Sunday, October 26, 2008

நான் பாடிய ’உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலும், பதிவருக்கான உதவியும்


நண்பர் கானா பிரபா ஆஸ்திரேலிய வானொலியில் ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். அந்த நிகழ்ச்சியை இணைய வாயிலாகவும் கேட்கலாம். கடந்த வாரங்களுக்கு முன் கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் பற்றியும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.

ஆர்வ மிகுதியில் இங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு தொலை பேசினேன். கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களைக் கூறிவிட்டு ஒரு பாடலையும் பாடிக் காட்டினேன். கடைசியாக நண்பர் ‘காதல் கறுப்பி’ தமிழனுக்காக கண்ணதாசனின் கடைசி பாடலான மூன்றாம் பிறை படத்தில் இருந்து கண்ணே! கலைமானே! என்ற பாடலையும் கேட்டேன். இறுதியில் அதையும் ஒலிபரப்பினர்.

வானலை வழியே நமது குரல் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது என்ற பயத்திலேயே பேசியதால் பேச்சே வரவில்லை. சாதாரணமான எங்கு சென்று தமிழ் பேசினாலும் எங்களுடைய மதுரை ஸ்லாங்கை விட மாட்டேன். ஆனால் அன்று எழுத்து வடிவிலான தமிழையே பேச முடிந்தது.

இதை நேரடியாக சந்தனமுல்லை அக்கா கேட்டிருக்கிறார்கள். அதை பதிவு செய்து அண்ணன் கானா பிரபா அளித்திருந்தார். நண்பர்கள் சிலருக்கும் மெயிலில் அனுப்பினேன். அதை தொடர் மெயிலாக்கி மகிழ்வுடன் கும்மி அடித்திருந்தனர்... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்ய்யா உடம்பை ரணகளமாக்கி வச்சி இருக்கீங்க... ;))


அதை பதிவேற்றி பதிவில் வெளியிட கூச்சமா இருக்கு... சர்வேசன் தனது நேயர் விருப்பத்தில் சமீபத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி பதிவேற்றி இருந்தார். நாம பத்மினியின் தீவிர ரசிகர் என்பதால் அந்த பாட்டு எனக்கு ரொம்பப் இடிக்கும். கருப்பு வெள்ளையில் கூட என்ன பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்... :) பத்மினி ரசிகர் என்றால் வயசான ஆள் என்று நினைக்கக் கூடாது.... பூவே பூச்சூடவா வந்தது கூட தெரியாத பொடிபையன் நான்.

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் அது தான். உச்சரிப்பு, ராகமெல்லாம் சரியில்லன்னு சொல்லக் கூடாது.... ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னு நினைக்கிறென்... :)))

Un kannil.mp3 - Thamiz Priyan

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் இது தான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

புதிதாக பதிவு எழுத வருபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அவர்களுக்கு உதவவும் ஆவலாக இருப்பேன். டெம்ப்ளேட், கருவிப்பட்டை போன்றவற்றில் எனக்கு தெரிந்ததை உதவுவேன். (ரொம்பல்லாம் தெரியாதுங்க... தெரிந்ததை உதவியா செய்வேன்)

சமீபத்தில் ஒரு பதிவரின் தொடர்பு கிடைத்தது. சில பதிவுகளே எழுதி இருந்தார். உதவி என்று கேட்டதும் ஓடிப்போய் செய்து கொடுத்தேன்.

சில நாட்களுக்குப் பின் அவர் பற்றி தெரிய வந்தது. அவர் பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர். கொட்டை எங்கே என்றால் தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்து வரை கொட்டை போட்டவர். அவமானமாக போய் விட்டது. ஏமாற்றுவது பல வகை.. அதில் இது ஒரு வகை போலும்.. :(

26 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்!

எஸ்கேப் இல்லப்பா (ஆபிஸ்ல இருக்கேன் வீட்டுக்கு போயிட்டு கண்டிப்ப்பா கேட்டுட்டு சொல்றேன்! பட் நீ அழகா பாடுவேன்னு எனக்கு தெரியும்!)

புதுகை.அப்துல்லா said...

மீ த செகண்டு

Aruna said...

பாட்டு நல்லாவே இருக்கு..
அன்புடன் அருணா

கானா பிரபா said...

;-)

ஒரு நிகழ்ச்சியோட ஓடிப் போயிட்டீங்களே தல

ஆயில்யன் said...

//புதுகை.அப்துல்லா said...
மீ த செகண்டு
//


அட அப்துல்லா அண்ணனும் எஸ்கேப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

// கானா பிரபா said...
;-)

ஒரு நிகழ்ச்சியோட ஓடிப் போயிட்டீங்களே தல
//

தல நீங்க சொல்லவர்றதுல்ல சில ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு!

ஒடிப்போயிட்டீங்களே இல்ல ஒடிப்போயிட்டாங்களே!

அத்திரி said...

தம்பி பாட்டுக்கு பின்னடி விக்ரமனோட லா லா லா லா கேட்குதே.

பாட்டுக்கு பின்னாடி ஒரு பீலிங் தெரியுது ))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//

சரிங்க. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பரண்ணே. :-)

கலக்கல்ஸ். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆமா யார் அந்த பதிவர்? ;-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

ழகரம், ளகரம் சரி பார்த்திருக்கலாமோ ? :)

ராமலக்ஷ்மி said...

//உச்சரிப்பு, ராகமெல்லாம் சரியில்லன்னு சொல்லக் கூடாது....//

சொல்லக் கூடாதா:(?

//ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னு நினைக்கிறென்... :)))//

இருநூறு சதவிகிதம் வழிமொழிகிறேன்:))!

ஆனாலும் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்:)!

வெண்பூ said...

நீங்க இவ்ளோ பெரிய பாடகரா தமிழ்? கலக்குங்க.. (ஹி..ஹி.. இன்னும் பாட்டு கேக்கல)

தாமிரா said...

இன்னா மேரி .:பீலிங்குபா.. த்சொ, த்சொ..

SurveySan said...

:) நன்று!

சொல்லலாம்னு நெனச்சத, சொல்லக் கூடாதுன்னுட்டீங்க :)

இன்னும், நல்லா வாய் விட்டு கத்தி பாடினா, நல்லா மெருகேறும்.

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

புதுகை.அப்துல்லா said...

வெண்பூ said...
நீங்க இவ்ளோ பெரிய பாடகரா தமிழ்? கலக்குங்க.. (ஹி..ஹி.. இன்னும் பாட்டு கேக்கல)
//
அதே..அதே.. :)))

தமிழன்...(கறுப்பி...) said...

பதிவுகளின் எண்ணிக்ககை கூடிக்கொண்டே இருக்கிறது...!

தமிழன்...(கறுப்பி...) said...

ரகம் ரகமா பதிபோடுறாய்ங்கப்பா...

தமிழன்...(கறுப்பி...) said...

ரொம்ப பீல் பண்ணி பாடினா மாதிரி இருக்கு...

தமிழன்...(கறுப்பி...) said...

உங்களை சிவாஜி மாதிரி கற்பனை பண்ணிப்பாத்தனா...

.....
.....


....


....

.......

.......


......:))))))))))

Kabheesh said...

//
தாமிரா said...
இன்னா மேரி .:பீலிங்குபா.. த்சொ, த்சொ..
//
Repeteyyyyyyyyy

Kabheesh said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆமா யார் அந்த பதிவர்? ;-)
//

Repeateyyy

நிஜமா நல்லவன் said...

ஆமா யார் அந்த பதிவர்? ;-)

ஸ்ரீமதி said...

:))))))))))

சந்தனமுல்லை said...

ஐய்யோ!!! எங்க கண்ணில வராத நீரையும் வர வச்சிட்டீங்க அண்ணா...என்னா ஃபீலீங்ஸ்!!

LinkWithin

Related Posts with Thumbnails