Wednesday, October 29, 2008

துபாய் நினைவுகள் - 7 வருஷமாக கூடவே ஒட்டி வந்த உறவு!

சமீபத்தில் ஒருநாள் அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போது, தூக்கம் வராமல் மொட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நாமளும் 1998 முதல் 10 வருடத்தை இப்படியே ஓட்டி விட்டோமே என்று எண்ணிக் கொண்டேன். அப்பத்தான் அந்த யோசனை வந்தது... துபாயில் இருந்த 7 வருடத்தில் நம்மோடு கூடவே இருந்த அதை நாம எப்படி மறந்து போனேம் என்று?? அப்பத்தான் நினைவுக்கு வந்தது.

எப்போதெல்லாம் நான் களைத்துப் போனேனோ அப்போதெல்லாம் அது கூடவே வந்தது. அகோரமான துபாய் வெயிலில் நொந்து போன போதெல்லாம் தாகம் தீர்த்தது. பசியால் துவண்ட போதெல்லாம் அருமருந்தாக வந்து உதவியது. உடல் தளர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் தளர்ச்சியைப் போக்கி உற்சாகத்தை அளித்தது.

என்ன அது? கீழே பாருங்கள்... இது தான் அது...




சுமார் 250 மிலி அளவுள்ள உப்பு சேர்க்கப்பட்ட குடிக்கத் தயாரான மோர் (Laban Drink). 50 Files மதிப்புள்ளது. (அரை திர்ஹம்). இவ்வளவு புகழ்வதற்கு ஏற்றதா இதுவென்றால்.. ஆம்... கண்டிப்பாக அதெற்கெல்லாம் ஏற்ற தகுதியான ஒரு பானமே.

துபாயில் இருந்த காலங்களில், பகலில் நிழலில் இருந்த நேரங்களை விட வெயிலில் இருந்த நேரங்களே அதிகம். அதிகப்படியான வெயிலினாலும், ஈரப்பத மிகுதியால் உருவாகும் வியர்வையாலும் உடல் தளர்ந்து போய் விடும். வெறும் தண்ணீரைக் குடித்தாலும், தலை வழியாக ஊற்றிக் கொண்டாலும் அதனால் ஏதும் பயன் இருந்ததில்லை. ஏனெனில் குடிக்கும் நீர் அனைத்தும் சில நிமிடங்களில் வியர்வையாக உடல் முழுவதும் இருந்து வெளியேறி விடும்.

அப்போது உடலில் நீரின் அளவை தக்க வைத்துக் கொள்ள இதுவே உதவியது. காலை 6:30 மணிக்கு அறையில் இருந்து கிளம்பும் போதே மதியத்திற்கான சாப்பாடை எடுத்துச் செல்ல வேண்டும். மதியச் சாப்பாடு காலை 4 மணிக்கே தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கும். அதை எடுத்துக் கொண்டு போய் மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும். அந்த நேரங்களில் தேவாமிர்தமாய் வயிற்றுக்குள் இறங்கும்.

சில நேரங்களில் இதை வாங்கிவதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரமெல்லாம் நடந்து கடைக்காக லைந்தி திரிந்து இருக்கின்றேன். பசி அதிகமாகும் போது ஒரு அரைக்கப்பட்ட சிக்கன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரட்டும் (2 திர்ஹம்), ஒரு லெபனுமே(0.50 Files) என் பசியையும் தளர்ச்சியையும் போக்கியுள்ளது. Wafi Mall க்கு அடுத்துள்ள EPPCO பெட்ரோல் ஸ்டேசனின் இருந்த ‘அந்த’ பிலிப்பைனி பெண் நான் சென்றதும் 2.50 திர்ஹமுக்கு பில் தட்டி வைப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள். நானும் அவளது வழக்கத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

இங்கு (சவுதி) பல லெபன்களை சுவைத்து விட்டேன். அந்த சுவையைத் தேடித் தேடி.... ம்ஹூம்.. அதில் 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் அந்த சுவையை ருசிப்பதற்காகவாவது ஒரு தடவை மீண்டும் துபாய் வர வேண்டும்... :)

33 comments:

ராமலக்ஷ்மி said...

ஒட்டி வந்த உறவோடு [இயல்பாகச் சொல்லியிருந்தாலும் கூட] நீங்கள் பட்டிருந்த கஷ்டங்களைப் படிக்கையில்...:((!

துளசி கோபால் said...

பசி நேரத்தில் சாப்பாடு கெட்டுப்போயிருக்கே(-:

கொடுமையா இருக்கு.

சந்தனமுல்லை said...

:((..அண்ணா..உழைப்பாளிதான் நீங்க!!

//மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும். //

கொடுமை இல்லை இது!!

Vadielan R said...

பசியின் கொடுமையை நீக்க அருமருந்தான பானத்துக்கு ஜே நாங்களும் தமிழ்நாட்டில் பசியின் கொடுமையை அனுபவித்தோம் அனுபவிக்கிறார்கள்

அன்புடன் அருணா said...

வெளினாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பதிவு உண்மையை உரைக்கிறது.
அன்புடன் அருணா

Unknown said...

என்னை மாதிரி நீங்களும் லெபன் அப் பிரியரா?

மக்கா வந்திருந்த போது ஒவ்வொரு நாளும் மாலையில் நோன்பு திறந்த பின் தொழப்போகுமுன் ரெயின்போ பாலில் போட்ட தேநீர் ஒரு கடையில் கொடுத்தார்கள். துபையில் அதே ரெயின்போ பாலில் போட்டாலும் அந்த சுவை இங்கே கிடைப்பதில்லையே?

வால்பையன் said...

//தூக்கம் வராமல் மொட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.//

அவ்ளோ நல்லவரா நீங்க

வால்பையன் said...

//சுமார் 250 மிலி அளவுள்ள உப்பு சேர்க்கப்பட்ட குடிக்கத் தயாரான மோர் //

இதை குடித்தால் போதை வருமா?

வால்பையன் said...

//பகலில் நிழலில் இருந்த நேரங்களை விட வெயிலில் இருந்த நேரங்களே அதிகம்.//

உங்க அலுவலகத்துக்கு டாப்பு இல்லையா?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நீங்க அனுபவிச்சிங்க...

நாங்க அனுபவிக்கிறோம்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே, இப்ப ஒன்னும் கஷ்ட்டம் இல்லல்ல,

ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்

இறைவன்....

உங்களுக்கும்... எனக்கும்!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அதே சாதனம் பல வகை சுவைகளிலும் கிடைக்கிறது. இனிப்பு கலந்த மேத்தி லெஸ்ஸி மற்றும் உரைப்பான மிளகாய் சுவையுடன்...

நமக்கு இனிப்புன்னா இஷ்ட்டம் :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நாம இங்க காய்ந்து போன குப்பூஸ்
சாப்பிட்டாலும் நம் குடும்பத்தார் பாலுடன் சாதம் சாப்பிடட்டும்!
அவர்களின் சந்தோஷத்திற்கு நாம் எத்தனை லெபன் அப் வேண்டுமானாலும் குடிக்கலாம்!

ராமய்யா... said...

Really I feel for the Gulf Working Indians..

Ingu avarkal kudumbam vasathiyaay vaala
avarkal angu asathiyaaay ulaikkiraarkal...

Raam

வடுவூர் குமார் said...

இன்றும் கிடைக்கிறதா? என்று தெரியவில்லை.
துபாய்க்கு வரும் போது சொல்லுங்க.

Unknown said...

அண்ணா படிச்சதும் மனசுக்கு கஷ்டமாகிடிச்சு... டேக் கேர் அண்ணா..!! :(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. ரொம்பக் கொடுமைதான்..பாவம்

நாணல் said...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நாம இங்க காய்ந்து போன குப்பூஸ்
சாப்பிட்டாலும் நம் குடும்பத்தார் பாலுடன் சாதம் சாப்பிடட்டும்!
அவர்களின் சந்தோஷத்திற்கு நாம் எத்தனை லெபன் அப் வேண்டுமானாலும் குடிக்கலாம்!


:)) நிதர்சனமான உண்மை..

நாணல் said...

இவளவு கொடுமையா இருக்குமா.. :(

VB2010 said...

தோழா... நான் துபாய் சென்று இறங்கியதும் தேடுவது அதைத்தான்... (நம்புங்கப்பா...) வெறும் உப்பு மட்டும் இல்லை .. நம்ம ஊரில் நீர் மோர் தருவாங்களே அதே மாதிரி இருக்கும்... இன்னும் கிடைக்கிறது...

புகழன் said...

//
மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும்
//
இந்தப் பதிவைப் படித்தால் வெளிநாடுகளில் போய் வேலை பார்க்கும் எண்ணமே வராது போல...

ரெம்பவே வருத்தமாக இருந்தது.

புகழன் said...

//
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நாம இங்க காய்ந்து போன குப்பூஸ்
சாப்பிட்டாலும் நம் குடும்பத்தார் பாலுடன் சாதம் சாப்பிடட்டும்!
அவர்களின் சந்தோஷத்திற்கு நாம் எத்தனை லெபன் அப் வேண்டுமானாலும் குடிக்கலாம்!

//

ஆனால் இதற்காக சில நேரங்களில் சென்றுதான் ஆக வேண்டிய நிலை உள்ளது.

கபீஷ் said...

// நாணல் said...
இவளவு கொடுமையா இருக்குமா.. :(
//

அதே...

கபீஷ் said...

//பிலிப்பைனி பெண் நான் சென்றதும் 2.50 திர்ஹமுக்கு பில் தட்டி வைப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள். நானும் அவளது வழக்கத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.
// :-)

ஆயில்யன் said...

:(((

ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக்கொண்டால் நிகழும் காலமெல்லாம் கவிதையாய் திகழும்!

வாய்ப்பு கிடைக்கும் மீண்டும் செல்லுங்கள்!

ரசித்த ருசி காண மட்டுமே!

மீண்டும் பழைய வாழ்க்கை மாற்றும் புது பணி தேடி :)))

சின்னப் பையன் said...

////மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும். //
//

:-((((((

Sanjai Gandhi said...

அண்ணே .. என்ன அண்ணே இப்படி மனச கனக்க வைச்சிட்டிங்க.. ஒடம்ப பாத்துக்கோங்க. காசு பணம் எப்போ வேணாலும் சம்பாதிக்கலாம்.

ஜியா said...

:((

வெண்பூ said...

என்னடா! ஒரு டப்பா மோரை இப்படி புகழுறாரேன்னு நெனச்சேன்..

//
மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும்
//

இதை படித்ததும் புரிந்தது.. :(

வல்லிசிம்ஹன் said...

லபான் அப் குடித்துக்கொண்டே நிழலில் வந்து அமரும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். மனம் உறுத்தும். எந்தத் தாய் பெற்ற பிள்ளையோ இங்கவந்து இப்படி கஷ்டப்படுகிறதே என்று.
மிகவும் வருத்தமாக இருக்கிறது.

cheena (சீனா) said...

தமிழ் பிரியன்

வத்தலக்குண்டு நலமாக இருக்க துபாயில் லெபன் அப் தான். என்ன செய்வது ? நிலைமை இப்பொழுது மாறி இருக்கும் - அங்கும் இங்கும் மகிழ்ச்சியே நிலவ நல்வாழ்த்துகள்

நானானி said...

//பெரும்பாலான நேரங்களில் ரெண்டுமே கெட்டுப் போயிருக்கும்//
மனசு நெகிழ்ந்தது. உழைத்துக் களைத்து
சாப்பிடப்போகும் போது....தன் குடும்ப நலனுக்காகப் இந்தப் பாடுபடும்
உங்களைப் போன்ற இளைஞர்களின் கடும் உழைப்பே அவர்களின் குடும்பத்தை மேல்நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

boopathy perumal said...

இன்றும் லெபன் அப் கடைகளில் தொடர்ந்து கிடைக்கிறது, விலை 50 அமிரக காசுகள். துபை எல்லோருக்கும் சொர்க்கபுரி அல்ல, தொழிலாலர்களின் நிலையை இங்கே நேரில் கண்டால்தான் புரியும், கடந்த சில வருட‌ங்களாக ஜுலை‍, ஆகஷ்ட் மாதங்களில் கடுமையான வெப்பம் காரணமாக பகல் 12 முதல் 3 மணி வரை வெயிலில் தொழிலாலர்கள் பணிசெய்வது தடை செய்ய‌ப்பட்டுள்ளுது.
இவ்வேலை நிறுத்த தடை வருவதற்கு முன் இவ்வேளையில் பணி செய்வது என்பது ஒரு கொடூர‌மான சூழ் நிலையயாக இருந்து வந்ததுள்ளது.
தொழிலாலர் குடியிருப்பு பகுதியின் சுற்றுசூழல் சீர்கேட்டை இந்த சுட்டியில் காணலாம்.
தற்போதைய உலகப் பொருளாதர தேக்கத்தினால் அமிரக பொருளாதரம் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகையுள்ளது. குறிப்பாக துபை கடும் நெருக்கடியில் உள்ளது
கஞ்சிதொட்டி திறக்கும் நிலையில் உள்ளதுஇதுவரை வேலை இழப்பு தொழிலாலர் முதல் மேலாலர் வரை ஒரு லட்சத்திற்கும் அதிமாக இருக்கும், ஆனால் இது பற்றி முழுமையான செய்தி வெளியாவது இல்லை. நான் தொடங்கி இருக்கும் வலைப்பூவில் எழுத இருக்கிறேன்