Friday, March 27, 2009

விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க வும்

அரசியல் விமர்சனக் கட்டுரை

அரசியல்வாதிகள் என்றாலே ஒரு கிரேஸ் இருக்கும் ஒரு வட்டமாகவோ, ஒன்றியமாகவோ, கிளைச் செயலாளராகவோ இருந்தால் கூட தமது கெத்தைக் காட்ட முற்படுவார்கள். கட்சிக்காரர்களும், மக்களும் அவர்கள் பின்னால் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் காணலாம். ஆனால் ஒரு மாவட்டத்தின் திமுக செயலாளரைப் பார்த்தாலே மக்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுவதும் நிகழ்கின்றது... அழிந்து கொண்டு இருக்கும் தேனி மாவட்ட திமுகவைப் பற்றிய ஒரு கட்டுரை...

தமிழக அரசியலில் அடுக்கடுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. எதிர்பார்த்தது போலவே ஐயா அம்மாவிடம் சென்று விட, விஜயகாந்த் தனித்து (வேறு வழி இல்லாததால்) போட்டியிடுகின்றார். இனி தொகுதி பங்கீடுகள் ஆரம்பமாகும். தேசிய அளவில் காங்கிரஸை மாநிலக் கட்சிகள் அலைக்கழிக்க வைப்பதாக தோன்றினாலும் அதுவும் ஒருவகையில் நன்மையில் முடியவே வாய்ப்புள்ளது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தேனி மாவட்டத்தைப் பற்றிய ஒரு சிறு அலசலே இந்த பதிவு.

தேனி மாவட்டம்...அமைதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அரவணைப்பில் இருக்கும் டெடரான மாவட்டம். எப்போதும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்பது தான் அதன் ஸ்பெஷாலிட்டி. அனைத்து சமூகமும் இணைந்து வாழும் ஒரு சிறப்புமிக்க மாவட்டம். எம் ஜி ஆர் 1984 ல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தனது மேலும் கவனிப்புக்கு உள்ளானது. அப்போது அவர் சுமார் 32 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஜெயலலிதா எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு 1989 ல் போடி தொகுதியைத் தேர்தெடுத்தார். வெற்றியும் பெற்றார். 2006 ல் ஆண்டிபட்டியில் நின்று வெற்றி பெற்றார். பெரியகுளம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தை ஜெ. முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தது மற்றோரு சிறப்பு. தினகரன் தனது சொந்த தொகுதியாக நினைத்து இங்கேயே இருந்தது வரலாறு.

வெளியே பார்ப்பதற்கு அதிமுக கோட்டையாக காட்சியளித்தாலும் தேனி மாவட்டத்தை உன்னிப்பாகப் பார்த்தால் திமுகவின் ஓட்டு வங்கி சிறப்பானதாகவே இருக்கக் கூடியது. அதிமுகவின் அசுர பலம் எப்போதுமே தேனி மாவட்டத்தில் காட்டப்படும். எம் ஜி ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், தினகரன் என்று என்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதால் பணம் கொழிக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவ்வளவு போட்டி நிறைந்த தேனி தொகுதியில் அவ்வப்போது அதிமுகவும். திமுகவும் அதிர்ச்சி வைத்தியமளிக்கும். 1984 ல் எம் ஜி ஆர் வென்ற ஆண்டிபட்டியில் ஜெ அல்லது ஜானகியால் அடுத்த 1989 ல் வெற்றி பெற முடியவில்லை.

2006 ல் நட்ந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தாலும் தேனி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக வென்றது. போடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் தேர்வின் குறை காரணமாக வெறும் 800+ஓட்டுகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரம் 2004 தேர்தலில் அதிமுகவின் பண முதலை தினகரனை காங்கிரஸின் லாட்டரி புகழ் ஹாரூன் தோற்கடித்து இருந்தார். (அப்போது ஜெ. அழிவுக் கூட்டணியான பாஜகவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது)



சரி இனி பதிவின் மேட்டருக்கு வரலாம். இவ்வளவு தூரம் அதிமுக கோட்டையாக கருதிக் கொண்டு இருக்கும் தேனி மாவட்டத்தை காக்க திமுக தவறியே வந்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் போது தனது உட்கட்சி தவறுகளால் இம்மாவட்டத்தை கை விட்டிருக்கின்றது. 2004 நாடாளுமன்ற தேர்தலில் கூட கட்டாயம் அதிமுக தான் வெற்றி பெற்று விடும் என்று பெரியகுளம் பாராளுமன்றத் தொகுதியை காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்தது. ஆனால் பெரியகுளம்,கம்பம்,சின்னமனூர், பாளையம்,போடி பகுதி முஸ்லிம்களின் ஓட்டு பாஜவுக்கு எதிராக திரும்ப ஹாரூன் அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்று விட்டார். தின்கரனிடன் தோற்று விடுவோம் என்று ஹாரூனே தனது பணப்பையை சுருக்கிக் கொண்டு நடையைக் கட்டி இருந்தார். இப்போதும் காங்கிரஸிற்கே விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவே தெரிகின்றது.

மாவட்ட அரசியலில் முக்கிய இடம் மாவட்ட செயலாளருக்கானது. தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருப்பவர் எல்.மூக்கையா. இரண்டு முறை பெரியகுளம் தொகுதியில் எம் எல் ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதே போல் கம்பம் பகுதியில் செல்வாக்கு மிக்கவர் கம்பம் செல்வேந்திரன். பொதுவாக தேனி மாவட்டத்தில் ஜாதி அரசியல் என்றுமே முக்கியத்துவம் வகிக்கும். அந்த அடிப்படையிலேயே பொறுப்புகளிலும் நியமிக்கப்படுகின்றனர்.

1989 ல் அதிமுக உடைந்து இருந்த நேரத்தில் திமுகவுக்கு ஆதரவான சூழலில் பெரியகுளம் தொகுதியில் மூக்கையா வெற்றி பெற்றார். அப்போது பெரியகுளத்தில் காங்கிரஸ் போட்டியிட்டது. 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதை அடுத்து 1991 ல் ராஜீவ் அலையில் 43 ஆயிரம் ஓட்டுகளில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 1996 ல் 32 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பெரியகுளத்தை அதிமுக, ஊர் பேர் தெரியாத சென்னை வாசிக்கு (முஸ்லிம் லீக் சார்பாக இரட்டை இலையில்) கொடுத்தது இவரை ஜெயிக்க வைத்தது.

இரண்டு ஆண்டுகளே 1991 ல் முதல் முறை எம் எல் ஏ வாக இருந்ததால் மக்களால் இவரைக் கணிக்க இயலவில்லை. 1996 ல் இருந்து 2001 வரை 5 ஆண்டுகள் எம் எல் ஏ வாக இருந்த போது தான் கட்சியில் அவரது வளர்ச்சியும், தொகுதி மக்களிடம் படுதோல்வியும் ஆரம்பமானது.

மீண்டும் 2001 ல் தேர்தல் வர தனது சொந்த ஊர் உள்ள பெரியகுளம் தொகுதியை விட்டுவிட்டு தேனிக்கு தாவினார். ஏனெனில் அப்போது பெரியகுளம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக சார்பாக போட்டியிட்டார். ஏற்கனவே பெரியகுளம் நகரசபை தலைவராக அமோக வெற்றி பெற்று மக்களிடம் நல்ல பெயர் வாங்கி இருந்த அவரை எதிர்ப்பது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் தேனியிலும் படுதோல்வி. 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இதில் இன்னொரு ருசிகரமான நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த நேரம். அவர் அதற்கு முன் சேர்மனாக இருந்த பெரியகுளம் நகரசபை சேர்மன் பதவிக்கு தேர்தல் (உள்ளாட்சி) வந்தது. முதலமைச்சர் அமர்ந்த இருந்த இருக்கை என்பதால் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அதிமுக முயற்சி செய்தது. திமுக சார்பில் முகமது இலியாஸ் என்பவர் போட்டியிட்டார். ருசிகரமாக திமுகவே ஜெயித்து அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. கலைஞர் கூட இதைப் பற்றி சிலாகித்து பேட்டி கொடுத்து இருந்தார்.

பெரியகுளம் தொகுதியிலேயே தனது சொந்த ஊர் இருந்தாலும் இந்த மாவட்ட செயலாளரால் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் வாங்க இயலவில்லை. 2006 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பெரியகுளத்தில் போட்டியிட்டு 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மோசமான ஏற்பாடுகளால் இந்த தேர்தலில் கலைஞர் மேடை வரை வந்து மேடை ஏறிப் பேச இயலாமல் போனதும் நிகழ்ந்தது. சக திமுக நிர்வாகிகளுடன் ஒற்றுமை இல்லாததை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

எம் எல் ஏ வாக இரு முறையும் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகளும் இருந்தாலும் மக்களிடம் கருமி என்று பெயர் வாங்கி மக்களை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். டீக்கடையில் டீ குடித்தால் கூட நம்மை காசு கொடுக்க சொல்லி விடுவார் என்பது திமுக காரர்களே அடிக்கும் சோக கமெண்ட். பெரியகுளம் தொகுதியிலேயே செல்வாக்கை இழந்த நிலையில், கம்பம் செல்வேந்திரனிடமும் வீம்புக்கென்றே மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதும் தேனி மாவட்ட மக்களிடமும், திமுக அபிமானிகளிடமும் ஒரு எரிச்சலையே ஏற்ப்படுத்தியுள்ளது.

ஜாதி அரசியல் முக்கியம் என்றாலும் இன்றைய சூழலில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. குறிப்பாக பெரியகுளம் தொகுதி மாற்றப்பட்டு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. இனி அங்கு தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர யாரும் நிற்க இயலாது. செல்வேந்திரன் Vs மூக்கையா முற்றி விட்டது. இதனால் கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட திமுகவினரின் பணியில் தொய்வே இருந்தது.

இந்நிலையில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்று எம் எல் ஏவாக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனை திமுகவுக்கு இழுப்பதில் அழகிரி வெற்றி பெற்று விட்டார். கலைஞரின் மதிமுக உடைப்பில் ஒரு முக்கிய கட்டமாக இதைக் கருதலாம். ஏற்கனவே மதிமுகவின் எல்.கணேசன், செஞ்சியார், மோகன் சபாபதி போன்ற மூத்த தலைவர்களை திமுக இழுத்தது குறிப்பிடத்தக்கது. வைகோ வழக்கம் போல் காட்டுக்கத்து கத்துவது போல் இப்போதும் கத்திக் கொண்டிருக்கின்றார். பாவம்..கேட்கத் தான் யாருமில்லை. அழகிரி மூக்கையா நல்லுறவு காரணமாக இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார். மாவட்ட மக்களின் அதிருப்தி அழகிரியை சென்றடைய வாய்ப்பு இல்லை. அழகிரி தாமே கம்பம் வந்து ராமகிருஷ்ணனை சந்தித்த போது கட்சிக்காரர்கள் அனைவரும் இருக்க, கம்பம் செல்வேந்திரன் மட்டும் மிஸ்ஸிங் ஆனது அங்குள்ள உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை தன் கையில் வைத்து இருக்கும் அழகிரி இன்னும் மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திமுகவின் கோட்டையான தேனி மாவட்டம் சிறிது சிறிதாக அதிமுகவின் கைகளில் கொண்டு சென்று அழுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து நிர்வாக சீர்திருத்தங்கள் செய்தால் மட்டுமே, பொறுப்புகளில் மக்கள் ஆதரவு பெற்றவர்களை நியமித்தால் மட்டுமே காக்க இயலும்.

தமிழகம் முழுவதும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரம் தேனி மாவட்டத்தில் 5 தொகுதிகளைப் பறி கொடுத்துருந்தோம். போடியில் இழுத்துக்கே பறிச்சிக்கோ வென்று லட்சுமணன் 800+ ஓட்டுகளில் வெற்றி பெற்றார். இனி காலம் நமக்கு சாதகமாக அமைந்து வருகின்றது. ஓ.பன்னீர் செல்வத்தால் தனித் தொகுதியான பெரியகுளத்தில் போட்டியிட இயலாது. வேறு தொகுதிக்கு மாறினாலும் அதை வளப்படுத்த நாளாகும். காலத்தால் கணீந்து இருக்கும் இந்த சாதகத்தைப் பயன்படுத்திக் கொண்டு தேனி மாவட்டத்தைக் கைப்பற்றி மீண்டும் திமுகவிடமே தாருங்கள் என்று அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களிடமும், தமிழினத் த்லைவர் டாக்டர் கலைஞர் அவர்களிடமும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்
சம்பாதிக்க தெரியாமல் கட்சிக்காகவே உழைக்கும் திமுக வெறியன்
தேனி மாவட்டம்.

35 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//அப்போது அவர் சுமார் 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

//

அண்ணே அப்போது எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகள் 67,400. எதிர்த்து நின்ற தி.மு.க வேட்பாளர் தங்கராஜ் பெற்ற வாக்கு 31,220. எப்படி சுமார் 32 வாக்கு என்று சொல்லுகிறீர்கள்???

Thamiz Priyan said...

///எம்.எம்.அப்துல்லா said...

//அப்போது அவர் சுமார் 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

//

அண்ணே அப்போது எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகள் 67,400. எதிர்த்து நின்ற தி.மு.க வேட்பாளர் தங்கராஜ் பெற்ற வாக்கு 31,220. எப்படி சுமார் 32 வாக்கு என்று சொல்லுகிறீர்கள்???///

அன்ணே! எனக்கு கிடைத்தா டேட்டா என்ன சொல்லுது என்றால்
மொத்த ஓட்டுகள் : 133117
பதிவானது : 93155
எம் ஜி ஆர் : 60510
தங்கராஜ் வல்லரசு : 28026

என்னோட சோர்ஸ் தப்பா இருந்தால் நீங்க சரியானதைக் கொடுத்தால் மாத்திடலாம்.

Thamiz Priyan said...

http://www.rediff.com/election/2002/feb/24_bye_agen_rep_11.htm

http://www.dailyexcelsior.com/02feb17/national.htm


In 1991 elections, when Ms Jayalalithaa was swept to power in the state, AIADMK’s K Thavasi won by a highest margin of 42,267 votes, surpassing the electoral margin of even the late M G Ramachandran whose margin was only 32,484 in the 1984 election.

எம்.எம்.அப்துல்லா said...

நான் எங்க பர்சனல் டேட்டாவில் இருந்து எடுத்தேன். மீண்டும் பிறவற்றுடன் சரிபார்த்து வருகின்றேன். அப்புறம் சுமார் 32 ஓட்டு என்பதை 32 ஆயிரம் ஓட்டு என்று மாற்றுங்கள்.

Thamiz Priyan said...

///எம்.எம்.அப்துல்லா has left a new comment on your post "விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க ...":

நான் எங்க பர்சனல் டேட்டாவில் இருந்து எடுத்தேன். மீண்டும் பிறவற்றுடன் சரிபார்த்து வருகின்றேன். அப்புறம் சுமார் 32 ஓட்டு என்பதை 32 ஆயிரம் ஓட்டு என்று மாற்றுங்கள்.///

மன்னிக்கவும். அது தட்டச்சு தவறு. சரி செய்து விட்டேன். ஆனால் ஓட்டு வித்தியாசம் 32,484 தான் வருகின்றது.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நீங்க சொன்ன விஷயங்கள் பல மாவட்டத்தில் நடந்து வருகின்றது. மாவட்டச் செயலாளர் பேரை மட்டும் மாத்திக்கிட்டா இதே செய்தியை வேற மாவட்டங்கள்லயும் போடலாம். இந்த சுமோ வந்துச்சுண்ணே. அதோட கட்சி போச்சுண்ணே. சைக்கிள்லயும், மத்த வண்டிலயும் சுத்தித் திருஞ்சப்ப தொண்டனோட நிர்வாகிகளுக்கு நெருக்கம் இருந்துச்சு. இப்பல்லாம் சாதாரண வட்டம் கூட கண்ணாடிய மேல ஏத்திவிட்டுட்டு கெத்தாப் போகுது.கொடுமை.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எலக்‌ஷன் கமிஷன் சைட்டிலும் சரிபார்த்து விட்டேன். எங்க பர்சனல் டேட்டாவில் உள்ளதுதான் அதிலும் உள்ளது.

http://72.14.235.132/search?q=cache:dtz4_PfAkQ0J:eci.nic.in/electionanalysis/AE/S22/partycomp135.htm+Elections:+Result+Of+andipatti+(Tamil+Nadu)+in+1984.&cd=1&hl=en&ct=clnk&gl=in

Tech Shankar said...

Adadadada....

Howzzat?

Great Statistics

கோவை சிபி said...

தேனி மாவட்ட தி. மு. க நிலையை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.போடியில் லட்சுமணன் வெற்றி பெற்றது மிகச்சரியான திட்டமிட்ட தேர்தல் பணிகள் மூலமே.கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சிப்பணிகள் மூலம் போடி தொகுதியில் இவருக்கு ஒரு நல்ல செல்வாக்கு வளர்ந்து வருகிறது.மேலும் இவர் இளைஞர்,தொண்டர்களை மதித்து நடப்பவர்.இம்மாதிரி இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கட்சியை வளர்க்கமுடியும்.

நானானி said...

இந்த அரசியல், தேர்தல், ஓட்டு விளையாட்டுக்கெல்லாம்(நிஜமாவே விளையாட்டாத்தான் போச்சு)
நான் வரலை. ஆனாலும் உங்க பதிவுக்கு வரணுமில்ல? அதான்.

அ.மு.செய்யது said...

இவ்வளவு செய்திகளை எப்படி தொகுத்தீர்கள் என வியக்கிறேன்.

வெண்பூ said...

அப்துல்லா, உங்க இன்டர்ப்ரெட்டெஷன் தப்பு.. எலக்ஷன் கமிசன் டேட்டாவைப் பாருங்க.. எம்.ஜி.ஆர். 67.4 ன்னு போட்டிருக்குறது 67,400 ஓட்டு இல்லை. 67.4% மொத்த ஓட்டு 93,160 அப்படின்னா எம்.ஜி.ஆர் வாங்குனது 62,790 ஓட்டுதான். அதேபோல் வல்லரசு வாங்குன சதவீதம் 31.22. அதாவது 29084 ஓட்டு. அதனால வித்தியாசம் ஏறத்தாழ 33,700+ சரியா?

வெண்பூ said...

நல்ல அலசல் தமிழ் பிரியன் ஸாரி திமுக பிரியன் :))))

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/வெண்பூ on March 28, 2009 1:54 PM said...

நல்ல அலசல் தமிழ் பிரியன் ஸாரி திமுக பிரியன் :))))/


rippeettu...!

Thamiz Priyan said...

///எம்.எம்.அப்துல்லா on March 28, 2009 9:56 AM said...

அண்ணே நீங்க சொன்ன விஷயங்கள் பல மாவட்டத்தில் நடந்து வருகின்றது. மாவட்டச் செயலாளர் பேரை மட்டும் மாத்திக்கிட்டா இதே செய்தியை வேற மாவட்டங்கள்லயும் போடலாம். இந்த சுமோ வந்துச்சுண்ணே. அதோட கட்சி போச்சுண்ணே. சைக்கிள்லயும், மத்த வண்டிலயும் சுத்தித் திருஞ்சப்ப தொண்டனோட நிர்வாகிகளுக்கு நெருக்கம் இருந்துச்சு. இப்பல்லாம் சாதாரண வட்டம் கூட கண்ணாடிய மேல ஏத்திவிட்டுட்டு கெத்தாப் போகுது.கொடுமை.//

அண்ணே! அது பிரச்சினையே இல்லை. வட்டம் சுமோவில் போனா மாவட்டம் குவாலிஸில் தான் போகும்..போகனும். வட்டம் குவாலிஸில் வந்தால் மாவட்டன் ஹெலிகாப்டரில் போகட்டும். அதைக் கட்சிக்காரன் என்ற முறையில் கர்வமாக பார்ப்பேன். நான் சொன்னது எங்கிருந்தாலும் கட்சிக்கார, ஊர் மக்களின் ஆதரவு. அவருக்கு பின்னால் வந்த கத்துக்குட்டி தான் ஓ.பன்னீர்செல்வம். ஊருக்குள் வந்து கேட்டுப் பாருங்கள். திமுக காரனே நைஸா ஓ.பிக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்துடுவான். அப்படி ஒரு திடமான , அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஆள் தான் தேவை. அதைத் தான் கேட்கின்றோம் மாவட்ட கட்சிக்காரர்கள் சார்பாக..

Thamiz Priyan said...

எங்க மாவட்டத்தின் இருக்கும் அதிமுக திணவெடுத்த, பசியில் இருக்கும் சிங்கம். அதனோடு போராட ஒரு சீறும் சிங்கமோ,மதம் பிடித்த யானையோ புலியோ, சிறுத்தையோ தான் திமுகவிற்கு வேண்டும்.

Thamiz Priyan said...

///எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எலக்‌ஷன் கமிஷன் சைட்டிலும் சரிபார்த்து விட்டேன். எங்க பர்சனல் டேட்டாவில் உள்ளதுதான் அதிலும் உள்ளது.

http://72.14.235.132/search?q=cache:dtz4_PfAkQ0J:eci.nic.in/electionanalysis/AE/S22/partycomp135.htm+Elections:+Result+Of+andipatti+(Tamil+Nadu)+in+1984.&cd=1&hl=en&ct=clnk&gl=in///

அதிலும் அவர்கள் தெளிவாக சதவீதம் என்று தான் கொடுத்துள்ளனர்... மீண்டும் சரி பாருங்கள் அண்ணே! :-)

Thamiz Priyan said...

///தமிழ்நெஞ்சம் said...
Adadadada....
Howzzat?
Great Statistics///
எல்லாம் உள்ளூர் பாலிடிக்ஸ் தானே.. காட்சிகள் நினைவில் உள்ளன. எண்களுக்கு இணையம் உதவுகின்றது.அவ்வளவே.. நன்றி தல!

Thamiz Priyan said...

///கோவை சிபி said...

தேனி மாவட்ட தி. மு. க நிலையை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.போடியில் லட்சுமணன் வெற்றி பெற்றது மிகச்சரியான திட்டமிட்ட தேர்தல் பணிகள் மூலமே.கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சிப்பணிகள் மூலம் போடி தொகுதியில் இவருக்கு ஒரு நல்ல செல்வாக்கு வளர்ந்து வருகிறது.மேலும் இவர் இளைஞர்,தொண்டர்களை மதித்து நடப்பவர்.இம்மாதிரி இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கட்சியை வளர்க்கமுடியும்.///
ஆம் கோவை சிபி! நீங்க சொல்வது மிகச் சரியானது. அப்படிப்பட்ட லக்ஷ்மணனே 800 + ஓட்டு வித்தியாசத்தில் தான் ஜெயிக்க முடிந்தது. அப்படியானால் களமே தெரியாதவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்.

Thamiz Priyan said...

///நானானி said...

இந்த அரசியல், தேர்தல், ஓட்டு விளையாட்டுக்கெல்லாம்(நிஜமாவே விளையாட்டாத்தான் போச்சு)
நான் வரலை. ஆனாலும் உங்க பதிவுக்கு வரணுமில்ல? அதான்.///
வருகைக்கு நன்றிம்மா! நான் நீங்க சொன்னதால் என் பையன் வீடியோ பதிவெல்லாம் போட்டுட்டு வருவீங்கன்னு ப்ளாக்கர் மேல் விழி வைத்து காத்திருந்தேன். பாருங்க எலக்சன் நேரத்துல வந்து இருக்கீங்க... ;-))

Thamiz Priyan said...

///அ.மு.செய்யது said...

இவ்வளவு செய்திகளை எப்படி தொகுத்தீர்கள் என வியக்கிறேன்.///
தமிழ் நெஞ்சத்திற்கான பதிலை காப்பி பேஸ்ட் செய்யவும்... நன்றி செய்யது.

Thamiz Priyan said...

///வெண்பூ said...

அப்துல்லா, உங்க இன்டர்ப்ரெட்டெஷன் தப்பு.. எலக்ஷன் கமிசன் டேட்டாவைப் பாருங்க.. எம்.ஜி.ஆர். 67.4 ன்னு போட்டிருக்குறது 67,400 ஓட்டு இல்லை. 67.4% மொத்த ஓட்டு 93,160 அப்படின்னா எம்.ஜி.ஆர் வாங்குனது 62,790 ஓட்டுதான். அதேபோல் வல்லரசு வாங்குன சதவீதம் 31.22. அதாவது 29084 ஓட்டு. அதனால வித்தியாசம் ஏறத்தாழ 33,700+ சரியா?///

என்னிடம் இருக்கும் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்கள் தொடர்பான கோப்புகளில் மேலே நான் சொன்னவாறு தான் உள்ளது. 67.4,31.22 என்ற சதவீதம் எப்படி வந்தது என்று தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இல்லை. அப்படியென்றால் வெண்பூவின் கணக்கு சரியாக வரும்.

Thamiz Priyan said...

///வெண்பூ said...

நல்ல அலசல் தமிழ் பிரியன் ஸாரி திமுக பிரியன் :))))///
என்ன அண்ணே! செய்ய சின்ன வயசில் இருந்தே போடுங்கம்மா ஓட்டு! உதயசூரியனைப் பார்த்துன்னு கொடி பிடிச்சிப் பழகிப் போச்சு..இப்பயும் பசங்க போனா நாமலும் சேர்ந்து போகனும் போல இருக்கே.. ;-)

ALIF AHAMED said...

விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க வும்"
//


கலைஞர் விழித்து கொண்டதால் தான் தி.மு.க அழிகிறதா..?



:)

Thamiz Priyan said...

///மின்னுது மின்னல் has left a new comment on your post "விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க ...":

விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க வும்"
//


கலைஞர் விழித்து கொண்டதால் தான் தி.மு.க அழிகிறதா..?


/
:)///

மின்னுது மின்னல், பதிவின் தலைப்பு விழித்துக் கொள்ள வேண்டிய கலைஞரும், அழியும் மாவட்ட திமுகவும் தான்... எங்கள் தலைவர் விழிக்க வேண்டி ஒரு கடிதம் எழுதுவதை கட்சிக்காரனாக என்னால் எழுத முடியாது என்பதால் தான் அந்த தலைப்பை மாற்றினேன்... கட்சிப்பாசம் அதிகம் எங்களுக்கு!

Thamiz Priyan said...

Statistics :
மொத்த ஓட்டுகள் : 133117
பதிவானது : 93155
எம் ஜி ஆர் : 60510
தங்கராஜ் வல்லரசு : 28026

இதுதான் சரியான தகவல்.

அதே போல் 67.4 என்பதும், 31.22 என்பதும் சரியானதே...கணக்குப் பார்த்தால் தப்பாக வரும். ஆனால் அப்போதெல்லாம் செல்லாத ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரும். தேர்தல் ஆணைய சதவீதக் கணக்கு நல்ல ஓட்டுக்களை மட்டுமே கொண்டது. இப்ப எல்லாம் சரியா வரும் பாருங்க

அத்திரி said...

திமுகவின் நிலையை அருமையாக அலசியுள்ளீர்கள்

ஆயில்யன் said...

//நானானி on March 28, 2009 10:11 AM said...
இந்த அரசியல், தேர்தல், ஓட்டு விளையாட்டுக்கெல்லாம்(நிஜமாவே விளையாட்டாத்தான் போச்சு)
நான் வரலை. ஆனாலும் உங்க பதிவுக்கு வரணுமில்ல? அதான்.
//

ஆமாம் நானும் ரிப்பிட்டிக்கிறேன் :))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///நானானி said...

இந்த அரசியல், தேர்தல், ஓட்டு விளையாட்டுக்கெல்லாம்(நிஜமாவே விளையாட்டாத்தான் போச்சு)
நான் வரலை. ஆனாலும் உங்க பதிவுக்கு வரணுமில்ல? அதான்.///
வருகைக்கு நன்றிம்மா! நான் நீங்க சொன்னதால் என் பையன் வீடியோ பதிவெல்லாம் போட்டுட்டு வருவீங்கன்னு ப்ளாக்கர் மேல் விழி வைத்து காத்திருந்தேன். பாருங்க எலக்சன் நேரத்துல வந்து இருக்கீங்க... ;-))
///

சரிண்ணே நாங்க குட்டிப்பையன் கூட வெளையாண்டுக்கிட்டிருக்கோம் நீங்க சட்டுப்புட்டுன்னு தேர்தல் களேபரத்தை முடிச்சுட்டு வாங்க :))

தமிழன்-கறுப்பி... said...

\\அரசியல் விமர்சனக் கட்டுரை\\

இதுக்கும் நம்மளுக்கும் வெகுதூரம்ணே அரசியலை நான் விமர்சனம் பண்ணப்போனா வேற கெட்ட வார்தைகளில் பொதுப்படையான கருத்துதான் இருக்கு என்கிட்ட அதனால
நோ கமன்ட்ஸ்...

:))

ஜியா said...

அட்டகாசமான அலசல்... எப்படிங்க எல்லா விதமான பதிவுகளையும் அசால்ட்டா எழுதுறீங்க??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானானி பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்..
விஜயகாந்த் கணக்கா புள்ளிவிவரம் வச்சா நான் என்ன செய்வேன். விடு ஜூட்.

Thamira said...

நீங்களும் நம்பாளுங்கதானா.?

பாச மலர் / Paasa Malar said...

நல்ல அலசல் தமிழ் பிரியன்..தேனி மாவட்டத்தை மட்டுமா தக்க வைக்க வேண்டும் திமுக...கொஞ்சம் மரியாதையும் கூடத்தான்..