Saturday, November 15, 2008

காலை ஆட்டிக் கொண்டே பதிவு போடுவோம்ல

என் இனிய தமிழ் மக்களே! ஒரு வாரமா இன்டர்நெட் சரியா வேலை செய்யலை.... (உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல் என்று தோன்றுகின்றது.. STC காரனுக பைத்தியம் பிடிக்க வச்சிட்டானுக..) மண்டை காய்ஞ்சு போச்சு.. நிறைய பதிவு எழுதும் ஐடியா கிடைத்தும் பதிவு போட முடியலை... அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...
(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துடான்னு தூக்கிடுவாங்களாமே.... அதனால இந்த பதிவு,.. :))) )

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பூம்பாவாய் ஆம்பல் படித்ததில் இருந்து ஆர்குட் மேல ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இங்க (சவுதியில்) ஆர்குட் தடை செய்யப்பட்டது என்பதால் உள்ளே நுழைய முடியாமல் இருந்தது. இணைய உலகில் நண்பர் ஒருவர் ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார். உடனே உள்ளே நுழைந்தாச்சு.... ஆனால் ஒரு சிறு தவறும் நிகழ்ந்து விட்டது. ஆர்குட்டில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் சேர்க்கவா என்று கேட்கப்பட்டது போது, அனைவரையும் ஒரே கிளிக்கில் செலக்ட் செய்து ஆம் என்று தட்டி விட்டேன். பார்வேர்ட் மெயிலில் வந்த மின்னஞ்சல்களுக்கும் என் அழைப்பு சென்று விட்டது. அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்குட்டில் நாம வாங்கிய ப்ளாட் இது தான்..

http://www.orkut.com/Main#Profile.aspx?uid=3060450896209263868

வாங்க மக்களே! ஆர்குட் ஒன்றும் நம்மை அதிகமாக கவரவில்லை... அண்ணன் TBCD சொல்வது போல் எதா இருந்தாலும் ஜிடாக்கில் பேசுவது தான் நல்லா இருக்கு... :) ஆனால் ஆர்குட் போனதில் ஒரு பயனும் இருந்தது... அதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு சொல்லலாமான்னு தெரிய்லீங்ண்ணா... ;)))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

போன வாரம் முழுவதும் இங்கிருந்து 35 கி.மீ தூரத்தில் ஒரு மலைப் பிரதேசத்தில் வேலை.... அது ஒரு அரச குடும்பத்து மாளிகை. அங்கு நமது நிறுவன ஆட்கள் வேலை செய்கின்றனர். முக்கியமான வேலைக்கு மட்டும் சென்று வேலையை முடித்து விட்டு ஓடி வந்து விடுவோம். செப்டம்பர் முதல் மார்ச் வரை அங்கு செல்லவே மாட்டேன். ஆனால் சில அவசர வேலைகளுக்காக செல்ல வேண்டி வந்து விட்டது. கடும் குளிர்... ஸ்வெட்டர்.. மங்கி குல்லாய் என்று ஓட்டி விட்டேன். .. இப்ப சொல்ல வந்தது அந்த கதை அல்ல....

மாலை நேரங்களில் மலை முகடுகளில் நின்று வேடிக்கை பார்ப்பேன்... மேகம் நம்மை நகர்ந்து செல்லும் போது கிடைக்கும் சிலிர்ப்பு அலாதியாக இருக்கும். அந்த மலையில் நிறைய குரங்குகள் இருக்கும்... அவைகளையும் வேடிக்கை பார்ப்பேன்... குரங்கு குழுக்களாக இருக்கும். பெரிய குரங்கு தான் தலைவர். சில பெண் குரங்குகள், சில ஆண் குரங்குகள் குட்டிகள் எல்லாம் அந்த குழுவில் இருக்கும்.. அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு தலைமைக் குரங்கு ஒரு சிறு குரங்கைத் துரத்தத் தொடங்கியது. சிறு குரங்கு அலறி அடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் தப்பி ஓடியது.

தமிழ் பட சேஸிங் போல இருந்தது.. சில நேரங்களில் பெரிய குரங்கின் கைகளில் சிக்கியும் தப்பியது... இறுதியில் பெரிய குரங்கு கடைசியில் வெற்றி பெற்றது. சிறு குரங்கை கதற கதற ***** செய்தது... ஓரிரு நிமிடங்களில் அந்த சிறு குரங்கு ஒரு மரண ஓலத்துடன் நடக்க இயலாமல் நடந்து சென்றது. மிகவும் சிறிய குரங்கு அது... மனதுக்கு கஷ்டமாக இருந்தது... மனிதர்களிலுல் இதை விட மோசமான மிருகங்கள் சில இருக்கின்றன... அவர்கள் நடு ரோட்டில் வைத்து தலை வெட்டப் பட வேண்டியது ஏன் என்ற அவசியத்தை அந்த நிகழ்ச்சி உணர்த்தியது.



குரங்குகள்.... தெரியாதவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்ளவும்..ஹிஹிஹி

பள்ளத்தாக்கு... :) மேகம் இல்லாத ஒரு மதிய வேளையில்...


அங்கு வளரும் பூனை... ஒரிஜினல் பட்டரும், சீஸூம் தான் சாப்பிடுமாம்... ;))

கேம்ப்பில் உள்ள தபால் பெட்டி... ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒரு பெட்டி.... குளிருக்கு சொகுசாக பூனையார் தூங்குகின்றார்.. :)))

ஜன்னல் மேல் ஏறி நிற்கும் பூனைகள்... ரோட்டிற்க்கு கீழே மலைகளால் சூழப்பட்ட சிறு கிராமம் மேக மூட்டத்திற்கு இடையே தெரிகின்றதா? என்று பாருங்கள்...

அலுவலகத்தில் உள்ள மீன் தொட்டி... :))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களாம்.. அதனால் தமிழ் மண கருவிப்பட்டையில் மேல் நோக்கி இருக்கும் (Thumps up) கையை அழுத்தி விட்டு செல்லுங்கள்.... இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

39 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

// அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு.. //

(இதுக்கு அர்த்தம்...'உங்கள அவ்ளோ ஈஸியா மறந்துட மாட்டோம்ல'!!!)

Thamiz Priyan said...

தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டு போட முடியலியாம்... :((

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்ல பதிவு.....

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மறக்க மாட்டோம் தல....

மறக்கக்கூடிய ஆளா நீங்க....

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டு போட முடியலியாம்... :((

:((
:((

gulf-tamilan said...

//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார்/்
என்க்கும் குறுக்கு வழியை கூ்ற்வும்.

தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டு போட முடியவில்லை :(((

ராமலக்ஷ்மி said...

ஒரு வாரமாக உங்கள் பதிவும் இல்லை. யார் பதிவிலும் உங்கள் தமிழ் மணக்கவும் இல்லை என்பதை நானும் கவனித்தேன். இதுதானா விஷயம்?

பூனைகள், குரங்குகள் என விவரங்கள் படங்கள் எல்லாம் அருமை.

கருவிப்பட்டையில் thumbs up சிம்பலையே காணுமே:(? எப்படி வோட்டு போடுவதாம்?

ஆயில்யன் said...

நல்லா அருமையா இருக்கு போல ஊரு பார்த்தா அரபு நாடு மாதிரியே தெரியலப்பா :)))

//நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்//

ங்கொய்யால அதான் அடிக்கடி மோடம் பூட்டுக்கிட்டு போகுதா????

Anonymous said...

ஊட்டியில எங்கியோ இருந்துகிட்டு அரபு நாடுன்னு பீலா வுட்டுக்கினு இருக்கியா மாமே.

Thamiz Priyan said...

ஹா ஹா ஹா ஹா ... விட மாட்டோம்ல.... HTML ஐ சரி பண்ணி ஓட்டு போடுவோம்ல..:))))

துளசி கோபால் said...

ஆஹா.....

அந்த ப்ரவுண் நிறப்பூனை எங்க boony மாதிரியே இருக்கே. அதுவௌம் வாசக்கதவுக் கண்ணாடி வழியா எட்டிப்பார்த்துக் கூப்புடும்!

துளசி கோபால் said...

அதுவும் என்று இருக்கணும்.

Anonymous said...

ஊட்டி மாதிரி இருக்கு. நிஜமாவே அமீரகமா?

கானா பிரபா said...

//அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...//

நீங்க யாருங்க புது பதிவரா?

படங்கள் கலக்கல் ;)

தமிழன்-கறுப்பி... said...

1

தமிழன்-கறுப்பி... said...

2

தமிழன்-கறுப்பி... said...

3

தமிழன்-கறுப்பி... said...

\
அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...
\
மறக்கக்கூடிய ஆளாய்யா நீரு..!!
பண்ணுற வில்லத்தனங்களை எப்படிய்யா மறக்க முடியும்...;)

தமிழன்-கறுப்பி... said...

\\
(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துடான்னு தூக்கிடுவாங்களாமே.... அதனால இந்த பதிவு,.. :))) )
\\

ஆஹா இது வேறையா...:))
ஆமா காலை_____ _______?

\
இல்ல நீங்க குறட்டை விடுகிற சத்தம் தாங்க முடியாமல்தான் உங்க கம்பெனில தனியா ஓரமா ரூம் குடுத்திருக்காங்களாமே ;)
(அது பொய்யோ)

தமிழன்-கறுப்பி... said...

\\
அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.
\\

ஆமா நான் டென்சன்லதான் இருக்கறேன் பின்ன என்னண்ணே? ஆர்குட் அப்டின்னா என்னன்ணே தெரியாத ஒருத்தனுக்கு அதை அனுப்பினா டென்சனாகாம வேற என்ன பண்ணுவான்... ;))

(நம்புங்கப்பா நிசமாவே தெரியாது...)

தமிழன்-கறுப்பி... said...

\\
இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
\\

அட இதான் நடக்குதா....எனக்கும் கொஞ்சம் ஓட்டுப்போடுங்கப்பா...

தமிழன்-கறுப்பி... said...

gulf-tamilan said...
//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார்/்
என்க்கும் குறுக்கு வழியை கூ்ற்வும்.

தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டு போட முடியவில்லை :(((
\\

நல்லா இருங்க அண்ணே :)
எதுக்கிந்த குறுக்கு வழி...
அவர்தான் சின்னப்பையன் அப்படி இருக்காருன்னா நீங்களுமா..;)

புதுப்பாலம் said...

//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார்/்

ஆர்குட்குக்குள் நுழைய குறுக்கு வழியை கூறவும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா

ismailkani@yahoo.com

ஆட்காட்டி said...

எழுதிப் போட்டு அப்புறமா ஏத்துறது.

Thamira said...

வடகரை வேலன் said...
ஊட்டியில எங்கியோ இருந்துகிட்டு அரபு நாடுன்னு பீலா வுட்டுக்கினு இருக்கியா மாமே.// உய்.. உய்.. ரிப்பீட்டேய்ய்..

gulf-tamilan said...

அவர்தான் சின்னப்பையன் அப்படி இருக்காருன்னா நீங்களுமா..;)\
naanum chinna paiyanthaan !!!
:))))))))

cheena (சீனா) said...

அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோமா - நோ சாட் - நோ போஸ்ட் - நோ கமெண்ட் - என்னாய்யா இது - நான் பயந்துட்டேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - சரி சரி

ராஜ நடராஜன் said...

வணக்கம்.குரங்கைத் தேடும் போது உங்கள் பதிவின் இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது.எனவே மீண்டும் குரங்கைத் தேடி:)

ராஜ நடராஜன் said...

கல்லைக் கண்டால் குரங்கைக் காணோமின்னு தசாவதாரப் பாடலை மாத்திட வேண்டியதுதான்.என் கண்ணூல நான்கு குரங்கர்கள் தட்டுப்பட்ட மாதிரி இருந்தாலும் வெயில் காய்பவர் மட்டும் தான் சரியான கோணத்தில் தெரிகிறார்.

காஞ்சுபோன பாலைவனம் அல்லது கார்கள்,கட்டிடங்கள் மட்டும் சவுதி அரேபியான்னு நினப்புல மண்ண வாரிப் போட்டுட்டீங்களே.

(ஆறு குரங்குகள் கண்டு பிடியுங்கள்ன்னு தலைப்பு வச்சு இன்னொரு மறுபதிவு செய்து விடுங்கள்:)

Cable சங்கர் said...

நல்ல பதிவு. மற்றும் படங்கள் நவநீதன்.

சுரேகா.. said...

சவுதி ஞாபகங்களைத்தூண்டிட்டீங்க!

சூப்பரு!

rapp said...

அந்த தல ஆண் குரங்கைத்தானே ஆல்பா குரங்குன்னு சொல்வோம்?

rapp said...

அநியாயத்துக்கு ஆபீஸ் மீன்தொட்டிய பைலோடவா போட்டோ எடுத்து போடுவீங்க?

புதுகை.அப்துல்லா said...

cheena (சீனா) said...
அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோமா - நோ சாட் - நோ போஸ்ட் - நோ கமெண்ட் - என்னாய்யா இது - நான் பயந்துட்டேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - சரி சரி

//


ரிப்பீட்டுடுடுடுடு

dondu(#11168674346665545885) said...

//தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களாம்.--
இல்லை அப்படியேத்தான் உள்ளது, ஆனல் முகப்பில் அல்ல. “ம”திரட்டியை சொடுக்கினால் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//(உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல் என்று தோன்றுகின்றது.//

எங்களுக்கும் அடிக்கடி டவுசர் அவுருது

பாச மலர் / Paasa Malar said...

ஆஹா..நம்ம ஊரு போட்டோவா..அசத்துது போங்க...

ரௌத்ரன் said...

நண்பரே..சமீபத்தில் தான் நானும் சௌதி வந்தேன்...jeddah ல் இருக்கிறேன்...orkut ஐ திறக்கும் வழியை எனக்கும் சொல்வீர்களா?


roudran@gmail.com

ரௌத்ரன் said...

நண்பரே,நானும் சௌதியில் தான் இருக்கிறேன்..orkut ஐ எப்படி திறப்பது என்று கூற முடியுமா...

என் முகவரி : roudran@gmail.com