Sunday, October 19, 2008

oru pathivarukku varan paarkkum padalam மற்றும் கணிணி முகப்பு தொடர் விளையாட்டுநண்பர் தமிழன் வித்தியாசமான டேக்குக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நமது கணிணியில் இருக்கும் டெஸ்க் டாப் ஸ்கீரினை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து காட்டனுமாம். என்னய்யா இது கொடுமயா இருக்கு.... சரி நானும் போட்டுட்டேன். இதுதான் என்னோட ஸ்கிரீன். எந்த விதமான போர்ஜரியும் பண்ணாம அப்படியே எடுத்துட்டேன்.

பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.

ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்

ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் அடையாளங்கள் எல்லாம் என் ஸ்கிரினுக்கும் இருக்கும். தேவையில்லாத எல்லாமும் கிடைக்கும். அப்பப்ப சுத்தப்படுத்துவேன். அடுத்த வாரமே திரும்ப குப்பை குடவுனா மாறி விடும். இப்ப குப்பை கொடவுனா இன்னும் மாறதப்ப எடுத்தது. இதுவே இப்படின்னா? குப்பையா இருக்கும் போது??? ;))

அடுத்து நான் அழைப்பு விடுப்பது
1. சிங்கை அண்ணன் நிஜமா நல்லவன்
2. பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி
3. பிரியமுள்ள தம்பி சுடர்
4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு பதிவருக்கு வரன் தேடும் படலம்

காட்சி 1

“சுந்தர்! இது அதாண்டா அந்த பொண்ணோட போட்டோ! நல்ல படிப்பு படிச்சு இருக்கா! அழகாவும் இருக்கா! கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம் வேற வாங்கறாளாம்”

“போட்டோவைப் பார்த்து எப்படிம்மா தீர்மானிக்க சொல்றீங்க... இன்றைய மாடர்ன் உலகத்துக்கு தகுந்த பெண்ணா இருக்கனும்மா”

“என்னமோப்பா எனக்கு புரியலை. நல்ல குடும்பமா இருக்கு. நம்ம ஜாதிக்காரங்க.. தூரத்து முறையுல் உறவு கூட வருது. அவங்க குல தெய்வமும், நம்ம குல தெய்வமும் ஒன்னு தான்”

“என்னம்மா இன்னும் பட்டிக்காடா இருக்கீங்க! இந்த நவீன உலகத்துல உலக விஷயங்கள் நிறைய தெரிஞ்சு வச்சுருக்குற பெண்ணான்னு பாருங்கம்மா”

“உன்னை மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்யுற பொண்தானே? உனக்கு பிடிச்சா மாதிரி தான் இருக்கும். அண்ணா நகரில் பெரிய வீடு இருக்கு. இன்னும் இரண்டு விடு வேற இருக்காம். வாடகைக்கு விட்டு இருக்காங்களாம். கார் கூட இருக்குது. நல்ல இடமா தெரியுதுப்பா”

“அப்படியாம்மா... எனக்கும் நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல இடமா இருக்கும் போல இருக்கு.”

“ஆமா சுந்தர். போட்டோவோட கம்ப்யூட்டர் அட்ரஸ் கூட கொடுத்து இருக்காங்க நீ வேணா பேசிப்ப்பாத்துக்க. அப்புறமா பொண்ணு பார்க்க போகலாம்”

“ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா”

காட்சி 2

sunder : வணக்கம்
Sent at 12:05 PM on Sunday
suha : hai. Who r u?
sunder: என் பெயர் சுந்தர். வரன் பார்க்கும் விஷயமா போட்டோவும், இ மெயிலும் உங்க அப்பா மூலமா கொடுத்தாங்க
Sent at 12:10 PM on Sunday
suha : O... good
sunder: m நீங்க எங்க வேலை பார்க்குறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Sent at 12:14 PM on Sunday
suha: O..sure. TCS il programmer. irandu varushma irukken. neenga?
sunder: நான் விப்ரோவில் Project Manager! ஐந்து வருடமாச்சு
suha: O.. nice job
sunder:அதென்ன அமெரிக்க தேர்தல் பற்றி ஏதோ எழுதி இருக்கீங்க?
Sent at 12:19 PM on Sunday
suha: I am a blogger. ennoda blog la american electonil Mccainukku atharavaa pathivu pottu irukken
Sunder: ஓ.. அரசியலில் எல்லாம் ஆர்வம் இருக்கா?
suha: brb
Sunder: Ok
Sent at 12:20 PM on Sunday

suha: m... sollunga... friends kooppittanga.. canteen poitten
Sunder: பரவாயில்லைங்க... அரசியல பதிவெல்லாம் போட்டு இருக்கீங்களே? அவ்வளவு ஆர்வமா?
Sent at 12:28 PM on Sunday
suha: Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.
Sunder: தமிழ் ப்ளாக்ன்னா ரொம்ப பிரச்சினை எல்லாம் வருமே?
Suha: atukkaga namma karuththai sollama irukka mudiyumaa? pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum. aththaan innaikku namma samkukaththukku thevaiyaana onnu
Sunder: நல்லா பேசுறிங்க... சரி அப்புறமா பார்க்கலாம். கொஞ்சம் வேலை இருக்கு. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க... வணக்கம்.
suha: No problem. Bye.

காட்சி 3


“சுந்தர் என்னடா இப்படி சொல்ற? நல்ல குடும்பமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு நீயும் அப்படித்தாம்மா தெரியுதுன்னு சொன்ன”

“இல்லம்மா.. இந்த பொண்ணு வேணாம்மா”

“என்னடா ஆச்சு உனக்கு?. அந்த பொண்ணை பார்க்கக் கூட போகலையே. அதுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்ற?”

“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”

“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”

39 comments:

ஆயில்யன் said...

//pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum//

அருமையான கருத்து!

பிரச்சனைன்னா சந்திக்கணும் அப்பத்தான் அது இன்னான்னு தெரியும்!

நெருப்பு பட்டாத்தான் சுடும்!

பருப்பு கருகினாத்தான் வாசம் வரும்!

பால் பொங்குனாத்தான் வேஸ்ட் ஆகி வெளியில கொட்டும்!

சட்டையில அயர்ன் பாக்ஸை வைச்சாத்தான் கருகும்!

சிஸ்டத்தை பிரிச்சாத்தான் பாழாகும்!

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா எம்புட்டு விசயம் பேஸ் பண்ண வேண்டியிருக்கு!)

ஆயில்யன் said...

//பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.//


நீங்க மட்டும் பயப்படாம இருக்கறது வேண்டிய அம்புட்டு காரியமும் கரீக்டா செஞ்சிருக்கீங்க ஆனா மட்டும் புரொபைல்ல படத்தை போட்டு ஊரு உலகத்தையே பயமுறுத்திக்கிட்டிருக்கீங்க இது எந்த ஊரு நியாயமப்பா?????

:))))))

ஆயில்யன் said...

//ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் //

பேச்சலராமாம்!

சரி நம்புறோம்! (வேற வழி நம்பித்தான் ஆகணும்!)

ஆயில்யன் said...

//ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா///


பதிவில் கருப்பொருளில் குற்றம் உள்ளது!

பெண்ணிடம் பேசுவதாக சொல்லிவிட்டு சாட்டியது பெரும் தவறு !!!!!!!!!!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஆயில்யன் said...

மீ த அஞ்சு

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன சொல்றதுன்னே தெரியல.. உலக விசயங்க்ளை தெரிஞ்சு பட்டும் படாம இருக்கற பொண்ணுதான் வேணுமாமா.. :(

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா! இதுதான் உண்மை நெலமையா...!!

//நெருப்பு பட்டாத்தான் சுடும்!

பருப்பு கருகினாத்தான் வாசம் வரும்!

பால் பொங்குனாத்தான் வேஸ்ட் ஆகி வெளியில கொட்டும்!

சட்டையில அயர்ன் பாக்ஸை வைச்சாத்தான் கருகும்!//

:-)))))))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

என்னையும் டேக்குக்கு அழைத்ததிற்கு மிக்க நன்றி அண்ணே!

டிஸ்கி! அட எத்தனை ஆப்பு தான் கைவசம் இருக்கு?

கானா பிரபா said...

;-) அய்யோ அய்யோ

குசும்பன் said...

பேச்சுலாராம்ல்ல பேச்சுலர் :))) நம்பிட்டோம்:)

மது... said...

//பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.
//

வீட்டில் சுவரில் இல்லை என்றால் என்ன அதுதான் மொபைல்'ல பர்ஸ்'ல எல்லாம் வச்சிருகீங்களே!

//“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா//

நோ கமெண்ட்ஸ்....

மது... said...

//4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)//

இந்த மது நான் தானே ?!!

ராமலக்ஷ்மி said...

//ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்//

எனக்கும்தான். அப்படித்தான் வைத்திருக்கிறேன்.

//Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.//

:(!

நல்லவேளை 1988-ல blog எல்லாம் இல்லை:)!

நாணல் said...

என்ன தான் சொல்ல வறீங்க.. ;)

//“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”//

உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)

ஸ்ரீமதி said...

அச்சச்சோ அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா???? என்னக் கொடுமை அண்ணா இது?????? :))))))))))))டாக் பண்ணிட்டீங்களா??? போட்டுடறேன்..!! :)))

ஸ்ரீமதி said...

//நாணல் said...
என்ன தான் சொல்ல வறீங்க.. ;)

//“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”//

உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)//

Akka what is this?? Yaara purinjikkanum?? May i help u?? ;))))

நானானி said...

ஸ்கிரீனில் பேரன் படம் வைத்திருக்கிறேன்.
ராமலஷ்மி 88-ல் ப்ளாக் வரலைன்னார்.
68-ல் கம்யூட்டரே கண்ணில் படலை.

நாணல் said...

ஸ்ரீமதி said...
//நாணல் said...

உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)//

ஸ்ரீமதி said...
//Akka what is this?? Yaara purinjikkanum?? May i help u?? ;))))//

நான் பொதுவா சொன்னேன் ஸ்ரீ...
இருந்தும் ஹெல்ப் வேணும்னா உங்க கிட்ட கேட்காம வேற யாரு கிட்ட கேட்கபோறேன்.. :)

நாணல் said...

ஸ்ரீமதி said...
//அச்சச்சோ அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா????//

இதே சந்தேகம் தான் ஸ்ரீ எனக்கும்.. அதான் தமிழ் பிரியர் என்னதான் சொல்ல வரார்னு அவர் கிட்டயே கேட்டேன்... ;)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum//
அருமையான கருத்து!
பிரச்சனைன்னா சந்திக்கணும் அப்பத்தான் அது இன்னான்னு தெரியும்!
நெருப்பு பட்டாத்தான் சுடும்!
பருப்பு கருகினாத்தான் வாசம் வரும்!
பால் பொங்குனாத்தான் வேஸ்ட் ஆகி வெளியில கொட்டும்!
சட்டையில அயர்ன் பாக்ஸை வைச்சாத்தான் கருகும்!
சிஸ்டத்தை பிரிச்சாத்தான் பாழாகும்!
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா எம்புட்டு விசயம் பேஸ் பண்ண வேண்டியிருக்கு!)///

கல்யாணம் பண்ணினா தான் வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும்.. இதையும் சேர்த்துக்க்ங்க அண்ணே!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.//
நீங்க மட்டும் பயப்படாம இருக்கறது வேண்டிய அம்புட்டு காரியமும் கரீக்டா செஞ்சிருக்கீங்க ஆனா மட்டும் புரொபைல்ல படத்தை போட்டு ஊரு உலகத்தையே பயமுறுத்திக்கிட்டிருக்கீங்க இது எந்த ஊரு நியாயமப்பா?????
:))))))///

நாங்க எல்லாம் நல்லவங்க... எங்க இதே மாதிரி நீங்க உங்க படத்தை புரோபைலில் போடுங்க பார்க்கலாம்.. ;)))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் //
பேச்சலராமாம்!
சரி நம்புறோம்! (வேற வழி நம்பித்தான் ஆகணும்!)///
தனியா இருந்தா அப்ப அது பேச்சலர் வாழ்க்கை இல்லியா? ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா///
பதிவில் கருப்பொருளில் குற்றம் உள்ளது!
பெண்ணிடம் பேசுவதாக சொல்லிவிட்டு சாட்டியது பெரும் தவறு !!!!!!!!!!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)///
நெற்றிக் கண்ணை தொறந்துடாதீங்க ஆயிலு.... ;))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

மீ த அஞ்சு///
உங்க பேரு வேறன்னு சொன்னாங்க... அஞ்சுன்னு லேடீஸ் பெயரை ஏன் வச்சு இருக்கீங்க... ;))

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன சொல்றதுன்னே தெரியல.. உலக விசயங்க்ளை தெரிஞ்சு பட்டும் படாம இருக்கற பொண்ணுதான் வேணுமாமா.. :(////
அக்கா! நான் என்ன செய்ய? பொதுவா நிறைய ஆண்கள் இது மாதிரியான மனநிலையில் இருப்பதைத் தான் இந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துவதாக உணர்கின்றேன்.

தமிழ் பிரியன் said...

///சந்தனமுல்லை said...
ஹஹ்ஹா! இதுதான் உண்மை நெலமையா...!!
//நெருப்பு பட்டாத்தான் சுடும்!
பருப்பு கருகினாத்தான் வாசம் வரும்!
பால் பொங்குனாத்தான் வேஸ்ட் ஆகி வெளியில கொட்டும்!
சட்டையில அயர்ன் பாக்ஸை வைச்சாத்தான் கருகும்!//
:-)))))))//////

அதான் உங்க தம்பி ஆயிலுக்கு பதில் சொல்லியாச்சே.. கல்யாணம் முடித்தா தான் வாழ்க்கை தெரியும் என்று.... ;)

தமிழ் பிரியன் said...

/// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
என்னையும் டேக்குக்கு அழைத்ததிற்கு மிக்க நன்றி அண்ணே!
டிஸ்கி! அட எத்தனை ஆப்பு தான் கைவசம் இருக்கு?///

ஹா ஹா ஹா.. அப்பப்ப வரும்.. வெயிட்டிங்ஸ்.. :))

தமிழ் பிரியன் said...

///கானா பிரபா said...
;-) அய்யோ அய்யோ///
நீங்க ஏன் தல கலங்குறிங்க.. இது உங்களுக்கு இல்லை... உங்களுக்கு தான் கல்யாணம் ஆகி குழந்தை, குட்டின்னு செட்டில் ஆயாச்சே,.... இனி பொண்ணு எல்லாம் பார்க்க முடியாது.. கம்னு இருங்க

தமிழ் பிரியன் said...

//குசும்பன் said...

பேச்சுலாராம்ல்ல பேச்சுலர் :))) நம்பிட்டோம்:)////
ஹிஹிஹிஹிஹிஹிஹி

தமிழ் பிரியன் said...

///மது... said...

//பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.
//

வீட்டில் சுவரில் இல்லை என்றால் என்ன அதுதான் மொபைல்'ல பர்ஸ்'ல எல்லாம் வச்சிருகீங்களே!////

அண்ணோனட ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.. தங்கச்சியே நம்மளை காட்டிக் கொடுத்து விடும் போல இருக்கேப்பா... ;))

//“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா//
நோ கமெண்ட்ஸ்....///

:)
நன்றி!

தமிழ் பிரியன் said...

///மது... said...
//4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)//
இந்த மது நான் தானே ?!!////

எனக்கு உன்னை விட்டா வேற யாரு மது என்ற பெயரில் தங்கை இருக்கிறார்? நீயே இப்படி கேக்கலாமா? அவ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...
//ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்//
எனக்கும்தான். அப்படித்தான் வைத்திருக்கிறேன்.///

ஆமாம் அக்கா! டெஸ்க்டாப்பை அடைச்சி வச்சி இருப்பதால் தேடனுமே.. அதுக்கு இதுதான் வசதியா இருக்கும்... :)

///Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.//

:(!

நல்லவேளை 1988-ல blog எல்லாம் இல்லை:)!///

ஓ.. இப்படி வேற இருக்குதா?... ;))

தமிழ் பிரியன் said...

///நாணல் said...
என்ன தான் சொல்ல வறீங்க.. ;)
//“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”//
உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)///

நாணல் அக்கா! அந்த கதாபாத்திரத்தை புரிஞ்சுக்கங்க.. அதுக்கு தான் அந்த கதாபாத்திரத்தை சைக்கிலாஜிக்கலா அனுகினா புரிஞ்சுக்குவீங்க... :)

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...
//நாணல் said...
என்ன தான் சொல்ல வறீங்க.. ;)
//“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”//
உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)//
Akka what is this?? Yaara purinjikkanum?? May i help u?? ;))))///


ஸ்ரீமதி! நாணல் அக்கா, அந்த கதாபாத்திரத்தின் உணர்வைக் கூறுகின்றார் என்று நினைக்கிறார். மேலதிகமாக சொல்லியது கொஞ்சம் அனுபவமா இருக்கலாம்..... ;)

பொதுவாகவே மனிதன் என்பவன் சுயநலவாதியாகவே இருக்கின்றான். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை. இந்த கதை ஓட்டத்தைப் பார்த்தாலே புரியும். தாய் மகன் கதையாடலைப் பார்த்தவுடனே அவன் ஒரு சுயநலவாதி என விளங்கி விடும்.

தமிழ் பிரியன் said...

///நானானி said...
ஸ்கிரீனில் பேரன் படம் வைத்திருக்கிறேன்.
ராமலஷ்மி 88-ல் ப்ளாக் வரலைன்னார்.
68-ல் கம்யூட்டரே கண்ணில் படலை.////
நானானிம்மா! நல்லவேளை ”கம்ப்யூட்டர் உங்களுக்கு என்ன முதல் மனைவியா?” என்று என் மனைவி கேட்கும் நிலை உங்களுக்கு வரலையேன்னு சந்தோசப்படுங்க... இந்த வருடம் ஊருக்கு போகும் போது கம்ப்யூட்டருக்கு வீட்டில் தடா போட்டாச்சு.. ;)

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...

அச்சச்சோ அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா???? என்னக் கொடுமை அண்ணா இது?????? :))))))))))))டாக் பண்ணிட்டீங்களா??? போட்டுடறேன்..!! :)))////

என்னம்மா இது கொடுமயா இருக்கு... உனக்கு மஹாராஜா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பார். இந்த கதாபாத்திரம் ஒரு அசிங்கமானவன். சாடிஸ்ட்.. இது போன்றவர்களிடம் தூரமா இருக்கனும் என்பதற்கே இந்த கதை... :)))

தமிழ் பிரியன் said...

// நாணல் said...
ஸ்ரீமதி said...
//நாணல் said...
உண்மை தான் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை.. ;)//
ஸ்ரீமதி said...
//Akka what is this?? Yaara purinjikkanum?? May i help u?? ;))))//
நான் பொதுவா சொன்னேன் ஸ்ரீ...
இருந்தும் ஹெல்ப் வேணும்னா உங்க கிட்ட கேட்காம வேற யாரு கிட்ட கேட்கபோறேன்.. :)///

நாணல் அக்காவும், ஸ்ரீமதி தங்கையும் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வருவது மகிழ்ச்சி... :)

நாணலக்கா! இப்போதைக்கு எங்க ஸ்ரீக்கு உங்க அமெரிக்கா பேங்கில் யாராவது வரன் இருந்தா சொல்லுங்க.... ஆனா நாங்க சாட் பண்ணிட்டுத் தான் ரிசல்ட் சொல்வோமாக்கும்... ;)))

தமிழ் பிரியன் said...

///நாணல் said...

ஸ்ரீமதி said...
//அச்சச்சோ அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா????//

இதே சந்தேகம் தான் ஸ்ரீ எனக்கும்.. அதான் தமிழ் பிரியர் என்னதான் சொல்ல வரார்னு அவர் கிட்டயே கேட்டேன்... ;)////

அழகான, அன்பான, பாசமான, நல்ல மச்சான் எனக்கு சீக்கிரமே கிடைப்பாராக்கும்... :)

சுரேஷ் குமார் said...

//
கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”
//
நல்லா வாங்குனிங்கய்யா ஜகா..

LinkWithin

Related Posts with Thumbnails