Friday, October 3, 2008

ரிப்போர்ட் - அக்டோ-2 ஜெத்தா பதிவர் சந்திப்பு

.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்
1. ஜமாலன்
2. கல்ஃப் தமிழன்
3. தமிழன்...
4. தமிழ் பிரியன்
5. பெயர் வெளியிட விரும்பாத ஒரு இலங்கைப் பதிவர்

ஏற்கனவே ஒரு பதிவில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். இதை அடுத்து ஈகைத் திருநாள் விடுமுறையான அக்டோபர் 2 அன்று ஜித்தாவில், இந்தியர்கள் கூடக் கூடிய ‘பலத்’ என்ற இடத்தில் மாலை 5 மணிக்கு சந்திக்க முடிவானது.

அன்றைய தினம் காலையிலேயே நான் இருக்கும் தாஃயிபில் இருந்து கிளம்பி 220 கி.மீ தூரம் உள்ள ஜித்தாவை சென்றடைந்தேன்... பணியின் அழுத்தத்தால் கொஞ்சம் தாமதாக நண்பர் தமிழன் மதியம் 3 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் ஒரு இலங்கையைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத நண்பரும் வந்திருந்தார்.

மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருக்கும் இரயில் அமைப்பு பொம்மைக்கு கீழே அமர்ந்து பேச ஆரம்பித்து இருந்தோம். பதிவரும், எழுத்தாளருமான ஜமாலன் 4:45 க்கே அருகில் வந்து தொலை பேசினார். உடனே வந்து அவரும் எங்களுடன் அமர்ந்து கொண்டார். சற்று நேரத்தில் நண்பர் கல்ஃப் தமிழனும் வந்து சேர்ந்தார்.

முதலில் சுய அறிமுகங்களை ஒருவர் மற்றவர்களுக்கு செய்து கொண்டோம். இதில் அனைவரும் முதன் முறையாக நேரில் சந்தித்துக் கொள்கிறோம் என்பது இன்னொரு சிறப்பு.

ஜித்தா கடற்கரை நகரம் என்பதால் அதிக ஈரப்பதத்தின் காரணமாக அனைவரும் வியர்வையில் குளித்துக் கொண்டே உரையாடல்களைத் தொடர்ந்தோம்.

ஜமாலன் அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் பதிவர்களுக்கு தேவைப்படாது. கல்ஃப் தமிழன் 2005 முதல் தமிழ் பதிவுகளை உன்னிப்பாக படித்து வருகிறார். ஆனால் எழுதுவதில்லை. தமிழ் பதிவர்கள், பதிவுகள், திரட்டிகள் பற்றி நிறைய பேசுகின்றார்.

அனைவரும் இணைந்து பேசிய முக்கிய விடயங்களை தொகுத்து தருகின்றேன். இதில் பெரும்பாலானவை ஜமாலன் அவர்கள் எங்களுக்கு விளக்கம் சொல்லக் கூடியவையாகவே இருந்தது.
* தமிழ் பதிவர்களும், இன்றைய பதிவுகளும்
* தமிழ், தமிழர்கள், தமிழர் தேசியம் என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லது நாமே அதை விரும்பக் கூடிய சிந்தனைகள்
* உடலரசியலும், மனிதர்களின் பார்வைகளும்... ஆண், பெண் என்ற வேறுபாடையே சமூகம் தான் வளர்க்கிறது என்பதும், சிறு வயதில் வேறுபாடு இல்லாமல் வளரும் குழந்தைகள் பெரிதானது பாலின வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து செல்வதும் தங்களுக்கு தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்வதும்
* பின் காலனீயத்தை ஒட்டியே கட்டமைக்கப்படும் இலக்கியப் படைப்புகள்
* பின் நவீனத்துவதை எளிதில் புரிய வைக்கும் அறிமுகங்கள்... எந்த கருப்பொருளையும் சாராமல் படைக்கப்படும் எழுத்தாளனின் படைப்புகளும், அது மக்களிடம் சென்று அடைய வேண்டிய முறைகளும்
* போஸ்ட் மார்டனிசமும், தமிழ் மக்களின் அது பற்றிய புரிந்துணர்வும்...
*எதை நாம் கண்ணால் பார்க்கின்றோமோ அதை அப்படி ஏற்றுக் கொள்ளும் முறையில் வாழக் கூடிய இன்றைய சூழலும், பின் நோக்கிய அல்லது அடுத்து வரக் கூடிய மாற்றங்களுடன் கூடிய உலகத்தை பார்க்க வேண்டிய முறையும்
* தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், மலையக மக்கள் என பல கட்டங்களாக உள்ள இலங்கைப் பிரச்சினைகள்
*புத்தகங்களைப் படிக்க வேண்டியதன் அவசியங்களும், அவைகளைத் தேர்வு செய்யும் முறைகளும்
* ஆனந்த விகடன், குமுதம், பாக்கெட் நாவல்கள், தீராந்தி, காலச்சுவடு... இன்ன பிற நூல்கள்
* சமீபத்தில் படித்த, படிக்கும் நூல்கள், பார்த்த, பார்க்கும் குறும்படங்கள், எழுதிய, எழுதும் கட்டுரைகள்
*இந்திய , இலங்கை எழுத்தாளர்களும் அவர்கள் எழுதக் கூடிய எழுத்துக்களும், தன்மைகளும்
*இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கும் 32 வகையான கதை ‘நாட்’ களும், அதில் வரக் கூடிய 7 வகையான கதாபாத்திரங்களும்
* சாப்ட் போர்னோக்கள், நாம் சாதாரணமான ஒருகதை படிக்கும் போது எழுத்தாளன் கதை நடக்கும் களத்தையும். கதாபாத்திரத்தை நமக்கு முன் உருவகப் படுத்தி காட்டு விடுவதும், பின்னர் அந்த கதாநாயகன், நாயகியை நம் மனதிற்குள் நாமே உருவகப்படுத்திக் கொண்டு அவனை அல்லது அவளை துரத்திச் சென்று கொண்டிருப்பதும், அவளது அந்த வாழ்வை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்
* தமிழ் திரையுலகமும், சின்னத் திரை சீரியல்களும்
* தமிழக மற்றும் இலங்கை முஸ்லீம்களும், தங்களது சமூகம் சார்ந்த கலாச்சாரத்தை விடுத்து தனியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முயல்வதும், அதனால் விளைந்து கொண்டு இருக்கும் தீமைகளும்
*நாகார்ஜூன் போன்ற சிறந்த பதிவர்களின் அறிமுகங்கள்
*உலகில் உள்ள அடுத்த கட்ட எழுத்துக்களை படித்துப் புரிந்து கொள்கிறோமோ, அதை அப்படியே வெளித்தருவதும், இன்னும் சில காலங்களில் அப்படிப்பட்ட எழுத்துக்கள் தமிழுலகில் வலம் வர வேண்டியதன் அவசியமும்
*தமிழ் மணத்தில் இயங்கும் கும்மி குரூப்புகள் பற்றி (ஹிஹிஹி நாங்கதேன்)
*இன்னும் பல பல இத்யாதிகள்

எந்த விதமான சுய, பிற சொறிதல் இன்றி சாதாரணமாக நண்பர்கள் பேசிக் கொள்ளும் பேச்சுக்களாகவே அமைந்திருந்தது. நிறை குறைகள் விரிவாக அலசப்பட்டன. இறுதியாக அருகில் இருந்த தமிழ் உணவகத்தில் இரவு உணவு முடித்து மகிழ்வுடன் ஊர் திரும்பினேன்.

கடந்த பல ஆண்டுகளில் இது போல் ஒரு கருத்து பரிமாற்றத்திற்கான நண்பர்களும், களமும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருந்த ஏக்கம் நிறைவேறியதாகவே படுகின்றது.

வரும்போது ஜித்தாவின் நினைவாக தங்கமணியின் கட்டளைக்கு (?) இணங்க பேட்டரியில் இயங்கும் மின் விசிறி வாங்கினேன்... அதற்காக கல்ஃப் தமிழன் பல கடைகளிலும் ஏறி இறங்கி விசாரித்து வாங்கிக் கொடுத்தார்.. நன்றிகள்!

நண்பர் தமிழன் தனது நண்பருக்காக புதிய செல்பேசியும். தனக்காக அவரது வாழ்க்கையில் முதன் முறையாக ‘உள்ளாடை’யும் வாங்கிக் கொண்டாராம்.. ;))

சந்திப்பிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Update : துளசி டீச்சரின் வேண்டுகோளுக்காக
ஜமாலனும், நானும் செட் தோசை, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி சாப்பிட்டோம். கல்ஃப் தமிழன், தமிழன் மற்றும் இலங்கைப் பதிவர் ஆகியோர் இட்லி,சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, இரண்டு வடை சாப்பிட்டனர். இறுதியில் அனைவரும் தேநீர் அருந்தினோம்.... அப்ப இது பதிவர் சந்திப்பா? இல்லியா?

34 comments:

gulf-tamilan said...

me the first ??

கூடுதுறை said...

ஹலோ நீங்கள் சவுதியா ?

சொல்லவே இல்ல...

gulf-tamilan said...

வாழ்க்கையில் முதன் முறையாக ‘உள்ளாடை’யும் வாங்கிக் கொண்டாராம்??
:)))))
தமிழன் சொல்லவேயில்லா??

gulf-tamilan said...

5. பெயர் வெளியிட விரும்பாத ஒரு இலங்கைப் பதிவர்//
:((( ஆ!!! அவரும் பதிவர??

ஆயில்யன் said...

ஆஹா நிறைய விசயங்களை கடற்கரைக்கு பக்கத்தில உட்கார்ந்து அலசி ஆராய்ச்சிருக்கீங்க போல இருக்கே! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உம் நட்பு பயணம் பார்வைகளின் சந்திப்பில் பலம் பெறட்டும் :)

ரமேஷ் வைத்யா said...

எங்கள் உலகளாவிய சங்கத்திலிருந்து ஒருவர் திடுதிப் என்று விலகியிருப்பது துயரமான சம்பவம். சரித்திரம் அவரை எவ்விதம் தண்டிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
க்ளூ: ஸ்மைலி.

gulf-tamilan said...

என்னுடைய பின்னுட்டம் இன்னும் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். :)))

துளசி கோபால் said...

220 கிமீ பயணமா? இதுக்கே ஒரு ரெண்டரைமணி நேரம் ஆகி இருக்குமே!!!

நீங்க எல்லாம் பேசுன விஷயங்களைப் பார்த்தால்.............. ஹூம்.....
பெரிய பெரிய கனம்கூடிய டாபிக்கா இருந்துருக்கு.

ஆமாம். சந்திப்பு முடிஞ்சு சாப்பிட்டப்ப வடை அல்லது போண்டா சாப்பிட்டீங்களா?

அதை வச்சுத்தான் இது பதிவர் சந்திப்பா இல்லையான்னு சொல்ல முடியும்:-)))))

மங்களூர் சிவா said...

//
Update : துளசி டீச்சரின் வேண்டுகோளுக்காக
ஜமாலனும், நானும் செட் தோசை, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி சாப்பிட்டோம். கல்ஃப் தமிழன், தமிழன் மற்றும் இலங்கைப் பதிவர் ஆகியோர் இட்லி,சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, இரண்டு வடை சாப்பிட்டனர். இறுதியில் அனைவரும் தேநீர் அருந்தினோம்.... அப்ப இது பதிவர் சந்திப்பா? இல்லியா?
//

போண்டா இல்லாவிட்டால் அது பதிவர் சந்திப்பே இல்லையாம்
:)))))))))

வால்பையன் said...

மிக ருமையான பதிவர் சந்திப்பு,
உங்கள் கேள்விகளுக்கான விரிவான பதிலுக்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்

குப்பன்.யாஹூ said...

வாழ்த்துக்கள் , இது போல அடிக்கடி பதிவர் சந்திப்புக்கள் நடக்க வாழ்த்துக்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தங்களின் மொழி பேசும் சக மனிதரை கண்டால், உரையாடினால் மன அழுத்தம், பனி அழுத்தம் குறையும்.

ஜெகதீசன் said...

ஆஹா நிறைய விசயங்களை கடற்கரைக்கு பக்கத்தில உட்கார்ந்து அலசி ஆராய்ச்சிருக்கீங்க போல இருக்கே! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உம் நட்பு பயணம் பார்வைகளின் சந்திப்பில் பலம் பெறட்டும் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ! சௌதியிலும் இட்லி வடை இருக்கா?

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!!

புதுப்பாலம் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

இரயில் பொம்மைக்கு எதிரில் நீரூற்று இருக்குமிடத்தில் சிமெண்ட் பெஞ்சு எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்களே. அங்கு உக்கார்ந்து வசதியாக சந்திப்பை நடத்திருக்கலாமே.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா
http://kaniraja.blogspot.com

Anonymous said...

வந்தது 5 பேர் அதிலும் கூட ஒருவர் பெயர் வெளியிட விரும்பாதவர். பேசிய தலைப்புகளோ பெரிசு பெரிசா......இதைக் கொண்டு தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒன்னுமே புரியல.
அந்தக் காலத்துல இலக்கியவாதிகள் ஒன்றுகூடி பேசுவாங்களாம் பாமர மக்களுக்கு எதுவுமே புரியாதாம்.
இந்த வலைப்பதிவர் மாநாடும்(?) அப்படித்தான் எனக்குத் தோணுது. ஏங்க தமிழ் இணைய வாசகர்களே உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா?

King... said...

நல்ல விசயம்...

சந்தோசம்...:))

King... said...

பகிர்வுக்கு நன்றி...:)

King... said...

மஸ்தூக்கா said...
\\
வந்தது 5 பேர் அதிலும் கூட ஒருவர் பெயர் வெளியிட விரும்பாதவர். பேசிய தலைப்புகளோ பெரிசு பெரிசா......இதைக் கொண்டு தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒன்னுமே புரியல.
அந்தக் காலத்துல இலக்கியவாதிகள் ஒன்றுகூடி பேசுவாங்களாம் பாமர மக்களுக்கு எதுவுமே புரியாதாம்.
இந்த வலைப்பதிவர் மாநாடும்(?) அப்படித்தான் எனக்குத் தோணுது. ஏங்க தமிழ் இணைய வாசகர்களே உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா?
\\

;)

நிறைய வாசியுங்கன்னு சொல்றாங்க...

இன்னும் பல...

Thamiz Priyan said...

///மஸ்தூக்கா said...

வந்தது 5 பேர் அதிலும் கூட ஒருவர் பெயர் வெளியிட விரும்பாதவர். பேசிய தலைப்புகளோ பெரிசு பெரிசா......இதைக் கொண்டு தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒன்னுமே புரியல.
அந்தக் காலத்துல இலக்கியவாதிகள் ஒன்றுகூடி பேசுவாங்களாம் பாமர மக்களுக்கு எதுவுமே புரியாதாம்.
இந்த வலைப்பதிவர் மாநாடும்(?) அப்படித்தான் எனக்குத் தோணுது. ஏங்க தமிழ் இணைய வாசகர்களே உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா?///

முதலில் இது எனது நண்பர் மஸ்தூக்காவா எனத் தெரியவில்லை? நண்பர் எப்போதும் அதர் ஆப்ஷனில் வந்ததில்லை.

எனிவே, சந்தித்தவர்கள் அனைவரும் ஒரு நேர் கோட்டில் இருக்கும் எண்ணத்தைக் கொண்டவர்கள். பொதுவாக தமிழ் சகோதரர்கள் பேசும் போது சந்திக்கும் போது சினிமா, லோக்கல் அரசியல் பேசுவார்கள்... ஆனால் இதில் கலந்து கொண்டவர்கள் வேறு கட்டத்தில் இருப்பவர்கள். இன்றைய உங்கள் கமெண்ட்டின் எழுத்து மொழி தான் 30 வருடங்களுக்கு முன் பின்நவீனத்துவமாக இருந்தது. இன்றைய பின் நவீன எழுத்து மொழி இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகு சாதாரணமாக மாறி இருக்கலாம்.. அதற்கு இப்போதே நம்மை தயார் செய்து, வேகமாக முன்னெடுத்து செல்லும் முயற்சியில் என்னைப் போன்ற பாமரர்களும் கலந்து கொள்ள எடுத்த முயற்சி தான் இது. இது கலந்து கொண்டவர்கள் மட்டுமே பயன்பெறும் பொருட்டே பேசப்பட்டது.

சாதாரணமாக எல்லா விஷயங்களையும் பற்றிப் பேச மீடியாக்கள் இருக்கின்றன. 95 சதவீத பதிவர்கள் இருக்கின்றோம். இதற்காக கிட்டத்தட்ட 600 கி.மீ பயணம் செய்ய வேண்டியதில்லையே?

ஒரு புதிய கட்டமைப்புக்குள் வரக் கூடியவர்கள், அல்லது வெளியே இருந்து பார்ப்பவர்கள் வருங்காலங்களில் எது மாதிரியான பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு எது தொடர்பான விஷயங்களைப் பேசினோம் என்று எழுதியுள்ளேன்... என்ன பேசினோம் என்று எழுதவில்லை.

தமிழன்-கறுப்பி... said...

அட இவ்வளவு விசயம் பேசியிருக்கோம்ல...!

தமிழன்-கறுப்பி... said...

\\
அன்றைய தினம் காலையிலேயே நான் இருக்கும் தாஃயிபில் இருந்து கிளம்பி 220 கி.மீ தூரம் உள்ள ஜித்தாவை சென்றடைந்தேன்... பணியின் அழுத்தத்தால் கொஞ்சம் தாமதாக நண்பர் தமிழன் மதியம் 3 மணிக்கு வந்து சேர்ந்தார்.
\\

ரொம்ப பெரிய மனசுப்பா உங்களுக்கு...

அந்த வெயில்ல அவ்வளவு நேரம் காக்க வச்ச என்னை மற்றவர்கள் உதைக்காம விட்டா அதுவே பெரிய புண்ணியம்...

தமிழன்-கறுப்பி... said...

\\
முதலில் சுய அறிமுகங்களை ஒருவர் மற்றவர்களுக்கு செய்து கொண்டோம். இதில் அனைவரும் முதன் முறையாக நேரில் சந்தித்துக் கொள்கிறோம் என்பது இன்னொரு சிறப்பு.
\\

ஆனா முதல் முறையா பார்த்த மாதிரி இருக்கலை எனக்கு...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
தனக்காக அவரது வாழ்க்கையில் முதன் முறையாக ‘உள்ளாடை’யும் வாங்கிக் கொண்டாராம்.. ;))
\\

அவ்வ்வ்வ்வ்...:)
ஆமா இது ரொம்ப முக்கியம்...!! :)

Thamira said...

அப்புறம் இம்மாம் மேட்டரா பேசுனீங்க.. விடிஞ்சுருக்குமே.?

Thamira said...

இன்னோர் விஷயம், அப்பிடின்னா பின்நவீனத்துவம்னா என்னன்னு விளங்கிருச்சா உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Thamira said...

அய்யய்யோ இப்பதான் கவனிக்கிறேன். இங்கே ஏதோ பின்னூட்ட அரசியல் நடந்துகிட்டிருக்குதே. நா வேற ஏதோ அல்ப்பையா பின்னூட்டம் போட்ருக்கேனே. அண்ணாத்தே.. சீரிஸா எடுத்துக்காதீங்க..

நிஜமா நல்லவன் said...

சரி அண்ணே....!

மஸ்தூக்கா said...

//முதலில் எனது நண்பர் மஸ்தூக்காவா தெரியவில்லை?//
வலைப்பதிவுலகில் பிரபல்யமான தமிழ்ப்பிரியன் எவ்வளவு உரிமையோடு என்னைக் கேட்டிருக்கிறார். எனக்குப் பெருமையாக இருக்கிறது.
நான் மஸ்தூக்காவே தான்.
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த வலைப்பதிவர் மாநாடு எனது அறிவுத் தாகத்தைப் போதுமான அளவுக்கு தீர்க்கவில்லை என்பதால் அப்படி எழுதிவிட்டேன்.மற்றபடி குறை சொல்லும் எண்ணம் இல்லை.
தமிழ் வலைப்பதிவர்களிடமிருந்து தமிழ் இணைய உலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள் தமிழ்ப்பிரியன் அவர்களே.

சுரேகா.. said...

நடக்கட்டும் ...நடக்கட்டும்..!

:)

Sanjai Gandhi said...

வெரி குட்..வெரி குட்..

எதப் பத்தி பேசினிங்கன்னு சொல்லி இருக்கிங்களே.. அதை பத்தி என்ன பேசினிங்கன்னு யார் சாமி சொல்வாங்க? :(

ஜமாலன் said...

நண்பருக்கு..

இது ஒரு வலைபதிவர் சந்திப்புன்னு சொல்லவேயில்ல....
))))

Unknown said...

சில நாள்களாக உங்கள் பதிவுகள் படிக்கிறேன், சுவாரசியமாக எழுதுகிறீர்கள். தைஃபில் இருக்கிங்களா? நான் ரியாத்தில் இருக்கேன். முடிந்தால் ஒரு தனிமடல் இடவும். என் முகவரி kvraja [at] ஜிமெயில்.காம்

Anonymous said...

போன் டா இல்லாததால் இது பதிவர் சந்திப்பு இல்லல என கூறி கொள்வது..

ஆயில்யன் ரசிகர் படை
ஒஸ்திரேலியா

Unknown said...

halo, i am also from jeddah, consider me in future meeting.

azeem basha
0502032546