Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Friday, July 30, 2010

சமிக்ஞைகளும், குடும்ப ரகசிய மொழியும்

குடும்பத்தில் சமிக்ஞைகள்(Signals) ரொம்ப முக்கியமானவை. பல நேரங்களில் இதன் முக்கியத்துவம் தெரிய வரும். சமிக்ஞைன்னா என்னவா? அதைத் தானே சொல்லப் போறோம்.... பொதுவா பொதுவெளியில் பேசும் போது எல்லாருக்கும் புரியக் கூடிய மொழியில் பேசினால் அது செய்தி ஆகி விடும். பொதுவெளியில் பேச, தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அது நம்மைத் தவிர மற்றவர்களுக்குப் புரியக் கூடாது. அதான் நாம் பேசுவது, தெரிவிப்பது என்கிரிப்ட் (Encrypt) முறையில் இருக்க வேண்டும். இதுதான் லாஜிக்.

இதன் அவசியம் என்னவென்று பார்த்தால்.... வெளியே நாம் செல்லும் போது, மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது அல்லது இணைய வழியாக மிக முக்கிய ரகசியங்கள் உள்ள மின்னஞ்சல் அனுப்பும் போது இதைப் பயன்படுத்தலாம். இது படிப்பவர்களைத் தவிர யாருக்கும் புரியாது.

எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். எங்கள் பாரம்பரியம் திருநெல்வேலி மாவட்டத்துடன் தொடர்புடையது. எங்கள் தாத்தா,பாட்டி திருமணம் முடிந்து எங்கள் பெரியப்பா பிறக்கும் வரை வாசுதேவநல்லூர் என்ற எங்கள் பரம்பரை ஊரில் இருந்து இருக்கின்றார்கள். பின்னர் பிழைப்புக்காக இப்போது இருக்கும் ஊருக்கு வந்து இருக்கின்றார்கள். வரும் போது எதையும் கொண்டு வரவில்லையென்றால் பல பழக்க வழக்கங்களை எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

சமிக்ஞை இரண்டு வகை. ஒன்று உடல் மொழி இரண்டாவது சொற்கள் வழியிலான மொழி. உடல் மொழி நிறைய பேருக்கு தெரிந்தது தான். கண் பார்வை, கை அழுத்தம், கால் மிதி போன்றவை. ஏதாவது ஒரு விஷயம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நாம் அவரைப் பார்த்தால் திடீரென்று அப்பா கண்ணை இறுக மூடித் திறப்பார். அதாவது அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இவருடன் பேசக் கூடாது என்றுஅர்த்தம். அப்பாவுடனும், மற்றவர்களுடனும் பேசிக் கொண்டு இருப்போம். திடீரென்று அப்பா நம் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு அழுத்து அழுத்துவார். இனி நாம் பேசக் கூடாது அல்லது நாம் தான் பேச வேண்டும்.. இது போல் இன்னும் சில குறியீடுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வரும். சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் அர்த்தம் மாறும். சில சமயம் இதில் தவறு நடக்கும் போது வீட்டிற்கு வந்ததும் விளக்கம் கிடைக்கும்.

சில நேரங்களில் எதிராளி நம்மை விட கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் நமது சமிக்ஞைகள் புரிந்து விட வாய்ப்பு இருக்கின்றது. அல்லது தூரமாக இருந்தாலோ, அப்பாவை நேரடியாக பார்க்கும் விதத்தில் இல்லாமல் இருந்தாலோ அந்த சூழலில் இரண்டாவது மொழி பயன்படும். இது இந்தி போல் வேறு மொழியா என்றால் அதுதான் இல்லை. எங்கள் வீட்டில் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. அப்புறம் அது என்ன மொழி? அதுதான் ரகசிய மொழி. சுமார் 25, 30 வார்த்தைகள் தான் இருக்கின்றன இம்மொழிக்கு. இது எந்த மொழியுடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நேரத்திற்கு தகுந்தாற் போல் சங்கேத தகவல்களைத் தெரிவித்து விடலாம்.


ரொம்ப முக்கியமானது எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஆட்களுக்கு இம்மொழி தெரியாது. இதை நாமே உருவாக்கலாம். உங்கள் குடும்பத்திற்கான சங்கேத மொழியை நீங்களே உருவாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்து பழக்கலாம். நல்லது, கெட்டது, கொடு, கொடுக்காதே, பணம், கெட்டவன், நல்லவன், கண்டுகொள்ளாமல் இரு, இவன், அவன் இன்னும் இது போன்ற பொதுவாக வெளியில் சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு சங்கேத வார்த்தை இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு நல்லது , கெட்டது என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கயழி, பசிறு என்ற வார்த்தைகளை இவைகளுக்கு முறையே சங்கேத வார்த்தையாக பாவித்துக் கொள்வோம். கடையில் இருக்கிறோம். பொருள் நல்ல பொருள் என்று தெரிகின்றது. நாம் ‘கயழி போல இருக்கு’ என்று நமக்குள் பேசிக் கொண்டால் கடைக்காரருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. எனவே நாம் பேரம் பேசும் போது நம்முடைய உணர்வு அவருக்குப் புரியாது. அதாவது பிடித்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமா?, இல்லையா? என்று அவர் திணறுவார். அதைப் பயன்படுத்தி பேரத்தைக் குறைக்கலாம்.

அதே போல் வேறு ஒரு இடத்தில் இருக்கிறோம். நம் முன் இருக்கும் ஆள் சரியில்லை போல் தோன்றுகின்றது. நம்முடன் இருக்கும் மனைவிக்கோ, மகனுக்கோ உணர்த்த வேண்டும். ‘ ஆள் பசிறு’ என்று எங்கோ பார்த்து நாம் சொன்னால் உடனே அவர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம். எதிராளிக்கும் நாம் என்ன சொன்னோம் என்பது புரியாது.

இதில் மிக முக்கியமானது சங்கேத வார்த்தைகளை நாம் பேசும் போதும், கேட்கும் போது மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாகப் பேசக் கூடாது. கொஞ்சம் கம்மலாக பேச வேண்டும். அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது. சங்கேத வார்த்தைகள் தயாரித்தலும், அதைப் பழக்குப்படுத்தலும், உடல் மொழியை உணர வைத்தலும், முக பாவத்தை ஒழுங்குபடுத்துதலும் ஏதோ படிக்க, கேட்க பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது மிக மிக சுலபமானது. கிட்டத்தட்ட நம் இணையத்தில் சாட்டில், டிவிட்டரில், பஸ்ஸில் பேசிக் கொள்ளும் சங்கேத வார்த்தைகள் போல் தான். எங்கள் வீட்டில் பண விபரம் குறித்து பேசும் போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆங்கில எண் வைத்துத் தான் பேசுவோம்.

இதே போல் நமது குடும்பத்தினருக்கு மட்டும் புரியும் வண்ணம் ஒரு சிறு அகராதியை உண்டாக்கி வாரத்திற்கு இரு வார்த்தைகள் என்ற வீதத்தில் பேசிக் கொண்டே வந்தால் சில மாதங்களில் அதில் நிபுணத்துவம் அடைந்து விடலாம்.

எங்கள் வீட்டில் சில நேரங்களில் இது பிரச்சினையாகும். எப்படி? வீட்டிற்கு புதிதாக மருமகள் வந்தால் அவர்களுக்கு இந்த மொழிகள் எல்லாம் புரியாது. அவர்களுக்கும் கொஞ்ச நாட்களில் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்து விடுவோம். வேறு வழி இல்லாத கட்டாயத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட திருமணமான புதிதில் சில நேரங்களில் திண்டாட வேண்டி வந்தது. பின்னர் என் மனைவிக்கு இவைகளை விளக்கி கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது என் அம்மாவுடன், அக்காவுடன் வெளியே சென்றால் என் மனைவியும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.

நீங்களும் உங்கள் வீட்டில் இப்படியான ஒரு அகராதியை உருவாக்குங்கள். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தத்துடன் தொடர்பு இருக்கக் கூடாது. முதலில் சுவாரஸ்யமாக ஜாலியாக பழகுங்கள். பின்னர் பழக்கத்தில் வந்து அதுவே நல்ல பலன் தரும்.

டிஸ்கி : இதில் குறிப்பிட்டு இருக்கும் சில வார்த்தைகள் எங்கள் அகராதியில் இலலாதவை. எடுத்துக்காட்டுக்காக மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.

Saturday, July 10, 2010

அ முதல் ஃ வரை - தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்நாட்டு பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
  • அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
  • அசையாத மணி அடிக்காது
  • அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
  • அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
  • அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
  • அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
  • அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
  • அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
  • அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
  • அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
  • அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
  • அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
  • அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
  • அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
  • அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
  • அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
  • அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
  • அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
  • அன்பே கடவுள்.
  • அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
  • அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
  • அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
  • அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
  • அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
  • அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
  • அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
  • அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
  • அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
  • அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
  • அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
  • அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
  • அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
  • அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
  • அதிக ஓய்வு அதிக வேதனை.
  • அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
  • அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
  • அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
  • அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
  • அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
  • அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
  • அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
  • அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
  • அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
  • அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
  • அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
  • அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
  • அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
  • அரசனும் அன்னைக்கு மகனே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
  • அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
  • அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
  • அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
  • அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
  • ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
  • ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
  • ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
  • ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
  • ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
  • ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
  • ஆறுவது சினம்.
  • ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
  • ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
  • ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  • ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
  • ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  • ஆலை விழுது தாங்கியது போல.
  • ஆடு பகை குட்டி உறவா?
  • ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
  • ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
  • ஆரம்பத்தில் சூரத்துவம்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
  • ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
  • ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
  • ஆற்றுநீர் பித்தம் போக்கும்
    குளத்து நீர் வாதம் போக்கும்
    சோற்றுநீர் எல்லாம் போக்கும்
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

  • இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
  • இளமையில் கல்.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
  • இளமையில் கல். முதுமையில் காக்கும்.
  • இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
  • இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
  • இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
  • இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
  • இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
  • இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
  • இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
  • இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
  • இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
  • இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
  • இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
  • இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
  • இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
  • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
  • இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
  • இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
  • இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.

  • ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
  • ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
  • ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
  • ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
  • ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

  • உழுத நிலத்தில் பயிரிடு.
  • உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
  • உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
  • உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
  • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
  • உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
  • உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
  • உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
  • உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
  • உழைத்து உண்பதே உணவு.
  • உப்பிட்டவரை உள்ளவும் நினை.
  • உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

  • ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
  • ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
  • ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

  • எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
  • எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
  • எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
  • எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
  • எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
  • எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
  • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
  • எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
  • எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
  • எண்ணம்போல் வாழ்வு.
  • எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

  • ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
  • ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
  • ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
  • ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
  • ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?

  • ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
  • ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
  • ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
  • ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
  • ஒழுக்கம் விழுப்பம் தரும்.
  • ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
  • ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
  • ஒத்தடம் அரை வைத்தியம்.
  • ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
  • ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

  • ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
  • ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
  • ஓடிப் பழகிய கால் நிற்காது.
  • ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.

  • கண்ணுக்கு இமை பகையா?
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
  • கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
    கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
    பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
  • கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
  • கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
  • கடுங்காற்று மழைக்கூட்டும்.
    கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
  • கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
  • கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
  • கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
  • கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
  • கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கல்வி விரும்பு.
  • கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
  • கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
  • கணக்கு எழுதாதன் நிலைமை.
    கழுதை புரண்ட இடம் மாதிரி.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல.
  • கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
  • கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா

  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  • கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
  • கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
  • கார்த்திகை கன மழை.
  • கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
  • கார்த்திகை கண்டு களம் இடு.
  • கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
  • காணிச் சோம்பல் கோடி நட்டம்.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
  • காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
  • காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
  • காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
  • காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
  • காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
  • கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
  • கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
  • கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
  • கார்த்திகை கால் கோடை.
  • கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி

  • கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
  • கிட்டப் போயின் முட்டப் பகை.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
  • கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ

  • கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு

  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
  • குருடனுக்கு ஒரே மதி.
  • குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
  • குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
  • குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
  • குதிரையும் கழுதையும் ஒன்றா?
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
  • குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குடி குடியைக் கெடுக்கும்.
  • குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
  • குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
  • கூலிப் படை வெட்டுமா?
  • கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ

  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
  • கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
  • கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை

  • கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
  • கை பட்டால் கண்ணாடி.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ

  • கொடிக்கு காய் பாரமா?
  • கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ

  • கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
  • கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
  • கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
  • கோமளவல்லிக்கு ஒரு மொழி
    கோளாறுகாரிக்குப் பல மொழி
  • கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ

  • கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.

  • சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
    சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
  • சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
  • சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா

  • சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி

  • சிறுதுளி பெருவெள்ளம்.
  • சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
  • சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
  • சித்திரை எள்ளைச்சிதறி விதை.
  • சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
    பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
    வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
  • சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
  • சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
  • சித்திரை மழை செல்ல மழை.
சீ

  • சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு

  • சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
  • சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
  • சுக்கைப் போல மருந்தில்லை.
  • சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
  • சுத்தம் சோறு போடும்.
  • சுற்றம் சூழ வாழ்
  • சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
  • சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ

  • சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
  • சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
  • சூதும் வாதும் வேதனை செய்யும்
செ

  • செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
  • செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
  • செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே

  • சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
  • சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ

  • சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
  • சோம்பித் திரியேல.
  • சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?

  • தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
  • தண்ணீரே உணவகளின் அரசன்.
  • தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
  • பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
  • மனிதனுக்கச் சோதனை பெண்!
  • தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
  • தண்ணீரில் அடி பிடிக்கிறது.
  • தலை பகை, வால் உறவா?
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
  • தலைக்குத் தலை பெரிய தனம்.
  • தன் தப்பு பிறருக்குச் சத்து
  • தன் உயிர்போல் மண் உயிர் நினை.
  • தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
  • தன் கையே தனக்கு உதவி.
  • தர்மம் தலை காக்கும்.
  • தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா

  • தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
  • தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
  • தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
  • தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
  • தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
  • தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
  • தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
  • தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
  • தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி

  • திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
  • திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ

  • தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
  • தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து

  • துறவிக்கு வேந்தன் துரும்பு.
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
  • துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
  • தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ

  • தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
  • தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
  • தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
  • தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
  • தூங்காதவனே நீங்காதவன்.
  • தூரமிருந்தால் சேர உறவு.
தெ
  • தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
  • தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
  • தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
  • தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
  • தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
  • தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
  • தையல் சொல் கேளேல்.
  • தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
  • தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
  • பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பணம் உள்ளவனுக்கு அச்சம்;
  • பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
  • பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
  • பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
  • பல் போனால் சொல் போச்சு.
  • பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
  • பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
  • பங்குனி மாதம் பதர் கொள்.
  • பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
  • பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
  • படுக்க படுக்க பாயும் பகை.
  • பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
  • பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
  • பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
  • பணம் பாதாளம் வரை பாயும்.
பா
  • பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
  • பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
  • பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
  • பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
  • பிச்சை புகினும் கற்கை நன்றே!
  • பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
  • பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
  • புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
  • புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
    சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
    யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
  • புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
  • புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
  • புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
    முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
  • பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
  • பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
  • பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
    ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
  • பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
    சுவருக்கு மண்ணிட்டுப் பார்
  • பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
  • பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
  • பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
  • பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
  • பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
  • பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
  • போகும்போது புளியமரத்தடியில் போ
  • வரும்போது வேப்பமரத்தடியல் வா.
  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
  • நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  • நன்றி மறவேல்.
  • நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
  • நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
  • நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
  • நன்மைக்கு நன்மை செய்
    தீமைக்கு நன்மையே செய்
  • நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
  • நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
  • நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
  • நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
  • நாளை என்பது நட்டாற்று ஓடம்.
  • நாளை என்று ஒருநாள் உண்டா?
  • நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
  • நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
  • நாளும் அதிகாலையில் நீராடு.
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
  • நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
  • நீலிக்கு கண்ணீர் இமையிலே.
  • நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
  • நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
  • நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
  • நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • மனம் போல வாழ்வு
  • மனம் ஒரு குரங்கு
  • மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
  • மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
  • மனைவி வீட்டின் ஆபரணம்.
  • மனைவி சொல்லே மந்திரம்.
  • மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
  • மனித நேயம் வளர்ப்பதே மதம்.
  • மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
  • மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
  • மதியாதார் வாசல் மிதியாதே!
  • மனசாட்சியை ஏமாற்றாதே!
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
  • மந்திரம் கால்; மதி முக்கால்.
  • மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
  • மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
  • மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
  • மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
  • மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
  • மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
  • மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
  • முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
  • முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
  • முன் வைத்த காலை பின் வைக்காதே!
  • முயன்றால் முடியாதது இல்லை.
  • முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
  • முயற்சி திருவினையாக்கும்.
மூ
  • மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
  • மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
  • மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
  • மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
  • வட்டியோடு முதலும் போச்சு.
  • வளைகிற முள் நுழையாது.
  • வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
  • வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
  • வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
  • வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
  • வண்டி வந்தால் வழி உண்டாகும்.
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
  • வாய் உள்ளவன் உள்ளே.
  • வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
  • வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
  • வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
  • வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
  • வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
  • வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
    கடந்த காலம் ஒரு கனவு
    வருங்காலம் ஒரு பெருமூச்சு
  • வாய் அரை வைத்தியன்.
  • வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
    வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
  • வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
  • விரலுக்கேற்ற வீக்கம்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
  • வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
  • வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டு வரும்

டிஸ்கி : பார்வ்ர்ட் மெயிலில் வந்தது.. திரும்ப தேடி எடுக்க இயலாது என்பதால் இங்கு பதிவேற்றம் செய்தாகி விட்டது.

Tuesday, July 28, 2009

Tribute to Mohammed Rafi

பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.

நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.

அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.

முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.




நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !

ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.

* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.

* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.

ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.

நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?

ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.

பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.

* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.

அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.

அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.











இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.

...
...

Monday, November 10, 2008

எழுமையும் ஏமாப்புடைக்கும் குறளின் கதை


மாடியில் இருந்து வேகமாக இறங்கிக் கொண்டு இருந்தார் தொழிலதிபர் முகில்வேந்தன். நேர்த்தியான ஆடையுடன் மிடுக்காக இருந்தார். வயது 60 என்பதை சொன்னால் நம்ப இயலாத அளவு தோற்றம்.

தலைமுடி ஆங்காங்கே இப்போதுதான் வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் அளவு, இளமையாக இருந்தார். தமிழகத்தின் சிறந்த, பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர். மாடியில் இருந்து இறங்கி ஹாலில் வந்தவுடன் அங்கே அவரது காரியதரிசி தேன்மொழி நின்று கொண்டு இருந்தார்.

அந்த ஆலமரம் பரந்து விரிந்து இருந்தது. அதன் விழுதுகளில் முடிச்சுக்கள் போடப்பட்டு சிறுவர்களும், சிறுமிகளும் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்தனர். வழிப்போக்கில் இருப்பதால் பிரயாணிகள் அதன் கீழே இளைப்பாறிக் கொண்டு இருந்தனர்.

பிரயாணிகளின் குழந்தைகளுக்காக ஆலமரத்தின் கிளைகளில் கட்டப்பட்ட தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தன. சில அழும் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

“காலை வணக்கம் சார்”

“தேன்மொழி! காலை வணக்கம்! சொல்லும்மா! இன்னைக்கு என்ன என்ன வேலை இருக்கும்மா?”

“காலை 10 மணிக்கு நமது அலுவலகத்தில் சீனாவில் இருந்து வந்து இருக்கும் பிரதிநிதிகளோட நம்ம பங்கு விற்பனை தொடர்பா பேசனும். 11 மணிக்கு இந்தியாவில் இருக்கும் நம் நிறுவன மேலாளர்களுடன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தருவதைப் பற்றி விவரிக்கனும். 12 மணிக்கு நம்ம ஆசிரமக் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். 1 மணிக்கு..”

“போதும்மா! போதும்.. மிச்சத்தை அப்புறமா போற வழியில் பேசிக்கலாம்”

“நல்லது சார்! ஆனா இப்ப நாம டாக்டர் சாரங்கனைப் பார்க்கப் போறோம். அதுதான் ஒன்பதில் இருந்து பத்து மணி வரையிலான அட்டவணையில் இருக்கு”

“ஆமாம்மா! அது ரொம்ப முக்கியம். சரி நீ சாப்பிட்டியாம்மா?”

”வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுதான் வந்தேன் சார்”

“அப்ப சரி கிளம்பலாம்”

கடலின் அடி ஆழம். ... அழகான பாசி படர்ந்த பாறைகளின் அவன் அமர்ந்திருந்தான். அந்த ஆண் கடல் குதிரை கடல் நீரில் இங்கும் அங்கும் அலைந்தவனாக அமரவும் இயலாமல், மிதக்கவும் இயலாமல், முகத்தில் சொல்ல இயலாத தவிப்புகளால் தவிப்பது தெரிந்தது. பார்வையில் யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிகின்றது.


ஓ.. கண்களில் பிரகாசம்..... தனது இணையை கண்டு விட்ட மகிழ்ச்சி..


“ஏன் பெண்ணே! இவ்வளவு நேரம்?”


“கிளம்புவதில் நேரமாகி விட்டது. அதனால் தான்.. இப்போது உங்களுக்கு எப்படி உள்ளது?”


“சுமை அதிகமாக தெரிகின்றது பெண்ணே!. இன்று இரவு பிரசவம் நிகழும் என்று தெரிகின்றது. எப்படியாவது இன்றைய பொழுதைக் கழித்து விட வேண்டும்”


“எனக்கும் மிகவும் கடினமாக இருக்கிறது. என்னுள்ளும் முட்டை உருவாகி விட்டது. நாளை என் புது கணவனுக்கு அந்த முட்டையைத் தர ஆவலாக இருக்கின்றேன்”


“ஓ.. அப்படியா மிக்க மகிழ்ச்சி..”


“நாளைக் காலையும் என்னை சந்திக்க வா என் இனிய பெண் கடல் குதிரையே! அதற்குள் நம் குட்டிகளை ஈன்று இருப்பேன்”


“நல்லது சென்று வருகின்றேன். என் புது கணவர் தேடுவார். வருகிறேன்”


“வருகைக்கு மிக்க நன்றி”

“சொல்லுங்க டாக்டர்! இது முடியுமா? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு! ”

டாக்டர் சாரங்கனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் தொழிலதிபர் முகில்வேந்தன்.

“நீங்க கவலைப்பட இதில் ஏதுமில்லை. நாங்க நல்லா பரிசோதனை செய்து வெற்றி கண்ட விடயம் தான் இது. ஒரு மணி நேரம் போதும். அனைத்து விபரங்களும் கிடைக்கும்”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏதோ ஒரு ஆர்வம்.. அதான் இதெல்லாம்”

“தவறு ஏதுமில்லை”

ஒலிக்க ஆரம்பித்தது .. அதிகாரம் - அடக்கமுடைமை
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

“என்ன டாக்டர் இது.. கடிகாரம் திருக்குறள் சொல்லுது?”
“இது குறள் கடிகாரம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு குறள் சொல்லும். நமது வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்ல அவ்வப்போது குறளைக் கேட்டுக் கொண்டு இருப்பது உதவுமே”

“மிக நல்ல விடயம் டாக்டர்! எனது அலுவலக அறைக்கும் இது போல் ஒரு குறள் கடிகாரம் வாங்க வேண்டும்”

“சரி முகில் வேந்தன். இந்த படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். இனி நாம் வேலையைக் கவனிக்கலாம்”

“ராணி! ராணி! ஆபத்து! ஆபத்து”

கூக்குரலுடன் அந்த வேலையாள் அறுங்கோணங்களில் அமைந்து இருந்த அறைகளை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆகி விட்டது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்?” கேட்டது அந்த தேன் கூட்டை நிர்வகிக்கும் இராணித் தேனீ.

“ராணி! நம் கூட்டை கலைத்து, நாம் சேகரித்து வைத்து இருக்கும் தேனை எடுத்துச் செல்ல மனிதர்கள் நெருப்புடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக அவர்களைத் தாக்கி நம் கூட்டை காக்க வேண்டும்”

“இல்லை பணிப்பெண்ணே! அவர்கள் மனிதர்கள் நெருப்பினால் நம்மைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். நாம் சேமித்து வைத்த தேன் தான் அவர்களின் உணவு. இந்த ஆண்டு இங்கு மழை சரிவர பெய்யவில்லை. எனவே விளைச்சலும் குறைவு. அதனால் தான் நமக்கே உண்ண மகரந்தம் கிடைக்கவில்லை. மலைகளில் சென்று உண்டு வந்து, அதன் எச்சத்தை சேமித்து வைத்துள்ளோம். அவர்கள் நெருக்கி வந்தால் நாம் அனைவரும் இங்கிருந்து சென்று விடலாம். நமது மக்கள் அனைவரையும் விரைவில் ஒன்று திரட்டு. வேறு இடத்தில் சென்று வீடு கட்ட வேண்டும்”

“உத்தரவு ராணி! அப்படியே செய்யலாம்”


“ இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்கள்”

“ஆம்” ஈனஸ்வரத்தில் முகில் வேந்தன் பதிலளித்தார்.

“உங்கள் பெயர் என்னவென்பதை மறந்து விடுங்கள். உங்கள் கண்களை மூடி வைத்துள்ளீர்கள்... இனி உங்கள் மனதை திறக்கிறீர்கள்”

”சொல்லுங்கள் உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகின்றது?”

“நண்பா! என்ன நடந்தது ஏனிந்த சோகம்! நாம் தேவலோகத்தில் இருக்கின்றோம். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“எனக்கு பூலோகத்திற்கு செல்ல சாபமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று சில பிறவிகள் எடுக்க வேண்டுமாம்”

“அப்படி என்ன தவறு செய்தீர்கள்?”

“என்னை ஒரு மனிதனைக் கண்காணிக்கப் பணித்திருந்தார்கள். அவன் தவறு செய்ய நினைத்த போது அவனது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்ய சென்ற போது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்த போதும் பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை”

“ஏன்?”
“தவறை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பான் என்று நினைத்தேன். அவனது பாவ மன்னிப்பு மூலம் அவனுக்கு நல்லதை நாட நினைத்தேன். ஆனால் அவன் கடைசி வரை தனது தவறை நினைத்து வருந்தாததால் ஒரு தீமையை மட்டும் எழுதினேன்”
“ரொம்ப நல்லவனாக இருந்திருக்கின்றாய். வேறு என்ன செய்தாய்?”
“அதே மனிதன் நல்லதை செய்ய நினைத்த உடன் அவனுக்கு ஒரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ய கிளம்பிய போது இன்னொரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ததும் மூன்றாவதாக மற்றோரு நன்மையையும் எழுதிக் கொண்டேன்.”

“நண்பா! இது நல்ல விடயம் தான்.... தேவ லோகத்தில் உனது இந்த சிறந்த குணத்தை பாராட்டி, மேலும் நல்ல அந்தஸ்துகளை வழங்கத்தான் உனக்கு பூலோகத்தில் சில காலம் இருக்க பணிக்கப்பட்டுள்ளது. இது சாபமல்ல. உனக்கு கிடைத்த பரிசு என்று கொள். பூலோகம் சென்று நல்ல முறையில் திரும்ப வாழ்த்துக்கள்!”

“நான் அந்தரத்தில் பறக்கின்றேன். தேவ லோகத்தில் என் நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது ஒரு ராணித் தேனீயாக தேன் கூட்டுக்குள் எனது பணிப்பெண்ணுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு?”

“கடலின் அடி ஆழத்தில் இருக்கின்றேன்.. பாசிகளாகவும், பாறைகளாகவும் தெரிகின்றது. என்னை நோக்கி ஒரு கடல் குதிரை வருகின்றது. ஓ.. என் உடலும் அதனைப் பார்ததும் நிறம் மாறுகின்றது... நானும் ஒரு கடல் குதிரையாகத்தான் உள்ளேன்”

“ம்.. வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது எனக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி நின்று கொண்டு இருக்கின்றது”

“அம்மா! எனக்கு பசிக்குதும்மா”

“கொஞ்சம் பொறு கண்ணே! நம் முதலாளி இப்ப வந்திடுவாங்க.. அவங்க பால் எடுத்ததும் உனக்கு பால் தருகின்றேன்”

“பால் எனக்காகத் தானே சுரக்கிறது? ஏன் அவர்களுக்குத் தர வேண்டும்?”

“பால் உனக்கான தேவையை விட அதிகமாகவே சுரக்கிறது தான்... ஆனால் நமது முதலாளி நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கின்றார். நமக்கு நல்ல உணவு தருகின்றார். குளிப்பாட்டுகின்றார். அவர்கள் வீட்டில் உன்னைப் போல் சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பால் தேவைப்படுகின்றது. எனவே தான் என்னிடம் கொஞ்சம் பாலை எடுத்து விட்டு, மீதியை உனக்குத் தருகின்றனர்.”

“தேன் மொழி கிளம்புவோமா?”

“ஓகே சார்! இப்போதே 10:10 ஆகி விட்டது. சீனப் பிரதிநிதிகள் நமக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனராம்”

“சென்று விடலாம் தேன் மொழி. இப்போது ஒரு முக்கியமான மருத்துவ பரிசோதனை செய்து விட்டு வருகின்றேன். அதை உன்னிடம் சொல்ல ஆசைப்படுகின்றேனம்மா”

“விருப்பமிருந்தால் சொல்லுங்கள் சார்”

“முற்பிறவிகளில் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் சாரங்கன் இரகசியமாக அதைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வந்தார். இன்று என்னை ஆழ் உறக்கத்திற்கு உட்படுத்தி என் முற்பிறவிகளைக் கண்டுபிடித்தார். நான் முன்பு ஒரு ஆலமரமாக, ஒரு தேவலோக மனிதனாக, ஒரு கடல் குதிரையாக, ஒரு பசுவாக, ஒரு ராணித் தேனீயாக பிறந்து இருக்கின்றேன்”

“சோதனைகள் முடிந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அங்குள்ள குறள் கடிகாரம் ஒலித்து, ஒரு குறளைச் சொன்னது... ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து ... டாக்டர் சாரங்கன் கூறினார்... “இந்த குறளுக்கு ஏற்றவராக ஏதோ ஒரு பிறவியில் இருந்துள்ளீர்கள். அதனால் தான் உங்களுடைய அனைத்து பிறவிகளிலும் சிறப்பான தூய வாழ்க்கை வாழ்ந்துள்ளீர்கள்” என்று”

“உண்மை தான் சார்! உங்களுடைய அடக்கமுடைமையே உங்களுக்கு இந்த பிறவியில் பல சிறப்புகளையும், மதிப்புகளையும் அளித்துள்ளது. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்ற குறளுக்கு ஏற்ப உங்களது வாழ்வை சிறந்த கல்வியைக் கொண்டு நிறைத்து இருப்பதால், உங்களது மற்ற பிறவிகளிலும் அதே சிறப்போடும், அடக்கத்தோடும் தான் இருந்து இருப்பீர்கள்!”

Sunday, November 9, 2008

பொரிகடலை கடையும், காதல்களும், சில புத்தக அனுபவங்களும்

புத்தக அனுபவங்களைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத அத்திரி அழைப்பு விடுத்தார். புத்தகம் இருந்தால் சோறு தண்ணி கூட வேண்டாம் என்று திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பழக்கம் இருந்தது. புத்தகப் புழு என்று திட்டு வாங்குவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கின்றது.

பாடப் புத்தகங்களை இந்த பதிவில் கவனமாக தவிர்த்து விடலாம். நான் முதலில் படிக்க ஆரம்பித்தது ராணி தான். அப்போது நான்காவது, ஐந்தாவது படித்துக் கொண்டிருப்பேன். எங்களது சந்தில் இருக்கும் வீட்டுப் பெண்கள் கூட்டாக ராணி வாங்குவார்கள். மதிய அல்லது மாலை நேரங்களில் எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து எனது அம்மா வாசிக்க மற்றவர்கள் கவனமாக கேட்பார்கள். ராணியின் அனைத்து பகுதிகளும் வாசிக்கப்பட்டு அலசப்படும். அப்போது அருகில் அமர்ந்து நானும் கேட்பேன். பின்னர் கொஞ்சம் நானும் வாசிக்கப் பழகினேன்.

பின்னர் 7,8 வகுப்புகளில் சிறுவர்மலர் கவர்ந்தது. அதில் வரும் படக்கதைகள் ரொம்ப பிடித்தவை. பலகுரல் மன்னன் ஜோ நம்ம பேவரைட் பகுதி. ஸ்ரீராம் பெட்ஸ் சார்பில் சிறுவலர்மலருடன் வழங்கிய லேபிளுக்காக முதன்முதலில் தினமலர் வாங்கிய வெள்ளி மறக்க இயலாதது. அதைத் தொடர்ந்து எனக்கு ராணி காமிக்ஸ், அம்புலிமாமா போன்றவற்றை எனது நண்பன் அப்துல் அஹது பழக்கினான். அவர்கள் வீட்டில் இருந்து படிக்க எடுத்து வந்து தருவான். (அஹது குடும்ப சூழலினால் 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்தான்... பின்னர் வேலை தேடி திருப்பூருக்கு சென்று அங்கு இப்போதும் கூலி வேலை செய்து வருகின்றான்.)
கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்.

9ம் வகுப்பு சேர்ந்ததும் பெரிய மாற்றங்கள். நூலகங்களுக்கு செல்ல ஆரம்பித்த காலமது. எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தேன். தினத்தந்தி, தினமலர் என்று தினசரிகளைப் படிப்பேன். நூல்களாக துப்பறியும் நாவல்களே அதிகம் கவர்ந்தன. சங்கர்லால் துப்பறிகிறார் அனைத்தும் தேடித் தேடிப் படித்தேன். துப்பறியும் நாவல்கள் கிடைக்காத போது வேறு நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். நில மங்கை இன்னும் நினைவில் இருந்து விலகாத ஒன்று. இராஜேஷ்குமாரின் நாவல்களை வெறியுடன் படித்த காலமிது. இதே கால கட்டத்தில் தான் மறைத்து விற்கப்படும் (?) சில புத்தகங்களையும் படித்தேன்.


இது என்னுடைய புத்தக அலமாரி இல்லை

11 ம்வகுப்பு படிக்கும் போது மாற்றம் வித்தியாசமாக வந்தது. மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து வீடும். டியூசன் எல்லாம் வீட்டில் அனுப்பவில்லை. எனவே மாலையில் ஊர் சுற்றுவதைத் தடுக்க வீட்டுக்கு சிறிது தள்ளி மெயின் ரோட்டில் பொரிகடலை கடை வைத்து கொடுத்து விட்டார்கள். மாலை 5 முதல் 9 வரை வியாபாரம் பார்க்க வேண்டும். பொரிகடலை(உடைச்ச கடலை), பொரி, பட்டாணி, உப்புக்கடலை(சுண்டல்), அவல் எல்லாம் மொத்தமாக படி கணக்கில் வாங்கி சில்லரையில் விற்க வேண்டும். ( +2 படிக்கும் வயதில் 50 காசு, 1 ரூபாய்க்கு பட்டாணிக்கடலை விற்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை... :( )

கடலை மடித்துக் கொடுக்க பேப்பர் வேண்டும் என்பதால் பழைய பேப்பர்களையும் விலைக்கு வாங்குவோம். பலதரப்பட்ட பாடப்புத்தகங்கள், நாவல்கள், வாராந்திரிகள், தினசரிகள் எல்லாம் கடைக்கு எடைக்கு வரும். வியாபாரம் இல்லாத நேரங்களில் அவைகளைப் படித்துக் கொண்டு இருப்பேன். வரும் புத்தகங்களுக்கு இடையில் இருக்கும் துண்டுக்காகிதங்கள், கிறுக்கியவை மூலம் தெருவில் பலரின் காதல் கதைகளை அறிந்து கொள்ள முடிந்தது சுவாரஸ்யமான அனுபவம். இந்த காலகட்டத்தில் நூலகங்களுக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்தது. உறுப்பினர் அட்டையும் காலாவதியாகி விட்ட காலமிது.

+2 முடியும் வரை (1996) வரை பொரிகடலைக் கடை வியாபாரம் மாலைகளில் தொடர்ந்தது. +2 முடிந்ததும் அடுத்த படிக்க முடியாததால் வேறு கடைக்கு மாற்றம் நிகழ்ந்தது. இங்கு கடை முழு நேரம் என்பதால் நூலகம் செல்வதும் குறையத் தொடங்கியது. டீக்கடையில் தினத்தந்தியுடன் அமைதியடைய வேண்டி இருந்தது. நேரம் கிடைக்கும் போது அவசர அவசரமாக நூலகங்களுக்கு சென்று திரும்புவேன்.

ஒரு வருடம் இதே கதைதான்... 1997 ல் காலச்சக்கரம் வேறு திசையில் சுழன்று அடித்து சென்னையில் வந்து போட்டது. துபாய் கம்பெனி செலவில் படித்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தேன். தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே 50 மீட்டர் அருகில் நூலகம். ஆனாலும் காலையில் சென்று மாலையில் திரும்புவதால் நூலகம் செல்ல வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை எங்களுக்கு வெள்ளி விடுமுறை, நூலகத்திற்கும் வெள்ளி விடுமுறை.... என்ன கொடும பாருங்க..

துபாய் வந்த பிறகு(1998) வெகுநாட்கள் புத்தகங்களுக்கும் நமக்கும் இடையே தொடர்பு அறுந்து போய் இருந்தது. அதிக பட்சமாக ஆனந்த விகடனும், தமிழ் கம்ப்யூட்டர் என்ற இதழுமே துணையாக இருந்தது. ஷார்ஜா UAE Exchange பின்புறம் இருக்கும் மலையாளி கடை தான் அப்போதைய வடிகால்.

நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு நண்பர் வேலை செய்தார். எனக்கு வேலையில் ஜூனியர். ஆனால் நிறைய கவிதை, கதைப் புத்தகங்களை ஊரில் இருந்து வாங்கி வந்து படிப்பார். பொழுது போகாத நேரங்களில் அவரிடம் வாங்கி படிப்பேன். வைரமுத்து கவிதைகள், நாவல்கள், பிற மொழி கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் (கலில் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்..) வாசிக்கக் கிடைத்தது. அங்கு தான் கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் போன்றவை படித்தேன்.

துபாயில் இருந்த போது வாசிப்பு வேறு மார்க்கத்திலும் இருந்தது. அது ஆங்கில தினசரிகளின் வாசிப்பு. ஆங்கில தினசரி காசு கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை. எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பருக்கு ஈரான் வங்கியில் பணி. மாலை வேலை முடிந்து வரும் போது Gulf News, Khaleej Times ஆகிய இரு தினசரிகளையும் எடுத்து வருவார். இரவு உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் பார்ப்பேன். மறுநாள் காலை அதை மீண்டும் வங்கியில் சென்று வைத்து விடுவார். அப்போது தான் நிறைய அரசியல் சம்பந்தமான கட்டுரைகள் படிக்க நேர்ந்தது. (நன்றி அரவிந்த் அண்ணே)

2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ). தங்கமணிக்கும் குமுதம், ராணி படிக்கும் ஆர்வமெல்லாம் இல்லாததால், நமக்கு ஆதரவு கிடைக்கலை.

2007 சவுதி வந்த பிறகு இணையம் கிடைத்தது. நிறைய வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்கியின் நாவல்கள் அனைத்தையும் இணையத்தில் தான் வாசித்தேன். பொன்னியின் செல்வனின் மூழ்கி விட்டேன். நிறைய சிறுகதைகள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாங்குவதே இல்லை. அதில் வருவதை விட சிறந்த படைப்புகள் இணையத்தில் வருவதாக எனது கருத்து.

PKP யின் பக்கங்களில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு மென் புத்தகம் கொடுப்பார். அனைத்தும் சிறந்த படைப்புகளாக இருக்கும்.

இறுதியாக இரண்டு விஷயங்கள் சொல்ல இருக்கின்றது.

1. எனது வாசிப்புகளில் எழுத்தாளர்களில் கல்கியும், அதற்கு அடுத்து சுஜாதாவும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கவிதை படிப்பதில் ஆர்வமில்லை என்றாலும் வைரமுத்துவின் கதைக் கவிதைகள் பிடிக்கும்

2. இதுவரையிலான என் வாழ்வில் தனிப் புத்தகமாக எந்த கட்டுரை நூலையோ, நாவலையோ காசு கொடுத்து வாங்கியதே இல்லை. ஆனந்த விகடன், குமுதம் என்ற நிலையில் தான் இருந்திருக்கின்றேன். பெரிய பெரிய எழுத்தாளர்களைப் படித்ததையெல்லாம் மற்றவர்கள் கூறும் போது பிரமிப்பாக இருக்கும்.

இறைவன் நாடினால் ஊருக்கு வரும் போது நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்.

இந்த தொடர் விளையாட்டுக்கு இரண்டு பேரை நான் அழைக்க விரும்புகின்றேன்.

1. ஆயில்யன்... அமைதியாக இருக்கிறாரே என்று பார்க்காதீர்கள். உள்ளே ஏதாவது புயல் கிடைக்கலாம்.

2. ராமலக்ஷ்மி அக்கா... நான் டவுசர் போட்டுக் கொண்டு ஒன்னாப்பு சென்ற காலங்களிலேயே எழுத தொடங்கியவர்கள். அவர்களது வாசிப்பும் நெடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன். அவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்வார்கள் என்றாலும் ஆறு மாதம் கழித்தாவது அவர்களது வாசிப்பனுபங்களைப் பற்றி எழுத அழைக்கின்றேன்.

Monday, November 3, 2008

அமெரிக்க தேர்தல் கார்ட்டூன் + கேம்ஸ் + அரபி இலக்கணம் + டீச்சர்ஸ்

கண்மணி டீச்சர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க.. அதைப் படித்ததும் கொஞ்சம் பழைய நினைவு வந்து விட்டது. ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு போகும் போது எனக்கு H செக்சன் தான் கிடைத்தது. A,B,C செக்சன் எல்லாம் நல்லா படிக்கிற பசங்களுக்கு என்று சொல்லி விட்டார்கள். D,G, H போன்றவை எல்லாம் சரியில்லாத பசங்களுக்கானது என்று ஆசிரியர்களுக்கு நினைப்பு.

பத்தாம் வகுப்பில் 80 சதத்துக்கு கொஞ்சம் குறையா மார்க் வாங்கி இருந்தேன். அடுத்து +1 க்கு அப்ளை செய்ததில் பர்ஸ்ட் குரூப் எனப்படும் கணக்கு, இயற், வேதி, உயிரியல் உள்ள பிரிவு கிடைக்கவில்லை. செகண்ட் குரூப் எனப்படும் இயற், வேதி,தாவர, விலங்கியல் பிரிவே கிடைத்தது. சரி மார்க் குறைவா வாங்கியதால் தான் செகண்ட் குரூப் என்று தேற்றிக் கொண்டு சென்றால் பர்ஸ்ட் குரூப்பில் என்னை விட மார்க் குறைவாக வாங்கினவெல்லாம் இருக்கின்றான்.

அதில் பெரும்பாலோர் ‘அந்த’ குறிப்பிட்ட உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.. ஏனெனில் அவர்களின் உறவினர்கள் அந்த பள்ளியில் நிறைய பேர் ஆசிரியர்கள். என்னடா வென்று இது சம்பந்தமான வேலைக்கவனிக்கும் இயற்பியல் ஆசிரியரிடம் சென்றேன். வடிவேல் பாணியில் கூறினார். “உனக்கு பர்ஸ்ட் குரூப் எடுத்துக்க... ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விடு” ஆனா எனக்கு இந்த டீலிங் பிடிக்கலை. வீட்டுக்கு சென்று கேட்டதில் “உன்னை படிக்க வைப்பதே பெருசு.. இதில் குரூப் மாற்றனுமா? போய் வேலையைப் பாரு” என்று சொல்லி விட்டார்கள்.

அந்த இயற்பியல் ஆசிரியருக்கு வாழ்க்கையில் மூன்றே குறிக்கோள் தான்.. முதல் குறிக்கோள் பணம், இரண்டாம் குறிக்கோள் பணம், மூன்றாம் குறிக்கோள் பணம். இதில் அவரது மனைவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியை வேறு.

இங்கு இன்னொரு தமாஷையும் கண்டிப்பா சொல்லனும்... நான்கு வருடங்களுக்கு முன் வீட்டில் இருந்த போது என் தம்பி டென்சனா புலம்பிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.. “என்னடா ஆச்சு?” என்று கேட்டதற்கு அவனுக்கு தெரிந்த ஒரு பையன் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தததால் வேறு குரூப் கொடுத்து விட்டார்களாம். இவன் சென்று அதை மாற்றி கொடுத்து விட்டு வந்தானாம். அதனால் ஏற்பட்ட டென்சனாம். எப்படிடா என்றால் என் நண்பனின் அப்பா கருவூல அதிகாரி. கருவூலத்தில் தான் பள்ளி சம்பந்தமான பில்கள் அனைத்தும் வருமாம். அவரைத் தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியையிடம் பேசி குரூப்பை மாற்றி விட்டானாம். அவர் என் நண்பனின் தந்தை.. இதெல்லாம் யோசிக்கும் வயசு அப்ப நமக்கு இல்லை பாருங்க... எல்லாம் நன்மைக்கே!..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் சில சிறப்புகள் இருக்கும். சில சிறப்பியல்புகளும் இருக்கும்... அரபி மொழி உலகில் பேசப்படும் முக்கிய மொழிகளில் ஒன்று. இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. பொதுவாக மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படும். ஆனால் அரபி, உருது இன்னும் சில மொழிகள் இடமிருந்து வலமாக எழுத, படிக்கப்படும். இதுவா வித்தியாசம் என்றால் அதில்லை. அரபி மொழி இலக்கணத்தில் இருக்கும் “இருமை” தான் வித்தியாசம்.

அதென்ன இருமை... எடுத்துக்காட்டுக்கு தமிழில் கலாவும், சீதாவும் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம். இதை ஆங்கிலத்தில் Kala and Seetha are eating என்று சொல்லலாம். இந்தியில் कला और सीता खाते है! (சீதா அவ்ர் கலா காதே ஹைன்) என சொல்லலாம்.

இப்போது இதில் இருந்து நமது திட்டத்திற்கு வினையை மட்டும் எடுக்கின்றோம். கலா மற்றும் சீதாவை மறந்து விடலாம். நாம் எடுத்துக் கொள்வது சாப்பிடுகிறார்கள், खाते है(காதே ஹைன்) , are eating. இந்த வாக்கிய அமைப்பில், இந்த வினைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு தெரிய வருவது இது பன்மை, நிகழ்காலத்தில் நடக்கின்றது என்று. இது மேலே நான் எழுதிய (எனக்கு தெரிந்த) மூன்று மொழிகளுக்கும் பொருந்தும். இந்த வினைச் சொல்லில் பால் தெரிவதில்லை. முன்னிலையா படர்க்கையா என்று தெரியவில்லை. சாப்பிடுபவர்கள் அவர்களா, இவர்களா என்றும் தெரிவதில்லை. ஒன்றுக்கு மேல் என்று தெரிந்தாலும் எத்தனை என்று தெரியவில்லை.

அரபியில் இதை எழுதும் போது اكلتا كلا و سيتا அகல்தா கலா வ சீதா என்று எழுதலாம். இதில் வினைச் சொல்லான اكلتا (அகல்தா) என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் இதில் இருந்து தெரிய வருபவை அந்த இரு பெண்கள் சாப்பிடுகிறார்கள். இது மேலே நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலைத் தந்து விடும். அரபியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கின்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அமெரிக்க தேர்தல் பற்றிய ஒரு கார்ட்டூனுக்கு அப்புறம் செய்திகள் தொடரும்...




நன்றி : அரப் நியூஸ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செல் போனிலோ, கணிணியிலோ கேம்ஸ் விளையாடும் ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவரின் செல்லை நோண்டிக் கொண்டு இருந்த போது ஒரு கேம்ஸ் பற்றி சொன்னார். canal_control நன்றாக இருப்பதாகச் சொன்னதால் நானும் விளையாடிப் பார்த்தேன். ஈர்த்து விட்டது. சில தினங்களாக சைட்டில் கொஞ்ச நேரம் அதில் விளையாடுவேன்.



மாறி மாறி வரும் ப்ளாக்களை அடுக்கும் சாதாரண விளையாட்டு தான்.. தேவைப்படுபவர்கள் டிரை செய்து பாருங்கள். செல்லில் இருந்து இணையத்தை தொடர்பு கொண்டு http://wap.mobiles24.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் முகப்பில் இருக்கும் Download by ID என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பாக்ஸில் 108447 என்ற எண்ணைத் தட்டி Download Item கிளிக் செய்யுங்கள். வெறும் 61 Kb அளவுள்ள கோப்பு தான்.. பதிவிறக்கு விளையாடிப் பாருங்கள்.
http://www.mobiles24.com/downloads/s/108447-109-canal_control_128x160

Tuesday, October 14, 2008

பழகிய தமிழும், பழகாத இந்தி மொழியும், அதனைப் பழக்கிய விதமும்

. .

அப்போது சென்னை VSNL (Videsh Sanchar Nigam Ltd) ல் வேலை செய்து கொண்டிருந்த நேரம். தமிழ் மீடியத்திலேயே படித்திருந்ததால் ஆங்கிலத்தில் பேசுவது இயலாமல் இருந்தது. (துபாய் வந்த பிறகு சரளமாகி விட்டது) VSNL மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கக் கூடிய ஒரு நிறுவனம். வெளிநாட்டு தொலைபேசி சேவை, இணைய இணைப்புகள் போன்ற சேவைகளை வழங்கி வந்தது. சன் டிவியின் ஆரம்ப காலகட்ட செய்திகள் VSNL மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்குள்ள டிரான்ஸ்மீட்டர்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

சென்னையில் இருப்பதால் தமிழர்கள் நிறைய பேர் வேலை செய்தனர். மத்திய அரசு நிறுவனம் என்பதால் நிறைய இந்தி பேசுபவர்களும் முக்கிய பதவிகளில் இருந்தனர்.

அங்கு இயக்குநராக இருந்தவர் முகர்ஜி என்ற வடமாநிலத்தவர். ஆள் ஒடிசலாக இருந்தாலும், வேகமான நடை, நடவடிக்கை கொண்டவர். தொழில்நுடப வேலைகள் தொடர்பாக அவருடன் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டிய நிலை இருக்கும். அவர் பேசும் ஆங்கிலம் நமக்கு புரியாது. நாம் பேசும் தமிழ் அவருக்கு புரியாது. அப்போது உதவிக்கு வந்தது தான் இந்தி மொழி.

பள்ளிப் படிப்பு படிக்கும் போதே தனியாக இந்தியையும் படித்திருந்தேன். ( ஹிந்தி பிரச்சார சபா மூலம் பிரவீன் வரை) ஆனாலும் பேச வாய்ப்பு இல்லாததால் இந்தி பேச்சு வழக்கத்தில் வரவில்லை. வீட்டில் யாருக்கும் இந்தியோ, உருதோ பேசத் தெரியாததால் வீட்டில் வாய்ப்பில்லை. அண்டை அயல் வீடுகளில் இருந்த உருது(?) பேசக் கூடியவர்களின் உருதைக் கேட்டு ஓடிப் போய் விடுவேன்.

இந்தியை தொலைக்காட்சிகளில் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையிலேயே இருந்தேன். சுரபி போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன். ஆனாலும் இந்தி மொழியை பேச இயலாத நிலையே இருந்தது.

ஆங்கிலம் நம் வழிக்கு வராததால் முகர்ஜியுடன் இந்தியில் பேச முயற்சி செய்தேன். அவர் இந்தி மொழியில் நல்ல ஆர்வலர். இருவரும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இந்தியிலேயே பேசுவோம். என்னால் பதில் சொல்ல இயலாமல் போனால் அவரே பதிலை எடுத்துக் கொடுப்பார். தவறாக பேசும் போது திருத்தியும் சொல்லித் தருவார். அப்புறம் அவர் பெயரை சொல்லி VSNL கேண்டீனின் நல்ல சாப்பாடும் பிளாக்கில் வாங்கி விடுவேன்.... :))))



பின்னர் கால சக்கரம் சுழற்றி அடிக்க.... அது நம்மைக் கொண்டு போய் துபாயில் போட்டது. இங்குதான் அடுத்த கட்ட சோதனைகள். பலதரப்பட்ட இந்தி பேசுபவர்கள் கிடைத்தனர். மும்பையின் கொச்சையாக இந்தி, டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிழியும் ஆந்திர, கர்நாடக இந்தி, போஜ்பூரி கலந்த உபி, பீகார் இந்தி, பெங்காலிகளின் இந்தி, தில்லியின் கொஞ்சம் சுத்தமாக இந்தி, பாகிஸ்தானிகளின் இந்தி, உருது மிக்சர் என சென்றதும் நம்மை திக்கு முக்காட செய்து விட்டன.

மும்பைக்காரனுடன் வேலை பார்த்த போது அவனுடன் சேர்ந்து சகவாச தோசத்தால் வாயைத் திறந்தால் அசிங்கமான வார்த்தைகள் வந்து விழும். சென்னையில் இருந்தால் தானாக வரும் ங்***** போல.

வேற்று மொழி பேசும் போது ஏற்படும் பெரிய தகராறு இதுதான். நாம் கேட்பதை முதலில் தமிழுக்கு மொழி பெயர்த்து, பின்னர் அதன் பொருள் விளங்குகின்றோம். நாம் பதில் சொல்லும் போதும், அதே போல் முதலில் தமிழில் யோசித்து பின்னர் அதை மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும். இதனால் புதிதாக கற்றுக் கொள்ளும் போது இதனால் பல பிரச்சினைகள் உருவாகும்.

எடுத்துக்காட்டுக்கு நம்முடன் வேலை செய்பவரைப் பற்றிக் குறிப்பிடும் போது நாம் பொதுவாக 'இவர் நம்மோட ஆள்' ‘அவர் உன்னோட ஆள்' என்று சொல்லி விடுவேன். இதை இந்தியில் மொழி பெயர்க்கும் போது ये हमारा आदमी है என்று சொல்வது சரியாக தோன்றும். ஆனால் இந்தி லோக்கல் பேச்சு வழக்கில் ஆத்மி என்பது பெண்கள் கணவரை சொல்லுவது. உபி, பீகார்க்காரர்கள் இப்படி சொல்லியதும் சிரித்து விடுவார்கள். அல்லது நம்மை கேலி செய்வார்கள்.

பின்னர் படிப்படியா 7 வருடம் அவர்களுடன் குப்பை கொட்டியதில் நன்றாகவே பேச வந்துவிட்டது. படித்தவர்களுடன் கொஞ்சம் தரமான இந்தியிலும், லோக்கல் ஆட்களுடன் அதற்குத் தகுந்தாற் போல் இந்தியும் பேசும் பழக்கமும் வந்து விட்டது.

சவுதி அரேபியா மெக்காவுக்கு வந்த பிறகு இந்தி பேசுவதில் புதிய பிரச்சினை முளைத்தது. எனது மேலதிகாரியாகிய பொறியாளர் பாகிஸ்தானில் கராச்சியைச் சேர்ந்தவர். உருது தாய் மொழியாதலால் தெளிவாக உருது பேசுவார். தனிப்பட்ட விடயங்களை பேசும் போது ஆங்கிலத்தை விட்டுவிட்டு உருதுவில் பேசுவோம்.

இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும் நிறைய வேறுபாடு இல்லையென்றாலும் உருது பேசுபவர்கள் காலங்களிலும் (Tense), உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்தி பேசுபவர்களிடம் இது குறைவாகவே காணப்படும்.

சாதாரணமாக 'வாருங்கள்' என்பதற்கு आओ भाई என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர் அதை விரும்புவதில்லை. आइये என்று சொல்வது தான் முறையான இலக்கணம், நீங்கள் சொல்வது போல் சொல்வது மரியாதை இல்லாதது என சொல்வார்.... இது போல் நிறைய

அதே போல் இந்தியில் நாம் சுலபமாக எடுத்துக் கொள்ளும் சில வார்த்தைகள்... தமிழிலும் எடுத்தாளப்படும் வார்த்தைகள்... समय (சமய - நேரம்), कारण(காரண் - காரணம்) सुध्द(சுத்த - சுத்தமான) रकत (ரக்த - குருதி)... இவைகள் உருதுவில் கிடையாது. இது போன்ற தமிழுக்கும், இந்திக்கும் இணக்கமான வார்த்தைகள் நமக்கு விரைவில் மனனமாகும். அதே போல் இந்தியில் இருக்கும் நிறைய வார்த்தைகளுக்கு உருதுவில் வேறு வார்த்தைகள் உள்ளன.

இதை அவரிடம் பேசும் போது விளங்காமல் விழிப்பார். பின்னர் அவைகளுக்கு உருதுவில் இருந்து வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து விளக்கி, சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவேன். எப்படியோ சமாளித்து காலம் சென்று கொண்டு இருக்கிறது.

டிஸ்கி : சென்னையில் இருந்த போது பழவந்தாங்கலில் இருந்த ஒரு இந்தி ஆசிரியையை சந்தித்தேன். அவர் பெயர் விஜயலக்ஷ்மி .நான் இந்திவில் பிரவீன் வரை படித்துள்ளதாக கூறிய போது
அவர் :“உனக்கெல்லாம் எவன்யா பிரவீன் பட்டமெல்லாம் கொடுத்தது”
நான் :“தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா மேடம்”
அவர் : “ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”

Saturday, October 11, 2008

மக்கள் டிவி’ கார்த்திகாவைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்!

.
.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்குப் பிறகு விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது மக்கள் டிவி. சினிமா, சீரியல்கள் அவை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை. மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் விரும்பிப் பார்ப்பது சொல் விளையாட்டு மற்றும் தமிழ் பேசு தங்கக் காசு மற்றும் செய்திப்பகுதி. அய்யா தொலைக்காட்சி என்பதால் மருத்துவர் ஐயாவின் புகழ் பாடுவதாக இருந்தாலும் பொதுவாக செய்திகளை விரும்பிப் பார்ப்பேன்.

இதில் முக்கியமாக சொல்ல வந்ததது சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சி பற்றித்தான். நேரடி ஒளிபரப்பாகவும், தொலைபேசியில் பேசும் வகையிலும் இருக்கும் நிகழ்ச்சி இது. மொத்தம் மூன்று சுற்றுக்களைக் கொண்டது. முதல் சுற்றில் தொலைக்காட்சி திரையில் வரும் குடுவையில் எழுத்துக்கள் பல இலக்கின்றி ஓடிக் கொண்டு இருக்கும். அவைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் வாக்கியத்தை சொன்னால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இரண்டாம் சுற்றில் திரையில் சில எழுத்துக்கள் தோன்றும். அவைகளை வைத்து குறைந்தபட்சம் பத்து வார்த்தைகள் சொல்ல வேண்டும். அதில் வெற்றி பெற்றால் பசுமைத் தாயகம் உள்ளிட்ட புத்தகங்கள் பரிசாக கிடைக்கும்.

மூன்றாம் சுற்றில் ஒரு புகைப்படத்தில் மீது ஒளிவட்டம் வரும். அதில் இருக்கும் பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பட்டுப் புடவை பரிசாக கிடைக்கும்.



இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்திகா தான். கார்த்திகா திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள். நல்ல அழகு தமிழில் எப்போதும் சிரிப்புடன் அவர் நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும். தற்போதைய தொலைக்காட்சி காம்பியர்களில் நன்றாக நடத்தக் கூடியவர்.அதனால் தான் தொகுப்பாளர்களில் கார்த்திகாவை மிகவும் பிடிக்கும். (தீபா வெங்கட் நல்லா இல்லியான்னு கேக்கப்படாது... அபி அப்பா கோச்சுப்பார்)



எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன். இதற்காகவே செல் பேசியில் எப்போதும் பணம் வைத்திருப்பேன். இதுவரை ஒருதடவை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. சில நேரங்களில் குடுவையில் இருக்கும் எழுத்துக்களைக் கூட்டி பெருக்கி சரியான வாக்கியத்தை வைத்து முயற்சி செய்தால் அதற்குள் நமது எதிரி யாராவது சொல்லி விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் பதில் தெரிகிறதோ இல்லையோ முயற்சி செய்கிறேன்.

என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.

வள்ளுவன் சொன்ன ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்று வாக்கு என்றென்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நண்பர் சுந்தரின் இந்த கவிதையை இங்கு தருவது பொறுத்தமாக இருக்கும்.

எழுத்துக்களை குடுவையினுள்
அடைத்துவிட்டு வாசிக்க சொல்கிறாய்
என் மனது குடுவையினுள்
இல்லை என்பது உணராமல் !

கட்டத்துக்குள் ஒரு சில எழுத்துக்கள்
வார்த்தைகளை உருவாக்க சொல்கிறாள்
என் மனதை கட்டம் கட்டியவள் !

நீ எப்போழுது வார்த்தையை
உருவாக்க சொன்னாலும்
"என்னவள் " என்றே சொல்வேன் !

யார் புகைப்படத்தையோ
மறைத்து விளையாடுகிறாய் !
என் புகைப்படம் எப்போழுது
ஒளித்து விளையாடுவாய் ?

உனக்கு பிடித்ததை பரிசாக
கொடுப்பதால், உனக்கே
திருப்பி தருவேன் என்கிற
நம்பிக்கை உனக்கு !

பட்டுப் புடவை பரிசு என்றாய் !

புகைப்படம் நன்றி : மரக்காணம் பாலா

டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))

உபரித் தகவல் :
அஞ்சாதே படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயலட்சுமி, கார்த்திகாவின் இளைய சகோதரி... படம்
மலேசிய நண்பனில் வந்த கார்த்திகாவின் பேட்டி

Friday, October 10, 2008

ஏதாச்சும் செய்யனும் பாஸ்! எவ்வளோ செஞ்சாச்சு, இதைச் செய்ய மாட்டமா?


.
ள்ளிப் பருவங்களில் நூலகத்திற்கு செல்வது என்பது அலாதியான இன்பம் தரும் விடயம்... பள்ளி விட்டு வரும் போது நூலகத்தில் நுழைந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டு இருந்து விட்டு வருவது என் வழக்கம். நூல்களை, செய்தித்தாள்களை வீட்டில் வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு நூலகங்கள் ஒரு சொர்க்க பூமி. செய்திக்கு வருவதற்கு முன் ஒரு சிறு பீடிகை.... :)

சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது நூலங்கங்களைப் பற்றி பேச்சு வந்தது. உலகில் எழுச்சிகள், புரட்சிகள், அடக்குமுறைகள் என எது நிகழ்ந்தாலும், பழைய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது நூலகங்களே... இதற்கு சமீபத்திய உதாரணம் யாழ் நூலக எரிப்பு.. :(



எரிக்கப்பட்ட யாழ் நூலகம்

ஏன் நூலகங்கள் எரிக்கப்பட வேண்டும்? புரட்சிகளாகட்டும், எழுச்சிகளாகட்டும், அடக்குமுறைகளாகட்டும் அவைகள் ஒரு புதிய சமூக வழிமுறைகளுக்கு வழி கோலுகின்றன. அல்லது ஒரு விதமான அடிமை முறையில் இருந்து அடுத்த தலைமுறை அடிமை முறைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. அந்த எழுச்சி, புரட்சிக்கு வித்திடுபவர்கள் தாங்கள் கொண்டு வரும் புதிய முறையே வரலாறாக, நடைமுறையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றனர். எனவே பழைய அடையாளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதற்கு தடையாக இருப்பவைகள் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நூலகங்கள், கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வழிபாட்டுத்தலங்கள், சிற்பங்கள் போன்றவை. பழக்கவழக்கங்கள் சமூக மாற்றங்களால் விரைவில் மாற்றப்பட்டு விடுகின்றன. ஆனால் நூலகங்களும், கலாச்சார சின்னங்களும் அடுத்த கட்ட ஆட்சியாளர்களால் முற்றிலுமாக துடைத்தெறியப் படுகின்றன. இந்த புரட்சி என்ற மாயையிலும், பழைய கழிதல் என்ற அசட்டுத்தனமான போதையிலும் நூல்கள் தீக்கிறையாக்கப் படுகின்றன. அதே போல் வழிப்பாட்டுத்தலங்களும், சிற்பங்களும், ஓவியங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.... பீடிகை போதும்.. இனி மேட்டருக்கு வருகிறேன்.

சமீபத்தில் நட்பு பதிவர்கள் சிலர் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று பதிவிட்டனர். மகிழ்ச்சியாக இருந்தது. சரி நாமும் ஏதாச்சும் செய்யனும் என்ற யோசனை மண்டையில் புழுவாகக் கடித்துக் கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் இந்த ஐடியா வந்தது.

பள்ளி காலங்களில் நூலகங்களில் படித்துக் கொண்டு இருப்போம்...அப்போது தான்கஷ்டப்பட்டு அடுத்தவர் படித்து முடித்து விட்டு கொடுத்த சிறுவர் மலரையோ, ஆனந்த விகடனையோ படிக்க ஆரம்பித்து இருப்பேன்... சட்ரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். அப்போது வரும் எரிச்சல் போல் வேறு எப்போதும் வந்ததாக நினைவு இல்லை. ஒரு நூலை ஆர்வத்துடன் படித்துக் கொண்டு இருக்கும் போது அதை தடை செய்யும் எந்த விடயமும் கொடுமையானது தான்.

எங்கள் ஊரில் நூலகம் இரண்டு தளங்களைக் கொண்டது. இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட ரேக்குகள் இருக்கும். எப்போதும் சுமார் 25 - 30 பேர் ஆர்வத்துடன் படித்துக் கொண்டு இருப்பார்கள். வயதானவர்கள் முதல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரை எப்போதும் நிறைந்து காணப்படும்.

இந்த நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது அவர்களின் முகங்களில் காணப்படும் ஏமாற்றம் கொடுமையான ஒன்று. இதைத் தடுக்க என்ன செய்வது? (அதிக நூல்களையும், சிறந்த வசதிகளையும் கொண்ட நூலகங்களைக் கொண்ட நூலகத்துறையின் செயல்பாடு கேவலமான் ஒன்று என்பதை சொல்லிக் கொள்கிறேன்.. இதைப் பற்றி விரிவாகவே பதிவு எழுதலாம்)

தற்போது தமிழகத்தில் உள்ள மின்வெட்டு மிகவும் மோசமான நிலையை எட்டி விட்டது. வாய்ச்சவடால் அரசுகளும் அதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இதைத் தடுக்க என்ன செய்யலாம் பாஸ்? ஒவ்வொரு ஊரிலும், அல்லது பகுதியிலும் ஒரு நூலகமே பெரும்பாலும் இருக்கும். சில பெரிய ஊர்களில் இரண்டு இருக்கலாம். நாம் இருக்கும் பகுதியில் அல்லது அல்லது வழக்கமாக செல்லும் நூலகங்களை மட்டும் கணக்கில் கொள்ளலாம். அப்படிப்பட்ட நூலகங்களுக்கு நண்பர்களை அனைவரும் இணைந்தோ, அல்லது தனியாகவோ மின்கலத்தில் இயங்கக் கூடிய மின்விளக்குகளுக்கு வசதி செய்து கொடுக்கலாம். ஜெனரேட்டர் போன்றவைகளுக்கு டீசல் செலவு இருப்பதால் அது சாத்தியமில்லை.

பேட்டரியில் இயங்கக் கூடியதே சாத்தியமான ஒன்று. இதற்கு தனியாக எரிபொருள் தேவைஇல்லை. மின்சாரம் இருக்கும் வேலைகளிலேயே அதற்கான மின்சாரத்தை மின்கலம்(பேட்டரி ) சேமித்துக் கொள்ளும்.

தேவையானவை

மின்கலம் (பேட்டரி) - 1
மின்மாற்றி (இன்வெர்ட்டர்) - 1
டியூப் லைட் செட் - 3 அல்லது நான்கு]

இவையனைத்தும் சேர்ந்து 12 முதல் 16 ஆயிரம் வரலாம். (தகவலுக்கு நன்றி ஜோசப் சார்...) நான்கு நண்பர்கள் இணைந்தால் சுலபமாக செய்து விடலாம். இதை நூலகங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நிறைய பேரின் அறிவுப்பசிக்கு தீனி போடலாம். இதை அரசு ஏதாவது செய்யும் என்று நினைப்பது கானல் நீராகத்தான் இருக்கும்....

எனவே எவ்வளவோ செஞ்சாச்சு.... இதைச் செய்ய மாட்டமா?

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. 396

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. 398

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். 399