Wednesday, October 22, 2008

அரேபியா - என் வீட்டுத் தோட்டத்தின் காய்கனிகளைக் கேட்டுப் பாருங்கள்!

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் சின்ன வயசில் இருந்தே ஒரு விவசாய விஞ்ஞானி. எங்கள் வீட்டு சந்தில் நிலக்கடலை செடியை நட்டு நாள் முழுவதும் தண்ணீர் ஊற்றி, நிலக்கடலை வந்து விட்டதா? என்று பார்த்துக் கொண்டிருந்தவன். இரவு தான் நிலக்கடலை வரும் என்ற என் நண்பனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மாலையில் தண்ணீர் தளும்ப, தளும்ப ஊற்றி விட்டு காலையில் வந்து பார்த்த போது. நிலக்கடலையையும் காணோம், செடியும் செத்து போய் இருந்தது.

அப்போதே முடிவு எடுத்தேன்... எப்படியாவது பெரிய விவசாயியாக மாற வேண்டும் என்று... அந்த ஆசையில் இரண்டு ஏக்கர் நிலமெல்லாம் வாங்கி கையை சுட்டுக் கொண்டது வேறு கதை...

இனி மேட்டருக்கு போகலாம்.. வாங்க

நாங்க இருக்கக் கூடிய நகரம் அரேபிய தீபகற்பத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 அடி உயரத்தில் உள்ளது. இயற்கையாகவே மலைப் பிரதேசமாக அமைந்து விட்டதால் வெயில் குறைவு. இதனால் காய்கறிகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கும். நாம் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களும் அங்காங்கே தங்களுக்கு என சில இடங்களை ஒதுக்கி காய்கறிகளை நட்டு பரமாரிக்கின்றனர். விளைச்சலின் நல்ல காய்கறிகள் கிடைக்கும்... இனி ஓவர் டூ படங்கள்...





முதலில் இங்க இருக்கும் சில Landscaping படங்கள்..




ப்ளம்ஸ் செடிகள்.. கொஞ்சம் காயாக இருக்கும் போது புளிப்பாக இருக்கும். சிவந்து பழுத்து விட்டால் நன்றாக சுவையாக இருக்கும்.



அத்திப் பழ மரங்கள்.. இதில் ஆப்பிள் போல, ஆனால் கடித்து தின்ன கடினமான ஒரு காய் கிடைக்கிறது. பெயர் தெரியவில்லை. கடித்து சுவைத்து துப்பி விடலாம்.




திராட்சைத் தோட்டம்...



திராட்சை இங்க செமயா வரும். குளிர்காலத்தில் நான் இங்க வந்த போது மாதுளை, திராட்சை செடிகள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வெறும் குச்சியாக காட்சியளித்தன. பிப்ரவரிக்கு மேல் குளிர்காலம் முடிந்ததும் எடுத்தன விசுவரூபம்.... இந்த வருடம் செம விளைச்சலாம். (திராட்சை ஆப் சீசனில் எடுத்த படம்)




மாதுளை... விளைச்சல் அபரிமிதமாக இருந்தது. எடுத்தது, தின்றது போக மீதி பழுத்து கீழே விழத் தொடங்கி விட்டது. படத்தில் கீழே கிடப்பவை அனைத்தும் நன்றாக பெருத்து, கீழே விழுந்து வீணாகிப் போனவை. எதுவுமே அதிகமானால் இந்த நிலை தான் போல.. :(



தட்டாங்காய்... முற்றுவதற்கு முன் ஒடித்து, தேங்காய்ப்பூ, பருப்பு போட்டு சமைத்தால் செம டேஸ்ட்டா இருக்கும்ங்க





இது ஒருவகை கீரை. இங்க பாலக்ன்னு பொதுவாக சொல்றாங்க... தமிழ் நாட்டில் இந்த கீரையை சாப்பிட்டத்தில்லை. சுவையாக இருக்கும். அதோட நல்ல சத்துள்ளதாம்.






இது புரோக்கொலி என்ற ஒருவகைச் செடி. நல்ல சத்துள்ளதாம். இங்க கிலோ 15 ரியாலுக்கு விக்கிறாங்க... (சுமார் 4 டாலர்). எனக்கு இது பிடிக்கலை. பிலிப்பினோக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். துளசி டீச்சர் கூட ஒரு பதிவு போட்டாங்க. (செடி நம்ம ஊட்டு செடிதான்... ப்ரோக்கோலியின் ஒரு வகையாம். ஒரிஜினலான்னு தெரியலை. அதில் பூ இல்லாததால் உங்களுக்கு புரிய வேண்டி இணையத்தில் சுட்டு போட்ருக்கேன்)

கேப்பக் கா செடி.. மலையாளிகளின் பேவரைட் அயிட்டம்.. நமக்கு மரவள்ளிக் கிழங்கை விட அந்த சின்னதா இருக்குமே.. அதாங்க சீனிக்கிழங்கு அதான் பிடிக்கும்.
இதுவும் ஒரு வகைக் கீரை தான்., கீரைக்கு பின்னால் வெட்கத்தோட இருப்பது யாருன்னு தெரியுதா?... நம்ம வாழை தான்.
ஒளிஞ்சுக்கிட்டு இருந்த முட்டை கோஸை பிரிச்சு வச்சு இருக்கேன். ஊருல முட்டைக் கோஸை பார்த்தாலே வெறுப்பா இருக்கும். இப்ப ஹிஹிஹி.. கட்டு கட்டுன்னு கட்டுவேன்.








தக்காளி, பாகற்காய்... இன்ன பிற எக்ஸ்ட்ராக்கள்.

37 comments:

Thamiz Priyan said...

ஏதாவது பதிவு போடலைன்னா கை காலெல்லாம் நடுங்குது... அதான் ப்டங்களா பிடிச்சு போட்டுட்டேன்.. ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளாக்கோபோபியா வந்துருச்சா? :)

துளசி கோபால் said...

புதுக்கெமெரா வாங்கியதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

காய்கள் செடிகள் எல்லாம் சூப்பர். ப்ளம் காய்களை மாம்பிஞ்சா நினைச்சு ஊறுகாய் போட்டுக்கலாம். நாள் பட நிக்காது. கூடிவந்தால் ஒரு வாரம்.

திராட்சை நம்ம வீட்டிலும் இருக்கு.

அடிச்சு ஆடுங்க!!!!

Anonymous said...

100th post. Vaazhththukkal

Anonymous said...

Neram illaathathaala appurama purumaiyaa paarththu comments poduren. ippo wish mattum pannikkiren.

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா படங்கள்!

:)

ஆயில்யன் said...

// என் வீட்டுத் தோட்டத்தின் காய்கனிகளைக் கேட்டுப் பாருங்கள்!"//

எங்க மதுபாலா படத்தையே காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட ஆமாம் ல.. 100 வாழ்த்துக்கள் ...:)

துளசி கோபால் said...

சதத்தை விட்டுட்டேனே.....

இனிய வாழ்த்து(க்)கள்.

கடைசியில் யாரு? மகனா?

க்யூட்டா இருக்கார்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நீங்க பெரிய வில்லேஜ் விஞ்ஞானி பாஸூ...

நாணல் said...

முதலில் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. :))

நாணல் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...
இப்பவும் கடலை செடி வெச்சி தண்ணீர் ஊத்துவீங்களா? ;)

விஜய் ஆனந்த் said...

100 -க்கு வாழ்த்துக்கள்!!!

Unknown said...

100-க்கு வாழ்த்துகள் அண்ணா..!! :)))பதிவும் பச்சை பசேல்ன்னு நல்லா இருக்கு..!! :)))

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்!

படங்களும் விளக்கங்களும் நல்லாருக்கு.

//படத்தில் கீழே கிடப்பவை அனைத்தும் நன்றாக பெருத்து, கீழே விழுந்து வீணாகிப் போனவை. எதுவுமே அதிகமானால் இந்த நிலை தான் போல.. :(//

அதுவும் சரிதான். இங்க சாமன்ய மக்களுக்கு மாதுளை எல்லாம் நிஜமாவே "எட்டாக் கனி"தான்:(!

வால்பையன் said...

அரேபியாவில் இருந்து கொண்டு ஒரு பேரிச்சம்பழத்தை கூட கண்ணில் காட்டவில்லை என்பதால் கடும் கண்டனம்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே அசத்திட்டீங்க...

அருமையா இருக்கு....

உங்களுக்கு மட்டும் எப்படியண்ணே நேரம் கிடைக்குது? போட்டோ எடுக்க?
பதிவிட? ச்சாட் பண்ண? என்னை மாதிரி மொக்கசாமிக்கு கமெண்ட் போட? ஆக மொத்தம் நீங்க ஒரு பெரிய ஆளுதான் போங்க! :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//தமிழ் பிரியன் said...
ஏதாவது பதிவு போடலைன்னா கை காலெல்லாம் நடுங்குது... அதான் ப்டங்களா பிடிச்சு போட்டுட்டேன்.. //

அய்யோ
அய்யைய்யோ!

என்க்கும் அறிகுறி தெரியுது?

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு படங்கள்!

சந்தனமுல்லை said...

ஆச்சரியமா இருக்கு..அரேபியா!

Anonymous said...

நல்லா இருக்கு

AYAPPADIYAN

சின்னப் பையன் said...

நல்லாருக்கு படங்கள்!

Anonymous said...

பட்மெல்லாம் சூப்பருங்கோவ்.

Anonymous said...

நீங்களே வீட்டுல இவ்வளோ அருமையா விவசாயம் பண்ணறீங்க. வாழ்த்துக்கள். பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கறீங்களா, இயற்கை உரம் போடறீங்களா. இது மாதிரி கூடுதல் விபரம் தாங்க

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்,

முதலில் இந்த ஆண்டின் நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள். கையில் புகைப்படக் கருவி இருந்தால் இம்மாதிரி அருமையான படங்கள் எல்லாம் வரும். கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அப்துர் ரகுமானுக்கு நல்லாசிகளும் நல்வாழ்த்துகளும்.

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
ப்ளாக்கோபோபியா வந்துருச்சா? :)///
ஆமாம் அக்கா! அப்படித்தான் போல இருக்கு.. ;))

Thamiz Priyan said...

//துளசி கோபால் said...
புதுக்கெமெரா வாங்கியதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
காய்கள் செடிகள் எல்லாம் சூப்பர். ப்ளம் காய்களை மாம்பிஞ்சா நினைச்சு ஊறுகாய் போட்டுக்கலாம். நாள் பட நிக்காது. கூடிவந்தால் ஒரு வாரம்.
திராட்சை நம்ம வீட்டிலும் இருக்கு.
அடிச்சு ஆடுங்க!!!!///
டீச்சர், இன்னும் கேமரா வாங்கலை.. இது எல்லாம் செல் போனில் பிடித்தது தான்.. :)
நன்றி டீச்சர்!

Thamiz Priyan said...

///மது... said...

100th post. Vaazhththukkal///
இது 2008 ஆம் ஆண்டின் 100 வது பதிவும்மா.. வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா!

Thamiz Priyan said...

///மது... said...

Neram illaathathaala appurama purumaiyaa paarththu comments poduren. ippo wish mattum pannikkiren.///
ஓகேம்மா! .. :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா படங்கள்!

:)///
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

// என் வீட்டுத் தோட்டத்தின் காய்கனிகளைக் கேட்டுப் பாருங்கள்!"//

எங்க மதுபாலா படத்தையே காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :((///
அண்ணே! எப்பவுமே இதே நினைப்பு தானா? அப்பப்ப வேலையும் கொஞ்சம் பாருங்கண்ணே.. ;))

Thamiz Priyan said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட ஆமாம் ல.. 100 வாழ்த்துக்கள் ...:)///
நன்றி அக்கா!

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...
சதத்தை விட்டுட்டேனே.....
இனிய வாழ்த்து(க்)கள்.
கடைசியில் யாரு? மகனா?
க்யூட்டா இருக்கார்./////
நன்றி டீச்சர்! மகனே தான்... என்னை மாதிரி கியூட்டா இருக்கான்னு சொல்லுங்க.. :))

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

நீங்க பெரிய வில்லேஜ் விஞ்ஞானி பாஸூ...///
அதான் முன்னாடியே சொல்லிட்டேனே.. :))))

Thamiz Priyan said...

///நாணல் said...

முதலில் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. :))///
நன்றி நாணல்!

Thamiz Priyan said...

/// நாணல் said...
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...
இப்பவும் கடலை செடி வெச்சி தண்ணீர் ஊத்துவீங்களா? ;)///
இப்ப அறிவு வந்துடுச்சு... ஆனா அப்ப மகிழ்ச்சி இருந்தது நாணல்! அது ஒரு கனாக் காலம்!

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...

100 -க்கு வாழ்த்துக்கள்!!!///
நன்றி விஜய்!