.
.
துபாயில் வாழ்ந்த காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் ஒரே ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தோம். உடன் வேலை செய்யும் அனைவரும் ஒத்த வயதையுடையவர்கள். எல்லோரும் 20 To 22 வயதுக்குள் உள்ள இளவட்டங்கள்.
நிறுவனத்தில் இருப்பவர்களில் 20,25 பேர் ஒரே குரூப்பாக சுற்றிக் கொண்டு இருப்போம். 12 பேர் ஒன்றாக ஒரே மாதிரி டிசைனில் சட்டை தேடி துபாய் மார்க்கெட்களில் அலைந்த காலம் உண்டு. கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது.
எப்போதும் ஒன்றாக வேலை, பிரயாணம், சாப்பாடு என்று சுற்றுவோம். வெட்டி அரட்டைகளில் திடீர் திடீர் என்று ஐடியாக்கள் உதிக்கும். அப்படி உதித்தது தான் அல் அய்ன் சுற்றுப்பயணம். துபாயில் இருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் இருக்குமிடம் அல் அய்ன். கடலில் இருந்து தூரமாகவும், மேட்டுப் பகுதியிலும் இருப்பதால் கொஞ்சம் இதமான வெப்பநிலை நிலவக் கூடிய இடம்.
சிலர் மட்டுமே செல்லலாம் என போட்ட திட்டம் அனைவரிடமும் பரவி குரூப் முழுவதும் செல்ல தயாராகி விட்டது. வெள்ளி விடுமுறையை அனுசரித்து, எல்லாரும் போகாதீங்க... கம்ப்ளைண்ட் வந்தா போக ஆள் வேணும் என்ற சூப்பர்வைசரின் சொல்லை காற்றில் விட்டுவிட்டு கிளம்பியாச்சு.’
cars மூலம் 14 பேர் அமரக்கூடய வாகனம், மற்றும் ஒரு கார் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். அதோடு ஒரு காரும் ... மொத்தம் சுமார் 20 பேருக்கு மேல் இருப்போம். விடிகாலையில் கிளம்பி அல் அய்னை சென்றடைந்த போது பசி வயிற்றைக் கிள்ள வழக்கம் போல் ஒரு மலையாளி கடையில் அடைக்கலமானோம். புரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, சென்னா, கீமா, பருப்பு, சட்னி, சாம்பார் என அனைத்தையும் ஒரே டேபிளில் வாங்கி வைத்து தின்று ஒரே கரச்சல் தான்... கூட்டம் கடையை விட்டு வெளியேறிய போது தான் அந்த சேட்டன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.... ;)))
அல் அய்னில் ஒரு சிறு குன்று போல் மலை உள்ளது. வளைந்து வளைந்து சென்று மலை உச்சியை அடைந்தால், அங்கு மேலே ஒரு சமதளமான இடம் உள்ளது. வந்தவர்களில் பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர். நாம மேற்குத் தொடர்ச்சி மலையையே மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கோமே.... ஒன்னும் தோணலை... ;))
மலையில் இருந்து இறங்கி சென்ற இடம் அல் அய்ன் உயிரியல் பூங்கா. மொட்டை வெயிலில் பூங்கா முழுவதும் சுற்றினோம். நிறைய பறவைகள் பார்த்த நினைவு உள்ளது. வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கி எல்லாம் பார்த்தோம். (நிறைய மறந்து விட்டதுங்ண்ணா). ஒட்டகசிவிங்கிக்கு இலை தளை கொடுப்பது போல் போட்டோ எடுத்தோம். வரிக்குதிரைக்கு அருகில் போட்டோ எடுக்க போனால் அது ‘பின்’புறத்தை காட்டியே நின்று கொண்டிருந்தது.... ;)
ஜூவில் இருந்து வெளியேறி வெள்ளி என்பதால் மதியம் தொழுது விட்டு, பிரியாணி சாப்பிட்டோம். இங்கு ஏதும் அழிச்சாட்டியம் செய்யவில்லை. டிஸண்டான ஹோட்டலில் டீஸண்டா இருப்போமாக்கும் நாங்களெல்லாம்..
அடுத்து சென்றது Alain Fun City. கிட்டத்தட்ட நம்ம கிஷ்கிந்தா மாதிரி இருக்கும். (சென்னையில் கிஷ்கிந்தா தான் தெரியும்). மதியத்திற்க்கு பிறகு அங்கு சென்றோம். ரோலர் கோஸ்டர் எனப்படும் இராட்டினங்கலில் ஒரே குதியாட்டாமும், கழியாட்டாமும். அங்கு உள்ள குறிப்பிடத்தக்க இடம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் உள் அரங்கம்.
தரை தளம் முழுவதும் உறை பனியில் இருக்கிறது. ஸ்கேட்டிங் ஷூக்களை அங்கேயே வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 7,8 ஷூக்களை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வதாக பேச்சு. ஷூவைப் போட்டு களத்தில் இறங்கினால் டமார் டமார் என்று சத்தம். என்னடாவென்று பார்த்தால் எல்லாம் வழுக்கி விழுந்து கீழே கிடக்கிறான்கள்.
சில பொறுப்பான நண்பர்கள் ‘உங்களுக்கு ஸ்கேட்டிங் பண்ணத் தெரியலை’ என்று சொல்லி ஷூக்களை அணிந்து கொண்டு எச்சரிகையாக களத்தில் இறங்க, ம்ம்ம்ம்ம் அந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டு கூட நிக்க முடியவில்லை. கை பிடியை விட்டாதானே உள்ளே செல்ல.... மழை வெள்ளத்தில் மர வேரை பிடித்து தத்தளித்தது போல் தான் நடந்தது. மீறி முயற்சித்தவர்கள் எடுத்த புதையல்கள் ஏராளம்.
மூன்று பாகிஸ்தானி இளம்பெண்கள் ஷூக்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஆகா, கீழே விழுந்து புதையல் எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் சர் சர்ரென்று வழுக்கி இங்கும் அங்கும் பறக்கிறார்கள். ஏளனமாக நம்மை பார்த்து சிரிப்பு வேற... சே..அவமானமா போச்சேன்னு யாராவது ஐஸ் தரையில் நடக்க முயன்றால் மீண்டும் டமார்.... அதிக சேதாரம் தான் போங்க... ;)
இறுதியில் அங்கே ஓடும் டிரெயினில் ஜாலியாக (எங்கே ஜாலி... எல்லாருக்கும் கை, கால், பின்னால் என்று செம அடி + வலி) சவாரி செய்து விட்டு ஊர் திரும்பினோம்.
மறுநாள் வேலைக்கு கிளம்பும் போது சொல் பேச்சு கேக்காததற்காக சூப்பர்வைசர் திட்டு மழை பொழிய, வழக்கம் போல் எருமை மாட்டில் மழை பெய்தது போல் நின்று சமாளித்தோம்... ஆல் இன் த கேம்யா... 10 பேர் மறுநாள் மெடிக்கல் லீவு எடுத்தது கடைசிக் கதை.
போட்டோக் குறிப்புகள்
முதல் இரண்டு போட்டோக்கள் அல் அய்ன் ஜூ போட்டோக்கள். இணையத்தில் சுட்டது.
மூன்றாவது போட்டோ அல் அய்ன் மலை உச்சியில் உள்ள சமதளம். அம்மணி யாருன்னு தெரியாது. அதுவும் இணையத்தில் சுட்டது.
கடைசி மூணு போட்டோவிலும் நான் இருக்கிறேன். (பழைய போட்டோ - ஸ்கேன் செஞ்சது. ஆண்டு 2002). இன்னும் போட்டோக்கள் ஊரில் இருக்கலாம்.
கடைசி இரண்டு போட்டோக்களில் இருப்பவர்கள்.
தமிழ் பிரியன்
காதர் (திருவாரூர்)
செந்தில (கொளத்தூர்)
ரியாஜ் (குரோம்பேட்)
நவ்பர் (கீழக்கரை)
லியாகத் (ஆற்காடு)
லியாகத்துக்கு நாளை (19-10-2008) திருமணம்... இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் நண்பா!
இந்த இரண்டு வீடியோவிலும் இருப்பவர்கள் நமக்கு நல்லா தெரிஞ்ச பதிவர்கள். அதே ஐஸ் ஸ்கேட்டிங்கில் புதையல்களை அள்ளியவர்கள்.. எங்க கண்டுபிடிங்க பார்க்கலாம். குசும்பன் பெயர் பதிவை சூடாக்க போட்டதுங்ண்ணா.. ;)
வீடியோ நன்றி: மின்னுது மின்னல்
77 comments:
:) நிறைய புதையல் எடுத்தீங்களே.. எங்க போட்டுவச்சிருக்கீங்க ஸ்விஸ் பேங்க்லயா..?
நாங்க மணாலி போனப்போ இப்படித்தான் விழறவங்களை கிண்டல் செய்தவங்க எல்லாம் அடுத்தடுத்து விழுந்து.. அய்யோ அம்மான்னு வந்தோம்.
ஹி..ஹி.. இந்த பதிவுலயே சூப்பர் மொத ஃபோட்டோதான்.. :)))
ஆனால் அலையில்லாத அந்தக்கடல் ஒரு மாதிரி தான்.
நல்ல சுவாரஸ்யம்!!
//இந்த இரண்டு வீடியோவிலும் இருப்பவர்கள் நமக்கு நல்லா தெரிஞ்ச பதிவர்கள். அதே ஐஸ் ஸ்கேட்டிங்கில் புதையல்களை அள்ளியவர்கள்//
அதில் அள்ளோ அல்லு என்று அள்ளியது அடியேன், இரண்டு நாட்கள் எழ முடியவில்லை. நான் விழுந்ததை இன்னுமா மின்னல் வெச்சுருக்க!
//குசும்பன் பெயர் பதிவை சூடாக்க போட்டதுங்ண்ணா.. ;)//
இன்னும் நீங்க குழந்தையாவே இருக்கீங்க:)
சூடாக்க லக்கி,பாலபாரதி போன்றவர்கள் தான் உதவுவார்கள்.
நானும் தான் மலையேறினேன் இப்படி யாரையும் அங்கே பார்கவில்லையே:((
வீடியோ புதையல்கள் சூப்பர்
நல்ல வேடிக்கை:))!
:)
:))))
ஆகா சலனப்பட தொகுப்பு மிகவும் வேடிக்கையாக இருந்தது. வயிறு குழுங்க சிரித்தோம். 2008 இன் சிறந்த நகைச்சுவை காட்சி
//துபாயில் வாழ்ந்த காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது//
saudi ???
;))))
நல்ல பதிவு!
அருமையாக எழுதியிருக்கீறீர்கள்!
Abu Dhabi யில் இருந்து கொண்டு இன்னும் Al ain போகவில்லை என்ற
ஏக்கத்தை அதிக படுத்திவிட்டீரே!
ப்ளசும் மைனஸும் கலந்த அந்த பயணம்..உல்லாசமானதுதான்.
அருமையான நினைவுகள் வாய்ப்பு கிடைத்தால் போய் பனிச்சறுக்கலாம்! (இங்கனயும் இருக்காமாம் ஆனால் அதெல்ல்லாம் என்னிய மாதிரி சின்ன பசங்களுக்கு கிடையாதாம்! )
:()
//குசும்பன் said...
நானும் தான் மலையேறினேன் இப்படி யாரையும் அங்கே பார்கவில்லையே:((/
நண்பனின் சோகத்தில் பாதி பார்டினை எடுத்துக்கொள்கிறேன் :(((
//20 - 22 வயதுக்குள் உள்ள இளவட்டங்கள்//
இப்ப எல்லாம் கிழ வட்டங்கள் :((
//கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது./
ஒன்றாக போட்டுக்கொண்ட அந்த புண்ணியாத்மா யாரு ????
//வழக்கம் போல் ஒரு மலையாளி கடையில் அடைக்கலமானோம்//
அடைக்கலமாதல் அப்படிங்கறது 1ம் இல்லாம போறதுன்னு ஒரு அர்த்தம் வைச்சுக்கிட்டு பார்த்தா அந்த சேட்டன் அவ்ளோதானா அப்படியே துண்டை எடுத்து தலையில போட்டுக்கிட்டு போயே போயிருப்பாரே???
//பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர்.///
இது ராம்நாடு பின்னே தஞ்சை வாழ் மக்களுக்கு நேர்ந்த அவமானம் என்பதால் இத்துடன் இப்பதிவிலிருந்து விலகிச்செல்கிறேன்! (எம் மாநில சகோதரர்கள் பிற நாடுகளில் கேவலப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ ஒரு நாளும் தாங்கிக்கொள்ளமாட்டோம்!)
//மழை வெள்ளத்தில் மர வேரை பிடித்து தத்தளித்தது போல் தான் நடந்தது///
நல்லா இருக்கு!
//ஆயில்யன் said...
//பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர்.///
இது ராம்நாடு பின்னே தஞ்சை வாழ் மக்களுக்கு நேர்ந்த அவமானம் என்பதால் இத்துடன் இப்பதிவிலிருந்து விலகிச்செல்கிறேன்! (எம் மாநில சகோதரர்கள் பிற நாடுகளில் கேவலப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ ஒரு நாளும் தாங்கிக்கொள்ளமாட்டோம்!)//
ரீப்ப்ப்ப்பீபீப்ப்ப்ட்ட்டேஏஏஏஎ!
:-)))))
ரசித்தேன்
//ஆயில்யன் said...
This post has been removed by the author. //
ரிப்பீட்டே, சாரி பழக்க தோஷம் ;)
வீடியோ பயங்கர காமெடிங்க தமிழ்.
தல ரொம்ப நேரமா உங்க பதிவு திறக்காம முரண்டு பிடிச்சிடடிருந்திச்சு...
நம்மளுக்கு இப்படி வாய்ப்பு கிடைக்கலையே சவுதில...:(
முடிஞ்சா தாய்fபுக்கு வரணும்...
\\
12 பேர் ஒன்றாக ஒரே மாதிரி டிசைனில் சட்டை தேடி துபாய் மார்க்கெட்களில் அலைந்த காலம் உண்டு.
\\
இது ஊருல செய்திருக்காங்க நம்ம பசங்க...:)
\\
12 பேர் ஒன்றாக ஒரே மாதிரி டிசைனில் சட்டை தேடி துபாய் மார்க்கெட்களில் அலைந்த காலம் உண்டு. கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது.
\\
நல்ல கலர்தானே...;)
\\
வந்தவர்களில் பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர்.
\\
டுபாய் மலையேறின சந்தோசம்...
\\
நாம மேற்குத் தொடர்ச்சி மலையையே மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கோமே.... ஒன்னும் தோணலை... ;))
\\
உண்மையாவா சொல்லவே இல்ல !!
http://www.youtube.com/watch?v=ntDgN7GErzA&NR=1
இந்த குசும்பன் தொல்லையும் தாங்க முடியலையே !!!!
:)
\\
வரிக்குதிரைக்கு அருகில் போட்டோ எடுக்க போனால் அது ‘பின்’புறத்தை காட்டியே நின்று கொண்டிருந்தது.... ;)
\\
அதுக்கு புரிஞ்சிருக்கு...
எடுத்த புதையல் எல்லாம் எங்கே...
\\
லியாகத்துக்கு நாளை (19-10-2008) திருமணம்... இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் நண்பா!
\\
என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க...:)
மின்னுது மின்னல் said...
\\
http://www.youtube.com/watch?v=ntDgN7GErzA&NR=1
இந்த குசும்பன் தொல்லையும் தாங்க முடியலையே !!!!
:)
\\
தாங்க்ஸ் மின்னல்...:)
\\
கடைசி மூணு போட்டோவிலும் நான் இருக்கிறேன். (பழைய போட்டோ - ஸ்கேன் செஞ்சது. ஆண்டு 2002). இன்னும் போட்டோக்கள் ஊரில் இருக்கலாம்.
\\
எங்க இருக்கறிங்க...?
அது ஏன் முகத்துல அந்த சோகம் எப்பவுமே இருக்குமா...
வீடியோ பாக்க முடியலை பாத்துட்டு அப்புறமா மிச்சம் ஓகேவா...:)
its very nice...keep it up!
Not bad!
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) நிறைய புதையல் எடுத்தீங்களே.. எங்க போட்டுவச்சிருக்கீங்க ஸ்விஸ் பேங்க்லயா..?
நாங்க மணாலி போனப்போ இப்படித்தான் விழறவங்களை கிண்டல் செய்தவங்க எல்லாம் அடுத்தடுத்து விழுந்து.. அய்யோ அம்மான்னு வந்தோம்.///
அக்கா! உங்ககிட்டே தானே கொடுத்து வைத்தேன்.. இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க.. நேர்மையா எல்லாத்தையும் என் பேங்க் கணக்கில் சேர்த்துடுங்க... ;))
///வெண்பூ said...
ஹி..ஹி.. இந்த பதிவுலயே சூப்பர் மொத ஃபோட்டோதான்.. :)))///
தெரியுமே.. இப்படித்தான் சொல்வீங்கன்னு தெரியுமே.. ;)))
///வடுவூர் குமார் said...
ஆனால் அலையில்லாத அந்தக்கடல் ஒரு மாதிரி தான்.///
நன்றி குமார் அண்ணே!
///ஜீவன் said...
நல்ல சுவாரஸ்யம்!!///
நன்றி ஜீவன்!
///குசும்பன் said...
//இந்த இரண்டு வீடியோவிலும் இருப்பவர்கள் நமக்கு நல்லா தெரிஞ்ச பதிவர்கள். அதே ஐஸ் ஸ்கேட்டிங்கில் புதையல்களை அள்ளியவர்கள்//
அதில் அள்ளோ அல்லு என்று அள்ளியது அடியேன், இரண்டு நாட்கள் எழ முடியவில்லை. நான் விழுந்ததை இன்னுமா மின்னல் வெச்சுருக்க!///
அண்ணே! அதனால தான உங்க பேரை டைட்டிலில் போட்டு பதிவை சூடாக்கினோம்.. ;)))
//குசும்பன் said...
//குசும்பன் பெயர் பதிவை சூடாக்க போட்டதுங்ண்ணா.. ;)//
இன்னும் நீங்க குழந்தையாவே இருக்கீங்க:)
சூடாக்க லக்கி,பாலபாரதி போன்றவர்கள் தான் உதவுவார்கள்.///
அண்ணே! அந்த லிஸ்ட்டில் நீங்களும் வந்து ரொம்ப நாள் ஆச்சு... இன்னும் சின்ன புள்ளையா இருக்கீங்களே.. :)
///குசும்பன் said...
நானும் தான் மலையேறினேன் இப்படி யாரையும் அங்கே பார்கவில்லையே:((///
அதெல்லாம் நல்லவங்க கண்ணுக்குத் தான் தெரியுமாம்ம்ம்... ;))
///புகழன் said...
வீடியோ புதையல்கள் சூப்பர்///
நன்றி புகழன்!
///ராமலக்ஷ்மி said...
நல்ல வேடிக்கை:))!///
ஆமாக்கா! வருகைக்கு நன்றி!
///மின்னுது மின்னல் said...
:)
:))))//
சிரிப்பான்களுக்கு மிக்க நன்றி மின்னல்!
///ச.இலங்கேஸ்வரன் said...
ஆகா சலனப்பட தொகுப்பு மிகவும் வேடிக்கையாக இருந்தது. வயிறு குழுங்க சிரித்தோம். 2008 இன் சிறந்த நகைச்சுவை காட்சி///
மிக்க நன்றி இலங்கேஸ்வரன்!
///gulf-tamilan said...
//துபாயில் வாழ்ந்த காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது//
saudi ???
;))))////
துபாய் வாழ்க்கை எந்த கட்டுப்பாடும் இல்லாத சுதந்திர வாழ்க்கை! சவுதி வரும்போது திருமணம் ஆகி விட்டிருந்ததே.. ;))
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நல்ல பதிவு!
அருமையாக எழுதியிருக்கீறீர்கள்!///
நன்றி சுடர்!
/// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
Abu Dhabi யில் இருந்து கொண்டு இன்னும் Al ain போகவில்லை என்ற
ஏக்கத்தை அதிக படுத்திவிட்டீரே!///
பக்கம் தானே போய்ட்டு வாங்களேன்... :)
///நானானி said...
ப்ளசும் மைனஸும் கலந்த அந்த பயணம்..உல்லாசமானதுதான்.///
ஆமாம் நானானிம்மா! அதெல்லாம் ஒருகாலம் என்று சொல்லக் கூடிய மலரும் நினைவுகளாகி விட்டது.
///ஆயில்யன் said...
அருமையான நினைவுகள் வாய்ப்பு கிடைத்தால் போய் பனிச்சறுக்கலாம்! (இங்கனயும் இருக்காமாம் ஆனால் அதெல்ல்லாம் என்னிய மாதிரி சின்ன பசங்களுக்கு கிடையாதாம்! )
:()///
ஹா ஹா ஹா நம்பிட்டோம் அண்ணே!
/// ஆயில்யன் said...
//குசும்பன் said...
நானும் தான் மலையேறினேன் இப்படி யாரையும் அங்கே பார்கவில்லையே:((/
நண்பனின் சோகத்தில் பாதி பார்டினை எடுத்துக்கொள்கிறேன் :(((///
ஏம்ப்பா சோகத்திலா பங்கு எடுத்துக்கிடனும்.. எங்களோட வாங்க மகிழ்ச்சியா இருக்கலாம்... ;))
///ஆயில்யன் said...
//20 - 22 வயதுக்குள் உள்ள இளவட்டங்கள்//
இப்ப எல்லாம் கிழ வட்டங்கள் :((////
ஏனுங்ண்னா.. இப்பயும் இளவட்டங்கள் தான்.. எல்லாரையும் உங்களை மாதிரி வய்சான ஆளுங்கன்னு நினைக்காதீங்க.. ;))
///ஆயில்யன் said...
//கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது./
ஒன்றாக போட்டுக்கொண்ட அந்த புண்ணியாத்மா யாரு ????//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///ஆயில்யன் said...
//வழக்கம் போல் ஒரு மலையாளி கடையில் அடைக்கலமானோம்//
அடைக்கலமாதல் அப்படிங்கறது 1ம் இல்லாம போறதுன்னு ஒரு அர்த்தம் வைச்சுக்கிட்டு பார்த்தா அந்த சேட்டன் அவ்ளோதானா அப்படியே துண்டை எடுத்து தலையில போட்டுக்கிட்டு போயே போயிருப்பாரே???///
வரும் போது சாப்பிட்டத்துக்கு காசு கூட கொடுத்தோம்ன்னா பார்த்துக்கங்க..நாங்க எவ்வளவு நல்லவங்க என்று.. ;))
///ஆயில்யன் said...
//பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர்.///
இது ராம்நாடு பின்னே தஞ்சை வாழ் மக்களுக்கு நேர்ந்த அவமானம் என்பதால் இத்துடன் இப்பதிவிலிருந்து விலகிச்செல்கிறேன்! (எம் மாநில சகோதரர்கள் பிற நாடுகளில் கேவலப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ ஒரு நாளும் தாங்கிக்கொள்ளமாட்டோம்!)///
அண்ணே! உண்மையைச் சொன்ன எதுக்கு கோவுச்சுக்கிறிங்க.. ஆமா உங்க ஊருல உண்மையிலேயே மலை இல்லியா?..
///ஆயில்யன் said..
//மழை வெள்ளத்தில் மர வேரை பிடித்து தத்தளித்தது போல் தான் நடந்தது///
நல்லா இருக்கு!///
நன்றி அண்ணே!
///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//ஆயில்யன் said...
//பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர்.///
இது ராம்நாடு பின்னே தஞ்சை வாழ் மக்களுக்கு நேர்ந்த அவமானம் என்பதால் இத்துடன் இப்பதிவிலிருந்து விலகிச்செல்கிறேன்! (எம் மாநில சகோதரர்கள் பிற நாடுகளில் கேவலப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ ஒரு நாளும் தாங்கிக்கொள்ளமாட்டோம்!)//
ரீப்ப்ப்ப்பீபீப்ப்ப்ட்ட்டேஏஏஏஎ!///
அது சரி.. ஊருக்காரருக்கு சப்போர்ட்டா... செல்லாது செல்லாது.. ;))
/// ச்சின்னப் பையன் said...
:-)))))///
நன்றி சின்னப்பையன்!
///கானா பிரபா said...
ரசித்தேன்
//ஆயில்யன் said...
This post has been removed by the author. //
ரிப்பீட்டே, சாரி பழக்க தோஷம் ;)///
நன்றி கானா அண்ணே!
நல்ல பழக்க தோசம்.. அண்ணிகிட்ட சொன்னா சரியாயிடும்..:))
///வடகரை வேலன் said...
வீடியோ பயங்கர காமெடிங்க தமிழ்.////
நேரில் பார்த்து இருந்தா இன்னும் விலா நோக சிரிக்கலாம்.. :)))
///தமிழன்...(கறுப்பி...) said...
தல ரொம்ப நேரமா உங்க பதிவு திறக்காம முரண்டு பிடிச்சிடடிருந்திச்சு...///
இடைஞ்சல்களை எல்லாம் நீக்கியாச்சு தல.. :)
///தமிழன்...(கறுப்பி...) said...
நம்மளுக்கு இப்படி வாய்ப்பு கிடைக்கலையே சவுதில...:(
முடிஞ்சா தாய்fபுக்கு வரணும்..///
ஆமாம் தல.. ஒரு தடவை இந்தப் பக்கம் வாங்க... :)
///தமிழன்...(கறுப்பி...) said...
\\
12 பேர் ஒன்றாக ஒரே மாதிரி டிசைனில் சட்டை தேடி துபாய் மார்க்கெட்களில் அலைந்த காலம் உண்டு. கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது.
\\
நல்ல கலர்தானே...;)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/// தமிழன்...(கறுப்பி...) said...
\\
நாம மேற்குத் தொடர்ச்சி மலையையே மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கோமே.... ஒன்னும் தோணலை... ;))
\\
உண்மையாவா சொல்லவே இல்ல !!///
கூகுள் கொடுத்த ப்ளாக்கர் எடத்துக்கே என்னது தான்னு பட்டா போட்டு வைக்கலையா? அதுமாதிரி தான் இதுவும்ன்னு வச்சுக்குங்க.... ;))
//மின்னுது மின்னல் said...
http://www.youtube.com/watch?v=ntDgN7GErzA&NR=1
இந்த குசும்பன் தொல்லையும் தாங்க முடியலையே !!!!
:)///
ஆமா செமயா இருக்காரே இவர்.. :)))
/// தமிழன்...(கறுப்பி...) said...
\\
வரிக்குதிரைக்கு அருகில் போட்டோ எடுக்க போனால் அது ‘பின்’புறத்தை காட்டியே நின்று கொண்டிருந்தது.... ;)
\\
அதுக்கு புரிஞ்சிருக்கு...///
என்ன்ன்னு????? அவ்வ்வ்வ்வ்
//தமிழன்...(கறுப்பி...) said...
\\
கடைசி மூணு போட்டோவிலும் நான் இருக்கிறேன். (பழைய போட்டோ - ஸ்கேன் செஞ்சது. ஆண்டு 2002). இன்னும் போட்டோக்கள் ஊரில் இருக்கலாம்.
\\
எங்க இருக்கறிங்க...?///
ஹிஹ்ஹி இருக்கோம்ன்னா நம்பனும்.. கேள்வி கேக்கக்கூடாது.. ;))
Post a Comment