நாகார்ஜூனன் ஆரம்பித்து வைத்த இந்த சினிமா பற்றிய தொடர் விளையாட்டு ஆயில்யன் வழியாக நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இனி கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். நல்லா இருந்தா மதிப்பெண்களைத் தாராளமாக போடுங்க... இல்லைன்னா திட்டி விட்டாவது போங்க..... ;)
1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
4, 5 வயதில் பார்த்த இளமைக் காலங்கள் இன்னும் நினைவில் உள்ளது. எங்கள் ஊருக்கு வெளியே மலை மேல் ஒரு தர்கா இருக்கும். அங்கு ஏதோ விசேசம் என்று எனது பாட்டி, அத்தையுடன் சென்று திரும்பினோம். வரும் வழியில் ஒரு திரையிரங்கில் இளமைக்காலங்கள் படம் பார்த்தோம். அப்போதெல்லாம் அது நினைவில் இல்லை. ஆனால் ஈரமான ரோஜாவே பாடலில் வரும் குழந்தையும், அந்த ரோஜாப்பூ போட்ட சட்டையும் பல ஆண்டுகள் நினைவில் இருந்தது. சமீபத்தில் இளமைக் காலங்கள் பாடல் பார்த்த போது தெளிவாகி விட்டது.
நினைவு தெரிந்து பார்த்த படம் மிஸ்டர் பாரத்! வத்தலகுண்டு கோவிந்தசாமி தியேட்டரில் அத்தை, மாமாவுடன் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. நடிகர்கள் திரைக்குப் பின்னால் இருந்து நடிப்பார்கள் என்று நினைத்தேன்.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன். 1998 க்குப் பிறகு துபாய், சார்ஜாவில் இருந்த போது துபாய் சினிமா, தேரா சினிமா, நாசர், மற்றும் சார்ஜா கான்கோர்ட், ஹம்ரா போன்ற திரையரங்கிற்கு அருகில் எல்லாம் வேலை செய்த போதும் சினிமா பார்க்கும் ஆசை வரவில்லை.
திருமணத்திற்கு பின் தங்கமணியுடன் பார்த்த முதல் படம் என்ற காலத்தில் Nil தான் இருக்கும். இனியும் திரையரங்கிற்கு சென்று சினிமா விருப்பம் எனக்கோ, தங்கமணிக்கோ வரவில்லை.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக தசாவதாரத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் இணையத்தில் பதிவிறக்கிப் பார்த்தேன். வித்தியாசமான களத்தில் நமது பழைய வாழ்க்கையைக் காட்டிய விதம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.
குசேலன், சரோஜா போன்ற படங்களை பதிவிறக்கிப் பார்க்க வசதி இருந்தும் இதுவரைப் பார்க்கவில்லை.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
கடந்த பத்து வருடமாக விரும்பி படம் பார்க்காததால் அதன் தாக்கம் இல்லை. ஆனாலும் சில பாதித்த படங்களை சுட்ட இயலும். அதில் முதலிடம் வகிப்பது சத்ரிய வம்சம் என்ற மம்முட்டி படம். பாசத்திற்கும், பழி வாங்கும் வெறிக்கும் இடையேயான போராட்டம் தான் கதை. உருகிப் போய் பார்த்தேன். ஆனால் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்பதால் தமிழ்ச்சினிமா என்ற வகையில் வருமா என்று தெரியவில்லை. முதல் மரியாதையின் ஒவ்வொரு பிரேமும் ரசித்து பார்த்து உருகுப் போனேன். பாரதிராஜாவின் திறமைக்கு சான்று அது. மற்றபடி காதல் ஓவியம், காதலுக்கு மரியாதை, சேது, தில்லானா மோகனாம்பாள், மூன்றாம் பிறை போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியவை.
பாலச்சந்தர், ஸ்ரீதர் வகைப் படங்கள் என் காலத்தில் முடிந்து போய் இருந்ததால் அவைகளைப் பார்த்த போது ஈர்ப்பு ஏற்படவில்லை.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நம்மை தாக்கும் அளவுக்கு எந்த சம்பவமும் நடந்ததாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரஜினியின் அரசியல் ஸ்டண்ட்களால் நொந்து நூலாகிப் போனது என்னவோ உண்மை தான்.. :( (தலை.. இன்னைக்கு வரை நொந்து போகத்தான் வைக்கிறார் என்பது கசக்கும் உண்மை)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
இதைத் தொழில்நுடபம் என்று கூற இயலுமா என்று தெரியவில்லை. முகபாவத்தைக் கொண்டு, காட்சியை விளக்கும் திறமை. இது மற்ற மொழிகளில் குறைவு என்றே சொல்வேன். வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் விரக தாபத்தை ஒரு பாடலில் (அழகு மலராட) காட்டி இருப்பார் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். வேறு எங்கும் இவ்வளவு கண்ணியமாக இதைக் காட்டியதாக பார்க்கவில்லை. (இன்று அதே காட்சி கிடைத்தால் கிடைச்சதுடா சான்ஸ்! என்று முக்கல்,முனகலுடன் ஒரு பாடல் இருக்கும் என்பது உண்மை)
அபூர்வ சகோதரர்களின் கமலில் குள்ள அப்பு மாயை. இன்னும் உடையாத வித்தியாசமான முயற்சி!
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஹிஹிஹி.. கிசுகிசுக்களை விடாமல் வாசிக்கும் வழக்கமுண்டு. வாரமலர், குமுதம், ஆன்ந்த விகடன் போன்றவற்றில் வரும் சினிமா துணுக்குகளைப் படிப்பேன். இப்போது இணையத்தில் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை. ஆனால் திரைவிமர்சனங்களைப் படிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
7. தமிழ்ச்சினிமா இசை?
இசையில் அவ்வளவாக ஆர்வமில்லையென்றாலும். இசையில்லாத, அல்லது குரலுக்கு அதிக முக்கியத்துவமுள்ள பாடல்களைக் கேட்பேன். இளையராஜா பாடல்கள் தான் அதிகம் விருப்பமுள்ளவை. அறையில், வீட்டில் பாடல்களைக் கேட்கும் வழக்கம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் அல்லது தனிமை வாட்டும் நேரங்களில் செல் போனில் இருக்கும் சில பாடல்களைக் கேட்பேன். அதுவும் குறிப்பிட்ட சில பாடல்கள் தான் பேவரை லிஸ்ட்டில் இருக்கும். (சமீபத்தில் பேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்த பாடல்)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மொழியே தேவைப்படாத பல மொழிப்படங்களையும் வளைத்து, வளைத்து பார்த்த காலம் உண்டு. பிற மொழிப்படங்கள் என்றால் அதில் இந்தி. மலையாளம் முக்கியத்துவம் வகிப்பவை. இந்தி படங்களில் ஷோலே, மதர் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் மலையாளத்தில் மோகன்லால் படங்களை விரும்பிப் பார்ப்பேன். Life is Beautiful என்ற படம் ரசித்து பார்த்தது. நல்லவேளை இந்த படத்தை ரீமேக் செய்ய வாசுக்கள் இல்லை போல. தப்பித்தது.
ஆங்கிலப்படங்கள் பார்க்கும் வழக்கம் இருந்தால் அதிகம் தாக்கிய படம் டைட்டானிக் தான். சென்னையில் படித்துக் கொண்டு இருந்த போது, கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு வகுப்பில் இருந்த 30 மாணவர்களில் 17 பேர் AVM ராஜேஸ்வரியில் முன்பதிவு செய்து கலக்கலாக பார்த்தோம். மறுநாள் எங்கள் பிரின்சிபால் தாக்கிய தாக்கில் நிலைகுழைந்து போய் விட்டோம். (வார்த்தையில் தான்... அடியெல்லாம் விழலை)
வியாழக் கிழமைகளில் ETV - Urdu வில் ஈரானியப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். இப்போது வேலை நேர மாற்றத்தால் முடிவதில்லை. என்னை மிகமிக பாதித்த படம் Children of Heaven. அந்த திரைப்படம் முழுவதும் எடுத்து போட்டு, ஒரு இடுகையே இட்டுள்ளேன். விரும்பியவர்கள் பார்க்கலாம். http://majinnah.blogspot.com/2008/02/video-children-of-heaven-full-movie.html
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
பத்து வருடமாக திரையரங்கிற்கே செல்லாமல் இருப்பது தான் சாதனை. நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. தொடர்பு ஏற்படும் வாய்ப்பு கிடைத்தாலும் நிராகரிப்பேன்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாகார்ஜூனன் ஸ்டைலிலேயே அடுத்த கேள்விக்கு தாவுங்கள்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியடைவேன். லாட்டரி தொழிலாளர்கள் வேறு தொழில்களில் போய் செட்டில் ஆனது போல், சினிமா தொழிலாளர்களும் வேறு வேறு வேலைகளில் போய் விட்டால் மிகவும் மகிழ்வேன். அதோடு மெகா சீரியல்களுக்கும் மொத்தமாக தடை போட்டு விட்டால் தமிழர்கள் மாயையான வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள்.
வாசுக்களும் பேரரசுக்களும், நமீதா, திரிஷாக்களெல்லாம் ஒழிந்து போய் புது சினிமா உலகம் பிறக்க வேண்டும். ஹீரோயிஷம், மார்க்கெட் சண்டை, தங்கை, அம்மா செண்டிமெண்ட், குலுக்கு டான்ஸ், உடல் அரசியல் இல்லாத புதிய பரிணாமத்தில், சமூகத்தோடு இயைந்த, சமூக அவலங்களைக் காட்டக் கூடிய படங்கள் வரத்துவங்கினால் மகிழ்வேன்.
டிஸ்கி : தங்கமணிக்கு சினிமா, சீரியல்கள், பாடல்கள் பார்க்கும் வழக்கம் இல்லை. ஊரில் இருந்தால் ஒளிந்து, ஒளிந்து தான் ஏதாவது சினிமா தொலைக்காட்சியில் பார்ப்பேன்.. ;)) கிரிக்கெட், செய்தி, டாக்குமெண்ட்ரிகள் மட்டுமே பார்க்க அனுமதி இருக்கு.
இந்த தொடர் விளையாட்டைத் தொடர நான் அழைப்பவர்கள்
(விருப்பமும், நேரமும் இருந்தால் மட்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கண்டிப்பா எழுதியே ஆகனும்.. ஆமா சொல்லிப்புட்டோம்)
1. பாசக்கார தங்கச்சி அம்மு @ மது...
2. அன்பான அக்கா ராமலக்ஷ்மி
3. பிரியமுள்ள அண்ணன் பாரதி
4. சினிமா சுரங்கம் கானா பிரபா அண்ணன்
5. அன்பு சகோதரர் தமிழன்....
6. சுடர் என்னும் கொஞ்ச நல்ல அன்புத்தம்பி
43 comments:
//1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.//
என்ன கொடும சார், 10 வருஷமா தியேட்டர் வாசலையே மிதிக்கலியா?
ஒரே மூச்சில் படித்தேன், மிகவும் இயல்பாக உங்களின் வாக்குமூலத்தைக் கொடுத்திருந்தது சிறப்பு.
ஓ என்னை நீங்களும் அழைச்சீங்களா ;-) ஆனா நேற்றே நான் வந்திட்டேனே ;-)
உங்களுக்கு ஒரு அன்புக்கட்டளை
நிறைய இரானிய படங்களைப் பார்ப்பேன் என்று சொன்னதால் அந்தப் படங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்.
Hi. I like your post.
If you want to see around 200 Tamil short film in Tamil
and More than 50 Music Videos in Tamil.
Please visit here
http://SFinTamil.blogspot.com
:)
very interesting.
its good to know about it? where did you get that information?
wow, very special, i like it.
// பாரதிராஜாவின் திறமைக்கு சான்று அது. மற்றபடி காதல் ஓவியம், காதலுக்கு மரியாதை, சேது, தில்லானா மோகனாம்பாள், மூன்றாம் பிறை போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியவை.//
இந்த படங்களின் மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு! :)
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
உங்களுக்கு ஒரு அன்பு அதிரடி கட்டளை
நிறைய தடவை கவிழ்ந்திருக்கிறேன் என்று சொன்னதால் அந்தப் விசயங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்.
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
:))))))))
காதல் ஓவியம்: nice movie.
:-))))...
நல்லா பகிர்ந்திருக்கீங்க...
10 வருசமா படமே பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான்..
அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு டெக்னிக் இன்னும் பெரும்பாலானோர்க்கு தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு முறை தினமலர் தீபாவளி மலருக்காக ஒரு வாசகர் செய்து காட்டி இருந்தார். அதை படித்தபின் படம் பார்த்தால் டெக்னிக் நன்றாக பிடிபடும்.
அதில் முதலிடம் வகிப்பது சத்ரிய வம்சம் என்ற மம்முட்டி படம்.
இது ஒரு சிறந்த படம்தான்
\\உங்களுக்கு ஒரு அன்புக்கட்டளை
நிறைய இரானிய படங்களைப் பார்ப்பேன் என்று சொன்னதால் அந்தப் படங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்\\
repeateee
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
:)))))
ஒப்புதல் வாக்குமூலம் நல்லார்க்கு
ஒப்புதல் வாக்குமூலம்.. சரியாத பதம் :)
அட பாவி மனுசா நானும் ஏதோ அவ்வளவா நாட்டம் கிடையாது ஆனா சில படமாவது பாப்பிங்கன்னு நினைச்சேன்...!!! :)
\\
1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.
\\
என்ன ஆச்சரியம்...!!! :)
\\
கடைசியாக தசாவதாரத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் இணையத்தில் பதிவிறக்கிப் பார்த்தேன். வித்தியாசமான களத்தில் நமது பழைய வாழ்க்கையைக் காட்டிய விதம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.
\\
தல வெட்கப்படுறாரு எல்லோரும் கண்ணணை மூடிக்குங்க...;)
அந்தக்கதையையும் எங்களுக்கு சொல்றது...:)
\\
மொழியே தேவைப்படாத பல மொழிப்படங்களையும் வளைத்து, வளைத்து பார்த்த காலம் உண்டு
\\
?!...
\\
டிஸ்கி : தங்கமணிக்கு சினிமா, சீரியல்கள், பாடல்கள் பார்க்கும் வழக்கம் இல்லை.
\\
தப்பிச்சுட்டாங்க...:)
நானுமா கட்டடாயமா எழுதணுமா ஊருக்கு போன் போட வச்சுட்டிங்களே அண்ணே...
கொஞ்சம் லேட்டாவும் பரவாயில்லையா...?
\\
அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.
\\
ஆமா வெட்கம் கலந்த சிரிப்புக்கு எப்படி ஸ்மைலி போடுறது...;)
அழைப்புக்கு நன்றி அண்ணாச்சி
கொஞ்சம் லேட்டாத்தான் பதிவு வரும்...
இதுவே நல்லாருக்கு. எனக்காக மீண்டும் சிரமப்படவெண்டாம், தமிழ்பிரியன்!
////கானா பிரபா said...
//1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.//
என்ன கொடும சார், 10 வருஷமா தியேட்டர் வாசலையே மிதிக்கலியா?
ஒரே மூச்சில் படித்தேன், மிகவும் இயல்பாக உங்களின் வாக்குமூலத்தைக் கொடுத்திருந்தது சிறப்பு.
ஓ என்னை நீங்களும் அழைச்சீங்களா ;-) ஆனா நேற்றே நான் வந்திட்டேனே ;-)///
நன்றி அண்ணே! இணைய தொடர்பில் ஏற்ப்பட்ட பிரச்சினையால் அப்படியாகி விட்டது,.. :)
///கானா பிரபா said...
உங்களுக்கு ஒரு அன்புக்கட்டளை
நிறைய இரானிய படங்களைப் பார்ப்பேன் என்று சொன்னதால் அந்தப் படங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்.///
அண்ணே! பார்க்க மட்டுமே தெரியுது பகிர தெரியலை.. ஆனாலும் முயற்சி செய்கிறென்... :)
//நிஜமா நல்லவன் said...
:)///
:)
///ஆயில்யன் said...
// பாரதிராஜாவின் திறமைக்கு சான்று அது. மற்றபடி காதல் ஓவியம், காதலுக்கு மரியாதை, சேது, தில்லானா மோகனாம்பாள், மூன்றாம் பிறை போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியவை.//
இந்த படங்களின் மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு! :)///
ந்ம்மை மாதிரி 80 களில் பிறந்தவங்களுக்கு இதில் ஈர்ப்பு இருப்பது சகஜம் தான்.. ;))
///ஆயில்யன் said...
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
உங்களுக்கு ஒரு அன்பு அதிரடி கட்டளை
நிறைய தடவை கவிழ்ந்திருக்கிறேன் என்று சொன்னதால் அந்தப் விசயங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்.///
ஆசை, தோசை அப்பள வடை... அதெல்லாம் மாட்டேன் எல்லாம் சிரிப்பாங்க... :)
///AMIRDHAVARSHINI AMMA said...
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
:))))))))
காதல் ஓவியம்: nice movie.///
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!
///விஜய் ஆனந்த் said...
:-))))...
நல்லா பகிர்ந்திருக்கீங்க...///
நன்றி விஜய்!
///வெண்பூ said...
10 வருசமா படமே பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான்..
அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு டெக்னிக் இன்னும் பெரும்பாலானோர்க்கு தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு முறை தினமலர் தீபாவளி மலருக்காக ஒரு வாசகர் செய்து காட்டி இருந்தார். அதை படித்தபின் படம் பார்த்தால் டெக்னிக் நன்றாக பிடிபடும்.///
உண்மை தான் வெண்பூ! அப்பு டெக்னிக் எனக்கு இன்னும் ஒரு கனவாகவே உள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்.. :)
///ஜீவன் said...
அதில் முதலிடம் வகிப்பது சத்ரிய வம்சம் என்ற மம்முட்டி படம்.
இது ஒரு சிறந்த படம்தான்///
நன்றி ஜீவன்!
///முரளிகண்ணன் said...
\\உங்களுக்கு ஒரு அன்புக்கட்டளை
நிறைய இரானிய படங்களைப் பார்ப்பேன் என்று சொன்னதால் அந்தப் படங்களை அவ்வப்போது எமக்கும் பகிரவும்\\
repeateee///
முயற்சி செய்கிறேன் அண்ணே!.. :)
///மங்களூர் சிவா said...
//சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.//
:)))))///
சீச்சீ. வெக்கமா இருக்குண்ணே.. ;))
///புகழன் said...
ஒப்புதல் வாக்குமூலம் நல்லார்க்கு///
வாங்க புகழன்! உண்மையை சொல்ல வேண்டி வருதே.. :)
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஒப்புதல் வாக்குமூலம்.. சரியாத பதம் :)///
ஆமாம் அக்கா!
///தமிழன்... said...
அட பாவி மனுசா நானும் ஏதோ அவ்வளவா நாட்டம் கிடையாது ஆனா சில படமாவது பாப்பிங்கன்னு நினைச்சேன்...!!! :)
\\
1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.
\\
என்ன ஆச்சரியம்...!!! ///
உண்மையைத் தானே அண்ணன் சொல்லி இருக்கேன்ன்ன்.. ஹா ஹா ஹா :)
/// தமிழன்... said...
\\
கடைசியாக தசாவதாரத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் இணையத்தில் பதிவிறக்கிப் பார்த்தேன். வித்தியாசமான களத்தில் நமது பழைய வாழ்க்கையைக் காட்டிய விதம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.
\\
தல வெட்கப்படுறாரு எல்லோரும் கண்ணணை மூடிக்குங்க...;)
அந்தக்கதையையும் எங்களுக்கு சொல்றது...:)///
எல்லாம் ஒரு குரூப்பாதாய்யா அலைறாங்க.. ;))
/// நானானி said...
இதுவே நல்லாருக்கு. எனக்காக மீண்டும் சிரமப்படவெண்டாம், தமிழ்பிரியன்!///
அம்மா! வாங்க! வாங்க! நல்லா இருக்கீங்களா? நன்றிம்மா! நீங்க சொன்னா சரிதான்... :)
Post a Comment