Wednesday, October 22, 2008

US Election 08 - பின்லேடனுக்கு ஒரு மனம் திறந்த மடல்

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!

முதலில் உங்களின் மீது எனக்கு சிறந்த மதிப்பு கிடையாது என்றாலும் இந்த மடலை எழுத வேண்டிய கட்டத்தில் உள்ளது வருந்தத்தக்கதே.

நான் இந்த மடலை எழுதுவதன் காரணத்தை சொல்லி விடுகிறேன். இன்னும் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு அல்லது நவம்பர் 5 வரையாவது அமெரிக்காவைப் பற்றி எந்த பேட்டியும் தராதீர்கள். மேலும் எந்த விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு விடாதீர்கள்.

உங்களது பேட்டிக்காகவும், ஏதாவது சிறு தாக்குதலையாவது மேற்கொள்வீர்களா என உங்களைப் போன்ற மனித குலத்தின் எதிரிகள் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் வேறு யாரும் அல்ல.. ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது பதவிக்கு வர துடிக்கும் மெக்கெய்ன் என்பவருமே.

நீங்கள் கொடுக்கும் ஒரு சிறு பேட்டி கூட அவர்களது ஓட்டு வங்கியை உயர்த்தி விடும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பொருளாதார சீரழிவால் அரண்டு போய் இருக்கும் அமெரிக்க அப்பாவி மக்களுக்கு உங்களது பேட்டியைக் காட்டி,
“அய்யய்யோ, ஆபத்து வந்து விட்டது... ஒசாமா உயிரோடு இருக்கிறார். அவரை ஒழிக்க எங்களுக்கு ஓட்டு போடுங்கள்” என கடைசி கட்டத்தில் கதறி நாடகமாட மெக்கெய்ன் தயாராக உள்ளார்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் தனி விமானத்தில் வந்தாவது உங்கள் காலில் விழுந்து பேட்டி கொடுக்க சொல்வார்கள். அதுக்காக ஒபாமாவுக்கு ஆதரவாக பேட்டி ஏதும் கொடுத்து விடாதீர்கள். வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கூமுட்டை ஆகி விடுவீர்கள். ஒபாமாவுக்கு ஆதரவாக ஒசாமா என்று ஓட்டு சீட்டிலேயே அடித்து விடுவார்கள். ஏற்கனவே ஒபாமா என்பதற்கு ஒசாமா என்று அடித்து விட்டார்கள்.

எனவே கையையும், வாயையும் பொத்திக் கொண்டு நீங்கள் இருந்தாலே உலகம் சுபிட்சமாக இருக்கும்.

கடைசியாக உங்கள் மீது ஏன் மதிப்பு வராமல் வெறுப்பு வருகின்றது என்பதையும் உங்கள் பாணியிலேயே விளக்கி விட்டு விடை பெற ஆசைப்படுகிறேன்.

இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு நீங்கள் செய்த அல்லது செய்ததாக ஒப்புக் கொண்ட படுகொலைகள் உங்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விட்டதாக உணர்கிறேன்.

திருக்குர்ஆன் இவ்வறு கூறுகின்றது

“திண்ணமாக,ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” - அல்குர் ஆன் [005:032].

போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போர் புரியும் போது போரில் ஈடுபடாத ஆண்கள், மற்றும் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களைக் கொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. விளைநிலங்களையும், பசுமையான மரம், செடிகளையும் அழிப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளும் போது, இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் எந்த வன்முறையும் அது நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும் என்பது தெளிவு.

மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்
என்ற இறைவசனத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்களுக்கும், எங்களுக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோமாக!

அன்புடன்
சகோதரன்
தமிழ் பிரியன்


31 comments:

புதுகை.அப்துல்லா said...

அண்ணே நம் அனைவரின் உணர்வையும் அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள். மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!

VIKNESHWARAN said...

அண்ணே நாம் ரெண்டு பேரும் போய் ஓசாமாவுக்கு இந்த லெட்டர குடுத்துட்டு வரலாமா :P

வால்பையன் said...

//பின்லேடனுக்கு ஒரு மனம் திறந்த மடல் - //

உங்கள பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது

வால்பையன் said...

//இன்னும் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு அல்லது நவம்பர் 5 வரையாவது அமெரிக்காவைப் பற்றி எந்த பேட்டியும் தராதீர்கள். மேலும் எந்த விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு விடாதீர்கள்.//

அதன் பின் தாக்குதல் நடத்தலாமா
இதற்கு பெயர் வேண்டுகோள் கடிதம்

வால்பையன் said...

//ஒபாமாவுக்கு ஆதரவாக பேட்டி ஏதும் கொடுத்து விடாதீர்கள்.//

இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூடவா பேட்டி கொடுக்க கூடாது

வால்பையன் said...

நீங்களும் குரானைத் தான் உதாரணம் காட்டுகிறீர்கள் அவர்கள் செய்வது தவறு என்று சுட்டி காட்ட
அவர்களும் அதையே தான் காட்டுகிறார்கள் அவர்கள் செய்வதை நியாயம் என்று சுட்டிகாட்ட.

மதமின்றி மனித நேயத்தாலேயே ஒரு உயிரை கொள்வது தவறு என்று சொல்வதற்கு உங்கள் மதம் ஏதாவது தடை செய்திருக்கிறதா என்ன?

ஆயில்யன் said...

//அண்ணே நம் அனைவரின் உணர்வையும் அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள். மனிதகுல விரோதிகள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!//


அழகாய் மறுமொழித்த அப்துல்லா அண்ணாவின் குரலினை மறுக்கா ஒலித்திக்கொள்கிறேன்

ஆயில்யன் said...

//VIKNESHWARAN said...

அண்ணே நாம் ரெண்டு பேரும் போய் ஓசாமாவுக்கு இந்த லெட்டர குடுத்துட்டு வரலாமா :P//


நானும் வருவேன்!!!

கயல்விழி said...

நல்ல வேளை பின்லேடனுக்கு தமிழ் படிக்க தெரியாது, நீங்களே ஐடியா தருவீங்க போலிருக்கு.

நல்ல பதிவு :)

வெண்பூ said...

அடப்பாவி.. பின்லேடன்ட போட்டு குடுத்திடியேய்யா? அந்த ஆளே உலகத்தை அழிக்கிறதுக்கு என்னா வழின்னு பாத்துகிட்டு இருக்காரு. இதுல நீங்க பேட்டி குடுத்தா புஷ்ஷிம், மெக்கெய்னும் ஜெயிச்சிடுவாங்கன்னு சொன்னா அவரு முதல்ல பேட்டி குடுத்துட்டுத்தான் அடுத்த வேலையவே பாப்பாருன்னு தெரியாதா? என்னமோ போங்க.. ஆனாலும் அமெரிக்கா மேல உங்களுக்கு இவ்ளோ காண்டு ஆகாது.. :))))

நான் மட்டும் said...

கடைசி வர அவர் அட்ரஸ்ஸ சொல்லவே இல்ல...கொஞ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்..

தமிழ் பிரியன் said...

///புதுகை.அப்துல்லா said...

அண்ணே நம் அனைவரின் உணர்வையும் அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள். மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!///

ஆமாம் அண்ணே! நன்றி!

தமிழ் பிரியன் said...

///VIKNESHWARAN said...

அண்ணே நாம் ரெண்டு பேரும் போய் ஓசாமாவுக்கு இந்த லெட்டர குடுத்துட்டு வரலாமா :P////
நாம் போய் கொடுக்க வேண்டியது இல்லை... அதுவாகவே போய் சென்றடைந்து விடும்.

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

//இன்னும் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு அல்லது நவம்பர் 5 வரையாவது அமெரிக்காவைப் பற்றி எந்த பேட்டியும் தராதீர்கள். மேலும் எந்த விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு விடாதீர்கள்.//

அதன் பின் தாக்குதல் நடத்தலாமா
இதற்கு பெயர் வேண்டுகோள் கடிதம்///

குறைந்தது நவம்பர் 5 வரை அமெரிக்காவைப் பற்றி பேசாதீர்கள். அமெரிக்காவின் மீது எந்த தாக்குதலும் மேற் கொள்ளாதீர்கள் என்பதுதான் சாரம். இரண்டையும் இணைத்து காலத்தை சேர்த்தால் மோசமான அர்த்தம் தான் வரும்... கவனமாக பிரித்து படியுங்கள்!

தமிழ் பிரியன் said...

/// வால்பையன் said...
//ஒபாமாவுக்கு ஆதரவாக பேட்டி ஏதும் கொடுத்து விடாதீர்கள்.//
இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூடவா பேட்டி கொடுக்க கூடாது///
பேச்சு வார்த்தையா? அப்படி என்றால் என்ன்வென்றே புரியாது... அவர்களுக்கு தெரிந்து எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், செய்வதும் தான்... :(

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...
நீங்களும் குரானைத் தான் உதாரணம் காட்டுகிறீர்கள் அவர்கள் செய்வது தவறு என்று சுட்டி காட்ட
அவர்களும் அதையே தான் காட்டுகிறார்கள் அவர்கள் செய்வதை நியாயம் என்று சுட்டிகாட்ட.
மதமின்றி மனித நேயத்தாலேயே ஒரு உயிரை கொள்வது தவறு என்று சொல்வதற்கு உங்கள் மதம் ஏதாவது தடை செய்திருக்கிறதா என்ன?////

இஸ்லாம் மனிதர்களுக்குள்ளான உறவில் மூன்று விஷயங்களில் கடுமையாக இருக்கும். ஒருவனுடைய மானம், பொருள், உயிர் ஆகியவையே அவை. ஒரு தனிமனிதனுடைய மேற்சொன்னவைகளுக்கு பாதிப்பு என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

இஸ்லாமிய அடிப்படையில் போராடுவதற்கும், இஸ்லாத்திற்காக போராடுவதற்கும், இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு போராடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எந்த போராட்டமும் இஸ்லாமிய விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாத்தைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இல்லை. இஸ்லாத்தைக் காப்பது, இந்த உலகைப் படைத்த இறைவனின் கையில் உள்ளது.

ஒசாமா செய்யும் செயல்கள் குர்ஆன் அடிப்படையில் மிகப் பெரிய தவறு என்றும், அது குறித்து விவாதிக்க தயாரா? என்றும் பல இஸ்லாமிய அறிஞர்கள் அறைகூவல் விடுத்தனர்.

ஒசாமா இவைகளை எல்லாம் காதிலேயே வாங்கவில்லை.

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//அண்ணே நம் அனைவரின் உணர்வையும் அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள். மனிதகுல விரோதிகள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!//


அழகாய் மறுமொழித்த அப்துல்லா அண்ணாவின் குரலினை மறுக்கா ஒலித்திக்கொள்கிறேன்///

நன்றி ஆயில்யன்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//VIKNESHWARAN said...
அண்ணே நாம் ரெண்டு பேரும் போய் ஓசாமாவுக்கு இந்த லெட்டர குடுத்துட்டு வரலாமா :P//
நானும் வருவேன்!!!///

வாங்க எல்லாம் கூட்டமா போய் வரும்போது 4 AK47 வாங்கி வரலாம்.. ஓடி வாங்க!

தமிழ் பிரியன் said...

/// கயல்விழி said...
நல்ல வேளை பின்லேடனுக்கு தமிழ் படிக்க தெரியாது, நீங்களே ஐடியா தருவீங்க போலிருக்கு.
நல்ல பதிவு :)///
அக்கா! வருகைக்கு நன்றி! அதனால் தான் முதலில் இந்த பதிவின் சாரத்தை ஒசாமாவுக்கு தெரிந்த அரபியில் கொடுத்துள்ளேன்...
ஐடியா கொடுத்ததில் ஒரு நுண்ணரசியல் இருக்கு... தேர்தலுக்கு முன் சொல்கிறேன் பதிவி... ;)

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...
அடப்பாவி.. பின்லேடன்ட போட்டு குடுத்திடியேய்யா? அந்த ஆளே உலகத்தை அழிக்கிறதுக்கு என்னா வழின்னு பாத்துகிட்டு இருக்காரு. இதுல நீங்க பேட்டி குடுத்தா புஷ்ஷிம், மெக்கெய்னும் ஜெயிச்சிடுவாங்கன்னு சொன்னா அவரு முதல்ல பேட்டி குடுத்துட்டுத்தான் அடுத்த வேலையவே பாப்பாருன்னு தெரியாதா? என்னமோ போங்க.. ஆனாலும் அமெரிக்கா மேல உங்களுக்கு இவ்ளோ காண்டு ஆகாது.. :))))///

;))))
நமக்கு என்றைக்குமே அமெரிக்க மக்கள் மீது காண்டு எல்லாம் கிடையாது. நமக்கு காண்டு இருப்பது அமெரிக்காவின் வெளிநாட்டு பாலிசிகள் மீதும், புஷ் மாதிரி வீட்டோவை தவறாக பயன்படுத்தும் பதர்களின் மீதும் தான்.. :)

தமிழ் பிரியன் said...

///நான் மட்டும் said...

கடைசி வர அவர் அட்ரஸ்ஸ சொல்லவே இல்ல...கொஞ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்..////
வச்சுக்கிட்டா வஞ்சம் பண்றேன்... தெரிஞ்சிருந்தா ஏன் இப்படி பகிரங்க மெயில் எழுதுறேன்... ;)))

ச்சின்னப் பையன் said...

இந்த லெட்டரை போஸ்ட் பண்ணிட்டீங்களா?

பின் லேடன்
No.6.....

அதுக்கப்புறம்தான் எல்லோருக்கும் தெரியுமே!!!!

ராமலக்ஷ்மி said...

புதுகை.அப்துல்லா said...
// மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!//

ரொம்பச் சரி. அப்படியே வழி மொழிகிறேன். நேரம் மட்டுமின்றி பொறுமையும் இருக்கிறவர்கள் [நீளம் அதிகம்:(] முடிந்தால் இப்பதிவைப் படியுங்கள்:
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html

cheena (சீனா) said...

தேன்கூட்டை நீக்கி விட்டு இங்கு வந்தேன். உண்மையான இசுலாமியத் தோழனாக உயர்ந்து நிற்கிறீர்கள். நன்று

தமிழ் பிரியன் said...

///ச்சின்னப் பையன் said...
இந்த லெட்டரை போஸ்ட் பண்ணிட்டீங்களா?
பின் லேடன்
No.6.....
அதுக்கப்புறம்தான் எல்லோருக்கும் தெரியுமே!!!!///

வாங்க ச்சின்னப் பையன்! நாமெல்லாம் லெட்டர் போய் சேருன்னா எழுதுறோம். நம்ம கடமை எழுதுவது... போய் சேருவதும் சேராததும் மடலின் விருப்பம் தான்.. ;))
அப்புறம் அட்ரஸ்...... ஹிஹிஹிஹி அதே தான்.. :)

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

புதுகை.அப்துல்லா said...
// மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!//

ரொம்பச் சரி. அப்படியே வழி மொழிகிறேன். நேரம் மட்டுமின்றி பொறுமையும் இருக்கிறவர்கள் [நீளம் அதிகம்:(] முடிந்தால் இப்பதிவைப் படியுங்கள்:
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html///

நன்றிக்கா! உங்க பதிவையும் படித்தேன். மனித நேயம் வளரும் போது, உலகம் சுபிட்சம் அடையும். அந்நாள் விரைவில் உருவாக பிரார்த்திப்போம்!

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

தேன்கூட்டை நீக்கி விட்டு இங்கு வந்தேன். உண்மையான இசுலாமியத் தோழனாக உயர்ந்து நிற்கிறீர்கள். நன்று///
மிக்க நன்றி சீனா சார்!

பொடியன்-|-SanJai said...

//ஒபாமாவுக்கு ஆதரவாக ஒசாமா என்று ஓட்டு சீட்டிலேயே அடித்து விடுவார்கள். ஏற்கனவே ஒபாமா என்பதற்கு ஒசாமா என்று அடித்து விட்டார்கள்.//

:))

நல்ல பதிவு சகோதரா.. வாழ்த்துக்கள்..

...சம்பந்தமில்லா பின்னூட்டம்...

.... பின்லாடன் கொடூரமானவன் தான். ஆனால் இரட்டைக் கோபுரங்கள் இடிந்ததற்காக பின்லாடனை திட்ட வேண்டாம். அது அமெரிக்கர்களின் சதி.. பின்லாடனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை ....

தமிழ் பிரியன் said...

///பொடியன்-|-SanJai said...
//ஒபாமாவுக்கு ஆதரவாக ஒசாமா என்று ஓட்டு சீட்டிலேயே அடித்து விடுவார்கள். ஏற்கனவே ஒபாமா என்பதற்கு ஒசாமா என்று அடித்து விட்டார்கள்.//
:))
நல்ல பதிவு சகோதரா.. வாழ்த்துக்கள்..
...சம்பந்தமில்லா பின்னூட்டம்...
.... பின்லாடன் கொடூரமானவன் தான். ஆனால் இரட்டைக் கோபுரங்கள் இடிந்ததற்காக பின்லாடனை திட்ட வேண்டாம். அது அமெரிக்கர்களின் சதி.. பின்லாடனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை ....///

மிக்க நன்றி! இரட்டைக் கோபுர தகர்ப்பு நிறைய கேள்விகளை உள்ளடக்கியது... முத்திரை குத்தப்பட்டு விடுவதால் அதைக் கிடப்பில் போட்டாச்சு.... :))

கயல்விழி said...

//நமக்கு என்றைக்குமே அமெரிக்க மக்கள் மீது காண்டு எல்லாம் கிடையாது. நமக்கு காண்டு இருப்பது அமெரிக்காவின் வெளிநாட்டு பாலிசிகள் மீதும், புஷ் மாதிரி வீட்டோவை தவறாக பயன்படுத்தும் பதர்களின் மீதும் தான்.. :)//

அமரிக்க வெளிநாட்டு கொள்கைகள் மீது அமரிக்கர்களுக்கே காண்டு இருக்கிறது. அதனால் தான் நிறவெறியையும் மறந்து ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

நடுவே ஓபாமா ஒரு முன்னாள் இஸ்லாமியர் என்ற பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது

வடகரை வேலன் said...

//மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த மதத்திற்கு எதிரானவர்களே!//

ஒரு சின்னத் திருத்தம் அப்துல்லா.

மனிதகுல விரோதிகள் எந்த மத்தில் இருந்தாலும் அவர்கள் மனிதத்திற்கே எதிரானவர்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails