Friday, September 5, 2008

கலவையான சிந்தனை - 05 - 09 - 2008


.
கலவை 1

கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில் சோர்வாகவும், தலை சுற்றலும் இருந்து வருகின்றது. எங்கள் நிறுவனத்தின் மருத்துவரை அணுக மாய்ச்சல்பட்டுக் கொண்டு இருந்தேன். சென்ற வாரம் அவரைப் பார்த்த போது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார். ( 95/ 70 mmHg). உப்பு போட்டு (?) நன்றாக சாப்பிடுமாறும், நிறைய தண்ணீர் குடிக்குமாறும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார். நானும் இவைகளில் கவனம் செலுத்துவதாக கூறி வந்து விட்டேன். மேலும் மனதளவில் குடும்ப கவலைகள் ஏதுமில்லாமல் இருக்கவும் கூறினார்............ பார்ப்போம்....:)

கலவை 2
இரண்டு தொழில் நுட்ப நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்

நண்பர் 1 : எதையாவது அளவீடு செய்யும் முறை தெரியுமா?

நண்பர் 2 : எது? இந்த லிட்டர், கிலோ போலவா?

நண்பர் 1 : ஆமாம். அது போல தான் வேற ஏதாவது தெரியுமா?

நண்பர் 2 : (யோசனையுடன்) மீட்டர், ஸ்கொயர் மீட்டர், செல்சியஸ்...ம்ம்ம்ம்ம்

நண்பர் 1 : போதும்.... இப்ப 100 லிட்டர் பாலும் , 100 லிட்டர் பாலும் சேர்ந்தா என்ன ஆகும்?

நண்பர் 2 : 200 லிட்டர் பாலாகிடும்

நண்பர் 1: 100 கிலோ அரிசியும், 100 கிலோ அரிசியும்சேர்ந்தா?

நண்பர் 2 : 200 கிலோ அரிசி

நண்பர் 1 : 100 மீட்டர் நீளமும் , 100 மீட்டர் நீளமும் சேர்ந்தா?

நண்பர் 2 : 200 மீட்டர் நீளம்

நண்பர் 1 : 100 சதுர அடி இடமும், 100 சதுர அடி இடமும் சேர்ந்தா?

நண்பர் 2 : 200 சதுர அடி இடம்

நண்பர் 1 : ஒரே அளவுள்ள குழாயில் வரும் 100 செல்சியஸ் தண்ணீரும் , 100 செல்சியஸ் தண்ணீரும் அதே அளவுள்ள குழாய் வழியாக இணைந்து வெளியேறும் போது?
நண்பர் 2 : 100 செல்சியஸ் தண்ணீர் தான்

நண்பர் 1 : ஏன் 200 செல்சியஸ் இல்லாம 100 தான் இருக்கும்?

(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)

கலவை 3

பொதுவாக நான் கண்ணீர் சிந்துவதில்லை. எந்த காரணிகளும் என்னை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் ஓரிரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இரக்கம், வருத்தம், நினைவுகள் என மனதை பாதிக்கின்றன. ஆனாலும் திரைப்படங்களைப் பார்க்கும் போது இவை ஏற்படுவதில்லை. அதே போல் பதிவுகளும் என்னை உணர்ச்சி வசப்படச் செய்வதில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதிவுகளில் இருக்கிறேன். பழைய பதிவர்களின் பதிவுகள், மூத்த பதிவர்களின் பதிவுகள், புதிய பதிவர்களின் பதிவுகள் என ஓரளவு வாசிப்பனுபவம் உள்ளது. அதில் இரண்டு இடுகைகள் மட்டுமே கண்ணீரை சாரை சாரையாக வரவழைத்து விட்டன. அவைகள் இரண்டும் உண்மையில் நம் பதிவர்களின் வாழ்வில் நடந்த கொடூரங்கள். ஒன்று அனுராதா அம்மா அவர்களின் கடைசி கணங்களின் பதிவு. இன்னொன்று அண்ணாச்சியின் ஒரு பதிவு.

கலவை 4

சமீபத்தில் ஒரு மூத்த வலையுலக நண்பருடன் சாட் செய்த போது இடுகைக்கு தலைப்பு வைப்பது தொடர்பாக பேசினோம். அப்போது அந்த நண்பர் எதிர்மறைச் சொற்களை வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். எனக்கு இந்த அமங்கலச் சொற்கள் (இல்லை, அற்ற, இயலாத, முடியாத, அல்லது கவலையான, சோகம் தரும் சொற்கள்) என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும் நண்பரின் கருத்துக்காக தலைப்பை மாற்றி வைத்தேன்.

அந்த பேச்சினூடே எனது திருமண அழைப்பிதழ் நினைவுக்கு வந்தது. பொதுவாக முஸ்லிம்கள் நிக்காஹ் என்னும் திருமண அழைப்பிதழ் என்றே தலைப்பிடுவார்கள். ஆனால் எனது திருமணத்திற்கு வரதட்சணையற்ற நபிவழி திருமண அழைப்பிதழ் ஆனால் என்றே அடித்தோம். வரதட்சணை என்ற பெயரில் பணமோ, பொருளோ, வீட்டு உபயோகப் பொருட்களோ (பீரோ, கட்டில், இத்யாதிகள்) எதுவும் வாங்கவில்லை.

எங்களது செலவில் திருமணம் முடித்து, வந்தவர்கள் அனைவருக்கும் எங்களது செலவிலேயே திருமண விருந்தும் அளித்தோம். அதையும் அழைப்பிதழில் தெரியப்படுத்தி இருந்தோம்.

மாற்றங்கள் மட்டுமே மாற்றம் இல்லாதவை.
கொசுறுக் கலவை

உலக நாடுகளின் கரன்சி நோட்டுகள்... பார்க்கவாவது செய்யலாமே!

டிஸ்கி 1 : வியாழன், வெள்ளி இரண்டு நாளும் புனித மெக்கா, மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்வதால் இந்த இடுகை நண்பர் ஆயில்யனால் வெளியிடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றிகள்!
டிஸ்கி 2 : முதலில் உள்ள படம் நோன்பு மாதங்களில் பெரும்பாலான வளைகுடா நிறுவன ஊழியர்களின் அலுவலக பணி!

38 comments:

வெண்பூ said...

//இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார்//

தயவு செய்து கவனித்துக் கொள்ளவும். உங்களுக்கு வயதும் குறைவாகவே தோன்றுகிறது.

//நண்பர் 1 : ஏன் 200 செல்சியஸ் இல்லாம 100 தான் இருக்கும்?//

ரொம்ப ஓவராத்தான் யோசிக்கிறீங்க!!! இப்ப புரியுது ஏன் பி.பி கம்மியாச்சின்னு :)

//எங்களது செலவில் திருமணம் முடித்து, வந்தவர்கள் அனைவருக்கும் எங்களது செலவிலேயே திருமண விருந்தும் அளித்தோம். அதையும் அழைப்பிதழில் தெரியப்படுத்தி இருந்தோம்.//

படிப்பவர்களுக்கு இதை ஏன் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று தோன்றலாம். பத்திரிக்கையை பார்ப்பவர்களுக்கும், திருமணத்திற்கு வருபவர்களுக்கும் இது சாத்தியமே என்று உணர்த்தினால் கண்டிப்பாக அவர்களின் திருமணத்திற்கும் இதை யோசிக்க வாய்ப்புள்ளது. நல்ல விஷயம்.

வடகரை வேலன் said...

தமிழ்,

கலவை நல்லா இருக்கு. இந்த முறை இன்னும் சிறப்பா இருக்கு.

உடம்பைப் பாத்துக்குங்க. அதிலும் குடும்பத்தை விட்டுத் தனியே இருக்கும் உங்களைப் போன்றவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அலட்சியப் படுத்தாதீங்க.

உங்க பழைய பதிவ ப்ரிண்ட் அவுட் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறேன்.

ஆயில்யன் said...

//கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில் சோர்வாகவும், தலை சுற்றலும் இருந்து வருகின்றது.//

தம்பி ஆபிஸிலும் வீட்டிலும் ஃபுல் ரெஸ்ட் எடுக்கும் உனக்கே இப்படியான பிரச்சனைகள் என்றால் எனக்கு இன்னும் என்னென்னெல்லாமோ பிரச்சனைகள் இருக்கோ????

ஆயில்யன் said...

// மனதளவில் குடும்ப கவலைகள் ஏதுமில்லாமல் இருக்கவும் கூறினார்//

எனக்கென்னமோ உங்களை குடும்ப கவலைகளை விட கும்மி கவலைகளே பெரிதும் வாட்டியிருப்பதாகவே கருதுகிறேன்! :))

ஆயில்யன் said...

//(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)//

இதுக்கு விடை சொல்ற அளவுக்கு எனக்கு ஆண்டவன் மூளைய கொடுக்கலையேன்னு எனக்கு பயங்கர கோவம் கோவமா வருது ஆண்டவன் மேல.....!!!!

ஆயில்யன் said...

//வியாழன், வெள்ளி இரண்டு நாளும் புனித மெக்கா, மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்வதால் இந்த இடுகை நண்பர் ஆயில்யனால் வெளியிடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றிகள்!//

எனக்கும் சேர்த்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்ற டீலுடன் :)))))))))))

ஆயில்யன் said...

//முதலில் உள்ள படம் நோன்பு மாதங்களில் பெரும்பாலான வளைகுடா நிறுவன ஊழியர்களின் அலுவலக பணி!
///

ச்சேச்சே நானெல்லாம் கடும் உழைப்பாளிகளப்பா!

என்ன 1 டீ காபிக்கு வழியில்லாம போயிடுச்சு! :(

வால்பையன் said...

கலவை 1

கூடவே வாந்தி வருவது போல் உள்ளதா!
நீங்கள் அப்பா ஆக போறிங்க!
ஆமா அது பிரஷரா இல்ல பிரக்னண்டா

வால்பையன் said...

கலவை 2

குசும்பா உங்ககளுக்கு!
செல்சியஸ் என்பது வெப்ப அளவு, தண்ணிருக்கு வெப்பம் இருந்தாலும் நூறும் நூறும் சேர்ந்தால் நூறு செல்சியஸ் தானே இருக்கும்

வால்பையன் said...

கலவை 3

நான் சினிமா பார்த்தாலே தேம்பி தேம்பி அழுவேன்.
இதற்காகவே மாத ஒருமுறை சோகப்படங்கள் பார்ப்பேன்.
அனுராதா அம்மையார் தெரியும், நானும் வருத்தப்பட்டேன்
அண்ணாச்சியின் எந்த பதிவு? லிங்க் தர முடியுமா

வால்பையன் said...

கலவை 4

வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய விசயமா? அப்படி இருந்தால் நானும் உங்களோடு கை கோர்த்து கொள்கிறேன்

Anonymous said...

//(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)//

இந்த இணைப்பை பாருங்க பாஸ்.

http://en.wikipedia.org/wiki/Intensive_and_extensive_properties

Kathir.

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Intensive_and_extensive_properties

வடகரை வேலன் said...

சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க

தாமிரா said...

//இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார்//
தயவு செய்து கவனித்துக் கொள்ளவும். உங்களுக்கு வயதும் குறைவாகவே தோன்றுகிறது.//

நிஜமா கேக்கிறேன், வயசு என்னாச்சு தல? (சாமி கும்பிட போயிருக்கீங்களா? நான் என்னடா ஆளக்காணோமேனு தேடிட்டிருந்தேன்)

rapp said...

:):):)

rapp said...

கலக்கல் :):):)

rapp said...

உடம்பைப் பாத்துக்குங்க.

masdooka said...

தங்கள் நபி வழித் திருமண அழைப்பிதழ் கண்டேன். மனமார வாழ்த்துகிறேன். நபி வழியில் எனது வாழ்த்தை சமர்ப்பிக்கிறேன்.

பாரகல்லாஹ் லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா பீ கைர்

உங்களுக்கும் உங்கள் மீதும் இறைவன் அபிவிருத்தி செய்வானாக (தம்பதிகளாகிய) உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்று சேர்ப்பானாக

malar said...

hello
regarding ur celsious temperature question,temperature is an intensive property.even one glass and one bucket of water can be in same temperature.pressure also.they won't depend on the size or quantity

ராமலக்ஷ்மி said...

உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வெண்பூ சரியாகச் சொல்லியிருக்கிறார். சிறிய வயது உங்களுக்கு.

//100 செல்சியஸ் தண்ணீர் தான்//
படித்ததும் புரிந்தது. பதில் பலரும் சொல்லியாயிற்று:)!

வால்பையன் கேட்டாற் போல் அண்ணாச்சி பதிவின் லிங்க் தந்திருக்கலாமே.

//அதையும் அழைப்பிதழில் தெரியப்படுத்தி இருந்தோம்.//

முன் மாதிரியாக இருந்ததை நாலு பேர் தெரியச் செய்கையில்தான் அவை மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது உண்மைதான் தமிழ் பிரியன்.

பி.கு: அக்கறையுடன் பதிவை வெளியிட்டு அதைவிட அக்கறையாக நண்பர் ஆயில்யன் போட்டிருக்கும் கலக்கலான கமென்ட்களையும் ரசித்தேன்:)!

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...///
கவனத்துக்கு நன்றி வெண்பூ!
மற்றவர்களுக்கும் இதைப் பற்றியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படும்.... இப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசிக்க வைக்கும் முயற்சி!

தமிழ் பிரியன் said...

//வடகரை வேலன் said...
தமிழ்,
கலவை நல்லா இருக்கு. இந்த முறை இன்னும் சிறப்பா இருக்கு.
உடம்பைப் பாத்துக்குங்க. அதிலும் குடும்பத்தை விட்டுத் தனியே இருக்கும் உங்களைப் போன்றவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அலட்சியப் படுத்தாதீங்க.
உங்க பழைய பதிவ ப்ரிண்ட் அவுட் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறேன்.///

ஆமாம் வேலன் சார்! இப்ப கவனமா இருக்கேன்! இங்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் இது போன்று நிகழ்வதாக மருத்துவர் கூறீயுள்ளார்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில் சோர்வாகவும், தலை சுற்றலும் இருந்து வருகின்றது.//

தம்பி ஆபிஸிலும் வீட்டிலும் ஃபுல் ரெஸ்ட் எடுக்கும் உனக்கே இப்படியான பிரச்சனைகள் என்றால் எனக்கு இன்னும் என்னென்னெல்லாமோ பிரச்சனைகள் இருக்கோ????///
அண்ணே! வேலை செய்வது ஈஸிண்ணே! சும்மா இருப்பது தான் கஷ்டம்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

// மனதளவில் குடும்ப கவலைகள் ஏதுமில்லாமல் இருக்கவும் கூறினார்//

எனக்கென்னமோ உங்களை குடும்ப கவலைகளை விட கும்மி கவலைகளே பெரிதும் வாட்டியிருப்பதாகவே கருதுகிறேன்! :))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

////ஆயில்யன் said...

//(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)//

இதுக்கு விடை சொல்ற அளவுக்கு எனக்கு ஆண்டவன் மூளைய கொடுக்கலையேன்னு எனக்கு பயங்கர கோவம் கோவமா வருது ஆண்டவன் மேல.....!!!!////
நீங்களே இப்படி சொன்னா எப்படி?????

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//வியாழன், வெள்ளி இரண்டு நாளும் புனித மெக்கா, மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்வதால் இந்த இடுகை நண்பர் ஆயில்யனால் வெளியிடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றிகள்!//

எனக்கும் சேர்த்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்ற டீலுடன் :)))))))))))///

பிரார்த்தனையில் அனைவரையும் இடம் பெற வைப்பது தான் வழமை!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//முதலில் உள்ள படம் நோன்பு மாதங்களில் பெரும்பாலான வளைகுடா நிறுவன ஊழியர்களின் அலுவலக பணி!
///

ச்சேச்சே நானெல்லாம் கடும் உழைப்பாளிகளப்பா!

என்ன 1 டீ காபிக்கு வழியில்லாம போயிடுச்சு! :(///

தெரியும்ங்கண்ணே!

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...
கலவை 1
கூடவே வாந்தி வருவது போல் உள்ளதா!
நீங்கள் அப்பா ஆக போறிங்க!
ஆமா அது பிரஷரா இல்ல பிரக்னண்டா///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

வால்பையன் said...

/// கலவை 3

நான் சினிமா பார்த்தாலே தேம்பி தேம்பி அழுவேன்.
இதற்காகவே மாத ஒருமுறை சோகப்படங்கள் பார்ப்பேன்.
அனுராதா அம்மையார் தெரியும், நானும் வருத்தப்பட்டேன்
அண்ணாச்சியின் எந்த பதிவு? லிங்க் தர முடியுமா///
வேண்டாமே வால் பையன்! நல்ல விடயங்களுக்கு லிங்க் தரலாம்ன்னு விட்டு விட்டேன்!

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

கலவை 4

வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய விசயமா? அப்படி இருந்தால் நானும் உங்களோடு கை கோர்த்து கொள்கிறேன்///
இன்றைய சூழலில் கடுமையாக போராடி தடுக்க வேண்டிய தீமைகளில் முதலில் இருப்பது அதுவும் தான்

தமிழ் பிரியன் said...

///Anonymous said...

//(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)//

இந்த இணைப்பை பாருங்க பாஸ்.

http://en.wikipedia.org/wiki/Intensive_and_extensive_properties

Kathi///

நன்றி கதிர்!

தமிழ் பிரியன் said...

///தாமிரா said...

//இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார்//
தயவு செய்து கவனித்துக் கொள்ளவும். உங்களுக்கு வயதும் குறைவாகவே தோன்றுகிறது.//

நிஜமா கேக்கிறேன், வயசு என்னாச்சு தல? (சாமி கும்பிட போயிருக்கீங்களா? நான் என்னடா ஆளக்காணோமேனு தேடிட்டிருந்தேன்///

வயது 28 முடிந்து 29 நடக்குது.. (உண்மை தானுங்க) கவனமாக இருக்கிறேன்! நன்றி தாமிரா!

தமிழ் பிரியன் said...

/// rapp said...

கலக்கல் :):):)////
நன்றி ராப்! கவன்மா இருக்கேன்!

தமிழ் பிரியன் said...

///masdooka said...

தங்கள் நபி வழித் திருமண அழைப்பிதழ் கண்டேன். மனமார வாழ்த்துகிறேன். நபி வழியில் எனது வாழ்த்தை சமர்ப்பிக்கிறேன்.

பாரகல்லாஹ் லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா பீ கைர்

உங்களுக்கும் உங்கள் மீதும் இறைவன் அபிவிருத்தி செய்வானாக (தம்பதிகளாகிய) உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்று சேர்ப்பானாக///
நன்றிகள்! மஸ்துகா!

தமிழ் பிரியன் said...

///malar said...

hello
regarding ur celsious temperature question,temperature is an intensive property.even one glass and one bucket of water can be in same temperature.pressure also.they won't depend on the size or quantity///
Thank You Malar!

cheena (சீனா) said...

அன்பின் ஜின்னா

தர்போது உடல் நலம் தேறி இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவரின் அறிவுரையைக் கடைப்பிடியுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் ஜின்னா

முரளிகண்ணன் said...

//எங்களது செலவில் திருமணம் முடித்து, வந்தவர்கள் அனைவருக்கும் எங்களது செலவிலேயே திருமண விருந்தும் அளித்தோம். அதையும் அழைப்பிதழில் தெரியப்படுத்தி இருந்தோம்.//

உங்கள் நண்பராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்

LinkWithin

Related Posts with Thumbnails