Monday, August 25, 2008

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

.

இன்றைய எனது டைரிக் குறிப்பு

இன்றைக்கு செம வேலை. பெண்டு கழண்டு விட்டது. பூமிக்கடியில் எலக்ட்ரிக்கல் கேபிள் எரிந்து போய் விட்டது. ஆறு அடி நீளம், நான்கு அடி அகலத்திற்கு குழி வெட்டி எரிந்த கேபிளை மாற்றினோம். அவசரம் காரணமாக லெபனானி தொழில்நுட்ப பொறியாளரும், மற்றும் பாகிஸ்தானி மின்சார பொறியாளரும் கடுகடுப்பாக நடந்து கொண்டனர்.

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

பிரசாத் என்னோட நல்ல பிரண்ட். ரெண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம். அவனை ரொம்ப வருஷமா என்னால பார்க்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியலை. அதனால தான் எங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போறேன். அவன் வீடு விஷ்ணு புரத்தில் இருந்தது. அதனால அவன நான் செல்லமா விஷ்ணுபுரத்தான்னு தான் சொல்வேன். அவங்கப்பா ஒரு டாக்டர். அவங்கம்மா பேங்கில் வேலை பார்த்தாங்க. அவங்க அண்ணன் வெங்கடேஷ் டாக்டருக்கு மெட்ராசில் படிச்சுக்கிட்டு இருந்தாங்க.

1992 ஜனவரி மாதம்...

பிரசாத் : தமிழ்! நாளைக்கு சனிக்கிழமை தானே? வாடா குரூப் ஸ்டடி பண்ணலாம்.

நான் : போடா! நாளக்கி சுள்ளான் கொளத்துக்கு பக்கத்துல ஒட மரம் நிறைய இருக்காம். எங்கம்மா விறகு ஒடிச்சிட்டு வரனும்னு சொல்லி இருக்கு. என்னால வர முடியாது.

பிரசாத் : காலையில் தான போவாய், மாலையில் வாயேன்.

நான் : பொழு சாய சும்மா தான் இருப்பேன். வர்ரேன். ஆனா உங்க வீட்டுக்குள்ள என்னை விட மாட்டாங்களே?

பிரசாத் : எங்க பாட்டி வீட்டுக்கு வெளியே திண்ணை இருக்குதே, அங்கே உட்கார்ந்து படிக்கலாம். வா

நான் : அதுவும் சரிதான். திருணையிலேயே உட்கார்ந்து படிக்கலாம். ஆனா நான் பொழுசாய கிரிக்கெட் விளையாடப் போவேனே?

பிரசாத் : கிரிக்கெட்டை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு படிக்கிற வழியைப் பாரு தமிழ்!

நான் : போடா! உன்னைவிட அரைப் பரீச்சையில் நான் தான் மார்க் கூட வாங்கிருக்கேன். தெரியும்ல.. நீ 440 தான் வாங்கின நான் 500 க்கு 450 வாங்கிட்டேன்

பிரசாத் : ஆனா மேத்ஸில் நான் 100 வாங்கிட்டேன். நீ 96 தான் வாங்க முடிஞ்சது

நான் : என்னடா செய்ய... கணக்கு பாடத்தை போட்டு பார்க்க ரப் நோட் கேட்டா எங்கப்பா வாங்கித் தர மாட்ராரு. அதுவுமில்லாம மத்த பாடம்ன்னா புத்தகத்தை வச்சு படிச்சிடலாம். கணக்குன்னா போட்டுப் பார்க்கனும். உட்கார்ந்து குனிஞ்சுக்கிட்டே ரொம்ப நேரம் சிலேட்டிலேயே எழுதிப் பார்க்க முடியலை. குறுக்கு வலிக்குதுடா

பிரசாத் : நான் அதுக்கெல்லாம் தனியா நோட் போட்டு வச்சிருக்கேன். எனக்கு ஸ்டடி டேபிள் இருக்கு. அதனால பேக் பெயினெல்லாம் எனக்கு வராது.

நான் : சரிடா நேரமாச்சு. இன்னைக்கு ரேஷனில் சீமத்தண்னி ஊத்துராங்களாம். எங்கம்மா வாங்கச் சொல்லி இருக்கு

பிரசாத் : ரேஷனில் மண்ணெண்ணைய் வாங்க எல்லாம் நீயா போவ? வீட்டில் அதுக்கு வேலைக்காரங்க இல்லியா?

நான் : போடா இவனே? ரேஷனில் சீமத்தண்ணி, அரிசி, சீனி, எல்லாம் நான் தான் வாங்கித் தரணும். கரண்ட் பில் கட்டுறது எல்லாம் என்னோட வேலை தான். ஆமா நீ ஒன்னும் செய்ய வேலை செய்ய மாட்டியா?

பிரசாத் : எங்கப்பா இது மாதிரி வேலை எல்லாம் செய்ய விடமாட்டாங்க. நான் நல்லா படிச்சு டாக்டராகனுமாம்

நான் : காலையில மார்க்கெட்டுல போய் காய்கறி கூட வாங்க மாட்டியா?

பிரசாத் : அதெல்லாம் எங்க வீட்டில் இருக்கும் வேலைக்கார கண்ணன் பார்த்துப்பாங்க.

நான் : என்னத்த போ! ஒரு வேலையும் செய்ய மாட்ட, விளையாடப் போக மாட்ட, படிப்பு படிப்புன்னு அலையாத, மண்டை குழம்பி பைத்தியமாகிடப் போற

பிரசாத் : அதெல்லாம் நான் இண்டோர் கேம்ஸ் தான் ஆடுவேன்

நான் : அப்படின்னா?

பிரசாத் : கேரம் போர்டு, செஸ் இதெல்லாம்....

நான் : அதெல்லாம் எனக்கு தெரியாது ஆளை விடு கிளம்பிறேன். வரட்டா!

பிரசாத் : பை சீ யூ லேடர்

நான் : சரிடா. வர்ரேன்

1996 ஜூலை

நான் எங்க பெட்டிக்கடையில் வியாபாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட, பிரசாத் மெட்ராஸூக்கு போய் டாக்டருக்கு படித்தான்.

2008 ஜனவரி

என் நணபன் பிரசாத்தைப் பார்க்க அவங்க விஷ்ணு புரம் வீட்டிற்கு போய் இருந்தேன். பிரசாத்தோட அண்ணன் அமெரிக்காவுல கலிபோர்னியா மாகாணத்தில் ஆன்டியாச் (Antioch) என்ற ஊரில் டாக்டரா வேலை செய்வதால் அவங்க அப்பா, அம்மா அங்கேயே போய்ட்டாங்களாம். பிரசாத் தமிழகத்தின் ஒரு பெருநகரத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் ஹாஸ்பிடல் கட்டி, தனது டாக்டர் மனைவியோட இருக்கானாம். யாராவது என் நண்பனோட அட்ரஸ், போன் நம்பர், இ மெயில் அட்ரஸ் கிடைச்சு கொடுத்து உதவுங்க!


37 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

சரியாதான் கிளம்பிருக்காங்க.... நானும் ஒரு 50/60 பேர தேட வேண்டி இருக்கு... எழுதனும்...

ஆயில்யன் said...

நல்லா இருக்கு!

கண்டிப்பாக நீங்கள் உங்கள் நண்பனை பார்ப்பீர்கள்! அதுக்கு நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுக்கவேண்டும்!

அதற்கு முதலில் இந்த லேபிளில் அனுபவம் மட்டும் இருந்தால் நலம்

அது இன்னாது புனைவு ! சீமைதண்ணி ஊத்தி எரியறதுக்கு ஊதுவாங்களே அதுவா??????? (இல்லியே அது புனல்தானே!)

:))

ஆயில்யன் said...

//VIKNESHWARAN said...
சரியாதான் கிளம்பிருக்காங்க.... நானும் ஒரு 50/60 பேர தேட வேண்டி இருக்கு... எழுதனும்...
//

கலக்கல் கமெண்ட்டு :))))))

நிஜமா நல்லவன் said...

நிஜங்களை எல்லாம் ஏன் நீங்க புனைவு என்ற லேபிளில் எழுதுறீங்க?

கோவி.கண்ணன் said...

தகவல் அறியும் சட்டத்தினை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் !
:)

Thamiz Priyan said...

நண்பர்களுக்கு, இது ஒரு புனைவுக் கதை மட்டும் தான்.... உண்மை சிறிதும் இல்லை. யாரும் யாரையும் தேட வேண்டாம்.....
நன்றி!
அன்புடன்
தமிழ் பிரியன்

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
நண்பர்களுக்கு, இது ஒரு புனைவுக் கதை மட்டும் தான்.... உண்மை சிறிதும் இல்லை. யாரும் யாரையும் தேட வேண்டாம்.....
நன்றி!
அன்புடன்
தமிழ் பிரியன்
//

அய்யோ! நான் அல்ரெடி அமெரிக்காவுக்கு கால் பண்ணி நம்ம ப்ரெண்டு ஒருத்தருக்கிட்ட தேடச்சொல்லிட்டேனே! அவுரும் ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு இன்னிக்கே போறேன்னு வேற வாக்கு கொடுத்துட்டாரேப்பா ????????!!!!!!

ஜோசப் பால்ராஜ் said...

தமிழ் மணத்தில் இந்தவாரம்....

காணமல் போன உங்கள் டீச்சர், பேராசிரியர், நண்பர்களை கண்டுபிடிக்க பதிவெழுதும் வாரம்.

ஜோசப் பால்ராஜ் said...

//நிஜமா நல்லவன் said...
நிஜங்களை எல்லாம் ஏன் நீங்க புனைவு என்ற லேபிளில் எழுதுறீங்க?//


இவரு நிஜமாலுமே ரொம்ப நல்லவருங்கோ

விஜய் ஆனந்த் said...

:-)))

துளசி கோபால் said...

புனைவா? இது தெரியாம...நான் தேடக் கிளம்பிட்டேனே....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புனைவுன்னா ஓகே நல்லாருக்கு... இந்த அனுபவம்ங்கற லேபிளை கழட்டிவிட்டறாலாமே.. என்னாத்துக்கு எங்கள கொழப்புறீங்க தமிழு..

குசும்பன் said...

ரைட்டு வாசுவுக்கு அடுத்த படத்துக்கு கதை ரெடி!!!

ராமலக்ஷ்மி said...

புனைவோ அனுபவமோ எதுவானாலும் அந்த 1992 உரையாடலை ரொம்ப ரசித்தேன். நிதர்சனங்களை எத்தனை இயல்பாகச் சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//என்னாத்துக்கு எங்கள கொழப்புறீங்க தமிழு..//

போன பதிவில அப்படி ஒரு தலைப்பைப் போட்டு குழப்புன மாதிரி..:)))! இல்லையா?

Iyappan Krishnan said...

நானும் தேடும் முயற்சில இறங்குனா ஒரு 50 இல்ல 60 வது தேடனும்.



:(

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...
சரியாதான் கிளம்பிருக்காங்க.... நானும் ஒரு 50/60 பேர தேட வேண்டி இருக்கு... எழுதனும்...///
கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
நல்லா இருக்கு!
கண்டிப்பாக நீங்கள் உங்கள் நண்பனை பார்ப்பீர்கள்! அதுக்கு நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுக்கவேண்டும்!
அதற்கு முதலில் இந்த லேபிளில் அனுபவம் மட்டும் இருந்தால் நலம்
அது இன்னாது புனைவு ! சீமைதண்ணி ஊத்தி எரியறதுக்கு ஊதுவாங்களே அதுவா??????? (இல்லியே அது புனல்தானே!)
:))///

அதான் புனைவுன்னு தெளிவா போட்ருக்கமே அப்புறம் என்ன? நண்பனா? யார் அது? யார் யாரைத் தேடுறா?

Thamiz Priyan said...

////ஆயில்யன் said...
//VIKNESHWARAN said...
சரியாதான் கிளம்பிருக்காங்க.... நானும் ஒரு 50/60 பேர தேட வேண்டி இருக்கு... எழுதனும்...
//
கலக்கல் கமெண்ட்டு :))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...
நிஜங்களை எல்லாம் ஏன் நீங்க புனைவு என்ற லேபிளில் எழுதுறீங்க?///

புனைவுதானய்யா அது? ஓவரா இல்லியா உனக்கு இதெல்லாம்..... :))))

Thamiz Priyan said...

///கோவி.கண்ணன் said...
தகவல் அறியும் சட்டத்தினை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் !
:)///
இல்லாத ஆளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேட முடியாதாமே? அண்ணே!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
அய்யோ! நான் அல்ரெடி அமெரிக்காவுக்கு கால் பண்ணி நம்ம ப்ரெண்டு ஒருத்தருக்கிட்ட தேடச்சொல்லிட்டேனே! அவுரும் ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு இன்னிக்கே போறேன்னு வேற வாக்கு கொடுத்துட்டாரேப்பா ????????!!!!!!///
நீங்க இம்புட்டு நல்லவரா? அவ்வ்வ்வ்வ் ஆனந்த கண்ணீர் கொட்டுதுண்ணே...... :))

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...
தமிழ் மணத்தில் இந்தவாரம்....
காணமல் போன உங்கள் டீச்சர், பேராசிரியர், நண்பர்களை கண்டுபிடிக்க பதிவெழுதும் வாரம்.///
அப்ப அடுத்த உங்க பதிவு அதுதானா? ஹா ஹா ஹா
மக்களே ரெடியாகுங்க... கட் பேஸ்ட் எல்லாம் வாங்க!

Thamiz Priyan said...

/// ஜோசப் பால்ராஜ் said...
//நிஜமா நல்லவன் said...
நிஜங்களை எல்லாம் ஏன் நீங்க புனைவு என்ற லேபிளில் எழுதுறீங்க?//
இவரு நிஜமாலுமே ரொம்ப நல்லவருங்கோ///

நீங்களாவது நம்புனீங்களே சார்! நன்றி! நன்றி!

Thamiz Priyan said...

/// விஜய் ஆனந்த் said...

:-)))///
நன்றி விஜய் ஆனந்த்!

Thamiz Priyan said...

/// துளசி கோபால் said...

புனைவா? இது தெரியாம...நான் தேடக் கிளம்பிட்டேனே....///
டீச்சர்! நீங்க உண்மையிலேயே நல்லவங்க போல இருக்கு! நம்ம ஊருல இருந்தவங்கல்ல அதான் நல்லவங்களா இருக்கீங்க

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
புனைவுன்னா ஓகே நல்லாருக்கு... இந்த அனுபவம்ங்கற லேபிளை கழட்டிவிட்டறாலாமே.. என்னாத்துக்கு எங்கள கொழப்புறீங்க தமிழு..///

ஓகே அக்கா! நீங்க சொன்னா அப்பீலே கிடையாது. இனி லேபிள் விஷயத்தில் கவனமா இருக்கேன். போதும் தானே?

Thamiz Priyan said...

///குசும்பன் said...

ரைட்டு வாசுவுக்கு அடுத்த படத்துக்கு கதை ரெடி!!!////
சூப்பர் ஸ்டார் நடிக்கும் அளவுக்கு கதை என்ன அம்புட்டு மோசமாவா இருக்கு......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

/// ராமலக்ஷ்மி said...

புனைவோ அனுபவமோ எதுவானாலும் அந்த 1992 உரையாடலை ரொம்ப ரசித்தேன். நிதர்சனங்களை எத்தனை இயல்பாகச் சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//என்னாத்துக்கு எங்கள கொழப்புறீங்க தமிழு..//

போன பதிவில அப்படி ஒரு தலைப்பைப் போட்டு குழப்புன மாதிரி..:)))! இல்லையா?///

அக்கா! நன்றிக்கா! நான் குழப்புறேனா? பேசாம விடை பெறுகிறேன்னு பதிவு போட்டுட்டு ஒரு வாரம் கழிச்சு திரும்ப வர வேண்டியதுதான்..... ;)

Thamiz Priyan said...

/// Jeeves said...
நானும் தேடும் முயற்சில இறங்குனா ஒரு 50 இல்ல 60 வது தேடனும்
:(///
தேடுங்க ஜீவ்ஸ்! ஆனா அதுக்கு முன்னாடி அந்த கேமராவை கழட்டி வச்சிட்டு போங்க... சரியா... :)))

தமிழன்-கறுப்பி... said...

புனைவுன்னு சொன்னாப்புல நாங்க தேடாம விட மாட்டோம்...:)

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் என்பது தெரிகிறது...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\
//VIKNESHWARAN said...
சரியாதான் கிளம்பிருக்காங்க.... நானும் ஒரு 50/60 பேர தேட வேண்டி இருக்கு... எழுதனும்...
//

கலக்கல் கமெண்ட்டு :))))))
\

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

\
சரிடா நேரமாச்சு. இன்னைக்கு ரேஷனில் சீமத்தண்னி ஊத்துராங்களாம். எங்கம்மா வாங்கச் சொல்லி இருக்கு
\

சீமத்தண்ணின்னா மண்ணெண்ணை தானா ...

(முன்பு எங்கோ படித்த ஞாபகம் மறூடி நினைப்பூட்டியதற்கு நன்றி)

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் said...
\
நிஜங்களை எல்லாம் ஏன் நீங்க புனைவு என்ற லேபிளில் எழுதுறீங்க?
\

அதான...

Thamira said...

//கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்//
அய்யய்யோ அடுத்து இந்த மாதிரி தேடுற பதிவு ஒண்ணு எல்லோரும் போடணுமா.. ஒண்ணும் கட்டாயமில்லையே...

Anonymous said...

நல்லா இருக்கு தமிழ்.

நிஜம் போலமைந்த புனைவு.

படித்து முடித்ததும் பழசை ஞாபகப்படுத்தியது.

வால்பையன் said...

செந்தழல் ரவியின் நண்பனை தேடி என்ற பதிவின் சாயல்,
இது உண்மை சம்பவம் தானே ஏன் சிறுகதை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்.