Tuesday, October 14, 2008

பழகிய தமிழும், பழகாத இந்தி மொழியும், அதனைப் பழக்கிய விதமும்

. .

அப்போது சென்னை VSNL (Videsh Sanchar Nigam Ltd) ல் வேலை செய்து கொண்டிருந்த நேரம். தமிழ் மீடியத்திலேயே படித்திருந்ததால் ஆங்கிலத்தில் பேசுவது இயலாமல் இருந்தது. (துபாய் வந்த பிறகு சரளமாகி விட்டது) VSNL மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கக் கூடிய ஒரு நிறுவனம். வெளிநாட்டு தொலைபேசி சேவை, இணைய இணைப்புகள் போன்ற சேவைகளை வழங்கி வந்தது. சன் டிவியின் ஆரம்ப காலகட்ட செய்திகள் VSNL மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்குள்ள டிரான்ஸ்மீட்டர்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

சென்னையில் இருப்பதால் தமிழர்கள் நிறைய பேர் வேலை செய்தனர். மத்திய அரசு நிறுவனம் என்பதால் நிறைய இந்தி பேசுபவர்களும் முக்கிய பதவிகளில் இருந்தனர்.

அங்கு இயக்குநராக இருந்தவர் முகர்ஜி என்ற வடமாநிலத்தவர். ஆள் ஒடிசலாக இருந்தாலும், வேகமான நடை, நடவடிக்கை கொண்டவர். தொழில்நுடப வேலைகள் தொடர்பாக அவருடன் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டிய நிலை இருக்கும். அவர் பேசும் ஆங்கிலம் நமக்கு புரியாது. நாம் பேசும் தமிழ் அவருக்கு புரியாது. அப்போது உதவிக்கு வந்தது தான் இந்தி மொழி.

பள்ளிப் படிப்பு படிக்கும் போதே தனியாக இந்தியையும் படித்திருந்தேன். ( ஹிந்தி பிரச்சார சபா மூலம் பிரவீன் வரை) ஆனாலும் பேச வாய்ப்பு இல்லாததால் இந்தி பேச்சு வழக்கத்தில் வரவில்லை. வீட்டில் யாருக்கும் இந்தியோ, உருதோ பேசத் தெரியாததால் வீட்டில் வாய்ப்பில்லை. அண்டை அயல் வீடுகளில் இருந்த உருது(?) பேசக் கூடியவர்களின் உருதைக் கேட்டு ஓடிப் போய் விடுவேன்.

இந்தியை தொலைக்காட்சிகளில் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையிலேயே இருந்தேன். சுரபி போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன். ஆனாலும் இந்தி மொழியை பேச இயலாத நிலையே இருந்தது.

ஆங்கிலம் நம் வழிக்கு வராததால் முகர்ஜியுடன் இந்தியில் பேச முயற்சி செய்தேன். அவர் இந்தி மொழியில் நல்ல ஆர்வலர். இருவரும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இந்தியிலேயே பேசுவோம். என்னால் பதில் சொல்ல இயலாமல் போனால் அவரே பதிலை எடுத்துக் கொடுப்பார். தவறாக பேசும் போது திருத்தியும் சொல்லித் தருவார். அப்புறம் அவர் பெயரை சொல்லி VSNL கேண்டீனின் நல்ல சாப்பாடும் பிளாக்கில் வாங்கி விடுவேன்.... :))))



பின்னர் கால சக்கரம் சுழற்றி அடிக்க.... அது நம்மைக் கொண்டு போய் துபாயில் போட்டது. இங்குதான் அடுத்த கட்ட சோதனைகள். பலதரப்பட்ட இந்தி பேசுபவர்கள் கிடைத்தனர். மும்பையின் கொச்சையாக இந்தி, டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிழியும் ஆந்திர, கர்நாடக இந்தி, போஜ்பூரி கலந்த உபி, பீகார் இந்தி, பெங்காலிகளின் இந்தி, தில்லியின் கொஞ்சம் சுத்தமாக இந்தி, பாகிஸ்தானிகளின் இந்தி, உருது மிக்சர் என சென்றதும் நம்மை திக்கு முக்காட செய்து விட்டன.

மும்பைக்காரனுடன் வேலை பார்த்த போது அவனுடன் சேர்ந்து சகவாச தோசத்தால் வாயைத் திறந்தால் அசிங்கமான வார்த்தைகள் வந்து விழும். சென்னையில் இருந்தால் தானாக வரும் ங்***** போல.

வேற்று மொழி பேசும் போது ஏற்படும் பெரிய தகராறு இதுதான். நாம் கேட்பதை முதலில் தமிழுக்கு மொழி பெயர்த்து, பின்னர் அதன் பொருள் விளங்குகின்றோம். நாம் பதில் சொல்லும் போதும், அதே போல் முதலில் தமிழில் யோசித்து பின்னர் அதை மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும். இதனால் புதிதாக கற்றுக் கொள்ளும் போது இதனால் பல பிரச்சினைகள் உருவாகும்.

எடுத்துக்காட்டுக்கு நம்முடன் வேலை செய்பவரைப் பற்றிக் குறிப்பிடும் போது நாம் பொதுவாக 'இவர் நம்மோட ஆள்' ‘அவர் உன்னோட ஆள்' என்று சொல்லி விடுவேன். இதை இந்தியில் மொழி பெயர்க்கும் போது ये हमारा आदमी है என்று சொல்வது சரியாக தோன்றும். ஆனால் இந்தி லோக்கல் பேச்சு வழக்கில் ஆத்மி என்பது பெண்கள் கணவரை சொல்லுவது. உபி, பீகார்க்காரர்கள் இப்படி சொல்லியதும் சிரித்து விடுவார்கள். அல்லது நம்மை கேலி செய்வார்கள்.

பின்னர் படிப்படியா 7 வருடம் அவர்களுடன் குப்பை கொட்டியதில் நன்றாகவே பேச வந்துவிட்டது. படித்தவர்களுடன் கொஞ்சம் தரமான இந்தியிலும், லோக்கல் ஆட்களுடன் அதற்குத் தகுந்தாற் போல் இந்தியும் பேசும் பழக்கமும் வந்து விட்டது.

சவுதி அரேபியா மெக்காவுக்கு வந்த பிறகு இந்தி பேசுவதில் புதிய பிரச்சினை முளைத்தது. எனது மேலதிகாரியாகிய பொறியாளர் பாகிஸ்தானில் கராச்சியைச் சேர்ந்தவர். உருது தாய் மொழியாதலால் தெளிவாக உருது பேசுவார். தனிப்பட்ட விடயங்களை பேசும் போது ஆங்கிலத்தை விட்டுவிட்டு உருதுவில் பேசுவோம்.

இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும் நிறைய வேறுபாடு இல்லையென்றாலும் உருது பேசுபவர்கள் காலங்களிலும் (Tense), உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்தி பேசுபவர்களிடம் இது குறைவாகவே காணப்படும்.

சாதாரணமாக 'வாருங்கள்' என்பதற்கு आओ भाई என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர் அதை விரும்புவதில்லை. आइये என்று சொல்வது தான் முறையான இலக்கணம், நீங்கள் சொல்வது போல் சொல்வது மரியாதை இல்லாதது என சொல்வார்.... இது போல் நிறைய

அதே போல் இந்தியில் நாம் சுலபமாக எடுத்துக் கொள்ளும் சில வார்த்தைகள்... தமிழிலும் எடுத்தாளப்படும் வார்த்தைகள்... समय (சமய - நேரம்), कारण(காரண் - காரணம்) सुध्द(சுத்த - சுத்தமான) रकत (ரக்த - குருதி)... இவைகள் உருதுவில் கிடையாது. இது போன்ற தமிழுக்கும், இந்திக்கும் இணக்கமான வார்த்தைகள் நமக்கு விரைவில் மனனமாகும். அதே போல் இந்தியில் இருக்கும் நிறைய வார்த்தைகளுக்கு உருதுவில் வேறு வார்த்தைகள் உள்ளன.

இதை அவரிடம் பேசும் போது விளங்காமல் விழிப்பார். பின்னர் அவைகளுக்கு உருதுவில் இருந்து வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து விளக்கி, சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவேன். எப்படியோ சமாளித்து காலம் சென்று கொண்டு இருக்கிறது.

டிஸ்கி : சென்னையில் இருந்த போது பழவந்தாங்கலில் இருந்த ஒரு இந்தி ஆசிரியையை சந்தித்தேன். அவர் பெயர் விஜயலக்ஷ்மி .நான் இந்திவில் பிரவீன் வரை படித்துள்ளதாக கூறிய போது
அவர் :“உனக்கெல்லாம் எவன்யா பிரவீன் பட்டமெல்லாம் கொடுத்தது”
நான் :“தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா மேடம்”
அவர் : “ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”

21 comments:

gulf-tamilan said...

நான் முதலா???

gulf-tamilan said...

//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
;)))))))

வெண்பூ said...

நல்ல அனுபவம். என்னதான் படித்தாலும் பேச வாய்ப்பில்லை என்றால் நம்மால் சரளமாக பேச முடியாது. எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.. ஆனா எப்படியோ பேசறதை புரிஞ்சிக்குவேன்.. :)

Subbiah Veerappan said...

அனுபவம் சுவையாகத்தான் இருக்கிறது!தொடர்ந்து எழுதுங்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது..:)

ஆத்மி// :)

☀நான் ஆதவன்☀ said...

//ஆனால் இந்தி லோக்கல் பேச்சு வழக்கில் ஆத்மி என்பது பெண்கள் கணவரை சொல்லுவது. உபி, பீகார்க்காரர்கள் இப்படி சொல்லியதும் சிரித்து விடுவார்கள்.//

பின்ன எப்படிங்க கூப்பிடனும்?. இதுவரைக்கும் நான் "ஆத்மி" என்ற வார்த்தையைத் தான் உபயோகப்படுத்துகிறேன்.

ராமலக்ஷ்மி said...

அனுபவம் அருமை.

வெண்பூ said... //என்னதான் படித்தாலும் பேச வாய்ப்பில்லை என்றால் நம்மால் சரளமாக பேச முடியாது. எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.. //

அதே. திருமணமான புதிதில் ஒன்றரை வருடம் மும்பையில். 'தத்தக்கா'விலேயே சமாளித்து விட்டு பெங்களூர் வந்தாச்சு. இங்கு ஆங்கிலம், தமிழ் வைத்தே சமாளித்து கன்னடம் படிக்காம டபாய்த்தாகி விட்டது.

நிஜமா நல்லவன் said...

//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
;)))))))

நவநீதன் said...

// எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.//
எனக்கும் தான்.
ஹி.. ஹி...


//பின்ன எப்படிங்க கூப்பிடனும்?. இதுவரைக்கும் நான் "ஆத்மி" என்ற வார்த்தையைத் தான் உபயோகப்படுத்துகிறேன்.//
நானும் ஆத்மி -ன்னு தான் கூப்பிடறேன்.


//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
என்ன கொடுமை சார் இது ...!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹிந்தியே தெரியாமல் அபுதாபி வந்து ஒரு ராஜஸ்தான் தாத்தாவோட பணி செய்ய வேண்டியிருந்ததால் 3 மாதத்தில் பேச வந்துவிட்டது.

ஹிந்தி கிளாசுக்கு போயி மாஸ்டரிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.

பின்ன 3ம் கிளாசு பொண்ணு சும்மா பொளந்துகட்டும்போது மேஜ் பர் க்யா ஹ? ல்லேயே நின்னா திட்டாம என்ன செய்வாரு?

அபி தோடா அச்சா பாத் கர்சக்தே! :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹிந்தி வார்த்தைகளை பயன்படுத்தும் போது தமிழிலும் எழுதுங்க, புரிந்துகொள்ள சுலபமாயிருக்கும்.

உதாரனம்: "ஆத்மி"

ஹிந்தியில் எழுதினது படிகனுமில்ல :(

Thamiz Priyan said...

//gulf-tamilan said...

நான் முதலா???//
வாங்க அண்ணே! நீங்களே தான் பர்ஸ்ட்ட்டூ

Thamiz Priyan said...

//gulf-tamilan said...

//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
;)))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///வெண்பூ said...

நல்ல அனுபவம். என்னதான் படித்தாலும் பேச வாய்ப்பில்லை என்றால் நம்மால் சரளமாக பேச முடியாது. எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.. ஆனா எப்படியோ பேசறதை புரிஞ்சிக்குவேன்.. :)///
பழக்கமானா எல்லாம் சரியாகிப் போய்டும். பேசிடலாம்.. :)

Thamiz Priyan said...

///SP.VR. SUBBIAH said...

அனுபவம் சுவையாகத்தான் இருக்கிறது!தொடர்ந்து எழுதுங்கள்!///
நன்றி ஆசானே!

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது..:)

ஆத்மி// :)///
நன்றி அக்கா! என்ன சிரிக்கிறீங்க??...;))

Thamiz Priyan said...

///நான் ஆதவன் said...

//ஆனால் இந்தி லோக்கல் பேச்சு வழக்கில் ஆத்மி என்பது பெண்கள் கணவரை சொல்லுவது. உபி, பீகார்க்காரர்கள் இப்படி சொல்லியதும் சிரித்து விடுவார்கள்.//

பின்ன எப்படிங்க கூப்பிடனும்?. இதுவரைக்கும் நான் "ஆத்மி" என்ற வார்த்தையைத் தான் உபயோகப்படுத்துகிறேன்.///

பழக்கம் இல்லாத ஆளுங்க பேசும் போது புரிஞ்சுக்குவாங்க.. அதையே கண்டினியூ பண்ணுங்க

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

அனுபவம் அருமை.

வெண்பூ said... //என்னதான் படித்தாலும் பேச வாய்ப்பில்லை என்றால் நம்மால் சரளமாக பேச முடியாது. எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.. //

அதே. திருமணமான புதிதில் ஒன்றரை வருடம் மும்பையில். 'தத்தக்கா'விலேயே சமாளித்து விட்டு பெங்களூர் வந்தாச்சு. இங்கு ஆங்கிலம், தமிழ் வைத்தே சமாளித்து கன்னடம் படிக்காம டபாய்த்தாகி விட்டது.///

அக்கா! ஆங்கிலம் இருந்தால் எல்லா இடங்களிலும் சமாளிக்க முடிகின்றது. ஆனால் உபி, பீகாரில் கிராமங்களில் இருந்து வருபவர்களிடம் வேலை வாங்கும் போது தான் அதன் கஷ்டம் தெரியுது.. :)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
;)))))))///
ஹிஹிஹிஹி நம்பீட்டீங்க தானே?.. ;))

Thamiz Priyan said...

/// நவநீதன் said...

// எனக்கும் இந்தி "தத்தக்கா புத்தக்கா"தான்.//
எனக்கும் தான்.
ஹி.. ஹி...


//பின்ன எப்படிங்க கூப்பிடனும்?. இதுவரைக்கும் நான் "ஆத்மி" என்ற வார்த்தையைத் தான் உபயோகப்படுத்துகிறேன்.//
நானும் ஆத்மி -ன்னு தான் கூப்பிடறேன்.


//“ஏதாவது பிராடு பண்ணி தான் நீ பாஸ் பண்ணி இருக்க முடியும்”//
என்ன கொடுமை சார் இது ...!///

நன்றீ நவநீதன்.. :)

Thamiz Priyan said...

/// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹிந்தியே தெரியாமல் அபுதாபி வந்து ஒரு ராஜஸ்தான் தாத்தாவோட பணி செய்ய வேண்டியிருந்ததால் 3 மாதத்தில் பேச வந்துவிட்டது.

ஹிந்தி கிளாசுக்கு போயி மாஸ்டரிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.

பின்ன 3ம் கிளாசு பொண்ணு சும்மா பொளந்துகட்டும்போது மேஜ் பர் க்யா ஹ? ல்லேயே நின்னா திட்டாம என்ன செய்வாரு?

அபி தோடா அச்சா பாத் கர்சக்தே! :)///

தம்பீ.. பஹூத் அச்சா ஹை!