Monday, September 29, 2008

ஈத் - அடுத்த வீட்டுக்காரர் சாப்பிட்டாரா என்று முதலில் கவனியுங்கள்!


சிறப்புமிக்க ரமழான் மாதம் நிறைவடையப் போகின்றது. பகல் முழுவதும் உணவு, நீர் என எந்த உணவும் இல்லாமல் பசித்து நோன்பு இருந்து, இரவு நேரங்களில் இறைவனைத் தொழுது இறைஞ்சும் மகத்துவமிக்க மாதம் முடிந்த மறுநாள் தான் ஈத் பெருநாள்.

ரம்ஜான் பண்டிகை என்றும், ஈகைத் திருநாள் என்றும், மக்களால் அழைக்கப்படும் இந்த நாள் தான் முஸ்லிம்களின் முக்கியத் திருநாட்களில் ஒன்று. (மொத்தமே வருடத்திற்கு இரண்டு பெருநாள் தான்.. ஒன்று ஈகைத்திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை)

அதென்ன ஈகைத் திருநாள்? ரமழான் மாதம் முழுவதும் அதிகமான தான தர்மங்களை செய்ய இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. ஏனெனில் ரமழானில் செய்யப்படும் நன்மைகளுக்கு அதிகமாக கூலி கிடைக்கும். இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் தான் ஈகைத் திருநாள். இந்த நாளில் தரக்கூடிய தர்மம் தான் பெருநாள் தர்மம் எனப்படும் ஃபித்ரா.

ஃபித்ரா என்பது நாம் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் நம்மை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது. பெருநாள் அன்று யாரும் உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு முஸ்லிமும் (பிறந்த குழந்தை உள்பட) சுமார் 21/2 கிலோ தானியம் ஏழைகளுக்கு தர்மம செய்வது கட்டாயமான ஒன்று.

ஆனால் வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் போடுவது தான் தர்மம் என தவறாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் மசூதிகளில் இமாம்களுக்கு ஃபித்ரா பணத்தை சென்று தருகின்றனர். ஃபித்ரா ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் இதுவல்ல.

உங்கள் வீட்டிற்கு அருகில், தெருவில், பக்கத்து தெருவில் அல்லது ஊரில் உள்ள நோன்பை கொண்டாட இயல வசதி இல்லாதவர்களுக்கு தருவதுதான் ஃபித்ரா. உண்மையான ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஃபித்ரா கொடுத்து இனிமையாக ரமழானைக் கொண்டாடுவோமாக! இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டுமாக!

உதிரித் தகவல்:
இஸ்லாமிய சட்டங்களின் படி ஐந்து முக்கிய கடமைகளில் முக்கியமானது ஜகாத் எனப்படும் கட்டாய தர்மம். ஒவ்வொரு வருடமும் தம்மிடம் உள்ள பணம், நகை, சொத்துக்களைக் கணக்கிட்டு (குடி இருக்கும் வீட்டைத் தவிர்த்து) அதன் மொத்த மதிப்பு 89 கிராம் தங்கத்துக்கான மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதில் 2 1/2 சதவீதம் ஜகாத்தாக தர வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கு ஒரு வருடம் முடியும் போது 5000 ரூபாய் கட்டாயமாக தர்மம் செய்ய வேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனைகளை பெற வேண்டி வரும்.

ஒவ்வொருவரும் இது போல் கணக்கிட்டு கொடுத்து வந்தால் சமூகத்தில் இருக்கும் ஏழ்மை மிக விரைவில் விலகி விடும். இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

21 comments:

வெண்பூ said...

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

//அதன் மொத்த மதிப்பு 89 கிராம் தங்கத்துக்கான மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதில் 2 1/2 சதவீதம் ஜகாத்தாக தர வேண்டும்.//

இது நல்லாயிருக்கே.. ஆரம்ப கால டாக்ஸ் சிஸ்டம். :) இருப்பவரிடம் இருந்து எடுத்து இல்லாதவர்க்கு கொடுப்பது.

சந்தனமுல்லை said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

நல்ல பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள உதவியாயிருந்தது உங்கள் பதிவு!!

ஜெகதீசன் said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

நாமக்கல் சிபி said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாளால் எண்ணிய யாவும் நிறைவேறும்!

நாட்டில் ஏழ்மை நீங்கும்! நிறைவுடன அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்!

இன்ஷா அல்லாஹ்!

நாமக்கல் சிபி said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எண்ணிய யாவும் நிறைவேறும்! நாட்டில் ஏழ்மை நீங்கும்!

நிறைவுடன அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்!

இன்ஷா அல்லாஹ்!

ஆயில்யன் said...

இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்...!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்..

ராமலக்ஷ்மி said...

இந்த உன்னதமான திருநாளைப் பற்றிய விவரங்களை இந்நாளில் இதை அப்படியே கடைப்பிடிக்கும் எனது நெருங்கிய தோழி மூலம் அறிந்திருக்கிறேன் தமிழ் பிரியன். உங்களுக்கும் அவருக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களை இங்கே கூறிக் கொள்கிறேன்.

துளசி கோபால் said...

அட! இந்த 89 கிராம் கேள்விப்படலையே இதுவரை.

தகவலுக்கு நன்றி.

விழாக்கால வாழ்த்து(க்)கள்.

ஏழ்மை இல்லாத உலகத்தை அடையணும்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

ஒரு இசுலாமியத் தோழர் கூறியது

பசி தாகம் இவற்றிற்கு அடிமையாய் விடாமல் அவற்றையும் வெல்ல வேண்டும் என்பதன் பயிற்சியே நோன்பு இருப்பது - காலை 5 மணி முதல் மாலை 06:30 வரை எச்சில் கூட முழுங்காமல் நோன்பு நோற்கும் நற் பழக்கம் இசுலாமியத் தோழர்களிடம் மட்டுமே இருக்கிறது

நல்வாழ்த்துகள்

இன்ஷா அல்லாஹ்

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
//அதன் மொத்த மதிப்பு 89 கிராம் தங்கத்துக்கான மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதில் 2 1/2 சதவீதம் ஜகாத்தாக தர வேண்டும்.//

இது நல்லாயிருக்கே.. ஆரம்ப கால டாக்ஸ் சிஸ்டம். :) இருப்பவரிடம் இருந்து எடுத்து இல்லாதவர்க்கு கொடுப்பது.///
நன்றி!
ஆமாம் வெண்பூ! இந்த முறை இஸ்லாமிய ஆட்சியில் கட்டாயம் அமல் படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இன்று உலகில் ஒரு நாட்டில் கூட இஸ்லாமிய ஆட்சி இல்லாததால் செயல் இழந்து நிற்கின்றது.

தமிழ் பிரியன் said...

///சந்தனமுல்லை said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

நல்ல பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள உதவியாயிருந்தது உங்கள் பதிவு!!////
நன்றி சந்தனமுல்லை!

தமிழ் பிரியன் said...

///ஜெகதீசன் said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!///
நன்றி ஜெகா!

தமிழ் பிரியன் said...

///நாமக்கல் சிபி said...
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாளால் எண்ணிய யாவும் நிறைவேறும்!
நாட்டில் ஏழ்மை நீங்கும்! நிறைவுடன அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்!
இன்ஷா அல்லாஹ்!///

நன்றி தள! உங்களது பிரார்த்தனைகள் நிறைவேறும்.. ஆமீன்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்...!///
நன்றி ஆயில்யன்!

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்..////
நன்றி அக்கா!

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

இந்த உன்னதமான திருநாளைப் பற்றிய விவரங்களை இந்நாளில் இதை அப்படியே கடைப்பிடிக்கும் எனது நெருங்கிய தோழி மூலம் அறிந்திருக்கிறேன் தமிழ் பிரியன். உங்களுக்கும் அவருக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களை இங்கே கூறிக் கொள்கிறேன்.///

நன்றி அக்கா! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

///துளசி கோபால் said...
அட! இந்த 89 கிராம் கேள்விப்படலையே இதுவரை.
தகவலுக்கு நன்றி.
விழாக்கால வாழ்த்து(க்)கள்.
ஏழ்மை இல்லாத உலகத்தை அடையணும்.///

ஆமாம் டீச்சர், இது கொடுக்க வேண்டியது கட்டாயம்... ஆனால் கொடுக்காததால் தான் பலரிடமே செல்வம் சேர்ந்து விடுகின்றது.. :(

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

ஒரு இசுலாமியத் தோழர் கூறியது

பசி தாகம் இவற்றிற்கு அடிமையாய் விடாமல் அவற்றையும் வெல்ல வேண்டும் என்பதன் பயிற்சியே நோன்பு இருப்பது - காலை 5 மணி முதல் மாலை 06:30 வரை எச்சில் கூட முழுங்காமல் நோன்பு நோற்கும் நற் பழக்கம் இசுலாமியத் தோழர்களிடம் மட்டுமே இருக்கிறது

நல்வாழ்த்துகள்

இன்ஷா அல்லாஹ்///

மிக்க நன்றி சீனா சார்!

தமிழன்... said...

தல இந்தப்பதிவுல வாழ்த்து சொல்லலைன்னு கோச்சுக்கப்படாது...

தமிழன்... said...

பெருநாள் வாழ்த்துக்கள் ...

எல்லோரும் இன்பமாய் வாழ வாழ்த்திக்கறேன்....

LinkWithin

Related Posts with Thumbnails