Friday, November 28, 2008

ஈழம் : மாவீரர் தின உரையும், சில ஏமாற்றங்களும்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படும். தமது இன்னுயிரை துச்சமாக மதித்து உயிரிழந்த வீரர்களுக்கு அவர்களின் தியாகத்தை போற்றி மரியாதை செய்யும் நாள். நவம்பர் 27 அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. வழக்கம் போல் அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் உரை நிகழ்த்தினார். எப்போதும் மாவீரர் தின உரை மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும்.

வன்னியில் கடும் போரும்,இந்தியாவில் ஏற்ப்பட்ட சூழலும் இந்த ஆண்டின் மாவீரர் தின உரையை பெரும் எதிர்பார்ப்புக்கானதாக ஆக்கியது. எனது பார்வையில் இந்த உரை மிகவும் ஏமாற்றமானதாகவே இருக்கின்றது.

உலக நாடுகளுக்கு தாங்கள் சமாதானத்தை விரும்பக்கூடியவர்கள் என்பதை சொல்லி இருப்பது நல்ல சமிக்ஞை. அதே போல் இந்தியாவிற்கும் சில தகவல்களைக் கொடுத்து இருப்பது பாராட்டத்தக்கது. பல கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், இந்தியாவுடன் நட்புறவு பேணுவதை விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்தியா கிட்டத்தட்ட ஒரு ஏகாதிபத்திய மப்பிலேயே இன்னும் இருக்கின்றது)

தமிழர்களின் உணர்வுக்கும், தலைவர்களின் ஈழ மக்களுக்கான ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மீதான தடையை நீக்கக் கோரி கோரிக்கையும் அதில் வைக்கப்பட்டுள்ளது. தமது இன்னுயிரை தாய்மண்ணுக்காக ஈந்தவர்களை நினைவு கூறக் கூடியதானதாக அமைந்தது அந்த உரை.

இனி ஏமாற்றங்களை விவரிப்பதற்கு முன் சில அடிப்படை விடயங்களை தெளிவாக்கிக் கொள்ளலாம். இலங்கை மக்கள் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை தமிழ் பேசக் கூடிய மக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் பிரிந்து நிற்கும் அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது தமிழர்கள் 13 சதவீதமும், முஸ்லிம்கள் 6 சதவீதமும், மலையக மக்கள் 3 சதவீதமும் இருக்கலாம்.




தமிழர்கள் வடக்கு பகுதியில் அதிகமாகவும், கிழக்கில் நிறையவும் வசிக்கின்றனர்,இதில் சமீப காலமாக தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசு கொடுத்த நெருக்கடிகள் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள் நிறைய உள்ளனர். அந்த புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற இடங்களில் நிறைய உள்ளனர். அவர்களின் கலாச்சாரம் மெல்ல மெல்ல மாறுபாடு அடைந்து மீண்டும் ஈழத்திற்கு திரும்பக் கூடிய வாய்ப்பு மங்கி வருகின்றது. இன்னொரு தலைமுறை கடக்கும் போது புதிய சந்ததியினரிடம் தமிழ் பேசும் வழக்கமே வழக்கொழிந்து போய் இருக்கலாம்.

இது போல் புலம் பெயர்ந்து செல்ல பண, ஆள் வசதி இல்லாதவர்கள் தஞ்சம் புகுந்த இடம் தமிழ்நாடு. சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து கடல் வழியே அகதிகளாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழை மறக்க வில்லை. அதே நேரம் ஈழத்தில் அமைதி திரும்பினால் உடனடியாக திரும்ப ஆயத்தமாக உள்ளவர்கள். இப்படியான புலம் பெயர்தலாலும், சிங்கள அரசின் வெறி கொண்ட தாக்குதலாலும், அரசின் உணவு, மருந்து கட்டுப்பாட்டாலும் அல்லல் அடைந்து தமிழர்களின் மக்கள் தொகை இதைவிட சிறிது குறைந்தே இருக்கலாம்.

இரண்டாவது முஸ்லிம்கள்.. இவர்கள் கிழக்கில் அதிகமாகவும், வடக்கில் சொற்பமாகவும், வசிக்கின்றனர். தமிழர்கள், முஸ்லிம்களை நிலவியல் ரீதியாக பிரிக்க இயலாது. இவர்கள் அடுத்தடுத்து கலந்தே வசிக்கின்றனர். முஸ்லிம்களில் அகதிகளாக வெளியேறிச் சென்றவர்கள் மிகக் குறைவு. 90 களில் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது, அங்கிருந்து முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது கூட இந்தியாவோ, மற்ற உலக நாடுகளோ தஞ்சமளிக்கவில்லை. வடக்கில் இருந்து வெளியேறி கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.

கிழக்கில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள் வியாபார நிமித்தம் கொழும்பில் நிறைய வசிக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய நிரந்தர இருப்பிடமாக தங்களது சொந்த ஊரையே நினைக்கின்றனர்.

மூன்றாவதாக மலையக மக்கள். இந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள். இலங்கையின் மத்திய பகுதிகளில் இருக்கும் தேயிலை மலைப்பகுதிகளில் இவர்கள் இருக்கின்றனர், சுதந்திர தமிழீழத்திற்கான நில எல்லைக்குள் இவர்கள் இருக்கும் பகுதி சொற்பமே. தமிழீழம் அமையும் பட்சத்தில் இவர்கள் புலம் பெயர்ந்து தமிழீழத்திற்குள் வாழ ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.



மேலே உள்ள படத்தில் உள்ள பகுதிகள் தான் தமிழ் பேசக் கூடிய மக்கள் அதிகமாக வாழக் கூடிய பகுதிகள். அதில் கோடு கிழிக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேலே உள்ள பகுதிதான் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. (குத்து மதிப்பாகவே சொல்கின்றேன்) அதில் மேலே தீவைப் போல் உள்ள யாழ்ப்பாணப்பகுதி சிங்கள இராணுவத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஈழத்தில் நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் படத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழ் பேசக் கூடிய மக்கள் அனைவரும் பிரிந்து கிடக்கின்றனர். தமிழர்களிலேயே பல பிரிவுகளில் இருக்கின்றனர். முஸ்லிம்கள் தமிழர் என்ற சொல்லவே விரும்புவதில்லை. நீங்க தமிழரா? என்று கேட்டால் அவசரமாக இல்லை முஸ்லிம என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

தமிழீழத்திற்கு தங்களது ஆயுதங்களே தகுந்த தீர்வைத் தரும் என நம்பக் கூடிய புலிகள் முதலில் தமிழீழத்தில் உள்ள மக்களை இணைப்பதற்கான எந்த சொல்லையும் காண இயலவில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது நமது மொழி வழக்கு. தமிழ் பேசக் கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து கிடக்கின்ற சூழலில், அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழலில் அதற்கான ஆரம்பங்களைச் செய்ய வேண்டியதன் அவசியம் உள்ளது.

தமிழர்களை முற்றாக அழித்து விட்டு யாருக்கு தீர்வு சொல்லப் போகின்றார்கள் என்ற கேள்வியும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றது. அதே போல் தமிழர்களின் பெரும் பகுதியை ஒதுக்கி வைத்து விட்டு யாருக்காக போராடுகின்றோம் என்ற கேள்வியும் எழுகின்றது.

வாழ்வாக இருந்தாலும், அழிவாக இருந்தாலும் அது எங்கள் கரங்களில் தான் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது. அது மக்களால் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பிற்கு எதிரானதாக அமையும். மக்களுக்கு ஆதரவில்லாத அமைப்புகள் சமூக ஏமாற்றங்களையே தரும்.


மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மாவீரர் தின உரை பார்க்க

Thursday, November 27, 2008

திருத்திய காதல் - (Caption - காதலின் கதை அல்ல... காதலர்களின் கதை)

“வசு, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைம்மா... இந்த இரண்டு வருடமும் என் மாமியாரை உன்னோட அம்மா மாதிரி பார்த்துக்கிட்ட.... இப்ப நீ இங்க இருந்து போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா”

“ஆன்ட்டி, நான் உங்க மாமியாரை பார்த்துக் கொள்ள வந்தேன். உங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டேன். எதிர்பாராதவிதமா அவங்களும் இறந்ததால் நானும் கிளம்ப வேண்டி வந்துடுச்சு.. என்ன செய்ய கால ஓட்டத்தில் நாமளும் பயனிக்க வேண்டி இருக்கே... பாருங்க இந்த இரண்டு வருடத்தில் எனக்குள் தான் எவ்வளவு மாற்றங்கள்”

“ஆமாம் வசு... சரி நல்லபடியா ஊருக்கு போ.. போனதும் போன் செய்... அடிக்கடி வந்து போய் இருந்துக்க.”

“சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்குங்க”

வீட்டை விட்டுக் கிளம்பும் வசுவையை பார்த்துக் கொண்டு இருந்து மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் வர எத்தனித்திருந்தது. முன்னே சென்று கொண்டு இருந்த வசுமதிக்கு கன்னங்களின் வழியே ஓடிக் கொண்டு இருந்தது.

--------------------------------------------------

“அம்மா! நீ என்ன சொன்னாலும் கேக்க முடியாதும்மா... எனக்கு இப்ப கல்யாணம் தேவையில்லை... நான் எப்ப கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேனோ அப்ப கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றேன்.. இப்ப விடுங்கம்மா”

“வசு.. என்ன பேச்சுடி பேசுற.. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும். சும்மா கிட அடுத்த வாரம் திங்கட்கிழமை நல்ல நாள். அன்னைக்கு உன்னைப் பெண் பார்க்க வருகின்றார்கள்”

“அம்மா.. ப்ளீஸ்ம்மா... என்னை புரிஞ்சுக்கோயேன்.”

“என்னடி புரிஞ்சுக்க... முதல்ல கண் காணாத இடத்துக்கு வேலைக்கு போன.. அப்ப வீட்டில் கஷ்டம்.. அதனால் ஒன்னும் சொல்ல முடியலை. இப்பதான் பூர்வீகச் சொத்து எல்லாம் வந்து விட்டதே... வருமானதுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இப்ப நல்ல வசதியான வீட்டில் இருக்கோம். தங்கச்சிக எல்லாம் நல்லா படிக்குதுக... இனி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டுத் தான் எனக்கு வேற வேலை”

சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்த அம்மாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசு.
--------------------------------------------------
ஏனோ தூக்கம் வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் பிடிவாதத்தை தடுக்க இயலாமல் திணற வேண்டி இருந்தது. சில நாட்களாக அருணின் நினைவு வந்து கொண்டு இருந்தது. ராஜன் அங்கிள் இறந்த பிறகு வீடும் மாற்றி சென்று விட்டார்களாம். எங்கே சென்றார்கள் என கேட்கவும் தயக்கமாக இருந்தது.

டைரியைப் புரட்டிய போது எழுதிய கவிதைகள் முத்து முத்தாக இருந்தன. அனைத்திலும் ஏனோ அருணின் வாசனை வீசிக் கொண்டிருந்தது.

பசுமரமாய் இருந்த

கவிதைகளெல்லாம்

கழுமரமாயின

இன்று

காதலின் பிரிவால்...


--------------------------------------------------
அதே நேரம்,

“அம்மா, எனக்கு கல்யாணமும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..கொஞ்சம் சும்மா இருக்கியா?”

“ஏண்டா சும்மா இருக்கனும்... எனக்கும் என் மகனுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கனுனு ஆசை இருக்காதா? பேரன், பேத்திகளை தூக்கிக் கொஞ்சனுன்னு ஆசை இருக்காதா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.. உனக்கு சீக்கிரமே கல்யாணம் நடத்தி வைத்து விட்டுத்தான் எனக்கு வேற வேலை”

--------------------------------------------------

“அக்கா! அக்கா! உன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க....”

சொன்ன தங்கையை விரக்தியாய் பார்த்தாள் வசு. ஏற்கனவே அலங்காரம் முடிந்து உட்கார்ந்து இருந்தாள். ஏதோ சோளக் கொல்லை பொம்மை போல் தன்னை காட்சிப் பொருளாக ஆக்கப் போவது மட்டும் உணர முடிந்தது.

“ஏய்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.. இன்னும் என்ன முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க.... அந்த காப்பி தட்டை எடுத்துட்டுப் போய் எல்லாருக்கும் கொடு. அப்படியே மாப்பிள்ளையையும் ஒரு தடவை நல்லா பார்த்துக்க... அப்புறம் மாப்பிள்ளையை சரியா பார்க்கலைன்னு சொல்லக் கூடாது”

மகளுக்கு வரன் அமைந்து விடும் என மகிழ்வுடன் இருக்கும் தாயைப் பார்க்க வசுமதிக்கு ஏனோ பாவமாக இருந்தது. காப்பி தட்டை ஏந்திக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்த வசுவுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது. அருணும், அருணின் அம்மா, தங்கையும் அங்கு அமர்ந்திருந்தனர்.

பின்னால் திரும்பிப் பார்க்க அம்மா புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளது கண்களில் “என் மகளுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியாதா?” என்ற குறுகுறுப்பு ஓடிக் கொண்டு இருந்தது.

டிஸ்கி 1 : கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். சகோதரி ஸ்ரீமதியின் காதல் திருத்தத் தொடருக்கு எதிர் (அல்லது நேர்) பதிவு இது. காதல் திருத்தம்
சுலபமாக இங்கு சென்றும் படித்துக் கொள்ளலாம்.
http://docs.google.com/View?docID=df2ppmnt_16gkvxhdc2&revision=_latest&hgd=1

டிஸ்கி 2 : எப்ப எதை எழுதினாலும் அதில் சோகம் தான் வழிந்தோடும் என்பதை முறியடிக்க கொஞ்சம் சந்தோசமான முடிவு..:)) முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.... அப்புறமா முடிவை மாத்திட்டேன்.

Tuesday, November 25, 2008

ஒரு கொலவெறி (கவுஜ) கவிதாயினியும், நன்றி அறிவித்தலும்

முதலில் நன்றியைச் சொல்லி விடலாம். நன்றி யாருக்கு, எப்படி சொல்வது என்று தெரியாவிட்டாலும் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. பொதுவாக நமக்கு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பற்றியே அக்கறை இருக்காது. நாம வழக்கமா போடும் கட்சிக்கோ, இல்லைன்னா அப்ப வீசுகின்ற ‘அலை’க்கு தகுந்தாற் போலோ ஓட்டுப் போட்டுட்டு போய்டுவோம். தேர்தல் முடிந்ததும் யார் ஜெயித்தார்கள் என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்.

ஆனால் பிற நாடுகளில் நடக்கும் தேர்த்ல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் நடந்தாலும், அதன் முடிவை மட்டும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோம். அவ்வளவு தான்.... ஆங்கிலம் அறிந்த ஒரு சிலர் மட்டும் இணையத்தின் வாயிலாக, குறிப்பாக அமெரிக்க தேர்தல் பற்றி, தேர்தல் பிரச்சாரங்கள், உத்திகள், வாக்குறுதிகள், கணிப்புகள், மக்களின் உணர்வுகள் போன்றவற்றை கவனிப்பார்கள். எங்களைப் போன்று ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அதுவும் முடியாது.

தமிழ் பதிவர்களின் வசதிக்காக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலை கிட்டத்தட்ட நேரடியாக தமிழில் வெளியிட்ட தளம் தான் http://uspresident08.wordpress.com/. நமது தமிழ் பதிவர்கள் பலர் இணைந்து அமெரிக்க ஊடகங்களில் வரும் தேர்தல் செய்திகளை தமிழில் வெளியிட்டனர். வெறும் கட் பேஸ்ட்டாக மட்டும் இல்லாமல், அமெரிக்க வாழ் பதிவர்கள் பலருடைய கருத்துக்கள், கேலிச் சித்திரங்கள், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவாதங்கள், கருத்துக் கணிப்புகள் என தமிழ் மீடியாக்களால் செய்ய இயலாததை சிறப்பாக செய்து காட்டினார்கள். அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையை நமக்கு தெளிவாக விளக்கி, தேர்தலை நேரடியாக வழங்கிய அக்குழுவினருக்கு மிக்க நன்றிகள்.

குறிப்பாக அந்த குழுவில் முக்கிய பங்காற்றிய நண்பர் bsubra அவர்களுக்கு எங்களது நன்றிகள்.

***********************************************************

ஒவ்வொரு காலகட்டமும் மாறும் என்று சொல்வார்கள். தமிழ் மணத்தில் பதிவுகள் எழுதி வந்த சகோதரி கவிதாயினி ’பாலைத்திணை’ காயத்ரி அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. முதலில் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் பாலைத்திணையில் எந்த கவுஜயும் வருவதில்லை. இது இயற்கைதான். இனி விரைவில் ரங்கமணியை சமாளிப்பது எப்படி, குழந்தை வளர்ப்பு போன்ற பதிவுகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் மணத்தில் ஏற்ப்பட்டுள்ள அந்த கொல வெறி கவுஜாயினியின் இடத்தை நிரப்ப இரண்டு பேரை இப்போது நாமினேட் செய்கின்றோம். அதில் முதல் இடத்தில் இருப்பவர் பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி. கரையோரக் கனவுகள் என்ற பெயரில் புரியாத பெயரில் கவுஜகளும், கதைகளும் எழுதி வருகின்றார். அதுமட்டுமின்றி பின்ன நவீனத்துவ சொல்லாடல்களும் அவரது பதிவில் காணக் கிடைக்கின்றது. (அவரது பி.ந. பதிவை தமிழில் மொழி பெயர்த்தால் 100 டாலர் பரிசு) எனவே வருங்கால கவுஜ கவிதாயினி பட்டத்தை அவருக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

போட்டியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நாணல் அக்கா. கவிதைகளாக எழுதித் தள்ளுகின்றார். ஆனால் இவரது ஒரே குறை இவரது கவிதைகள் புரிகின்றதாம்.. ஆனால் நன்றாக கவிதை எழுதுகின்றார். இவர்கள் இருவரில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ கவுஜ கவிதாயினி என்ற பட்டத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

(நமக்கு கவித புரியாது என்பது ரகசியம்... அங்கெல்லாம் போய் கலக்கல், சூப்பர், நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் மட்டும் போடுவோம்.. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..:) )

சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

**********************************************************************

நேற்றைய பதிவில் நண்பர் பாபு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். நீங்களெல்லாம் இது போன்ற பதிவுகள் எழுத வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோளுடன்... நன்றி நண்பரே. நான் இது போன்ற விஷயங்களைப் பதிவில் எழுதுவதை விட நேரிடையாகவே செய்வதையே விரும்புகின்றேன். தீவிரவாதம், ஒரு சிறு உயிருக்குக் கூட தீங்கு விளைவிப்பதையோ நாங்கள் விரும்புவதில்லை. எங்கள் சமூகத்தை தீவிரவாதிகள் என மீடியாக்கள் பொய் கூறிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் போதும் நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்து செல்வோம். அதன் வெளிப்பாடு தான் அந்த பதிவு. குண்டு வைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்... அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே...இதுதான் எங்களது கோரிக்கை.

இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது. பொதுவாக முஸ்லிம்கள் திருமணம் ஆனதும் 40 நாட்களுக்கு வெளியே தேவையில்லாமல் விட மாட்டார்கள். (அதில் நமக்கு நம்பிகையில்லை). முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைத்து நடத்தப்பட்ட ஒரு பேரணிக்காக, திருமணம் ஆன சில தினங்களில் என் குடும்பத்துடன் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து பேரணி நடந்து பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம். அவைகளின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் வேலை, மற்றும் கல்வியில் 3.5 சதவீதம் என்ற பாதிக் கிணற்றைத் தாண்டியுள்ளோம்.

இன்னும் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

Monday, November 24, 2008

இந்திய குண்டு வெடிப்புகளும், முஸ்லிம்களின் பங்கும்.

இன்றைய உலகின் முக்கிய சவாலாகக் கருதப்படுவது தீவிரவாதம் தான். இந்த கருத்தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக பரவியுள்ளது எனலாம். இந்தியா முழுவதும் அவ்வப்போது ஒரு கால இடைவெளியில் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் 2003 க்குப் பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இங்கு வரிசைப் படித்தியுள்ளோம்.

21-11-2003 ரஹ்மத் நகர் மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு

23-08-2003 மும்ப்பை கார் குண்டு வெடிப்பு 60 பேர்
பலி

2003 சாய்பாபா கோவிலில் குண்டு வெடிப்பு

15-8-2004 மும்பை கார் குண்டு வெடிப்பு 16 பேர்
பலி

15-8-2004 அஸ்ஸாம் குண்டு வெடிப்பு 6 பேர் பலி

27-8-2004 மஹாராஷ்டிரா பூர்ணா மசூதி குண்டு வெடிப்பு

27-8-2004 மஹாராஷ்டிரா ஜால்னா நகர்
குண்டு வெடிப்பு
29-10-2005 தில்லி குண்டு வெடிப்பு 66 பேர்

2006 மாலேகான் ஜூம்மா தொழுகை நேரம் 38 பேர் மரணம், 150 பேர் படுகாயம்

11-07-2006 இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 180 பேர் மரணம்

07-03-2006 காசியில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி

2006 அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிப்பு

25-08-2007 ஹைதராபாத் பூங்கா 11 பேர்
பலி

18-05-2007 ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை ஒரு பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு


19-02-2007 ல் பாகிஸ்தான் செல்லும் இரயிலில் குண்டு வெடிப்பு 66 பேர் பலி

29-09-2008 மாலேகான் ஊரில் சிமி ஆபிஸில் குண்டு வெடித்து 6 பேர் பலி. அதே நேரத்தில் குஜராத்தில் ஒரு ஊரிலும் குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியானான்.


25-07-2008 பெங்களூருவில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியானார்கள்.


13-05-2008 ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் குண்டு வெடிப்பு 63 பேர் பலி


26-07-2008 குஜராத் அஹமதாபாத் 55 பேர் பலி, அதே நாளில் குஜராத் சூரத்தில் ஒரு குண்டு வெடிப்பு பலர் காயமடைந்தனர்.


2008 செப்டம்பர் தில்லியில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி


30-10-2008 கவுகாத்தியில் குண்டு வெடிப்பு 70 பேருக்கும் மேல் பலி


இதுபோல் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 40 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இது தவிர இன்னும் சில குண்டு வெடிப்புகளும் நடைபெற்றன.


இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று கணக்கிட்டால் முஸ்லிம்கள் தான் என தெளிவாக சொல்லி விடலாம். இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக அதை ஏதாவது முஸ்லிம் அமைப்புடன் இணைத்து, நான்கு முஸ்லிம்களை கைது செய்து மீடியாவுக்கு காட்டி விடுவார்கள். போலிஸ் உயரதிகாரிகளும் மீடியாக்களுக்கு , குண்டு வெடிப்பைப் பற்றி மேல் தகவல் சொல்ல வேண்டும் என்று வரும் போது உடனே ஒரு முஸ்லிம் அமைப்பின் மீது அதை போட்டு விடுவதை சகஜமாகக் காணலாம்.

இதனால் என்னவாகின்றது என்றால் இந்தியாவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போன்றே உள்ளது. எங்காவது வேலை கேட்டுச் சென்றால் முஸ்லிம் என்றதும் வேலை கொடுக்க யோசிக்கின்றனர். வாடகைக்கு வீடு தேடிச் சென்றால் பிற மதத்தவர்களாக இருந்தால் முஸ்லிம்களுக்கு வீடு தர யோசிக்கின்றனர். பொது இடத்தில் ஒரு கடையில் ஏதாவது பையை வைத்து விட்டு, டாய்லெட் போய்ட்டு வருகிறேன் என்று கூட சொல்ல முடியவில்லை. ஏன்? முஸ்லிம்கள் எடுத்தவுடன் தீவிரவாதியாகத் தான் பார்க்கப்படுகின்றனர்.

மீடியாக்களும் எந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், போலிஸ் விசாரிப்பதற்கு முன்பே இவர்களே நன்றாக ஜோடனை செய்யக் கற்றுக் கொண்டு விட்டனர். இவை போன்றவை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்பது போலவே காட்டத் தொடங்கி விட்டன.


ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் இந்த விஷயங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது தெளிவாக விளங்கும். 2003 க்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றிய விபரங்களையும் அதன் விசாரணைகள் குறித்தும் பார்த்தாலே இந்த விஷயங்கள் புரியும்.


குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் காவல் துறை உயரதிகாரிகள் வாயில் வராத ஏதாவது ஒரு அரபிப் பெயரில் ஒரு அமைப்பின் பெயரைக் கூறி, அது தான் காரணம் என்று கூறி விடுவர்.

இந்தியா டிவி போன்ற புழுகு செய்திகளை வெளியிடும் தொ(ல்)லைக் காட்சிகளும் தங்களுக்கு மின்னஞ்சல், பேக்ஸ் வந்ததாக ஏதாவது கட்டி விடும்... உடனே இந்தியா டுடே, தினமல(ம்)ர் போன்ற சாக்கடைகளும் அதை வாரி எடுத்து முதல் பக்கங்களில் வெளியிட்டு சொறிந்து கொள்ளும்.

உண்மையில் இந்த குண்டு வெடிப்புகள் குறித்தெல்லாம் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலே உள்ள குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததும் முஸ்லிம்களின் மீது உடனடியாக பழி போடப் பட்டது. அதற்குப் பிறகு மேல் விசாரணை ஏதுமின்றி வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. இதில் மாலேகான் குண்டு வெடிப்பு மட்டும் தோண்டி துருவப்பட்டுள்ளது. அதில் ஒரு சங் பரிவார் பெண் சாமியாருக்கு நேரடி தொடர்பு இருப்பதும், இராணுவ உயரதிகாரிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதும் அப்பட்டமாக வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த விசாரணையை மற்ற குண்டுவெடிப்புகளை விசாரிக்கும் போலிஸ் விசாரிக்காமல் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணை செய்ததாலே கண்டுபிடிக்கப்பட்டது.

போலிஸ் விசாரணை செய்திருந்தால் வழக்கம் போல் பதத்துப் போய் இருக்கும். மாலேகானில் குண்டு வெடித்ததும் 8 முஸ்லிம் இளைஞர்கள் தான் இதைச் செய்தது என்று கூறி, அவர்களுக்கும் சிமிக்கும் தொடர்பு உண்டு என்று கதை கட்டி, முகத்தில் முக்காடு போட்டு கைது செய்து காமெடி செய்தது போலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திக்கு

அந்த பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் இணைந்து இராணுவ உயரதிகாரிகள் சிலரும் RDX உள்ளிட்ட வெடிப் பொருட்களை கடத்திக் கொணர்ந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியது அம்பலமாகி இருக்கின்றது. என்னதான் அம்பலமானாலும் இவர்களை தண்டிக்க மட்டும் முடியாது. ஏனெனில் சட்டமும், நீதிபதியும், வக்கீல்களும், போலிசாரும் இவர்களுக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.

இதில் சில நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தியையும் குறிப்பிடுவது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சமீபத்தில் எதிர்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான அத்வானியை சந்தித்து சில விளக்கங்கள் அளித்தார். பாதுகாப்பு ஆலோசகரே நேரடியாக வந்து ஏன் அத்வானியை சந்திக்க வேண்டும்?

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க ஆலோசனையா? என்றால் இல்லை.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவதைத் தடுப்பது தொடர்பாகவா? என்றால் இல்லை

நாட்டில் நடக்கும் லஞ்ச லாவண்யங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலா? என்றால் இல்லை

மாலேகான் குண்டு வெடிப்புக்கான காரணகர்த்தாவான பெண் சாமியாரை போலிசார் விசாரணையில் வைத்துள்ளனர். அந்த பெண் சாமியாரே குண்டு வைத்ததை ஒத்துக் கொண்டுள்ளார். சங் பரிவாரின் முக்கிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளதால் கலக்கம் அடைந்துள்ள அத்வானி அதைக் கண்டித்து குரல் கொடுக்கின்றார். இதனால் பதறிப் போன மத்திய காங்கிரஸ் அரசு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பி அவரை தாஜா செய்கின்றது. இந்த நிலை இருந்தால் நீதி விசாரணை எப்படி நடக்கும்?

இன்னும் சில செய்தி துணுக்குகளைப் பார்க்கலாம்.

மத்தியபிரதேசம் சோப்தா குலாப்சிங் என்ற RSS பிரமுகர் வீட்டில் அம்மோனியம் நைட்ரேட் 7 மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்டாக கைப்பற்றப்பட்டது.

2002 மோவ் என்ற ஊரில் உள்ள கோவிலில் குண்டு வெடித்தது. முதலில் முஸ்லிம்களின் மீது பழி போட்டு விட்டார்கள். பின்னர் போலிஸார் விசாரணையில் அந்த குண்டுவெடிப்புக்கும் விஸ்வஹிந்த் பரிஷத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

19-10-2008 கேரளாவில் உள்ள தளச்சேரி RSS தலைவர் விபின்தாஸ் அவர்களின் வீட்டில் வெடிக்கும் தயார் நிலையிலான 20 வெடி குண்டு கைப்பற்றப்பட்டன.


கர்நாடகாவில் தேவாலயம் தாக்குதல் நடத்தப்பட்டது. அது தொடர்பாக ஒரு சங் பரிவார் தலைவர் சுரேஷ் காமத் வீட்டில் தேடிப் போனது போது 397 ஜெலட்டின் 1200 டெட்டர்னேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. (பெங்களுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இந்த ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு விசாரனை ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)


கோத்ரா சபர்மதி இரயிலில் தீக்கிரையாக்கியதும் சங் பரிவார் தான். அதைப் பற்றிய விசாரணைகளில் இரயிலின் வெளியில் இருந்து தீப்பற்ற வைக்கவில்லை. உள்ளேயே இருந்து தான் தீப்பற்றியுள்ளது என்றும் விசாரணை அறிக்கை கூறியுள்ளது. ரெயில் நிறைய சங் பரிவார் கூட்டமாக இருக்கும் போது வெளியில் இருந்து சிலர் சேர்ந்து தீ வைக்க முடியுமா என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை.

குஜராத் கலவரம் நிகழ்ந்த பிறகு டெஹல்கா பத்திரிக்கை விசாரணை நடத்தி, கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் அனைவரையும் ரகசிய பேட்டி கண்டது. அனைவரும் தாங்கள் செய்த கொலைகள், கொள்ளைகள் குறித்து பெருமிதமாக பேட்டி கொடுத்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு உதவிய மோடி, மற்றும் அரசு அதிகாரிகள் குறித்தும், உதவிய விதம் குறித்தும் தெளிவாகக் கூறினர். இதன் வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன.


சமீபத்தில் குஜராத்தில் ஒரு இடத்தில் குண்டு வெடித்தது. உடனே அது தொடர்பாக முஸ்லிம்கள் அமைப்பு தான் காரணம் என்று குற்றம் சாட்ட்ப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் மோடி அரசு குண்டுகளைக் கைப்பற்றியது. இது முழுக்க முழுக்க நாடகம் என்று நிரூபிக்கப்பட்டது. குண்டு செயல் இழக்கச் செய்வதை தொலைக்காட்சியில் காட்டும் போது ஏதோ பக்கோடா பொட்டலத்தைப் பிரிப்பது போல் போலிசார் பிரித்துக் காட்டினர்.. என்ன கொடுமடா இதெல்லாம்...


மேற்சொன்னவை அனைத்தும் அப்பட்டமான உண்மைகள். ஆனால் இதில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்தும் சரியான முறையில் விசாரணை செய்யப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகும்....

உண்மையான முறையில் விசாரணைகள் மேற்கொண்டு, நீதியுடன் விசாரிக்கப்பட்டால் சங் பரிவார்களின் முஸ்லிம்களின் மீது பழி போடுவதற்காக நடததப் பெற்ற குண்டு வெடிப்பு சதிகள் அனைத்தும் அம்பலமாகும்... நீதி தேவதையின் கண் கட்டு அவிழ்க்கப் படுமா? என்பதற்கு காலமே பதில் சொல்லும்.
இது பதிவர்களுக்காக...

குண்டு வெடிப்புகள் ஏது நடந்தாலும், மீடியாக்களுக்கு சிறிதும் சளைக்காமல் நம் பதிவர்களும் முஸ்லிம்கள் மீது சுலபமாக பழி போடுவதைக் காணலாம். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலவும், தீவிரவாதத்திற்கு முழு ஆதரவு தருவது போலவும் ஒரு மாயையை திணிக்க முயல்கின்றனர். இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.

தமிழ்நாட்டில் தீவிரவாதத்தையோ, குண்டு வெடிப்புகளையோ முஸ்லிம்கள் எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்புவதில்லை என்றும் சக நண்பரும் குற்றம் சாட்டினார். கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், புதுவை முஸ்லிம் பெண்களுக்கு ஜவுளிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், சுற்றுலாத் தளங்களிலும் சுற்ற மட்டும் தான் தெரியும் என்று நினைத்துக் கொள்பவர்கள் இந்த தீவிரவாத கண்டன ஆர்ப்பாட்டப் படங்களையும் பாருங்கள். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் தீவிரவாத எதிர்ப்பு, மற்றும் அனைத்து குண்டு வெடிப்புகளையும் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்று வழியுறுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.




Friday, November 21, 2008

ஒரு பனியனின் கதையும், இன்னொரு லவ் லெட்டரும்!

என் நண்பன் பரணியைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கேன். அவனைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கு... அவனோட வாழ்க்கையில் எத்தனை காதல்கள் வந்ததுன்னு அவனுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... என்று தெரியவில்லை.

நாங்க அப்ப சென்னையின் புறநகரில் ஒரு இடத்தில் தங்கி படித்துக் கொண்டு இருந்தோம். ஒரு வீட்டின் மாடியில் தான் ஹாஸ்டல். கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்திலும், மொட்டை மாடியிலும் நாங்கள் தங்கி இருப்போம்.

பரணியோட ஷெட்யூல் எப்பவுமே டைட்டா இருக்கும். நாங்கள் காலெஜிற்கு கிளம்புவதற்கு முன்பே கிளம்பி விடுவான். எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.

பரணியோட எழுத்து அவனோட தலையெழுத்து மாதிரி இல்லாம, அழகாவே இருக்கும். கவிதையும் எழுதுவான். அடிக்கடி லவ் லெட்டகளை எழுதித் தள்ளுவான். ஒவ்வொரு தடவையும் பெறுநர் இடத்தில் ஒரு பெயர் இருக்கும்.

அப்ப மெட்ரிக்குலேசன் படிக்கும் ஒரு பொண்ணை மூன்று மாதமாக சுற்றிக் கொண்டு இருந்தான். அந்த பொண்ணு இவனைக் கண்டு கொள்வதே இல்லை. அந்த பெண்ணின் அப்பா அந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர். ஸ்டேசனரி கடை வைத்திருந்தார். வீடு மூன்று மாடி. எங்களது மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அந்த பெண்ணின் வீடு தெரியும். இங்கிருந்து அந்த வீட்டையை பார்த்துக் கொண்டு இருப்பான். அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.

ரொம்ப கலக்கலாக ஒரு லவ் லெட்டரை எழுதி அந்த பெண்ணிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தான். ஆனா லெட்டரை கொடுக்கும் போது அந்த பொண்ணோட மாமா பையன் பார்த்து விட்டான்.

அப்புறம் என்ன ஒரே களபரம் தான்... நண்பர்கள் சிலர் பரணியை பாதுகாப்பாக ஹாஸ்டலில் ஒளித்து வைத்துக் கொண்டோம். அந்த பெண்ணின் மாமா மகன் சத்தம் போட்டு ஊரையே கூட்டி விட்டான். ஏற்கனவே எங்கள் மேல் காண்டாக இருந்த அந்த பகுதி மக்களும் பெரும் திரளாக ஹாஸ்டல் முன்னால் குவிந்து விட்டனர். அந்த பெண்ணின் அப்பாவும், இன்னும் சில கட்சிக்காரர்களும் ஆஜரானதால் மேட்டர் மேலும் சூடாகி விட்டது. ஹாஸ்டலின் நுழைவு வாயிலில் நாங்கள் நின்று கொண்டு யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டோம்.

சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. எங்களது ஆதரவளித்த சிலரால் அந்த முழுக் கூட்டத்தையும் சமாளிக்க இயலவில்லை. மாடியில் இருந்த பரணி வேகமாக கீழே இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் சில இளவட்டங்கள் அடிக்க வர பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டோம். அவன் அந்த பெண்ணின் அப்பாவிடம் சென்று “ சார், நீங்க இந்த பகுதியில் பெரிய மனிதர். உங்க மேல நாங்களெல்லாம் மதிப்பு வைத்திருக்கிறோம். இவன் வீணா என் மேல பழி போடுறான். இது உங்க மகளோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் உங்க பெண்ணுக்கு லவ் லெட்டர் ஏதாவது கொடுத்தேனா என்று அந்த பெண்ணிடமே கேட்டு விடலாம். அப்படி ஆமான்னு சொல்லிட்டா எந்த தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்” என்று தடாலடியாக சொல்லி விட்டான்.

எங்களுக்கு எல்லாம் விசுக்கென்று ஆகி விட்டது. சனியனை விலை கொடுத்து வாங்குறானே என்று...... கூட்டம் மொத்தமும் அவருடைய வீட்டிற்கு சென்றது. அந்த பெண் வெளியே வந்து “ இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டது.

அப்புறம் என்ன, பிராது கொடுத்தவனையே கலாட்டா பண்ணி நோகடித்து, மண்டகப்படி நடத்தி விட்டோம். அப்புறம் பரணி அந்த பெண்ணை விட்டு விட்டு வேற ஒரு பெண் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டான்.




அப்புறம் பனியனின் கதையையும் சொல்லி விடுகிறேன். எங்கள் கல்லூரிக்கு வார விடுமுறை வெள்ளிக் கிழமை தான். (வெள்ளியே தான்) வெள்ளி மதியம் மாணவர்கள் சென்னையில் உள்ள அவரவர் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்று விடுவார்கள். நான், பரணி, மற்றும் சிலருக்கு சென்னையில் யாரும் இல்லை. எனவே ஹாஸ்டலிலேயே இருப்போம். (இரவு சாப்பாடு வெளியே)போரடித்தால் செல்லும் இடம் சென்னை மெரினா பீச்.

கண்ணகி சிலைக்கு அருகில் இருந்து கிளம்பி அண்ணா சமாதி வரை செல்வோம். அப்படியே கடலில் குளிப்போம். ஒருநாள் குளித்து விட்டு பஸ் ஏற அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, கடலில் குளித்ததால் ஈரமான பனியனை பரணியிடம் கொடுத்து காயப் போடச் சொன்னேன். பஸ்ஸில் ஏறி சீட் பிடிக்கும் வேலை என்னுது என டீலிங். படுபாவி சைட் அடிக்கும் மும்முரத்தில் பனியனை மறந்து விட்டான்.

அப்புறம் என்ன ஒருவாரத்துக்கு ஒரே அழுகாச்சி... “பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” என்று.... அதற்கு பின் பல வருடங்களாக எப்பப் பார்த்தாலும் பரணி என்னைக் கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பான்... ”வாடா! போய் பனியனை அண்ணா சமாதியில் தேடலாம்” என்று... :))))


(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)

Wednesday, November 19, 2008

குறள் கதைக்கான வியாக்கியானங்களும், சில சிறு குறிப்புகளும்..:)

எங்களது பாசக்கார குடும்பத்து கயல்விழி முத்துலக்ஷ்மி அக்காவுக்கு இன்று பிறந்தநாள். வேடந்தாங்கல் உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

***************************************************************************

சமீபத்தில் ஒரு குறள் கதை எழுதினேன். மனிதனின் மறு பிறவியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது அந்த கதை. குறளில் கூறப்படும் எழுமையும் ஏமாப்புடைத்து என்ற வாசகத்திற்கு தோதுவாக வருவது போல் அமைத்து இருந்தேன்.

அதில் கடல் குதிரை (Sea Horse) பற்றிய ஒரு கதை வரும். அதற்கு சில விளக்கங்கள் தர வேண்டியது முக்கியமாகின்றது. உலகில் இருக்கும் உயிரினங்களில் கடல்குதிரை போண்றவை சில சிறப்புகளைப் பெறுகின்றன. கடல் குதிரையின் சிறப்பம்சம் ஆண் கரு கொள்ளும் என்பது தான். ஆண் கடல்குதிரையின் வயிற்றில் இதற்கான பை அமைப்பு இருக்கும். பெண் கடல் குதிரை ஆணின் வயிற்றில் முட்டைகளை இட்டு விடும். ஆண் கடல் குதிரை தன் கருப்பையில் உள்ள முட்டைகளின் மீது தனது செமனை விடும். பின்னர் கருவுற்று, குட்டி கடல் குதிரைகளை பிரசவிக்கும்.




பெண் கடல் குதிரையின் வயிற்றில் இருக்கும் முட்டை அதன் எடையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இருக்குமாம். இதனால் முட்டையிடும் காலம் பெண் கடல் குதிரைக்கு பாதி பிரசமத்திற்கு சமமாகி விடும். ஆண் அந்த முட்டைகளை வயிற்றில் வைத்து, நிறைய கஷ்டத்துடன் பிரசவிக்கும்.

இன்னொரு வித்தியாசம் ஆண் கருவுற்றதும், பெண் இன்னொரு இணையைத் தேடி சென்று விடும். ஆனாலும் தனது கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும் ஆணை தினமும் வந்து சந்தித்து விட்டு செல்லும் என கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

***************************************************************************

அந்த குறள் கதையோடு சேர்ந்த இன்னொரு செய்தி... ஏழு பிறவிகள் என்று சொல்லும் குறளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கைப் படி மனிதன் பிறக்கிறான். இறந்ததும் இறுதி காலத்தில் இறைவனிடம் சென்று நாம் பூமியில் செய்த நன்மை தீமைக்கு தகுந்தாற் போல் சொர்க்கம், நரகம் கிடைக்கும். மனிதன் மீண்டும் ஏதாவது உயிராகவோ, தாவரமாகவோ பூமியிலேயே மறுபிறவி எடுப்பான் என்பதில் நம்பிக்கையில்லை.

மேலும் திருக்குறள் தொடர்பாக ஒரு பதிவு எழுதும் திட்டமும் உள்ளது. நேரம் கிடைத்தால் எழுதலாம்.

***************************************************************************

ராமலக்ஷ்மி அக்கா, ஈழம் தொடர்பாக ஒரு கவிதை எழுதி இருந்தார்கள். அதன் கருத்தாக்கம் கவர்ந்து விட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள்

***************************************************************************

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்கள் கொடூரமாக இருந்தது. இதைப் பற்றிப் பல பதிவர்களும் எழுதி உள்ளனர். எனவே அதைப் பற்றி எழுத விருப்பமில்லை. ஆனால் இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

***************************************************************************

சுப்ரமணியபுரம் படம் பார்த்ததற்குப் பிறகு வேறு தமிழ் படம் பார்க்கும் மூடு வரவில்லை. ஒரு மலையாள நண்பரின் வற்புறுத்தலால் கத பறயும் போல் (കഥ പറയുമ് മ്പോല് )படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படம். ரசித்துப் பார்த்தேன். சரி தமிழில் எப்படி எடுத்துள்ளார்கள் எனப் பார்க்க குசேலனை பதிவிறக்கினேன். ஓட விட்டு, ஓட விட்டு அரை மணி நேரத்தில் குசேலனை பார்த்தேன். ஒரு படம் எவ்வளவு அழகாக எடுக்கலாம் என்பதற்கு கத பறயும் போல் உதாரணம். அதே படத்தை எவ்வளவு அசிங்கமாக எடுக்கலாம் என்பதற்கு குசேலன் உதாரணம்.



***************************************************************************

இவையெல்லாம் தனித் தனி பதிவுகளாக போட வேண்டி நினைத்தவை. தமிழ் மணம் சரியாக வேலை செய்யாததால் எழுதும் மூடு வரவில்லை.. எனவே மக்களே தப்பி விட்டீர்கள்... :))

Saturday, November 15, 2008

காலை ஆட்டிக் கொண்டே பதிவு போடுவோம்ல

என் இனிய தமிழ் மக்களே! ஒரு வாரமா இன்டர்நெட் சரியா வேலை செய்யலை.... (உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல் என்று தோன்றுகின்றது.. STC காரனுக பைத்தியம் பிடிக்க வச்சிட்டானுக..) மண்டை காய்ஞ்சு போச்சு.. நிறைய பதிவு எழுதும் ஐடியா கிடைத்தும் பதிவு போட முடியலை... அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...
(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துடான்னு தூக்கிடுவாங்களாமே.... அதனால இந்த பதிவு,.. :))) )

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பூம்பாவாய் ஆம்பல் படித்ததில் இருந்து ஆர்குட் மேல ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இங்க (சவுதியில்) ஆர்குட் தடை செய்யப்பட்டது என்பதால் உள்ளே நுழைய முடியாமல் இருந்தது. இணைய உலகில் நண்பர் ஒருவர் ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார். உடனே உள்ளே நுழைந்தாச்சு.... ஆனால் ஒரு சிறு தவறும் நிகழ்ந்து விட்டது. ஆர்குட்டில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் சேர்க்கவா என்று கேட்கப்பட்டது போது, அனைவரையும் ஒரே கிளிக்கில் செலக்ட் செய்து ஆம் என்று தட்டி விட்டேன். பார்வேர்ட் மெயிலில் வந்த மின்னஞ்சல்களுக்கும் என் அழைப்பு சென்று விட்டது. அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்குட்டில் நாம வாங்கிய ப்ளாட் இது தான்..

http://www.orkut.com/Main#Profile.aspx?uid=3060450896209263868

வாங்க மக்களே! ஆர்குட் ஒன்றும் நம்மை அதிகமாக கவரவில்லை... அண்ணன் TBCD சொல்வது போல் எதா இருந்தாலும் ஜிடாக்கில் பேசுவது தான் நல்லா இருக்கு... :) ஆனால் ஆர்குட் போனதில் ஒரு பயனும் இருந்தது... அதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு சொல்லலாமான்னு தெரிய்லீங்ண்ணா... ;)))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

போன வாரம் முழுவதும் இங்கிருந்து 35 கி.மீ தூரத்தில் ஒரு மலைப் பிரதேசத்தில் வேலை.... அது ஒரு அரச குடும்பத்து மாளிகை. அங்கு நமது நிறுவன ஆட்கள் வேலை செய்கின்றனர். முக்கியமான வேலைக்கு மட்டும் சென்று வேலையை முடித்து விட்டு ஓடி வந்து விடுவோம். செப்டம்பர் முதல் மார்ச் வரை அங்கு செல்லவே மாட்டேன். ஆனால் சில அவசர வேலைகளுக்காக செல்ல வேண்டி வந்து விட்டது. கடும் குளிர்... ஸ்வெட்டர்.. மங்கி குல்லாய் என்று ஓட்டி விட்டேன். .. இப்ப சொல்ல வந்தது அந்த கதை அல்ல....

மாலை நேரங்களில் மலை முகடுகளில் நின்று வேடிக்கை பார்ப்பேன்... மேகம் நம்மை நகர்ந்து செல்லும் போது கிடைக்கும் சிலிர்ப்பு அலாதியாக இருக்கும். அந்த மலையில் நிறைய குரங்குகள் இருக்கும்... அவைகளையும் வேடிக்கை பார்ப்பேன்... குரங்கு குழுக்களாக இருக்கும். பெரிய குரங்கு தான் தலைவர். சில பெண் குரங்குகள், சில ஆண் குரங்குகள் குட்டிகள் எல்லாம் அந்த குழுவில் இருக்கும்.. அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு தலைமைக் குரங்கு ஒரு சிறு குரங்கைத் துரத்தத் தொடங்கியது. சிறு குரங்கு அலறி அடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் தப்பி ஓடியது.

தமிழ் பட சேஸிங் போல இருந்தது.. சில நேரங்களில் பெரிய குரங்கின் கைகளில் சிக்கியும் தப்பியது... இறுதியில் பெரிய குரங்கு கடைசியில் வெற்றி பெற்றது. சிறு குரங்கை கதற கதற ***** செய்தது... ஓரிரு நிமிடங்களில் அந்த சிறு குரங்கு ஒரு மரண ஓலத்துடன் நடக்க இயலாமல் நடந்து சென்றது. மிகவும் சிறிய குரங்கு அது... மனதுக்கு கஷ்டமாக இருந்தது... மனிதர்களிலுல் இதை விட மோசமான மிருகங்கள் சில இருக்கின்றன... அவர்கள் நடு ரோட்டில் வைத்து தலை வெட்டப் பட வேண்டியது ஏன் என்ற அவசியத்தை அந்த நிகழ்ச்சி உணர்த்தியது.



குரங்குகள்.... தெரியாதவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்ளவும்..ஹிஹிஹி

பள்ளத்தாக்கு... :) மேகம் இல்லாத ஒரு மதிய வேளையில்...


அங்கு வளரும் பூனை... ஒரிஜினல் பட்டரும், சீஸூம் தான் சாப்பிடுமாம்... ;))

கேம்ப்பில் உள்ள தபால் பெட்டி... ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒரு பெட்டி.... குளிருக்கு சொகுசாக பூனையார் தூங்குகின்றார்.. :)))

ஜன்னல் மேல் ஏறி நிற்கும் பூனைகள்... ரோட்டிற்க்கு கீழே மலைகளால் சூழப்பட்ட சிறு கிராமம் மேக மூட்டத்திற்கு இடையே தெரிகின்றதா? என்று பாருங்கள்...

அலுவலகத்தில் உள்ள மீன் தொட்டி... :))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களாம்.. அதனால் தமிழ் மண கருவிப்பட்டையில் மேல் நோக்கி இருக்கும் (Thumps up) கையை அழுத்தி விட்டு செல்லுங்கள்.... இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

Monday, November 10, 2008

எழுமையும் ஏமாப்புடைக்கும் குறளின் கதை


மாடியில் இருந்து வேகமாக இறங்கிக் கொண்டு இருந்தார் தொழிலதிபர் முகில்வேந்தன். நேர்த்தியான ஆடையுடன் மிடுக்காக இருந்தார். வயது 60 என்பதை சொன்னால் நம்ப இயலாத அளவு தோற்றம்.

தலைமுடி ஆங்காங்கே இப்போதுதான் வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் அளவு, இளமையாக இருந்தார். தமிழகத்தின் சிறந்த, பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர். மாடியில் இருந்து இறங்கி ஹாலில் வந்தவுடன் அங்கே அவரது காரியதரிசி தேன்மொழி நின்று கொண்டு இருந்தார்.

அந்த ஆலமரம் பரந்து விரிந்து இருந்தது. அதன் விழுதுகளில் முடிச்சுக்கள் போடப்பட்டு சிறுவர்களும், சிறுமிகளும் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்தனர். வழிப்போக்கில் இருப்பதால் பிரயாணிகள் அதன் கீழே இளைப்பாறிக் கொண்டு இருந்தனர்.

பிரயாணிகளின் குழந்தைகளுக்காக ஆலமரத்தின் கிளைகளில் கட்டப்பட்ட தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தன. சில அழும் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

“காலை வணக்கம் சார்”

“தேன்மொழி! காலை வணக்கம்! சொல்லும்மா! இன்னைக்கு என்ன என்ன வேலை இருக்கும்மா?”

“காலை 10 மணிக்கு நமது அலுவலகத்தில் சீனாவில் இருந்து வந்து இருக்கும் பிரதிநிதிகளோட நம்ம பங்கு விற்பனை தொடர்பா பேசனும். 11 மணிக்கு இந்தியாவில் இருக்கும் நம் நிறுவன மேலாளர்களுடன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தருவதைப் பற்றி விவரிக்கனும். 12 மணிக்கு நம்ம ஆசிரமக் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். 1 மணிக்கு..”

“போதும்மா! போதும்.. மிச்சத்தை அப்புறமா போற வழியில் பேசிக்கலாம்”

“நல்லது சார்! ஆனா இப்ப நாம டாக்டர் சாரங்கனைப் பார்க்கப் போறோம். அதுதான் ஒன்பதில் இருந்து பத்து மணி வரையிலான அட்டவணையில் இருக்கு”

“ஆமாம்மா! அது ரொம்ப முக்கியம். சரி நீ சாப்பிட்டியாம்மா?”

”வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுதான் வந்தேன் சார்”

“அப்ப சரி கிளம்பலாம்”

கடலின் அடி ஆழம். ... அழகான பாசி படர்ந்த பாறைகளின் அவன் அமர்ந்திருந்தான். அந்த ஆண் கடல் குதிரை கடல் நீரில் இங்கும் அங்கும் அலைந்தவனாக அமரவும் இயலாமல், மிதக்கவும் இயலாமல், முகத்தில் சொல்ல இயலாத தவிப்புகளால் தவிப்பது தெரிந்தது. பார்வையில் யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிகின்றது.


ஓ.. கண்களில் பிரகாசம்..... தனது இணையை கண்டு விட்ட மகிழ்ச்சி..


“ஏன் பெண்ணே! இவ்வளவு நேரம்?”


“கிளம்புவதில் நேரமாகி விட்டது. அதனால் தான்.. இப்போது உங்களுக்கு எப்படி உள்ளது?”


“சுமை அதிகமாக தெரிகின்றது பெண்ணே!. இன்று இரவு பிரசவம் நிகழும் என்று தெரிகின்றது. எப்படியாவது இன்றைய பொழுதைக் கழித்து விட வேண்டும்”


“எனக்கும் மிகவும் கடினமாக இருக்கிறது. என்னுள்ளும் முட்டை உருவாகி விட்டது. நாளை என் புது கணவனுக்கு அந்த முட்டையைத் தர ஆவலாக இருக்கின்றேன்”


“ஓ.. அப்படியா மிக்க மகிழ்ச்சி..”


“நாளைக் காலையும் என்னை சந்திக்க வா என் இனிய பெண் கடல் குதிரையே! அதற்குள் நம் குட்டிகளை ஈன்று இருப்பேன்”


“நல்லது சென்று வருகின்றேன். என் புது கணவர் தேடுவார். வருகிறேன்”


“வருகைக்கு மிக்க நன்றி”

“சொல்லுங்க டாக்டர்! இது முடியுமா? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு! ”

டாக்டர் சாரங்கனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் தொழிலதிபர் முகில்வேந்தன்.

“நீங்க கவலைப்பட இதில் ஏதுமில்லை. நாங்க நல்லா பரிசோதனை செய்து வெற்றி கண்ட விடயம் தான் இது. ஒரு மணி நேரம் போதும். அனைத்து விபரங்களும் கிடைக்கும்”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏதோ ஒரு ஆர்வம்.. அதான் இதெல்லாம்”

“தவறு ஏதுமில்லை”

ஒலிக்க ஆரம்பித்தது .. அதிகாரம் - அடக்கமுடைமை
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

“என்ன டாக்டர் இது.. கடிகாரம் திருக்குறள் சொல்லுது?”
“இது குறள் கடிகாரம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு குறள் சொல்லும். நமது வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்ல அவ்வப்போது குறளைக் கேட்டுக் கொண்டு இருப்பது உதவுமே”

“மிக நல்ல விடயம் டாக்டர்! எனது அலுவலக அறைக்கும் இது போல் ஒரு குறள் கடிகாரம் வாங்க வேண்டும்”

“சரி முகில் வேந்தன். இந்த படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். இனி நாம் வேலையைக் கவனிக்கலாம்”

“ராணி! ராணி! ஆபத்து! ஆபத்து”

கூக்குரலுடன் அந்த வேலையாள் அறுங்கோணங்களில் அமைந்து இருந்த அறைகளை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆகி விட்டது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்?” கேட்டது அந்த தேன் கூட்டை நிர்வகிக்கும் இராணித் தேனீ.

“ராணி! நம் கூட்டை கலைத்து, நாம் சேகரித்து வைத்து இருக்கும் தேனை எடுத்துச் செல்ல மனிதர்கள் நெருப்புடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக அவர்களைத் தாக்கி நம் கூட்டை காக்க வேண்டும்”

“இல்லை பணிப்பெண்ணே! அவர்கள் மனிதர்கள் நெருப்பினால் நம்மைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். நாம் சேமித்து வைத்த தேன் தான் அவர்களின் உணவு. இந்த ஆண்டு இங்கு மழை சரிவர பெய்யவில்லை. எனவே விளைச்சலும் குறைவு. அதனால் தான் நமக்கே உண்ண மகரந்தம் கிடைக்கவில்லை. மலைகளில் சென்று உண்டு வந்து, அதன் எச்சத்தை சேமித்து வைத்துள்ளோம். அவர்கள் நெருக்கி வந்தால் நாம் அனைவரும் இங்கிருந்து சென்று விடலாம். நமது மக்கள் அனைவரையும் விரைவில் ஒன்று திரட்டு. வேறு இடத்தில் சென்று வீடு கட்ட வேண்டும்”

“உத்தரவு ராணி! அப்படியே செய்யலாம்”


“ இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்கள்”

“ஆம்” ஈனஸ்வரத்தில் முகில் வேந்தன் பதிலளித்தார்.

“உங்கள் பெயர் என்னவென்பதை மறந்து விடுங்கள். உங்கள் கண்களை மூடி வைத்துள்ளீர்கள்... இனி உங்கள் மனதை திறக்கிறீர்கள்”

”சொல்லுங்கள் உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகின்றது?”

“நண்பா! என்ன நடந்தது ஏனிந்த சோகம்! நாம் தேவலோகத்தில் இருக்கின்றோம். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“எனக்கு பூலோகத்திற்கு செல்ல சாபமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று சில பிறவிகள் எடுக்க வேண்டுமாம்”

“அப்படி என்ன தவறு செய்தீர்கள்?”

“என்னை ஒரு மனிதனைக் கண்காணிக்கப் பணித்திருந்தார்கள். அவன் தவறு செய்ய நினைத்த போது அவனது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்ய சென்ற போது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்த போதும் பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை”

“ஏன்?”
“தவறை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பான் என்று நினைத்தேன். அவனது பாவ மன்னிப்பு மூலம் அவனுக்கு நல்லதை நாட நினைத்தேன். ஆனால் அவன் கடைசி வரை தனது தவறை நினைத்து வருந்தாததால் ஒரு தீமையை மட்டும் எழுதினேன்”
“ரொம்ப நல்லவனாக இருந்திருக்கின்றாய். வேறு என்ன செய்தாய்?”
“அதே மனிதன் நல்லதை செய்ய நினைத்த உடன் அவனுக்கு ஒரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ய கிளம்பிய போது இன்னொரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ததும் மூன்றாவதாக மற்றோரு நன்மையையும் எழுதிக் கொண்டேன்.”

“நண்பா! இது நல்ல விடயம் தான்.... தேவ லோகத்தில் உனது இந்த சிறந்த குணத்தை பாராட்டி, மேலும் நல்ல அந்தஸ்துகளை வழங்கத்தான் உனக்கு பூலோகத்தில் சில காலம் இருக்க பணிக்கப்பட்டுள்ளது. இது சாபமல்ல. உனக்கு கிடைத்த பரிசு என்று கொள். பூலோகம் சென்று நல்ல முறையில் திரும்ப வாழ்த்துக்கள்!”

“நான் அந்தரத்தில் பறக்கின்றேன். தேவ லோகத்தில் என் நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது ஒரு ராணித் தேனீயாக தேன் கூட்டுக்குள் எனது பணிப்பெண்ணுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு?”

“கடலின் அடி ஆழத்தில் இருக்கின்றேன்.. பாசிகளாகவும், பாறைகளாகவும் தெரிகின்றது. என்னை நோக்கி ஒரு கடல் குதிரை வருகின்றது. ஓ.. என் உடலும் அதனைப் பார்ததும் நிறம் மாறுகின்றது... நானும் ஒரு கடல் குதிரையாகத்தான் உள்ளேன்”

“ம்.. வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது எனக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி நின்று கொண்டு இருக்கின்றது”

“அம்மா! எனக்கு பசிக்குதும்மா”

“கொஞ்சம் பொறு கண்ணே! நம் முதலாளி இப்ப வந்திடுவாங்க.. அவங்க பால் எடுத்ததும் உனக்கு பால் தருகின்றேன்”

“பால் எனக்காகத் தானே சுரக்கிறது? ஏன் அவர்களுக்குத் தர வேண்டும்?”

“பால் உனக்கான தேவையை விட அதிகமாகவே சுரக்கிறது தான்... ஆனால் நமது முதலாளி நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கின்றார். நமக்கு நல்ல உணவு தருகின்றார். குளிப்பாட்டுகின்றார். அவர்கள் வீட்டில் உன்னைப் போல் சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பால் தேவைப்படுகின்றது. எனவே தான் என்னிடம் கொஞ்சம் பாலை எடுத்து விட்டு, மீதியை உனக்குத் தருகின்றனர்.”

“தேன் மொழி கிளம்புவோமா?”

“ஓகே சார்! இப்போதே 10:10 ஆகி விட்டது. சீனப் பிரதிநிதிகள் நமக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனராம்”

“சென்று விடலாம் தேன் மொழி. இப்போது ஒரு முக்கியமான மருத்துவ பரிசோதனை செய்து விட்டு வருகின்றேன். அதை உன்னிடம் சொல்ல ஆசைப்படுகின்றேனம்மா”

“விருப்பமிருந்தால் சொல்லுங்கள் சார்”

“முற்பிறவிகளில் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் சாரங்கன் இரகசியமாக அதைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வந்தார். இன்று என்னை ஆழ் உறக்கத்திற்கு உட்படுத்தி என் முற்பிறவிகளைக் கண்டுபிடித்தார். நான் முன்பு ஒரு ஆலமரமாக, ஒரு தேவலோக மனிதனாக, ஒரு கடல் குதிரையாக, ஒரு பசுவாக, ஒரு ராணித் தேனீயாக பிறந்து இருக்கின்றேன்”

“சோதனைகள் முடிந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அங்குள்ள குறள் கடிகாரம் ஒலித்து, ஒரு குறளைச் சொன்னது... ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து ... டாக்டர் சாரங்கன் கூறினார்... “இந்த குறளுக்கு ஏற்றவராக ஏதோ ஒரு பிறவியில் இருந்துள்ளீர்கள். அதனால் தான் உங்களுடைய அனைத்து பிறவிகளிலும் சிறப்பான தூய வாழ்க்கை வாழ்ந்துள்ளீர்கள்” என்று”

“உண்மை தான் சார்! உங்களுடைய அடக்கமுடைமையே உங்களுக்கு இந்த பிறவியில் பல சிறப்புகளையும், மதிப்புகளையும் அளித்துள்ளது. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்ற குறளுக்கு ஏற்ப உங்களது வாழ்வை சிறந்த கல்வியைக் கொண்டு நிறைத்து இருப்பதால், உங்களது மற்ற பிறவிகளிலும் அதே சிறப்போடும், அடக்கத்தோடும் தான் இருந்து இருப்பீர்கள்!”

Sunday, November 9, 2008

பொரிகடலை கடையும், காதல்களும், சில புத்தக அனுபவங்களும்

புத்தக அனுபவங்களைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத அத்திரி அழைப்பு விடுத்தார். புத்தகம் இருந்தால் சோறு தண்ணி கூட வேண்டாம் என்று திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பழக்கம் இருந்தது. புத்தகப் புழு என்று திட்டு வாங்குவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கின்றது.

பாடப் புத்தகங்களை இந்த பதிவில் கவனமாக தவிர்த்து விடலாம். நான் முதலில் படிக்க ஆரம்பித்தது ராணி தான். அப்போது நான்காவது, ஐந்தாவது படித்துக் கொண்டிருப்பேன். எங்களது சந்தில் இருக்கும் வீட்டுப் பெண்கள் கூட்டாக ராணி வாங்குவார்கள். மதிய அல்லது மாலை நேரங்களில் எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து எனது அம்மா வாசிக்க மற்றவர்கள் கவனமாக கேட்பார்கள். ராணியின் அனைத்து பகுதிகளும் வாசிக்கப்பட்டு அலசப்படும். அப்போது அருகில் அமர்ந்து நானும் கேட்பேன். பின்னர் கொஞ்சம் நானும் வாசிக்கப் பழகினேன்.

பின்னர் 7,8 வகுப்புகளில் சிறுவர்மலர் கவர்ந்தது. அதில் வரும் படக்கதைகள் ரொம்ப பிடித்தவை. பலகுரல் மன்னன் ஜோ நம்ம பேவரைட் பகுதி. ஸ்ரீராம் பெட்ஸ் சார்பில் சிறுவலர்மலருடன் வழங்கிய லேபிளுக்காக முதன்முதலில் தினமலர் வாங்கிய வெள்ளி மறக்க இயலாதது. அதைத் தொடர்ந்து எனக்கு ராணி காமிக்ஸ், அம்புலிமாமா போன்றவற்றை எனது நண்பன் அப்துல் அஹது பழக்கினான். அவர்கள் வீட்டில் இருந்து படிக்க எடுத்து வந்து தருவான். (அஹது குடும்ப சூழலினால் 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்தான்... பின்னர் வேலை தேடி திருப்பூருக்கு சென்று அங்கு இப்போதும் கூலி வேலை செய்து வருகின்றான்.)
கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்.

9ம் வகுப்பு சேர்ந்ததும் பெரிய மாற்றங்கள். நூலகங்களுக்கு செல்ல ஆரம்பித்த காலமது. எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தேன். தினத்தந்தி, தினமலர் என்று தினசரிகளைப் படிப்பேன். நூல்களாக துப்பறியும் நாவல்களே அதிகம் கவர்ந்தன. சங்கர்லால் துப்பறிகிறார் அனைத்தும் தேடித் தேடிப் படித்தேன். துப்பறியும் நாவல்கள் கிடைக்காத போது வேறு நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். நில மங்கை இன்னும் நினைவில் இருந்து விலகாத ஒன்று. இராஜேஷ்குமாரின் நாவல்களை வெறியுடன் படித்த காலமிது. இதே கால கட்டத்தில் தான் மறைத்து விற்கப்படும் (?) சில புத்தகங்களையும் படித்தேன்.


இது என்னுடைய புத்தக அலமாரி இல்லை

11 ம்வகுப்பு படிக்கும் போது மாற்றம் வித்தியாசமாக வந்தது. மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து வீடும். டியூசன் எல்லாம் வீட்டில் அனுப்பவில்லை. எனவே மாலையில் ஊர் சுற்றுவதைத் தடுக்க வீட்டுக்கு சிறிது தள்ளி மெயின் ரோட்டில் பொரிகடலை கடை வைத்து கொடுத்து விட்டார்கள். மாலை 5 முதல் 9 வரை வியாபாரம் பார்க்க வேண்டும். பொரிகடலை(உடைச்ச கடலை), பொரி, பட்டாணி, உப்புக்கடலை(சுண்டல்), அவல் எல்லாம் மொத்தமாக படி கணக்கில் வாங்கி சில்லரையில் விற்க வேண்டும். ( +2 படிக்கும் வயதில் 50 காசு, 1 ரூபாய்க்கு பட்டாணிக்கடலை விற்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை... :( )

கடலை மடித்துக் கொடுக்க பேப்பர் வேண்டும் என்பதால் பழைய பேப்பர்களையும் விலைக்கு வாங்குவோம். பலதரப்பட்ட பாடப்புத்தகங்கள், நாவல்கள், வாராந்திரிகள், தினசரிகள் எல்லாம் கடைக்கு எடைக்கு வரும். வியாபாரம் இல்லாத நேரங்களில் அவைகளைப் படித்துக் கொண்டு இருப்பேன். வரும் புத்தகங்களுக்கு இடையில் இருக்கும் துண்டுக்காகிதங்கள், கிறுக்கியவை மூலம் தெருவில் பலரின் காதல் கதைகளை அறிந்து கொள்ள முடிந்தது சுவாரஸ்யமான அனுபவம். இந்த காலகட்டத்தில் நூலகங்களுக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்தது. உறுப்பினர் அட்டையும் காலாவதியாகி விட்ட காலமிது.

+2 முடியும் வரை (1996) வரை பொரிகடலைக் கடை வியாபாரம் மாலைகளில் தொடர்ந்தது. +2 முடிந்ததும் அடுத்த படிக்க முடியாததால் வேறு கடைக்கு மாற்றம் நிகழ்ந்தது. இங்கு கடை முழு நேரம் என்பதால் நூலகம் செல்வதும் குறையத் தொடங்கியது. டீக்கடையில் தினத்தந்தியுடன் அமைதியடைய வேண்டி இருந்தது. நேரம் கிடைக்கும் போது அவசர அவசரமாக நூலகங்களுக்கு சென்று திரும்புவேன்.

ஒரு வருடம் இதே கதைதான்... 1997 ல் காலச்சக்கரம் வேறு திசையில் சுழன்று அடித்து சென்னையில் வந்து போட்டது. துபாய் கம்பெனி செலவில் படித்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தேன். தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே 50 மீட்டர் அருகில் நூலகம். ஆனாலும் காலையில் சென்று மாலையில் திரும்புவதால் நூலகம் செல்ல வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை எங்களுக்கு வெள்ளி விடுமுறை, நூலகத்திற்கும் வெள்ளி விடுமுறை.... என்ன கொடும பாருங்க..

துபாய் வந்த பிறகு(1998) வெகுநாட்கள் புத்தகங்களுக்கும் நமக்கும் இடையே தொடர்பு அறுந்து போய் இருந்தது. அதிக பட்சமாக ஆனந்த விகடனும், தமிழ் கம்ப்யூட்டர் என்ற இதழுமே துணையாக இருந்தது. ஷார்ஜா UAE Exchange பின்புறம் இருக்கும் மலையாளி கடை தான் அப்போதைய வடிகால்.

நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு நண்பர் வேலை செய்தார். எனக்கு வேலையில் ஜூனியர். ஆனால் நிறைய கவிதை, கதைப் புத்தகங்களை ஊரில் இருந்து வாங்கி வந்து படிப்பார். பொழுது போகாத நேரங்களில் அவரிடம் வாங்கி படிப்பேன். வைரமுத்து கவிதைகள், நாவல்கள், பிற மொழி கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் (கலில் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்..) வாசிக்கக் கிடைத்தது. அங்கு தான் கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் போன்றவை படித்தேன்.

துபாயில் இருந்த போது வாசிப்பு வேறு மார்க்கத்திலும் இருந்தது. அது ஆங்கில தினசரிகளின் வாசிப்பு. ஆங்கில தினசரி காசு கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை. எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பருக்கு ஈரான் வங்கியில் பணி. மாலை வேலை முடிந்து வரும் போது Gulf News, Khaleej Times ஆகிய இரு தினசரிகளையும் எடுத்து வருவார். இரவு உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் பார்ப்பேன். மறுநாள் காலை அதை மீண்டும் வங்கியில் சென்று வைத்து விடுவார். அப்போது தான் நிறைய அரசியல் சம்பந்தமான கட்டுரைகள் படிக்க நேர்ந்தது. (நன்றி அரவிந்த் அண்ணே)

2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ). தங்கமணிக்கும் குமுதம், ராணி படிக்கும் ஆர்வமெல்லாம் இல்லாததால், நமக்கு ஆதரவு கிடைக்கலை.

2007 சவுதி வந்த பிறகு இணையம் கிடைத்தது. நிறைய வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்கியின் நாவல்கள் அனைத்தையும் இணையத்தில் தான் வாசித்தேன். பொன்னியின் செல்வனின் மூழ்கி விட்டேன். நிறைய சிறுகதைகள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாங்குவதே இல்லை. அதில் வருவதை விட சிறந்த படைப்புகள் இணையத்தில் வருவதாக எனது கருத்து.

PKP யின் பக்கங்களில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு மென் புத்தகம் கொடுப்பார். அனைத்தும் சிறந்த படைப்புகளாக இருக்கும்.

இறுதியாக இரண்டு விஷயங்கள் சொல்ல இருக்கின்றது.

1. எனது வாசிப்புகளில் எழுத்தாளர்களில் கல்கியும், அதற்கு அடுத்து சுஜாதாவும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கவிதை படிப்பதில் ஆர்வமில்லை என்றாலும் வைரமுத்துவின் கதைக் கவிதைகள் பிடிக்கும்

2. இதுவரையிலான என் வாழ்வில் தனிப் புத்தகமாக எந்த கட்டுரை நூலையோ, நாவலையோ காசு கொடுத்து வாங்கியதே இல்லை. ஆனந்த விகடன், குமுதம் என்ற நிலையில் தான் இருந்திருக்கின்றேன். பெரிய பெரிய எழுத்தாளர்களைப் படித்ததையெல்லாம் மற்றவர்கள் கூறும் போது பிரமிப்பாக இருக்கும்.

இறைவன் நாடினால் ஊருக்கு வரும் போது நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்.

இந்த தொடர் விளையாட்டுக்கு இரண்டு பேரை நான் அழைக்க விரும்புகின்றேன்.

1. ஆயில்யன்... அமைதியாக இருக்கிறாரே என்று பார்க்காதீர்கள். உள்ளே ஏதாவது புயல் கிடைக்கலாம்.

2. ராமலக்ஷ்மி அக்கா... நான் டவுசர் போட்டுக் கொண்டு ஒன்னாப்பு சென்ற காலங்களிலேயே எழுத தொடங்கியவர்கள். அவர்களது வாசிப்பும் நெடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன். அவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்வார்கள் என்றாலும் ஆறு மாதம் கழித்தாவது அவர்களது வாசிப்பனுபங்களைப் பற்றி எழுத அழைக்கின்றேன்.

Wednesday, November 5, 2008

பதிவர் ராப்(rapp) அவர்களுக்கு ஒரு மனந்திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பதிவர் ராப் அவர்களுக்கு,
அன்புடன் சகோதரன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது, நலம் நலமறிய ஆவல். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது என்றே நினைக்கின்றேன்.... இருந்தாலும் என்னை நானே அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..

நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன். அதில் இருந்து தங்களின் ரசிகனாக மாறி விட்டேன். ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.

உங்கள் மீது நான் கடும் வருத்தத்தில் இருக்கேன்.... இதை வருத்தம் என்று சொல்வதை விட ஒரு ஆதங்கம் என்று கூட சொல்லலாம். என்னடா இவனை யார் என்றே தெரியாதே இவன் நம் மீது ஏன் வருத்தப்பட வேண்டும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. அப்புறம் தமிழ் கூறும் மொக்கை பதிவுலகம் உங்களை மன்னிக்காது.

தாங்கள் அனைத்து மொக்கை + கும்மி பதிவுகளுக்கும் சென்று மீ த பர்ஸ்ட், மீ த் 25, மீ த 100 எல்லாம் போடுவதை அறிந்துள்ளேன். நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவுகள் போடும் பதிவர் என்ற முறையில் என் பதிவுகளுக்கும் வந்து மீ த 50, மீ த 100 போடுவீர்கள் என்று எப்போதும் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.



இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்... இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம்? இவனது பதிவுக்கு நம்மை பின்னூட்டம் போடச் சொல்றாரே நம் பதிவுக்கு எப்போது வந்து பின்னூட்டம் போட்டார் என்று எழலாம். நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.

ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.

அடுத்து தமிழ் பிரியன் ஒரு கும்மி பதிவர் அல்ல... என்று நினைத்து விடாதீர்கள் நான் ஒரு கும்மி + மொக்கை பதிவர் என்பதை என் பதிவில் ஓரத்தில் இரத்தத்தில் ஓடும் வாசகங்களே சொல்லும்.

எனது கடினமான சூழல்களைக் கண்டு இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த ??? கமெண்ட்களாவது போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..

கடைசியாக இதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.... தமிழகத்தின் விடி வெள்ளி, தமிழ் திரையுலகம் கண்ட மகாநடிகர், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம், உலக சரித்திரம் கண்ட எட்டாவது வள்ளல், வருங்கால இந்திய பிரதமர், சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.

இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
தங்களது கமெண்ட்களுக்காக ஏங்கும்
அன்பு சகோதரன்
தமிழ் பிரியன்.

வச்சுடாங்கடா ஆப்பு....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நவம்பர் 4 அமெரிக்க அதிபருக்கு நடந்த தேர்தலின் வாக்குகள் என்னும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஒபாமா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்கின்றார்.

கடைசி தகவல் படி ஒபாமா 333 இடங்களிலும் மெக்கெய்ன் 155 இடங்களிலும் நிச்சய வெற்றி பெறுகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெற்று 55 இடங்களை ஒபாமா கைப்பற்றியுள்ளார். மெக்கெய்ன் டெக்ஸாஸில் 34 இடங்களை வென்றுள்ளார்.

Ohio, New Mexico and Iowa போன்ற குடியரசு ஆதரவு இடங்களை ஜனநாயகக்கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா வென்றவை:
Vermont, New Hampshire, Pennsylvania, Illinois, Delaware, Massachusetts, District of Columbia, Maryland, Connecticut, Maine, New Jersey, Michigan, Minnesota, Wisconsin, New York, Rhode Island, Ohio, New Mexico and Iow.

மெக்கெய்ன் வென்றவை:
Kentucky, South Carolina, Oklahoma, Tennessee, Arkansas, Alabama, Kansas, North Dakota, Wyoming, Georgia, Louisiana, West Virginia, Texas, Mississippi, Utah.

பழைய அரசியல் தகிடுதத்தங்களால் காலத்தைக் கழித்த புஷ் வகையறாக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க மக்களுக்கு நன்றிகள்! வருங்காலங்களில் புதிய கொள்கைகளுக்கு ஒத்திசைவாக இருந்து செயல்படுவதன் மூலம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அமைதியை எதிர் பார்க்கலாம்.

மெக்கெய்ன் வெற்றி பெற்று இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் இருப்பார் என்று கவனிக்காமல் விட்டு விடலாம்.. ஆனால் ஒபாமா மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்களித்துள்ளார். இனி அவரால் உலக, அமெரிக்க அரசியல், பொருளாதாரங்களில் என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என பார்க்கலாம்... அனைத்திற்கும் காலமே பதில் சொல்லும்.

Monday, November 3, 2008

அமெரிக்க தேர்தல் கார்ட்டூன் + கேம்ஸ் + அரபி இலக்கணம் + டீச்சர்ஸ்

கண்மணி டீச்சர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க.. அதைப் படித்ததும் கொஞ்சம் பழைய நினைவு வந்து விட்டது. ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு போகும் போது எனக்கு H செக்சன் தான் கிடைத்தது. A,B,C செக்சன் எல்லாம் நல்லா படிக்கிற பசங்களுக்கு என்று சொல்லி விட்டார்கள். D,G, H போன்றவை எல்லாம் சரியில்லாத பசங்களுக்கானது என்று ஆசிரியர்களுக்கு நினைப்பு.

பத்தாம் வகுப்பில் 80 சதத்துக்கு கொஞ்சம் குறையா மார்க் வாங்கி இருந்தேன். அடுத்து +1 க்கு அப்ளை செய்ததில் பர்ஸ்ட் குரூப் எனப்படும் கணக்கு, இயற், வேதி, உயிரியல் உள்ள பிரிவு கிடைக்கவில்லை. செகண்ட் குரூப் எனப்படும் இயற், வேதி,தாவர, விலங்கியல் பிரிவே கிடைத்தது. சரி மார்க் குறைவா வாங்கியதால் தான் செகண்ட் குரூப் என்று தேற்றிக் கொண்டு சென்றால் பர்ஸ்ட் குரூப்பில் என்னை விட மார்க் குறைவாக வாங்கினவெல்லாம் இருக்கின்றான்.

அதில் பெரும்பாலோர் ‘அந்த’ குறிப்பிட்ட உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.. ஏனெனில் அவர்களின் உறவினர்கள் அந்த பள்ளியில் நிறைய பேர் ஆசிரியர்கள். என்னடா வென்று இது சம்பந்தமான வேலைக்கவனிக்கும் இயற்பியல் ஆசிரியரிடம் சென்றேன். வடிவேல் பாணியில் கூறினார். “உனக்கு பர்ஸ்ட் குரூப் எடுத்துக்க... ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விடு” ஆனா எனக்கு இந்த டீலிங் பிடிக்கலை. வீட்டுக்கு சென்று கேட்டதில் “உன்னை படிக்க வைப்பதே பெருசு.. இதில் குரூப் மாற்றனுமா? போய் வேலையைப் பாரு” என்று சொல்லி விட்டார்கள்.

அந்த இயற்பியல் ஆசிரியருக்கு வாழ்க்கையில் மூன்றே குறிக்கோள் தான்.. முதல் குறிக்கோள் பணம், இரண்டாம் குறிக்கோள் பணம், மூன்றாம் குறிக்கோள் பணம். இதில் அவரது மனைவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியை வேறு.

இங்கு இன்னொரு தமாஷையும் கண்டிப்பா சொல்லனும்... நான்கு வருடங்களுக்கு முன் வீட்டில் இருந்த போது என் தம்பி டென்சனா புலம்பிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.. “என்னடா ஆச்சு?” என்று கேட்டதற்கு அவனுக்கு தெரிந்த ஒரு பையன் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தததால் வேறு குரூப் கொடுத்து விட்டார்களாம். இவன் சென்று அதை மாற்றி கொடுத்து விட்டு வந்தானாம். அதனால் ஏற்பட்ட டென்சனாம். எப்படிடா என்றால் என் நண்பனின் அப்பா கருவூல அதிகாரி. கருவூலத்தில் தான் பள்ளி சம்பந்தமான பில்கள் அனைத்தும் வருமாம். அவரைத் தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியையிடம் பேசி குரூப்பை மாற்றி விட்டானாம். அவர் என் நண்பனின் தந்தை.. இதெல்லாம் யோசிக்கும் வயசு அப்ப நமக்கு இல்லை பாருங்க... எல்லாம் நன்மைக்கே!..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் சில சிறப்புகள் இருக்கும். சில சிறப்பியல்புகளும் இருக்கும்... அரபி மொழி உலகில் பேசப்படும் முக்கிய மொழிகளில் ஒன்று. இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. பொதுவாக மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படும். ஆனால் அரபி, உருது இன்னும் சில மொழிகள் இடமிருந்து வலமாக எழுத, படிக்கப்படும். இதுவா வித்தியாசம் என்றால் அதில்லை. அரபி மொழி இலக்கணத்தில் இருக்கும் “இருமை” தான் வித்தியாசம்.

அதென்ன இருமை... எடுத்துக்காட்டுக்கு தமிழில் கலாவும், சீதாவும் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம். இதை ஆங்கிலத்தில் Kala and Seetha are eating என்று சொல்லலாம். இந்தியில் कला और सीता खाते है! (சீதா அவ்ர் கலா காதே ஹைன்) என சொல்லலாம்.

இப்போது இதில் இருந்து நமது திட்டத்திற்கு வினையை மட்டும் எடுக்கின்றோம். கலா மற்றும் சீதாவை மறந்து விடலாம். நாம் எடுத்துக் கொள்வது சாப்பிடுகிறார்கள், खाते है(காதே ஹைன்) , are eating. இந்த வாக்கிய அமைப்பில், இந்த வினைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு தெரிய வருவது இது பன்மை, நிகழ்காலத்தில் நடக்கின்றது என்று. இது மேலே நான் எழுதிய (எனக்கு தெரிந்த) மூன்று மொழிகளுக்கும் பொருந்தும். இந்த வினைச் சொல்லில் பால் தெரிவதில்லை. முன்னிலையா படர்க்கையா என்று தெரியவில்லை. சாப்பிடுபவர்கள் அவர்களா, இவர்களா என்றும் தெரிவதில்லை. ஒன்றுக்கு மேல் என்று தெரிந்தாலும் எத்தனை என்று தெரியவில்லை.

அரபியில் இதை எழுதும் போது اكلتا كلا و سيتا அகல்தா கலா வ சீதா என்று எழுதலாம். இதில் வினைச் சொல்லான اكلتا (அகல்தா) என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் இதில் இருந்து தெரிய வருபவை அந்த இரு பெண்கள் சாப்பிடுகிறார்கள். இது மேலே நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலைத் தந்து விடும். அரபியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கின்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அமெரிக்க தேர்தல் பற்றிய ஒரு கார்ட்டூனுக்கு அப்புறம் செய்திகள் தொடரும்...




நன்றி : அரப் நியூஸ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செல் போனிலோ, கணிணியிலோ கேம்ஸ் விளையாடும் ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவரின் செல்லை நோண்டிக் கொண்டு இருந்த போது ஒரு கேம்ஸ் பற்றி சொன்னார். canal_control நன்றாக இருப்பதாகச் சொன்னதால் நானும் விளையாடிப் பார்த்தேன். ஈர்த்து விட்டது. சில தினங்களாக சைட்டில் கொஞ்ச நேரம் அதில் விளையாடுவேன்.



மாறி மாறி வரும் ப்ளாக்களை அடுக்கும் சாதாரண விளையாட்டு தான்.. தேவைப்படுபவர்கள் டிரை செய்து பாருங்கள். செல்லில் இருந்து இணையத்தை தொடர்பு கொண்டு http://wap.mobiles24.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் முகப்பில் இருக்கும் Download by ID என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பாக்ஸில் 108447 என்ற எண்ணைத் தட்டி Download Item கிளிக் செய்யுங்கள். வெறும் 61 Kb அளவுள்ள கோப்பு தான்.. பதிவிறக்கு விளையாடிப் பாருங்கள்.
http://www.mobiles24.com/downloads/s/108447-109-canal_control_128x160

Saturday, November 1, 2008

US Election 08 - ஒபாமா தோற்கடிக்கப்பட பிரார்த்திக்கலாம்! வாருங்கள்!

முதலில் அனைவரும் ஒரு நிமிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா தோல்வியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்!

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!]

ஏன் ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும்?

விபத்தில் அடிபட்டு கோரமாகி கோமாவில் இருக்கும் போது, அவரைப் பார்க்க வருபவர்கள் கூறுவார் “ இதுக்கு பேசாமல் அந்த விபத்துலயே ஒரேயடியாய் போய் இருந்தாலாவது நிம்மதியா ஆகி இருக்கும்” ஊரில் சில நேரங்களில் இது போல் விரக்தியில் சொல்வார்கள்.

இதே நிலையில் தான் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் நாளை (நவம்பர் 4) அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சார்பில் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கய்னும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடைசி கட்டத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களின் முடிவைப் பொறுத்தை இறுதி வெற்றி அமையும்.

ஒபாமா தோற்கடிக்கப்பட ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

1. ஒபாமா வெற்றிபெற்றால் ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்.

2. பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என் ஒபாமாவின் பேச்சின் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.

3.அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.

4. ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் (வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

5. ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)


6.ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமா வெற்றி பெறுவதன் மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.




டிஸ்கி : மக்களே உங்கள் ஓட்டுக்களை பராக் ஒபாமா மற்றும் பிடேனுக்கே செலுத்துங்கள். (மனசாட்சி என்ற மண்ணாங்கட்டி : நீ சொல்லித் தான் ஓட்டுப் போடப் போறாங்களாக்கும்?) என்னடா ஒபாமா தோற்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஒபாமாவுக்கு ஓட்டு கேட்டு வருகிறான் என்று யோசிக்காதீர்கள். நமது ஓட்டு வீணானால் நம்மை இந்த வரலாறு மன்னிக்காது. அதே சமயம் அந்த ஓட்டு மெக்கெய்னுக்கு போய் விட்டால் அவர் அடுத்து செய்யப் போகும் அனைத்து படுகொலைகளுக்கும் நீங்களே பொறுப்பு.

புஷ்ஷூக்கு ஓட்டுப் போட்ட பாவம் தான் அமெரிக்காவின் பொருளாதார சீரழிவுகளும், வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகமாக காரணம் என கஞ்சாக்குடி சித்தர் தனது ஞான திருஷ்டியில் பார்த்து கூறியுள்ளார்.