Friday, August 8, 2008

தாயிஃபில் தமிழ் இஸ்லாமிய கோடைக்கால முகாம் - நேரடித் தொகுப்பு

.

சவுதி அரேபியாவில் உள்ள கோடைவாசஸ்தலங்களில் ஒன்றான மலைகளின் நகரமாம் தாயிஃபில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் சார்பில் 08-08-08 அன்று கோடைக்கால முகாம் நடத்தப்பட்டது. தாயிஃப் நகரில் உள்ள தமிழ் பேசக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




தாயிஃபை அடுத்த அஷ் ஷபா மலைக்குன்றுக்கு போகும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தாயிஃப் இஸ்லாமிய மைய அழைப்பாளர் அஷ்ஷைக் அஸ்மி யூஸூபி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ஜித்தா இஸ்லாமிய அழைப்பு வழி காட்டுதல் மைய பிரச்சாகர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.



வெள்ளிக்கிழமை மதிய ஜூம்ஆ உரை நிகழ்த்திய அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமைகளை விரிவாக எழுத்துரைத்தார்கள். இஸ்லாமிய அடிப்படையில் கடமைகளைச் சரியாக செய்யும் போது முஸ்லிம்களின் வாழ்வு செழிக்கும் என்ற அடிப்படையில் அமைந்திருந்த அவரது பேச்சு அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



ஜூம்ஆ உரைக்குப் பின் சுவையான மதிய உணவு இனிப்புடன் பரிமாறப்பட்டது.






மதிய உணவுக்குப் பின் அஸ்மி யூஸூபி அவர்கள் இஸ்லாமிய மைய செயல்பாடுகளை விளக்கி உரை நிகழ்த்தினார்கள். பின்னர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் குர்ஆனை தமிழில் உணர்ந்து ஒதுவது குறித்தும், அதை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.








பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



அஸர் தொழுகைக்குப் பிறகு பங்கேற்றவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து என்று விளையாடி மகிழ்ந்தனர். ஒரு பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுத் திரும்பினர்.






பேச்சாளர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்களின் பேச்சில் ஒரு சிறு துளி...



செய்தி தொகுப்பு : தமிழ் பிரியன்.... தாயிஃப்.

6 comments:

Thamiz Priyan said...

கடைசியாக உள்ள கிரிக்கெட் விளையாடும் படத்தில் வட்டமிடப்பட்டு இருப்பவர் யாரென்று தெரிந்தவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டால் 1000 பொற்காசுகள் வழங்கப்படும்.

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே இப்படில்லாம் அமைப்பிருக்கா?

தமிழன்-கறுப்பி... said...

நீங்க அரபி நல்லா பேசுவிங்களா?

தமிழன்-கறுப்பி... said...

அந்த படத்துல இருக்கிறது நீங்கதானா?

சரியா தெரியலையே?

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளா கேக்ககணும்னு இருந்தேன் ரியாத் தமிழ் சங்கம்னு ஒன்னு இருந்ததா கேள்வி ;) அது பத்தின விபரம் இருக்கா...:)

தமிழன்-கறுப்பி... said...

செய்தி தொகுப்பாளர் ஆகிட்டிங்க பார்ட்டைம் ஜொப்பா?