Saturday, August 30, 2008

கண்டிப்பாக சொல்வேன் உன்னை நான் காதலித்தேன் என்று

இப்போது நினைவுகள் மட்டுமே உயிரோடு
இணைந்து வந்து கொண்டிருக்கும் இந்த இரவில்
தலையணையில் விழுந்த கண்ணீர்த்துளிகளின்
துவர்ப்பில் உன் உவப்பையே காண்கிறேன்.


பூங்காவில் பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,
ஆற்று நீரில் கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலேயே பேசிக் கொண்டதும்,
அந்த மழைநாள் இரவின் ஒற்றைக் குடையும்,
நினைவில் இருந்து அகலவில்லை.

எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்
பக்கங்களை கிழித்தது தெரிந்ததும் வெட்கி நின்றாயே?
என் பிறந்த நாளை நான் கொண்டாடாத போதும்
நீ கொண்டாட வேண்டித் தவித்தாயே?
சாலையில் என்னைப் பார்த்ததும் உன் அப்பாவுக்கு தெரியாமல்
கண்களால் புன்னகை சிந்தி என்னை மறக்கச் செய்தாயே?

பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்
கண்டிப்பாக சொல்வேன்
நீ என்னைக் காதலித்தது போல்
உன்னை நான் காதலித்தேன் என்று

டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.

25 comments:

cheena (சீனா) said...

நல்லாத்தானே இருக்கு
எழுத வேண்டியது தானே

ஆமா - இந்தச் சின்ன வயசுக் காதலைப் பத்தி நெரெய பதிவுலே போட்டாச்சு போல இருக்கு

ம்ம்ம்ம்ம்

Anonymous said...

இது கவுஜ இல்லை கவிதைதான்

Anonymous said...

//எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்
பக்கங்களை கிழித்தது தெரிந்ததும் வெட்கி நின்றாயே?//

அழகான வரிகள்

Anonymous said...

//என்றாவது ஒருநாள் உன்னை சந்தித்தால்
கண்டிப்பாக சொல்வேன்
நீ என்னைக் காதலித்தது போல்
உன்னை நான் காதலித்தேன் என்று//

அழகாக இருக்கிறது மொத்த கவிதையும். கடைசி அந்த ஒரு வரி கவிதைக்கு அழகு சேர்க்கிறது

Anonymous said...

அட கவனிக்கவே இல்லை.. கவிதை படித்து அதை பற்றி யோசித்து கொண்டிருந்ததால்.. சொல்லவே மறந்துவிட்டேன். நான் தான் முதல் கமெண்ட் டா.
கமெண்ட் மாடுரேஷன் வேற இல்லை

ஜோசப் பால்ராஜ் said...

கண்டிப்பாக நானும் சொல்வேன் நீங்கள் எழுதியுள்ளது கவிதைதான்.
தொடர்ந்து கவிதையும் எழுதுங்க தோழரே.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

விஜய் ஆனந்த் said...

நீங்க என்னதான் டிஸ்கி போட்டு மெரட்டுனாலும்...

நல்லா இருக்கு!!!!

King... said...

புனைவு மாதிரி என்கிற வகைப்படுத்தலை காணவில்லை... தைரியமா அனுபவம்னு போட்டிருக்கிங்க...:)


தொடர்ந்து எழுதுங்க...

மங்களூர் சிவா said...

/

டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.
/

இதுக்கு பேரு டிஸ்கி இல்லை எச்சரிக்கை / அபாயம் 10000 V அப்படின்னு இல்ல இருக்கணும்

:))))))))

மங்களூர் சிவா said...

நல்லா இருங்க சார்
:)))))))))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே, எப்படி அண்ணே...

புல்லரிக்குது போங்க...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே, எப்படி அண்ணே...

புல்லரிக்குது போங்க...

ஆயில்யன் said...

அழகாய் இருக்கிறது!

பயமாவும் இருக்கிறது!


நடத்துங்க! நடத்துங்க!

Thamiz Priyan said...

மழை விட்டும் விடாத தூவானமாய்
இன்னும் உன் நினைவுகள்.

தனித்திருக்கும் பொழுதுகளில்
விழி வழியும் துளி நீரில்
பதிந்திருக்கும் உன் பிம்பம்.


நினைவை விட்டு அகல மறுக்கும்
பூங்காவும், ஆற்றங்கரையும், ஒற்றைக்குடையும்,,,,

அருகருகே அமர்ந்திருந்தும்
பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,

கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலே பேசிக் கொண்டதும்,

எதிர்பார்த்த மழையும் நான்
எதிர்பாராத உன் நெருக்கமும்.

பன்னிரண்டு ஆண்டுகள்
பார்க்காமலே ஓடிவிட்டாலும்

என்றேனும் ஒருநாள்
எங்கேனும் உனை சந்திப்பின்

ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று.

Thamiz Priyan said...

மேலே உள்ள கவிதையை எனது இனிய நண்பர் எழுதி அனுப்பினார். கவிதை என்றால் இப்படி உரைநடை போல் சம்பவங்களை மாற்றி மாற்றி எழுதக் கூடாது என்றும் அறிவுறித்தி உள்ளார். இனி இவைகளைக் கவனத்தில் கொண்டு கவிதை எழுதி துன்புறுத்த மாட்டேன் என சொல்ல மாட்டேன். மீண்டு(ம்) வருவேன்.

M.Rishan Shareef said...

//சாலையில் என்னைப் பார்த்ததும் உன் அப்பாவுக்கு தெரியாமல்
கண்களால் புன்னகை சிந்தி என்னை மறக்கச் செய்தாயே?//

அதாவது கண்கள் இரண்டால் உங்களைக் கட்டியிழுத்த கதையைச் சொல்ல வர்றீங்க...?
ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்.. :)

Aruna said...

அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம் என முடிவெடுத்தாகி விட்டது......இனி நாங்கள் என்ன சொல்ல?? நடத்துங்க....நடத்துங்க.
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

வாருங்கள் வாருங்கள் நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. இனி அடிக்கடி வாருங்கள்!

கதை மாதிரி போல...கதையாகவே நீங்கள் எழுதிய சி.வா.ஜி பதிவும் அருமையா இருந்தது. சயண்டிஃபிக் ஃபிக்ஷனா, நல்ல ட்விஸ்டுடன் முடித்த விதம். அந்த மாதிரியும் தொடர்றது...

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா இத நான் கவனிக்காம விட்டுட்டேனே...!

தமிழன்-கறுப்பி... said...

எப்ப நடந்திச்சு இந்த நல்ல விசயம்...

தமிழன்-கறுப்பி... said...

\
டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.
\

அண்ணே மறைமுகமா நம்மளை எல்லாம் தாக்குறிங்க எதுவா இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம் :)

தமிழன்-கறுப்பி... said...

தாராளமா தொடர்நது எழுதுங்க...

தமிழன்-கறுப்பி... said...

வார்த்தைகள் அழகா வந்திருக்கு உங்க நண்பர் சொன்னா மாதிரி அமைப்பை மட்டும் அஜஸ்ட் பண்ணிடுங்க...

தமிழன்-கறுப்பி... said...

\
பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்
கண்டிப்பாக சொல்வேன்
நீ என்னைக் காதலித்தது போல்
உன்னை நான் காதலித்தேன் என்று
\

அனுபவம்னு சொல்லிட்டிங்க அப்ப நேர்ல பாத்தா நிஜமா சொல்லுவிங்களா...:)

[சரியா கேப்பம்ல :)]

தமிழன்-கறுப்பி... said...

முதல் கவிதைகள் அநேகமாய் காதல் கவிதைகளாகிவிடுகிறது இல்லையா அண்ணன்...