Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, July 3, 2010

நாளைக்கு - சென்னையில்

தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..

இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.

வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர்.

அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை.

இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம்.

பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.

சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர்.

பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

இவ்வாறாக

· அரசியல் மேடைகள்,

· ஆன்மீக மேடைகள்,

· தெருமுணைக் கூட்டங்கள்,

· ஜூம்ஆ உரைகள்,

என

நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.

தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.

சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,

இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,

நாங்கள்,

· மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல,

· மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல,

· வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல,

எங்கள் வாழ்வுரிமைக்காக

அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது,

அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும்.

3 ½ சதவிகிம்.

· 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர்.

அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது )

· அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது.

இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.

''குடந்தை குலுங்கட்டும்''

இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம்.

இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

''தொடர் முழக்கப் போராட்டங்கள்''

அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும்


ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,

இடஒதுக்கீடுப் பெறும் வரை,

ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,

எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.

ஜூலை 4

சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது.

· தீவுத்திடலை திணறடிக்க,

· தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,

· ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள்.

கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16

கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும்.

இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,

· வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை,

· எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை,

· ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை,

· குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை,

மாற்ற முடியாது.

ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையை படிக்க கீழ்காணும் லிங்கை சொடுக்கவும். http://www.tntj.net/?p=12863

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நன்றி : TNTJ இணையதளங்களில் இருந்தும், பார்வர்ட் மெயில் இருந்தும்

Saturday, November 28, 2009

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

பதிவு எழுதி கண நாளாகி விட்டது. அவ்வப்போது பதிவு எழுத வற்புறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.. நம்மையும் இந்த உலகம் நம்புதேய்யான்னு இருக்கு.. ;-)))


3 நாட்களுக்கு பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளுக்கான விடுமுறை. இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தியாகத் திருநாளில் தங்களால் இயன்றதை இறைவனுக்காக அறுத்து, ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கு செய்து கொடுக்க வேண்டும். தியாகத் திருநாளின் நாட்களில் மெக்காவில் உள்ள இடங்களில் ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பார்கள்.

இவை அனைத்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களையும், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களையும் நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளவை. ஒரு சராசரி மனிதனால் செய்ய இயலாத தியாகங்களை இப்ராஹீம் நபி அவர்கள் செய்தார்கள்.

இறைவனின் கட்டளைப்படி தனது மனைவியையும், மகன் இஸ்மாயிலையும், பாலைவனத்தில் அமைந்துள்ள, எந்த மனித சஞ்சாரமும் இல்லாத இடத்தில், தண்ணீர்,உணவு வசதிகள் இல்லாத இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகின்றார். இறைவன் அவரது மனைவியும், தனது குழந்தையுடன் அங்கே தங்க சம்மதித்து கணவனை அனுப்பி விடுகின்றார்.

குழந்தை பசியால் துடிதுடிக்க தாய் தண்ணீர் தேடி அந்த குன்றுகளில் ஓடித் தேடுகின்றார். குழந்தை பசியில் கால்களை உதைத்து அழ அங்கு இறைவனின் அருளால் ஊற்று ஒன்று உருவாகின்றது. இதைக் கண்ட அந்த தாய் அந்த ஊற்றை மண்ணால் அரண் கட்டி ஜம், ஜம் (நில், நில்) என்று சொல்ல அதுவே இன்று ஜம்ஜம் கிணறாகி மாறி தண்ணீரை வாரி வழங்கி வருகின்றது. அந்த தாயின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹாஜிகள் ஜம்ஜம் தண்ணீர் அருந்துகின்றனர். இரு குன்றுகளுக்கு இடையில் ஓடுகின்றனர்.(ஸயீ)

தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் வர, அவைகளைக் கண்டு பிரயாணிகளும் வர அந்த வனாந்திரம் புதிய நகரமாக உருவாகின்றது. அதுதான் மெக்கா. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்ராஹீம் நபி அவ்விடம் வர அங்கு ஒரு ஊரே இருக்கின்றது. ஆண்டுகள் பல கழிந்தாலும் அவர் வந்ததன் நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற... அது என்ன கட்டளை. மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதே.

தனது தந்தை சொன்னதைக் கேட்ட அந்த வாலிப மகன் இஸ்மாயில் உடனே தயாரிகின்றான். ஏனெனில் கட்டளை அனைவரையும் ரட்சிக்கும் இறைவனின் புறத்தில் இருந்து வந்ததாயிற்றே... பலி கொடுக்கும் நேரம் இஸ்மாயிலின் இடத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப் படுகின்றது. இறைவன் இப்ராஹீம் (நபி) தனது கட்டளை நிறைவேற்ற துணிந்த சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றான்.

இதனால் தான் தியாகத் திருநாளில் பலிப் பிராணி அறுத்து ஏழைகளுக்கு உணவுக்காக அளிக்கப்படுகின்றது. பலி கொடுக்கும் அனைவரும் நிச்சயமாக மனதில் கொள்ள வேண்டியது இதுதான்.
“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, இரத்தமோ சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”
திருக்குர்ஆன் 22:37 வசனம்


அந்த தியாகங்களின் உள் நோக்கம் முற்றிலும் இறை ஆற்றலுக்கு வழிப்பட்டு நடப்பது. இந்த தியாகத் திருநாளிலும் அத்தகைய ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு இறைவன் நமக்கு அளித்துள்ள அளப்பரிய கிருபைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும். உலக மக்கள் அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடன் நடந்து கொள்ளவும் மனிதில் கொள்வோம்.




நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாள் மூலம் நல்லவைகளை அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

...

Saturday, August 22, 2009

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?


இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.


..

Wednesday, October 22, 2008

US Election 08 - பின்லேடனுக்கு ஒரு மனம் திறந்த மடல்

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!

முதலில் உங்களின் மீது எனக்கு சிறந்த மதிப்பு கிடையாது என்றாலும் இந்த மடலை எழுத வேண்டிய கட்டத்தில் உள்ளது வருந்தத்தக்கதே.

நான் இந்த மடலை எழுதுவதன் காரணத்தை சொல்லி விடுகிறேன். இன்னும் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு அல்லது நவம்பர் 5 வரையாவது அமெரிக்காவைப் பற்றி எந்த பேட்டியும் தராதீர்கள். மேலும் எந்த விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு விடாதீர்கள்.

உங்களது பேட்டிக்காகவும், ஏதாவது சிறு தாக்குதலையாவது மேற்கொள்வீர்களா என உங்களைப் போன்ற மனித குலத்தின் எதிரிகள் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் வேறு யாரும் அல்ல.. ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது பதவிக்கு வர துடிக்கும் மெக்கெய்ன் என்பவருமே.

நீங்கள் கொடுக்கும் ஒரு சிறு பேட்டி கூட அவர்களது ஓட்டு வங்கியை உயர்த்தி விடும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பொருளாதார சீரழிவால் அரண்டு போய் இருக்கும் அமெரிக்க அப்பாவி மக்களுக்கு உங்களது பேட்டியைக் காட்டி,
“அய்யய்யோ, ஆபத்து வந்து விட்டது... ஒசாமா உயிரோடு இருக்கிறார். அவரை ஒழிக்க எங்களுக்கு ஓட்டு போடுங்கள்” என கடைசி கட்டத்தில் கதறி நாடகமாட மெக்கெய்ன் தயாராக உள்ளார்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் தனி விமானத்தில் வந்தாவது உங்கள் காலில் விழுந்து பேட்டி கொடுக்க சொல்வார்கள். அதுக்காக ஒபாமாவுக்கு ஆதரவாக பேட்டி ஏதும் கொடுத்து விடாதீர்கள். வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கூமுட்டை ஆகி விடுவீர்கள். ஒபாமாவுக்கு ஆதரவாக ஒசாமா என்று ஓட்டு சீட்டிலேயே அடித்து விடுவார்கள். ஏற்கனவே ஒபாமா என்பதற்கு ஒசாமா என்று அடித்து விட்டார்கள்.

எனவே கையையும், வாயையும் பொத்திக் கொண்டு நீங்கள் இருந்தாலே உலகம் சுபிட்சமாக இருக்கும்.

கடைசியாக உங்கள் மீது ஏன் மதிப்பு வராமல் வெறுப்பு வருகின்றது என்பதையும் உங்கள் பாணியிலேயே விளக்கி விட்டு விடை பெற ஆசைப்படுகிறேன்.

இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு நீங்கள் செய்த அல்லது செய்ததாக ஒப்புக் கொண்ட படுகொலைகள் உங்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விட்டதாக உணர்கிறேன்.

திருக்குர்ஆன் இவ்வறு கூறுகின்றது

“திண்ணமாக,ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” - அல்குர் ஆன் [005:032].

போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போர் புரியும் போது போரில் ஈடுபடாத ஆண்கள், மற்றும் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களைக் கொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. விளைநிலங்களையும், பசுமையான மரம், செடிகளையும் அழிப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளும் போது, இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் எந்த வன்முறையும் அது நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும் என்பது தெளிவு.

மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்
என்ற இறைவசனத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்களுக்கும், எங்களுக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோமாக!

அன்புடன்
சகோதரன்
தமிழ் பிரியன்


Monday, September 29, 2008

ஈத் - அடுத்த வீட்டுக்காரர் சாப்பிட்டாரா என்று முதலில் கவனியுங்கள்!


சிறப்புமிக்க ரமழான் மாதம் நிறைவடையப் போகின்றது. பகல் முழுவதும் உணவு, நீர் என எந்த உணவும் இல்லாமல் பசித்து நோன்பு இருந்து, இரவு நேரங்களில் இறைவனைத் தொழுது இறைஞ்சும் மகத்துவமிக்க மாதம் முடிந்த மறுநாள் தான் ஈத் பெருநாள்.

ரம்ஜான் பண்டிகை என்றும், ஈகைத் திருநாள் என்றும், மக்களால் அழைக்கப்படும் இந்த நாள் தான் முஸ்லிம்களின் முக்கியத் திருநாட்களில் ஒன்று. (மொத்தமே வருடத்திற்கு இரண்டு பெருநாள் தான்.. ஒன்று ஈகைத்திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை)

அதென்ன ஈகைத் திருநாள்? ரமழான் மாதம் முழுவதும் அதிகமான தான தர்மங்களை செய்ய இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. ஏனெனில் ரமழானில் செய்யப்படும் நன்மைகளுக்கு அதிகமாக கூலி கிடைக்கும். இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் தான் ஈகைத் திருநாள். இந்த நாளில் தரக்கூடிய தர்மம் தான் பெருநாள் தர்மம் எனப்படும் ஃபித்ரா.

ஃபித்ரா என்பது நாம் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் நம்மை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது. பெருநாள் அன்று யாரும் உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு முஸ்லிமும் (பிறந்த குழந்தை உள்பட) சுமார் 21/2 கிலோ தானியம் ஏழைகளுக்கு தர்மம செய்வது கட்டாயமான ஒன்று.

ஆனால் வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் போடுவது தான் தர்மம் என தவறாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் மசூதிகளில் இமாம்களுக்கு ஃபித்ரா பணத்தை சென்று தருகின்றனர். ஃபித்ரா ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் இதுவல்ல.

உங்கள் வீட்டிற்கு அருகில், தெருவில், பக்கத்து தெருவில் அல்லது ஊரில் உள்ள நோன்பை கொண்டாட இயல வசதி இல்லாதவர்களுக்கு தருவதுதான் ஃபித்ரா. உண்மையான ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஃபித்ரா கொடுத்து இனிமையாக ரமழானைக் கொண்டாடுவோமாக! இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டுமாக!

உதிரித் தகவல்:
இஸ்லாமிய சட்டங்களின் படி ஐந்து முக்கிய கடமைகளில் முக்கியமானது ஜகாத் எனப்படும் கட்டாய தர்மம். ஒவ்வொரு வருடமும் தம்மிடம் உள்ள பணம், நகை, சொத்துக்களைக் கணக்கிட்டு (குடி இருக்கும் வீட்டைத் தவிர்த்து) அதன் மொத்த மதிப்பு 89 கிராம் தங்கத்துக்கான மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதில் 2 1/2 சதவீதம் ஜகாத்தாக தர வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கு ஒரு வருடம் முடியும் போது 5000 ரூபாய் கட்டாயமாக தர்மம் செய்ய வேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனைகளை பெற வேண்டி வரும்.

ஒவ்வொருவரும் இது போல் கணக்கிட்டு கொடுத்து வந்தால் சமூகத்தில் இருக்கும் ஏழ்மை மிக விரைவில் விலகி விடும். இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Thursday, September 18, 2008

ரமழான் மாதம் - நோன்புக் கஞ்சி நினைவுகளும், செய்முறையும்

.
மற்ற மாதத்தின் பெயர்களை நினைவில் வைத்திருக்கின்றார்களோ இல்லையோ ரமழான் மாதத்தின் பெயரை முஸ்லீம்கள் அனைவரும் நினைவில் இருந்தி இருப்பார்கள். ஏனெனில் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, தர்மங்களை அதிகமதிகம் வழங்கி, மாத இறுதியில் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். நோன்பு கஞ்சி என்பதும் ரமழான் என்றதும் நினைவுக்கு வரும்.

நோன்பு வைத்த ஏழைகள் நோன்பு திறக்கும் நேரத்தில், உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இலவசமாக தர ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. அதே போல் பள்ளிக்கு வருபவர்களுக்கும் நோன்பு கஞ்சி தந்து நோன்பை முடித்துக் கொள்ள உதவி செய்யப்படும்.

சிறு வயதில் நோன்பு இருக்கும் காலங்களில், நோன்பு கஞ்சி குடிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு சென்ற காலம் உண்டு. மண் கலயங்களில் நொன்பு கஞ்சி ஊற்றி, அதற்குள் ஒரு பேரீச்சம் பழத்தை இட்டு, கலயத்தில் ஓரத்தில் புதினா சட்னியும் வைத்திருப்பார்கள். சிறுவர்களுக்கு கடைசியில் தான் தருவார்கள். அதுவும் பாதி தான் தருவார்கள்.... ஏனெனில் வயிறு நிறைந்து போய், அதையே குடிக்க இயலாமல் வைத்து விடுவார்கள்.

கொஞ்சம் பெரிதானதும் நோன்பு கஞ்சி சப்ளை செய்யும் இளைஞர் அணியிலேயே இடம் கிடைத்தது. அப்போதும் ஜாலியாக இருக்கும். நோன்பு திறப்பதற்கு முன் பரபரப்பாக கஞ்சி ஊற்றுவது, சட்னி வைப்பது, பேரீச்சம் பழம் கொடுப்பது என பிஸியாக இருப்போம். சில நாட்களில் கஞ்சி பற்றாக்குறை காரணமாக எங்களுக்கே கிடைக்காது. ஆனாலும் அதுவும் ஒருவித மகிழ்ச்சியாகவே இருக்கும்.



சென்னைக்கு சென்ற போது இனி ரமழானில் நோன்பு கஞ்சி கிடைக்காது என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிய பள்ளிவாசல் இருந்தது. ரமழான் மாதம் முழுவதும் சூடான நோன்பு கஞ்சி கிடைத்தது.

துபாய்க்கு பிளைட் ஏறும் போதும் அதே நிலை தான்... அரபுகள் இருக்கும் நாட்டிற்கு செல்கின்றோம் என்ற நினைவுடன்... சென்று பார்த்தால் நிறுவனத்தில் 90 சதவீதம் தமிழர்களே... அப்புறம் என்ன அங்கும் நோன்பு கஞ்சி சப்ளையில் இறங்கி விட்டோம்.. ஆனால் வெளிநாடு அல்லவா? ஸ்பெஷலாக வடை, பஜ்ஜி, கேரா மில்க சூஸ், கடல் பாசி என அமர்க்களமாக இருக்கும்.

சவுதியில் வந்த போது நிறுவனம் ஒரு பிரெஞ்ச் பாணி நிறுவனம்... இருக்கும் 600 பேரில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்... (2006) ரமழான் மூன்றில் தான் அங்கு சென்று சேர்ந்தேன். ’அம்புட்டு தான்டா நோன்பு கஞ்சி’ என்று இருந்த வேளையில், அங்கும் அமர்க்களமாக நோன்பு கஞ்சி கிடைத்தது. தமிழ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் தினமும் தமிழக ஸ்டைல் நோன்பு கஞ்சியுடன் இப்தார் கிடைத்தது. இப்போது அங்கு தான் சங்கமம்... இறைவனின் கிருபையால்... :)

இனி நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம். இது சைவ உணவு தான்... சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும். உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவும்... வீடுகளில் செய்து மாலை நேரங்களில் அருந்தலாம்... :)

தேவையானப் பொருட்கள்
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஊரவைத்த ஜவ்வரிசி அல்லது சேமியா - சிறிதளவு கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம் (added by adiraixpress)

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.

நன்றி :arusuvai.com

Sunday, September 14, 2008

மெக்கா - காபா - சில அரிய தகவல்கள்

.
.
லகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னோக்கும் இடமாக மெக்காவில் உள்ள காபா ஆலயம் உள்ளது. உலகில் அவர் எந்த மூலையில் இருந்தாலும், தொழுகை நடத்த வேண்டுமெனில் காபா உள்ள திசையை நோக்கியே தொழ வேண்டும்.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)




காபா ஆலயம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா என்னும் ஊரில் உள்ளது. இதுவே உலகின் மனிதனால் இறைவனை வணங்க கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்ராஹீம் (அலை) நபி அவர்களை இந்த பள்ளியை புணர்நிர்மானம் செய்ய இறைவன் நாடுகின்றான். அதற்கான சூழலை ஏற்படுத்த இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவி ஆசுரா(அலை) மற்றும் மகன் இஸ்மாயில்(அலை) ஆகியோரை அங்கு குடியேற வைக்கின்றான்.

அதுவரை மக்கள் நடமாட்டம் இல்லாத, தண்ணீர் ஏதும் இல்லாத மெக்கா பள்ளத்தாக்கில் மனைவியையும், கைக்குழந்தையாக இருந்த மகனையும் விட்டுவிட்டு இப்ராஹீம்(அலை) சென்று விடுகின்றார். இறைவனின் புறத்தில் இருந்து வந்த கட்டளை இது என்பதால் அதை ஏற்றுக் கொண்டு அந்த வானாந்தரத்தில் ஆசுரா தங்குகின்றார்.

இப்ராஹீம் (அலை) திரும்பிச் சென்றதும் தாயும், மகனும் தண்ணீருக்காக தவிக்கின்ற வேளையில், இறைவனின் கிருபையில் அங்கு தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடுகின்றது. (இன்று வரை அந்த ஊற்றில் சுவையான தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டு இருக்கிறது. மெக்கா செல்பவர்கள் ஜம் ஜம் என்ப்படும் இந்த தண்ணீரை ஊருக்கு கொண்டு வந்து அனைவருக்கும் தருவது வழக்கம்) தண்ணீர் இருப்பதால் அந்த வழியாக வரும் பயணக்கூட்டங்கள் அங்கு தங்க துவங்கின. இதனால் தாயுக்கும், மகனுக்கும் உணவுத் தேவை சுலபமாக பூர்த்தியானது.

கைக் குழந்தையாக இருந்த இஸ்மாயில்(அலை) இளைஞனானதும் இப்ராஹீம்(அலை) திரும்பி வருகின்றார். அங்கு ஒரு ஊரே உருவாகி இருந்தது. பின்னர் தந்தையும், மகனும் இருந்து உலகின் முதல் மனிதன் ஆதம்(அலை) கட்டிய காபாவின் அடித்தளத்தில் இருந்து காபா ஆலயத்தைக் கட்டினர்.



(இப்ராஹீம்(அலை) அவர்கள் காபாவை கட்ட நின்ற இடம் இன்று மகாமே இப்ராஹீம் என அழைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது) அது முதல் இன்று வரை காபா, மக்கள் இறைவனை வழிபடும் இடமாக இருக்கின்றது. உலகம் அழியும் நாள் வரை இருக்கும்.

காபா ஆலயம் பல கட்டங்களில் சேதாரம் அடையும் போது, அப்போதைய மக்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக உலக மக்களிடம் இருக்கும் ஒரு வாதம்... முஸ்லிம்கள் திசையை தொழுகின்றனர் என்பது. பாரதி கூட திசை தொழு துலுக்கர் என கவி பாடியுள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து கடமைகளும் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவை. அனைவரும் ஒரே விதமான ஓரிறைக் கொள்கையுடன் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும், நோன்பை விட வேண்டும். பணம் உள்ளவர்கள் அனைவரும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஜகாத் என்னும் தர்மம் செய்ய வேண்டும். ஹஜ் என்னும் கிரியையை ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும்.

இதே போல் தொழுகையையும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபாவை நோக்கி தொழ வேண்டும் என்பதும். காபா என்பதும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளைப் போல தான். காபா உள்ள திசையை நோக்குவதால் எந்த நன்மையும் ஏற்படாது. ஆனால் ஒழுங்குக்காக அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காபா இருக்கும் திசையை நோக்க வில்லையெனில் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)

ஆனால் உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் அதில் செய்யும் நல்ல செயல்களுக்கு பல மடங்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

காபா கட்டடம் என்றதும் ஏதோ அதற்குள் குறிப்பிட்ட சில பொருட்களை வைத்து வணங்குவது போல் மாயை மக்களிடம் நிலவுகின்றது. காபா கட்டடம் சுமார் 14 மீட்டர் உயரமும், 10.5 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட கனசதுர கட்டிடமாகும். அதனுள்ளே வரிசையாக மூன்று தூண்கள் உள்ளன. ஒரு புறம் மட்டுமே கதவு உள்ளது. ஜன்னல்கள் ஏதும் இல்லை. மின் விளக்குகள் ஏதும் இல்லை. அதற்குள் சுமார் 50 பேர் தொழுகை நடத்தும் இடம் உள்ளது. காபாவின் உள்ளே முழுவதும் உயர்தர மார்பிள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.



காபாவின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்



காபாவின் கட்டமைப்பு படம்

முன்பு காபாவின் உள்ளே சென்று தொழுகை நடத்தப்பட்டு வந்தது. காபாவின் உள்ளே தொழுதால் எந்த திசையும் நோக்கலாம். மக்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் காபா திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பல லட்சம் மக்களும் உள்ளே சென்று தொழுகை நடத்த விரும்பும் போது பல இன்னல்கள் ஏற்படும் என்பதால் காபாவின் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஓரிரு முறை சுத்தம் செய்வதற்கு மட்டும் திறக்கப்படுகின்றது. அப்போதும் உள்ளே செல்ல பணியாட்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.



காபாவிற்குள் தொழுகைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட போது

காபா ஆலயத்தை இடிக்க முயற்சித்த அப்ரஹாவுக்கும், அவரது படைகளுக்கு ஏற்ப்பட்ட அழிவை சென்ற பதிவில் பார்த்தோம். (சென்ற பதிவு). யாராலும் இந்த ஆலயத்தை இனி அழிக்க இயலாது. ஆனால் உலக அழிவுக்கு முன் இந்த ஆலயம் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபா இருக்கும் இடத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திற்கு புனிதமான இடம் என நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தாவரங்களை பிடுங்குவது, எந்த உயிரையும் கொல்வது, (சிறு புழு, பூச்சி உள்ளிட்ட உயிரிகள் உள்பட) தவறான நடத்தைகளில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.

உலகில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமான மெக்கா காபாவிற்கு சென்று, அங்கு இறைவனை தொழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்!

காபா பற்றிய மேற்கொண்டு தகவல்களுக்கு

காபா வரலாறு - பகுதி 1-அபு முஹை
காபா வரலாறு - பகுதி 2-அபு முஹை

Update : நண்பர் சர்வேசனின் வேண்டுகோளுக்காக ஜம் ஜம் கிணறு


ஜம் ஜம் திறந்த வெளி கிணறாக இருந்த போது



ஜம் ஜம் தண்ணீர் ஊறும் இடம்


சில ஆண்டுகளுக்கு முன் வரை ஜம் ஜம் கிணறுக்கு சென்றும் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. (ஊற்று வருவதை நானும் பார்த்துள்ளேன்). அந்த கிணறு காபாவுக்கு மிக அருகில் இருப்பதால் இட வசதியைக் கருத்தில் கொண்டு மேற்பகுதி சமதளமாக்கப்பட்டுள்ளது. கீழே அதற்க்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வழி வழியாக சென்றால் பார்க்கலாம்.

Saturday, September 13, 2008

1400 க்கு முன் - உலகின் முதல் அணு ஆயுத தாக்குதல்

.
.
நவீன உலகில் முதன் முதலில் அணு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்கா ஜப்பானை தாக்கியதாக தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னாலேயே அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரேபிய தீபகற்பத்தில் மெக்கா என்னும் பகுதி விவசாய நிலங்கள் இல்லாத ஒரு வறண்ட பூமியாக இருந்தது. கடுமையான வெயில் இருக்கக் கூடிய பகுதி. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை வளர்ந்து, மாமிசம், பால் போன்றவற்றையே உண்டு வந்தனர். பாலைவனப் பகுதி என்பதால் மற்ற பகுதிகளில் பேரீச்சம் பழங்களும் கிடைத்து வந்தன. ஆனால் அந்த குறிப்பிட்ட ஊர் கடுமையான வறண்ட மலைப்பிரதேசம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்தே உணவுப் பொருட்கள் அங்கு வர வேண்டி இருந்தது.

ஆனால் மெக்காவுக்கு ஒரு சிறப்பு இருந்தது. அந்த ஊரில் தான் அந்த தீபகற்பத்திற்கே முக்கியமாக கருதப்படும் வழிபாட்டுத் தளம் காபா இருந்தது. பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அங்கு வந்து வழிபாடுகள் செய்வது வழக்கம். இந்நிலையில் அரேபிய தீபகற்பத்தின் ஒரு புறம் இருந்த யமன் என்ற பகுதி அபிசீனிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அந்த பகுதியை அப்ரஹா என்ற ஆளுநர், அபிசீனிய மன்னரின் கட்டளைப்படி ஆண்டு வந்தார்.

யமன் தேசத்தில் மிகுந்த பொருட் செலவில் அப்ரஹா அழகான வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அரேபிய தீபகற்பம் முழுவதும் அரபுகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவர்கள் மெக்காவுக்கே வழிபாடு நடத்த வருவது வழக்கம். அப்ரஹாவால் இந்த வழக்கத்தை மாற்றி, யமனை நோக்கி மக்களை திருப்ப செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரஹா மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கும் எண்ணத்துடன் ஏராளமான யானைகள் மற்றும் 60,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையுடன் கிளம்பி வந்தார். (அபீசினியா ஆப்ரிக்க கண்டத்தில் உள்ளதால் அங்கிருந்து யானைப் படையைக் கொண்டு வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது).அரபு தேசம் முழுவதும் இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவியது. சிறு சிறு குழுக்களாக இருந்த அரபு மக்கள் அந்த படையுடன் போரிட இயலாமல் தோல்வியையே தழுவ நேரிட்டது.

இந்நிலையில் அந்த பெரும்படை மெக்காவை நெருங்கி தனது கூடாரங்களை அமைத்தது. அப்ரஹா தனது வீரர்களை வேவு பார்க்க அனுப்பி வைத்தார். மெக்காவில் போருக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வரும் வழியில் மேய்ந்து கொண்டிருந்த மெக்கா நகர முக்கியஸ்தர்களின் ஆடு, ஒட்டகங்களை அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து விடுகின்றனர். (இந்த முறை தமிழ் இலக்கியங்களில் நிரை கவர்தல் என அழைக்கப்படும்)

இதை அறிந்த அந்த பிரமுகர் தனது ஆடு, ஒட்டகங்களை மீட்க அப்ரஹாவிடம் வருகின்றனர். அப்ரஹா அவரிடம் பேசும் போது “இந்த ஆடு,ஒட்டகங்கள் என்னுடையது. அவைகளை திருப்பி அளித்து விடுங்கள். இந்த ஆலயம் இறைவனுக்கு சொந்தமானது. அவன் விரும்பினால் அதை பாதுகாத்துக் கொள்வான்” என்று கூறி விடுகின்றார். பெரும் போருக்கு ஆயத்தமாக வந்திருந்த அப்ரஹாவிறகு இது ஏமாற்றமாக ஆகி விடுகின்றது.

மறுநாள் தனது பெரும்படையுடன் மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்க அப்ரஹா கிளம்புகின்றார். அப்போது தான் அந்த அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றது. அபாபீல் என்ற சிறு பறவைகள் தமது கால், அலகுகளில் கொண்டு வந்த, களிமண்ணால் ஆன செறிவூட்டப்பட்ட சிறு குண்டுகளை வீசுகின்றன. அவை தரையில் இருக்கும் யானைப்படைகளின் மீது விழுந்ததும், வெடித்து சிதற ஆரம்பித்தன. யானைகள் மீது அந்த களிமண் கட்டிகள் விழுந்ததும் தரையோடு புதைந்து போயின. வீரர்களின் உடல்கள் முழுவதும் சதைகள் உருகி ஓடத் துவங்கி விட்டன. மீதமுள்ள யானைகள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு தனது படைகளையே துவம்சம் செய்தன.

இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை. இந்த நிகழ்ச்சி மெக்காவில் முகமது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சி அரேபியர்களின் வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் வைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(திருக்குர்ஆன், 105:001-005)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَبِ الْفِيلِ

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ



இந்த நிகழ்வின் இறுதியில் அந்த படைகளின் நிலையை விளக்கும் திருக்குர்ஆன் மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் ஆகி விட்டதாக கூறுகின்றது. சாதாரணமாக வைக்கோல் ஒரு ஒழுங்கற்ற நிலையில் தான் இருக்கும். மென்று தின்னப்பட்ட வைக்கோலின் நிலை ஹிரோசிமாவின் நிலையைக் கண்ணுக்கு கொண்டு வரும்.

Friday, August 8, 2008

தாயிஃபில் தமிழ் இஸ்லாமிய கோடைக்கால முகாம் - நேரடித் தொகுப்பு

.

சவுதி அரேபியாவில் உள்ள கோடைவாசஸ்தலங்களில் ஒன்றான மலைகளின் நகரமாம் தாயிஃபில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் சார்பில் 08-08-08 அன்று கோடைக்கால முகாம் நடத்தப்பட்டது. தாயிஃப் நகரில் உள்ள தமிழ் பேசக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




தாயிஃபை அடுத்த அஷ் ஷபா மலைக்குன்றுக்கு போகும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தாயிஃப் இஸ்லாமிய மைய அழைப்பாளர் அஷ்ஷைக் அஸ்மி யூஸூபி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ஜித்தா இஸ்லாமிய அழைப்பு வழி காட்டுதல் மைய பிரச்சாகர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.



வெள்ளிக்கிழமை மதிய ஜூம்ஆ உரை நிகழ்த்திய அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமைகளை விரிவாக எழுத்துரைத்தார்கள். இஸ்லாமிய அடிப்படையில் கடமைகளைச் சரியாக செய்யும் போது முஸ்லிம்களின் வாழ்வு செழிக்கும் என்ற அடிப்படையில் அமைந்திருந்த அவரது பேச்சு அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



ஜூம்ஆ உரைக்குப் பின் சுவையான மதிய உணவு இனிப்புடன் பரிமாறப்பட்டது.






மதிய உணவுக்குப் பின் அஸ்மி யூஸூபி அவர்கள் இஸ்லாமிய மைய செயல்பாடுகளை விளக்கி உரை நிகழ்த்தினார்கள். பின்னர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் குர்ஆனை தமிழில் உணர்ந்து ஒதுவது குறித்தும், அதை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.








பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



அஸர் தொழுகைக்குப் பிறகு பங்கேற்றவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து என்று விளையாடி மகிழ்ந்தனர். ஒரு பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுத் திரும்பினர்.






பேச்சாளர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்களின் பேச்சில் ஒரு சிறு துளி...



செய்தி தொகுப்பு : தமிழ் பிரியன்.... தாயிஃப்.

Wednesday, July 23, 2008

சீறாப்புராணம் - இஸ்லாமிய இலக்கியமா? ஓர் ஆய்வு - 1

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியங்களின் சுவை அலாதியானது. இவைகளை பொதுவாக இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று வாழ்வியல் சம்பந்தமானவை அதாவது வாழ்க்கை வரலாறு, காதல், போர், வீரம், புனைக்கதை வரலாறு இப்படி... இரண்டாவது பக்தி இலக்கியங்கள்.... பல்வேறு வகையான மத, சமயத்தின் கருத்துக்களையும், அதில் புனிதமானவர்களாக கருதப்படுபவர்களின் வரலாறு, கடவுள்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் பெருமைகள், அவர்கள் செய்த அற்புதங்கள் இப்படி பிரித்து விடலாம்.

தழிழில் பொதுவாக பக்தி இலக்கியங்களை இந்து மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர். சில இடங்களில் மட்டும் பக்தி சார்ந்தவை வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்படுகின்றது. அவைகளை விதிவிலக்காகக் கருதி விட்டு விடலாம். அதே போல் கிறித்தவ மதத்திலும் இவ்வாறான பக்தி இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. அவர்களின் பிரார்த்தனைகளிலும் அவைகள் பாடப்படுவதைக் காணலாம். இந்த வரிசையில் உலகில் உள்ள மதங்களில் முக்கிய இடத்தை வகிக்கும் இஸ்லாமும் வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு என்று தொழுகை, பிரார்த்தனை, இன்னபிற வணக்கங்களும் இருக்கின்றன.

தமிழில் இஸ்லாமிய பக்தி இலக்கியம் என்ற உடன் பாட நூல்களிலும் இலக்கிய ஆர்வலர்களாலும் சுட்டப்படுவது சீறாப்புராணம் தான். சீறாப்புராணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அதை ஒரு இஸ்லாமிய இலக்கியமாக அல்லது இஸ்லாமிய வரலாற்றுக்கு மூலமாக பார்ப்பது தவறு.

முதலில் இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி விடலாம். இஸ்லாமிய மார்க்கம் கவிதைகளுக்கு எதிரானது அல்ல. தனது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கவிதைகளை அது அனுமதிக்கவே செய்கின்றது. ஹிஜ்ரத் செய்தவர்கள் தமது சொந்த மண்ணிற்கு திரும்புவது எப்போது எனக் கவலையுடன் கவிதை படித்ததாக ஹதீஸ்களில் வருகின்றது. அதே போல் கவிதையில் இஸ்லாத்தை தூற்றியவர்களுக்கு கவிதையிலேயே ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) பதிலடி கொடுத்த சம்பவங்களும் கிடைக்கின்றன.

இரண்டாவது இஸ்லாம் அதிகப்படியான புகழுரைகளையும், முகஸ்துதிகளையும், உண்மைக்கு புறம்பான விடயங்களையும் கவிதை வடிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தின் இருக்கக் கூடிய முக்கிய நம்பிக்கைகளில் முகமது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வாழ்வில் கடைபிடிப்பதும் ஒன்று. அதன்படியே இஸ்லாமியர்கள் செயல்பட வேண்டும். எனவே இதில் பொய் கலந்து விடக்கூடாது. எனவே தான் ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவிதங்களிலும் ஆராய்ந்து ஹதீஸ்களை தொகுக்கின்றனர். சீறாப்புராணம் என்பது இஸ்லாத்தின் கடைசித் தூதர் முகமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூலாகவே சொல்லப்படுகின்றது. அழகு தமிழில், மித மிஞ்சிய கற்பனைகளை கலந்து எழுதப்பட்டதே சீறாப்புராணம். இதில் நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் சில தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து தமிழில் புனையப்பட்டுள்ளது, இதில் இடம்பெறும் தகவல்கள் அனைத்திலும் நம்பகத்தன்மை இல்லை. இதன் மூன்று காண்டங்களிலும் பார்த்தோமேயானால் சிறு செய்தியை மட்டுமே வைத்து அதை விவரிக்கும் நோக்கில் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுருப்பதைக் காண இயலுகின்றது. அவைகளை இங்கு விரிவாக காண்பதற்கு பதிவு போதாது என்றாலும் ஒரு சிறு உதாரணத்தை மட்டும் காட்டுகிறேன். நபிகளாரின் மகள் பாத்திமாவின் கணவர் பெயர் அலி (ரலி). இவர்களது திருமணம் நடந்த விதம் சம்பந்தமான வரலாற்று சான்றுகள் குறைவு. ஆனாலும் அதை விவரிக்க விரும்பிய உமறுப்புலவர் பாத்திமா திருமணப்படலத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். பாடலின் மூலத் தொகுப்பு

அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறது! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள் தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்கள்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்கள்! ஒவியம் வரைந்தார்கள். தோரணம் கட்டினார்கள். பந்தல்கள் போட்டார்கள். அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்கள். தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்கள். பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களா! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்கள். உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்கள். அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்கள். இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்கள்.
பாத்திமா அவர்களுக்கு தாலி கட்டப்பட்டது என்றும், இந்த திருமணத்திற்கு வானவர்கள் வந்திருந்தனர் எனவும் சொல்லப்பட்டுள்ளது

இஸ்லாமியத் திருமணம் என்பது மிக எளிமையாக நடத்தப்பட வேண்டிய ஒன்று. அனைவருக்கும் முன்மாதிரியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபியவர்கள் இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடவில்லை. பல நேரங்களில் வறுமையின் காரணமாக உணவின்றி கஷ்டப்பட்டுள்ளனர். இறக்கும் போது கூட தனது கவச உடையை அடமானத்தில் இருந்து மீட்க இயலாமலேயே மரணித்துள்ளார்கள். நபிகளாரின் வீட்டில் தொடர்ந்தார் போல் மூன்று தினங்களுக்கு அடுப்பு எரிந்தது இல்லை என அவரது துணைவியார் கூறுவதும் ஹதீஸ்களில் வந்துள்ளது. அதே போல் திருமணத்திற்கு தோரணங்கள், அலங்காரங்கள், தாலி போன்றவையும் அவர்களிடம் இருந்ததில்லை. இவைகள் வர்ணணைக்காக இருந்தாலும் முகமது நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யான விடயங்களை இட்டுக் கட்டி கூறுவதிலேயே அமையும். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேலும் நபிகள் கூறும் போது யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி) .

இந்த காட்சி ஒரு உதாரணத்திற்கு மட்டுமே! இது போல் அனைத்து பகுதிகளிலும் உண்மைக்குப் புறம்பான காட்சிகளே காணக் கிடைக்கின்றன.

1. இவை சாதாரண காட்சி வர்ணனைகள், இவைகள் இலக்கியங்களுக்கு அழகு சேர்ப்பவை. கவிதைக்குப் பொய் அழகு. எனவே இதை மறுதலிக்கக் கூடாது?

2. சீறாப்புராணத்தை நபிகளின் புகழ் கூறும் புகழ்மாலையாகத் தான் பார்க்க வேண்டும்

இவ்வாறு கூறுபவர்களின் கூற்று இஸ்லாத்தின் பார்வையில் தவறானது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.........................
ஆய்வு தொடரும்

Friday, May 16, 2008

முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை - ஒரு ஆய்வு

கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
இதுதான் முஸ்லிம்சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லிம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்
பெரும்பாலான முஸ்லிம்இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லிம்சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே முஸ்லிம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்−களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்:-
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :-
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்
சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்
அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள்
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்
பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?
பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.

அனைத்து முஸலி்ம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம். உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.

“”எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை .” அல்-குர்ஆன்(8:53)


நன்றி : தஞ்சை தவ்ஹீத் மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை

மாநாட்டின் செய்தி
மாநாட்டின் விபரம்
புகைப்படங்கள்