பாக்யராஜின் ஒரு படத்தில் கதாநாயகர்களில் ஒருவர் இந்தி மொழி கற்றுக் கொள்வார். இந்தி கற்றுத்தரும் ஆசிரியரின் பெண்ணாகிய இராதிகாவை காதலிக்கும் முயற்சியிலேயே அதற்கு வருவார். பின்னர் ராதிகா தன்னைப் பற்றி ஏதோ சொல்ல வாத்தியாரை, அடித்து பெண்டை நிமிர்த்து விடுவார்.
நல்ல காமெடியாக இருக்கும்... அந்த இந்தி ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் ஒரு வசனம் நம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா”... இந்த வசனத்தைக் கேட்டதுமே நாம் அனைவரும் சிரித்து விடுவோம்.
மொழிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம். அதைக் கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து விரைவாகக் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக் கொடுப்பவரும் சரியானவராக இருக்க வேண்டும். மொழியைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் பெரிய பிரச்சினை அதன் உச்சரிப்பு. அந்த குறிப்பிட்ட மொழி பேசக் கூடியவர்களின் பேசும் உச்சரிப்பு அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு அது போல் உச்சரித்தால் தான் புரிந்து கொள்ள முடியும்... எனக்கு எழுத, படிக்க தெரிந்த மூன்று மொழிகளை இதற்காக எடுத்துக் கொள்கிறேன்... தமிழ், இந்தி, அரபி.
இந்தி பேசக் கூடியவர்கள் தமிழ் கற்றுக் கொள்வது மிகவும் குறைவு. தமிழகத்தில் வேலை நிமித்தம் வரும் போது மட்டுமே அது அவர்களுக்கு பயன்படும். அந்த வீதத்தோடு தமிழ் பேசக் கூடியவர்களில் இந்தி கற்றுக் கொள்பவர்களைக் கணக்கிட்டால் மிக அதிகம். தமிழ் நாட்டில் இருந்து அதிக அளவில் வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டி வருகின்றது. இது தவிர்த்து நாங்கள் இருக்கும் வளைகுடா நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஆப்கன் ஆகிய நாட்டினருக்கு இடையேயான பொது மொழியாக இந்தி இருக்கிறது. எனவே இங்கு செல்லக் கூடியவர்கள் இந்தி மொழி கற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
உச்சரிப்பு பிரச்சினை என்பது எல்லா மொழிகளுக்கும் இருக்கிறது. அதில் தமிழும் விதிவிலக்கல்ல.... எடுத்துக்காட்டாக ஒரு எழுத்தை மட்டும் வைக்கிறேன்.. அது ‘க’ என்பது. தமிழில் க என்ற உச்சரிப்பில் உள்ள ஒரே எழுத்து. சில நேரங்களில் ‘ஹ’ என்பதையும் பயன்படுத்துகிறோம்.
ஆனால் இந்தி மொழியில் ‘க’ உச்சரிப்பில் 5 எழுத்துக்கள் உள்ளன. क (ka), ख (kha), ग(ga), घ(gha), மற்றும் ह(ha) ஆகியவை... நாம் இதில் இரண்டை மட்டும் பயன்படுத்துகிறோம். இதனால் ख (kha), ग(ga), घ(gha) ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்புக்கு நமது நாக்குகள் பழகுவதில்லை. அந்த திரைப்பட வசனத்தில் காவ் (கிராமம்) என்ற வார்த்தையை ghaav (गाव्) என்று வாசிக்க வேண்டும். அதே போல் ரகுதா தா (வசித்து வந்தான்) என்ற வார்த்தையில் ‘த’ இரண்டு விதமாக வரும். (இந்தியில் ‘த’விலும் நான்கு த உள்ளது)
இன்னும் சொல்வதானால் சாதம் என்பதற்கு இந்தியில் खाना (khaanaa) என்று சொல்ல வேண்டும். பாடல் என்பதற்கு गाना (gaanaa) என்று சொல்ல வேண்டும். இந்த உச்சரிப்பில் க மட்டுமே இருப்பதால் பல நேரங்களில் குழம்ப நேரிடுகின்றது. விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதே நேரத்தில் தமிழில் ல, ள, ழ என்று மூன்று எழுத்துக்கள் உள்ளன. ஆனால் இந்தி ல (ल) என்று ஒரு எழுத்து தான்.... அவர்கள் இந்த லகரத்தை உச்சரிக்கும் போது வேதனையாக இருக்கும்... ஒரு படத்தில் விவேக் காமெடியில் ஒரு தமிழ் பெண் சொல்வார்... “வாலைப்பளத் தோள் வலுக்கு வாளிபன் கீலே விலுந்தான்”.. அதே கதை தான்... இதைப் போலவே இந்தியில் ஓ என்ற எழுத்தும் கிடையாது... ஒ, என்பதற்கும் ஓ என்பதற்கும் ஒரே ஒ (ओ) தான்.. விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அடுத்து அரபியில் எடுத்துக் கொண்டால் அதில் தட்டையான எழுத்துக்கள் கிடையாது. எடுத்துக்காட்டாக ‘ட’ என்ற எழுத்தே அரபி பேசக் கூடியவர்களுக்கு வராது. ஏனெனில் அவர்கள் மொழியில் ட என்ற எழுத்தே கிடையாது. டாக்டர் என்ற சொல்லச் சொன்னால் தோக்தர் என்று தான் சொல்வார்கள். வளைகுடாப் பகுதியில் இருப்பவர்களுக்கு இது விளங்கும். பில்டிங் என்பதை பில்திங் என்றே சொல்வார்கள். விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதே போல் நாம் எடுத்துக்கொண்ட ‘க; உச்சரிப்புக்கு வந்தால் அரபியிலும் 5 எழுத்துக்கள் உள்ளன. ك،ح،خ،ق،ه இவைகளை இந்தி போலும் வாசிக்க இயலாது.
இந்தியில்
क (ka), என்பதை சாதாரணமாக நாம் உச்சரிக்கும் க போல் சொல்லலாம். நாக்கின் நடுப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் வாயின் நடுப்பகுதியில் இருந்து வர வேண்டும்.
ख (kha), நாக்கின் நடுப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் வாயின் உள் பகுதியில் இருந்து அழுத்தமாக வர வேண்டும்.
ग(ga), நாக்கின் உள்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் சிறு நாக்குப் பகுதியில் இருந்து லேசாக வர வேண்டும்.
घ(gha), நாக்கின் உள்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் சிறு நாக்குப் பகுதியில் இருந்து அழுத்தமாக வர வேண்டும்.
ह (ha) தொண்டைப் பகுதியில் இருந்து வெறும் காற்றாகவே வந்தால் போதுமானது.
அரபியில்
ه இந்த ஹ எழுத்தை உச்சரிக்கும் போது, இரு உதடுகளையும் சேர்க்கக் கூடாது. பற்களையும் சேர்க்கக் கூடாது.நாவை மேலே உயர்த்தவும் கூடாது. குரல் அடித்தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும், அழுத்தமாக ஒலிக்கக்கூடாது. கிட்டத்தட்ட ஹ போல.. வயிற்றில் இருந்து காற்று மட்டும் வர வேண்டும். அழுத்தினால் எழுத்து மாறி விடும்.
ك இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் பிற்பகுதி மேல்வாயைத் தொட்டிருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.
ق இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் கடைசிப் பகுதியைக் கொண்டு உள்வாயின் மேற்பகுதியைச் சற்று அழுத்த வேண்டும். குரல் வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.
ح இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது.நாவின் கடைசிப்பகுதி மட்டும் சற்று மேலே உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத்தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க வேண்டும்.
خ இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது.நாக்கின் இறுதிப் பகுதியை மட்டும் சற்று உயர்த்த வேண்டும். குரலை இலேசான காறலின் போதுள்ள கரகரப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.
இப்ப கடைசியா எல்லோருக்கும் தேர்வு... எங்கே எல்லோரும் சத்தமா சொல்லுங்க
க
ஹ
क (ka),
ख (kha),
ग(ga),
घ(gha),
ह(ha)
ك
ح
خ
ق
ه
ஹ
क (ka),
ख (kha),
ग(ga),
घ(gha),
ह(ha)
ك
ح
خ
ق
ه
31 comments:
//பாக்யராஜின் ஒரு படத்தில் கதாநாயகர்களில் ஒருவர் இந்தி மொழி கற்றுக் கொள்வார்.//
படத்தின் பெயர் இன்று போய் நாளை வா
பதிவு
என் அறிவுக்கு எட்டாதது
எனக்கு தமிழ தவிர வேற ஒண்ணுமே தெரியாது
“ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா”
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காமெடி:)))))!
வருகை பதிவு
கலக்கலா
ககரத்தோட
கண்ணியமா
கற்றுக்கொடுக்கும்
கடமையை
ஆரம்பிச்சுருக்கீங்க!
கலக்குங்க!
- 'க' போதுமா?
அரபி கத்துக்கறது ரொம்பக்கஷ்டமோ???
//
விஜய் ஆனந்த் said...
அரபி கத்துக்கறது ரொம்பக்கஷ்டமோ???
//
பதிவ படிச்சா அப்படித்தான் தோணுது :)))))
அண்ணே ! ரொம்ப நல்லா மூணு மொழிகளிலும் எடுத்துக்காட்டுடன் விளக்கிடீங்க. சரி நானும் பொறுமையா படிச்சிட்டு வந்து தேர்வெழுதுகிறேன். ஓகே அரபிகாரங்களோட ஆங்கில உச்சரிப்பில் 'ப' (pa) கூட வராது அண்ணா "ba" தான் வரும். உதாரணம் பப்ளிக் அவங்க bublic என்றுதான் சொல்லுவாங்க (blease, bencil, baber) இப்படி சொல்லலாம். நிறைய வார்த்தைகள் நான் சொல்லி திரும்ப சொல்லும் போது முடியவில்லை என்று சொல்லுவாங்க. ஆனால் அரபி கத்துக்கறது ரொம்ப கஷ்டம் அண்ணா பேச்சு வழக்கில் அலுவலகத்தில் புழக்கமான சில வார்த்தைகளை வைத்து கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். இருந்தாலும் அரபி உச்சரிப்பு மிகவும் கடினம்.
//அண்ணே ! ரொம்ப நல்லா மூணு மொழிகளிலும் எடுத்துக்காட்டுடன் விளக்கிடீங்க.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
///வால்பையன் said...
//பாக்யராஜின் ஒரு படத்தில் கதாநாயகர்களில் ஒருவர் இந்தி மொழி கற்றுக் கொள்வார்.//
படத்தின் பெயர் இன்று போய் நாளை வா///
தகவலுக்கு நன்றி வால் பையன்... இதில் நாம கொஞ்சம் வீக்கு.. ஹிஹிஹி
அட போங்க தல எனக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் தான்....:)
//அண்ணே ! ரொம்ப நல்லா மூணு மொழிகளிலும் எடுத்துக்காட்டுடன் விளக்கிடீங்க.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
அன்பின் தமிழ் பிரியன்
மூன்று மொழிகளையும் ஒப்பு நோக்கி - அரிச்சுவடி பாடம் கற்றுக் கொடுக்கும் முயற்சி அருமை.
நல்வாழ்த்துகள்
தொடர்க
///வால்பையன் said...
பதிவு
என் அறிவுக்கு எட்டாதது
எனக்கு தமிழ தவிர வேற ஒண்ணுமே தெரியாது//
எழுத்து உச்சரிப்பு தானே முயற்சி செய்து பாருங்களேன்.. :)
///ராமலக்ஷ்மி said...
“ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா”
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காமெடி:)))))!///
நினைச்சாலே சிரிப்பு வந்து விடும்... நல்ல காமெடி அக்கா!
//இக்பால் said...
வருகை பதிவு////
நன்றி இக்பால்!
///சுரேகா.. said...
கலக்கலா
ககரத்தோட
கண்ணியமா
கற்றுக்கொடுக்கும்
கடமையை
ஆரம்பிச்சுருக்கீங்க!
கலக்குங்க!
- 'க' போதுமா?////
போதும் தமிழ் புலவரே! போதும் நன்றி!
எந்த மொழியவும் கத்துக்கிட ஈசி வழி திண்டுக்கல் லியோனி சொல்லியிருக்கார் தெரியுமா?
///விஜய் ஆனந்த் said...
அரபி கத்துக்கறது ரொம்பக்கஷ்டமோ???///
கஷ்டமா? ரொம்ப ஈஸி தெரியுமா? இங்க 3 வயசு சின்ன குழந்தை கூட அருமையா அரபி பேசும்.
///வெண்பூ said...
//
விஜய் ஆனந்த் said...
அரபி கத்துக்கறது ரொம்பக்கஷ்டமோ???
பதிவ படிச்சா அப்படித்தான் தோணுது :)))))////
3 வயசு சின்னக் குழந்தையே அழகா பேசும் போது உங்களுக்கு என்ன? சீக்கிரமே கத்துக்கலாம்.. இல்லைன்னா ஜூனியர் கத்துக் கிட்டு உங்களுக்கு கத்துக் கொடுப்பான். கவனம்.
///மது... said...
அண்ணே ! ரொம்ப நல்லா மூணு மொழிகளிலும் எடுத்துக்காட்டுடன் விளக்கிடீங்க. சரி நானும் பொறுமையா படிச்சிட்டு வந்து தேர்வெழுதுகிறேன். ஓகே அரபிகாரங்களோட ஆங்கில உச்சரிப்பில் 'ப' (pa) கூட வராது அண்ணா "ba" தான் வரும். உதாரணம் பப்ளிக் அவங்க bublic என்றுதான் சொல்லுவாங்க (blease, bencil, baber) இப்படி சொல்லலாம். நிறைய வார்த்தைகள் நான் சொல்லி திரும்ப சொல்லும் போது முடியவில்லை என்று சொல்லுவாங்க. ஆனால் அரபி கத்துக்கறது ரொம்ப கஷ்டம் அண்ணா பேச்சு வழக்கில் அலுவலகத்தில் புழக்கமான சில வார்த்தைகளை வைத்து கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். இருந்தாலும் அரபி உச்சரிப்பு மிகவும் கடினம்.///
ஆமாம்மா! அவங்க சொல்றதை புரிந்து கொள்வதற்குள் தாவூ தீர்ந்து போய் விடும் ஆரம்பத்தில்... இப்ப பரவாயில்லை.. ;))
///ஆயில்யன் said...
//அண்ணே ! ரொம்ப நல்லா மூணு மொழிகளிலும் எடுத்துக்காட்டுடன் விளக்கிடீங்க.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!////
ரொம்ப நன்றி அண்ணேய்!
நான் தமிழில் மட்டும்தான் உருப்படி(னு நினைக்கிறேன்) மற்றபடி பிற சப்ஜெக்டுகளைப் போலில்லாமல் பிறிதொரு மொழியைக்கற்பதுதான் உலக மகா கஷ்டம் எனத்தோன்றுகிறது எனக்கு. இரண்டாவதாக ஆங்கிலத்தில் 'பிரேக் டான்ஸ்' ஆடுற வரைக்கும் வந்திருக்கிறேன். இந்த லட்சணத்தில் இந்தி.. அதுகூட பரவாயில்லை உருது.. விளங்கிடும்.!
ஸாரிங்க உருது இல்லை, அரபின்னு சொல்லவந்தேன்..
தெரியாதவனுக்கு எல்லாம் ஒண்ணுங்கிறது வேற விஷயம்..
இங்க தமிழே ததிங்கிணத்தோம்.
ஏதோ நானும் ஹிந்தி கிளாசுக்கு போனேன், ஆனா தொடரல. (பின்ன 3ம் கிளாசு பொண்ணு ஒன்னு சும்மா பின்னியெடுக்கும் போது, மேஜ் ப்ர் கியா ஹை? லேயே நின்னா மாஸ்டர் திட்டாம என்ன செய்வாரு?)
அப்ப தொடரல, இப்ப தொடருவோம்... நன்றி திரு.ஆசிரியர் அவர்களே...
குறிப்பு 1. சரியா படிக்கலன்னா திட்டகூடாது.
குறிப்பு 2. க, க்க்க, திருப்பி திருப்பி எழுத சொல்லக்கூடாது.
குறிப்பு3. வீட்டுபாடம் நிறைய கொடுக்கக்கூடாது...
தல இது நம்ம அறிவுக்கு அப்பாற்பட்ட விசயம்...
எனக்கு தமிழ் மட்டும் தான் பேசத்தெரியும் அதுவும் ஒழுங்கா வராது...
ஆனா எப்படி நீங்க இதெல்லாம் எழுதப்பழகினிங்க...
கலக்குறிங்க..தல...
Post a Comment