Monday, October 20, 2014

பதின்மம்

    "திவ்யா.. உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மார்க் குறைவா வாங்கி இருக்குற..நல்லபடிக்கிற பொண்ணு இவ்ளோ மோசமா மார்க் வாங்கலாமா?” 10 ம் வகுப்பில் ஆசிரியர் திட்டி முடித்த போது வகுப்பில் அனைத்து மாணவ-மாணவிகளும் திவ்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். வழக்கமாக நல்ல மதிப்பெண்களை வாங்கும் திவ்யா இந்த பருவத் தேர்வில் இந்த முறை பார்டர் மார்க்கில் பாஸாகி இருக்கின்றாள். 

  . “ கண்டிப்பா.. நாளைக்கு உங்க பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் இங்க வந்து என்னையும், பிரின்ஸிபாலையும் பார்க்கனும்” .  எல்லாரும் தம்மைப் பார்ப்பது தெரிந்ததும் அவமானத்துக்கு இடையில் அமைதியாக தனது இருக்கையில் உட்கார்ந்தாள்..

வீட்டில்..
“ஏண்டி.. உனக்கு என்னடி குறை.. எல்லா வசதியும் செஞ்சு கொடுத்து இருக்கம்ல.. எவ்ளோவோ பிரச்சினைகளுக்கு இடையிலயும் இந்த ஆளோட குப்பை கொட்ரேன்னா அதுக்கு நீதானடி காரணம்.. உனக்காகத் தாண்டி நான் வாழ்றேன்” பொருமலுடன் கரைந்த அம்மாவைப் பார்க்கும் போது கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது திவ்யாவுக்கு..

“என்னடி வாய் ரொம்ப நீளுது... நானும் திவ்யாவுக்காகத் தான் உன்னையெல்லாம் சகிச்சிகிட்டு இருக்கேன்.. இல்லைன்னா என்றைக்கோ உன்னை தலை முழுகி இருப்பேன்” வழக்கம் போல் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கும் அப்பா...

“ஆமாமா ... கல்யாணத்தப்போ நீங்க இருந்த லட்சணம் தெரிஞ்சது தானே..வேலை வெட்டி இல்லாம இருந்த ஆளை கல்யாணம் கட்டி உங்கம்மா பொய் சொல்லி என் தலையில கட்டினாங்களே.. எல்லாம் என் தலையெழுத்து”

“அடி திமிர் பிடிச்சவளே.. எல்லாம் தெரிஞ்சு தானடி உங்கப்பன் என் தலையில மொளகா அரைச்சான்.”

அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட திவ்யாவுக்கு கண்ணீரை கட்டிப்ப்படுத்த இயலவில்லை...வீட்டில் தினமும் நடக்கும் சண்டை. பெற்றோர்களுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை.. தினமும் யாராவது யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

 பள்ளியில் - பிரின்ஸ்பால் அறையில்
“சார்.. உங்க பொண்ணு நல்லாபடிக்கிற பொண்ணு சார்.. இப்ப கொஞ்ச நாளா படிப்புல கொஞ்சம் கூட கவனமே இல்லை... நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. திவ்யாவோட பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்... அவங்க சொல்றதைப் பார்த்தா  உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் சண்டை,சச்சரவுகள் தான் அவளோட மனசை பாதிச்சு இருக்கும்னு தோணுது”

”சார்.. இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார்.. அவளுக்கு எல்லா வ்சதியும் செஞ்சு கொடுத்து இருக்கோம் சார். தனி ரூம் கொடுத்து எல்லா வசதியும் செஞ்சு இருக்கோம் சார்”

“அதெல்லாம் வாஸ்தவம் தான் சார்.. ஆனா உங்க பொண்ணு இப்ப டீனேஜில் இருக்கிற பொண்ணு.. நல்லது கெட்டது புரியுற வயசு.. உங்களுக்கு இடையில் இருக்கும் சண்டையைப் பார்க்கும் போது அவளுக்கு குடும்பம், படிப்பு இது மேலே எல்லாம் வெறுப்பு வர ஆரம்பிச்சுடும். நீங்க ரெண்டு பேருமே அவ மேல பாசம் வச்சு இருக்கீங்க.. அது வீணாகிப் போய்டக் கூடாது..என்னோட பிரண்ட் ஒருத்தர் சைக்யாசைக்யாரிஸ்ட். அவர்கிட்ட சொல்றேன்.. ஒரு ஃபிரி கன்சல்டிங்க்கு ஏற்பாடு பண்றேன்.. நீங்க ரெண்டு பேரும் சண்டையில்லாம சந்தோசமா இருந்தா தான் உங்க பொண்ணோட எதிர்காலம் சந்தோசமா இருக்கும்.. இப்ப படிப்பில கோட்டை விடற பொண்ணு வேற தவறான வழிகளில் போயிடக் கூடாது.. இந்த இண்டர்நெட் யுகத்துல நாம தான் கவனமா இருக்கனும். பொண்ணுகளைப் பாதுகாக்கனும்”


வகுப்பறையில்
“சார்..ரொம்ப நன்றி சார்.. எங்க அப்பா-அம்மா சண்டையில்லாம சந்தோசமா வாழனும்னு நினைக்கிற எனக்கு  எக்ஜாமில் மார்க் குறைச்சு போட்டு அவங்க மனசை மாத்த உதவி செஞ்சு இருக்கீங்க சார்.. ரொம்ப நன்றி சார்”
“என்னம்மா திவ்யா.. இதுக்கு போய்ட்டு... இந்த வயசில அப்பா-அம்மா போடுற சண்டையில் மனரீதியா எந்த பாதிப்புக்கும் உள்ளாகாம தெளிவா முடிவு எடுத்து இந்த ஐடியாவும் கொடுத்து இருக்கியேமே.. நீ தான் ரொம்ப கிரேட்.. சீக்கிரமா உங்கப்பா-அம்மா மாறிடுவாங்கம்மா.. உன்னோட உழைப்பு வீண் போகாதும்மா... “
நம்பிக்கையுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் திவ்யா.

Thursday, November 29, 2012

சுழல் மோகினி

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் என் நெஞ்சை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்த அந்த பளபளப்பான கத்தியைத் தடுக்க இயலாமல் கத்த மட்டுமே எனக்கு முடிந்தது. அவள் கோரமான சிரிப்போடு எனது இடது பக்கத்து நெஞ்சில் கத்தியை இறக்கினாள்..
ஏதோ தொண்டையில் அடைப்பது போல் இருந்தது. நெஞ்சில் இரத்தம் தனது பீரிடும் அளவைக் காட்டிக் கொண்டு இருந்தது.
 “டேய் எவ்ளோ நேரம்டா.. தூங்குவா எந்திரிடா..”
அவள் தனது கர்ண கொடூரமான குரலில் கத்திக் கொண்டு இருப்பது காதில் கேட்டது. சட்டென்று முழிப்பு வந்தது..
 “சே.. கனவு”
இளம் குளிரான நவம்பர் மாதத்து குளிரிலும் உடல் வேர்த்து இருப்பதை உணர முடிந்தது. கண்களில் எரிச்சலும், தொண்டையில் ஒரு கரகரப்பும் சேர்ந்து இருந்தது. இடது பக்க நெஞ்சில் ஏதோ கூர்மையானதை வைத்து அழுத்திய தடம் இருந்தது.. ஆனால் இரத்தக் கறை ஏதும் இல்லை..

காலையிலேயே கொடூரமான கனவு என்னை உலுக்கி இருந்தது
“டேய்.. உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்றானுகடா.. எங்கேயோ அருவிக்கு போகனும்னு சொன்னீயே.. ஞாயிற்றுக் கிழமை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க.. மதியம் சோறாக்கி வைக்கிறேன்.. இங்க சாப்பிட வந்துடுங்க” அம்மா மீண்டும்
அம்மாவுக்குத் தெரியும்.. கூட வந்து இருப்பவர்கள் இந்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுவார்கள் என்று.. வேகமாக கிளம்பி கொண்டு வெளியே வந்தேன். நண்பர்கள் மூவரும் காரில் தயாராக இருந்தனர்.
“ஏண்டா தூங்குமூஞ்சி நாங்க தான் நேத்தே சொன்னம்ல.. இங்க வந்து உன்னை எழுப்ப வேண்டியதாப் போச்சு”
 “சாரிடா.. நைட் தூங்க லேட்டாகிடுச்சு.. காலையில் ரொம்ப டயர்டு வேற.. கெட்ட கனவு வந்து தூக்கத்தை கொடுத்துடுச்சு.”
கண் எரிச்சலுடன், கத்தி இறங்கிய இடத்தைத் தொட்டுப் பார்த்தேன்.. லேசாக வலிப்பது போல் இருந்தது. வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அப்போது தான் திறந்து இருந்த டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிக் கொண்டார்கள் கூடவே தீவனங்களும்...
எங்கள் ஊரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மலையடிவாரத்தில் அந்த அருவி இருக்கின்றது. அவ்வளவாக ஆட்கள் வர மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அருவியிலும், அதை ஒட்டி இருந்த தண்ணீர் கிடங்குகளிலும் குளியல் ஆரம்பமாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்த ஆரம்பித்து இருந்தனர்.. எனக்கு மது பழக்கம் இல்லாததால் தீவனங்களை தின்று கொண்டு இருந்தேன். கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு வந்தது. நல்ல மழை பெய்வதற்கான அறிகுறி இருந்தது.
நல்ல போதையில்  இருந்த நண்பர்கள் மூவரையும் தள்ளிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. வண்டியில் ஏறியதும் மூவரில் சரிந்து விட்டிருந்தனர். ப்ளாட்.. வழக்கமாக நடப்பது தான் என்பதால் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
வண்டி கிளம்பியதும் மழை சடசடவென அடிக்க ஆரம்பித்து இருந்தது. மலையை விட்டு சிறிது தூரம் இறங்கி சமதளத்திற்கு வந்ததும் மழை இன்னும் வெளுக்க ஆரம்பித்து இருந்தது. திடீரென்று படார் என்ற சத்தத்துடன் பின்பக்க டயர் வெடித்திருந்தது. மழையில் நனைந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். டயர் பணாலாகி இருந்தது.
சட்டையை தலைவழியே கழட்டிவாறே வைத்துக் கொண்டு டிக்கியைத் திறந்தால் ஸ்டெப்னி மட்டுமே இருந்தது. ஜாக்கி உள்ளிட்டவைகளைக் காணவில்லை. கடன்கார நண்பன்.. எவனுக்காவது அவசரத்துக்கு கொடுத்து இருப்பான்.
மழை இன்னும் வலுத்து இருந்தது. போன் சிக்னல் அனைத்தும் கட்டாகி இருந்தது. நவம்பர் மாதக் குளிரில் அருவிக்கு ஆட்கள் வருவது அபூர்வம்.. அதுவும் இப்போது திடீரென்று மழை வேறு கொட்டுகின்றது. கவ்விய இருட்டில் மின்னல் வெட்டிச் சென்றது. எங்கோ தென்னை மரத்தில் விழுந்து இருக்க வேண்டும் அருகிலேயே.. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தோட்டத்திற்குள் வீடும், வீட்டின் முன் காரும் தெரிந்தது.

நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே தட்டுத் தடுமாறி அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். மழையினால் பாதை முழுவதும் சகதிக்காடாகி இருந்தது. வீட்டில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினாலும் உள்ளே பெல் அடிக்கும் ஓசை ஏதும் கேட்கவில்லை. கரெண்ட் கட்டாகி இருக்கலாம் என்ற எண்ணியவாறே கதவைத் தட்டினேன்.

உடனே திறந்த கதவின் வழியே அந்த அபூர்வ தேவதையைக் கண்டேன். மன்மதனின் காதலியாக இருக்கும் சகல லட்சனங்களையும் பொருந்திய காந்தர்வி பார்த்த பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. “ஹலோ.. என்னங்க.. யார் நீங்க. என்ன வேணும்?..இவ்ளோ மழையில் இங்க வந்து இருக்கீங்க”
அந்த பைங்கிளி தனது இதழ் திறந்து பேசியது.. இல்லை இல்லை நாதம் இசைத்தது..
 “டயரோட கார் வெடிச்சிருச்சு.. இல்லையில்லை.. ஸ்டெப்னியோட டயர் வெடிச்சிடுச்சி”
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தேன். ஒரு பெண்ணின் அழகு இப்படி மயக்கும் என்று இன்று தான் கண்டுகொண்டேன்..
“என்னதாங்க வேணும்.. சொல்லுங்க” அந்த குயில் கிணிகிணியென ஓசை எழுப்பியது... இப்போது நிதானத்திற்கு வந்து இருந்தேன்
 “அருவிக்கு வந்தோம்ங்க.. வழியில் கார் டயர் வெடிச்சிடுச்சு.. ஸ்டெப்னி மாத்த ஜாக்கி இல்லை வண்டில.. இங்க உங்க வீட்டைப் பார்த்தேன். முன்னாடி காரும்.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு”
”ஓ அப்படியா.. சரி சரி உள்ளே வாங்க.. நல்லா நனைஞ்சு போய் இருக்கீங்க” அவள் வழி விட நான் உள்ளே சென்றேன். நல்ல விசாலமான ஹாலாக இருந்தது. அவள் மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்து இருந்தாள்.. வயது 25 க்குள் இருக்கும் போல் தோணியது..
அழகாக வாறிய தலை முடி. திருத்தமாக இருந்த புருவம். அழகான சிறிய பொட்டு. சோபாவில் இருந்த துண்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கும் போது அவளது விரலில் என் விரல் உரச ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது.
 “முதல்ல தலையை துவட்டுங்க.. ஒரு டீ போட்டுத் தர்ரேன்.. குடிங்க.. அதுக்குள் ஜாக்கி எடுத்து தர்ரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். தலையை துவட்டிக் கொண்டே சோபாவில் அமர்ந்தேன்..
நல்ல பெரிய வீடு தான்.. வெளியே இருந்து பார்க்கும் போது பழையதாக இருந்தாலும் உள்ளே மார்டனாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் டீ கோப்பையுடன் வந்தாள். டீயை வாங்கும் போது தான் கவனித்தேன். அவளது முந்தானையின் அகலம் குறைந்து போய் இருந்தது. அதோடு இடுப்புப் பகுதி இப்போது நன்றாக தெரிவது போல் மாற்றிக் கட்டியும் இருந்தாள். உள் மனதில் ஒரு சலனம் ஓடியது.
“இங்க வேறு யாரும் இல்லீங்களா?”
“என்னோட கணவர் வேலை விஷயமா மதுரை வரை போய் இருக்காங்க.. ஒரு 5 வயது மகன் இருக்கான்.. இன்னைக்கு லீவுங்கறதால அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்கான்.. நைட் அவர் வரும் போது கூட கூட்டிட்டு வந்துடுவார்” ஒரு மோகனப் புன்னகையுடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நானும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“டீயை முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா... ” என்று இழுத்தாள்..
 “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டே டீயை உறிஞ்சினேன். சட்டென்று கண்களைக் கொண்டு செருகியது.. கொஞ்ச நேரத்திற்கு நினைவே இல்லை. கண் எரிச்சலுடன் கண்ணைத் திறந்த போது தலை விரிகோலமாக அவள் என் மீது அமர்ந்து இருந்தாள்.

  இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

Monday, November 5, 2012

Klueless 8 - 2012 -Ahvan - Hints, clues, spoilers

Klueless is the annual online puzzle designed by IIM indore students.

 After competing in Hunt for hint from terror kummi last aug .. It was a loooong wait for klueless 8.. But when it arrived I could not  find a time to solve the puzzle.... reasons are Bakrith and Diwali busy in our shop.. + as usual AMMA's exceptionally well organized Electricity dept. so it took me 8 days to  complete..
And Finally Klueess 8 finished..
Special Thanks to Dinnath Baskaran sir, arun prasath .. They both helped me with useful hints in some levels
So now the time to help others.. If u are struck in some level.. just let me know in comments.. I will try to help you as soon as possible.. If u are new.. Just go play. No one can describe you that experience. you can feel when you start playing.

 

Tips and Hints
Level 1 :Level 1 : Just click and go

Level 2 :Do a image search*.. find  meanings of  the symbols.. from the URL cue  find the other name of that....change the url.. if u can finish.. i LOVE u so much.. ;-)

 (e.g) changing URL
 http://ahvan.in/ahvan/ahvan12/klueless8/mojojojo/tamil.asp
http://ahvan.in/ahvan/ahvan12/klueless8/mojojojo/english.asp

* Download the picture in your computer, go to google image search page..click the Camera icon.. give your image  location and search.. Some time you need to split the images with paint or Photoshop.

Uploaded with ImageShack.us

Level 3 : Just google the images you are seeing.. all names must be in general term.. find a game name.

Level 4 : What is the relationship between the both in page title?.. no.. no... don't go that way.. Just take the ralationship with u.. find the person in image and found the other person.

Level 5 : google the images.. you will get some kind of characters.. go with them.. if u can't  find in earth.. .. leave it.. go to moon.. your Grandma wait there to give you a vada.. ;-)


There may be answers which lead you down the wrong path so watch out! Please note: Not every one of these might be a clue. We promise to make a conscious effort to mislead you.

Enjoy the game

 

Sunday, October 14, 2012

Hunt for hint... நன்றிகள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்போது எப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. இந்த நிமிடம் மகிழ்ச்சியா இருப்பவன் அடுத்த நிமிடம் துன்பப்படலாம்... vice-versa ..

ஆனால் வாழ்க்கையில் உட்சபட்ச மகிழ்ச்சி என்பது எப்போது வரும்ன்னு யாருக்கும் சொல்ல முடியாது.. அப்படியான ஒரு மகிழ்வான கணத்தை ஏற்படுத்திக் கொடுத்த டெரர்கும்மி குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் பல..

இந்தூர் ஐ.ஐ.எம் நடத்தும் Klueless போன்ற ஒரு முயற்சியை Hunt for Hint என்ற பெயரில் டெரர்கும்மி குழுவினர் முயற்சி செய்து அற்புதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதில் ஏனோ சுவாரஸ்யமின்றி தான் கலந்து கொண்டேன். செப்டம்பர் 12 ல் தொடங்கிய போட்டி.. அடுத்த நான்கு நாட்களும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.. கடைசியில் இரண்டாவதாக வெற்றி பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை அளக்க கருவியே இல்லை.. :)

அதுவும் நான் இருந்த நிலையில்...
1. மொபைல் இண்டர்நெட் மூலம் மொபைலை மோடமாக பாவித்து இணையத்தில் தொடர்பு
2. எப்போதாவது இருக்கும் மின்சாரம்
3. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு அறுந்து விடும் இணைய இணைப்பு
 4. கூகுள் திறக்கக் கூட ஒரு நிமிட ஆகும் மொபைல் இணைப்பு
5. பிரவுசரில் ப்டங்கள் வருவதை டிஸேபிள் செய்து தான் பயன்படுத்த இயலும் 6. அடிக்கடி வந்து தொல்லை(?) தரும் கடை வாடிக்கையாளர்கள். (கடையில் தான் கணிணி.. வீட்டில் தடா)

இப்படியெல்லாம் இருக்கும் சூழலில் HFH 2 வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று செக்கை வாங்கி காசும் பார்த்தாகி விட்டது. அந்த அனுபவத்தை உணர அந்த வேளையில் அனுபவத்தால் தான் தெரியும்.


ImageShack.us

HFH 2 குழுவினருக்கு மிக்க நன்றிகள்!

டிஸ்கி : IIM இந்தூர் நடத்தும் Klueless போட்டி வரும் 19 ந்தேதி ஆரம்பமாகின்றதாம்.. அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில் மின்சாரம் தங்கத்தை விட உயர்வானது.. இதில் கலந்து கொள்வது எல்லாம் கனவில் தான் நடக்கும்.. :-(

Klueless 8 போட்டிக்கான இணைப்பு
IIM Indore முகநூல் பக்கம்


 

Friday, August 10, 2012

கொஞ்சமா எழுதிக்கிறேன்... :)

சென்ற வாரம் தமிழக முதல்வர் தந்தத் தாரகை அம்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டு நிறைய பொதுமக்களின் வயிற்றிற்கு பால் வார்த்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கினார். இனி எங்கும் ப்ளக்ஸ் பேனர்களில் அம்மா, எம்.ஜி.ஆர், அண்ணா படத்தைத் தவிர வேறு இருக்கக் கூடாது என்று.. மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. தெருக்களை அடைத்து, கடைகளை மறித்து அமைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.. அம்மா இந்த கொள்கையில் ‘வழக்கம் போல்’ உறுதியா இருக்கட்டுமாக.. அதோடு இன்னொரு நல்லதும் செய்தால் மக்கள் மிக மகிழ்வார்கள்... இனி கல்யாண ப்ளக்ஸ்களில் மணப்பெண்-மணமகள் போட்டோக்களைப் போடக் கூடாது என்று.. கல்யாண சீசனில் தெருக்களை அடைத்து 15 , 20 அடி அகல நீளங்களில் வாழ்த்து பேனர்... மணமக்கள் ஜோடியாக.. பார்ப்பதற்கே பயமாக இருக்கின்றன... அதை பார்த்து வாழ்த்த மனம் வரா விட்டாலும் திட்ட வைக்காமல் இருக்கலாம்... சில இடங்களில் விரசமான மேக்கப் ஆடை அலங்காரங்களுடன்.. பார்க்கவே அருவருப்பாக இருக்கின்றது.
உன் கிட்ட லட்டையே ஒப்படைக்கிறோம். அது எப்பவும் ஸ்வீட்டாகவே இருக்கனும்
இது ஒரு திருமண வாழ்த்து போஸ்டர்... பஸ்ஸில் என்னுடன் அமர்ந்து இருந்த ஒரு சகபயணி சொன்னார்... காராச்சேவு மாதிரி இருக்கு... இது லட்டாம்ல... ஒய் திஸ் கொலவெறி... :-) &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& உலகம் இயங்குவதே உணவைக் கொண்டு தான்.. அந்த உணவைத் தயார்படுத்த விவசாயம் முக்கியம்.. விவசாயம் செழிக்க மழை அத்தியாவசியம்.. நம் முன்னோர்களின் இயற்கையான நீர்ப்பாசன முறைகளை நாம் சிதறடித்து விட்டதால் இன்று மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.. அது பொய்க்கும் போது ஏற்படும் விளைவுகள் கொடூரமாக இருக்கின்றன. மழை இல்லையென்பதால் விவசாயம் செய்ய முடியாத நிலை.. விலைச்சலும் இல்லை... விலையும் இல்லை எனும் போது பணப்புழக்கம் குறைகின்றது... இந்த ஆண்டு எங்கள் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முழுவதும் பொய்த்து போய் விட்டது. வைகை, பெரியார் அணைகளில் தண்ணீர் இல்லை.. விவசாயம் தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. குடிக்கும் தண்ணீருக்கே பஞ்சம் வரும் சூழல்.. கொஞ்சம் ஆதரவாக இந்த வாரம் மழை சிறிது பெய்யத் துவங்கி உள்ளது. இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ஆகஸ்ட் 6 ந்தேதியை உலகம் மறந்து இருக்கலாம்.. அணு ஆயுத தாக்குதலால் உலகமே அதிர்ந்த நாள்... அதைப் பற்றிய எந்த பிரஞ்யையும் இல்லாமல் இந்திய ஜனநாயக நாடு அணு உலைகளை அமைத்து வருகின்றது. மக்களின் எதிர்ப்புகளை எல்லாம் காமெடியாக்க சில காமெடி அமைச்சர்களை அதற்க்காகவே வைத்து இருக்கின்றது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்குடன் வெளிப்படையாக அணு மின்சாரம் என்ற அஜெண்டாவை வைத்து இருக்கும் இந்த ஜனநாயக அரசுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை... கூடங்குள மக்களின், இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி அங்கு அணு மின்சாரம் தயாரிக்கும் ஆர்வம் அழிவை நோக்கி செல்லாமல் இருக்கனும்.. இன்னும் 15 நாளில் மின்சாரம் தயாரிக்க ஆரம்பிப்போம் என்று கடந்த ஒரு வருடமாக வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் நாராயணசாமி போன்ற மாண்புமிகுக்கள் இருக்கும் வரை எதுவும் அரசு இயந்திரங்களால் சாத்தியப்படும். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday, March 28, 2012

தண்ணீர் - ஒரு சர்வரோக நிவாரணி

சர்.சி.வி.ராமன் (1888-1970) இந்தியாவில் பிறந்த ஒரு சிறந்த அறிவியல் அறிஞர். இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றவர்.. காடுகளை அழித்து, சுற்றுப்புறச் சூழலை நாமே கெடுத்துக் கொள்ளும் இன்றைய நவீன யுகத்தில் தண்ணீரின் முக்கியத்துவம் கொடுத்து எழுதிய புத்தகம் தான்.. (Water - The Elixir of life) இதில் தண்ணீர் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் தாவரங்கள் வாழ்வதற்கும் பெரிய அடிப்படை என்பதாலேயே அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்... இனி அவரது பார்வையில் இந்த புத்தகத்தில் உள்ளவற்றை சிறிது பார்க்கலாம்.

பொதுவாக பழைய காலங்களில் பார்கடலில் கடைந்து கிடைக்கப்பட்ட அமிர்தமே நமது வாழ்வில் கிடைக்கதற்கரிய பொருளாக, சர்வரோக நிவாரணியாக நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காத ஒன்றையே நாம் தேடியுள்ளோம். ஆனால் தண்ணீரே உலக வாழ்வின் அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. தண்ணீரே உலகின் முன்னேற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நிர்ணயித்துள்ளது எனச் சொன்னால் மிகை இல்லை.

தண்ணீர் இருக்கும் பகுதிகளே பூமிக்கு அதிக வனப்பைத் தருகின்றன, அது ஓடுகின்ற வெள்ளமாக இருந்தாலும் சரியே, குளம் குட்டைகளாக இருந்தாலும் சரியே.. அவைகளில் கால்நடைகள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்கின்றன. பொதுவாக தென்னிந்தியப் பகுதிகளில் நீர்த்தேக்கங்களை அதிகமாகக் காணலாம். அவை எப்போதும் பார்வைக்கு விருந்தாகவே அமையும். ஆனால் அவை சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பது ஒரு பெரும் குறை.

ஆழம் குறைவான ஏரிகளும், கண்மாய்களுமே அங்கு விவசாயத்திற்கு பெரிதும் உதவுபவையாக இருக்கின்றன. அப்பகுதிகளில் இருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்பது என்பது அழகான அனுபவம். மனிதனின் கண்ணுக்கு ஒப்பாக இயற்கையில் அமைந்த நீர்நிலைகளை ஒப்பிடலாம். சூரியன் உதிக்கும் போது தண்ணீரில் தெரியும் ஜொலிஜொலிப்பும், மறையும் போது இருக்கும் மந்தகாசமும் அற்புதம்.

தான் ஓடும் இடத்திற்குத் தகுந்தாற் போல் நிறத்தை மாற்றிக் கொள்வது தண்ணீருக்கு இருக்கும் ஆற்றலே.. மழையின் காரணமாக ஓடி வரும் தண்ணீர் அந்த மண்ணுடைய நிறத்தை வாங்கி கொண்டு அதன் நீறத்திலேயே நீர்நிலைகளை நிறைக்கின்றன. புழுதி நிறமும், செம்மண் நிறமுமாக ஓடும் தண்ணீர் கடலை அடைந்தால் மட்டும் நீல நிறத்தை அடைந்து விடுகின்றது. நீரோடும் நிலப்பகுதி முழுவதும் வளமானதாக மாறி விடுகின்றது.

மண்ணரிப்பு என்பது கவனிக்காமல் விட்டுவிடும் போது நமக்கு பெரும் அழிவையேத் தருகின்றது. அதிகப்படியான மழை, நிலச்சரிவு, நிலத்தை பாதுகாக்கும் மரங்களை வெட்டுவது போன்றவையே நிலச்சரிவுக்கு காரணமாக அமைகின்றன. தண்ணீரின் ஓட்டத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான விவசாயத்தினை மேற்கொள்ள மண்ணரிப்புகளில் நாம் நிலத்தைக் காக்க வேண்டும். மண்ணரிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் பாதுகப்பு அரண்கள், நீரோட்டப் பாதைகளில் தடுப்பை ஏற்படுத்தாமல், கரையோரங்களில் மரங்களை நட்டு தடுக்கலாம்.

தண்ணீரே மனித, மிருக, தாவரங்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இவைகளின் உடலில் பெரும்பகுதி நீரினால் ஆனது. தண்ணீர் இல்லாமல் வளர்ச்சி என்பது நடக்கவே இயலாதது. மண்ணில் இருக்கும் நீரே தாவர வளர்ச்சிக்கும், மனிதனுக்கு அடிப்படைத் தேவை.

தண்ணீர் சிக்கனம் மூலம் வருங்காலத்திற்கான நீரை சேமிப்பது என்பது நமது வாழ்வின் அடிப்படை பண்பாக இருக்க வேண்டும். நீர் ஊற்றுக்களே நம்மை காக்கக் கூடியவைகளாக அமையும். ஆனாலும் மழை நீரும், மழைகளில் இருந்து வரும் நீருமே நமக்கு கிடைக்கின்றன. இன்னும் பருவமழையை நம்பியே இன்றைய இந்தியாவின் அடிப்படை விவ்சாயம் இருக்கும் சூழலில் பருவமழை பொய்த்துப் போகும் போது கடும் நஷ்டங்களை எதிர் கொள்ள நேரிடுகின்றது.

நதி நீரை தேவையான பகுதிகளை எடுத்துச் செல்வது என்பது இன்றைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. சரியான திட்டமிடல் மூலம் இதைச் செய்தால் வனாந்திரங்களும், பாலைவனமும் சோலைவங்களாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மரங்கள் அழிவதும், அழிக்கப்படுவதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம். மரம் நடுவதை திறம்பட செய்வதும், தேவையான அளவு காடுகளை உருவாக்குவதும், இன்றைய இந்தியாவின் அவசரத் தேவைகளில் ஒன்று. காடுகள் அதிகமானால் மண்ணரிப்பு தடுக்கப்படுவதுடன், மழை நீரை பூமியில் சேமித்து வைக்கவும் உதவும்.

நதி நீர் ஓட்டத்தை செம்மைப்படுத்துவதன் மூலம் நீரை சேமித்து விவ்சாயத்தைப் பாதுகாக்கலாம். நதி நீரை தேக்கி வைத்து அதன் மூலம் நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்கலாம். இன்றைய காலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கின்றது.

ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயம். பூமிக்குள் தேங்கி இருக்கும் நீரே ஜீவராசிகள் அனைத்திற்கும் அடிப்படையானது. தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகளும், தண்ணீரின் குணாதிசயங்களும் என்றென்றும் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதாகவே என்றென்றும் இருக்கும்.

சர்.சி.வி. ராமனின் எழுத்தும் மிகவும் சுருக்கமானவைகளாகவும், படிப்பதற்கு மிகவும் புரியக் கூடியவைகளாகவும், கருத்தைப் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வண்ணமாகும் இருக்கும்.

பின்குறிப்பு: இது ஒரு கல்வி சம்பந்தமான தேவைகளுக்காக எழுதிக் கொண்டிருப்பது. புத்தகத்தை எழுதியவரின் பார்வை இதில் வரவில்லை என்றால் எம் மொழிபெயர்ப்பின் தவறே.




Monday, March 26, 2012

சொல் கலை புதிர் - 1

இது ஒரு வித்தியாசமான தமிழ் புதிர்.. ரொம்ப சுலபம் தான்.

1. முதலில் கலைந்து இருக்கும் ஆறு வார்த்தைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அவை ஆறு அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தரும்.

2. Refresh Final Answer Boxes என்பதைக் கிளிக் செய்தால், ஆறு வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (அவை நிறம் மாற்றப்பட்டிருக்கும்) எழுத்துக்கள் கீழே வரும்.

3. கீழே உள்ளவைகளை ஒழுங்கு செய்தால் ஒரு வரி கிடைக்கும். அது தான் கடைசி விடை. இப்போது Completed என்பதைக் கிளிக் செய்தால் அருகில் உள்ள பாக்ஸில் விடை முழுவதும் வரும். அதை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பாக்ஸில் அல்லது dginnah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

4. எழுத்துக்களை மாற்ற கட்டத்தில் மவுஸால் லேசாக தட்டி அடுத்த கட்டத்துக்கு மாற்றி விடலாம்.

மிக சுலபமான புதிரே இருக்கின்றது. விளையாடுவது சுலபம்.. சுவாரஸ்யத்திற்கு உத்திரவாதம்.
வாழ்த்துக்கள்!

அறிமுகப்படுத்திய நண்பர் யோசிப்பவருக்கு நன்றிகள்.

1.
2.
3.
4.
5.
6.


அட ராமான்னு சொல்லிடுவீங்களோ?



Thursday, February 16, 2012

அஸ்மாவுக்கு நிக்காஹ்

”ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சுப்போடுவேன்..இன்னும் ஒரு மாசத்தில் நிக்காஹ்.. நீ சம்மதிச்சே ஆகனும்” அஸ்மாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. வாப்பாவின் கோபமான கர்ஜனையையும், அடியையும் பொறுக்காத அஸ்மா ஆடிப் போய் விட்டாள்...கண்களில் தாரைதாரையாக தண்ணீர் கொட்டியது. எப்போதும் அதிர்ந்து பேசாத வாப்பாவா இப்படி என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அஸ்மாவின் அம்மா ஜூபைதாவின் அதிர்ச்சியோ அதை விட அதிகமாக இருந்தது. கணவன் இதுவரை குழந்தைகளை அடித்ததே இல்லை... ஜூபைதா அடித்தால் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று கண்டிப்பவர்.. இன்று இப்படி நடந்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாள்..


“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படி கை நீட்டி விட்டீர்களே?” என்று கண்களின் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ரசூல் பாயைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டு விட்டாள்... ரசூல் பாய் ஒரு வெறுமையான சூடான பார்வையை ஜூபைதா மீது வீசி விட்டு, வேகமாக செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ரசூல் பாய் என்றால் மயிலம்பட்டி கிராமத்தில் மட்டுமின்றி அதைச் சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் தெரியும். பலசரக்கு மொத்த வியாபாரம்... நாணயமான மனுசன், வியாபார நெளிவு சுழிவு தெரிந்தவர்... வரவு செலவில் தாமதம் என்றால் கூட மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து தவணை தரக் கூடியவர். சொன்ன நேரத்தில் சரியாக சரக்கு கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்பதால் இவரிடம் வியாபாரம் செய்பவர்களுக்கும், இவர் வியாபாரம் செய்பவர்களுக்கும் ரசூல் பாயை ரொம்ப பிடிக்கும்.

இவ்வளவு அமைதியான ரசூல் பாய் தான் இன்று கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ரசூல் பாய்க்கு அஸ்மா ஒரு மகள்.. இரண்டு மகன்கள்.. மூவரையும் 20 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கல்லூரி அனுப்பி படிக்க வைத்தவர். மஹல்லாவில் முதல் பட்டதாரி பெண்ணாக அஸ்மா இருந்தாள். இரண்டு மகனில் ஒருவன் பைசல் சென்னையின் ஒரு பன்னாட்டுக் குழுமத்தில் உயர்பதவியில் இருக்க... இன்னொருவன் அய்யூப் வாப்பாவுடன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்கின்றான்.

அஸ்மா கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் செல்லம்.. வாப்பாவிடம் செல்லமும், அன்பும் அதிகம்.. அதே போல் உம்மாவும், அண்ணன்மார்களும் அஸ்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். 20 கி.மீ தூரம் தள்ளி தினசரி சென்று வரும்வகையில் கல்லூரி என்றபோது உம்மா ரொம்பவே தயங்கினாள். ஆனால் ரசூல் பாய் மஹல்லாவாசிகளின் முதுகுக்கு பின்னான பேச்சுக்களையும் மீறி அவளைக் கல்லூரி அனுப்பி இளங்கலை பட்டம் வாங்க வைத்தார்.

மகன்களுக்கு திருமணம் முடிப்பதற்கு முன்னே மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்ற சராசரி தகப்பனின் மனம் தான் ரசூல் பாயை பல இடங்களில் அலைந்து மணமகன்களைத் தேட வைத்தது. ஆரம்பம் முதலே அஸ்மாவிற்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு வரனுக்கு ஒரு காரணம் கூறி தட்டிக் கழித்தாள்.. சென்னையில் இருந்த அண்ணன்காரனும், ஊரில் இருந்த அண்ணன்காரனும் கூட சில நல்ல வரன்களைக் கொண்டு வந்தனர்... வரதட்சணை தரும்/வாங்கும் பழக்கம் இல்லாததால் அப்படியான குடும்பங்களில் இருந்தே அனைத்து வரன்களும் இருந்தன... எல்லாரின் உழைப்பும் அஸ்மாவினால் ஒரு நிமிடத்தில் கலைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

கல்லூரி சென்ற பெண்ணாயிற்றே ஏதும் காதல், கீதல் என்று அகப்பட்டு விட்டாளோ என்று கூட ஜூபைதாவிற்கு சந்தேகம் வந்திருந்தது... ஆனால் அப்படி ஏதுமில்லை என்று அஸ்மா அழுத்தம் திருத்தமாக இருந்தாள்... அஸ்மாவின் தோழிகளிடம் கேட்ட போதும் இதையே தான் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அஸ்மா அல்லாஹ்வின் மீதே சத்தியமிட்டும் கூறி விட்டாள். இதை எல்லாம் ஜூபைதா தன் கணவரிடம் சொல்லி விட்டிருந்தாள்... எந்த குறையும் இல்லாத வரன்களை தட்டிக் கழிப்பதைப் பார்க்க பொறுக்கமாட்டாத ரசூல் பாய் இன்று ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று தான் காலை டிபனை முடித்தவுடன் பிரச்சினையை ஆரம்பித்தார்.

வாப்பாவை எதிர்த்துப் பேசி பழக்கமே இல்லாத அஸ்மாவே “நிக்காஹ்வும் வேணா... ஒரு மண்ணும் வேணா “ என்றதும் கோபம் எல்லை மீறி சென்று விட்டது ரசூல் பாய்க்கு... அருமை மகளை அடித்து விட்டு கடைக்கு சென்று விட்டார். சின்ன அண்ணன் அய்யூபும் உம்மாவிடம் “ஏதா இருந்தாலும் இன்னைக்கு கேட்டு வைங்க உம்மா... வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றான்... அழுது கொண்டு இருந்த அஸ்மாவிற்கும் இது நன்றாகவே கேட்டது.

ஜூபைதாவால் மகள் அழுவதைக் கண்டு சும்மா இருக்க இயலவில்லை.. அழுதவளை தேறுதல் சொல்ல அருகில் சென்றது தான் தாமதம்.. அஸ்மா உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.. உம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு ரொம்ப நேரம் அழுதாள்... ஜூபைதாவும் மகளின் அதிர்ச்சி குறையட்டும் என்று சிறிது நேரம் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது ஆசுவாசம் அடைந்த அஸ்மா மெல்ல
“உம்மா, எனக்கு பயமா இருக்கும்மா”
“அடி.. பயப்படாதே.. என்றைக்கா இருந்தாலும் பொண்ணுன்னா நிக்காஹ் பண்ணித் தான் ஆகனும்”

“அது நிக்காஹ் பண்ணினா மாப்பிள்ளையோட இருக்க வேண்டி இருக்குமே?”

“அதுவா உன் பிரச்சினை... உங்க வாப்பாவை நிக்காஹ் முடிக்கும் போது 16 வயசு தான்... நானெல்லாம் நல்லா தானே இருக்கேன்.. இப்பமே உனக்கு 22 ஆச்சு.. ஒண்ணும் ஆகாதும்மா... நிக்காஹ் ஆகி கொஞ்ச நாள் ஆச்சுன்னா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடும்மா”


“அதில்லை உம்மா... எனக்கு கொஞ்ச நாளாவே மாரில் ஒரு மாதிரி வலி இருக்கு.. அதோட சின்னதா கட்டிக இருக்க மாதிரி இருக்கு... என்னோட பிரண்ட்ஸ்க கிட்ட கேட்டா இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றாளுக... அங்க அழுத்தினா லேசா வலி இருக்கு”

“யா அல்லாஹ்.. ” என்று அதிர்ச்சியுடன் மடியில் இருந்து மகளை இறக்கு விட்ட ஜூபைதா... “இதெல்லாம் நீ முன்னமே சொல்றது இல்லியா... இந்த மாதிரி பிரச்சினைகள் வந்தா உடனே உம்மாகிட்ட சொல்லிடனும்ல... இது மாதிரி தான் இருந்த எங்க உம்மாவோட பெரிய லாத்தா அதை அப்படியே விட்டுட்டாங்க... அப்புறம் அதுனாலயே வபாத்தாயிட்டாங்கன்னு எங்க உம்மா சொல்லி இருக்காங்க.. நாளைக்கே டாக்டரைப் போய் பார்க்கலாம்”

அடுத்த சில நாட்களில் எல்லாம் வேகமாக நடந்தது. சென்னையில் இருந்த பைசல் தனது டாக்டர் நண்பனை அணுகி இது குறித்து விசாரிக்க.. உடனே எல்லாரும் சென்னை விரைந்தனர். அனைத்து சோதனைகளுக்கும் பிறகு இது புற்று நோயின் ஆரம்ப அறிகுறி எனத் தெரிய வந்தது. தேவையான சிகிச்சைகளுக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் அஸ்மா முழுவதுமாக குணமாகி இருந்தாள்.. பைசலின் டாக்டர் நண்பனே அஸ்மாவை நிகாஹ் முடித்துக் கொள்வதாக ரசூல் பாயிலிடம் கூற, நிக்காஹ்வும் சிறப்பாக நடைபெற்றது..

அதோ கையில் சாப்பாட்டு பாத்திரத்துடன் ”ஓடாதே.. ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சிப் போடுவேன்” என்று கத்திக் கொண்டு தன் 3 வயது மகனை விரட்டிக் கொண்டு இருக்கிறாளே அவள் தான் அஸ்மா என்பது தெரிகின்றதா? நிக்காஹ்குக்குப் பிறகு சந்தோசத்தில் ஒரு சுற்று பெருத்து விட்ட அஸ்மாவை நமக்கு அடையாளம் தெரியாமல் போனதில் தவறேதுமில்லை.

நேசம் - யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்காக எழுதப்பட்டது. கால அவகாசம் முடிந்து விட்ட பிறகு வெளியிடப்படுகின்றது.

அன்புடன்
தமிழ் பிரியன்






Sunday, October 23, 2011

உள்ளாட்சித் தேர்தல்

ஏதோ ஒரு சூழலில் வெளிநாடுக்கு செல்ல நேரிட்டது... இன்று அதே போன்ற ஒரு சூழலில் வெளிநாட்டை விட்டு கிளம்ப வேண்டியும் வந்து விட்டது. இந்தியா வந்து சில வாரங்கள் கழிந்த நிலையில் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்துடன் முற்றிலும் புதிய பரீச்சார்த்த முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கின்றது. எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நினைக்கலாம்.

##########################################

தமிழகத்தில் தொடர்ச்சியாக இருப்பது எப்பவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். வெட்டிப் பேச்சு, வெட்டி அரட்டை என்று காலத்தைக் கழிக்க முடிகின்றது. அதற்கு தோதுவாக வந்த உள்ளாட்சித் தேர்தலும் செம தீனியாகி விட்டது. அவ்வளவாக இணையத்தில் உலாவ வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும் மொபைல் கூகுள் ரீடரில் பதிவுகளைப் படிக்க முடிகின்றது. எல்லாம் பழைய பதிவர்களின் பதிவுகள். புதியதாக நன்றாக எழுதுபவர்களை (?) அடையாளம் காண முடிவதில்லை. தமிழ் மணத்தை எப்போதாவது திறந்த அடுத்து திறக்கவே கூடாது என்பது போன்ற பதிவுகள் தான் நிற்கின்றன.

############################

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்தன. எதிர்பார்த்தது போல... அதிமுகவின் பண பலத்திற்கு முன் திமுகவால் ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் வீட்டில் 6 ஓட்டுக்கு கவரில் அதிமுக சார்பில் கவரில் 1800 பட்டுவாடா செய்யப்பட்டது. வேண்டாம் என்று வம்படியாக மறுக்க வேண்டி இருந்தது. ‘மேலிடத்தில் இருந்து தரச் சொல்லி உத்தரவு. வாங்கிக் கொள்ளுங்கள். யாருக்கு வேண்டுமானால் ஓட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்பது போல் கூறினர். இருந்தும் வாங்க மறுத்ததால் விரோதிகள் போல் பார்த்துச் சென்று விட்டனர். ஓட்டுக்கு காசு வாங்கினால் தான் தமிழன் போல்.... திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் சொந்த காசை செலவழித்து கையை சுட்டுக் கொண்டது தெரிந்தது.

###################################

மதுரையில் அஞ்சா நெஞ்சர் , கேப்டன் எல்லாம் வாங்கிய அடி இங்கு அவர்கள் எல்லாம் டம்மி பீசுகள் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது. ஓட்டு என்பது காசுக்கோ,கட்சிக்கோ, தனிநபர் செல்வாக்குக் தானே தவிர, கட்டப் பஞ்சாயத்துக்கோ பயமுறுத்தலுக்கோ அல்ல என்பது தெரிகின்றது. காசு வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு ஓட்டுப் போட வில்லை எல்லாம் தெய்வக் குத்தம் என்பது போல் கூட கேட்க முடிகின்றது... இரண்டு மூன்று பேர் காசு கொடுத்து இருந்தால் அதிகம் காசு கொடுத்தவருக்கு ஓட்டு .. .. என்ன கொடுமையோ... :(

#################################

பல வார்டு கவுன்சிலர் இடங்களில் சுயேட்சைக்கு இரண்டாம் இடத்தை வழங்கி விட்டு மூன்றாம், நான்காம் இடங்களுக்கு திமுக தள்ளப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. உள்கட்சி அரசியல் காரணகா தெளிவில்லாத, மக்கள் செல்வாக்கில்லாத தலைவர்கள் இருக்கும் வரை திமுக இப்படித் தான் இருக்கும். இனி அம்மா ஒரு அகோர ஆட்சி நடத்தினால் மட்டுமே திமுக ஜெயிக்க இயலும். திமுக தலைவர்களின் திறமையினால் அல்ல...

###########################################


உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு தினமும் 4 லிருந்து 5 மணி நேரம் வரை பவர் கட் இருக்கின்றது. இது எப்போது முடியும் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் வெயில் குறைந்து பல பகுதிகளில் மழை ஆரம்பித்து இருக்கின்றது. பல காரணங்கள் கூறப்பட்டாலும் , வருங்காலங்களில் மின்சாரத் தேவையை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா முழுதும் இருக்கும் மாநில அரசுகளும், மத்திய அரசும் இருக்கின்றது. அணு உலை தான் சரியான் முடிவு என்பதில் இருந்து அரசாங்கள் வெளியே வர வேண்டும். அணு மின்சாரம் இந்தியாவிற்கு தேவை இல்லை. மரபு வழியிலான மாற்று ஏற்பாடுகளுக்கு அரசாங்கம் இறங்க வேண்டும்.

இனி அடிக்கடி சந்திக்கலாம்.




Friday, December 3, 2010

கத்தார் - Expect amazing

Expect amazing.. இதுதான் தாரக மந்திரம். கத்தார் வரும் 2022 ல் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை நடத்தும் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னணி. 2022 ல் உலக கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதில் கடும் போட்டி இருந்தது. உலக ‘அண்ணாச்சி’ அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாட்களுடன் போட்டியிட்டது. அமெரிக்காவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் உலக கோப்பை பல முறை நடைபெற்றாலும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வரவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது...

அந்த குறை நேற்றுடன் தேர்ந்து விட்டது. கத்தார் உலகக் கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை நேரிட்டது. கத்தார் அவைகளை எதிர்கொண்ட விதம் சுவாரஸ்யமானது. போட்டிக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஷேக் முஹம்மது பின் ஹமாத் அல் தானியின் இளமைத் துடிப்பும் நிதானமான நடவடிக்கைகளும் குறை சொல்லியவர்களின் வாயை மூட வைத்தது.

பொதுவாக வளைகுடா அராபிய நாடுகள் என்றாலே பயத்துடன் வாயைப் பிளக்கும் மேற்கத்தியவர்களையே காணலாம். ஆனால் இங்கு வந்து வேலை செய்யும் மேற்கத்தியவர்களுக்குத் தான் தெரியும் இதன் அற்புதங்கள். பொதுவாக அமெரிக்க, ஐரோப்ப்பிய, ஆஸ்திரேலியர்களுக்கு உலகமே அவர்கள் நாடு போலவும், மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் தான் இருக்கும். கூகுளில் world cup qatar 2022 என்று கொடுத்து Latest தேடலில் இருந்த போது தான் பலரின் வயிறு எரிந்ததைக் காண முடிந்தது.

இனி எல்லாவற்றிற்கும் பதிலை களத்தில் காட்ட இருக்கின்றோம். சிறிய நாடு, ஸ்டேடியங்கள் குறைவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு, உச்சபட்ச வெப்பநிலை என்றேல்லாம் குறைகள் மேற்கத்திய மீடியாக்களில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், அள்ளித் தெளிக்கப்பட்டன.

மொத்தம் 12 ஸ்டேடியங்கள். அனைத்தும் முழுவதும் அரசாங்கத்தின் முதலீட்டில் கட்டப்பட இருக்கின்றன. பணம் ? எங்கள் அரசாங்கத்துக்கு பணம் என்பது ஒரு பொருட்டே அல்ல... இன்னும் 200 வருடங்களுக்கு அறிப்பட்ட இயற்கை வாயு, எண்ணைய் வளம் இருக்கின்றது. சில கிமீ துரத்திற்குள் ஸ்டேடியங்கள் அனைத்தும் பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. பல ஸ்டேடியங்களுக்கு கடல் வழியில் ரசனையான படகுகள் மூலம் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.

பாதுகாப்பு என்பது கத்தாரில் ஒரு பிரச்சினையே இல்லை. உலகில் எந்த இடத்தில் இருப்பதையும் விட கத்தாரில் இருப்பதை பாதுகாப்பாக இங்கே உள்ளவர்கள் உணர்வார்கள். வெப்பநிலை... ஆம்.. இதுதான் பெரும் பிரச்சினையாக உலக நாடுகளால் சொல்லப்பட்டது. போட்டி நடக்கும் ஜூன், ஜூலையில் வெப்பநிலை 130 டிகிரி வரை (50 பாரன்ஹீட்) செல்லும். இதை அதே நாடுகளின் தொழில்நுட்பங்களைக் கொண்டே வெற்றி கொள்ள இருக்கின்றோம். ஸ்டேடியம் முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில் குளிர்விக்கப்படும். சுமார் 20 டிகிரி (74 பாரன்ஹீட்) செல்சியஸ் வெப்பநிலையில் ஆட்டம் நடக்கும். ஸ்டேடியங்கள்

ஸ்டேடியம் முழுவதும் பாரம்பரியமான முறையில் அமைக்கப்படுகின்றது. பொதுவாக இது போன்ற போட்டிகளை நடத்தி முடித்த உடன் ஒரு சிக்கல் எழும். இவ்வளவு பணம் போட்டி கட்டப்பட்டவை ஸ்டேடியங்களை, ஆடுகளங்களை என்ன செய்வது என்று? கத்தார் அதற்கு தகுந்த பதில் வைத்துள்ளது. இந்த ஸ்டேடியங்கள் அனைத்தும் போட்டிகளுக்குப் பின் மூன்றாம் உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதே... முதல் 5 ஸ்டேடியங்களில் அமைப்பை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.



உலக கோப்பை கால்பந்து 2022 ஐ நடத்துவது கத்தார் என்று அறிவிக்ப்பட்ட உடன் கமிட்டித் தலைவர் ஷேக் முஹம்மது பின் ஹமாத் அல்தானி கூறியது இதுதான்.



"Thank you for believing in change, Thank you for believing in expanding the game, Thank you for Qatar giving a chance, and we will not let you down, you will be proud of us, and you will be proud of the middle east, and i promised to you this "

இன்னும் 12 ஆண்டுகளே இருக்கு... இன்னும் 12 ஸ்டேடியம் கட்டனும், ஏர்ப்போர்ட் விரிவாக்கம் செய்யனும், மெட்ரோ ட்ரெயின் போடனும்... நாங்க இனி ரொம்ப பிஸியாக்கும்... ;-)

கத்தாரின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி! வென்று காட்டுகின்றோம்.

EXPECT AMAZING!

Friday, September 10, 2010

கன்னி மேடைகள்

இன்னைக்கு மகனுக்கு கன்னி மேடை. அதுக்குள்ள போறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுய சொறிதல் இருக்கு..

மேடைப் பேச்சு என்பதே ஒரு சுவாரஸ்யம்.. எல்லாருக்கும் அந்த கலை வருவதில்லை. பேசும் டாபிக்கை விடு எங்கெங்கோ சென்று இழையை விட்டுவிடுபவர்களைப் பார்க்கலாம்.. அதெல்லாம் ஒரு பெரிய டாபிக்.. அது வாணாம்.. நாம வழக்கமான மொக்கைக்கு போகலாம்.. நமக்கும் இந்த மேடைகளுக்கும் ஆவறதே இல்லை. பள்ளியில் படிக்கும் போது திங்கள் கிழமை காலை வணக்கத்தில் ஒரு தலைவரைப் பற்றி ஒரு மாணவன் உரையாடனும். எங்கள் வகுப்பு வரும் போது அந்த வாய்ப்பு எனக்குதான் கிடைக்கும்.. அது மாதிரி பாரதியார், காந்தி ,நரசிம்மராவ் (அவ்வ்வ்வ்... அப்ப அவர் தான் பிரதமர்) பற்றி எல்லாம் பேசி இருக்கோம்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் ஒரு பேச்சுப் போட்டி.. குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி. நேரு பற்றி பேசலாம்னு போயாச்சு.. அங்க பார்த்தா எல்லா பசங்களும் பொளந்து கட்டி அடிக்கிறானுக.. அப்ப தான் நாம கிணற்றுத் தவளையா இருந்து இருக்கோம்னு தெரிஞ்சது.. சொந்த பள்ளியில் ராஜா மாதிரி இருந்துட்டு வெளியே போனா கை, கால் எல்லாம் நடுங்கிப் போச்சு.. எப்படி சமாளிச்சிட்டு வந்தாச்சுன்னு வச்சுக்கங்களேன்.

சென்னையில் படித்த போதும் அப்படித்தான்.. படிப்பு முடிந்ததும் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி..(நீ எப்ப கல்லூரி போனன்னு கேட்கப்படாது..ப்ளோவில் வரும் இதெல்லாம்) கல்லூரி பேராசிரியர்கள், எங்களைப் படிக்க வைத்த துபாய் நிறுவன உயர் அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க.. கழுத்தில் டை எல்லாம் கட்டி ஸ்டைலா மேடை ஏறி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பா நன்றி சொல்லனும்.. இங்கிலிபீஸில் தான்.. :) கூட படித்த ஒருத்தன் கேமராவோட இருந்தான்.. “டேய்.. நான் மேடையேறி பேசும் போது ஒரு போட்டோ எடு” ந்னு சொல்லிட்டேன்... சித்தார்கோட்டைக்காரன்.. படுபாவி.. நான் பேசப் போறதுக்கு முன்னாடி நல்லா தான் எல்லாரையும் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தான். நான் மேடை ஏறியதும் கேமராவில் ஏதோ ரிப்பேர்னு நோண்ட ஆரம்பிச்சான்.. இறங்கும் போது தான் சரியாச்சுன்னு சொன்னான்.. சதி வேலை போல இருக்கு.. என்னவோ என் மேடை போட்டோக் கனவு கானல் நீராப் போச்சுன்னு வச்சுக்கங்க... சரி அதை விடுவோம்.

நான் போய் வாக்கப்பட்ட(அல்லது பொண்ணு எடுத்த ஊர்) தமிழகத்தின் தெற்குக் கடைசியில் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் இருக்கு.. சிறு குக்கிராமம்.. ஒரு பகுதியில் மசூதி.. அதை சுற்றி மூன்று, நான்கு முஸ்லிம் மக்கள் வசிக்கும் தெருக்கள்.. அந்த ஊரில் ஒரு பழக்கம்.. நோன்புப் பெருநாள் அன்று விழா போல் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒட்டப்ப்பந்தயம், கயிறு ஏறுதல், கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் எல்லாம் இருக்கும். அந்த ஊரில் இருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் மாலையில் மேடையில் பேச வேண்டும். பேச்சுப் போட்டி என்பது எல்லாம் இல்லை. எல்லாரும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.

ரமழான் மாதம் ஆனதுமே இதுக்காக முஸ்தீபுகளில் சிறுவர், சிறுமியர் இறங்கி விடுவார்கள். எல்லா வீட்டுப்பிள்ளைகளும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டு திரியும்.. போன வருடம் ஊரில் இருந்த போது பார்த்தது இதெல்லாம்... எங்க வீட்டில் ஒரு மைனர் இருக்காரே.. அவருக்கு அப்ப வயசு 3.. எல்லாப் பிள்ளைகளும் மேடை ஏறும் போது நல்ல பிள்ளை மட்டும் மேடை ஏறலைன்னா அசிங்கமா போயிடும்னு அவனையும் மேடை ஏற்ற ஏற்பாடு பண்ணியாச்சு.

பள்ளிவாசல் இமாம் அவனை பரிசோதித்து (?) குரானில் இருந்து 7 வசனங்கள் உள்ள ஒரு சூரா சொல்லட்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே மனைவி அவனுக்கு இதைக் கற்றுக் கொடுத்து வைத்து இருந்ததால் மனப்பாடமாக சொல்வது பிரச்சினையாக இல்லை. போன வருடப் பெருநாளும் வந்தது. நம்ம ஆளு புல் மேக்கப்போட ரெடி.. பயமெல்லாம் இல்லை.. எங்களுக்கு தான் பயமா இருந்தது. நான் வீடியோ கேமராவோட மகன் மேடையில் சொல்லப் போவதை பதிவு செய்ய ரெடி.. மச்சினன் தனது மருமகன் மேடையில் நிற்பதை போட்டோ எடுக்க கேமராவோட ரெடி.

மகன் பெயர் கூப்பிடப்படுகின்றது. அசால்டா மேடை ஏறினான்.. மைக்கு முன்னாடி தைரியமா வந்து நின்றான்.. நின்றான்.. நின்றான்.. நின்னுக்கிட்டே இருந்தான். ம்ஹூம்.. வாயைத் திறக்கவே இல்லையே.. பின்னாடி... முன்னாடி எல்லாரும் சொல்லுடா சொல்லுடா என்று கத்தியது தான் மிச்சம்.. மேடையில் நின்று எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான்.. அப்புறம் வம்படியா இறக்கி விட்டுட்டாங்க.. முதல் கன்னி மேடைப் பேச்சு பேசப்படாமலே போச்சு.

போட்டோ எடுத்தாச்சு... சொல்லுடா சொல்லுடா என்ற இறைச்சலோடு வீடியோவும் எடுத்தாச்சு.. அப்புறம் மனைவியின் தோழிகள் எல்லாம் நம்மை கிண்டல் செய்தது வேற கதைன்னு வச்சுக்கங்க..

இப்போது வயது 4 . இதோ இந்த ஆண்டும் ரமழான் வந்தது. நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று பெருநாள் பண்டிகை.. இந்த ஆண்டும்.. போட்டிகள்.. அதே பேச்சுகள்.. மேடை எல்லாம் இருக்கும். நாங்களும் முயற்சியில் சற்று மனம் தளராமல் அவனை மேடை ஏற்ற தயாராகி விட்டோம். ஊரில் இல்லையென்றாலும் என்ன செய்யப் போகின்றானோ என்ற பதைபதைப்பு. இரவு தெரிந்து விடும். இப்போதும் கன்னி மேடையா? அல்லது கன்னிப் பேச்சா என்று..

இரவு அப்டேட் : மகனார் நல்லபடியாக மேடை ஏறி பேசி விட்டாராம். பேசியது இதுதான்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

பொருள் : (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்








Friday, August 6, 2010

சண்முகசுந்தரம் அண்ணனும் ஸ்டெல்லா அக்காவும்

சண்முக சுந்தரம் அண்ணனை எனக்கு எப்படித் தெரியும்னு யோசிச்சா கொஞ்சம் சிரிப்பாக் கூட இருக்கும். அண்ணனுக்கு எங்க தெரு தான்.. அண்ணனை எல்லாருக்கும் நல்லா தெரியும். நாங்க சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கும் போது அண்ணன் கல்யாண வயசில் இருந்துச்சு.. அண்ணன் எப்பவுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஏதோ பொறுப்பு வேற.. ஒரு சைக்கிள். பழைய ஹெர்குலிஸ் மாடல். அதில் அண்ணன் பெயர் போட்டு இருக்கும். சைக்கிள் பின்னாடி மர்க்காடில் அவங்க கட்சி சின்னம் கூட இருக்கும்.

இந்த தடவை ஊருக்கு போய் இருக்கும் போது அண்ணனோட பன்னிரண்டாவது நினைவு நாளாம். அவங்க கட்சிக்குன்னு ஒரு சிறு படிப்பகம் இருக்கும். தீக்கதிரோ, தினக்குரலோ ஏதோ ஒரு பத்திரிக்கை மட்டும் வரும். சின்ன வயசில் அண்ணன் கூப்பிட்டுப் போகும் போது படிச்சி இருக்கேன். அந்த படிப்பகத்திற்கு வெளியே தான் அண்ணனோட படத்துக்கு மாலை எல்லாம் போட்டு மைக் செட் வச்சு பாட்டு எல்லாம் ஓடுச்சு. நைட் அந்த மைக் செட்காரன் டப்பாக்குத்து பாட்டு எல்லாம் போட்டது தனி மேட்டர். காலையில் தான் அஞ்சலி. தெருவில் இருக்கும் பசங்கள் எல்லாம் அங்க தான் இருந்தானுக

சண்முகசுந்தரம் அண்ணன் நான் ஏழாப்பு படிக்கும் போது தான் செத்துப் போச்சு... எங்க ஊர் இரயில்வே தண்டவாளத்தில் ஆள் அடையாளம் காண முடியாதபடி அண்ணனோட பிணம் கிடந்தது. முகம், உடல் எல்லாம் சிதைந்து கிடந்தது. போட்டு இருந்த சட்டை, வேட்டி வச்சுத் தான் அண்ணன்னு கண்டுபிடிச்சாங்க.. . அண்ணனோட கட்சி உறுப்பினர் கார்டும் கூட இருந்ததாம்.

அண்ணனுக்கு கொஞ்சம் நல்ல பேர் தான் ஏரியாவில்.... ரேசன் கார்டு பிரச்சினை, சாதிச் சான்றிதழ் பிரச்சினை, பசங்களை ஸ்கூலில் சேர்க்கும் போது பிரச்சினை இப்படின்னு எல்லா பிரச்சினைகளிலும் அண்ணன் எல்லாருக்கும் உதவும். பாரம் ஃபில் பண்றதெல்லாம் அண்ணனுக்கு தண்ணி பட்டபாடு. அரசாங்க ஆபிஸ்களில் அண்ணனுக்கு நிறைய பேரைத் தெரியும்.

அண்ணன் ஏன், எப்படி இறந்தார்ன்னு நிறைய பேருக்கு சந்தேகம். கொஞ்சம் பேர் போலீஸ் கஸ்டடியில் செத்துப் போனதால் அவரைப் போலீஸே கொண்டு வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டதாக இன்றும் பேசிக் கொள்வார்கள். அப்போது ஏற்ப்பட்ட ஒரு சாதி தகராறில் ஒரு போலிஸ்காரரை உயிரோடு கொளுத்தியதாக அண்ணன் மீது குற்றச்சாட்டு. அண்ணனுக்கு சாதி எல்லாம் பிடிக்காது என்றாலும் எப்படியோ இந்த கேஸில் மாட்டி விட்டு இருக்காங்க.. அதனால் தான் போலிஸ் பிடிச்சு கொன்னுட்டதா பேச்சு. அப்பவெல்லாம் என்கவுண்ட்டர் கலாச்சாரம் இல்லையே?.



கொஞ்சம் அந்தரங்கமாக சண்முகசுந்தரம் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூடப் பேசிக் கொள்வார்கள். அண்ணனுக்கு ஒரு லவ் இருந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லா. அந்த பொண்ணும் எங்க தெரு தான். தையல் கிளாஸ் போகும் போது படிப்பகத்தைத் தாண்டி தான் போகும். அப்ப அண்ணன் சரியா படிப்பக வாசலில் நிக்கும். ரெண்டு பேரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். புன்னகையும் பிறக்கும். இதைப் பார்க்க எங்களுக்கு ஜாலியா இருக்கும். அண்ணன் சில நேரம் எங்களை விரட்டி விடும். ஸ்டெல்லா அக்கா வேறு மதம் என்பதால் ரெண்டு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு.

கடைசியில் ஸ்டெல்லா அக்காவுக்கு சிவகாசியில் இருந்து ஒருவனுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்துட்டாங்க... அண்ணன் தாடி மீசையோட கொஞ்ச நாள் அலைந்தது. ஸ்டெல்லா அக்காவும் கொஞ்ச நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்புறம் கொஞ்ச நாள் லூசு மாதிரி இருந்தாங்களாம். அப்புறம் எங்கியோ காணாமப் போய்ட்டாங்களாம். அதனால் ஏற்பட்ட துக்கத்தில் தான் அண்ணன் செத்துப் போனதாவும் பேச்சு.

நானும் போய் நினைவஞ்சலியில் கலந்து கொண்டேன். இப்ப புதுசா இருக்கும் ஒன்றியத்தலைவர் அண்ணனின் வீரதீரபிரதாபங்களை எல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தார். அண்ணனை போலிஸ் அராஜகம் கொன்று விட்டதாகக் கூறி போலிஸையும் தாக்கிக்கிட்டு இருந்தார். சூட்டோட தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் உண்டியலும் குலுக்கப்பட்டது. என்னிடம் வந்த போது ’வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்க.. தாராளமாப் போடுங்க’ன்னு மைக்கிலேயே சவுண்ட் வேற.. வேற வழி இல்லாம 50 ரூபாயைப் போட வேண்டி வந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்த போது உம்மாவும், பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன் குறித்து பெருமையாகப் பேசிக்கிட்டு இருந்தாங்க... அவங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்ததைச் சொல்லலாம்னு நினைச்சுட்டு பின்ன விட்டுட்டேன். அதை உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். சென்னையில் படிக்கும் போது ஞாயிறுகளில் தி.நகரில் சுற்றுவது வழக்கம். அப்படி ஒருநாளில் தான் அண்ணனையும், ஸ்டெல்லா அக்காவையும் அங்க பார்த்துட்டேன்.

வேகமா போய் அண்ணன் கையைப் பிடிச்சிக்கிட்டு விசாரிச்சேன்ன். ஸ்டெல்லா அக்காவுக்கு முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.. கூடவே ஒரு அஞ்சாறு வயசில் ஒரு பையன் வேறு. அண்ணனால் அக்காவை மறக்க முடியலையாம். அதோட போலிஸ் கேஸ் வேற.. அதனால் ரெயில்வே ஸ்டேசன் ஓரம் செத்துக்கிடந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அவரோட டிரஸ் எல்லாம் போட்டு, முகத்தைச் சிதைத்து இரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டுட்டு ஸ்டெல்லா அக்காவோட பெங்களூருக்கு ஓடிப் போய்ட்டாராம். ரெண்டு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்து செட்டில் ஆயிட்டாராம். யார்கிட்டயும் சொல்லிடாதன்னு கேட்டுக்கிச்சு.. ஸ்டெல்லா அக்காவும் ஒரு அழுகையோட இப்பதான் சந்தோசமா இருக்கேன். யார்கிட்டயும் காட்டிக் கொடுக்காதன்னுச்சு. சரின்னு விட்டுட்டேன். நீங்களும் இதை மறந்துடுங்க என்ன..

Wednesday, August 4, 2010

பழைய காதல் கோட்டை ஒன்று

அப்ப ஊரில் கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். காலையில் 7 மணிக்கு நான் தான் கடையைத் திறக்கனும். வழக்கம் போல் அன்றும் கடையைத் திறந்து சாதனங்களை எல்லாம் வெளியில் வைத்து விட்டு முன் பகுதியை விளக்குமாற்றால் கூட்டிக் கொண்டு இருந்தேன். கடை ஓனர் 8:30 க்குத் தான் வருவார் என்பதால் கடையைத் திறந்து சுத்தம் செய்து வைக்கும் வேலை என்னுடையது. எல்லாம் முடிந்ததும் ஒரு டீயும், மசால் வடையும் சாப்பிடலாம். பேவரைட் அயிட்டம் அது. அதனால் வேகமாக பெருக்கிக் கொண்டு இருந்தேன்.

அப்பத் தான் நம்ம பரணி வந்து சேர்ந்தான். பரணியைத் தெரியாதவங்க இங்க போய் தெரிஞ்சுக்கங்க.. தெரிஞ்சவங்க மேல படிக்கலாம். காலை ஏழு மணிக்கே அவன் வந்தது ஏனோ ஒரு வில்லங்கம் போல இருந்தது. என்னடானு கேட்டால் மென்னு முழுங்குறான். கையில் ஒரு பேக் வேற வச்சு இருக்கான். பக்கத்து தெரு லாவண்யாவோட ஓடிப் போகும் ப்ளான் ஏதும் வச்சு இருக்கானோன்னு ஒரு டவுட்டு வேற மைல்டா ஓடுது. ஆனாலும் அந்த புள்ளைக்கு இருக்கும் தைரியத்தில் 100 ல் ஒரு மடங்கு கூட இந்த பயலுக்கு இருக்காது என்பதால் அதை கூட்டிய விளக்குமாற்றாலேயே அழித்து விட்டேன்.

சரி.. உட்காருடான்னு சொல்லி ஒரு டீயும் ஆர்டர் கொடுத்து குடிக்கச் சொல்லியாச்சு.. உறிஞ்சி உறிஞ்சி குடிக்கிறேன். முழியே சரியில்லை. நல்ல நேரத்திலேயே திருட்டு முழி... இப்ப பேய் முழி வேற... பயபுள்ள கையில் இருக்கும் பேக் எங்காயவது ஆட்டையைப் போட்டதா இருக்குமோன்னு ஒரு டவுட்டு. பக் னு ஆயிடுச்சு... ஆகா நம்மளையும் சேர்த்து மாட்டி விட்டுடுவானோன்னு பயம் வேற.. டீக்கிளாஸை பிடிங்கிட்டு விரட்டிலாமான்னு யோசனை வேற.. என்ன ஆனாலும் பரவாயில்லை விசாரிக்கலாம்னு விசாரிச்சா உண்மையை கக்கிட்டான்.

பேக் உண்மையில் திருடப்பட்டதாம். ஆனாலும் திருடியது அவன் இல்லையாம். கேப்பையில் நெய் வடியுது பழமொழி நினைவில் வந்தாலும் பரணி நம்மிடம் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. எங்கள் ஊரைக் கடந்து போகும் ஒரு பஸ்ஸில் இருந்து இந்த பேக்கை ஆட்டையைப் போட்டுள்ளான் ஒரு X . அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டான். பேக்கில் ஒரு பெண்ணின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களும் இன்னும் சில முக்கிய தஸ்தாவேஜ்களும் இருக்க அவன் இவனிடம் கொடுத்துள்ளான். இந்த நல்லவன் அதை இங்கு கொண்டு வந்து விட்டான்.

அந்த X எவன்டா என்றால் சொல்ல மாட்டேன் என்கின்றான். அவன் இவனிடம் மிரட்டி சத்தியம் வாங்கி விட்டானாம். பெரிய சத்தியவான், அரிச்ச்ந்திரன் பரம்பரை.. பிட் படத்திற்கு போகும் போது மட்டும் ஆயிரத்தெட்டு பொய் சொல்லிட்டு வருவான். சரி கொண்டாடான்னு சர்டிபிகேட்களைப் பார்த்தால் அது ஒரு மலையாளப் பெண்ணுடையது. திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் அதன் சொந்த ஊர் தொடுபுழா. திண்டுக்கலில் இருந்து தொடுபுழா செல்ல எங்கள் ஊர் வழியா சென்று இருக்கின்றது. அந்த கேப்பில் எவனோ பேக்கை சுட்டு இருக்கின்றான்.



இரண்டு மேதாவிகளும் சேர்ந்து யோசித்த போது T.Meena என்ற அந்த மல்லுவின் சோகமான அழும் முகம் தான் நினைவில் வந்தது. பாவம் சர்டிபிகேட்டை தொலைத்து விட்டு எங்கே அழுது கொண்டு இருக்கின்றதோ என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஃபீலிங். காலேஜ் படிக்க முடியாம கடையில் அதை நினைத்து ஃபீல் பண்ணும் எங்களுக்கு இந்த ஃபீலிங் புடிச்சி இருந்தது. சரி அந்த பெண்ணோட கண்ணீரைத் துடைக்கனும்னு முடிவு செய்தாச்சு.

அட்ரஸ் இருக்கு... போன் நம்பர் ஏதும் இல்லை. திண்டுக்கல் ஹாஸ்டல் அட்ரஸூக்கும், தொடுபுழா வீட்டு அட்ரஸூக்கும் தந்தி கொடுக்கலாம்ன்னு ரெண்டு நல்லவிங்களும் ஏகமனதா முடிவு பண்ணிட்டோம். கடை ஓனர் வந்ததும் வெளியே போறதா சொல்லிட்டு நேரா வள்ளுவர் சிலை அருகில் இருக்கும் தலைமை தபால்-தந்தி அலுவலகத்திற்கு போயாச்சு.. அங்க இருந்த ஆபிஸரு ஃப்ரம் அட்ரஸ் வேணும்னு சொல்லிட்டார். வீட்டு அட்ரஸ் கொடுத்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு எங்க கடை அட்ரஸ் கொடுத்தாச்சு.

கடைக்கு வந்தா ஓனரு லெப்ட் ரைட் வாங்குறாரு... கடை அட்ரஸை ஏன்டா கொடுத்தீங்கன்னு... சாயங்காலம் ஆச்சு.. ரெண்டு அம்பாஸிடர் காரில் தடிதடியா 5,6 சேட்டனுங்க கடைக்கு வந்து இறங்குறாங்க... அதுவரை என் கூட உட்காந்து காதல் கோட்டை கற்பனை பண்ணிக்கிட்டு இருந்த பரணி பயல் எஸ்கேப் ஆயிட்டான். பேக் எல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு சர்டிபிகேட் எல்லாம் கரெக்டா இருந்ததில் திருப்தி. ஆனால் அதில் இருந்த ஒரு தங்க மோதிரமும், கொஞ்சம் பணமும் மிஸ்ஸிங்காம். பேக் எப்படி எங்களுக்கு கிடைச்சதுன்னு பெருமையா விளக்கம் வேற கொடுத்தேன்.

எத்தனை மணிக்கு கிடைச்சதுன்னு கேட்டப்ப 7 மணிக்கு கொண்டு வந்ததைக் கணக்கில் வச்சு 6 மணிக்கு ரோட்டில் கிடந்ததுன்னு சொல்லியாச்சு.. அதில் ஒரு சேட்டன் .. தம்பி உங்க ஊரை மீனா வந்த வண்டி 6:30 த்தான் கடந்து இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிட்டார். எனக்கு வதக்கு ஆயிடுச்சு.. நல்ல வேளை வேற ஒன்னும் சொல்லாம பேக்கை எடுத்துட்டு போய்ட்டாங்க.. ஒரு பத்து ரூவா கூட கொடுக்கல..

சரி நம்ம அட்ரஸூக்கு மீனாகிட்ட இருந்து லெட்டர் ஏதாவது வரும்னு ரொம்ப நாள் பரணி காத்துக்கிட்டு இருந்தான்.. ம்ஹூம் ஒன்னு கூட வரலை.. நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன். இப்ப திடீர்னு நினைவு வந்து ஆர்குட், பேஸ்புக் எல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்.. இன்னும் கிடைக்கலை. கிடைச்சா சொல்லுங்க பாஸ் பேரு T.மீனா.. ஊரு தொடுபுழா.. காலேஜ் படிச்சது திண்டுக்கல். நன்றி வணக்கம்.

Friday, July 30, 2010

சமிக்ஞைகளும், குடும்ப ரகசிய மொழியும்

குடும்பத்தில் சமிக்ஞைகள்(Signals) ரொம்ப முக்கியமானவை. பல நேரங்களில் இதன் முக்கியத்துவம் தெரிய வரும். சமிக்ஞைன்னா என்னவா? அதைத் தானே சொல்லப் போறோம்.... பொதுவா பொதுவெளியில் பேசும் போது எல்லாருக்கும் புரியக் கூடிய மொழியில் பேசினால் அது செய்தி ஆகி விடும். பொதுவெளியில் பேச, தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அது நம்மைத் தவிர மற்றவர்களுக்குப் புரியக் கூடாது. அதான் நாம் பேசுவது, தெரிவிப்பது என்கிரிப்ட் (Encrypt) முறையில் இருக்க வேண்டும். இதுதான் லாஜிக்.

இதன் அவசியம் என்னவென்று பார்த்தால்.... வெளியே நாம் செல்லும் போது, மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது அல்லது இணைய வழியாக மிக முக்கிய ரகசியங்கள் உள்ள மின்னஞ்சல் அனுப்பும் போது இதைப் பயன்படுத்தலாம். இது படிப்பவர்களைத் தவிர யாருக்கும் புரியாது.

எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். எங்கள் பாரம்பரியம் திருநெல்வேலி மாவட்டத்துடன் தொடர்புடையது. எங்கள் தாத்தா,பாட்டி திருமணம் முடிந்து எங்கள் பெரியப்பா பிறக்கும் வரை வாசுதேவநல்லூர் என்ற எங்கள் பரம்பரை ஊரில் இருந்து இருக்கின்றார்கள். பின்னர் பிழைப்புக்காக இப்போது இருக்கும் ஊருக்கு வந்து இருக்கின்றார்கள். வரும் போது எதையும் கொண்டு வரவில்லையென்றால் பல பழக்க வழக்கங்களை எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

சமிக்ஞை இரண்டு வகை. ஒன்று உடல் மொழி இரண்டாவது சொற்கள் வழியிலான மொழி. உடல் மொழி நிறைய பேருக்கு தெரிந்தது தான். கண் பார்வை, கை அழுத்தம், கால் மிதி போன்றவை. ஏதாவது ஒரு விஷயம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நாம் அவரைப் பார்த்தால் திடீரென்று அப்பா கண்ணை இறுக மூடித் திறப்பார். அதாவது அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இவருடன் பேசக் கூடாது என்றுஅர்த்தம். அப்பாவுடனும், மற்றவர்களுடனும் பேசிக் கொண்டு இருப்போம். திடீரென்று அப்பா நம் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு அழுத்து அழுத்துவார். இனி நாம் பேசக் கூடாது அல்லது நாம் தான் பேச வேண்டும்.. இது போல் இன்னும் சில குறியீடுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வரும். சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் அர்த்தம் மாறும். சில சமயம் இதில் தவறு நடக்கும் போது வீட்டிற்கு வந்ததும் விளக்கம் கிடைக்கும்.

சில நேரங்களில் எதிராளி நம்மை விட கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் நமது சமிக்ஞைகள் புரிந்து விட வாய்ப்பு இருக்கின்றது. அல்லது தூரமாக இருந்தாலோ, அப்பாவை நேரடியாக பார்க்கும் விதத்தில் இல்லாமல் இருந்தாலோ அந்த சூழலில் இரண்டாவது மொழி பயன்படும். இது இந்தி போல் வேறு மொழியா என்றால் அதுதான் இல்லை. எங்கள் வீட்டில் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. அப்புறம் அது என்ன மொழி? அதுதான் ரகசிய மொழி. சுமார் 25, 30 வார்த்தைகள் தான் இருக்கின்றன இம்மொழிக்கு. இது எந்த மொழியுடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நேரத்திற்கு தகுந்தாற் போல் சங்கேத தகவல்களைத் தெரிவித்து விடலாம்.


ரொம்ப முக்கியமானது எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஆட்களுக்கு இம்மொழி தெரியாது. இதை நாமே உருவாக்கலாம். உங்கள் குடும்பத்திற்கான சங்கேத மொழியை நீங்களே உருவாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்து பழக்கலாம். நல்லது, கெட்டது, கொடு, கொடுக்காதே, பணம், கெட்டவன், நல்லவன், கண்டுகொள்ளாமல் இரு, இவன், அவன் இன்னும் இது போன்ற பொதுவாக வெளியில் சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு சங்கேத வார்த்தை இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு நல்லது , கெட்டது என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கயழி, பசிறு என்ற வார்த்தைகளை இவைகளுக்கு முறையே சங்கேத வார்த்தையாக பாவித்துக் கொள்வோம். கடையில் இருக்கிறோம். பொருள் நல்ல பொருள் என்று தெரிகின்றது. நாம் ‘கயழி போல இருக்கு’ என்று நமக்குள் பேசிக் கொண்டால் கடைக்காரருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. எனவே நாம் பேரம் பேசும் போது நம்முடைய உணர்வு அவருக்குப் புரியாது. அதாவது பிடித்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமா?, இல்லையா? என்று அவர் திணறுவார். அதைப் பயன்படுத்தி பேரத்தைக் குறைக்கலாம்.

அதே போல் வேறு ஒரு இடத்தில் இருக்கிறோம். நம் முன் இருக்கும் ஆள் சரியில்லை போல் தோன்றுகின்றது. நம்முடன் இருக்கும் மனைவிக்கோ, மகனுக்கோ உணர்த்த வேண்டும். ‘ ஆள் பசிறு’ என்று எங்கோ பார்த்து நாம் சொன்னால் உடனே அவர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம். எதிராளிக்கும் நாம் என்ன சொன்னோம் என்பது புரியாது.

இதில் மிக முக்கியமானது சங்கேத வார்த்தைகளை நாம் பேசும் போதும், கேட்கும் போது மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாகப் பேசக் கூடாது. கொஞ்சம் கம்மலாக பேச வேண்டும். அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது. சங்கேத வார்த்தைகள் தயாரித்தலும், அதைப் பழக்குப்படுத்தலும், உடல் மொழியை உணர வைத்தலும், முக பாவத்தை ஒழுங்குபடுத்துதலும் ஏதோ படிக்க, கேட்க பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது மிக மிக சுலபமானது. கிட்டத்தட்ட நம் இணையத்தில் சாட்டில், டிவிட்டரில், பஸ்ஸில் பேசிக் கொள்ளும் சங்கேத வார்த்தைகள் போல் தான். எங்கள் வீட்டில் பண விபரம் குறித்து பேசும் போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆங்கில எண் வைத்துத் தான் பேசுவோம்.

இதே போல் நமது குடும்பத்தினருக்கு மட்டும் புரியும் வண்ணம் ஒரு சிறு அகராதியை உண்டாக்கி வாரத்திற்கு இரு வார்த்தைகள் என்ற வீதத்தில் பேசிக் கொண்டே வந்தால் சில மாதங்களில் அதில் நிபுணத்துவம் அடைந்து விடலாம்.

எங்கள் வீட்டில் சில நேரங்களில் இது பிரச்சினையாகும். எப்படி? வீட்டிற்கு புதிதாக மருமகள் வந்தால் அவர்களுக்கு இந்த மொழிகள் எல்லாம் புரியாது. அவர்களுக்கும் கொஞ்ச நாட்களில் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்து விடுவோம். வேறு வழி இல்லாத கட்டாயத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட திருமணமான புதிதில் சில நேரங்களில் திண்டாட வேண்டி வந்தது. பின்னர் என் மனைவிக்கு இவைகளை விளக்கி கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது என் அம்மாவுடன், அக்காவுடன் வெளியே சென்றால் என் மனைவியும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.

நீங்களும் உங்கள் வீட்டில் இப்படியான ஒரு அகராதியை உருவாக்குங்கள். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தத்துடன் தொடர்பு இருக்கக் கூடாது. முதலில் சுவாரஸ்யமாக ஜாலியாக பழகுங்கள். பின்னர் பழக்கத்தில் வந்து அதுவே நல்ல பலன் தரும்.

டிஸ்கி : இதில் குறிப்பிட்டு இருக்கும் சில வார்த்தைகள் எங்கள் அகராதியில் இலலாதவை. எடுத்துக்காட்டுக்காக மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.

Friday, July 23, 2010

லெமூரியா கண்டம் - ஒரு ஆய்வுப்பயணம் - பிம்பமாக

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் மூன்று பகுதிகளிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. நிலத்தின் வளத்தைப் போலவே மக்களின் மாண்பும் வனப்பாக இருந்தது.

லெமூரியா அல்லது லெமுரியா .. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் நடுவே இன்று நம்மிடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போல் ”மேரு” என்ற மலைத்தொடரைத் தன் நடுவே கொண்டு இருந்தது. அதில் தேன் போன்ற சுவையை உடைய ஆறுகள் உற்பத்தியாகி ஓடின. அவைகள் கிழக்கேயும், மேற்கேயும் பெருகி ஓடி கடல்களில் கலந்தன. மலைத் தொடரிலும், அந்த ஆறுகள் ஓடிய பகுதிகளிலும் பசுமைத் தாய் தனது கரங்களை நீட்டி அந்த லெமுரியா கண்டத்தையே பசுமையாக்கி வைத்து இருந்தாள்.



இக்கண்டத்தின் ஒரு கிழக்கு முனை ஆஸ்திரேலியா கண்டத்துடனும், மேற்கு முனை ஆப்ரிக்காக் கண்டத்தை ஒட்டிய மடகாஸ்கர் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. கடல் மட்டத்தில் இருந்து கீழே இருந்ததால் கடலினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர வேறு எதுவும் இக் கண்டத்தைத் தீண்டவில்லை. இங்கு வாழ்ந்த மக்களிடையே அப்போது தான் புதிய நாகரிகங்கள் தழைத்தோங்க தொடங்கி இருந்தன.



மக்கள் இரும்பின் பயன்பாட்டை உணராத நேரமது. வலிமையான விலங்குகளின் எலும்புகளையும், மரங்களையும் தீட்டி ஆயுதமாக கொண்டு இருந்த நேரம். பெரும்பகுதி காடுகளைக் கொண்ட அந்த பகுதிகளில் விலங்கினங்களுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. இவைகளுக்கு நடுவே வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு என்பது முக்கியமானதாக இருந்தது.

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இறைச்சியே அவர்களின் முக்கிய உணவாக இருந்து வந்தது. மீன்பிடித் தொழிலும் மிக முக்கியமானதாக இருந்தது. இது தவிர கிழங்குகள், பழங்கள் போன்றவைகளையும் உண்டு வந்தனர். அரிசி உணவே அவர்களுக்கு சில நுற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அறிமுகமாகி இருந்தது. இக்கண்டம் முழுதும் பலவிதமாக ஒலிக்குறிகளையுடைய பேச்சுக்கள் இருந்தன. இவைகளில் பெரும்பாலனவை தமிழ் மொழியின் மறுவுகளாக இருந்தது. மக்களிடையே கேளிக்கைகள் நிறைந்து இருந்தது. களவி ஒழுக்கம் மிக மேலானதாக பேணப்பட்டு வந்தது. பண்பிலும், கலாச்சாரத்திலும் கண்ணியமானவர்களாக இவர்கள் இருந்தனர்.

மற்றவர்களுக்கு மரியாதை செய்தல், திருடாமை, பொய் சொல்லாமை, கடின உழைப்பு, வீரம் போன்றவை சிறந்த குணங்களாகப் பார்க்கப்பட்டன. இயற்கையை தெய்வமாக வழிபாடு செய்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஆற்றின் கரையோரங்களிலேயும், மலையடிவாரங்களிலும் ஊர்களை நிர்மாணித்து இருந்தனர்.

பரந்த நிலப்பரப்பாக இருந்தாலும் மக்கள் பெருக்கம் மிகக் குறைவாக இருந்தது. ஒரு பகுதியில் பரவிய நாகரீகம் மற்ற பகுதிகளுக்கு பரவ பல காலம் தேவைப்பட்டுக் கொண்டு இருந்தது. பெரிய நிலப்பரப்பாகவும், இடையே கட்டுப்பாடு அற்று ஓடும் ஆறுகள், உயரமான மலைகள் இருந்ததாலும் இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இடையேயான தொடர்பு குறைவாகவே இருந்தது.

இதே கால கட்டத்தில் ரோமானிய நாகரிகம் ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமானதாகக் கருதப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ரோமபுரியில் மன்னராட்சி நடந்து கொண்டு இருந்தது. உலகுக்கே புதிய நாகரீகத்தைக் கற்றுத் தருபவர்களாக ரோமாப்புரிக்காரர்கள் இருந்தனர். மிக குறுகிய நிலப்பரப்பாக இருந்த ரோம் நாட்டில் இருந்து கடல் வழிப்பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தனர். அவ்வாறு கடல் வழியே கிளம்பியவர்கள் லெமுரியா கண்டத்தை வந்தடைந்த போது பிரமிக்க நேரும். லெமுரியாவின் வனப்பு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்டதில் மிகையில்லை.

நகர அமைப்பு, நீதி, மன்னர், படை, கட்டுப்பாடு போன்றவைகளுடன் வாழ்ந்து வந்த ரோமாபுரி கடல் பிரயாணிகளுக்கு லெமுரியாவின் சமூக அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரோமாபுரியை ஆட்சி செய்த ரொமுலஸ் அரசபரம்பரையில் வந்த சிலர் மெமுரியா கண்டத்தின் வனப்பில் மயங்கி இங்கு வந்து சேர்ந்தனர். தங்களிடம் இருந்த ஆளுமைத் திறமையைப் பயன்படுத்தி லெமுரியா கண்டத்தின் பல பகுதிகளை ஒன்றிணைத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரோம மன்னரின் மகள் ஒருவரின் பெயர் பாண்டயா (Pandaya) என்பதாக இருந்தது. அவளது கண்காணிப்பில் கீழ் லெமுரியா கண்டம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலப்பரப்பு அவள் பெயராலேயே வழங்கப்பட்டும் வந்தது.

கடல் கடந்து வெகு தூரம் வந்தவர்களாக இருந்ததால் ரோமானியர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தனர். எனவே லெமுரியாவின் மண்ணின் மைந்தர்களில் வீரமானவர்களாக இருந்தவர்களே அந்ததந்த பகுதிகளுக்கு தலைவர்களாக இருந்தனர். வியாபாரத்தையும், நாகரிகத்தையும் எல்லாப் பகுதிகளிலும் இணைப்பவர்களாக இத்தலைவர்கள் இருந்தனர். மிக வலிமை பொருந்திய ஒரு கூட்டம் மெல்ல மெல்ல லெமுரியக் கண்டத்தின் பல பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நாளடைவில் இவர்கள் இருந்த நிலப்பரப்பின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். பின்னர் அது
“பாண்டியன்” என்று மறுகியது.

லெமுரியா முழுவதும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்தது. நகரங்கள் உண்டாகின. கிராமங்கள் செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் நிர்வாகம் செய்ய தனித்தனிஅலுவலர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். பாண்டியர்களின் தலைநகரமான மதுரை ( இன்றைய மதுரை அல்ல) உருவாக்கப்பட்டது. நாகரீகத்தின் உச்சத்தை பாண்டிய நாடு எட்டியது. தமிழ் மொழி செழித்து ஓங்கியது. ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்யத் துவங்கினர். பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. வளமும், வனப்புமாக இருந்த லெமுரியா கண்டம் கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டு இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது. கடல் கோளில் தப்பியவர்களும், இப்போதைய தமிழ்நாட்டில் தென் பகுதியில் வசித்தவர்களும் புதிதாக ஒரு மதுரை நகரை உருவாக்கி பாண்டிய ஆட்சியைத் தொடரச் செய்தார்கள்.

டிஸ்கி : இது மாய பிம்ப வகைப் பதிவு.. இப்பதிவுக்கு என்று எந்த தரவுகளும் கிடையாது. இப்படி எல்லாம் நடந்து இருந்திருக்கலாம் என்பதாக படித்தவைகளை வைத்து சித்திகரிக்கப்பட்டுள்ளது.
...
..
.

Saturday, July 17, 2010

படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவது எப்போது ?
























முஸ்கி 1: இந்த பதிவுக்கும், எந்த நுண்ணரசியலுக்கும் சம்பந்தமில்லை. இதில் வரும் வசனங்களும், குறிப்புகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

முஸ்கி 2 : இது ஒரு நல்ல சமையல் குறிப்பு. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிக நல்லது. இதை உண்டவர்கள் தங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அதை இரண்டு நாள் அனுகாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் காற்றால் வீட்டுச் சுவரோ, கான்க்ரீட்டோ உடையும் அபாயம் இருக்கலாம் அல்லது உங்கள் நாற்றம் தாங்காமல் உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்து உங்களை தப்பிக்க வைக்கலாம்.

இனி பதிவு..

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

நன்றி : வெப்உலகம்.காம்

இனி பூண்டு குழம்பு செய்வது எப்படி ?

  • 1. பூண்டு - 15 பல்
  • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி - 2
  • 4. புளி தண்ணீர்
  • 5. தேங்காய் பால் - 1 கப்
  • 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  • 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 12. உப்பு

  • வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

Note:

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.



நன்றி : அறுசுவைடாட்காம்.

டிஸ்கி 1 : பூண்டு குழம்பு செய்து கொண்டு இருக்கும் போதோ, காற்றைப் பிரித்து விடும் போதோ யாராவது உங்களைத் திட்டினால் போடா நாயே என்று அவர்களை திட்டாதீர்கள்.
டிஸ்கி 2 : நாற்றம் தாங்காமல் யாராவது திட்டினால் த்தூ என்று இடப்புறம் ஒரு முறை துப்பி விட்டு சென்று விடுங்கள்.
டிஸ்கி 3 : இந்த பதிவில் நாய், த்தூ போன்ற வார்த்தைகள் இருப்பதால் இதை புனைவு என்றோ, நாய்ப்பதிவு என்றோ, சொற்சித்திரம் என்றோ சொன்னால் அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது.
டிஸ்கி 4 : மேலே உள்ளவைகளை எழுதி காப்பி\பேஸ்ட் செய்து எழுதி முடித்ததும் அதற்கும் எனக்குமான உறவு முடிந்து விடுகின்றது. இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.
......
....
..
.

Friday, July 16, 2010

பகுத்தறிவும், தனி மனித ஒழுக்கமும்

வள்ளுவர் ஒழுக்கம் குறித்து கூறும் போது " ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் "
என்று கூறினார். உயிரை விட மதிப்பு மிக்கதாக ஒழுக்கத்தை குறிப்பிடுகின்றார். ஒழுக்கத்திற்கான வரைமுறை என்ன ? இது காலம், இடம், கலாச்சாரத்தை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டுக்காக சொல்வதானால் மிக குறைந்த ஆடையுடன் நடமாடும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன், நமது மதுரைப் பெண்களை ஒப்பிட முடியாது. இது போல இன்னும் சில உதாரணங்களைக் கூறலாம்... இதை விட்டு விடுவோம். எனவே ஒழுக்கத்திற்கான அடையாளங்களை புறக்காரணங்களைக் கொண்டு கணக்கிட இயலாது.

தற்போதைக்கு அகத்தூய்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம். எப்படி? ஒரு மனிதனுடைய செயலால் அவனை சுற்றியுள்ளவர்கள், அல்லது சுற்றியுள்ளவைகள் பாதிக்கப்படாமல் இருக்குமானால் அதுவே தனி மனித ஒழுக்கத்தின் முதல் படி. இப்படி எடுத்துக் கொள்ள இயலுமா ? தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் இருக்கின்றது. பேருந்தில், தியேட்டரில், பொது இடத்தில் மது அருந்தி விட்டு வருகின்றவர்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தபட்டவரிடம் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என்று விளக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து கேட்டால் அது தனது பர்சனல் விஷயம். இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார். அவரது உடலை கெட்டுப் போக வைக்கும் விஷயம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அல்லது கவலைப்படுவதில்லை என்பதைப் போல நடிக்கின்றார்.

மது அருந்துவது, புகை பிடிப்பது.. அது பொது இடமாக இருந்தாலும் தனி இடமாக இருந்தாலும் உடலுக்கு தீமை என வரும் போது தவறானதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடலைப் பேணிப் பாதுகாப்பது மனிதனின் கடமைகளில் ஒன்று. இவை தீமை என்று அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையெனில் ??? இனி தான் புதிதாக கேள்விகள் பிறக்கின்றன.

ஒழுக்கமின்மையை தீர்மானிக்கும் காரணிகள் அல்லது கட்டுப்படுத்த விழையும் காரணிகள் எவை? மனிதன் பல விடயங்களுக்கு கட்டுப்படுகின்றான். தனது சமூகத்திற்கு, மதத்திற்கு, நீதி நூல்களுக்கு, தனது பாரம்பரியத்திற்கு, சட்டத்திற்கு என்று பல வகைகளில் கூறலாம்.

சமூகம் எதை எல்லாம் தீமை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றதோ அதற்கு... தெருவில் போகும் போது ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது சமூகத்தின் நியதி. எனவே சமூகம் கூறும் அந்நியதிக்கு தன்னைத் தானே உட்படுத்திக் கொள்கின்றான். மதங்கள் கூறும் கட்டுப்பாடுகளையும் ஒரு சாரார் கடைபிடிக்கின்றனர். பல சமூக கோட்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டி நேர்கின்றது.

இவை எதற்கு கட்டுப்படாமல் இருப்பவர்கள் இருக்கின்றார்களா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விடையாக இல்லை. ஆனாலும் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதித்துக் கொள்ள அல்லது கட்டுப்பாட்டுக்குள் வராமல் தன் மனதிற்குபட்டதை சரி என செய்யும் சிலரும் இருக்கின்றனர். இவர்களுக்கான கட்டுப்பாடுகளை எது தீர்மானிக்கின்றது ?

குறிப்பாக பகுத்தறிவு பேசக் கூடியவர்கள். பகுத்தறிவு என்பது மிக சிறப்பான ஒன்று. ஆனால் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் பகுத்தறிவு என்பதை கடவுளை மறுப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது போன்ற ஒரு மாயையை நிலைநிறுத்த ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். நன்மை, தீமை எது என்பதை முதலில் விளங்கினால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.

நன்மை, தீமையை எது விளக்குவது? பகுத்தறிவு பேசுபவர்களுக்கான நன்மை தீமைக்கான அளவுகோல் எது? ஏன் நன்மை செய்ய வேண்டும் ? ஏன் தீமை செய்யக் கூடாது? ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கான நன்மை, தீமை சட்டங்கள் இருக்கின்றன. கடவுள் நம்மை கண்காணிக்கின்றார் என்ற பயம் இருக்கும். அதே போல் இறப்புக்குப் பின் இருக்கும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்களும் தவறு செய்ய தயங்குவார்கள்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மதம் தவறு, பாவம் என்று சொன்னதையே தைரியமாக செய்யக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்கள் மதத்தின் மீது நம்பிகை இருந்தாலும் மனபலவீனத்தின் காரணமாக தவறு செய்கின்றனர். மனதளவில் தவறு என்பது அவர்களுக்கு தெரிந்து தான் இருக்கின்றது.

இவை எல்லாவற்றையும் விட பெரிய வியாதி இருக்கின்றது.. அது எவருக்கும் கட்டுப்பட மறுக்கும். கேள்வி கேட்பது என்பது ரொம்ப முக்கியமான விடயம்.. ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது என்பது ஒரு வகை மனோ வியாதி. நம் பதிவுலகிலேயே சிலரைப் பார்க்கலாம்.. அவர்களுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பொது இடங்களில் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் நடக்கலாம். பிறரைப் பற்றி அவர் விரும்பாத வகையில் பொதுவெளியில் விமர்சனம் என்ற பெயரில் திட்டலாம். கடவுளைத் திட்டலாம். தனி மனிதனைத் திட்டலாம். கேட்டால் அவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது.

அவர்களுக்கான ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவர்களிடம் இருப்பதில்லை. எந்த நீதி நூலுக்கும் கட்டுப்படுவதில்லை. எந்த மதக் கோட்பாடுக்கும் கட்டுப்படுவதில்லை. அனைவரும் கட்டுப்படும் மனசாட்சி என்பதற்கும் கட்டுப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கு சரியாகப் படுகின்றது. அவர்களது நண்பர்களும் இதே போல் தான் தோன்றித்தனமானவர்களாக இருப்பதால் இது அவர்களுக்கு ஊக்கமானதாக மாறி விடுகின்றது.

இவர்கள் எல்லாம் சமூகத்தில் ஒரு வியாதி போன்றவர்கள். கொலை செய்வது என்பதும் இவர்கள் பார்வையில் சில நேரங்களில் தவறாக மாறி விடுகின்றது. கொள்ளை அடிப்பதும், அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதும், அடுத்தவரின் மனதைப் புண் படுத்துவதும் இவர்களது அகராதியில் ஒன்றாகி விடுகின்றது.. பொதுவாக எதற்கும் கட்டுப்படாதவைகளை காட்டெருமைக்கு ஒப்பிடுவார்கள்.. இவர்களும் அது போன்ற கால்நடை பிராணிகள் போன்றவர்கள் தான். வேண்டாம் பாவம் அந்த காட்டெருமைகள்.. அவைகளுக்கு என்று அவைகளுக்குள் ஒரு ஒழுங்கு இருக்கும்... அது கூட இவர்களுக்கு இருக்காது.

இவர்களின் கிறுக்குத்தனம் எப்போது ஒழியும் என்று பார்த்தால் எப்போதும் ஒழியாது.. ஏனெனில் நல்லவர்களுக்கு எடுத்துக்காட்டு சொல்லும் அதே நேரத்தில் கெட்டவர்களுக்கான எடுத்துக்காட்டாக காட்ட இவர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் அதை எடுத்துச் சொன்னால் கூட ஆமாம் நாங்கள் அப்படித்தான் என்பார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும், விலகியே இருக்க வேண்டியதும் இது போன்ற மனித ஜென்மங்களுக்கு அப்பாற்பட்ட விலங்கினங்களை விட கேவலமான எண்ணங்களை உடையவர்களிடம் தான்.

Saturday, July 10, 2010

அ முதல் ஃ வரை - தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்நாட்டு பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
  • அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
  • அசையாத மணி அடிக்காது
  • அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
  • அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
  • அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
  • அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
  • அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
  • அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
  • அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
  • அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
  • அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
  • அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
  • அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
  • அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
  • அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
  • அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
  • அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
  • அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
  • அன்பே கடவுள்.
  • அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
  • அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
  • அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
  • அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
  • அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
  • அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
  • அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
  • அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
  • அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
  • அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
  • அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
  • அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
  • அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
  • அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
  • அதிக ஓய்வு அதிக வேதனை.
  • அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
  • அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
  • அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
  • அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
  • அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
  • அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
  • அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
  • அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
  • அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
  • அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
  • அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
  • அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
  • அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
  • அரசனும் அன்னைக்கு மகனே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
  • அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
  • அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
  • அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
  • அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
  • ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
  • ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
  • ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
  • ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
  • ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
  • ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
  • ஆறுவது சினம்.
  • ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
  • ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
  • ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  • ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
  • ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  • ஆலை விழுது தாங்கியது போல.
  • ஆடு பகை குட்டி உறவா?
  • ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
  • ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
  • ஆரம்பத்தில் சூரத்துவம்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
  • ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
  • ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
  • ஆற்றுநீர் பித்தம் போக்கும்
    குளத்து நீர் வாதம் போக்கும்
    சோற்றுநீர் எல்லாம் போக்கும்
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

  • இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
  • இளமையில் கல்.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
  • இளமையில் கல். முதுமையில் காக்கும்.
  • இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
  • இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
  • இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
  • இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
  • இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
  • இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
  • இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
  • இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
  • இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
  • இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
  • இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
  • இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
  • இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
  • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
  • இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
  • இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
  • இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.

  • ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
  • ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
  • ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
  • ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
  • ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

  • உழுத நிலத்தில் பயிரிடு.
  • உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
  • உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
  • உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
  • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
  • உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
  • உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
  • உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
  • உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
  • உழைத்து உண்பதே உணவு.
  • உப்பிட்டவரை உள்ளவும் நினை.
  • உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

  • ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
  • ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
  • ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

  • எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
  • எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
  • எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
  • எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
  • எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
  • எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
  • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
  • எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
  • எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
  • எண்ணம்போல் வாழ்வு.
  • எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

  • ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
  • ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
  • ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
  • ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
  • ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?

  • ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
  • ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
  • ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
  • ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
  • ஒழுக்கம் விழுப்பம் தரும்.
  • ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
  • ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
  • ஒத்தடம் அரை வைத்தியம்.
  • ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
  • ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

  • ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
  • ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
  • ஓடிப் பழகிய கால் நிற்காது.
  • ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.

  • கண்ணுக்கு இமை பகையா?
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
  • கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
    கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
    பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
  • கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
  • கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
  • கடுங்காற்று மழைக்கூட்டும்.
    கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
  • கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
  • கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
  • கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
  • கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
  • கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கல்வி விரும்பு.
  • கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
  • கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
  • கணக்கு எழுதாதன் நிலைமை.
    கழுதை புரண்ட இடம் மாதிரி.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல.
  • கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
  • கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா

  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  • கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
  • கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
  • கார்த்திகை கன மழை.
  • கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
  • கார்த்திகை கண்டு களம் இடு.
  • கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
  • காணிச் சோம்பல் கோடி நட்டம்.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
  • காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
  • காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
  • காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
  • காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
  • காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
  • கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
  • கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
  • கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
  • கார்த்திகை கால் கோடை.
  • கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி

  • கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
  • கிட்டப் போயின் முட்டப் பகை.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
  • கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ

  • கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு

  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
  • குருடனுக்கு ஒரே மதி.
  • குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
  • குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
  • குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
  • குதிரையும் கழுதையும் ஒன்றா?
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
  • குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குடி குடியைக் கெடுக்கும்.
  • குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
  • குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
  • கூலிப் படை வெட்டுமா?
  • கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ

  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
  • கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
  • கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை

  • கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
  • கை பட்டால் கண்ணாடி.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ

  • கொடிக்கு காய் பாரமா?
  • கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ

  • கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
  • கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
  • கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
  • கோமளவல்லிக்கு ஒரு மொழி
    கோளாறுகாரிக்குப் பல மொழி
  • கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ

  • கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.

  • சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
    சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
  • சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
  • சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா

  • சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி

  • சிறுதுளி பெருவெள்ளம்.
  • சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
  • சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
  • சித்திரை எள்ளைச்சிதறி விதை.
  • சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
    பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
    வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
  • சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
  • சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
  • சித்திரை மழை செல்ல மழை.
சீ

  • சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு

  • சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
  • சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
  • சுக்கைப் போல மருந்தில்லை.
  • சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
  • சுத்தம் சோறு போடும்.
  • சுற்றம் சூழ வாழ்
  • சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
  • சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ

  • சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
  • சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
  • சூதும் வாதும் வேதனை செய்யும்
செ

  • செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
  • செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
  • செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே

  • சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
  • சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ

  • சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
  • சோம்பித் திரியேல.
  • சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?

  • தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
  • தண்ணீரே உணவகளின் அரசன்.
  • தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
  • பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
  • மனிதனுக்கச் சோதனை பெண்!
  • தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
  • தண்ணீரில் அடி பிடிக்கிறது.
  • தலை பகை, வால் உறவா?
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
  • தலைக்குத் தலை பெரிய தனம்.
  • தன் தப்பு பிறருக்குச் சத்து
  • தன் உயிர்போல் மண் உயிர் நினை.
  • தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
  • தன் கையே தனக்கு உதவி.
  • தர்மம் தலை காக்கும்.
  • தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா

  • தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
  • தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
  • தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
  • தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
  • தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
  • தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
  • தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
  • தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
  • தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி

  • திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
  • திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ

  • தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
  • தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து

  • துறவிக்கு வேந்தன் துரும்பு.
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
  • துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
  • தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ

  • தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
  • தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
  • தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
  • தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
  • தூங்காதவனே நீங்காதவன்.
  • தூரமிருந்தால் சேர உறவு.
தெ
  • தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
  • தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
  • தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
  • தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
  • தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
  • தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
  • தையல் சொல் கேளேல்.
  • தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
  • தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
  • பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பணம் உள்ளவனுக்கு அச்சம்;
  • பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
  • பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
  • பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
  • பல் போனால் சொல் போச்சு.
  • பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
  • பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
  • பங்குனி மாதம் பதர் கொள்.
  • பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
  • பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
  • படுக்க படுக்க பாயும் பகை.
  • பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
  • பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
  • பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
  • பணம் பாதாளம் வரை பாயும்.
பா
  • பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
  • பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
  • பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
  • பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
  • பிச்சை புகினும் கற்கை நன்றே!
  • பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
  • பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
  • புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
  • புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
    சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
    யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
  • புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
  • புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
  • புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
    முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
  • பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
  • பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
  • பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
    ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
  • பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
    சுவருக்கு மண்ணிட்டுப் பார்
  • பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
  • பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
  • பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
  • பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
  • பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
  • பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
  • போகும்போது புளியமரத்தடியில் போ
  • வரும்போது வேப்பமரத்தடியல் வா.
  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
  • நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  • நன்றி மறவேல்.
  • நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
  • நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
  • நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
  • நன்மைக்கு நன்மை செய்
    தீமைக்கு நன்மையே செய்
  • நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
  • நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
  • நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
  • நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
  • நாளை என்பது நட்டாற்று ஓடம்.
  • நாளை என்று ஒருநாள் உண்டா?
  • நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
  • நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
  • நாளும் அதிகாலையில் நீராடு.
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
  • நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
  • நீலிக்கு கண்ணீர் இமையிலே.
  • நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
  • நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
  • நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
  • நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • மனம் போல வாழ்வு
  • மனம் ஒரு குரங்கு
  • மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
  • மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
  • மனைவி வீட்டின் ஆபரணம்.
  • மனைவி சொல்லே மந்திரம்.
  • மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
  • மனித நேயம் வளர்ப்பதே மதம்.
  • மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
  • மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
  • மதியாதார் வாசல் மிதியாதே!
  • மனசாட்சியை ஏமாற்றாதே!
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
  • மந்திரம் கால்; மதி முக்கால்.
  • மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
  • மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
  • மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
  • மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
  • மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
  • மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
  • மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
  • முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
  • முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
  • முன் வைத்த காலை பின் வைக்காதே!
  • முயன்றால் முடியாதது இல்லை.
  • முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
  • முயற்சி திருவினையாக்கும்.
மூ
  • மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
  • மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
  • மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
  • மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
  • வட்டியோடு முதலும் போச்சு.
  • வளைகிற முள் நுழையாது.
  • வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
  • வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
  • வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
  • வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
  • வண்டி வந்தால் வழி உண்டாகும்.
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
  • வாய் உள்ளவன் உள்ளே.
  • வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
  • வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
  • வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
  • வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
  • வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
  • வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
    கடந்த காலம் ஒரு கனவு
    வருங்காலம் ஒரு பெருமூச்சு
  • வாய் அரை வைத்தியன்.
  • வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
    வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
  • வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
  • விரலுக்கேற்ற வீக்கம்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
  • வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
  • வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டு வரும்

டிஸ்கி : பார்வ்ர்ட் மெயிலில் வந்தது.. திரும்ப தேடி எடுக்க இயலாது என்பதால் இங்கு பதிவேற்றம் செய்தாகி விட்டது.