விசுவாசி போன்ற பரிதாபமே இருக்கும். ஆதித்த கரிகாலன் கொல்லப்படும் போது ஏனோ ஒரு குரூர திருப்தி(?) கிடைத்தது என்னவோ உண்மை தான்.

உண்மை வரலாற்றில் பாண்டியர்கள் தோற்று போய் சில காலம் கழிந்து சுந்தரபாண்டியன் காலத்தில் மீண்டும் சோழர்களை வென்றதாக வரலாறு கூறுகின்றது. நம்ம மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அதைத் தான் காட்டுகிறார்களாம். எம்.ஜி.ஆரின் கடைசிப் படம் அதுதான். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படப்பட்டியலில் வைத்துள்ளேன். இணையத்தில் கிடைக்கவில்லை.

அதே போல் அகிலனின் கயல்விழி நாவலும் இக்கதையைப் பற்றியே பேசுகின்றது என்று சொல்வதால் அதையும் வாங்க ஒரு சோழ நாட்டவரிடமே (ஆயில்யன்..ஹிஹிஹிஹி)சொல்லி அனுப்பியுள்ளேன்.

சமீபத்தில் ரிலீஸான செல்வராகவனின் ’ஆயிரத்தின் ஒருவன்’ படமும் சோழ, பாண்டியர்களின் பிரச்சினையின் நீட்சியாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிகின்றது. வீர பாண்டிய மரபில் பிறந்த ரீமா சென் எஞ்சி இருக்கும் சோழர்களைத் தேடிச் சென்று அழிப்பது தான் கதையாம். அப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது. விரைவில் கயல்விழி நாவலைப் படிக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்க்க வேண்டும்.

டிஸ்கி : சோழர்களின் மீது பொறாமை என்றால் சோழ நாட்டு மக்களின் மீதான வெறுப்பல்ல.. ஹிஹிஹி... அமெரிக்கா மீது வெறுப்பு என்பது அமெரிக்க குடிமக்களின் மீதான வெறுப்பல்ல என்பதைப் போன்றது. இதைப் புரிந்து கொள்ளலாம்.

...

Tuesday, August 11, 2009

பாரி ஒரு நிஜமான வள்ளலா? பா.கே.ப

கேட்டது:

இரண்டு நண்பர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. விவாதம் WI-FI எனப்படும் கம்பி இல்லாத இணைய தொடர்பு பற்றியது. இங்கு WI-FI தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான DSL மோடம்களில் ஒயர்லெஸ் வசதியும் இணைந்தே இருக்கின்றது.

WI-FI மூலம் பெரிய ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில், விமான நிலையங்களில் இலவசமாக இணைய இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகின்றது. அதே நேரம் ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விவாதம் பெரிய அளவில் WI-FI வசதியை அளிப்பதைப் பயன்படுத்துவதைப் பற்றி அல்ல. தனது சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். ஒருவர் “இலவசமாக நம்மைத் தேடி காற்றில் வருகின்றதைத் தான் பயன்படுத்துகின்றோம். ஊரில் கசியும் கேபிள் டீவி சிக்னலை பயன்படுத்திக் கொள்வது போல் தான். இதில் தவறேதுமில்லை” என்கின்றார்.

மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்.

இரண்டாமவர் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போனேன். மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது என்பதற்காக அதனுள் நுழைந்து திருடுவது போன்றது.

படித்தது….

சீரியஸா அதை யோசிச்சுக்கிட்டே இருங்க… நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கின்றேன். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து பின்னோக்கி வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா? நாம் இருக்கும் இடம் பறம்பு மலை என்று சொல்லப்படும் பிரான்மலை. மேலே தெரிகின்றதே அந்த கோட்டையில் தான் பாரி என்று சொல்லப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் இருக்கின்றார்.

மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். அதெல்லாம் கவைக்கு உதவாது... இருங்க.. ஏதோ சத்தம் கேட்கிறதே.. என்னது? அட ஆமா.. குதிரைகளின் கனைத்தல்களும், யானைகளின் கேட்கின்றனவா? பாரியின் இந்த பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம். நம்ம கணிணியை திறந்து இணையத்திற்குள் தேடலாம். இது பற்றி.. நம்ம கூடல் குமரன் ஐயாவோட உடுக்கை இழந்தவன் கை என்ற பாரியின் கதையைப் படிக்கலாம். இது புறநானூற்றின் ஒளியில் எழுதப்பட்டுள்ளது. அதில் கபிலர் இதைப் பற்றி என்ன சொல்றாருன்னா…

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே


இன்னா சொல்ல வருகிறார்ன்னா.. நீங்க மூவேந்தரும் என்ன செஞ்சாலும் இந்த மலையில் இருந்து அவர்களை கீழே வர வைக்க முடியாது. அதே போல் நீங்களும் இந்த மலை மேல ஏறிப் போய் போரிடவும் முடியாது. மலை முற்றுகை பட்டினிக்கும் வழி வகுக்காது. ஏன்னா இந்த மலையில் உழவர்களால் உழாமலேயே கிடைக்கக் கூடிய நான்கு உணவுப் பொருள் சுலபமா கிடைக்குது. 1. சிறிய இலையை உடைய மூங்கில் மரத்தில் வளர்க்கப்படும் நெல் 2. பலாப் பழங்கள் 3. வள்ளிக் கிழங்கு 4. தேன்.

இத்தோட முடிச்சிக்கலாம்… இப்ப என்ன பிரச்சினைன்னா வேற சில மேற்கோள்களில் முற்றுகையின் போது கபிலர் பழக்கப்படுத்த கிளிகளைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தானியங்களை கொய்து வரச் செய்து, உணவு உண்டாதாக வருது. நிறைய இடங்களில் இது மாதிரி படித்து இருக்கேன். கபிலரே தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த நான்கு வகை உணவுகளை வைத்து வாழ்கிறோம் என்று..

பாரி அள்ளி அள்ளித் தரும் வள்ளல். அவன் தனது கோட்டை மக்களுக்கு கிளிகள் திருடி வரும் உணவை எப்படி வழங்கி இருப்பான்? லாஜிக் உதைக்குதே… கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம். (கிளி மேட்டருக்கு தரவு இருந்தா கொடுங்க மக்களே)

கிளிகள் திருடி வருவது பாரியின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்ன்னு யாரும் ஜால்ஜாப்பு சொல்ல முடியாது. ஏன்ன அது பற்றி கபிலர் இப்படிச் சொல்கிறார்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"


அவனது ஆளுகையில் இருந்த 300 ஊர்களையும் ஏற்கனவே பரிசிலர்களுக்கு பாரி தானமாக வழங்கி விட்டான். மிச்சம் இருப்பது இந்த மலையும், நானும், பாரியும் தான் என்கிறார் கபிலர்.

கிளி மேட்டர் பலர் மேற்கோள் காட்ட படித்து இருக்கிறேன். இணையத்தில் தேடியதில் கிடைத்ததில் எடுத்துக்காட்டு இரண்டு.

http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_233.asp


http://www.dinamalar.com/siruvarmalar/smrjuly_0407/minithodar.asp


இது குறித்து தெரிந்தவர்கள் விளக்குங்கள்...

பார்த்தது:

லக்! (Luck)செம லக்குங்க.. உலகத்தில் சிலருக்கு தான் அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே அடிக்கும். அப்படிப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மோத விடுவது தான் படம். சும்மா ஜெட் வேகத்தில் போகுது. வழக்கம் போல நம்ம சஞ்சூ பாபா கலக்கி இருக்கார். சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் காட்டல.. ஆனா கலக்குறார். சும்மா குர்தா, பைஜாமா, கோட் போட்டுக்கிட்டு நடந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும்.



இம்ரான் கானுக்கு பதிலா வேற யாருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கலாம். சொதப்பிட்டார். ஸ்ருதி ஹாசன். நம்ம கமல் பொண்ணு. முக சாயலைத் தவிர வேற ஒன்னும் கமலிடம் இருந்து வரவில்லை. முக்கியமா நடிப்பு.

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை.

லக்கியின் விமர்சனத்தையும் படிக்கலாம்.

Tuesday, July 28, 2009

Tribute to Mohammed Rafi

பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.

நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.

அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.

முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.




நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !

ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.

* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.

* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.

ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.

நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?

ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.

பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.

* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.

அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.

அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.











இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.

...
...

Thursday, July 16, 2009

கையொப்பு - நம்மை நாமாக அறிய

"நம்மைப் போன்ற பலி மிருகங்களுக்கு
அவர்கள்
கடைசி உணவைப்
பரிமாறுகிறார்கள்
இரவு முடியும்போது

கொலைக்கத்தியின் கூர்மையில்

சூரியக்கதிர்கள் வெளிப்படுகையில்

துடித்துச் சாக நாமிருக்கக் கூடாது

எனது காதலே!

நாமிந்த இரவின் மறைவில்

பரஸ்பரம்
கொம்புகளால்
குத்திக்கொண்டு
சாகலாம் "

மொழி பெயர்ப்பு : ஆசிப் மீரான்

கையொப்பு.. ஒரு அழகான கவிதையை படமாக்கி இருக்கிறார்கள். வழி நெடுக உயிரோட்டமான காட்சி அமைப்பு.. என்ன சொல்ல.. படம் பார்த்தேன். முடிவின் மிரட்சியில் சில நிமிடங்கள் செயலற்று போக மட்டுமே முடிந்தது.




அறிமுகம் செய்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு நன்னிகள். அவரது படம் பற்றிய கருத்து இங்கு

எனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையையும், பரிதவிப்பையும் இன்னும் அதிகமாக்கி விட்டது என்று மட்டும் சொல்ல முடிகின்றது.

நாளைக்கு ப்ளஸ்ஸி(Blessy)யின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த bhramaram படம் பார்க்கப் போகின்றேன். இவர்களது கூட்டணியில் வந்த தன்மாத்ரா என்னுடைய ஆல் டைம் பேவரைட்... நாளைக்கு எப்படி மூடு இருக்கும் என்பது தெரியாததால் உடனடிப் பதிவு இது.

கையொப்பு டிவிடி பிரிண்ட்டில் பார்த்தேன்.. இங்கிருந்து 1.36 GB அளவு.

Wednesday, July 8, 2009

நாடோடிகளும், காதல் ஓடிகளும்


சமீபத்தில் பார்த்த படம் ‘நாடோடிகள்’. பலரும் பல கோணங்களில் யோசித்து இருக்கலாம். கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகம். பலத்த இழப்புகளுக்குப் பிறகு நண்பனின் காதலை ஒன்று சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கிறது.

காதல் என்பது அற்புதமான உணர்வு. காதல் என்ற வார்த்தைக்கு இன்றைக்கு சமூகம் கொடுத்துள்ள வியாக்கியானத்தில் நமக்கு உடன்பாடில்லை.

அது கல்யாணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில் அர்த்தமில்லை. காதல் என்பதை வரையறுத்துக் கட்டமைக்கும் வேலையை தமிழ் சினிமாவிற்கு நாம் கொடுத்து பல காலமாகி விட்டது. அது தனது தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றி மாற்றித் தருவதை நாமும் பே என்று ஏற்றுக் கொண்டு வருகின்றோம்.

உண்மையான நண்பனின் கடமை இதுவா? காதல் என்ற வியாதி வந்ததும் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள் யாரும் தேவையில்லையா? நண்பர்கள் உதவியதும் கூட்டிக் கொண்டு ஓடுவது தான் உண்மையான காதலா? உயிரைக் கொடுத்தாவது உங்களை சேர்த்து வைப்பேன் என்று குருட்டாம் போக்கா உண்மையான நண்பன் எவனும் சொல்ல மாட்டான்.

காதல் என்பது இன்றைய சினிமாக்களில் டீன் ஏஜ் பருவத்தில் ஏதோ சிறுநீர் கழிப்பது போல் கட்டாயமாகிப் போய் விட்டது. பள்ளி மாணவன் முதல் கொண்டு தனது ஆள் என்று யாரையாவது அடையாளம் காட்ட வேண்டியது இன்றைய கெளரவப் பிரச்சினைகளில் ஒன்றாகிப் போய் விட்டது. இந்த சூழலில் நாடோடிகள் போன்ற படங்கள் ஓடிப் போகும் கலாச்சாரத்தை வழியுறுத்துகின்றது போன்ற பார்வையை ஏற்படுத்துகின்றது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்களுக்கு மூளையும் இருப்பதில்லை. ஆம் காதலிக்கும் போது காதலன்/லி யின் பலவீனங்கள் எதுவும் கண்களுக்குத் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் நல்லவை மட்டுமே.. திருமணத்திற்குப் பின் வாழ்வின் அத்தியாசவசிய தேவைகளில் சிக்குண்டு திணறும் போதுதான் பலவீனங்கள் வெளிப்பட்டு காதல் என்ற நீர்க்குமிழி உடையும் போது வாழ்வும் சீர்கெடுகின்றது.

உண்மையான நண்பன் காதலர்களின் சமூக, பொருளாதார, மனோரீதியிலான விடயங்களை ஆராய்ந்து அவர்களால் மேற்கொண்டு எழும் சவால்களை எதிர்கொள்ள இயலுமா என்று சிந்திக்க வேண்டும். எந்த சவாலையும் சந்திக்க திறமில்லாதவர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்குவதை விட நண்பனின் இந்த காதல் என்னும் இனக்கவர்ச்சியை விட்டு அவர்களை விலக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது.

பொதுவாக தமிழ் சினிமாக்களில் வாழ்வின் ஒரு பகுதி தான் வழக்கமாகக் காட்டப்படும். காதல் படம் என்றால் காதலர்கள் இணைவது வரை மட்டுமே.. அதற்கு மேல் காட்ட இயலாது. அப்படியே காட்டுவதானாலும் அது ஹீரோயிச படமாகவோ, வி.சேகர், விசு வகை படங்களாகவோ தான் இருக்கும்.. இன்றைய வயதான ஹீரோக்கள் கூட அப்பா கேரக்டர்களில் நடிக்க விரும்புவதில்லை..

எனவே தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் மாயை ஒரு கானல் நீர் போலத் தான். உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள். அதில் தான் சுகமே உள்ளது. அப்படியே டீன் ஏஜில் காதல் வர வேண்டும் என்றால் உங்கள் மதத்தில், உங்கள் ஜாதியில், உங்கள் வசதிக்குத் தகுந்தாற் போல் காதலியுங்கள்.

ஆங்ங்ங்.. படத்தைப் பற்றி சொல்லலியே.. படம் எடுக்கப்பட்ட விதம் மிக அருமை.. ஒவ்வொரு கட்டமும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. காதல், பாசம், அன்பு, பெற்றோர் என அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

காதல் செய்ய நினைப்பவர்களும், காதலிப்பவர்களும், காதல் செய்யும் வயதில் அல்லது அந்த வயதுக்கு வரப் போகும் குழந்தைகள் வைத்திருப்பவர்களும் பார்க்க வேண்டிய படம்.

Thursday, June 18, 2009

‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்டர்... அண்ட் ஸ்பிரிங்’

சமீபத்தில் சென்னையில் பதிவர்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட கொரிய திரைப்படம் 2003 ல் வந்த கிம்-கி-டுக் இயக்கிய Spring, Summer, Fall, Winter and Spring. சென்னை பதிவர்கள் மட்டும் தான் பார்க்கனுமா... நாமலும் பாத்தாச்சு.

சிம்பிளான கதை : சாதாரண சீடன் குருவாக மாறும் கதை.. அவ்வளவு தான்.. படம் சுமார் 1:45 மணி நேரம் ஓடுகின்றது. படத்தில் பிரமிக்க வைத்தது ஒளிப்பதிவு. படத்தின் தலைப்புக்கு தகுந்தாற் போல் நான்கு கால நிலையிலும் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால நிலையும் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமான விஷயம்.. ஒவ்வொரு சீனுக்கும் அதற்குத் தகுந்தாற் போல் வெளிச்சம் வரும் வரை காத்துக் கொண்டு இருந்து எடுக்கப்பட்ட விதம்.. அற்புதம்.

படம் குறித்து நண்பர் பைத்தியக்காரன் @ சிவராமன் எழுதிய பதிவைப் படித்தால் கதையைப் புரிந்து கொள்ளலாம்.
http://naayakan.blogspot.com/2008/02/blog-post.html

கிம்-கி-டுக் குறித்து லக்கிலுக் எழுதிய பதிவு.

http://www.luckylookonline.com/2009/05/blog-post_6571.html

படத்தின் வசனம் ரொம்ப கம்மி. கடைசியில் அரை மணி நேரத்திற்கு படத்தில் வசனமே தேவையில்லை. கடைசியில் முழு வசனத்தையும் கொடுத்துள்ளேன். பொறுமையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







படத்தின் முழு வசனங்கள்.
Spring, Summer, Fall, Winter...And Spring...

00:01:13
Spring Wake up - Master! - Yes, my boy? Where do you want to go? I want to pick herbs for medicine Then let us go. Come along I'm going to pick herbs now, Master. Watch out for snakes. - Wait for me, Master. - Yes I've picked a lot of herbs, Master. Really? You've picked a lot? Careful! Stop! Throw this away, my child. Why? It looks the same, Even though it looks the same, this is a deadly plant. The other one can save lives. It still looks the same. How can I know? look closely. Here at the tip
you can see a white line. If you ate this plant, you'd die. You mustn't pick this sort of plant next time. - Is this one alright to eat? - Yes, this one is good. Master, there is a stone on my back. Please take it off. - Does it torment you? - Yes, Master Didn't you also do it to the fish? Yes, Master. Didn't you also do it to the frog?Yes, Master. Didn't you also do it to the snake? Yes, Master. Stand up! Walk around! I can't walk, it's too heavy. How do you think the fish, the frog and the snake endured it? It was wrong to do it, Go and find all the animals. and release them from the stones. Then I will release you too. But if any of the animals, the fish, the frog or the snake is dead, you will carry the stone in your heart, for the rest of your life.

00:21:05
Summer You look so very healthy. This tree is over years old. You will become as healthy as this tree. Greetings. Come in. Will she recover, wise one? I believe that her soul is suffering. When she finds peace in her soul, her body will return to health. Please take care of her! Excuse me! You are not allowed to sit on that. The master will be angry with you. Why are you praying all of a sudden? Would you like to come along? Softly! It must prepared with a true heart. Drink!It will clear your head. The boat is floating away! Stop it!
Stop it! Have you recovered now? Yes, I have completely recovered. Strange. When I can't see you, I go insane. What is wrong with me? Cold! It's cold! What shall I do? I did wrong, Master. Forgive me. That happens by itself. It is just nature. Are you still sick?No! Then it was the right medicine. Now that you have recovered, you can leave this place. No, Master! She can't! Lust awakens the desire to possess. And that awakens the intent to murder. Get in

00:51:23
Fall
That was tiring, huh?MAN, 30, FLEES AFTER MURDERING WIFE. You have grown a lot! Get in! So? Have you led a happy life up till now? Tell me something interesting about your life. The world of men has grown. agonizing for you, hasn't it? Leave alone, Master. Can you not see that I am suffering? What causes you to suffer? My only sin was to love. I wanted nothing except her. So? She went with another man. Ah, that was it. How can that be? She said that she'd love only me. - And then? - I couldn't bear it any more Didn't you know beforehand. how the world of men is? Sometimes we have to let go of things we like.
What you like, others will also like! But still, how could she do that? The bitch! - Is it so unbearable for you?- Yes!Master! Master! Young fool! Young fool!Though you can so easily kill, you yourself cannot be easily killed. Carve out all of these characters with the knife And while you cut out each one, drive out the anger from your heart. Holy one! Holy one!We've come to investigate something- Drop the knife! - Otherwise I'll shoot!What are you doing?
Continue cutting!Prajnaparamita Sutra. It helps restore inner peace. Please let him finish
How long will it take? Until tomorrow morning. - No connection b- No? It's quite a deep valley, isn't it? What?They make white paint from these mussels Stand up. It's time to go
Detective Choi, let's go as we are. Detective Chi, the boat won't go forwards. Ah, now it's moving

01:18:59
Winter


01:38:42
And Spring

Monday, March 16, 2009

யாவரும் நலம் - ரூம் போட்டு லாஜிக் பார்க்கும் பதிவர்கள்

சமீபத்தில் வெளிவந்த யாவரும் நலம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. ஒரு திகில் படம் அல்லது பேய்ப்படம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பேயோ, ஆவியோ படத்தில் ஒரு அரூபமாக காட்டப்படாதது என்பது சிறப்பு. இப்படத்தின் கதையைப் பற்றி நிறையப் பேர் விளக்கமாக பேசி விட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் லாஜிக் உதைப்பதாகக் கூறுகின்றனர்.



கதையைச் சுருக்கமாக பார்த்தால் மாதவன் மற்றும் குடும்பத்தினர் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ப்ளாட்டை வாங்கி குடி வருகின்றனர். அந்த வீட்டில் வரும் கேபிள் கனெக்‌ஷனில் மதியம் 1 மணிக்கு மட்டும் ஒரு வித்தியாசமான சீரியல் வருகின்றது. அது மாதவனின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னதாகவே காட்டுகின்றது. அண்ணனுக்கு ப்ரமோசன், தங்கை 12 அரியர்யஸை ஒரே நேரத்தில் பாஸாகுதல், மனைவி கர்ப்பம், கர்ப்பச் சிதைவு... இப்படி இன்னும் பல

ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர் கொலை செய்யப்படுவதைப் போல காட்சி வருகின்றது. வழக்கமாக நடப்பது போல் சீரியலில் வருவது போல் கொலை செய்யப்பட்டார்களா? கொலையாளி யார்? என்பதை திகிலுடன் சஸ்பென்ஸாக சொல்லும் கதை தான் யாவரும் நலம்.

சரி இதில் லாஜிக் ஓட்டைகளைப் பார்த்தால் டிவி சீரியல் இவர்கள் வீட்டில் மட்டுமே வருகின்றது. அதில் நடப்பது அனைத்தும் உண்மையில் நடக்கின்றது. இறுதியில் இறந்த பெண்ணே கரண்ட் இல்லாத வீட்டின் டிவியில் வந்து கொலையாளியுடன் உரையாடுகின்றாள்.

நமது மக்களில் இது போன்ற திகில், பேய், மர்மப் படங்கள் பற்றிய பொது புத்தியை இரண்டு விடயங்களில் அடக்கி விடலாம். முதலாவது உண்மையில் பேய்ப் படம். பேய் இருப்பதாக நம்ப வைத்து படக்கதையை எடுத்துச் செல்வது... இரண்டாவது பேய், ஆவி இருப்பது போன்று காட்சியமைப்புகளைக் கொண்டு சென்று இறுதியில் அது உண்மையில் இல்லை... மனிதர்களின் செயல்கள் தான் அவை என முடிப்பது.

முதலாவது வகையில் படம் ஆரம்பத்தில் இருந்தே பேயையும், அதை அழிக்கப் போகும் so and so கடவுள் அல்லது ஆசி பெற்றவர்களையும் காட்டி விடுவார்கள். அதற்குத் தகுந்தாற் போல் உடைகள், ஆட்டங்கள், கிராபிக்ஸ்கள் எல்லாம் களை கட்டி விடும். இரண்டாவது வகையில் நாம் எதிர்பார்க்க மாதிரி எல்லாவற்றையும் சஸ்பென்ஸாக காட்டி விட்டு இறுதியில் உண்மையை உடைப்பார்கள்.

யாவரும் நலம் இந்த இரண்டிலும் இல்லை. இரண்டாம் வகைப் படம் போல் காட்டப்பட்டாலும் இறுதியில் முடிவு வித்தியாசமாக இருக்கின்றது. விஜய், அஜித் போன்ற புனித பிம்பங்களின் நம்ப முடிய இயலாத சாகசங்களை கண்டு களிக்கும் நம்மால் இந்த புதிய முறையை ஜீரணிக்க இயலவில்லை. உண்மையில் நன்றாகக் கவனித்தால் அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர்களின் ஆவிகள் இருக்கின்றன. அவைகள் பழிக்குப் பழி வாங்க மாதவனைத் தேர்ந்தெடுக்கின்றன. இறுதியில் அதில் வெற்றியும் பெறுகின்றன.

இக்கதையைப் புதிய கோணத்தில் காட்டியுள்ளதில் தான் இயக்குநர் வெற்றி அடைகின்றார். அதே போல் பிசி ஸ்ரீராமின் கேமராவும், பின்னணி இசையும் அடவு கட்டி அடிக்கின்றது. படத்தை ரசிக்க வைத்ததில் இருவருக்கும் நல்ல பங்கு உள்ளது.

இன்னொரு விடயம்.. அந்த சீரியலில் நடந்தது முன்னால் நடந்தவைகளாக இல்லாமலும் இருக்கலாம். இனி நடக்கப் போகின்றவைகளை தெரிந்து கொள்ளும் ஆவிகள் அதை சீரியல் போல் டிவி மூலம் காட்டுகின்றன. மாதவனால் மட்டும் இதை சுலபமாக புரிந்து கொள்ள இயல்கின்றது. ஏனெனில் அவன் தான் ஆவிகள் சார்பில் பலி வாங்க வேண்டியவன். மற்றவர்கள் அதை சாதாரண சீரியலாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும் உண்மையான நிகழ்வு 1977 ல் நடப்பதாக உள்ளது. அதில் அண்ணன் தனக்கு ப்ரமோசன் கிடைத்துள்ளதாகவும், 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார். 1977 ல் 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் என்பதெல்லாம் நடந்திருக்கக் கூடியதே இல்லை.. அதே போல் 12 பாடங்களில் அரியர்ஸ் வைத்து இருக்கும் தங்கை ஒரே தடவையில் அனைத்துப் பாடங்களையும் பாஸ் செய்வது நடக்கக் கூடியதாக இல்லை.. அதுவும் 69.73 சதவீத மதிப்பெண்கள் பெற்று... மாதவன் நடப்பதை நம்ப வேண்டு மென்பதற்காக இதையெல்லாம் ஆவிகளின் வேலையாக உள்ளதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

டிஸ்கி 1 : எனக்கு இறந்தவர்கள் மீண்டும் ஆவியாக வருவார்கள் என்பதில் நம்பிக்கை சுத்தமாக இல்லை. மனிதன் தான் சாத்தானின் குணங்களுடன் நம்முடன் இருக்கிறான் என்று நம்புகின்றேன்.

டிஸ்கி 2 : படத்தில் சண்டைக் காட்சி இல்லை.. இரண்டு பாட்டு மட்டும் இருந்தது. வழக்கம் போல் பாடல்களை Skip செய்து விட்டேன். அப்புறம் அந்த சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் தந்தூரி சூப்பர் மேட்டருங்கோ... விவ(கா)ரமான டைரக்டருங்கோ

Thursday, February 26, 2009

ஜெமோவின் ”நான் கடவுள்” - விமர்சனமல்ல - ஸ்தல புராணம்


தமிழ் பதிவுலகில் நான் கடவுள் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனங்கள் வந்து விட்டன. எனவே இது விமர்சனப் பதிவு அல்ல.. ஆனாலும் ஒரு விடயத்தை மட்டும் தொட்டு விட்டு விட்டு சொல்கின்றேன். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டுவது வழக்கம். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல..

நான் கடவுள் படத்தில் நாயகியைக் கொண்டு செல்ல நாயர் வரும் போது காப்பாற்றப் படுகின்றாள். அப்போது சாமி காப்பாத்துங்க என்று ஓடுகின்றாள். இரண்டாவதாக ஒரு அலங்கோலமானவன் வரும் போது வேறு மத (கிறித்தவ) தெய்வத்தை வேண்டுகின்றாள். அப்போது அவளுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் சிதைக்கப்படுகின்றாள். இதன் நுண்ணரசியல் பற்றி ஒரு பதிவர் எழுதி இருந்தார்.

இந்த காட்சியைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இன்னொன்று சிலகாட்சிகள் வெட்டுபட்டுள்ளன. அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளை கொடுக்கும்படிக் கோர முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ்கூட்டம் இல்லைஎன்று கன்யாஸ்திரீ சொல்ல அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்தகாட்சி அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.”


இந்த காட்சி மட்டும் வைக்கப்பட்டிருந்தால் “ஜெயமோகனின் குடுமி அவிழ்ந்து விட்டது.. நன்றாக இழுத்து கட்டிக் கொள்ளுங்கள்” என நாறடித்து இருப்பார்கள் தானே.. சரி.. சரி... நமக்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம். நாம வேற பார்க்கலாம்.

படத்திற்கு நிறைய செலவானதாக படிக்க முடிந்தது. காசி, அந்த கரடு, மற்றும் பள்ளத்தில் இருக்கும் கோவில், குளிக்கும் மற்றும் சண்டை நடக்கும் கும்பக்கரை அருவி என்று நான்கு இடங்களே அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. இதில் படமாக்குவதற்கா இவ்வளவு செலவானது என்று ஆச்சரியமா இருக்கின்றது... என்னவோ .. இருக்கட்டும் பாலாவுக்கே வெளிச்சம்.

இந்த படத்தை விடுமுறை முடிந்து வந்ததும் வேகமாக பார்த்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு... ஒரு காட்சி எங்கள் கடைக்கு முன் படமாக்கப்பட்டு இருந்தது தான். குருட்டுப் பெண்ணை( நாயகி பூஜா) ஒரு கிழவன் கை பிடித்து பிச்சை எடுக்க அழைத்துச் செல்வது போன்ற காட்சி தான் அது. யாருமே உணராத வண்ணம் அந்த காட்சி தத்ருபமாக எடுக்கப்பட்டது. எடுத்து முடித்ததும் படப்படிப்பு நடந்தது தெரிந்தது. ஆனால் அந்த காட்சி படத்தில் வரவே இல்லை.. ஏமாற்றம்.

காசிக்கு நாம போனதில்லை. அதனால் அது தெரியாது. அந்த பள்ளத்தில் உள்ள கோவில் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் எடுக்கப்பட்டதாம். நன்றாக எடுத்துள்ளார்கள்.

மலையில் உள்ள கோவில் எடுக்கப்பட்ட இடம் நமக்கு ரொம்ப பரிட்சயமான இடம். அதன் அடிவாரத்தில் தான் எங்க தீப்பெட்டி ஆபிஸ் இருந்தது. (சிறு தொழில் வளர்ச்சி வாரியம் அதிகாரிகளின் திருட்டுத் தனத்தால் நஷ்டமடைந்ததெல்லாம் எங்கள் கண்ணீர்க் கதை. இன்றும் குட்டிச்சுவர்களாக கட்டிட எச்சங்கள் இருக்கின்றன.) சின்ன வயசில் அந்த பகுதிகளில் எல்லாம் சுற்றித் திரிந்தோம். எனவே அந்த கோவில் ஒரு புதிய அனுபவத்தைத் தரவில்லை. அந்த கரட்டுக்கு மக்கள் போக்குவரத்து கூட இருக்காது... இப்போது வேண்டுமானால் இருக்கலாம்... ஏனெனில் சினிமா எடுக்கப்பட்ட இடமாக இருப்பதால்..:) அந்த அருவி மற்றும் தண்ணீர்ப் பாறைகளும் அடிக்கடி வழுக்கி விளையாடி இடம் தான்.

டிஸ்கி : இப்போது தான் ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். இதை மூலமாக வைத்து தான் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.. படித்து விட்டு மீண்டும் பேசலாம்.

(அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;) )

Friday, December 5, 2008

"பூ ”வும் வாரணம் ஆயிரமும், மறுவீட்டுக்கு போன கதையும்

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு முழு தமிழ் படமாக போன வாரம் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். படம் பார்த்தால் விமர்சனம் எழுதனும் என்று நினைப்பதில்லை. ஆனால் சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;) . சூர்யா தனது காதலிக்காக கடுமையாக உழைத்து இரண்டே ஆண்டுகளில், வீட்டுக் கடன் எல்லாவற்றையும் அடைக்கின்றார். அதை அடுத்து தனது காதலியைத் தேடி அமெரிக்காவிற்கும் செல்கின்றார். கொஞ்சம் லூசுத்தனமா இருக்கோ? எனக்கு இதெல்லாம் லூசுத்தனமா இல்ல.... அதே மாதிரி நமக்குள்ளயும் ஒரு காலத்தில் நெருப்பு இருந்துச்சு..

கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல... சினிமாவுக்கு தான் ஒரு பாடலில் எல்லாம் இம்புட்டு பணம் சம்பாதிக்க முடியும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு தான் டீசண்டாவே இருக்கக் கூடாதோ?..;))))



படம் நன்றி : http://www.sameerareddy.info/
*****************************************************************************

வரும் 7 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை உள்ளது. விடுமுறைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் எதாவது படம் பார்க்கலாம் என நினைத்து ’பூ’ பதிவிறக்கினேன். (இந்த நாட்டில் திரையரங்கம் இல்லாததால் வேறு வழி இல்லை. மன்னிக்கனும்). ஏனோ நேற்று வார இறுதி என்பதால் இந்த படத்தை நேற்று இரவே பார்த்து விட்டேன்.

நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். ஒரு திருமணமான பெண்ணின் பழைய காதலை சொல்லும் முயற்சி இது. நல்லா இருக்கு...:)

***********************************************************

மகனுக்கு இரண்டு வயது, இரண்டு மாதம் முடிந்துள்ளது. வீட்டுக்கு தொலை பேசும் போது அவ்வப்போது பேசுவான். தங்கமணி சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்வான். அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்.

அழகாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வான். அத்தா நல்லா இருக்கீங்களா என்று கேட்பான். நல்ல மூடில் இருந்தால் குல்குவல்லாகு அஹது (திருக்குர்ஆனின் ஒரு பகுதி) சொல்வான். சில நேரங்களில் அல்லாஹூம்ம ரப்பனா ஆத்தினா (பிரார்த்தனை) சொல்வான். தூங்குவதற்கு பெட் சென்றதும், அவனாகவே ”அல்லாஹூம்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” என்று சொல்லி விடுவானாம். (தூங்குவதற்கு முன் சொல்வது)

நேற்று போனை அவனிடம் கொடுத்ததும் அவனாகவே “அத்தா, உடம்பை பார்த்துக்கங்க. அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்லிட்டு தங்கமணியிடம் போனைக் கொடுத்து விட்டு போய் விட்டான். போன் பேசி முடிக்கும் போது இதே வார்த்தைகளைக் கூறுவது தங்கமணியின் வழக்கம். அதை அப்படியே கவனித்து சொல்லி விட்டான். ஏன் என்றால் தலைவர் விளையாட்டில் பிஸியாக இருந்தாராம். அதனால் பேச்சை விரைவாக முடித்து ஓடுகின்றாராம்....:))

*****************************************************************************

கல்யாணம் ஆன சில தினங்களில் மறுவீடு செல்வது எங்கள் பகுதி வழக்கம். திருமணம் முடிந்தது முதல் முறையாக தம்பதியர் இருவரும் பெண்ணின் வீட்டுக்கு செல்வது மறுவீடு. திருமணமான மூன்றாம் நாள் நானும் மறுவீடுக்கு சென்றேன். ஏற்கனவே பெண் பார்ப்பதற்காக சென்று இருந்ததால் எனக்கு ஊர் புதிதாக இல்லை. (நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )

முஸ்லிம்களின் வழக்கத்தில் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க இயலாது. ஆனால் நாங்கள் உண்மையான இஸ்லாமிய முறையைப் பேண வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் என்பதால் பெண் பார்க்க சென்றோம். ... சரி அந்த கதையெல்லாம் வேறு ஒரு நாள் சொல்லலாம். இப்ப வேற ஒன்னு சொல்கிறேன்.

மறுவீடு சென்றதும் வீட்டில் கோழிக் கறி எடுத்து பிரியாணி. 11 மணிக்கே வாசனை மூக்கைத் துளைத்தது. கிச்சனை நோட்டம் விட்ட போது கோழிக் கால் கூட பொரிப்பது தெரிந்தது. மதியம் தொழுகைக்குப் பின் சாப்பிட அமர்ந்தோம். சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டனுடானுட்டு உட்கார்ந்து இருக்கேன். அருகில் இருந்த மச்சானும்(தங்கமணியின் சகோதரர்), தங்கமணியும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நான் டிவியைப் பார்த்துக் கொண்டே அடுக்களையையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன். தங்கமணியும் ’சாப்பிடுங்க’ என்று வழியுறுத்த ’சூடா இருக்கு’ என்று சொல்லி வைத்தேன். நேரமாகிக் கொண்டே இருந்தது. பிரியாணியும் ஆறத் துவங்கி இருந்தது. நானும் எம்புட்டு நேரம் தான் பசிக்காத மாதிரி நடிக்கிறது?.... நைஸா தங்கமணியிடம் கேட்டேன்.

“ பிரியாணி இருக்கு... ஆனா ஊத்தி தின்ன தால்ச்சா, பருப்புக் கறி(தால்) எதுவும் இல்லியே?” அதுக்கு தங்கமணி “ எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள். ஒரு வெங்காய சட்னி கூட இல்ல...:( என்னயா இது நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் என்ன சுவையான பிரியாணியை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதாப் போச்சுது.. இப்பவரை தங்கமணி இதைச் சொல்லி கலாய்ப்பது உண்டு...:)))

அதற்குப் பிறகு நான் சென்றால் நாங்கள் சாப்பிடும் ஸ்டைலிலேயே சமையல் செய்கின்றார்கள்.
( நானானிம்மா, ராமலக்ஷ்மி அக்கா கவனிக்க : சொதி, அடை எல்லாம் இதுவரை அங்க செஞ்சு தந்ததே இல்லீங்க...:( ;))) )

Saturday, October 25, 2008

Doctor Zeenath! ஒரு ஈரானிய படத்திற்கான கதையும், என் விமர்சனமும்


சென்ற வாரம் ஒரு ஈரானிய படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உருது மொழிபெயர்ப்பில் படம் இருந்ததால் புரியவும் செய்தது. கதை வித்தியாசமானதாகவெல்லாம் இல்லையென்றாலும் ஒரு சுவாரஸ்யத்தோடு இருந்தது. படம் பெயரும் தெரியவில்லை. எழுத்து(டைட்டில்) பாதியில் இருந்து தான் பார்த்தேன். அது ஒரு மணல் பாங்கான மீனவ கிராமம். மக்கள் கடல் தொழில் செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர். நகரிலிருந்து ஒதுக்குப் புறமாக இருப்பதால், போக்குவரத்து வசதி இல்லை. அதே போல் மருத்துவமனை வசதியும் இல்லை. அவசரம் என்றால் கூட அடுத்துள்ள நகரத்திற்குத் தான் செல்ல வேண்டும்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜீனத் என்ற இளம்பெண், மருத்துவருக்கு படித்து அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கின்றாள். ஜீனத் நல்ல திறமை மற்றும் ஆர்வமுள்ள பெண் என்பதால் தனது நோயாளிகளை கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். அந்த கிராமத்தினரும் ஜீனத்தை மிகவும் மதிப்புடன் நடத்துகின்றனர்.

ஜீனத் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை விரும்புகிறாள். அவனும் ஜீனத்தை விரும்புகிறான். இரண்டு வீட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனாலும் இதற்கு ஒரு தடை வருகின்றது. அது ஜீனத் செய்யும் மருத்துவத் தொழில்.

தனக்கு வரக்கூடிய மருமகள் வீட்டு வேலைகள் செய்தால் போதும், வேலை எல்லாம் செய்யக் கூடாது, அது கெளரவத்திற்கு இழுக்கு என்பது மாமியாரின் எண்ணம். திருமணம் செய்யும் வீட்டார்கள் இவ்வாறு சொல்வதால் ஜீனத்தின் பெற்றோர்களும் அவள் வேலைக்கு போவதை விரும்பவில்லை.

ஜீனத்தின் தாய் தடுத்தும், அவளது தந்தை ஜீனத்தை மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்று தடுக்கிறார். அதை மீறி மருத்துவமனைக்கு சென்றதால் கோபமுற்று அவளை வீட்டுக்குள் அடைத்து விடுகிறார். பின்னர் மருத்துவர் தொழிலை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணம் நடக்கிறது.

ஜீனத் தன் கணவனுடன் இருக்கும் ஓர் இரவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. அந்த சிறுமியின் தாய் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டி ஜீனத்தை தேடி வருகிறாள். கணவனும், மாமியாரும் தடுக்க அதை மீறி அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய விரைகின்றாள்.

கணவனும் அவளைப் பிந்தொடர்கின்றான். மூச்சுத் திணறலில் இருக்கும் அந்த சிறுமியை ஜீனத் காப்பாற்றி நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்புகிறாள். இதுதான் படம்.

ஜீனத்தாக நடித்து இருக்கும் பெண் அழகாக தனது உணர்வை முகத்திலியே பிரதிபலிக்கிறார். நோயாளிகளுடன் கனிவாக பேசும் போதும், பெண் பார்க்கும் போது வெக்கப்படுவதிலும் ஜீனத்தாக நடித்தவர் மிளிர்கின்றார்.

தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்த பிறகு இரவில் இருட்டில் அமர்ந்து கொண்டு கதறி அழும் காட்சி உருக்கம். அறையின் ஜன்னல் வழியே வெளியே சென்று கொண்டு இருக்கும் ஒரு பெண்ணிடம் தனது நோயாளிகளைப் பற்றி விசாரிக்கும் காட்சியில் உண்மையான ஒரு மருத்துவர் தெரிகின்றார்.

கணவனும். மாமியாரும் மரணத்தின் பிடியில் இருக்கும் சிறுமிக்கு மருத்துவம் செய்ய செல்லக் கூடாது என்று சொல்லும் காட்சியில் அவர்களை எதிர்த்துக் கொண்டு மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு என்று எகிரும் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.

சிறுமிக்கு சிகிச்சை செய்யும் போது கணவனை சத்தம் போட்டு துரிதப்படுத்தும் காட்சி நல்ல உணர்வைத் தருகின்றது.

அந்த சிறுமியின் சுவாசத்திற்காக குரல்வளையில் கத்தியைக் கொண்டு ஓட்டை போட்டும் போது ஜீனத்தின் முதிர்ச்சியும், அதைக் காண முடியாமல் நடுக்கத்துடன் தலையை திருப்பிக் கொள்ளும் கணவனும் கவர்கின்றனர்.

மாமியாராக நடித்தவரின் பரிதவிப்பான நடிப்பும், தனது மகளுக்காக கலங்கும் ஜீனத்தின் தாயும், ஜீனத்திற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று தவிக்கும் அதே நேரத்தில் அவளை அறையில் அடைத்து வைக்கவும் தயாராகும் தந்தையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த படம் மூன்று இடங்களில் என்னை ஏமாற்றி விட்டது.
இடம் 1 :
ஜீனத்தைப் பெண் பார்க்க வரும் காட்சி. ஜீனத்தின் வெட்கத்தில் அறைக்குள் குனிந்து கொண்டு அமர்ந்து இருக்க அவரது அம்மா, வெட்கப்படாமல் சென்று தேநீர், பலகாரம் தருமாறு கூறுகிறார். அப்போதையே காட்சி ஜீனத் செல்லும் போது ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுகின்றது. ஆனால் அப்படி ஏதும் ந்டக்கவில்லை. அனைவருக்கும் சலாம்(முகமன்) கூறி விட்டு,தேநீ்ர் கொடுத்து நல்லமுறையிலேயே திரும்புகின்றாள்.

இடம் 2 :
மாமியார் மற்றும் கணவனை அந்த இரவில் எதிர்த்து விட்டு, அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். உடனே கணவன் மற்றும் மாமியார் அவளை விலக்கி வைக்க, ஒரே பாட்டில் அவள் ஒரு மொபெட்டுடன் கிளம்பி பெரிய மருத்துவராக மாறி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெல்லாம் ஏதும் நிகழவில்லை.

இடம் 3:
அந்த சிறுமிக்கு தொண்டைக் குழியில் ஓட்டை போட்டு மூச்சுத் திணறலில் இருந்து காப்பாற்றி மேல் சிகிச்சைக்காக நகரத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அந்த ஊரே திரண்டு ‘நீதாம்மா இந்த ஊரை வாழ வைக்க வந்த தெய்வம்” இப்படி ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவும் நிகழவில்லை.

நான் ஏன் இப்படி எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டும். எல்லாம் நம்ம தமிழ் சினிமாவில் லாஜிக்களைப் பார்த்து பார்த்து கெட்டுப் போனதால் இருக்குமோ?

இப்படியெல்லாம் இந்த ஈரானிய திரைப்படத்தைப் பார்த்து திரை விமர்சனம் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த படம் திருப்தி அளிக்க வில்லை. ஒரு நல்ல படத்தை விமர்சிப்பதற்கு முன் இது போன்று ஒரு மாதிரி விமர்சனம் எழுத நினைத்தேன். எழுதி விட்டேன். ஆனாலும் இப்போது பார்க்கக் கிடைக்கும் படங்கள் எல்லாம் திருப்தி இல்லாமலேயே இருக்கின்றன. இது ஒன்லி சாம்பிள் தான். விரைவில் அப்படி ஒரு நல்ல படம் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

Wednesday, October 15, 2008

சினிமா - எனக்கு பிடிக்காத வார்த்தையா போச்சுப்பா

நாகார்ஜூனன் ஆரம்பித்து வைத்த இந்த சினிமா பற்றிய தொடர் விளையாட்டு ஆயில்யன் வழியாக நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இனி கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். நல்லா இருந்தா மதிப்பெண்களைத் தாராளமாக போடுங்க... இல்லைன்னா திட்டி விட்டாவது போங்க..... ;)

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

4, 5 வயதில் பார்த்த இளமைக் காலங்கள் இன்னும் நினைவில் உள்ளது. எங்கள் ஊருக்கு வெளியே மலை மேல் ஒரு தர்கா இருக்கும். அங்கு ஏதோ விசேசம் என்று எனது பாட்டி, அத்தையுடன் சென்று திரும்பினோம். வரும் வழியில் ஒரு திரையிரங்கில் இளமைக்காலங்கள் படம் பார்த்தோம். அப்போதெல்லாம் அது நினைவில் இல்லை. ஆனால் ஈரமான ரோஜாவே பாடலில் வரும் குழந்தையும், அந்த ரோஜாப்பூ போட்ட சட்டையும் பல ஆண்டுகள் நினைவில் இருந்தது. சமீபத்தில் இளமைக் காலங்கள் பாடல் பார்த்த போது தெளிவாகி விட்டது.

நினைவு தெரிந்து பார்த்த படம் மிஸ்டர் பாரத்! வத்தலகுண்டு கோவிந்தசாமி தியேட்டரில் அத்தை, மாமாவுடன் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. நடிகர்கள் திரைக்குப் பின்னால் இருந்து நடிப்பார்கள் என்று நினைத்தேன்.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன். 1998 க்குப் பிறகு துபாய், சார்ஜாவில் இருந்த போது துபாய் சினிமா, தேரா சினிமா, நாசர், மற்றும் சார்ஜா கான்கோர்ட், ஹம்ரா போன்ற திரையரங்கிற்கு அருகில் எல்லாம் வேலை செய்த போதும் சினிமா பார்க்கும் ஆசை வரவில்லை.

திருமணத்திற்கு பின் தங்கமணியுடன் பார்த்த முதல் படம் என்ற காலத்தில் Nil தான் இருக்கும். இனியும் திரையரங்கிற்கு சென்று சினிமா விருப்பம் எனக்கோ, தங்கமணிக்கோ வரவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக தசாவதாரத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் இணையத்தில் பதிவிறக்கிப் பார்த்தேன். வித்தியாசமான களத்தில் நமது பழைய வாழ்க்கையைக் காட்டிய விதம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.

குசேலன், சரோஜா போன்ற படங்களை பதிவிறக்கிப் பார்க்க வசதி இருந்தும் இதுவரைப் பார்க்கவில்லை.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

கடந்த பத்து வருடமாக விரும்பி படம் பார்க்காததால் அதன் தாக்கம் இல்லை. ஆனாலும் சில பாதித்த படங்களை சுட்ட இயலும். அதில் முதலிடம் வகிப்பது சத்ரிய வம்சம் என்ற மம்முட்டி படம். பாசத்திற்கும், பழி வாங்கும் வெறிக்கும் இடையேயான போராட்டம் தான் கதை. உருகிப் போய் பார்த்தேன். ஆனால் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்பதால் தமிழ்ச்சினிமா என்ற வகையில் வருமா என்று தெரியவில்லை.
முதல் மரியாதையின் ஒவ்வொரு பிரேமும் ரசித்து பார்த்து உருகுப் போனேன். பாரதிராஜாவின் திறமைக்கு சான்று அது. மற்றபடி காதல் ஓவியம், காதலுக்கு மரியாதை, சேது, தில்லானா மோகனாம்பாள், மூன்றாம் பிறை போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியவை.

பாலச்சந்தர், ஸ்ரீதர் வகைப் படங்கள் என் காலத்தில் முடிந்து போய் இருந்ததால் அவைகளைப் பார்த்த போது ஈர்ப்பு ஏற்படவில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்மை தாக்கும் அளவுக்கு எந்த சம்பவமும் நடந்ததாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரஜினியின் அரசியல் ஸ்டண்ட்களால் நொந்து நூலாகிப் போனது என்னவோ உண்மை தான்.. :( (தலை.. இன்னைக்கு வரை நொந்து போகத்தான் வைக்கிறார் என்பது கசக்கும் உண்மை)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இதைத் தொழில்நுடபம் என்று கூற இயலுமா என்று தெரியவில்லை. முகபாவத்தைக் கொண்டு, காட்சியை விளக்கும் திறமை. இது மற்ற மொழிகளில் குறைவு என்றே சொல்வேன். வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் விரக தாபத்தை ஒரு பாடலில் (அழகு மலராட) காட்டி இருப்பார் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். வேறு எங்கும் இவ்வளவு கண்ணியமாக இதைக் காட்டியதாக பார்க்கவில்லை. (இன்று அதே காட்சி கிடைத்தால் கிடைச்சதுடா சான்ஸ்! என்று முக்கல்,முனகலுடன் ஒரு பாடல் இருக்கும் என்பது உண்மை)

அபூர்வ சகோதரர்களின் கமலில் குள்ள அப்பு மாயை. இன்னும் உடையாத வித்தியாசமான முயற்சி!


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஹிஹிஹி.. கிசுகிசுக்களை விடாமல் வாசிக்கும் வழக்கமுண்டு. வாரமலர், குமுதம், ஆன்ந்த விகடன் போன்றவற்றில் வரும் சினிமா துணுக்குகளைப் படிப்பேன். இப்போது இணையத்தில் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை. ஆனால் திரைவிமர்சனங்களைப் படிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசையில் அவ்வளவாக ஆர்வமில்லையென்றாலும். இசையில்லாத, அல்லது குரலுக்கு அதிக முக்கியத்துவமுள்ள பாடல்களைக் கேட்பேன். இளையராஜா பாடல்கள் தான் அதிகம் விருப்பமுள்ளவை. அறையில், வீட்டில் பாடல்களைக் கேட்கும் வழக்கம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் அல்லது தனிமை வாட்டும் நேரங்களில் செல் போனில் இருக்கும் சில பாடல்களைக் கேட்பேன். அதுவும் குறிப்பிட்ட சில பாடல்கள் தான் பேவரை லிஸ்ட்டில் இருக்கும். (சமீபத்தில் பேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்த பாடல்)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மொழியே தேவைப்படாத பல மொழிப்படங்களையும் வளைத்து, வளைத்து பார்த்த காலம் உண்டு. பிற மொழிப்படங்கள் என்றால் அதில் இந்தி. மலையாளம் முக்கியத்துவம் வகிப்பவை. இந்தி படங்களில் ஷோலே, மதர் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் மலையாளத்தில் மோகன்லால் படங்களை விரும்பிப் பார்ப்பேன். Life is Beautiful என்ற படம் ரசித்து பார்த்தது.
நல்லவேளை இந்த படத்தை ரீமேக் செய்ய வாசுக்கள் இல்லை போல. தப்பித்தது.

ஆங்கிலப்படங்கள் பார்க்கும் வழக்கம் இருந்தால் அதிகம் தாக்கிய படம் டைட்டானிக் தான். சென்னையில் படித்துக் கொண்டு இருந்த போது, கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு வகுப்பில் இருந்த 30 மாணவர்களில் 17 பேர் AVM ராஜேஸ்வரியில் முன்பதிவு செய்து கலக்கலாக பார்த்தோம். மறுநாள் எங்கள் பிரின்சிபால் தாக்கிய தாக்கில் நிலைகுழைந்து போய் விட்டோம். (வார்த்தையில் தான்... அடியெல்லாம் விழலை)

வியாழக் கிழமைகளில் ETV - Urdu வில் ஈரானியப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். இப்போது வேலை நேர மாற்றத்தால் முடிவதில்லை. என்னை மிகமிக பாதித்த படம் Children of Heaven. அந்த திரைப்படம் முழுவதும் எடுத்து போட்டு, ஒரு இடுகையே இட்டுள்ளேன். விரும்பியவர்கள் பார்க்கலாம். http://majinnah.blogspot.com/2008/02/video-children-of-heaven-full-movie.html

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

பத்து வருடமாக திரையரங்கிற்கே செல்லாமல் இருப்பது தான் சாதனை. நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. தொடர்பு ஏற்படும் வாய்ப்பு கிடைத்தாலும் நிராகரிப்பேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாகார்ஜூனன் ஸ்டைலிலேயே அடுத்த கேள்விக்கு தாவுங்கள்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியடைவேன். லாட்டரி தொழிலாளர்கள் வேறு தொழில்களில் போய் செட்டில் ஆனது போல், சினிமா தொழிலாளர்களும் வேறு வேறு வேலைகளில் போய் விட்டால் மிகவும் மகிழ்வேன். அதோடு மெகா சீரியல்களுக்கும் மொத்தமாக தடை போட்டு விட்டால் தமிழர்கள் மாயையான வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள்.

வாசுக்களும் பேரரசுக்களும், நமீதா, திரிஷாக்களெல்லாம் ஒழிந்து போய் புது சினிமா உலகம் பிறக்க வேண்டும். ஹீரோயிஷம், மார்க்கெட் சண்டை, தங்கை, அம்மா செண்டிமெண்ட், குலுக்கு டான்ஸ், உடல் அரசியல் இல்லாத புதிய பரிணாமத்தில், சமூகத்தோடு இயைந்த, சமூக அவலங்களைக் காட்டக் கூடிய படங்கள் வரத்துவங்கினால் மகிழ்வேன்.

டிஸ்கி : தங்கமணிக்கு சினிமா, சீரியல்கள், பாடல்கள் பார்க்கும் வழக்கம் இல்லை. ஊரில் இருந்தால் ஒளிந்து, ஒளிந்து தான் ஏதாவது சினிமா தொலைக்காட்சியில் பார்ப்பேன்.. ;)) கிரிக்கெட், செய்தி, டாக்குமெண்ட்ரிகள் மட்டுமே பார்க்க அனுமதி இருக்கு.

இந்த தொடர் விளையாட்டைத் தொடர நான் அழைப்பவர்கள்
(விருப்பமும், நேரமும் இருந்தால் மட்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கண்டிப்பா எழுதியே ஆகனும்.. ஆமா சொல்லிப்புட்டோம்)

1. பாசக்கார தங்கச்சி அம்மு @ மது...
2. அன்பான அக்கா ராமலக்ஷ்மி
3. பிரியமுள்ள அண்ணன் பாரதி
4. சினிமா சுரங்கம் கானா பிரபா அண்ணன்
5. அன்பு சகோதரர் தமிழன்....
6. சுடர் என்னும் கொஞ்ச நல்ல அன்புத்தம்பி


Friday, September 12, 2008

பாதியில் ஓடி வந்த சினிமாக்களும், கலவையான சிந்தனைகளும் - 12 - 09 - 2008

.
கலவை 1


ஐரோப்பாவின் ஒரு பகுதியில் அணு ஆராய்ச்சியாளர்கள் பலர் இணைந்து Large Hadron Collider (LHC) என்னும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ தூரத்தில் - 270 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இணைவது போல் வட்டமான பாதை அமைத்து குழாய்கள் மூலம் இரு வேறு திசைகளில் புரோட்டான் கதிர்களை செலுத்தி அவை இரண்டும் அடிமட்ட இடத்தில் சந்தித்து வெடித்துக் கொள்ள செய்யும் ஆய்வு இது. இயற்பியல் துறையில் மிகப் பெரிய ஆய்வாகக் கருதப்படும் இந்த ஆய்வின் மூலம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதாரங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பெருவெடிப்புக் கொள்கை என்பதை நாம் இருக்கும் பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியன் இவை போல் உள்ள அனைத்து பால் வெளி மண்டலங்களில் உள்ள சூரியன்களும், கோள்களும் ஒரு பெரிய மூலத்தில் வெடித்து பிரிந்தவை என்பதே...

அதாவது 'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

இந்த புரோட்டான்களின் மோதலால் விளையும் விளைவுகளைக் கொண்டு பெருவெடிப்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் எனக் கருதப்படுகின்றது... ஆனால் இதன் மூலம் உயிரிகளின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி நான் இதன் மூலம் உணர்ந்து கொள்வது இதுதான்...

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'
-குர்ஆன் 41:10,11

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? -குர்ஆன் 21:30

வானம் என நாம் சொல்லும் பரந்த வெளி உள்ளிட்டவைகள் பெரு வெடிப்பு மூலம் உருவானவை என்றே நம்பப்படுகின்றது... வானம், பூமி போன்ற கோள்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புகை மண்டலம் போன்றதில் இருந்து வெடித்தே உருவானவை என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

பால் வெளியில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் கூறுகின்றது.

இன்னும் விளக்கினால் வானம் என்பது ஒரு வெற்றிடம் அல்ல.. அது ஒரு காலியிடமும் அல்ல... திண்மமான பொருள் என்பது தான் பொருள் எனபது அல்ல. அண்டவெளியே ஒரு விதமான ஊடகம் தான்... :)... புரிகின்றதா?... ;)

நன்றி : சுவனப் பிரியன், விஞ்ஞானக் குருவி

கலவை 2

கடந்த வாரத்தின் ஒரு மதியத்தில் வேலை முடிந்து வந்து கணிணி முன் அமர்ந்து, தமிழ் மணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று அறையில் சாம்பிராணியின் சுகந்த மணம் வீசத் தொடங்கியது. அடுத்த அறையில் இருப்பவர் மாலை வேலைகளில் ஊதுபத்தி கொழுத்துவது வழக்கமாதலால் விட்டு விட்டேன். ஆனால் ரமழான் காலங்களில் பகல் பொழுதில் இது வாசனைகளை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள். இந்த எண்ணத்துடன் அமர்ந்திருக்க திடீரென்று கணிணி ’ஆப்’ ஆகி மீண்டும் ’ஆன்’ ஆகியது. சட்டென்று மனதின் உள்ளுக்குள் தூங்கிக் கொண்டு இருந்த மின்சாரப் பணியாளன் விழித்துக் கொள்ள CPU வின் வெப்பத்தை வெளியேற்றும் காற்றாடிய்யில் கை வைத்தால் அனலைக் கக்கியது. உடனடியாக மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டு பார்த்தால் அந்த சுகந்த வாசனை என் கணிணிக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது, அப்புறம் என்ன தண்டத்தை அழுது விட்டு, இப்போது கணிணியை குளிர்சாதனப் பெட்டிக்கு முன் வைத்துள்ளேன்..... இப்போது சமர்த்தாக இருக்கின்றது.

கலவை 3

நண்பர் தாமிரா பாதியில் எழுந்து வந்த சினிமா படங்களைக் குறித்து எழுத டேக் செய்திருந்தார். நான் 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்றதில்லை. அதற்கு முன் பாதியில் வெளியே வந்த திரைப்படங்களை யோசித்ததில் இந்த மூன்றும் சிக்கின.

நாடோடி மன்னன்
நணபன் ஒருவனின் வற்புறுத்தலுக்காக பழைய படம் பார்க்க வேண்டும் என்று சென்றது. பாடாவதியான பிரிண்ட்... பாதி படம் பார்ப்பதற்குள் நிறைய இடங்களில் பிலிம் அறுந்து போனது. வெட்டி ஒட்டி ஓட்டினார்கள். வெறுத்துப் போய்பாதியிலேயே ஓடி வந்து விட்டோம்.

Alexandra
ஒரு ஆங்கிலப்படம்

உதவிக்கு வரலாமா?
கார்த்திக் மற்றும் மூன்று கதாநாயகிகள் நடித்த படம். ரசிகா(சங்கீதா) மற்றும் காமெடிக்காக போய் மண்டை காய்ந்து போய் பாதியிலேயே ஓடி வந்து விட்டேன்...:)

கலவை 4

தமிழ் மணத்தில் வரும் பதிவுகள் இப்போதெல்லாம் பல தரங்களில் கிடைக்கின்றன. சில வகைப் பதிவுகள் போரடிப்பதாக இருந்தாலும், பல பதிவுகள் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. நிறைய பதிவர்களிடம் நல்ல தேர்ச்சி தெரிவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது சில பதிவுகள் மனநிறைவாக இருப்பதில்லை. நல்ல ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் எழுதப்பட்ட பதிவுகளில் நம் மக்கள் சென்று கும்மி விடுகின்றனர். பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் சென்று விடுகின்றது. அதே போல் அதே பதிவர் மொக்கையாக எழுதப்படும் பதிவுகளை விட்டு விடுகின்றனர். நாம் பின்னூட்டக் கும்மியடிப்பதற்கு முன் அந்த பதிவு அதற்கு தோதுவானதா என யோசித்துக் கொள்ளுங்கள். நல்ல பதிவு என்று ஒரிரு கமெண்டுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது மறுநாள் வந்து கும்முங்கள். இது என்னுடைய வேண்டுகோள். நானும் ஒரு கும்மி விரும்பி என்பதை அழுத்தம் திருத்தமாக ’தல’ நிஜமா நல்லவனின் இரத்தத்தில் சொல்லிக் கொள்கிறேன்.



கலவை 5

சமீபத்திய ஒரு பதிவில் உங்களது வம்சத்தில் தொடர்ச்சி எதுவரை தெரியும் என ஒரு சர்வே வைத்திருந்தோம்...அதில் வந்த முடிவுகள்..

தாத்தா வரை தெரியும் என 27 சத ஓட்டுக்களும், தாத்தாவின் அப்பா வரை தெரியும் என 36 சத ஓட்டுக்களும், தாத்தாவின் தாத்தா வரை தெரியும் என 18 சத ஓட்டுக்களும், அதற்கு மேல் தெரியும் என 11 மற்றும் 10 சத ஓட்டுக்களும் கிடைத்துள்ளன... மேலும் விபரங்களுக்கு

Wednesday, September 3, 2008

सुहानी रात ढल चुकी! न जाने तुम कब आओगी

திரைப்படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் மிகவும் குறைவு. இந்தி மொழிப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு. (புதிய டப்பாங் குத்துகள் அல்ல)
அவ்வப்போது கேட்கும் பாடல். குறிப்பாக அமைதியான ஏகாந்த இரவுகளில் கேட்கும் பாடல்.
கேட்டுப் பாருங்கள்.

Film : Dulari
Year : 1949
Singer : Mohd Rafi
Music : Naushad

Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Nazare Apni Mastiyan, Luta Lutake Sogaye,
Sitaare Apni Roshani, Dikha Dikhake Sogaye,
Har Ek Shamma Jal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Tadap Rahen Hein Ham Yahan, Tumhare Intazaar Mein,
Khisan Ka Rang, Aa-chala Hai, Mausam-e-bahaar Mein, (2)
Hawa Bhi Rukh Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge