Tuesday, September 30, 2008

வெடி தேங்காய்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா என்ன ருசி!

.இன்று மை பிரண்ட் அக்கா ஒரு பதிவு போட்டாங்க... லெமாங் என்ற உணவுப் பொருளைப் பற்றி... அதைப் படித்ததும் அது மாதிரி நாமலும் ஏதோ சாப்பிட்டு பழக்கம் இருக்கேன்னு யோசிச்சேன்.. கொஞ்சம் மண்டையைக் குடைந்ததும் தான் நினைவுக்கு வந்தது... அது தான்... வெடி தேங்காய். டுமில் குப்பம் சுண்டக் கஞ்சி ரேஞ்சுக்கு இது எங்கள் பகுதியில் சிறப்பு வாய்ந்தது

அதென்ன வெடி தேங்காய்? தேங்காய்க்குள் வெடி வைக்கும் ஏதாவது பயங்கரவாதமா என்று கேட்டுடாதீங்க... நாங்க எல்லாம் நல்ல பசங்களாக்கும். வெடி தேங்காய் என்பது ஒரு வகையான வித்தியாசமான உணவு... இதை செய்ய உங்களுடன் தம்மடிக்கும் நண்பனும் இருக்க வேண்டும். இன்னைக்கு இதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்னால் உங்களை எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னால் கூட்டிச் செல்கிறேன்... காலச்சக்கரத்தில் பிரயாணித்து எல்லோரும் என்னோடு வாங்க....சக்கரத்தில் சுழன்றாச்சா?... ஓகே... அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது). எங்க ஸ்கூலைச் சுற்றி நிறைய தென்னை மரம் இருக்கும்... ஸ்கூலுக்கு வெளியேவும் நிறைய இருக்கும்.. எங்களோட முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.

வெறும் தேங்காய்களை மட்டும் திருடி தின்னு ஒரு கட்டத்தில் அழுத்துப் போச்சு.. அப்ப தான் நம்ம முன்னோர்களில் ஒரு ஐடியா நினைவுக்கு வந்தது. அதுதான் வெடி தேங்காய். வெடி தேங்காய் செய்ய தேவையானவை

நன்றாக சிவப்பு கலரில் இருக்கும் நெத்து தேங்காய் - 1

மளிகைக் கடையில் திருடிய அரிசி - ஒரு கோப்பை

கரட்டுக் கரும்பில் செய்த வெல்லம் - ஒரு கோப்பை

வீட்டில் திருடிய பொரிகடலை - ஒரு கோப்பை

செட்டியாரிடம் ஓசி வாங்கிய புளி - சிறிதளது

குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி

கோனூசி மற்றும் விறகு, செத்தை, சருகுநல்லா நெத்து தேங்காயாய் பார்த்து திருடி இருக்க வேண்டும்... சிவப்பாய் இருப்பதெல்லாம் நெத்து அல்ல.. (அதைக் கண்டுபிடிக்கும் முறை குறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்). தேங்காயின் மட்டையை உரித்து, அதன் குடுமி(?)யையும் நீக்கி விட வேண்டும்.

குடுமியை நீக்கிப் பார்த்தால் அதில் மூன்று கண்(?) இருக்கும். அந்த மூன்று கண்ணையும் முதலில் கோனூசி கொண்டு தோண்டி விட வேண்டும். அதில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் குடித்து விட வேண்டும். இப்போது கண்ணை இன்னும் நன்றாக தோண்டி சிறு வழி ஏற்படுத்த வேண்டும்.இதை ஒருவன் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொருவன் அரிசி, வெல்லம், பொரிகடலை இவைகளை ஒன்றாக போட்டு கலக்க வேண்டும். இந்த கலவையை அந்த கண்களின் வழியே உள்ளே போட வேண்டும். இந்த வேலைக்கு மிகவும் பொறுமையான ஒரு ஆள் தேவை.. ஏனெனில் மிகவும் பொறுமையும், கவனமும் தேவைப்படும்.

முழுவதும் நிறைந்த பிறகு அந்த கண்களின் ஓட்டையை ஓசி வாங்கி வந்திருக்கும் புளியை வைத்து அடைக்க வேண்டும். இப்போது தேங்காயைக் குலுக்கினால் எந்த சத்தமும் வரக் கூடாது. வந்தால் அதில் இன்னும் இடம் இருக்கிறது என்று அர்ததம். புளியை எடுத்து விட்டு மீண்டும் அதில் கலவையை திணிக்க வேண்டும்.. (இந்த கேப்பில் கலவையை மற்றவர்கள் காலி செய்து விடக் கூடும். எனவே கவனம் தேவை)

புளியால் கண் அடைக்கப்பட்ட தேங்காயை தீ பற்ற வைத்து நெருப்பில் இட வேண்டும். ஒன்லி விறகு, செத்தை, சருகுகளைக் கொண்டு மட்டுமே நெருப்பு மூட்ட வேண்டும். நெருப்பை வேகமாக எரிக்கக் கூடாது. இல்லையெனில் ஓடு மட்டும் வெந்து வெடித்து விடும். மிதமாக கங்குகளில் அதை எரிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உள்ளிருக்கும் தேங்காய் முழுவதும் வெந்து விடும். அதைக் கண்டுபிடிக்க நல்ல திறமையும் வேண்டும். ஒரு விதமாக “க்ராக்” என்ற ஒலி வரும் அதுதான் அடையாளம். உடனே வெளியே எடுத்து விட வேண்டும்.

வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”

டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.

டிஸ்கி 2 : நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு உண்டு.

டிஸ்கி 3 : கீழே Vote என்று இருப்பதை அழுத்தி விட்டுச் செல்லவும்

68 comments:

MyFriend said...

ஆஹா..

MyFriend said...

//வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”//

படிக்கவே ருசி நாக்குல ஊறுதே.. ஆனா இந்த திருட்டு தேங்காய்தான் எங்கே கிடக்கும்ன்னு தெரியல.

MyFriend said...

எல்லாம் ஓக்கே.. ஆனா, இந்த ரெசிப்பி வொர்க்-அவுட் ஆகுமா? :-)

விஜய் ஆனந்த் said...

;-)))...

எப்பவுமே திருட்டு மாங்காய்க்கு ருசி ஜாஸ்திதான்!!!

ரமலான் நல்லா கொண்டாடினீங்களா???

ஆயில்யன் said...

//முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.
//

குட் !

வெரிகுட்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

15 vasuleye tham adicha guruppa..:(

ஆயில்யன் said...

//நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இருகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு இல்லை./


பின்ன திருட்டு பசங்க க்ருப்பு எப்படி இருக்கும்?????? :)))))))))))))

வெண்பூ said...

அருமையான நினைவுகள் தமிழ். உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை: ஆடி முதல்நாள் எங்கள் பகுதிகளில் கட்டாயம் செய்யும் விசயம் இது. எல்லாம் நீங்கள் சொன்னதேதான், சிறு மாற்றங்களுடன்,

1. தேங்காயை நார் உரித்த பின், அதை ஒரு சிமெண்ட் தரையிலோ அல்லது கருங்கல் ஸ்லாபிலோ நன்றாக தேய்க்கவேண்டும். அது நன்றாக பிரவுன் நிறத்தில் மொழு மொழுவென்று ஆக வேண்டும். அதனால் அது வெடிப்பதற்கு ஆகும் நேரம் அதிகரிக்கும்.

2. தேங்காயை ஏதாவது ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு, அதிலிருக்கும் தண்ணீரையெல்லாம் எடுத்து அரிசி வெல்லக் கலவையுடன் தேவையான அளவு இந்த தண்ணீரை சேர்த்து நிரப்ப வேண்டும்.

3. பின் ஒரு நீளமான குச்சி (எந்த குச்சி என்று நினைவில்லை) எடுத்து அதன் முனையை கூராக்கி அதை தேங்காயின் ஓட்டை வழியாக டைட்டாக ஃபிட் செய்த பின், குச்சியை பிடித்துக்கொண்டு நெருப்பில் காட்டவேண்டும். ஒரே பக்கம் காட்டாமல் குச்சியை சுற்றுவதன் மூலம் எல்லா பக்கமும் சுட வைக்க முடியும்.

சின்ன வயதில் எங்கள் தெருவில் இருக்கும் எல்லா பையன்களும் சேர்ந்து நெருப்பில் வாட்டி அதன் பின் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று உடைத்து கொண்டுவந்து தின்போம்.

இன்றும் எங்கள் ஊரில் இது கடைபிடிக்கப்படுகிறது.

SP.VR. SUBBIAH said...

இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலம். ஆடி மாதம் 18ஆம் தேதியன்று (ஆடிப்பெருக்கன்று) எல்லோர் வீட்டிலும் பெரியவர்களே முன்னின்று பசங்களுக்குச் சொல்லிக்கொடுத்துச் செய்யச்சொல்வார்கள். ரெசிப்பியில் புளி இருக்காது. வெல்லம் கடலைப் பருப்பு ஆகிய 2 மட்டுமே பிரதானமாக இருக்கும். அவைகள் தேங்காயின் உள்ளே அடைக்கப்பட்டு, நெருப்பில் வாட்டி வெடித்தவுடன், உடைத்துத் திங்கக் கொடுப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். ஹீம்....அதெல்லாம் ஒரு காலம்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்,

அருமையான மலரும் நினைவுகள்
திருட்டுத் தம் - திருட்டுத் தேங்காய் - திருட்டுப் பசங்க சகவாசம் - அய்யோ இப்ப எல்லாம் வீ மிஸ் எ லாட் - ம்ம்ம்ம்ம்ம்

நல்லா இருக்கு

gulf-tamilan said...

டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.
:))))

gulf-tamilan said...

அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது)
நம்பிவிட்டோம் :)))

gulf-tamilan said...

குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி
ஆஹா அந்த பழக்கமும் உண்டா ??

gulf-tamilan said...

பின்ன திருட்டு பசங்க க்ருப்பு எப்படி இருக்கும்?????? :)))))))))))))
:)))

gulf-tamilan said...

கும்மிக்கு யாரும் இல்லையா???
:((((

Thamiz Priyan said...

/// .:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா..///
ஹிஹிஹி நாங்களும் எதிர் பதிவு போடுவோம்ல

Thamiz Priyan said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

//வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”//

படிக்கவே ருசி நாக்குல ஊறுதே.. ஆனா இந்த திருட்டு தேங்காய்தான் எங்கே கிடக்கும்ன்னு தெரியல.///

அக்கா! எல்லா தேங்காயும் தென்னை மரத்துல தான் கிடைக்கும்.. உங்க ஊரில் தான் நிறைய தென்னை மரம் இருக்குமே? கல்லெறிந்து பாருங்கள்

Thamiz Priyan said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லாம் ஓக்கே.. ஆனா, இந்த ரெசிப்பி வொர்க்-அவுட் ஆகுமா? :-)///
கமெண்ட்களையெல்லாம் பாருங்க... இதுக்கு எம்புட்டு ரசிகர்கள் என்று

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு செய்முறை:))! ருசியும்தான்னு சொல்லிட்டீங்க!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.......
அண்ணன் ஒருசமயம் வெடித்தேங்காய் சின்னதா ஒரு துண்டு கொண்டுவந்து கொடுத்தாங்க. சூப்பர் ருசி. எல்லாம் நம்ம 'ஓணாங்கரடு'லே நண்பர்களுடன்போய் சுட்டதாம்.

மங்களூர் சிவா said...

ஆஹா..

மங்களூர் சிவா said...

படிக்கவே ருசி நாக்குல ஊறுதே..

மங்களூர் சிவா said...

ஆனா இந்த திருட்டு தேங்காய்தான் எங்கே கிடக்கும்ன்னு தெரியல.

மங்களூர் சிவா said...

;-)))...

மங்களூர் சிவா said...

எல்லாம் ஓக்கே.. ஆனா, இந்த ரெசிப்பி வொர்க்-அவுட் ஆகுமா? :-)

மங்களூர் சிவா said...

//முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.
//

குட் !

வெரிகுட்!

மங்களூர் சிவா said...

//நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இருகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு இல்லை./


பின்ன திருட்டு பசங்க க்ருப்பு எப்படி இருக்கும்?????? :)))))))))))))

மங்களூர் சிவா said...

திருட்டுத் தம் - திருட்டுத் தேங்காய் - திருட்டுப் பசங்க சகவாசம் -


அருமையான மலரும் நினைவுகள்

மங்களூர் சிவா said...

டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.
:))))

மங்களூர் சிவா said...

குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி
ஆஹா அந்த பழக்கமும் உண்டா ??

வால்பையன் said...

ரமலான் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//இதை செய்ய உங்களுடன் தம்மடிக்கும் நண்பனும் இருக்க வேண்டும்.//

இனிமேல் அவன் பாக்கெட்டில் ஐந்நூறு ரூபாய் பணமும் இருக்கவேண்டும்

வால்பையன் said...

//காலச்சக்கரத்தில் பிரயாணித்து எல்லோரும் என்னோடு வாங்க...//

உங்கள் காலச்சக்கரம் சரியாக பயணிக்க மாட்டிங்குது

வால்பையன் said...

//ப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது)//

அப்போ உங்களுக்கு, இப்போ உங்க பேரனுக்கு

வால்பையன் said...

//நன்றாக சிவப்பு கலரில் இருக்கும் நெத்து தேங்காய் - 1
மளிகைக் கடையில் திருடிய அரிசி - ஒரு கோப்பை
கரட்டுக் கரும்பில் செய்த வெல்லம் - ஒரு கோப்பை
வீட்டில் திருடிய பொரிகடலை - ஒரு கோப்பை
செட்டியாரிடம் ஓசி வாங்கிய புளி - சிறிதளது
குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி
கோனூசி மற்றும் விறகு, செத்தை, சருகு//

இத்தனை திருடுவர்தற்கு பதில் வேறு யாராவது செய்யும் வெடித் தேங்க்காயவே திருடி விடலாமே

வால்பையன் said...

//ஒரு விதமாக “க்ராக்” என்ற ஒலி வரும் அதுதான் அடையாளம்.//

சுடுபவரும் க்ராக்காக இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது

வால்பையன் said...

//இன்றும் எங்கள் ஊரில் இது கடைபிடிக்கப்படுகிறது.//

ஈரோட்டுலையும் அந்த கூத்து நடக்கிறது.
குச்சி முதற்கொண்டு எல்லாமே கடையிலேயே விக்கிறாங்க.
என்னான்னே தெரியாம அத வாங்கி கொடுன்னு என் பொண்ணு அடம் புடிப்பா

யூர்கன் க்ருகியர் said...

//பின் ஒரு நீளமான குச்சி (எந்த குச்சி என்று நினைவில்லை) எடுத்து அதன் முனையை கூராக்கி அதை தேங்காயின் ஓட்டை வழியாக டைட்டாக ஃபிட் செய்த பின்,//

"அழிஞ்சி" மர குச்சி உபயோகிக்க வேண்டும். வேற ஏதாவது குச்சியை யூஸ் பண்ணா டேஸ்ட் மாறிவிடும். இந்த குச்சி கிடைக்காதவர்கள் இரும்பு ராடை யூஸ் பண்ணலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பரு :)

Tech Shankar said...

Supernga

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ .:: மை ஃபிரண்ட் ::. said...

//வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”//

படிக்கவே ருசி நாக்குல ஊறுதே.. ஆனா இந்த திருட்டு தேங்காய்தான் எங்கே கிடக்கும்ன்னு தெரியல./

st.john island la niraiya irukku...last week kooda veettukku eduthuttu vanthen....:)

Iyappan Krishnan said...

thirudaathE .. paappaa thirudaathE ..

vedi thEngaaykku aasaip padaathE....

udhaiyum kidaikkum marandhu vidaathE
thirudaathE paappaa thirudaathE


-- pinna bangalore la thenga thoppukku enga poven ? eppadi thiruduvEN.

thappu thappa sollith tharum mr.thamizpriyanukku kandanangkal

Anonymous said...

ஆகா...இதை எப்படியாவது செய்திட வேண்டும்

கானா பிரபா said...

ஆகா வாசிக்கும் போதே சுவையா இருக்கே. நம்மூரில் தேங்காய்க்குக் கிடைக்கும் மகத்துவமே தனி. அதிக அளவில் கிடைப்பதும் ஒரு காரணம். ஆனா நீங்க சொன்ன விஷயம் இன்று தான் அறிகின்றேன்.

புனித பெருநாள் வாழ்த்துக்கள் தல

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...
;-)))...
எப்பவுமே திருட்டு மாங்காய்க்கு ருசி ஜாஸ்திதான்!!!
ரமலான் நல்லா கொண்டாடினீங்களா???///
திருட்டு மாங்காயைப் பற்றி சொல்லவே வேணாம்.. அதோட ருசியே தனி! பெருநாளெல்லாம் நல்லபடியா முடிஞ்சது... நன்றி!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.
//
குட் !
வெரிகுட்!///
என்ன குட்..? ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி அவஸ்தைப் பட வேண்டியது இல்லியே?

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

15 vasuleye tham adicha guruppa..:(///

நான் ஒன்லி பார்வையாளன் தான்.. இதுவரை தம், தண்ணி, இத்யாதிகள் கிடையாது.,. இனியும் இருக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இருகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு இல்லை./


பின்ன திருட்டு பசங்க க்ருப்பு எப்படி இருக்கும்?????? :)))))))))))))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அண்ணே இப்படியா நடு ரோட்ல வச்சு மானத்தை வாங்குவது? எதா இருந்தாலும் தனியா பேசிக்கலாம்

Anonymous said...

ஆஹா தமிழ்,

இது நாங்க ஆடி 18க்குச் செய்வது.

ஒரு முறை நான் இதை வீட்டில் செய்து கேஸ் அடுப்பில் சுட்டுச் சொதப்பி தங்கமணியிடம் திட்டு வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு.

அந்தப் பருப்பும், இனிப்பும் தேங்காயில் ஊறி, ஒரு தனிச் சுவைதான் வேறு எதுவும் இல்லை ஈடு.

Thamiz Priyan said...

//வெண்பூ said...

அருமையான நினைவுகள் தமிழ்////
]எங்கள் பகுதியிலும் இது இருப்பதாகவே நினைக்கிறேன்.. ஊரை விட்டு வந்து 12 வருஷமாச்சே.. கெஸ்டா தான் போறோம் விடுமுறையில்.. அடுத்த தடவை விசாரித்து விடலாம்.

Thamiz Priyan said...

///SP.VR. SUBBIAH said...

இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலம். ஆடி மாதம் 18ஆம் தேதியன்று (ஆடிப்பெருக்கன்று) எல்லோர் வீட்டிலும் பெரியவர்களே முன்னின்று பசங்களுக்குச் சொல்லிக்கொடுத்துச் செய்யச்சொல்வார்கள். ரெசிப்பியில் புளி இருக்காது. வெல்லம் கடலைப் பருப்பு ஆகிய 2 மட்டுமே பிரதானமாக இருக்கும். அவைகள் தேங்காயின் உள்ளே அடைக்கப்பட்டு, நெருப்பில் வாட்டி வெடித்தவுடன், உடைத்துத் திங்கக் கொடுப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். ஹீம்....அதெல்லாம் ஒரு காலம்.///

ஆசானின் வருகைக்கு முதலில் நன்றிகள்! மலரும் நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டது போல் இருக்கு!

Thamiz Priyan said...

///gulf-tamilan said...

டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.
:))))////

ஹிஹிஹி.. அதுதானுங்க உண்மையும் கூட

Thamiz Priyan said...

///gulf-tamilan said...

அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது)
நம்பிவிட்டோம் :)))////
நம்பித்தானே ஆக வேண்டி இருக்குது...
;)))

Thamiz Priyan said...

///gulf-tamilan said...

குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி
ஆஹா அந்த பழக்கமும் உண்டா ??////
நான் ஒன்லி பார்வையாளன் தான்.. இதுவரை தம், தண்ணி, இத்யாதிகள் கிடையாது.,. இனியும் இருக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

Thamiz Priyan said...

///gulf-tamilan said...

பின்ன திருட்டு பசங்க க்ருப்பு எப்படி இருக்கும்?????? :)))))))))))))
:)))////
அண்ணே! நீங்களுமா?

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...
அன்பின் தமிழ் பிரியன்,
அருமையான மலரும் நினைவுகள்
திருட்டுத் தம் - திருட்டுத் தேங்காய் - திருட்டுப் பசங்க சகவாசம் - அய்யோ இப்ப எல்லாம் வீ மிஸ் எ லாட் - ம்ம்ம்ம்ம்ம்

நல்லா இருக்கு////
அன்பின் சீனா சார், நீங்கள் குறிப்பிட்டுச் சொல்பவர்கள் யார் என்று தெரியவில்லை... கொஞ்சம் விளக்கவும்.. :)
(அப்பாடா தப்பிச்சேன் பிழைச்சேன்னு ஓடி வந்தாச்ச்சு)

நாமக்கல் சிபி said...

//இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலம். ஆடி மாதம் 18ஆம் தேதியன்று (ஆடிப்பெருக்கன்று) எல்லோர் வீட்டிலும் பெரியவர்களே முன்னின்று பசங்களுக்குச் சொல்லிக்கொடுத்துச் செய்யச்சொல்வார்கள்//

வாத்தியாரய்யா சொல்வது போல் ஆடி 18 அல்ல! ஆடி முதல் தேதியன்றுதான் இப்படிச் செய்வோம்!

"தேங்கா சுடுற நோம்பி" என்று சிறுவயதில் கூறிவந்தோம்!

நாங்கள் வாதனாராயண மரம் என்ற வாதனா மரத்துக் குச்சிகளையே பயன்படுத்தினோம்!

சிறுவயது நாட்களை நினைவு கூறச் செய்து விட்டீர்கள்! பிளாஷ்பேக் சக்கரத்தை சுழற்றி!

நாமக்கல் சிபி said...

//ரெசிப்பியில் புளி இருக்காது. வெல்லம் கடலைப் பருப்பு ஆகிய 2 மட்டுமே பிரதானமாக இருக்கும்.//

ஆமாம்!

பாசிப் பருப்பு, பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை, பொட்டுக் கடலை ஆகியவை இருக்கும்!

சிலர் எள் கூட சேர்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்!

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா கலக்கி இருக்கிறிங்க அந்த நாளைல...

தமிழன்-கறுப்பி... said...

இது நான் சாப்பிட்டதா எனக்கு நினைவில்லை ஆனா கேள்விப்பட்டிருக்கிறேன்....

தமிழன்-கறுப்பி... said...

\\
எங்களோட முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.
\\
நம்பளை விட பெரிய ஆளுங்களா இருப்பாய்ங்க போல இருக்கே...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.
\\

இது சூப்பரு...:))
இப்படியொரு சமையல் குறிப்பை எந்த சமையல் காரங்களும் எழுதலையே...:)

தமிழன்-கறுப்பி... said...

பெடியள் சேர்ந்து செய்து சாப்பிட்டாலே அது ஒரு தனி ருசிதான் அண்ணன்...:)

தமிழன்-கறுப்பி... said...

சந்தோசமான நினைவுகள்...:)

Thamira said...

பக்கத்து மளிகைக்கடையில திருடினாலும் அதே டேஸ்ட் வருமான்னு சொல்லவும். ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..

Several tips said...

திருடாதே என்று சொல்லலாமா?

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு