Friday, October 31, 2008

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 2

ஆளில்லாத தீவினிலே..... முதல் பகுதி

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

இறுதிப் பகுதி

16 comments:

Unknown said...

அண்ணா இது அநியாயம் ஃபுல்லா போடுங்க அண்ணா..!! :))

வால்பையன் said...

அப்ப அங்க என்னமோ இருக்கு

Unknown said...

ஹை நான் தான் ஃபர்ஸ்ட்..!! :))

Unknown said...

//வால்பையன் said...
அப்ப அங்க என்னமோ இருக்கு//

இன்னுமா அண்ணா புரியல?? அங்க ஒரு பொண்ணு இருக்கு... ;)))))))))

Unknown said...

//இறைவன் நாடினால் , இறுதிப் பகுதி மாலை வரும்...//

இந்த முறை தெளிவாகிட்டோம்ல... ;)))))))

துளசி கோபால் said...

சட் சட்ன்னு ப்ரேக் போட்டால் எப்படி?

சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க.

gulf-tamilan said...

இன்னும் முடியலையா??

ஆயில்யன் said...

///ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 2 //

எம்புட்டு நீளத்துக்கு இழுக்கப்போறீங்க பாஸ்?

இது கோடு டைப்பு கதையா அல்லது கோட்டு துண்டு டைப்பு கதையா பாஸ்?

அல்லது தினந்தந்தி படக்கதை மாதிரி முடியவே முடியாதா?

ஊருக்கெல்லாம் லீவுக்கு போகாம இந்த கதையை முடிக்கிறதா பிளான் எதாச்சும் இருக்கா?

ஆபிஸ்ல தூக்கம் வராத சமயங்களில் இப்படித்தான் யோசிச்சு யோசிச்சு கதை எழுதுவீங்களா?

இப்படியாக இன்னும் கொஞ்சமாய் கேள்விகள் இருக்கு?

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்து கேக்கறேன் பாஸு!!!!

ஆயில்யன் said...

// ஸ்ரீமதி said...
அண்ணா இது அநியாயம் ஃபுல்லா போடுங்க அண்ணா..!! :))
//

அது அப்புறம் பெரிய அநியாயமா போகும்ன்னு பயந்துதான் தம்பி பார்ட் பார்ட்டா போடுது உனக்கு ஏனம்மா இந்த மாதிரி ஒரு ஆசை???

ஆயில்யன் said...

தம்பி நான் பத்து போடறேன்!

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
அப்ப அங்க என்னமோ இருக்கு//

இன்னுமா அண்ணா புரியல?? அங்க ஒரு பொண்ணு இருக்கு... ;)))))))))
//

இன்னுமா?????????????

ஆயில்யன் said...

// ஸ்ரீமதி said...
//இறைவன் நாடினால் , இறுதிப் பகுதி மாலை வரும்...//

இந்த முறை தெளிவாகிட்டோம்ல... ;)))))))
///


வந்தால்......!


பூமாலை போடுவோம்!

ஆயில்யன் said...

//துளசி கோபால் said...
சட் சட்ன்னு ப்ரேக் போட்டால் எப்படி?

சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க.
///

டீச்சர் சொல்ற பார்த்தா .....!


ஒரு தடவை நான் பஸ்ல போறச்ச அந்த படுபாவி டிரைவர் மாட்டு வண்டி ஓட்டற மாதிரி ஓட்டிட்டு போக செம டென்ஷனாகி யேய்ய்ய்ய் போய் தொலையேன்ப்பா அப்படின்னு சத்தம் போட்டது ஏனோ நினைவுக்கு வருவதை ஸ்டாப்பு பண்ணமுடியலப்பா!

என்னிய மன்னிச்சிரு தம்பி :((((

Unknown said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
அப்ப அங்க என்னமோ இருக்கு//

இன்னுமா அண்ணா புரியல?? அங்க ஒரு பொண்ணு இருக்கு... ;)))))))))
//

இன்னுமா?????????????//

இதுக்கென்ன அர்த்தம்???????????? :((

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் நல்ல கற்பனை வளம் - கதை நன்கு செல்கிறது - நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்

ராமலக்ஷ்மி said...

கதையின் களமும் அதைப் பற்றிய தெளிவான விளக்கங்களும் சுவாரஸ்யம்.