Monday, September 8, 2008
அழைப்பு : சவுதி ஜெத்தாவில் முதல் பதிவர்கள் சந்திப்பு
அன்பிற்கினிய வலையுலக நண்பர்களே!
உலகில் பல கோடியில் இருக்கும் தமிழ் பதிவர்களும் அவ்வப்போது சந்தித்து கொண்டு தங்களுக்குள் கருத்து(?) பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அவைகள் பதிவர் சந்திப்புகளாக மிளிர்கின்றன.
அதன் தொடர்ச்சியாக நாங்கள் இருக்கும் சவுதி அரேபியாவில் பதிவர்கள் சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளோம். நாங்கள் என்பது தமிழ் பிரியனாகிய நானும், காதல் இளவரசனும், பெண்மையிடம் தோற்றுப் போய் இங்கு தஞ்சம் புகுந்துள்ள கவிஞர் தமிழன்... ஆகிய இருவர் மட்டுமே.... ;)
ரமழான் நோன்புகள் வரும் செப்டம்பர் 29 அல்லது 30 தேதியில் முடியும். அதனைத் தொடர்ந்து வரும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளில் இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளோம். (அக்டோபர் 1 வியாழன்).
ஜித்தாவில் இருந்து ஒரு திசையில் 200 கி.மீ தொலைவில் இருக்கும் நானும், மற்றொரு திசையில் 150 கி.மீ தொலைவில் இருக்கும் தமிழனும்... பொதுவாக ஜித்தா மாநகரில் சந்திக்க தீர்மானித்துள்ளோம். இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... dginnah@gmail.com
பங்கு கொள்ள மேலும் பதிவர்கள் விரும்பும்பட்சத்தில் அனைவரின் வசதியைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் இடத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்....
எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு தான்... ;)
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
//தங்களுக்குள் கருத்து(?) பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.//
அங்கே என்ன கேள்விக்குறி
அப்போ நாங்க பரிமாறிக்கிறது கருத்துகள் இல்லையா
நான் தான் ஆரம்பமா
//சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... //
டிக்கெட் அனுப்பி வைக்கிறமாதிரி இருந்தா, ஒரு கூட்டமே வரத்தயார்
//எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு//
இது நீங்க சொல்லித் தான் தெரியனுமா
கழுத கெட்டா குட்டி சுவரு தானே
பதிவர்(கள்?) சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
//எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு//
வேற என்ன உலக சமாதானத்துக்கா பாடுபடப் போறிங்க?
//எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு தான்..//
இத சொல்லைலனா எங்களுக்கு தெரியாதா? ;))
நான் ஜித்தா வருகிறேன்
தமிழனும் தமிழ்ப் பிரியனும் சந்திக்கும் சவூதி அரேபியாவின் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டு, மதுரையில் இருந்து புறப்படும் பர்வீன் சுல்தானா டிராவல்ஸில் ஒரு டிக்கெட் முன் பதிவு செய்துவிட்டேன்.
வந்துடுவோம்ல
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சவூதியில் ஜித்தாவுக்கு அருகில் இருப்பதாக சொல்கிறீர்கள் உங்கள் Profile நீங்கள் துபாயில் இருப்பதாக சொல்கிறதே இப்பல்லாம் நாங்க ரொம்ப விபரமாயிட்டோம்ல
நான் ரியாதில் இருக்கேன். வலைப்பதிவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் மாநாட்டில் கலந்து கொளள் எனக்கும் ஆசைதான் ஆனால் ரொம்ப தூரமாச்சே அடுத்த சந்திப்பையாவது ரியாதில் வைத்துக் கொள்ளுங்களேன்.
/// இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... dginnah@gmail.com//
நானும் மிக ஆர்வமாயிருக்கிறேன் வந்து கலந்து கொள்ள!
தாங்கள் தயை கூர்ந்து வாகனம் மட்டும் அனுப்பி வைக்கவும் !
பின்னூட்டக் கய்மைத்தனம்... :)
இருவரும் அவரவர் இடத்திலிருந்து கிளம்பி நடுவில் சந்திப்பதாக பிளான். ஆகா இதுவல்லவா சரியான சந்திப்பு.!
நான் ஜெத்தாவில்தான் இருக்கிறேன். வ்ருகிறேன்.ஜமாலனும் ஜெத்தாவில்தான் இருக்கிறார்.
அண்ணே நான் போனமாசம் மெக்கா வந்தேனே! அப்ப ஏற்பாடு பண்ணி இருக்கக் கூடாதா? :(
ஜித்தா பதிவர் சந்திப்பை மறக்காம பதிவில் போடுங்க நேரில் வரமுடியாதவங்க படித்து மகிழ்வார்கள்
ஆஹா அண்ணே !!!!
என்னையெல்லாம் பதிவரா அங்கீகரிச்சதே பெரிய விசயம் இதுல கவிஞர் வேறயா...:)
பாவம்ணே நம்ம மக்கள்..:)
வால்பையன் said...
//சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... //
டிக்கெட் அனுப்பி வைக்கிறமாதிரி இருந்தா, ஒரு கூட்டமே வரத்தயார்
\\
ஆர்வமாத்தான்யா இருக்காய்ங்க...:)
SanJai said...
\
//எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு தான்..//
இத சொல்லைலனா எங்களுக்கு தெரியாதா? ;))
\
:)))
cheena (சீனா) said...
\\
நான் ஜித்தா வருகிறேன்
தமிழனும் தமிழ்ப் பிரியனும் சந்திக்கும் சவூதி அரேபியாவின் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டு, மதுரையில் இருந்து புறப்படும் பர்வீன் சுல்தானா டிராவல்ஸில் ஒரு டிக்கெட் முன் பதிவு செய்துவிட்டேன்.
வந்துடுவோம்ல
\\
வாங்க...வாங்க..! :)
ஆயில்யன் said...
\\
/// இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... dginnah@gmail.com//
நானும் மிக ஆர்வமாயிருக்கிறேன் வந்து கலந்து கொள்ள!
தாங்கள் தயை கூர்ந்து வாகனம் மட்டும் அனுப்பி வைக்கவும் !
\\
எனக்கும் உங்களை பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசைதான் மாம்ஸ்...
ஒரு பலசரக்கு கெண்டெய்னர் வருதாம் வந்து சேந்துடுவிங்கல்ல..:)
gulf-tamilan said...
\\
நான் ஜெத்தாவில்தான் இருக்கிறேன். வ்ருகிறேன்.ஜமாலனும் ஜெத்தாவில்தான் இருக்கிறார்.
\\
ஆகா ஆகா ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு...
அண்ணே நான் ரொம்ப சின்னப்பையன் அப்புறம் சந்திப்புல என்னைய பயமுறுத்தக்கூடாது :)
\
காதல் இளவரசனும், பெண்மையிடம் தோற்றுப் போய் இங்கு தஞ்சம் புகுந்துள்ள
\
இது ரொம்ப முக்கியம்...:)
\
கவிஞர் தமிழன்... ஆகிய இருவர் மட்டுமே.... ;)
\
பின்னூட்டப்பதிவர்-தமிழன்...
ஜனரஞ்சகப்பதிவர்- தமிழ்பிரியன்
ஆகிய இருவர் மட்டுமே...
//முதல் பதிவர்கள் சந்திப்பு//
என்றால் முதன் முதலில் பதிவு எழுதியவர்கள் சந்தித்துக் கொள்கிறார்களா? முதன் முதலில் ஒருவர் மட்டும்தானே பதிவு எழுதி இருக்க முடியும். அப்படியிருக்கு "முதல் பதிவர்கள்" என்று எப்படி குறிப்பிட்டுள்ளீர்கள்?
பின்னூட்டக் கய்மைத்தனம் !!!
:)))
பெருநாள் விடுமுறையெல்லாம் முடிஞ்சாச்சே ஜித்தா வலைப்பதிவா மாநாட்டைப் பற்றி ஒரு சய்தியயையும் காணோமே, வலைப்பதிவர்கள் கருத்துப் பரிமாற்றம் ரகசியமா என்ன?
///masdooka said...
பெருநாள் விடுமுறையெல்லாம் முடிஞ்சாச்சே ஜித்தா வலைப்பதிவா மாநாட்டைப் பற்றி ஒரு சய்தியயையும் காணோமே, வலைப்பதிவர்கள் கருத்துப் பரிமாற்றம் ரகசியமா என்ன?////
பதிவர்கள் சந்திப்பு மிகச் சிறப்பாக முடிந்தது.... :) இப்போது தான் ஜித்தாவில் இருந்து தாஃயிப் திரும்பினேன். (மணி இரவு 12.00)
கலந்து கொண்டவர்கள்
1. ஜமாலன்
2. கல்ஃப் தமிழன்
3. தமிழன்...
4. தமிழ் பிரியன்
5. ஒரு பெயர் வெளியிட விரும்பாத இலங்கைப் பதிவர்
நண்பர் தமிழ் பிரியன் அவர்களே! நீங்கள் தமிழில் ட்விட் செய்பவர் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்? உங்களுக்கேன்றே முற்றம்.காம்(mutram.com) என்ற பெயரில் முழுக்க தமிழில் ட்விட் செய்யக்கூடிய தளம் இயங்கிவருகிறது. எங்களைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் !. அன்புடன் மு.சக்தி
Post a Comment