Friday, October 31, 2008

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 1

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

இரண்டாம் பகுதி பார்க்க

இறுதிப் பகுதியைப் பார்க்க

24 comments:

ராமய்யா... said...

மீ த பஷ்டு...

ரெண்டாவது பாகம் சீக்கிரம் பொடுங்க தல...

Unknown said...

cha just missuuuuuuu... Me the second??

Unknown said...

அண்ணா சூப்பரா இருக்கு கதை... :)) ப்ளீஸ் அண்ணா சீக்கிரம் அடுத்த பகுதியையும் போடுங்களேன்... :))))

Unknown said...

//இரண்டாம் பகுதி இறைவன் நாடினால் இன்றே மதியமும், இறுதிப் பகுதி மாலையும் வரும்...//

இதையும் கதை போல இருக்குன்னு நினைச்சு படிச்சேன்.. அப்பறம் தான் நீங்க ஏதோ சொல்லிருக்கீங்கன்னு தெரிஞ்சது.. ஹி ஹி ஹி.. ;)))))))

Unknown said...

தமிழ் பிரியன் அண்ணா சைண்டிஸ்ட்டா?????? சொல்லவே இல்ல..!! ;))))))))

Unknown said...

அண்ணா நீங்க சொல்ற அந்த இண்டியோனியம் பத்தின தகவல்கள் உண்மையா??? :))

Unknown said...

//மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.//

நிஜமாவே இப்படி எல்லாம் தான் ஆராய்ச்சி செய்வாங்களா?? :))

Unknown said...

நிறைய கேள்வி கேட்ருக்கேன்... அண்ணா வந்து விடை மறக்காம சொல்லணும்... ;))))))))

Unknown said...

ஹை நான் தான் பத்து... :))))))))

நிஜமா நல்லவன் said...

/அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது./



ஆமா அந்த பொண்ணு பேரு என்ன? நீங்க பேரில் மட்டுமே மயங்குறீங்கன்னு நான் நம்புறேன்...:)

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி said...

ஹை நான் தான் பத்து... :))))))))/


ஹையோ...ஹையோ...நான் தான் பத்து...:)

நிஜமா நல்லவன் said...

தல சூப்பர்! அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க தல...!

Unknown said...

அண்ணா நிஜம்மா நான் தான் பத்து... நீங்க ரொம்ப லேட்.. சோ உங்களுக்கு விஷயமே தெரியாது.. இந்த கதை முடியட்டும், நான் அது என்னன்னு சொல்றேன்.. இந்த கதை போலவே அதுவும் பரம ரகசியம்... :))))))))))))

வால்பையன் said...

அப்போ இது தொடர் கதை

வால்பையன் said...

கனவுல ஆரம்பிக்கிறது நால கனவுலேயே முடியுமோ

வால்பையன் said...

நல்லாத் தான் இருக்கு.
ஆனா முடிவில எதாவது சொதப்புனிங்க
அப்ப இருக்கு உங்களுக்கு

விஜய் ஆனந்த் said...

:-)))..

லீவு நாள் சிறப்பு சிறுகதை ஆரம்பம் நல்லா இருக்கு!!!

தமிழன்-கறுப்பி... said...

ஸ்ரீமதி said...
\\
தமிழ் பிரியன் அண்ணா சைண்டிஸ்ட்டா?????? சொல்லவே இல்ல..!! ;))))))))
\\

என்ன கேள்வி இது...!!!

தலயோட திறமைக்கு நீங்க கொடுக்கற மரியாதை இதுதூனா...?

தமிழன்-கறுப்பி... said...

தல ஆரம்பம் நல்லாருக்கு...
அடுத்த பாகம் பாக்கலாம்...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இந்த மின்சாரம் சம்பந்தமா இருக்கற பிட்டு தமிழ்நாட்டுக்கு நீங்க குடுக்கற ஐடியாவா???

;)

தமிழன்-கறுப்பி... said...

\
இரண்டாம் பகுதி இறைவன் நாடினால் இன்றே மதியமும், இறுதிப் பகுதி மாலையும் வரும்
\

அந்த கதை எல்லாம் கிடையாது முழு நீள சிறுகதைன்னா அது ஒரே நாள்ள போட்டே ஆகணும்...:)

எத்தனை பதிவுப்பா போட்டுட்டிங்க உங்க வேகத்துக்கு பின்னூட்டம் கூட போட முடியறதில்லை எனக்கு...

gulf-tamilan said...

//ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 2//
எங்கே காணேம் ??

cheena (சீனா) said...

தமிழ் பிரியன்,

கதை நன்றாகச் செல்கிறது -- பொறுத்திருந்து பார்ப்போம் - தமிழ் பிரியன் என்ன செய்யப் போகிறார் என்று

ராமலக்ஷ்மி said...

நாயகனுக்கு
மயக்கம் கலக்கம் மனதில் குழப்பம்..
போட்டு விட்டீர்கள் தொடரும்.