Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Wednesday, March 31, 2010

தோஹா சங்கம் : என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா பதிவு

முன் டிஸ்கி : அவ்வப்போதைய டிரண்ட்படி பதிவு போடுவது தமிழ் பதிவர்களின் ‘தலை’யாயக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.. சமீபத்திய நித்தியரஞ்சி விஷயத்தில் எந்த பதிவும் எழுதவில்லை.. இப்போதும் சங்கத்து விஷயத்தில் நம் ‘கருத்தை’ச் சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் இணைய உலகம் நம்மை மன்னிக்காது என்பதால் இந்த பதிவை வெளியிடுவது கட்டாயமாகின்றது.




எங்களைப் பற்றி ஒரு அவதூறு தமிழ் இணையத்தில் பரப்பப்பட்டு உள்ளது.. அது குறித்தே இப்பதிவு.. தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமம்(தோ.த.இ.ப.எ.வ.ச.கு) இப்பதிவு பல ஆண்டுகளாக தோஹாவில் இயங்கி வருவது உலகம் பூராவும் இருக்கும் ப்ளாக்கர்களுக்கு எல்லாம் தெரியும்.. ஆனா சமீபத்திய குளறுபடிகளில் நமது சங்கத்தின் பெயரும் அடிபடுவது வருத்தத்தை அளித்துள்ளது.

தோ.த.இ.ப.எ.வ.ச.கு. பல அற்புதமான வேலைகளை தோஹாவில் செய்து வருகின்றது.. அரேபியத் தீபகற்பத்தில் தோஹா இருப்பதால் வெயிலின் கொடுமைக்கு ஆளாக நேர்கின்றதை என்பதைக் கருத்தில் கொண்டு கத்தார் நாட்டை அண்டார்ட்டிக்காவிற்கு அருகில் பெயர்த்து வைக்க உலக அளவில் விடப்பட்ட டெண்டர்களை பரிசீலிக்கும் வேலையை
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. ஏற்றுள்ளது எங்களது சேவைகளின் மைல் கல்களில் ஒன்று.

தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் கூட தமிழில் ப்ளாக் எழுதச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்து வருகின்றோம்.

தோஹாவில் இருக்கும் தமிழர்களை எல்லாம் இணைத்து தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.

பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு போண்டாவும், டீயும் வாங்கித் தரும் வழக்கத்தை மாற்றி மினி இட்லியும், பொடி தோசையும், கெட்டிச் சட்னியும் வாங்கித் தரும் ஒரே சங்கக் குழுமம் உலக அளவில் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. மட்டுமே.

எங்கள் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மேதகு திரு மதிப்புமிக்க ஆயில்யன், மற்றும் ஹிஸ் ஹைனஸ் தமிழ் பிரியன் இடையே பகைத் தீயை எரிய வைக்கும் முயற்சியில் துபாயில் இருந்து இயங்கும் சில தீவிரவாதக் குழுக்கள் இறங்கி உள்ளன... தலைவர் பதவிக்கு ஏதோ சண்டை நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாதவைகள் இந்தப் பனங்காட்டு நரிகள்... தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் என்பதை இங்கு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

தோஹாவில் இருந்து ஆயில்யன் சென்று விட்டால் அவர் இருந்த அந்த சீட்டை துடைத்து வைத்து, அதில் அவர் பெயரை எழுதி தலைவர் என்று எழுதி வைப்போம்... எங்கள் தலைவரைத் தவிர புதிதாக எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அஞ்சா நெஞ்சன் இருக்கும் ஊர்க்காரர்கள் நாங்கள்...

குறிப்பாக பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில் இருந்து இந்த வதந்தி கிளம்பி இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள், ஒற்றுமையுடன் செயல்படும் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. த்தின் வளர்ச்சியின் மீது ஏற்பட்ட பொறைமையின் விளைவே இந்த வதந்தி என்பதைச் சிந்தனையாளவர்கள் அறிவர்..

ஆகவே மக்களே தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

Sunday, July 26, 2009

வாழ்த்துக்கள் அகிலா!

அச்சில் நம் எழுத்துக்கள் வருவது என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். இந்த வார தினமலர் - வாரமலரில் சுட்டும் விழி என்ற பெயரில் எப்பவாவது (ஹிஹிஹி) எழுதும் சக பதிவர் சகோதரி அகிலா அவர்களின் கவிதை வெளி வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்!


சின்ன, சின்ன
தயக்கங்களுடன்
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!


சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!

நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது

நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!

உன்னோடு என்
வாழ்வும் சுகமே!


க. அகிலா, சென்னை.

நன்றி : வாரமலர்

Thursday, July 23, 2009

துர்காவுக்கு திருமண வாழ்த்துக்களும், எனக்கு வந்த சில விருதுகளும்...


முதலில் துர்கா விஸ்வநாத்துக்கு இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். துர்கா விஸ்வநாத்?? யாருன்னு புரியாம இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. சில ஆண்டுகளுக்கு முன் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற பாடகர்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாடகர்களில் ஒருவர் தான் துர்கா விஸ்வநாத். போட்டியின் இறுதியில் இவரால் வெற்றி பெற முடியா விட்டாலும் தனது அழகிய கொஞ்சும் குரலில் பல பாடல்களைப் பாடி அசர வைத்தவர்.

அப்போட்டியில் இவர் என்னிஷ்டம் என விருப்பப் பாடலாக பாடிய “தும்பி வா தும்பக் குடத்தின்” பாடல் எனது விருப்பப்பட்டியலில் முதலில் உள்ள பாடல். என் செல்பேசியில் இருக்கும் இப்பாடல் மகிழ்ச்சியான, துக்கமான, எரிச்சலான, குழப்பமான எல்லா கணங்களில் என்னை வருடிச் சென்று இருக்கின்றது. சமீபத்தில் துர்கா விஸ்வநாத்துக்கு திருமணம் முடிந்து இருக்கின்றது. அவரது குரல் போலவே வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

தும்பி வா பாடல் யூ டியூபில் இருந்து...





இப்பாடலை செல்பேசியில் கேட்க 3GP பார்மேட்டில் பதிவிறக்க

இவர் பாடியவைகளை யூடியூபில் தேட இங்கு செல்லலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்து விருதுகள் நமக்கு வழங்கி கெளரவித்தவர்களுக்கு நன்றி நவிலல். இந்த பட்டாம்பூச்சி விருது சில மாதங்களுக்கு முன்னால் வலையுலகில் பிரபலமா இருந்தது. நிறைய பேர் தங்கள் பதிவிலும் ஓரங்களில் போட்டுக் கொண்டார்கள்.. ஆனா நமக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கல.. ஏன் கரப்பான் பூச்சி விருது கூட கிடைக்கல.. அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு விட்டாச்சு.. ஆனா இப்ப எங்க ஸ்வீடன் சுசி அக்கா அந்த விருதை நமக்கு கொடுத்து கெளரவிச்சு இருக்காங்க... நன்றி சுசி அக்கா!

அதே போல் இப்ப வலம் வரும் சுவாரஸ்யமான பதிவர் விருதை சகோதரி ஃபாயிஷா கொடுத்து இருக்காங்க.. நன்றி ஃபாயிஷா! இப்ப இந்த விருதை நாமலும் ஐந்து பேருக்கு தந்துடலாமுன்னு இருக்கேன். காசு, பண முடிப்பெல்லாம் தர முடியாது.. ஒன்லி பாசம் மட்டுமே விருது.



1. தேனியார் என்ற விஜயராஜா.. எங்க மாவட்டத்துக்காரர். அருமையா எழுதுவார். இப்ப ஆப்பிரிக்கா காட்டுக்குள் எங்கேயோ இருக்கார்ன்னு நினைக்கிறேன். இணைய தொடர்பு இல்லாததால் எழுதாம இருக்கார் போல... நல்ல சுவாரஸ்யமான எழுத்தாளர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்கின்றேன்.

2. தமிழ் மகன்.. இணையத்தில் எழுதி வரும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ் மகனுக்கு இவ்விருதை அளிக்கின்றேன். அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுவதில் சிறந்தவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுக்கு சொந்தக்காரர்.

3. விக்னேஷ்வரன் - மலேசியாவில் இருந்து வலை பதியும் சகோதரர் விக்கி.. நல்ல தேர்ச்சியடைந்துள்ளார். ஒரு பதிவுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆச்சர்யப்பட வைக்கின்றது.

4. ஆயில்யன்... நம்ம சாதிசனம்.. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். இவரை வெறும் ஆயில்யன் என்பதை விட கவிஞர் ஆயில்யன் என்று அழைக்கலாமா என்று எங்கள் சங்கம் ஆய்வு செய்து வருகின்றது. ஏன்னு கேள்வி கேட்கக் கூடாது.. அப்படிக் கேட்டா எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )

5. தமிழன் கறுப்பி வழக்கம் போல் தம்பிக்கு ஒரு விருது கொடுத்தாச்சு... அசட்டையாக எழுதுவார். ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.

இந்த பட்டியலில் மகளிருக்கு இடம் இல்லாமப் போனது வருத்தமே.. சுவாரஸ்யமான பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இதை யாராவது கொடுத்து இருக்காங்க.. அதனால் யாருக்கும் கொடுக்காமப் போக முடியாது என்பதால் பதிவுலகை விட்டுக் காணாமல் போன கோகிலவாணி, மற்றும் வித்யா கலைவாணி ஆகிய இரு சுவாரஸ்யமான பதிவர்களுக்கும் இவ்விருதை கொடுக்கின்றேன்.

Friday, July 17, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....



மக்களே நல்லா இருக்கீங்களா? நேரம் இல்லாம திணறிக்கிட்டு இருக்கேன்..நைட்டு லேட்டா வேலையில் இருந்து வந்து கொஞ்சமா யார்கிட்டயாவது மொக்கையைப் போட்டுட்டு தூங்கப் போயிடுறேன்... நேத்து மட்டும் சீக்கிரம் வந்து ஒரு ப்டம் பார்த்தாச்சு.. அதைப் பற்றி எழுதியாச்சு..ஆனாலும் நம்ம சுசி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விட்டுட்டாங்க.. அக்கா சொல்லைத் தட்டக் கூடாதுன்னு காலையில் எழுந்து பதிவு எழுதி போட்டாச்சு..:)

இனி விடயத்திற்குப் போகலாம்... நாம படிச்சது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி.. அப்ப எங்க ஏரியாவுக்குள் எல்கேஜி, யூகேஜி எல்லாம் தெரியாது.. முதலில் அரைக் கிளாஸ் தான்.. முதல் வகுப்பில் முதல் வகுப்புப் பசங்களுடன் அடுத்த ஆண்டுக்கான பசங்க உட்கார்ந்து இருப்பாங்க... முதன் முதலில் போன அந்த நாள் நினைவில் இருக்கு.

எங்க சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றது.. ஒரே அடம் பிடிச்சு அழுகை.. என்னோட முதல் வகுப்பு ஆசிரியை திருமதி.ஞானம்மாள் டீச்சர். அழுகையை நிப்பாட்ட கையில் சாக்பீஸ் கொடுத்து உட்கார வச்சாங்க.. அங்கயே அரை கிளாஸ், ஒண்ணாப்பு படிச்சாச்சு... ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:) யார் கேட்டாலும் ஒண்ணாப்பு D செக்சன் என்று சொல்வேன்.
என்னோட சதீஸ், அப்பாஸ்,கமல், கோபால், வீரர் எல்லாம் படிச்சாங்க... முதல் வகுப்பில் 500 க்கு 500 மார்க் வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு..:))

இரண்டாவதுக்கு திருமதி.மும்தாஜ் டீச்சர்.. அது மட்டும் தான் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த முறை கூட ஊரில் இருக்கும் போது அவர்களை பார்த்தேன்.

மூன்றாம் வகுப்புக்கு திரு.கோபாலகிருஷ்ணன் சார்... ஆட்டோகிராபில் ஒரு வாத்தியார் வருவாரே அது மாதிரி ஆனா.. ரொம்ப நல்ல டைப்.. கோபம் வந்தா அடி பிச்சுடுவார்..:) என்னோட பிரண்டு காமராஜ் (அவனுக்கு பட்டப் பெயர் கொல்லைப்பீ) கொண்டு வந்த புளியங்காய்களைப் பிடுங்கி கிளாஸூக்கு வெளியே விட்டு எறிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நினைவில் இருக்கு.

நாலாப்புக்கு திருமதி.சந்திரா டீச்சர்... நல்ல டீச்சர்.. நாலாப்பு படிக்கும் போது நல்ல மழையில் மரம் சாய்ந்து கிளாஸின் மீது விழுந்து சுவர் எல்லாம் இடிந்து கிளாஸ் எல்லாம் ஒரே மழைத் தண்ணீர்..

ஐந்தாம் வகுப்புக்கு த கிரேட் திரு.தனுஷ்கோடி. தனுஷ்கோடி ஆசிரியரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. இங்கு அதீத திறமைசாலியான ஆசிரியர்.

இந்த ஆண்டைப் பற்றி நிறைய நினைவில் இருக்கு... எங்க அப்பா அப்பொழுது திண்டுக்கல் - கம்பம் பஸ்ஸில் நடத்துனர்.. (பாத்திமா ரோடு வேஸ்). இந்த இரண்டு ஊருக்கும் இடையில் எங்க ஊர்.. நைட் 7:30 மணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டில் எங்க தாத்தாவோட போவோம். அங்கேயே பஸ் வரும் வரை விளையாடிக்கிட்டு இருப்பது இன்னும் நினைவில் இருக்கு.

அப்புறம் ஒரு முக்கியமான, யாருக்கும் சொல்லாத அழியாமல் உறுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வும் இருக்கு... சொல்லிடவா? ம்ம் சொல்லிடலாம். அஞ்சாப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் போட்டி எல்லாம் வைத்து பரிசளிப்பார். குறிப்பா கட்டுரைப் போட்டியில் எழுத்து அழகா இருக்கனும்.. நமக்கு தான் எழுத்து செம டேமேஜா இருக்குமே.. அதனால் பிரைஸ் கிடைக்காது.. ஆனாலும் தேர்வுகளில் நல்ல ரேங்க் வாங்கிடுவேன்..

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மட்டும் நான்கு, ஐந்து மாதங்கள் டியூசன் படிச்சேன்.. அதுக்கே வீட்டில் செம சண்டை போட்டாச்சு.. மாதம் 5 ரூபாய் என்று நினைக்கிறேன்.. அதற்குப் பிறகு படிச்சி கிழிச்சது போதும்ன்னு நிப்பாட்டியாச்சு.

அப்படித் தான் காலாண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க் வாங்கியாச்சு.. ஒரு அழகான வெள்ளைக் கலர் பேனா பரிசாவும் கிடைச்சது.. அதை வாங்கிக் கொண்டு நான் டியூசன் படிக்கும் ஆசிரியையிடம் காட்டி பாராட்டும் வாங்கியாச்சு.. அவங்க பேர் திருமதி.ஆனி இளங்கோ. அவங்க வேற “உன் எழுத்து மட்டும் அழகா இருந்தா நீதான் முதல் ரேங்க் வாங்குவ” என்று சூட்டேத்தி விட்டுட்டாங்க..

ஆங்கிலத்துக்கு நான்கு கோடு போட்ட நோட்டும், தமிழுக்கும் இரண்டு கோடு போட்ட நோட்டும் வாங்கிக் கொண்டு வரும்படி கூறி விட்டார்கள்.. இரண்டும் வாங்கக் குறைந்தது 5 ரூபாயவது வேணும்.. வீட்டில் வழக்கம் போல பணம் தான் hurdle..

அன்றைக்கு ஆயுத பூஜை நாள்... வழக்கம் போல் ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு பேக்கரி(PNC) அருகில் 10 ரூபாய் நோட்டு ரோட்டில் கிடக்கு.. நைசா எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்து விட்டேன்.. அப்புறமென்ன வீட்டில் பஞ்சாயத்து பேசி 5 ரூபாய்க்கு இரண்டு நோட்டும்.. மீதி 5 ரூபாய்க்கு ஆயுத பூஜையைக் கொண்டாட பொரி, கடலை எல்லாம் வாங்கிக் கொண்டாடினோம்..

இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.

அப்புறம் எங்க ஆனந்தி அக்கா பற்றியும் சொன்னால் நிறைய சொல்லலாம். இங்கேயே அவங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். இப்ப கெங்குவார்பட்டியில் வேலை செய்கிறார்கள்.



சரி இனி மேட்டருக்கு வரலாம்.. இது தொடர் பதிவு என்பதால் இன்னும் மூணு பேரை அழைக்கனுமாம்..:)

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இனி நான் அழைப்பது

கயல்விழி முத்துலட்சுமி அக்கா : எங்களோட பாசக்கார குடும்பத்து அக்கா... நல்லா சுவாரஸ்யமா எழுதுவாங்க.. ஜூனியர் துளசி டீச்சர்.. :)

சென்ஷி : அண்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்ல... புனைவு நிறைய எழுதுவார்ன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இவரோட எழுத்துக்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலை..:)

காதல் கறுப்பி : தம்பி சுவாரஸ்யங்களுக்குச் சொந்தக்காரர்.. ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..:) பேய் மாதிரியான தேவதைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்.

வாங்க மக்களே. எழுதுங்க... :)

Thursday, June 11, 2009

32 கடல், மலை தாண்டி பதிவு போடும் முறை


கடைசியில் 32 கேள்விகள் விளையாட்டு நம்மிடமே வந்து விட்டது. .சரி நேரா மேட்டருக்கு போய்டலாம்..

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முதல் முதலில் இணையத்தில் நுழைந்த போது யூனிகோட் தமிழ், கணிணியில் தெரிய வைக்கத் தெரியாமல் அவதிப்பட்டேன்... பின்னர் தேடுபொறி மூலம் ஒரு தமிழ் கூகுள் குழுமத்தில் நுழைந்த போது புனைப்பெயர் தர வேண்டி வந்தது.. ஏதோ ஒரு மயக்கத்தில் தமிழ் பிரியன் என்று கொடுத்தேன்... இதுவே இன்று நிலைத்து விட்டது. எனது பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கல்யாணத்துக்கு முன்னாடி வரை எத்தனை வருடத்துக்கு முன்னாடி அழுதேன் என்று யோசிப்பேன்... கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே நம்ம உறவுகள் நம்மை அழ வச்சு பழக்கிட்டாங்க.. அதனால் அழுகை எல்லாம் ரொம்ப சாதாரணம் ஆயிடுச்சு .. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் நான் சோகமாக இருக்கும் நேரங்களில் சில குறிப்பிட்ட சோகமான படங்களைப் பார்ப்பேன். அதில் மூழ்கி விடும் போது நம்ம கவலை எல்லாம் பஞ்சு மாதிரி பறந்து பூடும் .... பத்து நாட்களுக்கு முன் தன்மாத்ரா படம் மறுபடியும் பார்த்தேன்.. அப்ப அழுதேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ், ஆங்கிலம் இரண்டும்.. படிப்பவர்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.

4).பிடித்த மதிய உணவு என்ன?
நன்றாக ஆறின சோறு, புளிக்காத தயிர், அதோட ஆட்டுக் கறியில் நெஞ்சுக்கறியை மிளகு சீரகம் போட்டு சுக்கா செய்து கொடுத்தால் சந்தோசமா சாப்பிடுவேன். அப்படியே கொஞ்சம் வெங்காயம், இரண்டு துண்டு எலுமிச்சம் பழமும்... :)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
யோசிக்காம பதில் சொல்வேன்.. அருவி தான் என்று.. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருண்டு பிறண்டு வளர்ந்தவனுக்கு அருவியை விட மனதை மயக்கும் இடம் இருக்குமா என்ன?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய தோற்றத்தைத் தான் பார்ப்பதாக நினைக்கிறேன். சில முக்கிய நேரங்களில் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : தாராள மனம் (ஹிஹிஹி நம்பனும்), நேரந்தவறாமை.
பிடிக்காத விஷயம் : எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது : எந்த சூழலில் பொய் சொல்லாமல் இருப்பது, பாசத்தைக் கொட்டுவது
பிடிக்காதது : அவளிடம் மட்டும் சொல்லி விடுவேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
கண்டிப்பாக மனைவி, மகனுடன்.. :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளைக் கலர் கை வைத்த பனியன்(புதுசுங்க.. எங்கயும் கிழிய வில்லை இன்னும்), கட்டம் போட்ட லுங்கி.. அறைக்கு வந்ததும் உடை மாற்றி விடுவேன்... :)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சில காலமாக “தும்பி வா தும்பக் குடத்தின்” என்ற வாணி விஸ்வநாத் பாடிய மலையாள பாடல் தான் பேவரைட்டாக இருக்கின்றது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வான நீலம் தான் பிடிக்கும்... ஆனால் அதில் எழுதினால் படிக்க முடியுமான்னு தெரியலியே.. :)

14.பிடித்த மணம்?
மல்லிகைப் பூ மலரும் நேரம் வரும் சுகந்தமான மணம்.. ;-)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

கண்மணி டீச்சர் - நாலு மாசமா பதிவுலகை விட்டு காணாம போய் இருக்காங்க.. எங்க பதிவுலக குரு.. திரும்ப பதிவு போட ஒரு அழைப்பா இருக்கட்டும்.

காதல் கறுப்பி தமிழன் - இவனுக்குள்ள என்னமோ இருக்குய்யா என்று எப்பவும் நான் யோசிக்கும் நண்பன்(ர் - நல்லா இல்லீங்க.. :) )

நாணல் - நல்ல திறமை உள்ள என் சகோதரி.. வித்தியாசமான படைப்புகளை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பேன். அடுத்த கவிதாயினி போஸ்ட்டுக்கு தகுதியானவர்.. இவருக்கு நேரம் கிடைத்தால் சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நம்ம ஆயில்யன் அண்ணன்... மரியாதைக்குரியவர். இவரது பதிவில் எதை எடுக்க எதை விட... எல்லாமே பொறுப்பான பதிவுகளா இருக்கும். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஆயில் அண்ணா இஸ் த பெஸ்ட் அப்படின்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காங்க
1ம் இல்லை பதிவுகளில் எல்லாத்தையும் அடக்கி விடுவார்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கண்டிப்பா இல்லை.. கண் இன்னும் நல்லா இருக்கு.. :) 6/6

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பாச உணர்வுகளை எதார்த்தமாக எந்த சினிமாத் தனமும் இல்லாமல் வழங்கும் படங்களை விரும்பிப் பார்ப்பேன். பாடல் காட்சி, சண்டைக் காட்சிகளை கண்டிப்பாக ஸ்கிப் செய்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
சென்ற வெள்ளி மாலையில் - Calcutta News - ப்ளஸ்ஸி (Blessy) க்காக பதிவிறக்கிப் பார்த்தேன்... கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ப்ளஸ்ஸிக்கு எப்பவும் உணர்வுகளை வசனங்களில் இல்லாமல் காட்சிகளாக தருவதில் ஆர்வம் அதிகம். தன்மாத்ரா, கால்ச்சா, பலுங்கு போன்ற படங்களைப் பார்த்தால் தெரியும். கல்கத்தா நியூஸில் கொஞ்சம் சறுக்கல் அவருக்கு...

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் இல்லாமல், குளிரும் இல்லாமல் மிதமாக இருக்கும் சீதோசனம் பிடிக்கும்.. அதோடு கார் காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
நம்புவீர்களா என்று தெரியவில்லை.. நவீனன் டைரி - நகுலன் எழுதியது. முதல் தடவை படித்து விட்டு என்ன சொல்ல வருகின்றார் என்பது புரியாததால் இரண்டாவது தடவை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இந்த தடவையாவது புரியனும்.. ஆனால் படிக்கும் போது ஒரு வெறி வருகின்றது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்றும் வழக்கம் இல்லை.. எப்பவும் விண்டோஸில் இருக்கும் அடிவானம் தான் இருக்கும்.. சமீபமாக சில நாட்களாக எனக்கு இருப்பது போலவே நெற்றியில் புருவத்திற்கு மேல் சிறு வெட்டுக் காய தழும்பு இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மட்டும் உள்ளது.. யார் என்பது சஸ்பென்ஸ்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அப்படிப் பிரிக்கத் தெரியவில்லை... அதிக சத்தமுள்ள இயந்திரங்களிலேயே வேலை செய்வதால் பிடிக்காத சத்தம் ஏதுமிருப்பதாக தெரியவில்லை... சில நேரங்களில் மட்டும் ஆஆஆஆஆஆ என்று வாயை முழுவதும் திறந்து கொட்டாவி விடும் சத்தம் எரிச்சலை ஊட்டும்.

பிடித்தது : குழந்தைகளின் மழலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய், சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அத்துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்து வருவகின்றேன். எங்களது துறை சார்ந்த மெக்கானிக்கல் இயந்திரங்களுக்கான எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்களில் ஏற்படும் நுணுக்கமான பிரச்சினைகளை துரிதமாக சரி செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கியுள்ளான். அதோடு புதிதாக கண்ட்ரோல் சர்க்யூட்களை டிசைன் செய்து, அதை நானே ஆட்டோகேட் மூலம் வரைந்து, களத்திலும் செயல்வடிவம் கொடுக்க முடிகின்றது என்பதும் வல்ல இறைவனின் கருணை தான்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
புறம் பேசுவதும், கோள் சொல்வதும். :(

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மற்றவர்களின் குறைகளை அவர்களிடமே சொல்லி விடுவது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இன்னும் பார்க்கவில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாக இருக்கவே ஆசை...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஊரில் இருக்கும் போது கணிணியில் இருப்பது மனைவிக்கு பிடிக்காது. எனவே அதிகப்படியாக செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கனும்...
மனைவி சொல்வது : உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எல்லா சுதந்திரங்களும், இன்பங்களும், லாகிரி வஸ்துகளும் சுலபமாக கிடைக்கும் போதும், கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கற்பனைக் கோட்டுக்குள் இருப்பது என்று நினைக்கிறேன்.

Wednesday, May 27, 2009

என்னத்தங்க எழுத..

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. அவரவர் மன திருப்திக்காக எழுதினாலும், பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும், நம் எழுத்தை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும் பதிவு எழுதுவதற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகவே உணர்கின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Fireproof என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் அவர்களை விவாகரத்து வரை இட்டுச் செல்கின்றது. தீயணைப்பு பணியில் இருக்கும் அந்த அவனது தந்தை மகனையும், மருமகளையும் ஒன்றிணைக்க ஒரு 40 நாள் திட்டத்தை சொல்கின்றார்.. அதன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் அந்த ரம்மியமான கதை. எந்த சினிமாத்தனமும் இல்லாத படம்.

இதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில் நம்ம நண்பர் குசும்பன் IMDB பார்த்து கதை எழுதுவது எப்படி என்று பதிவு வேறு போட்டு விட்டதால் அதை அப்படியே விட்டு விடுகின்றேன்... ;-)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது. தினசரி 50 ஹிட்ஸ் வருகின்றது. எல்லாம் பொதுவாக கூகுள் தேடல் மூலம் வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். தேடு பொறியின் குறிச் சொற்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நடிகையின் பெயர்களை குறிச் சொல்லாக இட்டு தேடப் பட்டு வருபவையே அதிகமாக இருக்கின்றன.


சில காலத்திற்கு முன் பதிவுலகில் மும்முரமாக இருந்த நேரம் பொன்னியின் செல்வன் பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன். நந்தினிக்கும், வீர பாண்டியனின் இடையே உள்ள உறவு குறித்து.. இந்த பதிவுக்கும் கூகுள் தேடல் மூலம் ஹிட்ஸ் வருவது அதிகமாக இருக்கின்றது. நம்மளை மாதிரி பொன்னியின் செல்வன் பித்தர்கள் அதிகமாக இருப்பார்கள் போல உள்ளது.. ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமக்கு நுனிப்புல் மேய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். அது இலக்கியமா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி. எனக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. பதிவைப் படிக்கும் போது முன்னால் உள்ள ஒரு பாராவைப் படித்துவிட்டு கீழே சென்று கமெண்ட்களைப் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல் கமெண்ட் போட்டு விட்டு சென்று விடுவேன்... நான் மட்டும் தான் இப்படியா? நம் மக்களும் இபப்டியான்னு சந்தேகம் வரும். அவ்வப்போது மக்களை டெஸ்ட் பண்ணி இதைக் கன்பர்ம் பண்ணிக்குவேன்.

முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தீம் ரெடி... கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல... பார்ப்போம்..

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

படம் இணைப்பு : பிக்காசாவில் கிடைத்த படம்... அழகான இடத்தில் எல்லோரும் நினைவு கூறும் சைக்கிள் பழகும் படம். அழகா இருந்தது.

Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Friday, March 20, 2009

1001 ஹிட்ஸ், தமிழ் மணமா? தமிழிஷா? ஹிட்ஸ் ஒப்பீடு

நேற்று ஒரு பிரபல பதிவரின் பதிவு ஹேக் செய்யப்பட்டதாக நம் நண்பரின் பதிவு ஒன்று வந்தது. யாரோ ஒருவன் ஒரு சக பதிவரின் பதிவில் அதர் ஆப்ஷனில் சென்று பிரபல பதிவரின் பெயரில் கமெண்ட் போட்டுள்ளான். இதன் தொடர்ச்சியாகவே அந்த பதிவு. அதர் ஆப்ஷனின் யார் வேண்டுமானாலும் கமெண்ட் போடலாம்.. அதே போல் பதிவரின் பெயரிலேயே அதே புரோபைல் படத்துடன் கமெண்ட் போடலாம். (எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்).

அக்கவுண்ட் நம்பரை வாலாக சேர்ப்பது, எலிக் குட்டி, பூனைக்குட்டி, மொசக் குட்டி சோதனைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட காலம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஆனாலும் யாரோ ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை பதற்றமுறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டால் அமைதியாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கி விடுங்கள். அல்லது கண்டும் காணாமல் போய் விடுங்கள்.
*********************************************************
நேற்று நண்பர் ஆதிமூலகிருஷ்ணனின் (தாமிரா) ஒரு பதிவைப் படித்தேன். மிக நல்ல சப்ஜெக்ட். ஆனால் நட்சத்திரம் பதட்டத்தில் எழுதி இருக்கின்றது. இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம். ஆனாலும் அழகாகவே இருந்தது. கமெண்ட் போடப் போனால் கும்மி, குமுறி வைத்திருக்கின்றார்கள். ஏனோ மனம் வலித்தது. இருந்தாலும் கமெண்ட் போட்டு விட்டு திரும்பினேன்.

கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே... ப்ளீஸ்.. சில புதியவர்கள் படித்து இம்ப்ரஸ் ஆகிக் கமெண்ட் போடுவது நம்மால் தவிர்ந்து போகக் கூடாது.


*********************************************************

என்னோட பதிவுக்கு வரும் ஹிட்ஸ்களை எப்பவுமே கண்காணிப்பேன். அதில் நிறைவேறாத ஒரு தேடல் இருப்பதாகக் கூட நினைத்துக் கொள்ளுங்கள். பதிவு போட்ட நாட்களில் 400 முதல் 600 வரை ஹிட்ஸ் வரும். மற்ற நாட்களில் 100 முதல் 200 வரை எதிர்பார்க்கலாம். ஊரில் இருந்து வந்ததில் இருந்து சொல்லிக் கொள்ளும்படியாக பதிவு எதுவும் எழுத இயலவில்லை... இனி எழுதலாம்..எச்சரிக்கையாக இருங்கள்... ;-)

நேற்று முன் தினம் திடீரென்று ஹிட்ஸ் அதிகமாக வந்தது. 24 மணி நேரத்தில் சுமார் 1001 ஹிட்ஸ். இதில் தனி நபர்கள் மட்டும் 797 பேர். எப்படி இத்தனை சாத்தியமானது என்று புரியவில்லை... (நம்ம லிமிட்டுக்கு இதெல்லாம் ஓவர்ங்ண்ணா.. ;-) ) அன்று இட்ட இடுகை சாதாரணமானது தான்.. துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது?




ஹிட்ஸ் கவுண்டரைப் பார்த்த போது அதிகப்பட்டியான வருகை தமிழிஷின் வழியேவே இருந்தது. தமிழ் மணத்தில் இருந்து மிகக் குறைவான ஹிட்ஸ்களே இருந்தன. 1000 ஹிட்ஸில் 150 ஹிட்ஸ் கூட தமிழ் மணத்தின் வழியே இல்லை.. :( 150 ல் இருந்து 200 வரை ஹிட்ஸ் இருந்தாலே தமிழ் மணத்தில் இடுகை சூடாகி விடும். ஆனால் பதிவு சூடாகவில்லை.

நேற்று பதிவு ஏதும் இடவில்லை. ஆனாலும் ஹிட்ஸ் 500 க்கும் மேல் வந்தது. அதை கொஞ்சம் குடைந்த போது பெரும்பாலனவை தமிழிஷின் வழியே இருந்தது. தமிழ் மணத்தின் முகப்பில் இருந்து மட்டுமே அனைத்து ஹிட்ஸூம் இருந்தது. அதே வேலையில் தமிழிஷின் பல பக்கங்களில் இருந்தும் ஹிட்ஸ் வந்துள்ளது.



தமிழ் மணத்தின் வலைத் தளம் திறக்கும் நேரமும், பயனாளர்களுக்கு இலகுவாகவும் இல்லாமல் இருக்கின்றதோ என்ற ஐயம் தோன்றுகின்றது. பதிவர்களுக்கு மட்டுமேயான ஒரு தளமாக தமிழ் மணம் மாறி விடக்கூடாது என்பதே நம் நோக்கம். என்னதான் இருந்தாலும் இன்னும் தமிழ் மணம் வழியே தான் பதிவுகளைப் படிக்கின்றேன். தமிழிஷில் பதிவைக் கொடுக்கப் போகும் போது மட்டும் ஒரு பார்வை பார்ப்பது தான்.

*******************************************************************



கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா அல்மோரா மலைப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். வழக்கம் போல் அழகான படங்களுடன் பதிவு இட்டு வருகின்றார்.. பாருங்கள்.http://sirumuyarchi.blogspot.com/search/label/அல்மோரா

அவரது பதிவுகளைப் பார்த்த போது நான் வேலை செய்யும் இடம் தான் நினைவுக்கு வந்தது. கீழே உள்ள படம் சென்ற புதன்கிழமை எடுத்தது.வளைகுடாவில் வெயில் அடிக்க ஆரம்பித்தும் இங்கு இன்னும் வெயில் உறைக்க வில்லை. தினமும் மாலையில் மலை ஓரத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து மிதந்து செல்லும் மேகங்களைப் பார்ப்பது நல்லா ஜாலியா இருக்கும்.. ;-)) அனுபவிச்சா தான் தெரியும்..


*********************************************************************

எங்க துளசி டீச்சர் நிறைய ஊர்களை சுற்றிப் பார்த்து விட்டு நியூஸிலாந்துக்கு திரும்பி விட்டார்கள்.. இனி கிளாஸுக்கு மட்டம் போடாமல் போகனுமாம்.. ஊருக்கு போய் இருந்த போது டீச்சர் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட இடத்திற்கு அருகில் மகனை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.. ;-)



*********************************************************

தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போட்டு விட்டு செல்லலாமே


படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்.

Tuesday, March 10, 2009

ஆ.வி.. நாங்களும் ரவுடிக தான்.. ஜீப்பில் ஏறிட்டோம்ல

அச்சு ஊடகங்களில் நமது எழுத்துக்கள் வருவது என்பதே கிட்டத்தட்ட ஒரு கனவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அது முடியாத போது தான் ப்ளாக்குகளில் எழுதி ஒரு வடிகாலை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அச்சில் ஏற்ற முடியா விட்டாலும் இணையத்தில் எழுதுபவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் விகடன் குழுமத்தின் யூத்ஃபுல் விகடன் செயல்பட்டு வருகின்றது.

நமது சக பதிவர்கள் பலரும் அதில் தங்களது படைப்புகளை அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் நமது கதை ஒன்றும் யூத் ஃபுல் விகடனில் வந்துள்ளது. என்னை வற்புறுத்தி எனது கதையை வாங்கி யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி வர வைத்த பெங்களூர் அக்காவுக்கு நன்றிகள்!

எனது படைப்பையும் ஏற்றுக் கொண்டு வெளியிட்ட யூத் ஃபுல் விகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

http://youthful.vikatan.com/youth/tamizhpriyanstory100309.asp

விகடன் தனது இணைய தளத்தின் முகப்பில் அக்கதைக்கான தொடுப்பை அளித்துள்ளது.


http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp

Tuesday, December 23, 2008

கெளம்புறேங்க......

மக்களே! இரண்டு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன்.. முதலாவது இன்னும் ஓரிரு நாளில் விடுமுறையில் இந்தியா செல்லவுள்ளேன். இரண்டாவது எனது இரண்டாவது சகோதரனின் குடும்பத்தில் சில நாட்களில் புதிய உறுப்பினர் வருகை இருக்கலாம். சகோதரனின் மனைவி பிரசவத்திற்காக நெல்லையில் தனது தாய் வீட்டில் இருக்கின்றார்கள்.

இனி உங்களுக்கு எனது மொக்கையில் இருந்து விடுதலை தரலாம் என்று நினைக்கிறேன்.... ஒன்லி இடைக்கால விடுதலை தான். இரண்டு மாதத்தில் இந்தியாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் மொக்கைகளைத் தொடரலாம்..... இறைவன் நாடினால்...:)



ஸ்டாப்! ஸ்டாப்! அதுக்குள்ளே மகிழ்ச்சியில் குதிக்காதீங்க... பதிவுக்கு தான் விடுமுறை என்று சொன்னேன்.. அதுக்காக மொக்கையை விட முடியுமா? அது நம் உடன் பிறந்ததாச்சே.. மொக்கையை நேரடியாகவே போடலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

சென்னை(விமானப் பயண வழி), மதுரை(சொந்தங்கள்), கோவை(சகோதரன்1), நெல்லை(சகோதரனின்(2) வீட்டுப் புதிய உறுப்பினரைப் பார்க்க), நாகர்கோவில் (மாமியார் ஊடு) ஆகிய இடங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக போக வேண்டி உள்ளது. (சிவராஜ் சித்த வைத்தியசாலை எபெக்ட் வருதோ?.... ;) ).

அங்கு உள்ள பதிவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு தங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பி வையுங்கள். நான் தொ(ல்)லை பேசுகின்றேன். வரும் நேரங்களில் மொக்கை போடலாம். dginnah@gmail.com



இது தவிர வத்தலகுண்டை சுற்றிய ஊரில் உள்ளவர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. இவைகளைத் தவிர்த்து வேறு ஊர்களுக்கு தமிழ் பிரியனந்தாவின் காலடி பட்டு சுபிட்சம் ஏற்பட வேண்டுமெனில் வண்டி சத்தமும், நல்ல சாப்பாடும் கிடைக்கும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும்.... ;)

Tuesday, December 2, 2008

Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்

உண்மைத் தமிழன், சின்னப்ப்பையன், சுரேகா இவங்களோட பதிவுகளுக்குள் நுழையும் போது ஏதோ தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த கமாண்டோ மாதிரி ஒரு பயத்தோட தான் நுழைய வேண்டி இருக்கும்... ஏனா? அதை கடைசியில் சொல்றேன்.

முதலில் சில உதவிக் குறிப்புகள் பார்க்கலாம். ப்ளாக்காரில் Bold, Italic, நிறம் மாற்றும் முறை, தொடுப்பு (Link) தரும் முறை போன்றவை முன்பே தரப்பட்டுள்ளன. இவை தவிர்த்து சில முறைகளை அறிமுகப்படுத்தவே இந்த இடுகை.

(இதில் உள்ளவை சாதாரண HTML Code கள் என்பதால் உங்கள் பதிவு திறக்க அதிகப்படியான நேரம் எடுக்காது என்பதால் தாராளமாக பயன்படுத்தலாம்.)

1. How to add scrolling Text in your blogger template?
2. How to add Flashing Text in your blog post?
3. How to show blog owner's comment in a different color?

1. முதலில் உங்கள் பதிவில் உருளும் வரிகளை பதிக்கும் முறை.



எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகின்றான் - நபிகள் நாயகம்


இதே போன்ற அமைப்பை எனது பதிவின் முகப்பிலும் வைத்து இருக்கின்றேன். கடைசியாக எழுதிய மூன்று பதிவுகள் அதில் ஓடிக் கொண்டு இருக்கும். மூன்றும் தனித்தனியாக அதற்குரிய தொடுப்புக்கு(Link) செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது தளத்திலும் அமைக்கலாம். இடுகையில் சேர்க்க கீழே உள்ளது போல் எழுதலாம்.

<marquee behavior="scroll" direction="left" onmouseover="this.stop()" scrollamount="4" onmouseout="this.start()" bgcolor="##fdefd0" align="middle"><br/><br/> <a href="http://majinnah.blogspot.com/2008/11/blog-post_28.html "> Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள், </a> <br/><br/> </marquee>





அதில் தொடுப்புக்கான இடத்தில் உங்களுக்கு தேவையான தொடுப்பையும், விளக்கத்தில் உங்களுக்கான விளக்கத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதை Dash Board, Layout,Add a Gadget, HTML/JavaScript சென்று அங்கு உங்களுக்கு தேவையான கோடை அதில் உள்ளீடு செய்ய இனி உங்கள் பதிவிலும் இது ஓடத் தொடங்கி விடும். இது கீழ்கண்டவாறு உங்கள் பதிவில் வரும். இந்த முறையில் சிறு துணுக்குகள், முக்கிய செய்திகள், பொன் மொழிகள், அறிவுரைகளைத் தரலாம்.


Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்


2. உங்கள் பதிவில் மின்னும் வார்த்தைகளைப் (Flashing Text) பதிப்பது எப்படி?

இதுவும் மிக சுலபம் தான். கீழே எடுத்துக்காட்டுக்காக இரு வரிகளைத் தந்துள்ளேன்.

ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்

இதற்கு பயன்படுத்தப்பட்ட HTML Code கீழே தந்துள்ளேன்.

<span style="text-decoration: blink; color: rgb(51, 0, 153);
font-weight: bold;">ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்</span>

இதில் அந்த வார்த்தைகள் இருக்கும் இடத்தில் உங்களுக்குத் தேவையான வரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

3. பதிவர்கள் தங்கள் சொந்த பின்னூட்டங்களை மட்டும் வேறு கலரில் தருவது எப்படி?

சிலருடைய பதிவில் (முத்துலக்ஷ்மி அக்கா, எனது...) பதிவின் உரிமையாளருடைய பின்னூட்டங்கள் மட்டும் வேறு கலரில் இருக்கும். பின்னூட்டங்களுக்கு பதில் பார்க்கும் போது தெளிவாக, சுலபமாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதையும் உங்கள் பதிவில் சுலபமாக மாற்றலாம்.

முதலில் வழக்கம் போல் Dash Board, Layout, Edit HTML, சென்று Expand Widget Templates என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

முக்கியம் :இதில் இருப்பதை ஒரு வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

இனி உங்கள் HTML ல்

Step : 1

.comment-body
{
margin:0;
padding:0 0 0 20px;
}
.comment-body p
{
font-size:100%;
margin:0 0 .2em 0;
}

இந்த இடத்தை தேடிக் கண்டுபிடியுங்கள். (ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்து இருப்பவர்களுக்கு அப்படியே கிடைக்கும். மற்ற இடங்களில் இருந்து என்றால்

கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும்..... தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்)


இதற்குக் கீழே, அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.

.comment-body-author {

margin:0;

padding:0 0 0 20px;

}


.comment-body-author p {

font-size:100%;

margin:0 0 .2em 0;

color:#CC3300;

text-decoration:bold;

}


Step : 2

HTML ல்
<dl id='comments-block'> <b:loop values='data என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள். இந்த வரிக்கு கீழே சில வரிகளுக்குப் பின் <data:comment.author/> </b:if> said... </dt> இப்படி இருக்கும். இந்த dt> க்குக் கீழே , அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if
cond='data:comment.author == data:post.author'>

<dd class='comment-body-author'> <p><data:comment.body/></p> </dd> <b:else/>


பேஸ்ட் செய்த பிறகு அதற்கு இன்னும் சில வரிகள் கழித்து ஒரு இடத்தில் <dd
class='comment-body-author'> <p><data:comment.body/></p> </dd> என்று முடியும். அதற்குக் கீழே </b:if> என்பதை மட்டும் பேஸ்ட் செய்து விடுங்கள். இனி Save Template கொடுங்கள். அம்புட்டுத்தேன்..இனி உங்கள் பதிவில் நீங்கள் கமெண்ட் போட்டால் சிவப்பு கலரில் தெரியும்.

Save ஆகும் போது எரர் வருதா? அமைதியா ஏற்கனவே வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்திருப்பதை திரும்பி பேஸ்ட் செய்து விட்டு அமைதியா இருந்து கொள்ளுங்கள்... ;)))


எனக்கு சிவப்பு கலர் பிடிக்காது. வேற கலர் தான் வேண்டும் என்று சொல்பவர்கள் இங்கு சென்று புதிய கலருக்கான Code ஐ (#3B9C9C இப்படி இருக்கும்) எடுத்து வந்து மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். நிறத்திற்கான குறிப்புகள்


மாற்றம் செய்யுமிடம்


.comment-body-author p {

font-size:100%;

margin:0 0 .2em 0;

color:#CC3300;

text-decoration:bold;

}


இதில் சிகப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களுக்குப் பதில் உங்கள் நிறத்திறகான Code ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.


நன்றிகள் : தீபா அக்கா மற்றும் முத்துலக்ஷ்மி அக்கா!


****************************************************************


முதலில் சொன்னதுக்கு பதில். இவர்களுடைய பதிவுகளில் யாஹூ சிரிப்பான் வருவதற்கான நிரலி சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இடுகைகள் திறக்கும் போது கடைசியில் பல வினாடிகள் (சில நேரங்களில் ஒரு நிமிடங்கள் வரை) கணிணி ஸ்தம்பித்து விடுகின்றது. பிராஸஸரின் வேலைப்பளு சுமார் 70, 80 சதவீதம் வரை செல்கின்றது. சிரிப்பான் சிரிக்காமல் இருந்தால் பரவாயில்லை என எண்ணினால் இது போன்று பிரச்சினையுள்ளவர்கள் கீழே உள்ள வரிகளை நீக்கினால் சரியாகி விடும்.

<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>

சிரிப்பான் கண்டிப்பாக சிரிக்க வேண்டுமெனில் அப்படியே விட்டு விட்டு எங்கள் கணிணியை சூடேற்றலாம்... :)))

டிஸ்கி : படித்தவர்கள் அனைவரும் தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டுப் போட்ட்டுட்டு போகனும்... யார் வந்துட்டு ஓட்டு போடாம போனாலும் கண்டுபிடிச்சிடுவேன்.. ... :)))

Tuesday, November 25, 2008

ஒரு கொலவெறி (கவுஜ) கவிதாயினியும், நன்றி அறிவித்தலும்

முதலில் நன்றியைச் சொல்லி விடலாம். நன்றி யாருக்கு, எப்படி சொல்வது என்று தெரியாவிட்டாலும் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. பொதுவாக நமக்கு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பற்றியே அக்கறை இருக்காது. நாம வழக்கமா போடும் கட்சிக்கோ, இல்லைன்னா அப்ப வீசுகின்ற ‘அலை’க்கு தகுந்தாற் போலோ ஓட்டுப் போட்டுட்டு போய்டுவோம். தேர்தல் முடிந்ததும் யார் ஜெயித்தார்கள் என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்.

ஆனால் பிற நாடுகளில் நடக்கும் தேர்த்ல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் நடந்தாலும், அதன் முடிவை மட்டும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோம். அவ்வளவு தான்.... ஆங்கிலம் அறிந்த ஒரு சிலர் மட்டும் இணையத்தின் வாயிலாக, குறிப்பாக அமெரிக்க தேர்தல் பற்றி, தேர்தல் பிரச்சாரங்கள், உத்திகள், வாக்குறுதிகள், கணிப்புகள், மக்களின் உணர்வுகள் போன்றவற்றை கவனிப்பார்கள். எங்களைப் போன்று ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அதுவும் முடியாது.

தமிழ் பதிவர்களின் வசதிக்காக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலை கிட்டத்தட்ட நேரடியாக தமிழில் வெளியிட்ட தளம் தான் http://uspresident08.wordpress.com/. நமது தமிழ் பதிவர்கள் பலர் இணைந்து அமெரிக்க ஊடகங்களில் வரும் தேர்தல் செய்திகளை தமிழில் வெளியிட்டனர். வெறும் கட் பேஸ்ட்டாக மட்டும் இல்லாமல், அமெரிக்க வாழ் பதிவர்கள் பலருடைய கருத்துக்கள், கேலிச் சித்திரங்கள், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவாதங்கள், கருத்துக் கணிப்புகள் என தமிழ் மீடியாக்களால் செய்ய இயலாததை சிறப்பாக செய்து காட்டினார்கள். அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையை நமக்கு தெளிவாக விளக்கி, தேர்தலை நேரடியாக வழங்கிய அக்குழுவினருக்கு மிக்க நன்றிகள்.

குறிப்பாக அந்த குழுவில் முக்கிய பங்காற்றிய நண்பர் bsubra அவர்களுக்கு எங்களது நன்றிகள்.

***********************************************************

ஒவ்வொரு காலகட்டமும் மாறும் என்று சொல்வார்கள். தமிழ் மணத்தில் பதிவுகள் எழுதி வந்த சகோதரி கவிதாயினி ’பாலைத்திணை’ காயத்ரி அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. முதலில் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் பாலைத்திணையில் எந்த கவுஜயும் வருவதில்லை. இது இயற்கைதான். இனி விரைவில் ரங்கமணியை சமாளிப்பது எப்படி, குழந்தை வளர்ப்பு போன்ற பதிவுகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் மணத்தில் ஏற்ப்பட்டுள்ள அந்த கொல வெறி கவுஜாயினியின் இடத்தை நிரப்ப இரண்டு பேரை இப்போது நாமினேட் செய்கின்றோம். அதில் முதல் இடத்தில் இருப்பவர் பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி. கரையோரக் கனவுகள் என்ற பெயரில் புரியாத பெயரில் கவுஜகளும், கதைகளும் எழுதி வருகின்றார். அதுமட்டுமின்றி பின்ன நவீனத்துவ சொல்லாடல்களும் அவரது பதிவில் காணக் கிடைக்கின்றது. (அவரது பி.ந. பதிவை தமிழில் மொழி பெயர்த்தால் 100 டாலர் பரிசு) எனவே வருங்கால கவுஜ கவிதாயினி பட்டத்தை அவருக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

போட்டியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நாணல் அக்கா. கவிதைகளாக எழுதித் தள்ளுகின்றார். ஆனால் இவரது ஒரே குறை இவரது கவிதைகள் புரிகின்றதாம்.. ஆனால் நன்றாக கவிதை எழுதுகின்றார். இவர்கள் இருவரில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ கவுஜ கவிதாயினி என்ற பட்டத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

(நமக்கு கவித புரியாது என்பது ரகசியம்... அங்கெல்லாம் போய் கலக்கல், சூப்பர், நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டும் போடுவோம்.. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..:) )

சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

**********************************************************************

நேற்றைய பதிவில் நண்பர் பாபு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். நீங்களெல்லாம் இது போன்ற பதிவுகள் எழுத வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோளுடன்... நன்றி நண்பரே. நான் இது போன்ற விஷயங்களைப் பதிவில் எழுதுவதை விட நேரிடையாகவே செய்வதையே விரும்புகின்றேன். தீவிரவாதம், ஒரு சிறு உயிருக்குக் கூட தீங்கு விளைவிப்பதையோ நாங்கள் விரும்புவதில்லை. எங்கள் சமூகத்தை தீவிரவாதிகள் என மீடியாக்கள் பொய் கூறிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் போதும் நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்து செல்வோம். அதன் வெளிப்பாடு தான் அந்த பதிவு. குண்டு வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்... அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே...இதுதான் எங்களது கோரிக்கை.

இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது. பொதுவாக முஸ்லிம்கள் திருமணம் ஆனதும் 40 நாட்களுக்கு வெளியே தேவையில்லாமல் விட மாட்டார்கள். (அதில் நமக்கு நம்பிகையில்லை). முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைத்து நடத்தப்பட்ட ஒரு பேரணிக்காக, திருமணம் ஆன சில தினங்களில் என் குடும்பத்துடன் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து பேரணி நடந்து பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம். அவைகளின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் வேலை, மற்றும் கல்வியில் 3.5 சதவீதம் என்ற பாதிக் கிணற்றைத் தாண்டியுள்ளோம்.

இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

Wednesday, November 5, 2008

பதிவர் ராப்(rapp) அவர்களுக்கு ஒரு மனந்திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பதிவர் ராப் அவர்களுக்கு,
அன்புடன் சகோதரன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது, நலம் நலமறிய ஆவல். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது என்றே நினைக்கின்றேன்.... இருந்தாலும் என்னை நானே அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..

நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன். அதில் இருந்து தங்களின் ரசிகனாக மாறி விட்டேன். ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.

உங்கள் மீது நான் கடும் வருத்தத்தில் இருக்கேன்.... இதை வருத்தம் என்று சொல்வதை விட ஒரு ஆதங்கம் என்று கூட சொல்லலாம். என்னடா இவனை யார் என்றே தெரியாதே இவன் நம் மீது ஏன் வருத்தப்பட வேண்டும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. அப்புறம் தமிழ் கூறும் மொக்கை பதிவுலகம் உங்களை மன்னிக்காது.

தாங்கள் அனைத்து மொக்கை + கும்மி பதிவுகளுக்கும் சென்று மீ த பர்ஸ்ட், மீ த் 25, மீ த 100 எல்லாம் போடுவதை அறிந்துள்ளேன். நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவுகள் போடும் பதிவர் என்ற முறையில் என் பதிவுகளுக்கும் வந்து மீ த 50, மீ த 100 போடுவீர்கள் என்று எப்போதும் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.



இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்... இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம்? இவனது பதிவுக்கு நம்மை பின்னூட்டம் போடச் சொல்றாரே நம் பதிவுக்கு எப்போது வந்து பின்னூட்டம் போட்டார் என்று எழலாம். நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.

ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.

அடுத்து தமிழ் பிரியன் ஒரு கும்மி பதிவர் அல்ல... என்று நினைத்து விடாதீர்கள் நான் ஒரு கும்மி + மொக்கை பதிவர் என்பதை என் பதிவில் ஓரத்தில் இரத்தத்தில் ஓடும் வாசகங்களே சொல்லும்.

எனது கடினமான சூழல்களைக் கண்டு இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த ??? கமெண்ட்களாவது போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..

கடைசியாக இதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.... தமிழகத்தின் விடி வெள்ளி, தமிழ் திரையுலகம் கண்ட மகாநடிகர், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம், உலக சரித்திரம் கண்ட எட்டாவது வள்ளல், வருங்கால இந்திய பிரதமர், சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.

இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
தங்களது கமெண்ட்களுக்காக ஏங்கும்
அன்பு சகோதரன்
தமிழ் பிரியன்.

Sunday, October 26, 2008

நான் பாடிய ’உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலும், பதிவருக்கான உதவியும்


நண்பர் கானா பிரபா ஆஸ்திரேலிய வானொலியில் ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். அந்த நிகழ்ச்சியை இணைய வாயிலாகவும் கேட்கலாம். கடந்த வாரங்களுக்கு முன் கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் பற்றியும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.

ஆர்வ மிகுதியில் இங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு தொலை பேசினேன். கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களைக் கூறிவிட்டு ஒரு பாடலையும் பாடிக் காட்டினேன். கடைசியாக நண்பர் ‘காதல் கறுப்பி’ தமிழனுக்காக கண்ணதாசனின் கடைசி பாடலான மூன்றாம் பிறை படத்தில் இருந்து கண்ணே! கலைமானே! என்ற பாடலையும் கேட்டேன். இறுதியில் அதையும் ஒலிபரப்பினர்.

வானலை வழியே நமது குரல் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது என்ற பயத்திலேயே பேசியதால் பேச்சே வரவில்லை. சாதாரணமான எங்கு சென்று தமிழ் பேசினாலும் எங்களுடைய மதுரை ஸ்லாங்கை விட மாட்டேன். ஆனால் அன்று எழுத்து வடிவிலான தமிழையே பேச முடிந்தது.

இதை நேரடியாக சந்தனமுல்லை அக்கா கேட்டிருக்கிறார்கள். அதை பதிவு செய்து அண்ணன் கானா பிரபா அளித்திருந்தார். நண்பர்கள் சிலருக்கும் மெயிலில் அனுப்பினேன். அதை தொடர் மெயிலாக்கி மகிழ்வுடன் கும்மி அடித்திருந்தனர்... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்ய்யா உடம்பை ரணகளமாக்கி வச்சி இருக்கீங்க... ;))


அதை பதிவேற்றி பதிவில் வெளியிட கூச்சமா இருக்கு... சர்வேசன் தனது நேயர் விருப்பத்தில் சமீபத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி பதிவேற்றி இருந்தார். நாம பத்மினியின் தீவிர ரசிகர் என்பதால் அந்த பாட்டு எனக்கு ரொம்பப் இடிக்கும். கருப்பு வெள்ளையில் கூட என்ன பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்... :) பத்மினி ரசிகர் என்றால் வயசான ஆள் என்று நினைக்கக் கூடாது.... பூவே பூச்சூடவா வந்தது கூட தெரியாத பொடிபையன் நான்.

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் அது தான். உச்சரிப்பு, ராகமெல்லாம் சரியில்லன்னு சொல்லக் கூடாது.... ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னு நினைக்கிறென்... :)))

Un kannil.mp3 - Thamiz Priyan

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் இது தான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

புதிதாக பதிவு எழுத வருபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அவர்களுக்கு உதவவும் ஆவலாக இருப்பேன். டெம்ப்ளேட், கருவிப்பட்டை போன்றவற்றில் எனக்கு தெரிந்ததை உதவுவேன். (ரொம்பல்லாம் தெரியாதுங்க... தெரிந்ததை உதவியா செய்வேன்)

சமீபத்தில் ஒரு பதிவரின் தொடர்பு கிடைத்தது. சில பதிவுகளே எழுதி இருந்தார். உதவி என்று கேட்டதும் ஓடிப்போய் செய்து கொடுத்தேன்.

சில நாட்களுக்குப் பின் அவர் பற்றி தெரிய வந்தது. அவர் பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர். கொட்டை எங்கே என்றால் தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்து வரை கொட்டை போட்டவர். அவமானமாக போய் விட்டது. ஏமாற்றுவது பல வகை.. அதில் இது ஒரு வகை போலும்.. :(

Thursday, October 23, 2008

Flash News : பின்னூட்டப் பெட்டி மற்றும் டெம்ப்ளேட் தொல்லைகள் - சில விபரங்கள்!

Publish Post

இன்று நமது பதிவர்களில் சிலருக்கு பின்னூட்டப் பெட்டி திறப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிகின்றது. பிளாக்கரில் செய்யும் அப்டேட்களால் இந்த பிரச்சினை நிகழ்ந்துள்ளது போல் தெரிகின்றது. ப்ளாக்கர் டெம்ப்ளேட் இல்லாமல் மற்ற டெம்ப்ளேட் வைத்துள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமான உள்ளது.

அதாவது Post a comment என்பதை இடுகையின் கீழே அழுத்தும் போது, அது மீண்டும் இடுகையிலேயே நிற்கின்றது. ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ள பின்னூட்டம் தட்டச்சும் பெட்டியுடன் கூடிய பின்னூட்டப் பெட்டி அமைப்பு தானாக இடம் மாறியுள்ளது காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால்
Dash Board, Settings, Comments சென்று Comment Form Placement என்பதில் Embedded below post என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அதை என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு கீழே சென்று Save செய்து கொள்ளுங்கள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அதே போல் சிலருடைய பதிவுகளைத் திறக்கும் போது பதிவு திறக்காமல் சிறிது நேரம் அடம் பிடிக்கின்றது. அப்போது கணிணி சுத்தமாக செயல் இழந்து விடுகின்றது. நிறைய பேர் தங்களுடைய டெம்ப்ளேட்டில் தேன்கூடு மற்றும் சிரிப்பான்களுக்கு சில நிரலிகளை பயன்படுத்துகிறோம்.

தேன் கூடு செயல்பாட்டில் இல்லையாததால் அதனால் தாமதமாகின்றது. எனவே அதை எடுத்து விடுவது நல்லது.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி

<!--thenkoodu-comments-ping-code-->
<b:if cond='data:blog.pageType == "item"'>
<b:if cond='data:post.numComments != 0'>
<script expr:src=' "http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=" + data:post.url + "&amp;postid=" + data:post.id + "&amp;blogurl=" + data:blog.url + "&amp;cmt=" + data:post.numComments' language='javascript'
type='text/javascript'>
</script>
</b:if>
</b:if>
<!--/thenkoodu-comments-ping-code-->

இரண்டாவதாக சிரிப்பான் (Smiley) தெரிய பலரும் தீபாவின் நிரலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதோ பிரச்சினை இருப்பதால் பதிவு திறக்கும் போது கணிணி ஸ்தம்பிக்கிறது. எனவே அதையும் நீக்கி விடுங்கள்.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி
<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>

வேறு பிரச்சினைகள் இருந்தால் அதையும், அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதிலையும் கூறிச்செல்லலாம்.

இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!
லஞ்ச் பிரேக்கில் வந்த அவசரத்தில் பதிவு போட்டதால் தலைப்பு தட்டச்சும் போது எழுத்துப் பிழையாகி அர்த்தம் அனர்த்தமாகி விட்டது. அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன்.

Sunday, October 19, 2008

oru pathivarukku varan paarkkum padalam மற்றும் கணிணி முகப்பு தொடர் விளையாட்டு



நண்பர் தமிழன் வித்தியாசமான டேக்குக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நமது கணிணியில் இருக்கும் டெஸ்க் டாப் ஸ்கீரினை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து காட்டனுமாம். என்னய்யா இது கொடுமயா இருக்கு.... சரி நானும் போட்டுட்டேன். இதுதான் என்னோட ஸ்கிரீன். எந்த விதமான போர்ஜரியும் பண்ணாம அப்படியே எடுத்துட்டேன்.

பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.

ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்

ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் அடையாளங்கள் எல்லாம் என் ஸ்கிரினுக்கும் இருக்கும். தேவையில்லாத எல்லாமும் கிடைக்கும். அப்பப்ப சுத்தப்படுத்துவேன். அடுத்த வாரமே திரும்ப குப்பை குடவுனா மாறி விடும். இப்ப குப்பை கொடவுனா இன்னும் மாறதப்ப எடுத்தது. இதுவே இப்படின்னா? குப்பையா இருக்கும் போது??? ;))

அடுத்து நான் அழைப்பு விடுப்பது
1. சிங்கை அண்ணன் நிஜமா நல்லவன்
2. பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி
3. பிரியமுள்ள தம்பி சுடர்
4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு பதிவருக்கு வரன் தேடும் படலம்

காட்சி 1

“சுந்தர்! இது அதாண்டா அந்த பொண்ணோட போட்டோ! நல்ல படிப்பு படிச்சு இருக்கா! அழகாவும் இருக்கா! கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம் வேற வாங்கறாளாம்”

“போட்டோவைப் பார்த்து எப்படிம்மா தீர்மானிக்க சொல்றீங்க... இன்றைய மாடர்ன் உலகத்துக்கு தகுந்த பெண்ணா இருக்கனும்மா”

“என்னமோப்பா எனக்கு புரியலை. நல்ல குடும்பமா இருக்கு. நம்ம ஜாதிக்காரங்க.. தூரத்து முறையுல் உறவு கூட வருது. அவங்க குல தெய்வமும், நம்ம குல தெய்வமும் ஒன்னு தான்”

“என்னம்மா இன்னும் பட்டிக்காடா இருக்கீங்க! இந்த நவீன உலகத்துல உலக விஷயங்கள் நிறைய தெரிஞ்சு வச்சுருக்குற பெண்ணான்னு பாருங்கம்மா”

“உன்னை மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்யுற பொண்தானே? உனக்கு பிடிச்சா மாதிரி தான் இருக்கும். அண்ணா நகரில் பெரிய வீடு இருக்கு. இன்னும் இரண்டு விடு வேற இருக்காம். வாடகைக்கு விட்டு இருக்காங்களாம். கார் கூட இருக்குது. நல்ல இடமா தெரியுதுப்பா”

“அப்படியாம்மா... எனக்கும் நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல இடமா இருக்கும் போல இருக்கு.”

“ஆமா சுந்தர். போட்டோவோட கம்ப்யூட்டர் அட்ரஸ் கூட கொடுத்து இருக்காங்க நீ வேணா பேசிப்ப்பாத்துக்க. அப்புறமா பொண்ணு பார்க்க போகலாம்”

“ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா”

காட்சி 2

sunder : வணக்கம்
Sent at 12:05 PM on Sunday
suha : hai. Who r u?
sunder: என் பெயர் சுந்தர். வரன் பார்க்கும் விஷயமா போட்டோவும், இ மெயிலும் உங்க அப்பா மூலமா கொடுத்தாங்க
Sent at 12:10 PM on Sunday
suha : O... good
sunder: m நீங்க எங்க வேலை பார்க்குறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Sent at 12:14 PM on Sunday
suha: O..sure. TCS il programmer. irandu varushma irukken. neenga?
sunder: நான் விப்ரோவில் Project Manager! ஐந்து வருடமாச்சு
suha: O.. nice job
sunder:அதென்ன அமெரிக்க தேர்தல் பற்றி ஏதோ எழுதி இருக்கீங்க?
Sent at 12:19 PM on Sunday
suha: I am a blogger. ennoda blog la american electonil Mccainukku atharavaa pathivu pottu irukken
Sunder: ஓ.. அரசியலில் எல்லாம் ஆர்வம் இருக்கா?
suha: brb
Sunder: Ok
Sent at 12:20 PM on Sunday

suha: m... sollunga... friends kooppittanga.. canteen poitten
Sunder: பரவாயில்லைங்க... அரசியல பதிவெல்லாம் போட்டு இருக்கீங்களே? அவ்வளவு ஆர்வமா?
Sent at 12:28 PM on Sunday
suha: Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.
Sunder: தமிழ் ப்ளாக்ன்னா ரொம்ப பிரச்சினை எல்லாம் வருமே?
Suha: atukkaga namma karuththai sollama irukka mudiyumaa? pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum. aththaan innaikku namma samkukaththukku thevaiyaana onnu
Sunder: நல்லா பேசுறிங்க... சரி அப்புறமா பார்க்கலாம். கொஞ்சம் வேலை இருக்கு. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க... வணக்கம்.
suha: No problem. Bye.

காட்சி 3


“சுந்தர் என்னடா இப்படி சொல்ற? நல்ல குடும்பமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு நீயும் அப்படித்தாம்மா தெரியுதுன்னு சொன்ன”

“இல்லம்மா.. இந்த பொண்ணு வேணாம்மா”

“என்னடா ஆச்சு உனக்கு?. அந்த பொண்ணை பார்க்கக் கூட போகலையே. அதுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்ற?”

“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”

“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”

Friday, October 17, 2008

சில பினாத்தல்களும், குறள் கதை, மற்றும் தமிழ் பதிவர்களின் ஆர்வமும்

.
.
ஒரு வீட்டுல இரண்டு பூனைகள் இருந்தது. ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். இன்னொரு பூனை குட்டிப் பூனை. பார்க்க அழகா இருக்கும்.

பெரிய பூனைக்கு குட்டி பூனையைப் பார்த்தாலே ஆகாது. எப்பப் பாத்தாலும் குட்டிப் பூனையை மிரட்டி, உருட்டிக் கிட்டே இருக்கும். திடீரென்று ஒருநாள் அதோட வில்லத்தனமான மூளை வேலை செய்தது. இந்த குட்டிப் பூனை இருந்தா தானே பிரச்சினை. அதையே இல்லாம ஆக்கிட்ட?

அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு பெரிய மெயின் ரோடு போகுது. எப்பப்பார்த்தாலும் நிறைய கார்கள் சர், சர்ரென்று போய்க்கிட்டே இருக்கும். ஒருநாள் பெரிய பூனை, குட்டிக்கிட்ட போய் நைச்சியமா பேசுச்சு. ரெண்டு பேரும் மெயின் ரோட்டில் போய் வேகமா போற வண்டிகளை வேடிக்கை பார்க்கலாம்னு சொல்லிச்சு.

குட்டிப்பூனையும் அதோட கள்ளத்தனம் தெரியாம சரின்னு கூட போச்சு. வண்டிக வேக வேகமா வந்துகிட்டு இருக்கு. சட்டுன்னு குட்டிப்பூனையை தூக்குன பெரிய பூனை, வேகமாக வந்துக்கிட்டு இருந்த ஒரு காருக்கு முன்னாடி தூக்கி போட்ருச்சு... கிரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ந்னு சத்தம்... அப்புறம் என்னாச்சு... அதை கடைசில் காட்றேன்.. அதுக்கு முன்னால என்னை கொஞ்சம் பினாத்த விடுங்க... ;)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது. மொத்தமாக இந்தியா வரும் முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக உடல் பரிசோதனை முக்கியம். இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே கட்டாயம்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது, இரத்தம் கொடுத்த பிறகு எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள ரேடியோகிராபர் ஒரு பெண். கண்களை மட்டும் தெரியும் வண்ணம் பர்தா அணிந்து இருந்தார். எனது கோப்பை அவரிடம் கொடுத்து விட்டு, எக்ஸ்ரே இயந்திரத்தின் முன், எக்ஸ்ரே எடுக்கும் முறைப்படி நின்று கொண்டேன். சில வினாடிகளில் எக்ஸ்ரே முடிந்தது.

எக்ஸ்ரே எடுத்த அந்த பெண் அரபியில் கூறினார் “எந்த சிரமமுல்லாமல் நான் எக்ஸ்ரே எடுப்பது இதுதான் முதல் முறை. நன்றி!”. அவருக்கு சிரிப்பை பதிலாக உதிர்த்து விட்டு திரும்பினேன். பாவம் இது போன்ற ரேடியாலஜி வேலை செய்பவர்கள்.

துபாயில் இருந்த போது ஷார்ஜா Preventive Medicine Dept.. ல் வேலை செய்தேன். அங்கு தான் ஷார்ஜா விசாவில் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளைச் சேர்ந்தவர்களும் வரக்கூடிய இடமாக இருக்கும். அங்குள்ள ரேடியாலஜி பகுதியில் ஒரு மராட்டி பெண் இருந்தார். (श्रध्दा - shradhdha - தமிழில் எழுத வரவில்லை). அங்கு மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை எக்ஸ்ரே இயந்திரத்தின் முன் நிறுத்தி கையை பின்னால் கட்ட மடக்கி, நெஞ்சை நிமிர்த்தி, மூச்சை இழுத்துப் பிடிக்கச் சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவார்.

இதைப் பார்க்கும் போது சில நேரங்களில் சிரிப்பாகவும், பல நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அங்கு இருந்து பார்த்து பழக்கமானதால் எக்ஸ்ரே எடுக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனது பதிவில் ஹிட்ஸ் கவுண்டர் வைத்துள்ளேன். பதிவை போன வருடமே ஆரம்பித்து எழுதி வந்தாலும் ஏபரலில் ஹிட்ஸ் கவுண்டர் போட்டதாகவே நினைவு. ஹிட்ஸைப் பார்த்து, அவ்வப்போது நமது உறவுக்காரப் பதிவர்கள் வந்தார்களா என பார்த்துக் கொள்வேன். சாதாரணமாக பதிவு போடும் நாளில் 200 முதல் 300 ஹிட்ஸூல் இல்லையென்றால் 100 முதல் 150 வரை இருக்கும். தனி வருகை 200 க்குள் தான் இருக்கும். சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.

என்னப்பா இது நியாயம்? நல்ல பதிவு எழுதும் போதெல்லாம் காணாம போய்டுறீங்களே... ;))




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமீபத்தில் நண்பர் ஒருவர் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு, நினைவுப்படுத்தும் வகையிலும், நண்பர்களின் பிறந்தநாட்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும் ஒரு இணைய தளத்தில் இருந்து நமக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அங்கு சென்று பதிந்தத போது, எனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அங்கேயே இருந்து வசதி இருப்பதாக வந்தது. அங்கு நமது கூகுள் மெயில் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் அவர்களே நமது நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பார்களாம். பின்னர் தான் புரிந்தது. இதே முறையில் தான் எனக்கும் அழைப்பு வந்துள்ளது என்று.

இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற இணைய தளங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நமது மின்னஞ்சலின் பாஸ்வேர்ட்டைத் தருவதன் மூலம் அங்குள்ளவர்கள் நமது மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகலாம். எச்சரிக்கை கவனத்துடன் இருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெரிய பூனைக்கு என்ன ஆச்சி? விதி வலியது என்று சொல்வார்கள். கோட்டை கொத்தளங்களுக்குள் சென்று மறைந்து கொண்டாலும், நடப்பது நடந்தே தீருமாம். இதை சிம்பிளாக விளக்கும் இந்த GIF படத்தைப் பாருங்க... இதுதான் சொந்த செலவுல சூடு என்பதா... :))




படம் நன்றி : பிகேபியின் வலைப்பக்கம்

நீதிக்கான குறள் :
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 208

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

குறள் உதவி : கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா, மற்றும் துளசி டீச்சர்.

இதே போல்(?) குறளை வைத்து கதை சொல்பவர்கள் சொல்லலாம். என்னை அழைத்த ஜீவ்ஸுக்கு நன்றி!

Thursday, October 9, 2008

துர்காவின் லாலல்லாலாவும், புதிரும், கேமராவுமாக கலவையான சிந்தனைகள்

.

கலவை 1

ஈத் விடுமுறையில் நண்பர் தமிழனையும், இன்னும் சில பதிவர்களையும் சந்திப்பதற்க்காக ஜித்தா சென்றிருந்தேன். ஜித்தாவை அடைந்து தமிழனக்கு போன் செய்த போது வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன்.
என் அருகில் என்னைப் போலவே ஒரு மலையாளியும் ஒருவருக்காக காத்திருந்தார். அவருடன் சம்சாரித்துக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்று ஆகி விட்டது எனக் கூறி அவரை சாப்பிட்டுவிட்டு வரும்படிக் கூறினேன். அவரும் 1/2 மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு வந்தார். என்னையும் சாப்பிட்டுவிட்டு வரும்படி அவர் வற்புறுத்திய போது, நண்பருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவர் வரும்வரை காத்திருந்து அவருடன் தான் சாப்பிடுவேன் என்று கூறி விட்டேன். மணி இரண்டானது, இரண்டரையானது, மூன்றும் ஆகியது.

பசி சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டு இருந்தது. அப்போது எங்கு ஒரு சிறுவன் வந்தான். நான் அமர்ந்திருக்கும் நிலையில், என் உயரத்திற்கு கொஞ்சம் குறைவாக...
“அண்ணே”
“தம்பி அந்தாண்ட தள்ளிப் போ! என் நண்பனுக்காக காத்துக் கிட்டு இருக்கேன்”
“அண்ணே அது வந்து....”
‘சொன்னா கேக்க மாட்டீயா? போ..போ”
“அதிலைண்ணே! அது வந்து....”
“தம்பி உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு! உன்னை மாதிரி சின்ன ப்சங்களெல்லாம் இப்படி தனியா சுத்தக் கூடாது. பிள்ளை பிடிப்பவன் தூக்கிட்டுப் போய்டுவான்... வீடு எங்க இருக்கு? உங்க அப்பா, அம்மா எங்க? ஒழுங்கா வீட்டுக்கு போ”
“அண்ணே நான் சொல்வதை முழுசா கேளுங்க....”
“நானே என் நண்பனுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்...உன் கதையை எல்லாம் கேக்க முடியாது.. தள்ளிப் போ..”
“யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!”
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

கலவை 2

தமிழ் மணத்தில் சில பதிவர்கள் சில புதுமையாக குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளனர். அவைகளைப் பார்த்ததும் ஓடியே போய் விடுவேன். நண்பர் நிஜமா நல்லவன் சமீபத்தில் ஒரு புதிர் போட்டார். வழக்கம் போல் ஓடி வந்து விட்டேன். அப்போது சாட்டிங்கில் இருந்த சுமதி அக்கா, விடாப்பிடியாக அந்த புதிரைக் கண்டுபிடிக்கக் கூறினார்கள். இருவரும் இணைந்து விரைவிலேயே கண்டுபிடித்து விட்டோம்... சுலபமாக தெரிந்தது.

அதே போல் இலவச கொத்தனாரும், யோசிப்பவரும் புதிர் போட்டிருந்தனர். அதையும் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டேன். அப்போது வடகரை வேலன் அவர்கள் அதை கண்டுபிடிக்குமாறு கூற, அதிலும் மூக்கை நுழைத்துப் பார்த்தேன். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், பின்னர் சுலபமாகவே இருந்தது. யோசிப்பவரின் புதிரில் ஒன்றைத் தவிர மற்றவைக்கு பதில் சொல்லி விட்டேன்.

அடுத்த தடவைகளில் நீங்களும் முயற்சி செய்யுங்கள்... கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...

தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க...இனி நாமலும் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்... வேண்டாமா? அப்ப இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க

புதிர் : 1

கரத்தைக் குறுக்கி, உழுவதின் முதல் ஓசையை மாற்றி, வேய்ந்தால் எழுதலாம் (3)

கலவை 3

ஏஷியா நெட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் வரும்.. அதைப் பார்ப்பது வழக்கம்..இப்போது நமது தொலைக்காட்சியில் வருவதில்லை. அதில் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி. இதைப் பற்றி ஒரு பதிவு கூட முன் காலத்தில் இட்டேன்.

இசையில்லாத அல்லது குரலுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள பாடல்களை மட்டுமே விரும்பி ரசிப்பேன்... அந்த வரிசையில் கானா அண்ணனின் ஒரு பதிவின் மூலம் கிடைத்த இந்த பாடல் எனது ஆல் டைம் பேவரைட் லிஸ்ட்டில் சமீபத்தில் இடம் பிடித்துள்ளது. ( மொத்தமே 20, 25 பாடல்கள் தான் பேவரைட் லிஸ்ட்டில்)... நீங்களும் துர்கா விஸ்வநாத்தின் இந்த பாடலை ரசியுங்கள்... கடைசியில் வரும் லாலால்லால்ல்ல்லால்லால்லா வை விட்டு விடாதீர்கள்.






http://www.durgaviswanath.com/

கலவை 4


விரைவில் டிஜிட்டல் கேமரா வாங்கலாம் என்று எண்ணியுள்ளேன். சமீபத்தில் நந்து சார் எடுத்த நிலாவின் படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே என்று தான். ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி Panasonic Lumix DMC-FZ18 என்ற கேமரா பட்ஜெட்டுக்குள் வரும்போல் தெரிகின்றது.

விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.

Friday, October 3, 2008

ரிப்போர்ட் - அக்டோ-2 ஜெத்தா பதிவர் சந்திப்பு

.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்
1. ஜமாலன்
2. கல்ஃப் தமிழன்
3. தமிழன்...
4. தமிழ் பிரியன்
5. பெயர் வெளியிட விரும்பாத ஒரு இலங்கைப் பதிவர்

ஏற்கனவே ஒரு பதிவில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். இதை அடுத்து ஈகைத் திருநாள் விடுமுறையான அக்டோபர் 2 அன்று ஜித்தாவில், இந்தியர்கள் கூடக் கூடிய ‘பலத்’ என்ற இடத்தில் மாலை 5 மணிக்கு சந்திக்க முடிவானது.

அன்றைய தினம் காலையிலேயே நான் இருக்கும் தாஃயிபில் இருந்து கிளம்பி 220 கி.மீ தூரம் உள்ள ஜித்தாவை சென்றடைந்தேன்... பணியின் அழுத்தத்தால் கொஞ்சம் தாமதாக நண்பர் தமிழன் மதியம் 3 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் ஒரு இலங்கையைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத நண்பரும் வந்திருந்தார்.

மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருக்கும் இரயில் அமைப்பு பொம்மைக்கு கீழே அமர்ந்து பேச ஆரம்பித்து இருந்தோம். பதிவரும், எழுத்தாளருமான ஜமாலன் 4:45 க்கே அருகில் வந்து தொலை பேசினார். உடனே வந்து அவரும் எங்களுடன் அமர்ந்து கொண்டார். சற்று நேரத்தில் நண்பர் கல்ஃப் தமிழனும் வந்து சேர்ந்தார்.

முதலில் சுய அறிமுகங்களை ஒருவர் மற்றவர்களுக்கு செய்து கொண்டோம். இதில் அனைவரும் முதன் முறையாக நேரில் சந்தித்துக் கொள்கிறோம் என்பது இன்னொரு சிறப்பு.

ஜித்தா கடற்கரை நகரம் என்பதால் அதிக ஈரப்பதத்தின் காரணமாக அனைவரும் வியர்வையில் குளித்துக் கொண்டே உரையாடல்களைத் தொடர்ந்தோம்.

ஜமாலன் அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் பதிவர்களுக்கு தேவைப்படாது. கல்ஃப் தமிழன் 2005 முதல் தமிழ் பதிவுகளை உன்னிப்பாக படித்து வருகிறார். ஆனால் எழுதுவதில்லை. தமிழ் பதிவர்கள், பதிவுகள், திரட்டிகள் பற்றி நிறைய பேசுகின்றார்.

அனைவரும் இணைந்து பேசிய முக்கிய விடயங்களை தொகுத்து தருகின்றேன். இதில் பெரும்பாலானவை ஜமாலன் அவர்கள் எங்களுக்கு விளக்கம் சொல்லக் கூடியவையாகவே இருந்தது.
* தமிழ் பதிவர்களும், இன்றைய பதிவுகளும்
* தமிழ், தமிழர்கள், தமிழர் தேசியம் என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லது நாமே அதை விரும்பக் கூடிய சிந்தனைகள்
* உடலரசியலும், மனிதர்களின் பார்வைகளும்... ஆண், பெண் என்ற வேறுபாடையே சமூகம் தான் வளர்க்கிறது என்பதும், சிறு வயதில் வேறுபாடு இல்லாமல் வளரும் குழந்தைகள் பெரிதானது பாலின வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து செல்வதும் தங்களுக்கு தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்வதும்
* பின் காலனீயத்தை ஒட்டியே கட்டமைக்கப்படும் இலக்கியப் படைப்புகள்
* பின் நவீனத்துவதை எளிதில் புரிய வைக்கும் அறிமுகங்கள்... எந்த கருப்பொருளையும் சாராமல் படைக்கப்படும் எழுத்தாளனின் படைப்புகளும், அது மக்களிடம் சென்று அடைய வேண்டிய முறைகளும்
* போஸ்ட் மார்டனிசமும், தமிழ் மக்களின் அது பற்றிய புரிந்துணர்வும்...
*எதை நாம் கண்ணால் பார்க்கின்றோமோ அதை அப்படி ஏற்றுக் கொள்ளும் முறையில் வாழக் கூடிய இன்றைய சூழலும், பின் நோக்கிய அல்லது அடுத்து வரக் கூடிய மாற்றங்களுடன் கூடிய உலகத்தை பார்க்க வேண்டிய முறையும்
* தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், மலையக மக்கள் என பல கட்டங்களாக உள்ள இலங்கைப் பிரச்சினைகள்
*புத்தகங்களைப் படிக்க வேண்டியதன் அவசியங்களும், அவைகளைத் தேர்வு செய்யும் முறைகளும்
* ஆனந்த விகடன், குமுதம், பாக்கெட் நாவல்கள், தீராந்தி, காலச்சுவடு... இன்ன பிற நூல்கள்
* சமீபத்தில் படித்த, படிக்கும் நூல்கள், பார்த்த, பார்க்கும் குறும்படங்கள், எழுதிய, எழுதும் கட்டுரைகள்
*இந்திய , இலங்கை எழுத்தாளர்களும் அவர்கள் எழுதக் கூடிய எழுத்துக்களும், தன்மைகளும்
*இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கும் 32 வகையான கதை ‘நாட்’ களும், அதில் வரக் கூடிய 7 வகையான கதாபாத்திரங்களும்
* சாப்ட் போர்னோக்கள், நாம் சாதாரணமான ஒருகதை படிக்கும் போது எழுத்தாளன் கதை நடக்கும் களத்தையும். கதாபாத்திரத்தை நமக்கு முன் உருவகப் படுத்தி காட்டு விடுவதும், பின்னர் அந்த கதாநாயகன், நாயகியை நம் மனதிற்குள் நாமே உருவகப்படுத்திக் கொண்டு அவனை அல்லது அவளை துரத்திச் சென்று கொண்டிருப்பதும், அவளது அந்த வாழ்வை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்
* தமிழ் திரையுலகமும், சின்னத் திரை சீரியல்களும்
* தமிழக மற்றும் இலங்கை முஸ்லீம்களும், தங்களது சமூகம் சார்ந்த கலாச்சாரத்தை விடுத்து தனியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முயல்வதும், அதனால் விளைந்து கொண்டு இருக்கும் தீமைகளும்
*நாகார்ஜூன் போன்ற சிறந்த பதிவர்களின் அறிமுகங்கள்
*உலகில் உள்ள அடுத்த கட்ட எழுத்துக்களை படித்துப் புரிந்து கொள்கிறோமோ, அதை அப்படியே வெளித்தருவதும், இன்னும் சில காலங்களில் அப்படிப்பட்ட எழுத்துக்கள் தமிழுலகில் வலம் வர வேண்டியதன் அவசியமும்
*தமிழ் மணத்தில் இயங்கும் கும்மி குரூப்புகள் பற்றி (ஹிஹிஹி நாங்கதேன்)
*இன்னும் பல பல இத்யாதிகள்

எந்த விதமான சுய, பிற சொறிதல் இன்றி சாதாரணமாக நண்பர்கள் பேசிக் கொள்ளும் பேச்சுக்களாகவே அமைந்திருந்தது. நிறை குறைகள் விரிவாக அலசப்பட்டன. இறுதியாக அருகில் இருந்த தமிழ் உணவகத்தில் இரவு உணவு முடித்து மகிழ்வுடன் ஊர் திரும்பினேன்.

கடந்த பல ஆண்டுகளில் இது போல் ஒரு கருத்து பரிமாற்றத்திற்கான நண்பர்களும், களமும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருந்த ஏக்கம் நிறைவேறியதாகவே படுகின்றது.

வரும்போது ஜித்தாவின் நினைவாக தங்கமணியின் கட்டளைக்கு (?) இணங்க பேட்டரியில் இயங்கும் மின் விசிறி வாங்கினேன்... அதற்காக கல்ஃப் தமிழன் பல கடைகளிலும் ஏறி இறங்கி விசாரித்து வாங்கிக் கொடுத்தார்.. நன்றிகள்!

நண்பர் தமிழன் தனது நண்பருக்காக புதிய செல்பேசியும். தனக்காக அவரது வாழ்க்கையில் முதன் முறையாக ‘உள்ளாடை’யும் வாங்கிக் கொண்டாராம்.. ;))

சந்திப்பிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Update : துளசி டீச்சரின் வேண்டுகோளுக்காக
ஜமாலனும், நானும் செட் தோசை, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி சாப்பிட்டோம். கல்ஃப் தமிழன், தமிழன் மற்றும் இலங்கைப் பதிவர் ஆகியோர் இட்லி,சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, இரண்டு வடை சாப்பிட்டனர். இறுதியில் அனைவரும் தேநீர் அருந்தினோம்.... அப்ப இது பதிவர் சந்திப்பா? இல்லியா?