Thursday, August 21, 2008

கலவையான சிந்தனை - 21 - 08 - 2008

.

கலவை 1
நேற்று ஒலிம்பிக்கில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அலட்சியமே பதிலாக வந்தது. கிரிக்கெட் பற்றியோ, சினிமா கிசுகிசு பற்றியோ, அல்லது வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களைப் பற்றியோ புறம் என்றால் ஆர்வமாகக் கேட்கின்றனர். ஒலிம்பிக்கில் மெடல் கிடைத்தால் இந்தியா வல்லரசாகவா போகின்றது? என்ற பதிலே கிடைத்தது. இதே போல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போதும் வேற வேலை இல்லையா உனக்கு? என்ற பதிலே கிடைத்தது. நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(



கலவை 2
சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பள்ளி நாட்களில் விறகு பொறுக்க செல்லும் போது நாமும் இது போல் விவசாய நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். (நம்புங்க) துபாயில் இரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தில் இரண்டு ஏக்கரில் விவசாய நிலம் வாங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் அதன் மூலம் எந்த லாபமும் இல்லை. சொற்பமாக கிடைக்கும் லாபமும் பராமரிப்பு பணிகளுக்கே போய் விடுகின்றது. பருவ மழையின் சொதப்பல்கள், விவசாயக் கூலிகளின் போங்குகளால் அதை விற்று வீடு கட்டும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை. இதை 5 வருடங்களுக்கு முன் செய்திருந்தால் இரண்டு மடங்கு பணம் கிடைத்திருக்கும் என்று மனோ நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.




கலவை 3
என்னுடன் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பருக்கு குவைத்தில் இருந்து ஒரு பிலிப்பைன்ஸ் பெண்மணி போன் செய்தார். அங்கு அவர் செவிலிப் பெண்ணாக வேலை செய்கின்றார். அந்த பெண்ணுடைய கணவனும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அந்த கணவன் மனைவிக்கோ, குழந்தைக்கோ ஓராண்டாக தொலை பேசுவதில்லை, பணம் அனுப்புவதில்லையாம். தொலை பேசி எண்ணையும் மாற்றிவிட்டதால் எனது நண்பரை விசாரித்து தகவல் சொல்லும்படி கேட்டுக் கொண்டார் அழுகையுடன். விசாரித்த போது அவர் இங்கு வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டு திருமணம் முடித்துக் கொண்டதும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. அவரைக் கேட்ட போது எந்த கவலையும் இல்லாமல் பதில் கூறினார். இது நடந்த சில மாதங்களில் எங்கள் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார். இப்போது அந்த பெண் கைக்குழந்தையுடன் அவதிப் படுகிறார். என்ன ஜென்மங்கோ தெரியவில்லை... அங்கு மனைவியும், குழந்தைகளும், இங்கு வேறு மனைவியும் குழந்தையும்... அடுத்து போகும் இடத்தில் என்ன செய்யப் போகின்றானோ? தெரியவில்லை

கலவை 4
நேற்று இரவு எனக்கு செல் பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அண்ணன் நிஜமா நல்லவன் அனுப்பி இருந்தார். அந்த நேரம் அவர் இருக்கும் சிங்கப்பூரில் நடு இரவு 1:30 மணி. என்ன வென்று பார்த்த போது 2 என்ற எண் மட்டும் இருந்தது. இரவு 1:30 மணிக்கு திடீரென்று இப்படி செய்தி அனுப்பி இருக்காரே என்று வேகமாக தொலை பேசிக் கேட்டால் அவர் 'இரண்டு'க்கு போகிறாராம் அதான் செய்தி அனுப்பினாராம். என்ன கொடும இது பாரதி........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

28 comments:

ராமலக்ஷ்மி said...

//நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(//

கவலையை விடுங்கள், இருக்குமிடம் தவறாகவே இருந்தாலும் என்றைக்கும் நாம் சரியாகவே இருந்து கொள்வோம்.


//பருவ மழையின் சொதப்பல்கள், விவசாயக் கூலிகளின் போங்குகளால் // பலரும் இந்த //மனோ நிலைக்கு தள்ளப்பட்டு//தான் வருகிறார்கள் தமிழ் பிரியன்.

Anonymous said...

//கிரிக்கெட் பற்றியோ, சினிமா கிசுகிசு பற்றியோ, அல்லது வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களைப் பற்றியோ புறம் என்றால் ஆர்வமாகக் கேட்கின்றனர்//

உண்மைதான் பரபரப்பாக இருந்தால்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். ஜூ வி மற்றும் நக்கீரன் விற்பனையே இதற்கு சாட்சி.

நல்லா இருக்கு.

விஜய் ஆனந்த் said...

:-)))

துளசி கோபால் said...

கலவை 1

ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். இவர் ரொம்ப சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவராம். வட இந்தியாவில் ஏதோ ஒரு சின்ன கிராமம். ஏழ்மை நிலையாம்.

அவருடைய போட்டியை ஊரே கூடி இருந்து டிவியில் பார்த்தாங்கன்னு கோபால் சொன்னார்.

தமிழ்நாடா இருந்தால்..... குறைஞ்சபட்சம் இலவச டிவியாவது வீட்டுலே இருந்துருக்கும்.

2.

நிலம் வாங்கியும் பயன் ஒன்னுமில்லைன்னு நினைச்சால் வேதனையா இருக்கு.


பாவம் அந்தத் தாய்.
அந்த ஆளைப் புடிச்சுப் போலீஸ்லே கொடுக்கணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி சொல்லுவது போல ஒரு சின்ன ஊரு ஆளு ஜெயிச்சது மகிழ்ச்சி தானே..

www.maravalam.blogspot.com போயிருக்கீங்களா.. விவசாயநிலத்தை பயனுள்ளதாக பயன்படுத்த ஆலோசனை பெற்றுக்கொள்ளலாமே..

VIKNESHWARAN ADAKKALAM said...

கலவை 3

கேடுகெட்ட மனிதர்கள். இப்படி இருப்பவர்கள் கடைசி காலத்தில் உண்ண உணவின்றிதான் இறந்து போவார்கள்.

மிக நல்ல பதிவு...

குசும்பன் said...

எனக்கு பிந்ரா தங்கம் வாங்கியபோது இருந்ததை விட.

நேற்று குத்து சண்டை((உறுதி), மல்யுத்தம் ஆகியவற்றில் வெண்கலம் வாங்கிய பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா :))

புகழன் said...

ஒரே பதிவில் பல செய்திகள்
கலவை சூப்பர்

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
//நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(//
கவலையை விடுங்கள், இருக்குமிடம் தவறாகவே இருந்தாலும் என்றைக்கும் நாம் சரியாகவே இருந்து கொள்வோம்.///
நன்றி ராமலக்ஷ்மி அக்கா! அந்த நம்பிக்கை தான் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது!

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...
//கிரிக்கெட் பற்றியோ, சினிமா கிசுகிசு பற்றியோ, அல்லது வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களைப் பற்றியோ புறம் என்றால் ஆர்வமாகக் கேட்கின்றனர்//
உண்மைதான் பரபரப்பாக இருந்தால்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். ஜூ வி மற்றும் நக்கீரன் விற்பனையே இதற்கு சாட்சி.
நல்லா இருக்கு.///

ஆமாம் சார். பரபரப்பானவை பொய்யான மாயைகள் என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...

:-)))///
சிரிப்பானுக்கு நன்றி விஜய் ஆனந்த்!

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...
கலவை 1
ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். இவர் ரொம்ப சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவராம். வட இந்தியாவில் ஏதோ ஒரு சின்ன கிராமம். ஏழ்மை நிலையாம்.
அவருடைய போட்டியை ஊரே கூடி இருந்து டிவியில் பார்த்தாங்கன்னு கோபால் சொன்னார்.
தமிழ்நாடா இருந்தால்..... குறைஞ்சபட்சம் இலவச டிவியாவது வீட்டுலே இருந்துருக்கும்.
2. நிலம் வாங்கியும் பயன் ஒன்னுமில்லைன்னு நினைச்சால் வேதனையா இருக்கு.
பாவம் அந்தத் தாய்.
அந்த ஆளைப் புடிச்சுப் போலீஸ்லே கொடுக்கணும்.///
டீச்சர் கருத்துகளுக்கு நன்றி!
1. மேலதிக தகவல்களால் மகிழ்ச்சி!
2. பயன் இல்லாமல் போனது மட்டுமின்றி அதனால் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டேன். ஏனெனில் அந்த பணம் சம்பாதிக்க 19 வயது முதல் பட்ட கஷ்டங்கள் ஏராளம்... :(
3. இங்கு போலிஸ் இந்தியாவை விட மிக மோசம்... :(

சின்னப் பையன் said...

1: நீங்க சொன்னமாதிரியே எனக்கும் இந்த சுஷிலின் பதக்கம் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி ஆட்களிடம் சொன்னா, நம்ம உற்சாகமும் குறைஞ்சி போயிடும்....:-(((

2: ரொம்ப வருத்தம் தரும் செய்தி. :-((

3: மைனர் கு*சை சுட்டுட வேண்டியதுதான்.....

4: நான்கூட 1.30 மணிக்கு 2ன்னு அனுப்பறாரேன்னு பாத்தேன்... :-))))

தமிழன்-கறுப்பி... said...

\
நேற்று ஒலிம்பிக்கில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது
\

மகிழ்ச்சியான விசயம்...:)

தமிழன்-கறுப்பி... said...

\
இதே போல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போதும் வேற வேலை இல்லையா உனக்கு? என்ற பதிலே கிடைத்தது. நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(
\

அண்ணே சில விசயங்கள் அப்படித்தான் இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

விக்கிறதால பிரயோசனம் இருக்குன்னு நினைச்சா செய்யுங்க...

தமிழன்-கறுப்பி... said...

பிலிப்பைன்ஸ்ல இது சகஜம்தானே தல...

ஆனா எல்லோரும்னு கிடையாது....

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்பினார்...

புதுகை.அப்துல்லா said...

நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(
//

அண்ணே நீங்க நீங்களாவே இருங்க. வேற ஓன்னும் சொல்றதுக்கு இல்ல...

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
துளசி சொல்லுவது போல ஒரு சின்ன ஊரு ஆளு ஜெயிச்சது மகிழ்ச்சி தானே..
www.maravalam.blogspot.com போயிருக்கீங்களா.. விவசாயநிலத்தை பயனுள்ளதாக பயன்படுத்த ஆலோசனை பெற்றுக்கொள்ளலாமே..///
ஆமாம் கயல்விழி முத்துலெட்சுமி அக்கா! மழை இல்லையேல் என்ன செய்தாலும் ஒன்றுக்கும் உதவாமல் போய் விடுகின்றது... :(

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...
கலவை 3
கேடுகெட்ட மனிதர்கள். இப்படி இருப்பவர்கள் கடைசி காலத்தில் உண்ண உணவின்றிதான் இறந்து போவார்கள்.
மிக நல்ல பதிவு...///
நாம் சாபமிட்டு என்ன ஆகப் போகின்றது விக்கி! அவர்கள் உணர வேண்டும்... :)

Thamiz Priyan said...

/// குசும்பன் said...
எனக்கு பிந்ரா தங்கம் வாங்கியபோது இருந்ததை விட.
நேற்று குத்து சண்டை((உறுதி), மல்யுத்தம் ஆகியவற்றில் வெண்கலம் வாங்கிய பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.///
ஆமாம் அண்ணே! வீரத்திற்கு கிடைத்த பரிசுகள்.

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா :))///
நன்றி ஆயில்யன்!

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...
1: நீங்க சொன்னமாதிரியே எனக்கும் இந்த சுஷிலின் பதக்கம் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி ஆட்களிடம் சொன்னா, நம்ம உற்சாகமும் குறைஞ்சி போயிடும்....:-(((
2: ரொம்ப வருத்தம் தரும் செய்தி. :-((
3: மைனர் கு*சை சுட்டுட வேண்டியதுதான்.....
4: நான்கூட 1.30 மணிக்கு 2ன்னு அனுப்பறாரேன்னு பாத்தேன்... :-))))///

ச்சின்ன பையன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
உங்க பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கு... ஆனா 3ஐத் தவிர

Thamiz Priyan said...

///தமிழன்... said...

எனக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்பினார்...///
]உங்களுக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(
//
அண்ணே நீங்க நீங்களாவே இருங்க. வேற ஓன்னும் சொல்றதுக்கு இல்ல...///
அதுக்குத்தான் அண்ணே பெரும் முயற்சி செய்ய வேண்டியதா இருக்கு

பரிசல்காரன் said...

நல்லா வந்திருக்கு நண்பா..

மூணாவது, நாலாவது மேட்டருக்கு நான் சொல்லணும்ன்னு நெனைச்சதை ச்சின்னப்பையன் சொல்லீட்டதால
நற நறன்னு பல்லைக் கடிச்சுட்டே போறேன்..