Friday, September 19, 2008

அமெரிக்க அதிபர் தேர்தலும், கலவையான சிந்தனைகளும்... 19-09-2008

. .
கலவை 1

அமெரிக்க அதிபர் தேர்தல் கடைசி கட்டத்தில் இருக்கின்றது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில் மெக்கெய்னும் களத்தில் உள்ளனர். உலகில் அடுத்து நான்கு ஆண்டுகள் நிகழப் போவதை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இதைக் கருதுகிறேன். பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவை அவ்வளவு சுலபமாக மீட்க முடியுமா எனத் தெரியவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் வரிகளைக் கூட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய பொது புத்திகள் ஒபாமாவையே ஆதரிக்கின்றன. ஆனால் எனக்கு மெக்கெய்ன் தான் (புஷ் கட்சி என்றால் புரியும்) ஆட்சிக்கு வர வேண்டும்.. ஏன்?.. பதிவை எழுதி டிராப்ட்டில் போட்டு வச்சாச்சு.. தேர்தலுக்கு முன் அதை வெளியிடுவோம்ல.. ;)

ஆனால் நான் மிகவும் பயத்துடன் எதிர்நோக்கி இருக்கும் விடயம்... இத் தேர்தலில் உச்ச கட்டமாக நிகழ விருக்கும் ஏதோ ஒரு சம்பவம்... சாராப் பெலினின் திடீர் பிரமோசன், மனச்சிதைவுள்ள குழந்தை, 17 வயது கர்ப்பிணிப் பெண், அவளது வருங்கால கணவன்(?) போன்றவை எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து.

ஒபாமாவை அனைவரும் ஆதரித்தாலும். இஸ்ரேல் போன்ற அடிமட்ட வேலைகளில் உலகில் முண்ணனியில் இருக்கும் நாட்டின் அமைப்புகள் மெக்கெய்னையே விரும்பும். ஏனெனில் ஒபாமா அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாக வாக்களித்துள்ளார்.... அதை இஸ்ரேல் விரும்பாது

எனவே தேர்தலில் கடைசி கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்த, மக்களின் கவனத்தை திசை திருப்ப, எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாமல், ஏதாவது அதிக பட்சமான உள்ளடி வேலையில் ஈடுபடும்... பின்லேடனின் விடியோவாக மட்டும் இந்த தடவை இருக்காது.. அதற்கும் மேல் ஏதோ.. பயப்படுகிறேன்..அதற்கு அமெரிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.... கவனச்சிதைவு இல்லாமல் இருந்தால் அமெரிக்கா தப்பி விடும்.

இங்குள்ள அரப் நியூஸில் வந்த கார்ட்டூன் உங்கள் பார்வைக்கு... கிளிக்கி பெரிதாகப் பார்க்கவும்



கலவை 2
எங்களது நிறுவனத்தில் ஐடி பிரிவின் சார்பில் புதிதாக கணக்கீடுகள் செய்யப்படும் படிவங்கள் (Log Sheets) தரப்பட்டுள்ளன. சில வருடங்களுக்குப் பின் அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.

அவைகளை உள்ளீடு செய்வதற்கு இவைகளைப் பயன்படுத்த வேண்டும்.. பெரிய நெட்வொர்க்கில் இயங்கும் எங்களது நிறுவனத்தின் கணிணி பிரிவில் இருந்து வந்திருக்கும் அந்த படிவங்களைப் பார்க்கும் போது அழாத குறை தான். எக்ஸலில் தயாரிக்கப்பட்ட அந்த படிவங்களின் கட்டங்களில் Alignment மிகவும் மோசமாக இருக்கிறது. மூன்று எழுத்துக்கள் எழுத வேண்டிய இடங்களுக்கு ஒரு எழுத்துக்கான இடம் மட்டுமே விடப்பட்டுள்ளது. ஆறு எழுத்துக்களுக்கு மூன்று எழுத்துக்களுக்கான கட்டம் விடப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் நான்கு எழுத்துக்கான இடத்திற்கு 14 எழுத்துக்கான இடம் உள்ளது.

மேலே உள்ள கட்டத்திற்கான வார்த்தை மடங்கி கீழே உள்ள கட்டத்திற்குள் பாதி சென்று விட்டது. மொத்தத்தில் கடித்து குதறி வைத்துள்ளார்கள். இதை எங்கள் ஐடி டேமேஜர் வேறு அப்ரூவ் செய்துள்ளார். என்னாலேயே இதை அழகாக உருவாக்கி இருக்க முடியும். எங்கள் பகுதி மேனேஜரிடம் இது பற்றி புகார் செய்த போது “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? அவர்கள் எப்படி அனுப்புகின்றார்களோ அப்படியே அதில் எழுது” என்று சொல்லி விட்டார்... என்ன கொடும இது

கலவை 3
எனது சகோதரி மகன் அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றான். அவனுக்கு புதிதாக லிப்கோ ஆங்கிலம்- தமிழ் அகராதி வாங்கிக் கொடுத்தேன். அவனால் அதில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கின்றது. எனவே வாரம் இங்கிருந்து அவனுக்கு அவனது பாடத்தில் இருந்து 10 வார்த்தைகளை தேந்தெடுத்து அனுப்பி விடுவேன். (பாடப்புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன)

ஞாயிற்றுக் கிழமை மாலையில் அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பை போன் செய்து கேட்டுக் கொள்வேன்.. இப்போது மிக விரைவாக அகராதி பார்க்க கற்றுக் கொண்டு விட்டான். ஆனால் அவனது பாடத்தில் இருந்து, தரும் வார்த்தைகளையே அவனால் உச்சரிக்கை இயல்வதில்லை. (தமிழ் மீடியம்)... ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவனால் ஆங்கிலத்தை வாசிக்க இயலவில்லை எனும் போது வருத்தமாக இருக்கிறது நமது கல்வி முறையை நினைக்கையில்... இதே நிலையில் தான் நானும் இருந்திருப்பேன் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது... ;)

கலவை 4
எனது பெயரில் எங்களது ஊரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி சேவை உள்ளது. (NRE Account - Canara Bank) கடந்த பத்து ஆண்டுகளாக இந்த சேவையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை எனது வங்கிக்கணக்கு பற்றிய எந்த விவரங்களையும் எனக்கு அவர்கள் அனுப்பியது இல்லை.

எனது முகவரி மாற்றம் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் அவர்களின் கோப்பில் ஏற்றவில்லை. இது சம்பந்தமாக அந்த வங்கியின் முகவரிக்கு எழுதிய கடிதங்கள், மின்னஞ்சல்கள் விழலுக்கு இறைத்த நீராகவே போய் விட்டன. ஊருக்கு செல்லும் போது பாஸ்புக்கைக் கொடுத்து மட்டுமே எனது கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த கிளையில் இன்டர்நெட் பேங்கிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனது கேள்வி... NRE வங்கிக் கணக்குக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்ற முறை உள்ளதா? எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்? யாராவது ஐடியானந்தாக்கள் உதவுங்கள்... :)

கலவை 5
சமீபத்தில் பதிவர் அதிஷாவின் சகோதரி மகள்களுக்கு கோவை மருதமலையில் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. தாய் மாமா மடியில் அமர வைத்து காது குத்துவது மரபு... அதே போல் தாய் மாமாவுக்கு துணை மொட்டை அடிப்பதும் வழக்கம்... ஆனால் அதிஷா மொட்டைக்கு டிமிக்கு கொடுத்து விட்டு, மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறான்.

எனவே அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா தமிழ் பிரியன் நேற்றுமெக்காவில் போட்ட மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... சந்தனம் தான் கிடைக்கலை... டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

47 comments:

ஆயில்யன் said...

//எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.
//

ஆஹா ஆப்பு வைச்சுப்புட்டாங்களா???

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

//மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... //

அது எப்பிடி???

ஆயில்யன் said...

// டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))/


ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்விதான்!

ஆண்டவன் அருள் புரியணும்! :))))))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மெக்காவிலும் மொட்டை உண்டா..?

அது எப்படின்னு கேட்டிருக்காரு ஆயில்யன் கவனமா இருங்க.. எதயாச்சும் தூக்கிப்போட்டு செக் செய்துடப்போறாரு..:)

VIKNESHWARAN ADAKKALAM said...

//எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்?//

1) பேங் டேமேஜெரை சந்தித்து, நாக்கை பிடிங்கிக் கொள்ளும் அளவுக்கு நாலு நாட்களுக்கு சாப்பிட முடியாதபடி கேள்வி கேட்களாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

இப்படி இதமாக இல்லாமல் காரசாரமாக பதிவு எழுதி பேங் பெயரை கெடுக்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

எதிலும் திருப்தி இல்லைய்யென்றால் பேங்கை எரித்துவிடலாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

மொட்டை சூப்பரா இருக்கு... எல்லோரிடமும் சிவாஜி ஸ்டைலில் தலைய தட்டி காமிக்கிறிங்கலாமே???

Athisha said...

தமிழ் மீடியத்தில் படித்ததால் அந்த பிரச்சனை எனக்கு இப்போதும் இருக்கிறது

___________________________

எனக்காக மொட்டை அடித்த வாழும் வள்ளல் பதிவுல வீரத்தளபதி வாழ்க

வால்பையன் said...

கலவை 1
எந்த அதிபர் வந்தாலும் அமெரிக்காவை தூக்கி நிறுத்த இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு சாதரணமானதல்ல , அவற்றை ஈடுகட்ட அரசாங்கம் தரும் நஷ்டஈடுகள் நாட்டில் பண வீக்கத்தை அதிகரிக்கும்.

வால்பையன் said...

கலவை 2

உங்கள் மேனேஜர் சொன்ன மாத்ரி ஒன்றையும், உங்கள் திருப்திக்கு ஒன்றையும் செய்து வையுங்கள், கண்டிப்பாக உதவும்

வால்பையன் said...

கலவை 3

மொழியின் இலக்கணத்தை வேண்டுமானால் பாட ரீதியாக கற்கலாம், ஆனால் பேச, புரிந்து கொள்ள நடைமுறையில் பேசி பழகுவதே உத்தமம்.

வால்பையன் said...

கலவை 4

இது வங்கிகளின் தவறே!
நீங்கள் அனுப்பிய கடிதங்களின் நகலை வைத்து வழக்கு தொடருவேன் என்று மராட்டி பாருங்கள்

வால்பையன் said...

கலவை 5

குழந்தைகளுக்கு மொட்டை போடுவது சீரான முடி வளச்சியை அதிகரிப்பதர்க்கே,
"தாய்மாமன்", உறவை வலுப்படுத்த மேலும் அவர் மொட்டை போடாமலேயே அவரது பாக்கெட் மொட்டையாகிருக்கும்.

Anonymous said...

தமிழ்,

அவர்கள் தந்த பார்மேட்டில் தகவல்களைக் கொடுங்கள். மேலும் நீங்கள் நினைக்கும் பார்மேட்டில் ஆன்லைனில் தகவல்களை உள்ளீடு செய்து வைத்திருங்கள். மாத இறுதியில் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை கன்ஸாலிடேசன் ச்ய்யும் பொழுது எந்த பார்மேட் சுலபமாக இருக்கிறது என்பது தெரியும். மேலதிகாரிகளை கன்வின்ஸ் செய்வது சுலபம். இல்லையெனில் நீங்கள் தேவையில்லாமல் அவரது வேலையில் குற்றம் சொல்வதாக நினைக்ககூடும்.

கனரா வங்கியின் இந்தப் பக்கத்தில் உங்கள் குறையைப் பதிவு செய்யுங்கள்.

அதற்கு முன் உங்கள் வங்கி கிளை அதிகாரிக்கு, ஒரு கடிதம், உங்கள் குடும்பத்தினர் மூலம். அனுப்புங்கள். அதற்குத் தகுந்த பதில் கிடைக்கவிடில் மேலே உள்ள சுட்டி பயன்படும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பிரியன்...

தங்கள் பெயரில் 'ப்' வர வேண்டும் என்று அகரம்.அமுதா சொல்கிறார். கவனியுங்களேன்.

தமிழன்-கறுப்பி... said...

தல நான் உங்களை ஜனரஞ்சக பதிவர்னு சொன்னதுல என்ன தப்பு...??

தமிழன்-கறுப்பி... said...

எவ்ளோ விசயங்களை எழுதுறிங்க...

தமிழன்-கறுப்பி... said...

அமெரிக்காவுல இருக்கிற பொருளாதார பிரச்சனை கடும் பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்?

தமிழன்-கறுப்பி... said...

அதிஷாவுக்கு பதில் நீங்கள் மொட்டை போட்டீங்களா?

:))

தமிழன்-கறுப்பி... said...

இங்க வந்ததுக்கு இது எத்தனையாவது மொட்டை அண்ணே?

தமிழன்-கறுப்பி... said...

மொட்டை சூப்பர் !!!

தமிழன்-கறுப்பி... said...

//
டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))
//

;)
எவ்வளவுதான் வளர்ந்தாலும் தலைல பாதிதானே வளரப்போகுது இதுக்கேன் இவ்வளவு யோசிக்கறிங்க? :)

புதுகை.அப்துல்லா said...

டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))
//

ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))

ஜியா said...

//ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))
//

Repeatye.... ;))

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

//அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா//

அதிஷாவுக்கு பதிலாக என மொட்டை போட்டுக் கொண்டீர்களோ என்னவோ தெரியாது. ஆனால் அக்கரையில் இருந்தபடி அக்கா மகனின் ஆங்கில அறிவை வளர்க்க அக்கறையுடன் பாடுபடும் உங்களைப் போன்ற தாய்மாமனுக்கு எல்லோரும் போடறோம் ஒரு பெரிய "ஜே!"

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.
//
ஆஹா ஆப்பு வைச்சுப்புட்டாங்களா???///

மொத்தமா செய்றதே கண்ணை மூடிக் கொண்டு பழைய ரீடிங்கை காப்பி பேஸ்ட் செய்வது தானே... எங்களுக்கு யாரும் ஆப்பு வைக்க முடியாது.. நமக்கு நாமே வச்சா தான் உண்டு.,.... :)))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... //
அது எப்பிடி???///
விட்டா சுத்தியை வச்சு தட்டி பார்ப்பீங்க போல இருக்கு... :)))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
// டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))/

ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்விதான்!
ஆண்டவன் அருள் புரியணும்! :))))))))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ் ஆனாலும் நம்பிக்கை இருக்குல்ல (வளர்ந்துடும் தானே.. ;) )

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
மெக்காவிலும் மொட்டை உண்டா..?
அது எப்படின்னு கேட்டிருக்காரு ஆயில்யன் கவனமா இருங்க.. எதயாச்சும் தூக்கிப்போட்டு செக் செய்துடப்போறாரு..:)///

மெக்காவிலும் மொட்டை இருக்கு.. ஆனால் கட்டாயம் இல்லை. ஊரில் முடி வெட்டுவது போலும் வெட்டிக் கொள்ளலாம்.. அல்லது மெஷின் கொண்டு 4, 5 MM அளவுக்கும் வெட்டிக் கொள்ளலாம்.. நமது செளகரியத்தைப் பொறுத்தது. ஆனால் முடி வெட்டப்பட வேண்டும் என்பது சட்டம்.

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

//எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்?//

1) பேங் டேமேஜெரை சந்தித்து, நாக்கை பிடிங்கிக் கொள்ளும் அளவுக்கு நாலு நாட்களுக்கு சாப்பிட முடியாதபடி கேள்வி கேட்களாம்.///
விக்கி ஏதோ கொல வெறியில் இருப்பது மட்டும் தெரிய்து.. ஆனா ஏன்னு தான் தெரியலை

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

இப்படி இதமாக இல்லாமல் காரசாரமாக பதிவு எழுதி பேங் பெயரை கெடுக்கலாம்.///

பல வருடமா நல்ல சேவை செய்றாங்க.. இருந்துட்டு போகட்டும்

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

மொட்டை சூப்பரா இருக்கு... எல்லோரிடமும் சிவாஜி ஸ்டைலில் தலைய தட்டி காமிக்கிறிங்கலாமே???///

இங்க நிறைய மொட்டை இருப்பதால் அதெல்லாம் எடுபடாது.. :)

Thamiz Priyan said...

///அதிஷா said...

தமிழ் மீடியத்தில் படித்ததால் அந்த பிரச்சனை எனக்கு இப்போதும் இருக்கிறது
___________________________

எனக்காக மொட்டை அடித்த வாழும் வள்ளல் பதிவுல வீரத்தளபதி வாழ்க////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி நன்றி!
(யாருய்ய்யா அங்க அதிஷாவுக்கு சோடா கொடுங்க )

Thamiz Priyan said...

///வால்பையன் said...
கலவை 1
எந்த அதிபர் வந்தாலும் அமெரிக்காவை தூக்கி நிறுத்த இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு சாதரணமானதல்ல , அவற்றை ஈடுகட்ட அரசாங்கம் தரும் நஷ்டஈடுகள் நாட்டில் பண வீக்கத்தை அதிகரிக்கும்.///

ஆமாம் வால் பையன்.. தேர்தல் முடிந்ததும் அதன் தாக்கங்கள் அதிகமாக தெரியுமாம்

Thamiz Priyan said...

///வால்பையன் said...
லவை 2
உங்கள் மேனேஜர் சொன்ன மாத்ரி ஒன்றையும், உங்கள் திருப்திக்கு ஒன்றையும் செய்து வையுங்கள், கண்டிப்பாக உதவும்///
நிறுவன சட்டப்படி அவர்கள் தரும் பேபரில் தான் எழுத வேண்டும்... ;(

Thamiz Priyan said...

///வால்பையன் said...
கலவை 4
இது வங்கிகளின் தவறே!
நீங்கள் அனுப்பிய கடிதங்களின் நகலை வைத்து வழக்கு தொடருவேன் என்று மராட்டி பாருங்கள்///
ஊருக்கு செல்லும் போது வங்கி மேலாளரிடம் இது குறித்து விவாதிக்கலாம்... (இன்னும் மூன்று மாதம் தானே? பொறுத்துக் கொள்ள்லாம்)

Thamiz Priyan said...

///வால்பையன் said...
கலவை 5
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது சீரான முடி வளச்சியை அதிகரிப்பதர்க்கே,
"தாய்மாமன்", உறவை வலுப்படுத்த மேலும் அவர் மொட்டை போடாமலேயே அவரது பாக்கெட் மொட்டையாகிருக்கும்.///

எங்க வீட்டில் இந்த வழக்கல் இல்லை.. அதிஷாவிடம் தான் கேக்க வேண்டும்.. :)

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...

தமிழ்,///

பத்து வருடங்களாக சிறந்த சேவையையே தந்துள்ளனர். இந்த தடவை ஊருக்கு செல்லும் போது, வங்கி மேலாளரை ஒரு முறை சந்தித்து இது விடயமாக விரிவாக பேசுகிறேன்.. ஏதாவது இடக்கு என்றால் பிளாக்கில் எழுதி கிழித்து விடலாம்.. அதோடு மேலிடத்திலும் புகார் செய்யலாம்.. தகவலுக்கு நன்றீ!

Thamiz Priyan said...

///இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பிரியன்...

தங்கள் பெயரில் 'ப்' வர வேண்டும் என்று அகரம்.அமுதா சொல்கிறார். கவனியுங்களேன்.///

ஆமாம், வசந்தக் குமார். தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் ஒரு மதிப்பிற்குரிய பதிவர் இருக்கிறார்... பிரித்து எழுதுவதால் தேவை இல்லை என்பதும் என் கருத்து.

Thamiz Priyan said...

///தமிழன்... said...

தல நான் உங்களை ஜனரஞ்சக பதிவர்னு சொன்னதுல என்ன தப்பு...??////

யார் அந்த ஜனா? யார் அந்த ரஞ்சனி? தெளிவா சொன்னா தானே புரியும்.. ;)

Thamiz Priyan said...

///தமிழன்... said...

//
டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))
//

;)
எவ்வளவுதான் வளர்ந்தாலும் தலைல பாதிதானே வளரப்போகுது இதுக்கேன் இவ்வளவு யோசிக்கறிங்க? :)///அவ்வ்வ்வ்வ்வ் ஏன்ய்யா உனக்கு இப்படி ஒரு கெட்ட என்ணம். என்னைப் பார்த்தா பாவமா இல்லியா?

Thamiz Priyan said...

///புதுகை.அப்துல்லா said...

டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))
//

ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. இன்னும் மூணு பொண்ணு கட்டுவோம்.. தெரியும்ல ( ஒன்னுக்கு சம்பாதிக்கவே வெளிநாடு போறோம்.. நாலுக்கு... )

Thamiz Priyan said...

///ஜி said...

//ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))
//

Repeatye.... ;))////
ஜி நீங்களும்மா? அவ்வ்வ்வ்வ்வ் எல்லாம் குரூப்பா தான்ய்யா கிளம்பி இருக்காங்க

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

//அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா//

அதிஷாவுக்கு பதிலாக என மொட்டை போட்டுக் கொண்டீர்களோ என்னவோ தெரியாது. ஆனால் அக்கரையில் இருந்தபடி அக்கா மகனின் ஆங்கில அறிவை வளர்க்க அக்கறையுடன் பாடுபடும் உங்களைப் போன்ற தாய்மாமனுக்கு எல்லோரும் போடறோம் ஒரு பெரிய "ஜே!"///

அக்காவின் அக்கறையான பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி.. :)