Saturday, September 13, 2008

1400 க்கு முன் - உலகின் முதல் அணு ஆயுத தாக்குதல்

.
.
நவீன உலகில் முதன் முதலில் அணு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்கா ஜப்பானை தாக்கியதாக தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னாலேயே அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரேபிய தீபகற்பத்தில் மெக்கா என்னும் பகுதி விவசாய நிலங்கள் இல்லாத ஒரு வறண்ட பூமியாக இருந்தது. கடுமையான வெயில் இருக்கக் கூடிய பகுதி. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை வளர்ந்து, மாமிசம், பால் போன்றவற்றையே உண்டு வந்தனர். பாலைவனப் பகுதி என்பதால் மற்ற பகுதிகளில் பேரீச்சம் பழங்களும் கிடைத்து வந்தன. ஆனால் அந்த குறிப்பிட்ட ஊர் கடுமையான வறண்ட மலைப்பிரதேசம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்தே உணவுப் பொருட்கள் அங்கு வர வேண்டி இருந்தது.

ஆனால் மெக்காவுக்கு ஒரு சிறப்பு இருந்தது. அந்த ஊரில் தான் அந்த தீபகற்பத்திற்கே முக்கியமாக கருதப்படும் வழிபாட்டுத் தளம் காபா இருந்தது. பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அங்கு வந்து வழிபாடுகள் செய்வது வழக்கம். இந்நிலையில் அரேபிய தீபகற்பத்தின் ஒரு புறம் இருந்த யமன் என்ற பகுதி அபிசீனிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அந்த பகுதியை அப்ரஹா என்ற ஆளுநர், அபிசீனிய மன்னரின் கட்டளைப்படி ஆண்டு வந்தார்.

யமன் தேசத்தில் மிகுந்த பொருட் செலவில் அப்ரஹா அழகான வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அரேபிய தீபகற்பம் முழுவதும் அரபுகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவர்கள் மெக்காவுக்கே வழிபாடு நடத்த வருவது வழக்கம். அப்ரஹாவால் இந்த வழக்கத்தை மாற்றி, யமனை நோக்கி மக்களை திருப்ப செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரஹா மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கும் எண்ணத்துடன் ஏராளமான யானைகள் மற்றும் 60,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையுடன் கிளம்பி வந்தார். (அபீசினியா ஆப்ரிக்க கண்டத்தில் உள்ளதால் அங்கிருந்து யானைப் படையைக் கொண்டு வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது).அரபு தேசம் முழுவதும் இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவியது. சிறு சிறு குழுக்களாக இருந்த அரபு மக்கள் அந்த படையுடன் போரிட இயலாமல் தோல்வியையே தழுவ நேரிட்டது.

இந்நிலையில் அந்த பெரும்படை மெக்காவை நெருங்கி தனது கூடாரங்களை அமைத்தது. அப்ரஹா தனது வீரர்களை வேவு பார்க்க அனுப்பி வைத்தார். மெக்காவில் போருக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வரும் வழியில் மேய்ந்து கொண்டிருந்த மெக்கா நகர முக்கியஸ்தர்களின் ஆடு, ஒட்டகங்களை அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து விடுகின்றனர். (இந்த முறை தமிழ் இலக்கியங்களில் நிரை கவர்தல் என அழைக்கப்படும்)

இதை அறிந்த அந்த பிரமுகர் தனது ஆடு, ஒட்டகங்களை மீட்க அப்ரஹாவிடம் வருகின்றனர். அப்ரஹா அவரிடம் பேசும் போது “இந்த ஆடு,ஒட்டகங்கள் என்னுடையது. அவைகளை திருப்பி அளித்து விடுங்கள். இந்த ஆலயம் இறைவனுக்கு சொந்தமானது. அவன் விரும்பினால் அதை பாதுகாத்துக் கொள்வான்” என்று கூறி விடுகின்றார். பெரும் போருக்கு ஆயத்தமாக வந்திருந்த அப்ரஹாவிறகு இது ஏமாற்றமாக ஆகி விடுகின்றது.

மறுநாள் தனது பெரும்படையுடன் மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்க அப்ரஹா கிளம்புகின்றார். அப்போது தான் அந்த அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றது. அபாபீல் என்ற சிறு பறவைகள் தமது கால், அலகுகளில் கொண்டு வந்த, களிமண்ணால் ஆன செறிவூட்டப்பட்ட சிறு குண்டுகளை வீசுகின்றன. அவை தரையில் இருக்கும் யானைப்படைகளின் மீது விழுந்ததும், வெடித்து சிதற ஆரம்பித்தன. யானைகள் மீது அந்த களிமண் கட்டிகள் விழுந்ததும் தரையோடு புதைந்து போயின. வீரர்களின் உடல்கள் முழுவதும் சதைகள் உருகி ஓடத் துவங்கி விட்டன. மீதமுள்ள யானைகள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு தனது படைகளையே துவம்சம் செய்தன.

இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை. இந்த நிகழ்ச்சி மெக்காவில் முகமது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சி அரேபியர்களின் வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் வைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(திருக்குர்ஆன், 105:001-005)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَبِ الْفِيلِ

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍஇந்த நிகழ்வின் இறுதியில் அந்த படைகளின் நிலையை விளக்கும் திருக்குர்ஆன் மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் ஆகி விட்டதாக கூறுகின்றது. சாதாரணமாக வைக்கோல் ஒரு ஒழுங்கற்ற நிலையில் தான் இருக்கும். மென்று தின்னப்பட்ட வைக்கோலின் நிலை ஹிரோசிமாவின் நிலையைக் கண்ணுக்கு கொண்டு வரும்.

19 comments:

Anonymous said...

How many people are you to tell like this?

Mathi

Anonymous said...

just question yourself on everything

புதுவை சிவா :-) said...

Good story
write more like this funny stories

I can use to tell babies when they eat food.

:-))))))))))))

puduvai siva

Anonymous said...

//வீரர்களின் உடல்கள் முழுவதும் சதைகள் உருகி ஓடத் துவங்கி விட்டன.//

should be some chemical warheads.

அறிவன்#11802717200764379909 said...

ஏங்க,இது மாதிரி செய்திகளுக்கு ஆதாரம் அல்லது சுட்டிகள் இருந்தா,அதோடு போடுங்க..
கேள்விகள் குறையும் !

Abuaadhil said...

அரேபிய வரலாற்றில் இச்சம்பவம் நடந்த ஆண்டு 'யானை ஆண்டு' என்று குறிப்பிடப்படுகிறது.

hayat001 said...

சம்பவத்தை அருமையாக விளக்கியுள்ளீர். ரமலான் மாதத்தில் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
அன்புடன் அ.ஹக்கீம்...

தமிழ் பிரியன் said...

///Anonymous said...
How many people are you to tell like this?
Mathi///
மதி! உண்மையான விடயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் தானே? நீங்களும் இதை மற்றவர்களுக்கு சொல்லலாம்.

தமிழ் பிரியன் said...

///Anonymous said...
just question yourself on everything///
இறைவனின் வல்லமைகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே! அணு ஆயுதங்களை மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனே சிந்திக்கும் போது, அண்ட சராரங்களையும் படைத்த இறைவனுக்கு இது எளிதான ஒன்றே... இதில் நமக்கு அத்தாட்சிகளே கிடைக்கின்றன. சிறு பறவை போட்ட கற்களால் இவ்வளவு பெரிய அளிவு ஏற்படும் போது ஏன் அவ்வாறு ஏற்பட்டது என சிந்தித்து இருந்தால் தெளிவு கிடைத்திருக்கும்.

தமிழ் பிரியன் said...

///புதுவை சிவா :-) said...
Good story
write more like this funny stories
I can use to tell babies when they eat food.
:-))))))))))))
puduvai siva///
கண்டிப்பா சொல்லிக் கொடுங்கள் சிவா அண்ணா! இறைவனின் வல்லமையை வெளிக்காட்டும் இது போன்ற உண்மை நிகழ்வுகளை சொல்லித் தருவதன் மூலம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்ற எண்ணம் சிறு வயது முதலே ஊட்டப்படுவது மிகவும் நல்லது.

தமிழ் பிரியன் said...

///Anonymous said...

//வீரர்களின் உடல்கள் முழுவதும் சதைகள் உருகி ஓடத் துவங்கி விட்டன.//

should be some chemical warheads.///
யானைகள் மண்ணில் புதைந்து போனதாகவும், வீரர்களில் உடல்களெங்கும் சிதைந்து போனதாகவும் அரேபிய வரலாறுகள் கூறுகின்றன. ஆகவே அவைகள் வேதி ஆயுதங்களாக இருக்கும் என்பதை விட அணு ஆயுதமாக இருந்திருக்கும் என சொலவதே சிறந்த கருத்தாக இருக்கும்.

தமிழ் பிரியன் said...

////அறிவன்#11802717200764379909 said...

ஏங்க,இது மாதிரி செய்திகளுக்கு ஆதாரம் அல்லது சுட்டிகள் இருந்தா,அதோடு போடுங்க..
கேள்விகள் குறையும் !////

இந்த சம்பவம் நடந்தது அரேபிய வரலாற்று புத்தகங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது... :)

ஆதாரம் 1
நான் பதிவில் சுட்டிக் காட்டிய வசனம்... இந்த வசனம் இறைவனால் அருளப்படுவதற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது... இது உண்மை என்பதாலேயே இது சம்பந்தமான கேள்வி எழுப்பப்படாமல் மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

ஆதாரம் 2
முகமது நபி (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்து மக்கா வந்த போது, ஹூதைபிய்யா என்னும் இடத்திற்கு வரும் போது அவர்களது ஒட்டகம் கஸ்வா அங்கிருந்து நகராமல் இருக்கின்றது. அப்போது நபி(ஸல்) அவர்கள் (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை
கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து
வைத்திருக்கிறான்’ என்று கூறினார்கள். இந்த செய்தி 1300 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புஹாரி (2731, 2732) , மற்றும் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் 3
அரேபியா வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் அவர்கள் தனது நூலில் இச்சம்பவத்தைப் பற்றி விளக்கமாக கூறியுள்ளார்கள்!

தமிழ் பிரியன் said...

பொதுவாக வரலாற்றுச் சம்பவங்கள் கல்வெட்டுக்கள் மூலமே தெரியவரும். ஆனால் இஸ்லாமிய வரலாறுகள் அதன் முக்கியத்துவம் கருதி நூல்களாக 1300 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் போன்றவைகள் பின்பற்றப்பட வேண்டியவை என்பதால் கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இதில் உலக வரலாற்று ஆசிரியர்கள் ஐயப்பாடு கொள்வதில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர்களில் வரலாற்றை சில கல்வெட்டுக்களைக் கொண்டே அறிய முடியும் எனும் போது, மொத்த செய்திகளும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வரலாறுகள் எந்த ஐயங்களுக்கும் இடம் கொடாதவையே!

SanJai said...

ராமாயண , மகாபாரதத்தில் வரும் நேருக்கு நேர் வானில் மோதி சிதறும் அம்புகளாகட்டும் , சில மந்திரங்கள் மூலம் செலுத்தி எதிரிகளை அழித்ததாக சொல்லப் படும் அஸ்திரங்களாகட்டும் அல்லது நீங்கள் இப்போது குறிப்பிட்டிருக்கும் அணு ஆயுதம் ஆகட்டும்... நிச்சயம் நம்பத் தகுந்தவை அல்ல... எல்லாமே ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது...

//இறைவனின் வல்லமையை வெளிக்காட்டும் இது போன்ற உண்மை நிகழ்வுகளை சொல்லித் தருவதன் மூலம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்ற எண்ணம் சிறு வயது முதலே ஊட்டப்படுவது மிகவும் நல்லது.//

இது போன்ற காரணங்களுக்காக வேண்டுமானால் இவற்றை வரவேற்கலாம்...

... இறைவன் என்பதே இன்னும் நிரூபிக்கப் படாத நம்பிக்கை சார்ந்த விஷயமாகத் தான் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ...

Nausadh said...

குரானில் கூறப்பட்ட "சுட பட்ட கல்" என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தால் போதும் , இதில் எவளவு பெரிய அறிவியல் உண்மை உள்ளது என்பதை மாற்று மத சகோதரர்கள் உணர்வார்கள்,மேலும் குரானில் உள்ள அறிவியல் சார்ந்த தொகுப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

மிகவும் நல்ல பதிப்பு இறைவண் மிகப்பெரியவண்

தமிழ் பிரியன் said...

///SanJai said...

ராமாயண , மகாபாரதத்தில் வரும் நேருக்கு நேர் வானில் மோதி சிதறும் அம்புகளாகட்டும் , சில மந்திரங்கள் மூலம் செலுத்தி எதிரிகளை அழித்ததாக சொல்லப் படும் அஸ்திரங்களாகட்டும் அல்லது நீங்கள் இப்போது குறிப்பிட்டிருக்கும் அணு ஆயுதம் ஆகட்டும்... நிச்சயம் நம்பத் தகுந்தவை அல்ல... எல்லாமே ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது...

//இறைவனின் வல்லமையை வெளிக்காட்டும் இது போன்ற உண்மை நிகழ்வுகளை சொல்லித் தருவதன் மூலம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்ற எண்ணம் சிறு வயது முதலே ஊட்டப்படுவது மிகவும் நல்லது.//

இது போன்ற காரணங்களுக்காக வேண்டுமானால் இவற்றை வரவேற்கலாம்...

... இறைவன் என்பதே இன்னும் நிரூபிக்கப் படாத நம்பிக்கை சார்ந்த விஷயமாகத் தான் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ...///

வருக்கைக்கு நன்றி சஞ்சய்! நம்புவர்களுக்கு அது இறைவன்... :)

தமிழ் பிரியன் said...

///Nausadh said...

குரானில் கூறப்பட்ட "சுட பட்ட கல்" என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தால் போதும் , இதில் எவளவு பெரிய அறிவியல் உண்மை உள்ளது என்பதை மாற்று மத சகோதரர்கள் உணர்வார்கள்,மேலும் குரானில் உள்ள அறிவியல் சார்ந்த தொகுப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.///
இன்ஷா அல்லாஹ் அதற்கும் முயற்சி செய்யலாம்... :)

தமிழ் பிரியன் said...

/// Anonymous said...

மிகவும் நல்ல பதிப்பு இறைவண் மிகப்பெரியவண்///
நன்றி நண்பரே! பெயருடன் வரலாமே? இல்லையேல் கீழே பெயரையாவது குறிப்பிடலாம்.... :)

LinkWithin

Related Posts with Thumbnails