Friday, September 12, 2008

பாதியில் ஓடி வந்த சினிமாக்களும், கலவையான சிந்தனைகளும் - 12 - 09 - 2008

.
கலவை 1


ஐரோப்பாவின் ஒரு பகுதியில் அணு ஆராய்ச்சியாளர்கள் பலர் இணைந்து Large Hadron Collider (LHC) என்னும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ தூரத்தில் - 270 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இணைவது போல் வட்டமான பாதை அமைத்து குழாய்கள் மூலம் இரு வேறு திசைகளில் புரோட்டான் கதிர்களை செலுத்தி அவை இரண்டும் அடிமட்ட இடத்தில் சந்தித்து வெடித்துக் கொள்ள செய்யும் ஆய்வு இது. இயற்பியல் துறையில் மிகப் பெரிய ஆய்வாகக் கருதப்படும் இந்த ஆய்வின் மூலம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதாரங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பெருவெடிப்புக் கொள்கை என்பதை நாம் இருக்கும் பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியன் இவை போல் உள்ள அனைத்து பால் வெளி மண்டலங்களில் உள்ள சூரியன்களும், கோள்களும் ஒரு பெரிய மூலத்தில் வெடித்து பிரிந்தவை என்பதே...

அதாவது 'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

இந்த புரோட்டான்களின் மோதலால் விளையும் விளைவுகளைக் கொண்டு பெருவெடிப்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் எனக் கருதப்படுகின்றது... ஆனால் இதன் மூலம் உயிரிகளின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி நான் இதன் மூலம் உணர்ந்து கொள்வது இதுதான்...

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'
-குர்ஆன் 41:10,11

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? -குர்ஆன் 21:30

வானம் என நாம் சொல்லும் பரந்த வெளி உள்ளிட்டவைகள் பெரு வெடிப்பு மூலம் உருவானவை என்றே நம்பப்படுகின்றது... வானம், பூமி போன்ற கோள்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புகை மண்டலம் போன்றதில் இருந்து வெடித்தே உருவானவை என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

பால் வெளியில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் கூறுகின்றது.

இன்னும் விளக்கினால் வானம் என்பது ஒரு வெற்றிடம் அல்ல.. அது ஒரு காலியிடமும் அல்ல... திண்மமான பொருள் என்பது தான் பொருள் எனபது அல்ல. அண்டவெளியே ஒரு விதமான ஊடகம் தான்... :)... புரிகின்றதா?... ;)

நன்றி : சுவனப் பிரியன், விஞ்ஞானக் குருவி

கலவை 2

கடந்த வாரத்தின் ஒரு மதியத்தில் வேலை முடிந்து வந்து கணிணி முன் அமர்ந்து, தமிழ் மணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று அறையில் சாம்பிராணியின் சுகந்த மணம் வீசத் தொடங்கியது. அடுத்த அறையில் இருப்பவர் மாலை வேலைகளில் ஊதுபத்தி கொழுத்துவது வழக்கமாதலால் விட்டு விட்டேன். ஆனால் ரமழான் காலங்களில் பகல் பொழுதில் இது வாசனைகளை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள். இந்த எண்ணத்துடன் அமர்ந்திருக்க திடீரென்று கணிணி ’ஆப்’ ஆகி மீண்டும் ’ஆன்’ ஆகியது. சட்டென்று மனதின் உள்ளுக்குள் தூங்கிக் கொண்டு இருந்த மின்சாரப் பணியாளன் விழித்துக் கொள்ள CPU வின் வெப்பத்தை வெளியேற்றும் காற்றாடிய்யில் கை வைத்தால் அனலைக் கக்கியது. உடனடியாக மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டு பார்த்தால் அந்த சுகந்த வாசனை என் கணிணிக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது, அப்புறம் என்ன தண்டத்தை அழுது விட்டு, இப்போது கணிணியை குளிர்சாதனப் பெட்டிக்கு முன் வைத்துள்ளேன்..... இப்போது சமர்த்தாக இருக்கின்றது.

கலவை 3

நண்பர் தாமிரா பாதியில் எழுந்து வந்த சினிமா படங்களைக் குறித்து எழுத டேக் செய்திருந்தார். நான் 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்றதில்லை. அதற்கு முன் பாதியில் வெளியே வந்த திரைப்படங்களை யோசித்ததில் இந்த மூன்றும் சிக்கின.

நாடோடி மன்னன்
நணபன் ஒருவனின் வற்புறுத்தலுக்காக பழைய படம் பார்க்க வேண்டும் என்று சென்றது. பாடாவதியான பிரிண்ட்... பாதி படம் பார்ப்பதற்குள் நிறைய இடங்களில் பிலிம் அறுந்து போனது. வெட்டி ஒட்டி ஓட்டினார்கள். வெறுத்துப் போய்பாதியிலேயே ஓடி வந்து விட்டோம்.

Alexandra
ஒரு ஆங்கிலப்படம்

உதவிக்கு வரலாமா?
கார்த்திக் மற்றும் மூன்று கதாநாயகிகள் நடித்த படம். ரசிகா(சங்கீதா) மற்றும் காமெடிக்காக போய் மண்டை காய்ந்து போய் பாதியிலேயே ஓடி வந்து விட்டேன்...:)

கலவை 4

தமிழ் மணத்தில் வரும் பதிவுகள் இப்போதெல்லாம் பல தரங்களில் கிடைக்கின்றன. சில வகைப் பதிவுகள் போரடிப்பதாக இருந்தாலும், பல பதிவுகள் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. நிறைய பதிவர்களிடம் நல்ல தேர்ச்சி தெரிவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது சில பதிவுகள் மனநிறைவாக இருப்பதில்லை. நல்ல ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் எழுதப்பட்ட பதிவுகளில் நம் மக்கள் சென்று கும்மி விடுகின்றனர். பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் சென்று விடுகின்றது. அதே போல் அதே பதிவர் மொக்கையாக எழுதப்படும் பதிவுகளை விட்டு விடுகின்றனர். நாம் பின்னூட்டக் கும்மியடிப்பதற்கு முன் அந்த பதிவு அதற்கு தோதுவானதா என யோசித்துக் கொள்ளுங்கள். நல்ல பதிவு என்று ஒரிரு கமெண்டுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது மறுநாள் வந்து கும்முங்கள். இது என்னுடைய வேண்டுகோள். நானும் ஒரு கும்மி விரும்பி என்பதை அழுத்தம் திருத்தமாக ’தல’ நிஜமா நல்லவனின் இரத்தத்தில் சொல்லிக் கொள்கிறேன்.கலவை 5

சமீபத்திய ஒரு பதிவில் உங்களது வம்சத்தில் தொடர்ச்சி எதுவரை தெரியும் என ஒரு சர்வே வைத்திருந்தோம்...அதில் வந்த முடிவுகள்..

தாத்தா வரை தெரியும் என 27 சத ஓட்டுக்களும், தாத்தாவின் அப்பா வரை தெரியும் என 36 சத ஓட்டுக்களும், தாத்தாவின் தாத்தா வரை தெரியும் என 18 சத ஓட்டுக்களும், அதற்கு மேல் தெரியும் என 11 மற்றும் 10 சத ஓட்டுக்களும் கிடைத்துள்ளன... மேலும் விபரங்களுக்கு

22 comments:

விஜய் ஆனந்த் said...

கலவை செம்ம கலவையா இருக்கு!!!

big bang-லயிருந்து alexandra வரை!!!!

(அந்த கும்மி மேட்டர நானும் ஃபால்லோ பண்றேன். அறிவுறுத்தியதற்கு நன்றி.)

கோவி.கண்ணன் said...

//சமீபத்திய ஒரு பதிவில் உங்களது வம்சத்தில் தொடர்ச்சி எதுவரை தெரியும் என ஒரு சர்வே வைத்திருந்தோம்...அதில் வந்த முடிவுகள்..//

:) சென்ற ஆண்டு எதோ ஒரு பதிவில், ஒரு பார்பன பதிவர், பார்பனர்களாகிய தங்களுக்கு 7 தலைமுறை தாத்தாக்களின் பெயர்களைத் தெரியும், மந்திரம் சொல்லும் போது சொல்லுவோம் எவ்வளவு பெருமைக் குரிய ஒன்று தெரியுமா ?, உங்களுக்கெல்லாம் தாத்தா பெயராவது தெரியுமா ? என்று ஏளனம் செய்தார்கள்.

நமக்கு பிறப்பு கொடுத்தவர்களின் பெயர் தெரிந்தாலே போதும், தனக்கென தனிப்புகழோ, பெருமையோ தேடிக் கொள்ளாதவர்கள் தான் குலப்பெருமையில் குளிர்காய நினைப்பார்கள்.

தாத்தா பெயர் தெரியாவிட்டால் பாதகம் இல்லை. தந்தை பெயரைக் காப்பாற்ற வேண்டும் அதுதான் முதன்மையானது.

இது போன்ற மாற்று கருத்து இருந்ததால் தான் உங்கள் பதிவில் பின்னூட்டம் இடவில்லை.

ஆயில்யன் said...

கலவை - 1

மேட்டரூ சரியா புரியாம நானும் கூட கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் அந்தா மக்க்ள்ஸ் நடந்துன சோதனைகள் பத்தி அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தேன்!(கடைசியா ஒ.கே ஆகி எல்லாம் கை கொடுத்துக்கொண்ட பிறகுதான் லைட்டா திருப்தியானுச்சு!- எங்க கொண்டுபோய் வைச்சிருக்கானுங்க பாமை!?)

நன்னி!

ஆயில்யன் said...

//’தல’ நிஜமா நல்லவனின் இரத்தத்தில் சொல்லிக் கொள்கிறேன்//

அதுவே ஒரு பூஞ்சையான ஒடம்பு!
அதுல இம்புட்டு ரத்தம் எடுத்திபூட்டீங்களா????????

முரளிகண்ணன் said...

சுவையான கலவை

வெண்பூ said...

நல்ல கலவை தமிழ். கும்மி பத்தி சொன்னது சரிதான்.. யோசிக்கணும்... வாங்கப்பா இங்க வந்து எல்லாரும் கும்முங்க சாரி யோசிங்க :)))

தமிழ் பிரியன் said...

///விஜய் ஆனந்த் said...
கலவை செம்ம கலவையா இருக்கு!!!
big bang-லயிருந்து alexandra வரை!!!!
(அந்த கும்மி மேட்டர நானும் ஃபால்லோ பண்றேன். அறிவுறுத்தியதற்கு நன்றி.)///
நன்றி விஜய் அண்ணே!... ;)

தமிழ் பிரியன் said...

///கோவி.கண்ணன் said...

இது போன்ற மாற்று கருத்து இருந்ததால் தான் உங்கள் பதிவில் பின்னூட்டம் இடவில்லை.///

மாற்றுக் கருத்துக்களை நிச்சயமான வரவேற்கின்றேன்... அந்த பதிவும் கூட ஒரு சாதாரண தகவல் பதிவாகத் தான் இட்டேன்... தெரிந்து வைத்தே இருக்க வேண்டியது இல்லை தான்... வருக்கைக்கு மிக்க நன்றி கே.கே. அண்ணா!

தமிழ் பிரியன் said...

/// ஆயில்யன் said...

கலவை - 1

மேட்டரூ சரியா புரியாம நானும் கூட கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் அந்தா மக்க்ள்ஸ் நடந்துன சோதனைகள் பத்தி அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தேன்!(கடைசியா ஒ.கே ஆகி எல்லாம் கை கொடுத்துக்கொண்ட பிறகுதான் லைட்டா திருப்தியானுச்சு!- எங்க கொண்டுபோய் வைச்சிருக்கானுங்க பாமை!?)

நன்னி!///

அதுக்குள்ளயேவா? அந்த குழாய்களுக்குள் புரோட்டான்களை செலுத்தி விட்ட்டார்கள். ஆனால் அவை இன்னும் மோதலுக்கு உள்படுத்தப்படவில்லை... எப்போது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மோதலின் போது எதுவும் பெரிதாக நடக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்... :)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//’தல’ நிஜமா நல்லவனின் இரத்தத்தில் சொல்லிக் கொள்கிறேன்//

அதுவே ஒரு பூஞ்சையான ஒடம்பு!
அதுல இம்புட்டு ரத்தம் எடுத்திபூட்டீங்களா????????///
நி.ந.க.சங்கத்து ஆட்கள் இப்படியெல்லாம் சொல்லலாமா? உங்களுக்கு இப்படி கொடுக்கலைன்னா உடனே வாங்கிக்கங்க.. :)

தமிழ் பிரியன் said...

///முரளிகண்ணன் said...

சுவையான கலவை///
நன்றி முரளி அண்ணே!

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...

நல்ல கலவை தமிழ். கும்மி பத்தி சொன்னது சரிதான்.. யோசிக்கணும்... வாங்கப்பா இங்க வந்து எல்லாரும் கும்முங்க சாரி யோசிங்க :)))///

நன்றி வெண்பூ! நல்லவேளை யாரும் நம்ம பதிவில் கும்முவதில்லை... ;))////

RATHNESH said...

கலவை 1-ல் அறிவியல் தகவல் அழகாகச் சொல்லப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள்.

மற்ற கலவைகளிலும் தமிழ் நடை அற்புதம்.

வால்பையன் said...

கலவை 1

அது உங்கள் நம்பிக்கை, ஆகையால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

வால்பையன் said...

கலவை 2

கணினிக்கு அதிக வெப்பம் ஆகாது.
பிராசசர் ஃபேன் நின்றுவிட்டால் கூட படுத்துக்கும்.
எதுக்கும் ஃப்ரிஜ்சுகுள்ள கொஞ்ச நாள் வச்சுருங்க

வால்பையன் said...

கலவை

நாடோடிமன்னன் என்ற பெயரில் சரத்குமார் நடித்த படமும் வந்துருக்கு நீங்க எதை சொல்றிங்க
.
அலக்ஸாந்த்ரா படம் நான் நாலு வாட்டி தான் பார்த்தேன்

வால்பையன் said...

கலவை 4

இது மாதிரி பின்னூட்டம் இடுவது கருத்துகளை தனித்தனியே சொல்வதற்கு வசதியாக இருப்பதால், எனக்கு மட்டும் இந்த மாதிரியே பின்னூட்டம் இட அனுமதி அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

வால்பையன் said...

கலவை 5

கூட்டு குடும்ப முறை ஆங்காங்கே உயிருடன் உள்ளது என்பதை உங்கள் சர்வே நிரூபித்தி விட்டது

தாமிரா said...

விஷயங்களை அழகாக தெளிவாக எழுதுகிறீர்கள், சினிமா விவகாரத்தில் நீங்களும் பங்குபெற்றதுக்கு நன்றி. இரண்டு வேறு காரணங்கள் எனினும் 'உதவிக்கு வரலாமா' எனும் படம் தேறியது. வேறெந்த பதிவிலோ போய் உங்களுக்கு இன்விடெஷன் வைத்தேன். சிவா கல்யாண‌ப்பதிவில் நீங்கள் பின்னூட்டவில்லை (அதெப்பிடி விட முடியும்?).

வடகரை வேலன் said...

//தமிழ் மணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று அறையில் சாம்பிராணியின் சுகந்த மணம்//

குட் காம்பினேசன்.

வடகரை வேலன் said...

//நல்ல குடும்ப படம்.//

:-)))))))))))

இந்த மாதிரிப் படம் போடும் தியேட்டர் ஆப்பரேட்டருக்கும் ரெகுலர் கஸ்டமருக்கும் ஒரு சிக்னல் உண்டு.

சிக்னனல் போட்டா கடைசிவரை இருந்து பார்ப்பார்கள். இல்லன்ன சத்தம் போடாம போய்ட்டே இருப்பாங்க.

வடகரை வேலன் said...

//பின்னூட்டங்களைப் பார்க்கும் போது சில பதிவுகள் மனநிறைவாக இருப்பதில்லை. நல்ல ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் எழுதப்பட்ட பதிவுகளில் நம் மக்கள் சென்று கும்மி விடுகின்றனர். பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் சென்று விடுகின்றது.//

எனக்கு இந்த வருத்தம் அதிகம் தமிழ். அதிலும் கொடுமை என்னவென்றால், பதிவைப் படிக்காமலே கும்முவதுதான்.

LinkWithin

Related Posts with Thumbnails