.
கலவை 1
ஈத் விடுமுறையில் நண்பர் தமிழனையும், இன்னும் சில பதிவர்களையும் சந்திப்பதற்க்காக ஜித்தா சென்றிருந்தேன். ஜித்தாவை அடைந்து தமிழனக்கு போன் செய்த போது வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன்.
என் அருகில் என்னைப் போலவே ஒரு மலையாளியும் ஒருவருக்காக காத்திருந்தார். அவருடன் சம்சாரித்துக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்று ஆகி விட்டது எனக் கூறி அவரை சாப்பிட்டுவிட்டு வரும்படிக் கூறினேன். அவரும் 1/2 மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு வந்தார். என்னையும் சாப்பிட்டுவிட்டு வரும்படி அவர் வற்புறுத்திய போது, நண்பருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவர் வரும்வரை காத்திருந்து அவருடன் தான் சாப்பிடுவேன் என்று கூறி விட்டேன். மணி இரண்டானது, இரண்டரையானது, மூன்றும் ஆகியது.
பசி சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டு இருந்தது. அப்போது எங்கு ஒரு சிறுவன் வந்தான். நான் அமர்ந்திருக்கும் நிலையில், என் உயரத்திற்கு கொஞ்சம் குறைவாக...
“அண்ணே”
“தம்பி அந்தாண்ட தள்ளிப் போ! என் நண்பனுக்காக காத்துக் கிட்டு இருக்கேன்”
“அண்ணே அது வந்து....”
‘சொன்னா கேக்க மாட்டீயா? போ..போ”
“அதிலைண்ணே! அது வந்து....”
“தம்பி உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு! உன்னை மாதிரி சின்ன ப்சங்களெல்லாம் இப்படி தனியா சுத்தக் கூடாது. பிள்ளை பிடிப்பவன் தூக்கிட்டுப் போய்டுவான்... வீடு எங்க இருக்கு? உங்க அப்பா, அம்மா எங்க? ஒழுங்கா வீட்டுக்கு போ”
“அண்ணே நான் சொல்வதை முழுசா கேளுங்க....”
“நானே என் நண்பனுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்...உன் கதையை எல்லாம் கேக்க முடியாது.. தள்ளிப் போ..”
“யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!”
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”
கலவை 2
தமிழ் மணத்தில் சில பதிவர்கள் சில புதுமையாக குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளனர். அவைகளைப் பார்த்ததும் ஓடியே போய் விடுவேன். நண்பர் நிஜமா நல்லவன் சமீபத்தில் ஒரு புதிர் போட்டார். வழக்கம் போல் ஓடி வந்து விட்டேன். அப்போது சாட்டிங்கில் இருந்த சுமதி அக்கா, விடாப்பிடியாக அந்த புதிரைக் கண்டுபிடிக்கக் கூறினார்கள். இருவரும் இணைந்து விரைவிலேயே கண்டுபிடித்து விட்டோம்... சுலபமாக தெரிந்தது.
அதே போல் இலவச கொத்தனாரும், யோசிப்பவரும் புதிர் போட்டிருந்தனர். அதையும் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டேன். அப்போது வடகரை வேலன் அவர்கள் அதை கண்டுபிடிக்குமாறு கூற, அதிலும் மூக்கை நுழைத்துப் பார்த்தேன். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், பின்னர் சுலபமாகவே இருந்தது. யோசிப்பவரின் புதிரில் ஒன்றைத் தவிர மற்றவைக்கு பதில் சொல்லி விட்டேன்.
அடுத்த தடவைகளில் நீங்களும் முயற்சி செய்யுங்கள்... கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...
தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க...இனி நாமலும் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்... வேண்டாமா? அப்ப இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க
புதிர் : 1
கரத்தைக் குறுக்கி, உழுவதின் முதல் ஓசையை மாற்றி, வேய்ந்தால் எழுதலாம் (3)
கலவை 3
ஏஷியா நெட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் வரும்.. அதைப் பார்ப்பது வழக்கம்..இப்போது நமது தொலைக்காட்சியில் வருவதில்லை. அதில் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி. இதைப் பற்றி ஒரு பதிவு கூட முன் காலத்தில் இட்டேன்.
இசையில்லாத அல்லது குரலுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள பாடல்களை மட்டுமே விரும்பி ரசிப்பேன்... அந்த வரிசையில் கானா அண்ணனின் ஒரு பதிவின் மூலம் கிடைத்த இந்த பாடல் எனது ஆல் டைம் பேவரைட் லிஸ்ட்டில் சமீபத்தில் இடம் பிடித்துள்ளது. ( மொத்தமே 20, 25 பாடல்கள் தான் பேவரைட் லிஸ்ட்டில்)... நீங்களும் துர்கா விஸ்வநாத்தின் இந்த பாடலை ரசியுங்கள்... கடைசியில் வரும் லாலால்லால்ல்ல்லால்லால்லா வை விட்டு விடாதீர்கள்.
http://www.durgaviswanath.com/
கலவை 4
விரைவில் டிஜிட்டல் கேமரா வாங்கலாம் என்று எண்ணியுள்ளேன். சமீபத்தில் நந்து சார் எடுத்த நிலாவின் படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே என்று தான். ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி Panasonic Lumix DMC-FZ18 என்ற கேமரா பட்ஜெட்டுக்குள் வரும்போல் தெரிகின்றது.
விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.
59 comments:
அட இந்த லாலல்லால்லா எல்லா மல்லுக்களும் என்னாமா பாடுறாய்யங்க!
ஆனா பாருங்க அந்த புள்ளைய எலிமிண்ட் பண்ணச்ச எனக்கு அழுகையே வந்திடுச்சி :(((
///
கேமரா - அட ஜூப்பரூ!
அப்புறம் அதே பதிவுலக கேமரா நண்பருக்கிட்ட கேட்டுக்கினா இன்னும் நிறைய மாடல்கள் சொல்லுவாரே! :)
கலந்துகட்டி அடிக்கரதுன்னு இதைத்தான் சொல்றாங்களோ?:-)))))
புதுக்கெமெராவுக்கு இனிய வாழ்த்து(க்)கள். உங்க கையிலே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போகுதோ!!!
ச்சும்மா:-)))))0
:-)))...
என்ன புதிர்ன்னு சொல்லிட்டு, ஏதோ தொல்காப்பியம் வரிகள போட்ருக்கீங்க???
கேமராவுக்கு வாழ்த்துக்கள்!!!எப்ப வாங்கப்போறீங்க???
ஹை அண்ணா நல்லாருக்கு உங்க கலவை..!! :)))
நிஜம்ஸ் அண்ணாதான் புதிர் போடறார்னா.. நீங்களுமா?? பட் இங்க கும்மி அடிக்க முடியலையே.. வாட் டு டூ?? ;))
// இது என்னோட இடம்.//
முடியாது நானும் வருவேன்...!! :P
(ரொம்ப நாளா கண்ணா உறுத்திகிட்டே இருந்துச்சு... இப்பதான் நிம்மதியா இருக்கு..!! ;))
//துளசி கோபால் said...
கலந்துகட்டி அடிக்கரதுன்னு இதைத்தான் சொல்றாங்களோ?:-)))))
புதுக்கெமெராவுக்கு இனிய வாழ்த்து(க்)கள். உங்க கையிலே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போகுதோ!!!
ச்சும்மா:-)))))0//
Repeatuuuuuuuuuu..!! ;))))))
//விஜய் ஆனந்த் said...
:-)))...
என்ன புதிர்ன்னு சொல்லிட்டு, ஏதோ தொல்காப்பியம் வரிகள போட்ருக்கீங்க???//
அத தொல்காப்பிய வரிகள்ன்னு நீங்க கண்டுபிடிச்துக்கே அண்ணா ஏதாவது பரிசு தந்தாலும் தருவாரு..!! ;) வேற ஏதாவது தந்தா நான் பொறுப்பில்ல.........!! ;)))))
//துர்காவின் லாலல்லாலாவும்//
என்னது துர்காவின் லாலல்லாலாவா?? அதெல்லாம் இங்க ஆப்பீஸ்ல கேட்க முடியாது..!! ;))
இதுக்குமேல காப்பி பேஸ்ட் பண்ண ஒன்னும் இல்லையே :((
//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//
சொல்லிட்டேன்... போகட்டுமா அண்ணா?? :P
கிளப்பிட்டீங்க.. தமிழ்.! தமிழனைப்பற்றி சொல்லப்பட்ட முதல் கலவையில் விழுந்து விழுந்து சிரித்தேன். கேமரா கலவை.. நீங்களுமா..? நடத்துங்க.!
ஆகா ஆகா - கலந்து கட்டி அடிச்சிட்டீங்களா - ஓக்கே ஓக்க்கே
காமெரா வேறயா - சரி சரி - அடுத்த வாரத்துலேந்து ஒவ்வொரு பதிவுலேயும் ஒரு படம் இருக்கணூம் ஆமா சொல்லிப்புட்டேன் -
பிஐடின்னு ஒரு பதிவு இருக்கு போய்ப் பாரு
கலவை 1
காமெடி முயற்சி
உங்களுக்கு தமிழன் சின்னபையனா போயிட்டாரா
கலவை 2
இதெல்லாம் யோசிக்கிறவங்களுக்கு
மீ த எஸ்கேப்பு
கலவை 3
அலுவலகத்தில் பாட்டு போட்டால் சீட்டு கிளியும்
கலவை 4
எனக்கு மீண்டும் ஒரு பகிரங்க கடிதம் எழுதும் வேலையா
கலக்கல் கலவை தமிழ்... ஆனாலும் தமிழனை ரொம்ப ஓட்டுறீங்க.. :))
காமிராவுக்கு வாழ்த்துக்கள்..
"“யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!”
"
ஹா ஹா ஹா....
ஆனா ஒன்னு, யானைக்கு ஒரு காலம்ன்னா பூனைக்கும் ஒரு காலம் வரும்!
"புது கேமரா”
மொபைல வைச்சிகிட்டே நீங்க எங்கல்லாம் போட்டோ எடுத்துருக்கீங்க :(
இப்ப டிஜிட்டல் கேமராவா? கிழிந்தது கிருஷ்னகிரி!
நிம்மதியா ஏதாவது படிக்கல்லம்ன்னு வந்தா இப்படி புதிர போட்டூறாய்ங்க...
விடையும் தெரிய மாட்டேங்குது..
தெரியாம தூக்கமும் வரமாட்டேங்குது...
என்ன கொடுமைய்யா இது... :(
ஸ்ரீமதி said...
ஹை அண்ணா நல்லாருக்கு உங்க கலவை..!! :)))
நிஜம்ஸ் அண்ணாதான் புதிர் போடறார்னா.. நீங்களுமா?? பட் இங்க கும்மி அடிக்க முடியலையே.. வாட் டு டூ?? ;))
ரீப்பீட்ட்ட்ட்டுடுடூஊ....
what to do?
what to do?
///துளசி கோபால் said...
கலந்துகட்டி அடிக்கரதுன்னு இதைத்தான் சொல்றாங்களோ?:-)))))
புதுக்கெமெராவுக்கு இனிய வாழ்த்து(க்)கள். உங்க கையிலே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போகுதோ!!!
ச்சும்மா:-)))))///
நன்றி டீச்சர்!
ஹிஹிஹி... நாங்களும் கேமரா வச்சு இருக்கோன்னு சொல்லிக்கலாம்ல
ஆனாலும் தமிழனை ரெம்ப வார்றிங்க.
ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன்
//
எங்க விவேகானந்தர் தெருவிலேயா?
விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.
//
ஏஞ்சாமி இந்தக் கொலைவெறி. எதாஇருந்தாலும் பேசித் தீர்த்துகலாஞ்சாமி
:))))))))))))))))))))))))
//எங்க விவேகானந்தர் தெருவிலேயா?//
Repeatye...
Gud kalavais... Durga na udane.. naanum Malaysia Mariyaatha paththithaan solla vareengalonnu nenachen :)))
kalavai kalakkal thala ;)
நான் நம்ம அரிச்சுவரி துர்கா பாடியதோன்னு ஓடோடி வந்தேனாக்கும். ;-)
//அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே//
L போர்டு மாட்டிகிட்டு வண்டி ஓட்ரவன பாத்து இந்த மாதிரி வண்டி ஓட்டனும்னு ஆசப்படற ஆள் நீ ஒருத்தந்தான்யா.
//ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி//
இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ஒரே ஒரு ஆள்தானே இருக்காரு? "அவர்" தானே?
இன்னும் எத்தனை பேர பித்துபுடிச்சு அலையவிடபோறாரோ.
அவ்வ்வ்வ்வ்வ்...
இருந்தாலும் நான் ரொம்ப சின்னப்பையன்தான்ணே...
கலவை சரி அதுல கலாய்த்தல் எப்படி வரலாம்...:)
\\
தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க.
\\
ஆஹா சிங்கம் கிளம்பிடுச்சு...!!
அண்ணே பாட்டுல்லாம் கேக்க முடியல....
காமிரா வாங்குங்கண்ணே வாழ்த்துக்கள்...:)
எனக்கு ஒரு காலத்துல பெரிய ஆசை இருந்திச்சு ஆனா இப்ப அது வெளிய இல்லாத ஆசையா தான் இருக்கு பாக்கலாம்...
\\
விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.
\\
ஆமா படமெடுக்க தெரியும்ல...:)
\\
நான் அமர்ந்திருக்கும் நிலையில், என் உயரத்திற்கு கொஞ்சம் குறைவாக...
\\
என்ன கொடுமை இது ...:(
உயரம் குறைவுன்னாலும் நம்ம கண்களுக்கு பவர் ஜாஸ்தி அண்ணாச்சி எத்தனை பேரை கவுத்திருக்கோம்...
(ஒரு பேச்சுக்கு, ஒரு கெத்துக்கு..:)
///ஆயில்யன் said...
அட இந்த லாலல்லால்லா எல்லா மல்லுக்களும் என்னாமா பாடுறாய்யங்க!
ஆனா பாருங்க அந்த புள்ளைய எலிமிண்ட் பண்ணச்ச எனக்கு அழுகையே வந்திடுச்சி :(((
///
கேமரா - அட ஜூப்பரூ!
அப்புறம் அதே பதிவுலக கேமரா நண்பருக்கிட்ட கேட்டுக்கினா இன்னும் நிறைய மாடல்கள் சொல்லுவாரே! :)///
அண்ணே! உங்களுக்குமா? எனக்கும் அழுகை, அழுகையா வந்திடுச்சுன்னா பாத்துக்கங்க...
நிறைய கேமரா சொல்கிறார்.. .நம்ம பட்ஜெட்டுக்குள் வர்ரது இதுதான்.
///விஜய் ஆனந்த் said..
:-)))...
என்ன புதிர்ன்னு சொல்லிட்டு, ஏதோ தொல்காப்பியம் வரிகள போட்ருக்கீங்க???
கேமராவுக்கு வாழ்த்துக்கள்!!!எப்ப வாங்கப்போறீங்க???////
தம்பீஈஈஈஈஈஈ.... சுலபமா ஒரு புதிர் போட்டா இப்படியா சொல்வது... ;))
ஊருக்கு போவதற்கு முன் வாங்க திட்டம்... :) அப்பத்தானே ஊரில் இருக்கும் ஜூனியரை நிறைய படம் எடுக்கலாம்.
///ஸ்ரீமதி said...
ஹை அண்ணா நல்லாருக்கு உங்க கலவை..!! :)))
நிஜம்ஸ் அண்ணாதான் புதிர் போடறார்னா.. நீங்களுமா?? பட் இங்க கும்மி அடிக்க முடியலையே.. வாட் டு டூ?? ;))////
நன்றி தங்காச்சி! சுலபமான புதிர்தானேம்மா... முயற்சி செய்தால் ஈஸீஈஈஈஈஈஈஇ
////ஸ்ரீமதி said...
// இது என்னோட இடம்.//
முடியாது நானும் வருவேன்...!! :P
(ரொம்ப நாளா கண்ணா உறுத்திகிட்டே இருந்துச்சு... இப்பதான் நிம்மதியா இருக்கு..!! ;))///
அண்ணனோட இடத்துல தங்கச்சிக்கு இல்லாத உரிமையா? இது நம்ம இடம்ன்னு வச்சிக்கலாம்மா
///ஸ்ரீமதி said...
//விஜய் ஆனந்த் said...
:-)))...
என்ன புதிர்ன்னு சொல்லிட்டு, ஏதோ தொல்காப்பியம் வரிகள போட்ருக்கீங்க???//
அத தொல்காப்பிய வரிகள்ன்னு நீங்க கண்டுபிடிச்துக்கே அண்ணா ஏதாவது பரிசு தந்தாலும் தருவாரு..!! ;) வேற ஏதாவது தந்தா நான் பொறுப்பில்ல.........!! ;)))))///
ஒரு புதிர் போட்டா கண்டுபிடிக்க முடியலை பேச்சைப் பாரு... ;)
தம்பிக்கும், தங்கச்சிக்கும் முதுகுல இரண்டு போட்டா சரியா வரும்.
///ஸ்ரீமதி said...
//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//
சொல்லிட்டேன்... போகட்டுமா அண்ணா?? :P////
நன்றி! நன்றீ!
///தாமிரா said...
கிளப்பிட்டீங்க.. தமிழ்.! தமிழனைப்பற்றி சொல்லப்பட்ட முதல் கலவையில் விழுந்து விழுந்து சிரித்தேன். கேமரா கலவை.. நீங்களுமா..? நடத்துங்க.!////
மெய்யாலுமா? நன்றி தாமிரா! நாமலும் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்துட்டுது
///cheena (சீனா) said...
ஆகா ஆகா - கலந்து கட்டி அடிச்சிட்டீங்களா - ஓக்கே ஓக்க்கே
காமெரா வேறயா - சரி சரி - அடுத்த வாரத்துலேந்து ஒவ்வொரு பதிவுலேயும் ஒரு படம் இருக்கணூம் ஆமா சொல்லிப்புட்டேன் -
பிஐடின்னு ஒரு பதிவு இருக்கு போய்ப் பாரு///
நன்றி சீனா சார்! பிஐடியில் எப்படியாவது ஒரு பரிசு வாங்கியே ஆகணும்.. அதுதான் லட்சியம்
///வால்பையன் said...
கலவை 1
காமெடி முயற்சி
உங்களுக்கு தமிழன் சின்னபையனா போயிட்டாரா///
ஹிஹிஹிஹி.. தம்பி தானே
////வால்பையன் said...
கலவை 2
இதெல்லாம் யோசிக்கிறவங்களுக்கு
மீ எஸ்கேப்பு///
முயற்சியாவது செய்து இருக்கலாம்.. :)
///வால்பையன் said...
கலவை 3
அலுவலகத்தில் பாட்டு போட்டால் சீட்டு கிளியும்///
ஹா ஹா ஹா
///வால்பையன் said...
கலவை 4
எனக்கு மீண்டும் ஒரு பகிரங்க கடிதம் எழுதும் வேலையா///
அவ்வ்வ்வ்வ் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் உருவாவது இந்த சமூகத்து பிடிக்காதே... ;)
///வெண்பூ said...
கலக்கல் கலவை தமிழ்... ஆனாலும் தமிழனை ரொம்ப ஓட்டுறீங்க.. :))
காமிராவுக்கு வாழ்த்துக்கள்..////
நல்ல நண்பரைத் தானே ஓட்ட முடியும்... ;))
///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
"“யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!”
"
ஹா ஹா ஹா....
ஆனா ஒன்னு, யானைக்கு ஒரு காலம்ன்னா பூனைக்கும் ஒரு காலம் வரும்!///
இன்னாது? கூட்டு சேருறிங்களா? விடமாட்டோமே... ;)))
///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
"புது கேமரா”
மொபைல வைச்சிகிட்டே நீங்க எங்கல்லாம் போட்டோ எடுத்துருக்கீங்க :(
இப்ப டிஜிட்டல் கேமராவா? கிழிந்தது கிருஷ்னகிரி!///
அதையெல்லாம் வெளியே சொல்ல மாட்டோமே...;)))
///வடகரை வேலன் said...
ஆனாலும் தமிழனை ரெம்ப வார்றிங்க.////
நல்ல நண்பர். உருவத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம். ஜெயமோகன், சாரு, ராஸலீலா, கவுஜ, அரசியல் அப்படி இப்படின்னு பேசுறாரு... எம்புட்டு நேரம் தான் தெரிஞ்ச மாதிர்யே நடிக்கிறது?... அதான் கலாய்ப்பில் இறங்கியாச்சு... ;))))
///புதுகை.அப்துல்லா said...
ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன்
//
எங்க விவேகானந்தர் தெருவிலேயா?///
இல்லைங்ண்ணா! ஜித்தா பஸ் ஸ்டாண்ட் பின்னாடி இருக்குற ஜித்தா குறுக்குச் சந்து கிட்ட இருக்குற குட்டிச் சுவர்.. ;)))
////புதுகை.அப்துல்லா said...
விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.
//
ஏஞ்சாமி இந்தக் கொலைவெறி. எதாஇருந்தாலும் பேசித் தீர்த்துகலாஞ்சாமி
:))))))))))))))))))))))))////
அதெல்லாம் முடியாது..... உருண்டு புரண்டு போட்டோ எடுத்து பதிவுல போட்டே ஆவேன்.. விட மாட்டோம்ல
///ஜி said...
//எங்க விவேகானந்தர் தெருவிலேயா?//
Repeatye...
Gud kalavais... Durga na udane.. naanum Malaysia Mariyaatha paththithaan solla vareengalonnu nenachen :)))///
மலெசிய மாரியாத்தா பேரை நான் சொல்லலை நான் சொல்லலை... எல்லாரும் ஜியைத் தான் கேக்கனும். இன்னா ஆர்வம்ப்பா.. ;))
///.:: மை ஃபிரண்ட் ::. said...
நான் நம்ம அரிச்சுவரி துர்கா பாடியதோன்னு ஓடோடி வந்தேனாக்கும். ;-)*////
ஆசை, தோசை அப்பளவடை.. எங்க அக்காவை நாங்க கலாய்க்க முடியுமா?
/// நந்து f/o நிலா said...
//அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே//
Lபோர்டு மாட்டிகிட்டு வண்டி ஓட்ரவன பாத்து இந்த மாதிரி வண்டி ஓட்டனும்னு ஆசப்படற ஆள் நீ ஒருத்தந்தான்யா.
//ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி//
இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ஒரே ஒரு ஆள்தானே இருக்காரு? "அவர்" தானே?
இன்னும் எத்தனை பேர பித்துபுடிச்சு அலையவிடபோறாரோ.///
அண்ணே! நிலா படங்களைப் பார்த்து பிரமிச்சு போய் பாத்துக்கிட்டு இருப்பேன். நீங்க நல்ல கலைஞர் தான்.. நான் சொல்றேன்.
’அவரே’ தான்... விடாம பிளிக்கரில் போட்டோ போட்டு லிங்க் தருவாரே... ;)))
தமிழன் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிப்பா!
Post a Comment