.
பள்ளிப் பருவங்களில் நூலகத்திற்கு செல்வது என்பது அலாதியான இன்பம் தரும் விடயம்... பள்ளி விட்டு வரும் போது நூலகத்தில் நுழைந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டு இருந்து விட்டு வருவது என் வழக்கம். நூல்களை, செய்தித்தாள்களை வீட்டில் வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு நூலகங்கள் ஒரு சொர்க்க பூமி. செய்திக்கு வருவதற்கு முன் ஒரு சிறு பீடிகை.... :)
சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது நூலங்கங்களைப் பற்றி பேச்சு வந்தது. உலகில் எழுச்சிகள், புரட்சிகள், அடக்குமுறைகள் என எது நிகழ்ந்தாலும், பழைய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது நூலகங்களே... இதற்கு சமீபத்திய உதாரணம் யாழ் நூலக எரிப்பு.. :(
எரிக்கப்பட்ட யாழ் நூலகம்
ஏன் நூலகங்கள் எரிக்கப்பட வேண்டும்? புரட்சிகளாகட்டும், எழுச்சிகளாகட்டும், அடக்குமுறைகளாகட்டும் அவைகள் ஒரு புதிய சமூக வழிமுறைகளுக்கு வழி கோலுகின்றன. அல்லது ஒரு விதமான அடிமை முறையில் இருந்து அடுத்த தலைமுறை அடிமை முறைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. அந்த எழுச்சி, புரட்சிக்கு வித்திடுபவர்கள் தாங்கள் கொண்டு வரும் புதிய முறையே வரலாறாக, நடைமுறையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றனர். எனவே பழைய அடையாளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதற்கு தடையாக இருப்பவைகள் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நூலகங்கள், கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வழிபாட்டுத்தலங்கள், சிற்பங்கள் போன்றவை. பழக்கவழக்கங்கள் சமூக மாற்றங்களால் விரைவில் மாற்றப்பட்டு விடுகின்றன. ஆனால் நூலகங்களும், கலாச்சார சின்னங்களும் அடுத்த கட்ட ஆட்சியாளர்களால் முற்றிலுமாக துடைத்தெறியப் படுகின்றன. இந்த புரட்சி என்ற மாயையிலும், பழைய கழிதல் என்ற அசட்டுத்தனமான போதையிலும் நூல்கள் தீக்கிறையாக்கப் படுகின்றன. அதே போல் வழிப்பாட்டுத்தலங்களும், சிற்பங்களும், ஓவியங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.... பீடிகை போதும்.. இனி மேட்டருக்கு வருகிறேன்.
சமீபத்தில் நட்பு பதிவர்கள் சிலர் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று பதிவிட்டனர். மகிழ்ச்சியாக இருந்தது. சரி நாமும் ஏதாச்சும் செய்யனும் என்ற யோசனை மண்டையில் புழுவாகக் கடித்துக் கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் இந்த ஐடியா வந்தது.
பள்ளி காலங்களில் நூலகங்களில் படித்துக் கொண்டு இருப்போம்...அப்போது தான்கஷ்டப்பட்டு அடுத்தவர் படித்து முடித்து விட்டு கொடுத்த சிறுவர் மலரையோ, ஆனந்த விகடனையோ படிக்க ஆரம்பித்து இருப்பேன்... சட்ரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். அப்போது வரும் எரிச்சல் போல் வேறு எப்போதும் வந்ததாக நினைவு இல்லை. ஒரு நூலை ஆர்வத்துடன் படித்துக் கொண்டு இருக்கும் போது அதை தடை செய்யும் எந்த விடயமும் கொடுமையானது தான்.
எங்கள் ஊரில் நூலகம் இரண்டு தளங்களைக் கொண்டது. இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட ரேக்குகள் இருக்கும். எப்போதும் சுமார் 25 - 30 பேர் ஆர்வத்துடன் படித்துக் கொண்டு இருப்பார்கள். வயதானவர்கள் முதல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரை எப்போதும் நிறைந்து காணப்படும்.
இந்த நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது அவர்களின் முகங்களில் காணப்படும் ஏமாற்றம் கொடுமையான ஒன்று. இதைத் தடுக்க என்ன செய்வது? (அதிக நூல்களையும், சிறந்த வசதிகளையும் கொண்ட நூலகங்களைக் கொண்ட நூலகத்துறையின் செயல்பாடு கேவலமான் ஒன்று என்பதை சொல்லிக் கொள்கிறேன்.. இதைப் பற்றி விரிவாகவே பதிவு எழுதலாம்)
தற்போது தமிழகத்தில் உள்ள மின்வெட்டு மிகவும் மோசமான நிலையை எட்டி விட்டது. வாய்ச்சவடால் அரசுகளும் அதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
இதைத் தடுக்க என்ன செய்யலாம் பாஸ்? ஒவ்வொரு ஊரிலும், அல்லது பகுதியிலும் ஒரு நூலகமே பெரும்பாலும் இருக்கும். சில பெரிய ஊர்களில் இரண்டு இருக்கலாம். நாம் இருக்கும் பகுதியில் அல்லது அல்லது வழக்கமாக செல்லும் நூலகங்களை மட்டும் கணக்கில் கொள்ளலாம். அப்படிப்பட்ட நூலகங்களுக்கு நண்பர்களை அனைவரும் இணைந்தோ, அல்லது தனியாகவோ மின்கலத்தில் இயங்கக் கூடிய மின்விளக்குகளுக்கு வசதி செய்து கொடுக்கலாம். ஜெனரேட்டர் போன்றவைகளுக்கு டீசல் செலவு இருப்பதால் அது சாத்தியமில்லை.
பேட்டரியில் இயங்கக் கூடியதே சாத்தியமான ஒன்று. இதற்கு தனியாக எரிபொருள் தேவைஇல்லை. மின்சாரம் இருக்கும் வேலைகளிலேயே அதற்கான மின்சாரத்தை மின்கலம்(பேட்டரி ) சேமித்துக் கொள்ளும்.
தேவையானவை
மின்கலம் (பேட்டரி) - 1
மின்மாற்றி (இன்வெர்ட்டர்) - 1
டியூப் லைட் செட் - 3 அல்லது நான்கு]
இவையனைத்தும் சேர்ந்து 12 முதல் 16 ஆயிரம் வரலாம். (தகவலுக்கு நன்றி ஜோசப் சார்...) நான்கு நண்பர்கள் இணைந்தால் சுலபமாக செய்து விடலாம். இதை நூலகங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நிறைய பேரின் அறிவுப்பசிக்கு தீனி போடலாம். இதை அரசு ஏதாவது செய்யும் என்று நினைப்பது கானல் நீராகத்தான் இருக்கும்....
எனவே எவ்வளவோ செஞ்சாச்சு.... இதைச் செய்ய மாட்டமா?
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. 396
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 398
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். 399
38 comments:
நல்ல ஐடியாதான் பாஸ் :)
இது போன்ற விசயங்களில்
நானும் மீ த பர்ஸ்ட்டு பாஸ் :)
அண்ணே, நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் நல்ல யோசனை.
மூணு ட்யூப் லைட், 2 ஃபேன் ஓடும் அளவுக்கு மின்சாரம் தரக்கூடிய இன்வெர்ட்டரின் விலை முன்பு 14 ஆயிரம். இப்போது கடுமையான மின் தடை வந்துவிட்டதால் இதன் தேவை அதிகமாகி விலையும் 18 முதல் 20 ஆயிரமாகிவிட்டது.
நல்ல யோசனை தமிழ்.
ஆனா அந்த பேட்டரி சார்ஜ் ஆகும் வரை கரண்ட் இருக்குமா?
இங்க நிலைமை ரெம்பக் கொடுமை தமிழ்.
இன்று முதல் காலை 6லிருந்து 10 அனி வரையும் இரவு 6லிருந்து 10 மணி வரையும் மேலும் இரவு 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் எங்களுக்கு மின் தடை.
தமிழ்நாடு ஒளிர்கிறது.
தமிழ்,
தமிழ்நாட்டின் தற்போதைய மனநிலையை இந்தக் கவிதை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
-- முகுந்த் நாகராஜ்
அடுத்தவர் படித்து முடித்து விட்டு கொடுத்த சிறுவர் மலரையோ, ஆனந்த விகடனையோ // அப்படியே என் வாழ்விலன் பள்ளிக்காலங்களில் நிகழ்ந்தவை..
wonderful Idea. Thanks
நல்ல யோசனை !!
நல்ல ஐடியாதான் அண்ணே!
/தமிழ்நாடு ஒளிர்கிறது./
:))
நல்ல பதிவு நண்பரே ...
வாழ்த்துக்களுடன்
விஷ்ணு
நல்ல யோசனை !!
பள்ளி விட்டு வரும் போது நூலகத்தில் நுழைந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டு இருந்து விட்டு வருவது என் வழக்கம்
//
அண்ணே அப்பவே எம்புட்டு அறிவா இருந்துருக்கீய :)))
உருப்படியான யோசனை.....எவ்வ்ளோ பண்றோம்????இதைப் பண்ண மாட்டோமா?
அன்புடன் அருணா
\\
சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது நூலங்கங்களைப் பற்றி பேச்சு வந்தது. உலகில் எழுச்சிகள், புரட்சிகள், அடக்குமுறைகள் என எது நிகழ்ந்தாலும், பழைய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது நூலகங்களே... இதற்கு சமீபத்திய உதாரணம் யாழ் நூலக எரிப்பு..
\\
இது அன்னைக்கு பேசிக்கிட்ட விசயம்னு நினைக்கிறேன்...
நல்ல ஐடியாதான் அண்ணே...
உண்மையிலேயே இது ஒரு உருப்படியான யோசனைதான் - செயல் படுத்தலாம் - தவறில்லை
///ஆயில்யன் said...
நல்ல ஐடியாதான் பாஸ் :)////
நன்றி அண்ணே!
///ஆயில்யன் said...
இது போன்ற விசயங்களில்
நானும் மீ த பர்ஸ்ட்டு பாஸ் :)///
எல்லோரும் பர்ஸ்டாவே இருப்போம்... வாங்க
///ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் நல்ல யோசனை.
மூணு ட்யூப் லைட், 2 ஃபேன் ஓடும் அளவுக்கு மின்சாரம் தரக்கூடிய இன்வெர்ட்டரின் விலை முன்பு 14 ஆயிரம். இப்போது கடுமையான மின் தடை வந்துவிட்டதால் இதன் தேவை அதிகமாகி விலையும் 18 முதல் 20 ஆயிரமாகிவிட்டது.///
ஜோசப் சார், தகவல்களுக்கு நன்றி! நான் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கேன் போல
நல்ல ஐடியா. முகுந்த் மின்வெட்டு கவிதை சூப்பர்
///வடகரை வேலன் said...
நல்ல யோசனை தமிழ்.
ஆனா அந்த பேட்டரி சார்ஜ் ஆகும் வரை கரண்ட் இருக்குமா?
இங்க நிலைமை ரெம்பக் கொடுமை தமிழ்.
இன்று முதல் காலை 6லிருந்து 10 அனி வரையும் இரவு 6லிருந்து 10 மணி வரையும் மேலும் இரவு 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் எங்களுக்கு மின் தடை.
தமிழ்நாடு ஒளிர்கிறது.////
தமிழகத்தின் வருங்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது வேலன் சார்!.. :(
///வடகரை வேலன் said...
தமிழ்,
தமிழ்நாட்டின் தற்போதைய மனநிலையை இந்தக் கவிதை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
-- முகுந்த் நாகராஜ்///
நடைமுறையை உணர்த்தும் சலிப்புக் கவிதை...
///தாமிரா said...
அடுத்தவர் படித்து முடித்து விட்டு கொடுத்த சிறுவர் மலரையோ, ஆனந்த விகடனையோ // அப்படியே என் வாழ்விலன் பள்ளிக்காலங்களில் நிகழ்ந்தவை..///
நிறைய பேருக்கு இந்த நினைவுக்ள் இருக்கும் தாமிரா! நன்றி!
///தமிழ்நெஞ்சம் said...
wonderful Idea. Thanks///
நன்றி தமிழ்நெஞ்சம் !
///ஜீவன் said...
நல்ல யோசனை !!///
நன்றி ஜீவன்!
///நிஜமா நல்லவன் said...
நல்ல ஐடியாதான் அண்ணே!///
நன்றி அண்ணே!
///நிஜமா நல்லவன் said...
/தமிழ்நாடு ஒளிர்கிறது./
:))///
தமிழ்நாடு ஒ’லி’ர்கிறது
/// Vishnu... said...
நல்ல பதிவு நண்பரே ...
வாழ்த்துக்களுடன்
விஷ்ணு///
நன்றி விஷ்ணு
///ச்சின்னப் பையன் said...
நல்ல யோசனை !!////
நன்றி பெருசு!
///புதுகை.அப்துல்லா said...
பள்ளி விட்டு வரும் போது நூலகத்தில் நுழைந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டு இருந்து விட்டு வருவது என் வழக்கம்
//
அண்ணே அப்பவே எம்புட்டு அறிவா இருந்துருக்கீய :)))///
ஹிஹிஹி அப்பவே வாரமலரில் வரும் கிசுகிசுக்களை எல்லாம் விரும்பி படிப்போம்ன்னா பாத்துக்குங்க.. ;))
///Aruna said...
உருப்படியான யோசனை.....எவ்வ்ளோ பண்றோம்????இதைப் பண்ண மாட்டோமா?
அன்புடன் அருணா///
எவ்வ்ளோ பண்றோம்.. இதையும் பண்ணிடுவோம்.
///தமிழன்... said...
\\
சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது நூலங்கங்களைப் பற்றி பேச்சு வந்தது. உலகில் எழுச்சிகள், புரட்சிகள், அடக்குமுறைகள் என எது நிகழ்ந்தாலும், பழைய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது நூலகங்களே... இதற்கு சமீபத்திய உதாரணம் யாழ் நூலக எரிப்பு..
\\
இது அன்னைக்கு பேசிக்கிட்ட விசயம்னு நினைக்கிறேன்...///
ஆமா தல... அதே தான்!
///தமிழன்... said...
நல்ல ஐடியாதான் அண்ணே...///
நன்றிங்ண்ணா.. ;)
///cheena (சீனா) said...
உண்மையிலேயே இது ஒரு உருப்படியான யோசனைதான் - செயல் படுத்தலாம் - தவறில்லை////
நன்றி சீனா சார்!
///முரளிகண்ணன் said...
நல்ல ஐடியா. முகுந்த் மின்வெட்டு கவிதை சூப்பர்///
வருகைக்கு நன்றி முரளி கண்ணன் அண்ணே!
நல்ல யோசனை தமிழ் பிரியன். புத்தகங்களின் அருமை பெருமையும் அதன் வாசிப்பனுபவத்தில் பெருகிற பயனையும் புத்தக விரும்பிகளாலே நன்கு உணர முடியும். நூலகங்கள் அழிக்கப் படுவது எத்தனை வேதனைக்குரிய விஷயம்.
///ராமலக்ஷ்மி said...
நல்ல யோசனை தமிழ் பிரியன். புத்தகங்களின் அருமை பெருமையும் அதன் வாசிப்பனுபவத்தில் பெருகிற பயனையும் புத்தக விரும்பிகளாலே நன்கு உணர முடியும். நூலகங்கள் அழிக்கப் படுவது எத்தனை வேதனைக்குரிய விஷயம்.////
நன்றி அக்கா! நூலகங்கள் மூடப்படுவதையே நம்மால் தாங்க இயல்வதில்லை.. நூல்கள் அளிக்கப்பட்டால்.. இதைவிட கொடுமை என்ன இருக்க இயலும்?.. :(
Post a Comment