Sunday, October 12, 2008

மின்சாரத்தைப் பயன்பாட்டைக் குறையுங்கள் - முதல்வர் உருக்கமான வேண்டுகோள்!


சமீபத்திய மின்வெட்டுகள் குறித்து மாநில உயரதிகாரிகளுடன் உரையாற்றிய முதல்வர் அவர்கள், அதற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

“தினமும் சராசரியாக 6 மணி நேரத்துக்கு மேல் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இருந்து வருகின்றது. இந்நிலையில் நிலக்கரியில் இயங்கக் கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநகரில் மட்டும் சுமார் 400 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மக்கள் மின்சாரத்தை மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்”

இது தமிழக முதல்வர் அளித்த பேட்டி அல்ல... பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் முதல்வர் சையது கைம் அலி ஷா அளித்த பேட்டி.... சிந்து மாகாண தலைநகரும், பாகிஸ்தானின் வியாபாரத் தலைநகருமான கராச்சியில் தொடர்ச்சியான மின் வெட்டுக்களால் பல மாதமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து கராச்சி மின் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின் இதை அவர் தெரிவித்தார்.

http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Karachi/24-Sep-2008/Loadshedding-continues


http://www.dawn.com/2008/09/23/local14.htm

http://www.thenews.com.pk/daily_detail.asp?id=137578

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தான் செய்திகளைக் கொடுக்கிறியே? இதெல்லாம் நியாயமா இருக்கா என்று கேட்காதீர்கள். நான் பிறக்கும் போதே தி.மு.க. காரன். அதிமுக கோட்டையா எங்க தொகுதி இருக்கும் போதே, தி.மு.கவிற்கு நேரடியா பிரச்சாரம் செய்பவர்கள்.

இப்ப மாநிலத்தில் இருக்கும் மின் வெட்டுக்கு என்ன காரணம் சொல்வது என்று தமிழினத் தலைவர் திணருவதால் அவருக்கு எடுத்துக் கொடுக்கவே இந்த பதிவு. கேரளா, கர்நாடகா, ஒரிசா எல்லாம் சொன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க.

தமிழ்நாட்டில் மட்டுமா மின் தட்டுப்பாடு இருக்கு... பாகிஸ்தானில் கூடத்தான் மின் தட்டுப்பாடு நிலவுது. சிந்து மாகாணத்தில் என்ன கழகத்தின் ஆட்சியா நடக்குது நடக்குது என அடுத்து கேள்வி எழுப்பலாம்.

சமீபத்தில் 7000 + கோடி செலவில் புதிய நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாம்.. என்ன புரிந்து என்ன உணர்வோ தெரியலை... நிலக்கரி கிடைக்காமல் நெய்வேலியிலேயே அப்பப்ப உற்பத்தி பாதிக்கப்படுதுன்னு செய்திகள் வருது..இதுல புதுசா நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தியாம்.... உங்களுக்கு ஓவரா இல்லியா?

மரபு சார்ந்த இது போன்றவைகளை விட்டுவிட்டு வேறு வழியை யோசிங்கய்யா...

டிஸ்கி : வீட்டில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டாம்... மகனுக்கு கொசு கடித்து காலெல்லாம் புண்ணாகிப் போய் விட்டது... செம கோபத்தில் இருக்கேன்...

17 comments:

தமிழ் பிரியன் said...

மக்களே! இதை நகைச்சுவை/நையாண்டியில் தான் வகைப்படுத்தி இருக்கேன்... சீரியஸா எடுத்துக்காதீங்க

ஆயில்யன் said...

கொஞ்சம் கஷ்டமான செய்திதான்!

எப்படியான தீர்வுகள் அரசின் கைவசம் இருக்குன்ன்னு தெரியல :(

எதிர்கால திட்டங்கள் அப்படின்னு எதுவும் அரசின் கவனத்தில் இருக்கான்னு தெரியல - மின்சாரம் என்றில்லை மற்ற விசயங்களும் கூட குடிநீர்,உணவுபொருட்கள்

ச்சின்னப் பையன் said...

இதே மாதிரி இன்னும் எந்தெந்த நாடுகளில் சொல்லியிருக்கிறார்கள்னு பாத்து - தமிழ் நாடு எவ்வளவோ பரவாயில்லைன்னு ஒரு சாதனை புத்தகம் அடிச்சிடவேண்டியதுதான்.....

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மின் வெட்டால தமிழகமே இருண்ட கண்டமா இருக்குன்னு நேத்து இரவு தங்கமணி சொன்னாங்க...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

என் மொவளுக்கு கொசுகடி தாங்கலைன்னு ஒரே கம்ளைண்ட்...

போன்ல கதை சொல்லி தூங்க செய்ய வேண்டியதாப்போச்சி...

கரண்ட் பில்லோட சேர்த்து போன் பில்லும் :((

புகழன் said...

அதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டாச்சுல இனிமே நம்மோட எல்லா கவலையும் தீர்ந்துடும்.

மின் பற்றாக்குறை இனி வரவே வராது.

:( :( :( :-(

ச.சங்கர் said...

///டிஸ்கி : வீட்டில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டாம்... மகனுக்கு கொசு கடித்து காலெல்லாம் புண்ணாகிப் போய் விட்டது... செம கோபத்தில் இருக்கேன்.../////

///மக்களே! இதை நகைச்சுவை/நையாண்டியில் தான் வகைப்படுத்தி இருக்கேன்... சீரியஸா எடுத்துக்காதீங்க///


குழந்தையை கொசு கடித்து காலெல்லாம் புண்ணானதைக் கூட சீரியசா எடுத்துக்காத நீங்க "நெசமாவே ரொம்ப நல்லவரு-எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க "

கட்டபொம்மன் said...

"தமிழ்நாட்டில் மட்டுமா மின் தட்டுப்பாடு இருக்கு... பாகிஸ்தானில் கூடத்தான் மின் தட்டுப்பாடு நிலவுது."

நல்ல வேளை சோமலியால கூடத்தான் சோத்து சிங்கியடிக்கிறான். இங்கயும் அடிங்கன்னு சொல்லாம விட்டிங்களே, சந்தோஷம் மகிழ்ச்சி

ராமலக்ஷ்மி said...

நகைச்சுவை நையாண்டி என வகைப் படுத்தி மனசை ஆற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது:(?.

தமிழ் பிரியன் said...

/// ஆயில்யன் said...
/
கொஞ்சம் கஷ்டமான செய்திதான்!

எப்படியான தீர்வுகள் அரசின் கைவசம் இருக்குன்ன்னு தெரியல :(

எதிர்கால திட்டங்கள் அப்படின்னு எதுவும் அரசின் கவனத்தில் இருக்கான்னு தெரியல - மின்சாரம் என்றில்லை மற்ற விசயங்களும் கூட குடிநீர்,உணவுபொருட்கள்///

ஆமாண்ணே! நீண்ட கால திட்டங்கள் இல்லாதது பெரிய குறை தான்.. :(

தமிழ் பிரியன் said...

///ச்சின்னப் பையன் said...

இதே மாதிரி இன்னும் எந்தெந்த நாடுகளில் சொல்லியிருக்கிறார்கள்னு பாத்து - தமிழ் நாடு எவ்வளவோ பரவாயில்லைன்னு ஒரு சாதனை புத்தகம் அடிச்சிடவேண்டியதுதான்.....////
நல்ல யோசனையா இருக்கு... :)))

தமிழ் பிரியன் said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மின் வெட்டால தமிழகமே இருண்ட கண்டமா இருக்குன்னு நேத்து இரவு தங்கமணி சொன்னாங்க...///

ஆமா சுடர்.. நமக்கு இங்க கஷ்டமா இருக்கு.. :(

தமிழ் பிரியன் said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

என் மொவளுக்கு கொசுகடி தாங்கலைன்னு ஒரே கம்ளைண்ட்...

போன்ல கதை சொல்லி தூங்க செய்ய வேண்டியதாப்போச்சி...

கரண்ட் பில்லோட சேர்த்து போன் பில்லும் :((///

இங்கயும் அதே கதை தான் நடக்குதுப்பா.. :)

தமிழ் பிரியன் said...

///புகழன் said...

அதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டாச்சுல இனிமே நம்மோட எல்லா கவலையும் தீர்ந்துடும்.

மின் பற்றாக்குறை இனி வரவே வராது.

:( :( :( :-(///

அதுசரி... நம்மளை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கு சிரிப்பா இருக்கா?... ;)

தமிழ் பிரியன் said...

///ச.சங்கர் said...

///டிஸ்கி : வீட்டில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டாம்... மகனுக்கு கொசு கடித்து காலெல்லாம் புண்ணாகிப் போய் விட்டது... செம கோபத்தில் இருக்கேன்.../////

///மக்களே! இதை நகைச்சுவை/நையாண்டியில் தான் வகைப்படுத்தி இருக்கேன்... சீரியஸா எடுத்துக்காதீங்க///


குழந்தையை கொசு கடித்து காலெல்லாம் புண்ணானதைக் கூட சீரியசா எடுத்துக்காத நீங்க "நெசமாவே ரொம்ப நல்லவரு-எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க "///

என்ன செய்ய சங்கர்! இப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்குதே... :(

தமிழ் பிரியன் said...

///கட்டபொம்மன் said...

"தமிழ்நாட்டில் மட்டுமா மின் தட்டுப்பாடு இருக்கு... பாகிஸ்தானில் கூடத்தான் மின் தட்டுப்பாடு நிலவுது."

நல்ல வேளை சோமலியால கூடத்தான் சோத்து சிங்கியடிக்கிறான். இங்கயும் அடிங்கன்னு சொல்லாம விட்டிங்களே, சந்தோஷம் மகிழ்ச்சி///

அந்த நிலைமை வராமல் இருக்க பிரார்த்திப்போம் கட்டபொம்மன்!

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

நகைச்சுவை நையாண்டி என வகைப் படுத்தி மனசை ஆற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது:(?.////
ஆமா அக்கா! வேற என்ன செய்ய?.. :(

LinkWithin

Related Posts with Thumbnails