Friday, October 17, 2008

சில பினாத்தல்களும், குறள் கதை, மற்றும் தமிழ் பதிவர்களின் ஆர்வமும்

.
.
ஒரு வீட்டுல இரண்டு பூனைகள் இருந்தது. ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். இன்னொரு பூனை குட்டிப் பூனை. பார்க்க அழகா இருக்கும்.

பெரிய பூனைக்கு குட்டி பூனையைப் பார்த்தாலே ஆகாது. எப்பப் பாத்தாலும் குட்டிப் பூனையை மிரட்டி, உருட்டிக் கிட்டே இருக்கும். திடீரென்று ஒருநாள் அதோட வில்லத்தனமான மூளை வேலை செய்தது. இந்த குட்டிப் பூனை இருந்தா தானே பிரச்சினை. அதையே இல்லாம ஆக்கிட்ட?

அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு பெரிய மெயின் ரோடு போகுது. எப்பப்பார்த்தாலும் நிறைய கார்கள் சர், சர்ரென்று போய்க்கிட்டே இருக்கும். ஒருநாள் பெரிய பூனை, குட்டிக்கிட்ட போய் நைச்சியமா பேசுச்சு. ரெண்டு பேரும் மெயின் ரோட்டில் போய் வேகமா போற வண்டிகளை வேடிக்கை பார்க்கலாம்னு சொல்லிச்சு.

குட்டிப்பூனையும் அதோட கள்ளத்தனம் தெரியாம சரின்னு கூட போச்சு. வண்டிக வேக வேகமா வந்துகிட்டு இருக்கு. சட்டுன்னு குட்டிப்பூனையை தூக்குன பெரிய பூனை, வேகமாக வந்துக்கிட்டு இருந்த ஒரு காருக்கு முன்னாடி தூக்கி போட்ருச்சு... கிரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ந்னு சத்தம்... அப்புறம் என்னாச்சு... அதை கடைசில் காட்றேன்.. அதுக்கு முன்னால என்னை கொஞ்சம் பினாத்த விடுங்க... ;)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது. மொத்தமாக இந்தியா வரும் முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக உடல் பரிசோதனை முக்கியம். இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே கட்டாயம்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது, இரத்தம் கொடுத்த பிறகு எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள ரேடியோகிராபர் ஒரு பெண். கண்களை மட்டும் தெரியும் வண்ணம் பர்தா அணிந்து இருந்தார். எனது கோப்பை அவரிடம் கொடுத்து விட்டு, எக்ஸ்ரே இயந்திரத்தின் முன், எக்ஸ்ரே எடுக்கும் முறைப்படி நின்று கொண்டேன். சில வினாடிகளில் எக்ஸ்ரே முடிந்தது.

எக்ஸ்ரே எடுத்த அந்த பெண் அரபியில் கூறினார் “எந்த சிரமமுல்லாமல் நான் எக்ஸ்ரே எடுப்பது இதுதான் முதல் முறை. நன்றி!”. அவருக்கு சிரிப்பை பதிலாக உதிர்த்து விட்டு திரும்பினேன். பாவம் இது போன்ற ரேடியாலஜி வேலை செய்பவர்கள்.

துபாயில் இருந்த போது ஷார்ஜா Preventive Medicine Dept.. ல் வேலை செய்தேன். அங்கு தான் ஷார்ஜா விசாவில் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளைச் சேர்ந்தவர்களும் வரக்கூடிய இடமாக இருக்கும். அங்குள்ள ரேடியாலஜி பகுதியில் ஒரு மராட்டி பெண் இருந்தார். (श्रध्दा - shradhdha - தமிழில் எழுத வரவில்லை). அங்கு மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை எக்ஸ்ரே இயந்திரத்தின் முன் நிறுத்தி கையை பின்னால் கட்ட மடக்கி, நெஞ்சை நிமிர்த்தி, மூச்சை இழுத்துப் பிடிக்கச் சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவார்.

இதைப் பார்க்கும் போது சில நேரங்களில் சிரிப்பாகவும், பல நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அங்கு இருந்து பார்த்து பழக்கமானதால் எக்ஸ்ரே எடுக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனது பதிவில் ஹிட்ஸ் கவுண்டர் வைத்துள்ளேன். பதிவை போன வருடமே ஆரம்பித்து எழுதி வந்தாலும் ஏபரலில் ஹிட்ஸ் கவுண்டர் போட்டதாகவே நினைவு. ஹிட்ஸைப் பார்த்து, அவ்வப்போது நமது உறவுக்காரப் பதிவர்கள் வந்தார்களா என பார்த்துக் கொள்வேன். சாதாரணமாக பதிவு போடும் நாளில் 200 முதல் 300 ஹிட்ஸூல் இல்லையென்றால் 100 முதல் 150 வரை இருக்கும். தனி வருகை 200 க்குள் தான் இருக்கும். சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.

என்னப்பா இது நியாயம்? நல்ல பதிவு எழுதும் போதெல்லாம் காணாம போய்டுறீங்களே... ;))




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமீபத்தில் நண்பர் ஒருவர் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு, நினைவுப்படுத்தும் வகையிலும், நண்பர்களின் பிறந்தநாட்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும் ஒரு இணைய தளத்தில் இருந்து நமக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அங்கு சென்று பதிந்தத போது, எனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அங்கேயே இருந்து வசதி இருப்பதாக வந்தது. அங்கு நமது கூகுள் மெயில் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் அவர்களே நமது நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பார்களாம். பின்னர் தான் புரிந்தது. இதே முறையில் தான் எனக்கும் அழைப்பு வந்துள்ளது என்று.

இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற இணைய தளங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நமது மின்னஞ்சலின் பாஸ்வேர்ட்டைத் தருவதன் மூலம் அங்குள்ளவர்கள் நமது மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகலாம். எச்சரிக்கை கவனத்துடன் இருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெரிய பூனைக்கு என்ன ஆச்சி? விதி வலியது என்று சொல்வார்கள். கோட்டை கொத்தளங்களுக்குள் சென்று மறைந்து கொண்டாலும், நடப்பது நடந்தே தீருமாம். இதை சிம்பிளாக விளக்கும் இந்த GIF படத்தைப் பாருங்க... இதுதான் சொந்த செலவுல சூடு என்பதா... :))




படம் நன்றி : பிகேபியின் வலைப்பக்கம்

நீதிக்கான குறள் :
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 208

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

குறள் உதவி : கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா, மற்றும் துளசி டீச்சர்.

இதே போல்(?) குறளை வைத்து கதை சொல்பவர்கள் சொல்லலாம். என்னை அழைத்த ஜீவ்ஸுக்கு நன்றி!

59 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

பாவம் நீங்க... என்னாச்சி திடீர்னு பினாத்த ஆரம்பிச்சிட்டிங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் தான் பஸ்ட்டு....

ராமலக்ஷ்மி said...

நன்று நன்று.
கதை ஒன்று.
குறள் மூன்று.
*** *** ***

//இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை.//

புரிந்தது. நன்றி தமிழ் பிரியன்!

gulf-tamilan said...

என்ன ஆச்சு குட்டி கதையெல்லாம் எழத (பினாத்த)ஆரம்பிச்சிட்டிங்க ;)))))

துளசி கோபால் said...

ஷ்ரத்தா


பெருசோ சிறுசோ பூனையைக் கதம் செஞ்சதுக்கு.......(-:

இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு கதை!


ஹிட்ஸ் அது தமிழ் வாசகர்களின் பதிவர்களின் மனதுக்கு ஒரு புரியாத புதிர் :))

அப்புறம் அந்த மெயில் ஐடி விசயம் இது கொஞ்சம் சாக்கிரதையாத்தான் கையாளவேண்டும் ஒரே பாஸ்வேர்டு எல்லா இடங்களிலும் உபயோகிக்க வேண்டாம் இதுதான் நொம்ப பெஸ்ட் !

Unknown said...

நல்லா இருக்கு அண்ணா உங்க பினாத்தல்கள்..!! :))

Anonymous said...

very clever.

Anonymous said...

i think you add more info about it.

gulf-tamilan said...

//ihi excavator

jcb loader //
இவங்க எல்லாம் யாரு???

Anonymous said...

im your favorite reader here!

Anonymous said...

help me.

Anonymous said...

help me.

Thamiz Priyan said...

அனானி! அண்ணாச்சிகளா நான் பாவம்ல விட்டுடுங்க... ஏன் இப்படி கொடுமை படுத்துறீங்க
கமெண்ட் மாடரேஷன் பண்ணனுமா?

விஜய் ஆனந்த் said...

ம்ம்ம்ம்...கதையும், குறளும் சூப்பர்...ஏன் பினாத்தல்ன்னு தலைப்புல போட்டீங்க???

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே வர வர உங்க பதிவுகள் ஜனரஞ்சகமா இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

ஜனரஞ்சக பதிவர்னு நான் எழுதினதுல தப்பில்லையே அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

சின்னக்கதை நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்கு இருக்கிற தமிழார்வம் தெரியும்தானே...அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

\\
அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது.
\\

இன்னும் இரண்டு வருசம் இருப்பிங்களா ?

தமிழன்-கறுப்பி... said...

\\
சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.
\\

;)
கார்த்திகாவை நிறையப்பேருக்கு பிடிச்சிருக்கு அப்படிங்கிறதுதான் அர்த்தம்...!

தமிழன்-கறுப்பி... said...

\\
என்னப்பா இது நியாயம்? நல்ல பதிவு எழுதும் போதெல்லாம் காணாம போய்டுறீங்களே... ;))
\\

என்ன கொடுமை மக்களே இது...;)

Anonymous said...

NoT bAD!

Anonymous said...

Good

Anonymous said...

is it???

Anonymous said...

Happy to know that!

புகழன் said...

பூனை கதை நல்லாயிருக்கு,
யானை கதை எப்ப போடுவீ்ங்க

நான் said...

இப்ப ரோட்டு ஓரமா நடக்குறவங்க மேலதான் லாரி பஸ் எல்லாம் ஓட்டுறாங்க...பேசாம நடு ரோட்டுல நடக்கலாம் போல..

தமிழ் அமுதன் said...

ஓகே! குட்!நல்லாருக்கு!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வணக்கமண்ணே!

நல்லா இருக்கு உங்க மிக்ஸ் !

அப்புறம் நீங்க எழுதிய குறள் கதை போல கல்லூரி படிக்கும் போது “திருக்குறள் கதை” போட்டியில் எழுதிய கதை நினைவுக்கு வருது. 2ம் பரிசு பெற்ற அதை ஒரு பதிவாக போடுவோம்.

Anonymous said...

நல்லாத்தானே போய்ட்டிருக்கு. ஏன் பினாத்தல்னு சொலறீங்க.

குறள் கதை நல்லா இருக்கு. இரண்டு வருட நீட்டிப்புக்கு வாழ்த்துக்கள்.

நிறைய வங்கிகள் உங்களுக்கு ரசிகர்களா இருக்காங்க போல இருக்கு என் தொழிலுக்கு கொஞ்சம் நிதி உதவி செய்ய சிபாரிசு ப்ளீஸ் :-).

சின்னப் பையன் said...

பூனை கதை சூப்பர்..

நாளைக்கு யானை கதைங்களா????

வெண்பூ said...

நல்லா பெனாத்துறீங்க..உங்கள ஏன் இனிமே பெனாத்தல் பிரியன்னு கூப்புடக்கூடாது???

ராமலக்ஷ்மி said...

//ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். //

இப்படிச் சொல்லிட்டா துளசி மேடம் விட்டுருவாங்கன்னுதானே நினைச்சீங்க!

//துளசி கோபால் said...

ஷ்ரத்தா


பெருசோ சிறுசோ பூனையைக் கதம் செஞ்சதுக்கு.......(-://

இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.
இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.//

அட, ஆமாம்:(. இதுக்குதான் டீச்சர் வேணும் அப்பப்போ நம்மக் காதைத் திருகுவதற்கு:)!

Anonymous said...

பெரிய பூனைக்கு நேரம் சரியில்லை போல... ;)

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...
பாவம் நீங்க... என்னாச்சி திடீர்னு பினாத்த ஆரம்பிச்சிட்டிங்க...///
உங்க கூட சேர்ந்தாச்சுல்ல.. அப்படித்தான்.. ;)

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...
நான் தான் பஸ்ட்டு....///
நீங்களே தான் பர்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டூ

Thamiz Priyan said...

////ராமலக்ஷ்மி said...

நன்று நன்று.
கதை ஒன்று.
குறள் மூன்று.
*** *** ***

//இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை.//

புரிந்தது. நன்றி தமிழ் பிரியன்!////

நன்றி அக்கா!

Thamiz Priyan said...

//gulf-tamilan said...
என்ன ஆச்சு குட்டி கதையெல்லாம் எழத (பினாத்த)ஆரம்பிச்சிட்டிங்க ;)))))////
ஹிஹிஹிஹி என்ன செய்ய.. வேற வேலை வேணுமே.. ;))

Thamiz Priyan said...

///துளசி கோபால் said..
ஷ்ரத்தா
பெருசோ சிறுசோ பூனையைக் கதம் செஞ்சதுக்கு.......(-:
இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.///
நன்றி டீச்சர், பூனைக்கு ஒன்னும் ஆகலையாம்.. வண்டியில் அடிபடும் போது இந்தியன் தாத்தா மாதிரி பறந்துடுச்சாம். அதுக்கு அப்புறம் தன் தவறை எண்ணி வருந்தி திருந்திடுச்சாம்... இப்ப ம்,அகிழ்ச்சி தானே டீச்சர்.. :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
நல்லா இருக்கு கதை!
ஹிட்ஸ் அது தமிழ் வாசகர்களின் பதிவர்களின் மனதுக்கு ஒரு புரியாத புதிர் :))
அப்புறம் அந்த மெயில் ஐடி விசயம் இது கொஞ்சம் சாக்கிரதையாத்தான் கையாளவேண்டும் ஒரே பாஸ்வேர்டு எல்லா இடங்களிலும் உபயோகிக்க வேண்டாம் இதுதான் நொம்ப பெஸ்ட் !///

நொம்ப நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///ஸ்ரீமதி said...

நல்லா இருக்கு அண்ணா உங்க பினாத்தல்கள்..!! :))///
நன்றி தங்கச்சி!

Thamiz Priyan said...

///gulf-tamilan said...
//ihi excavator
jcb loader //
இவங்க எல்லாம் யாரு???///
ரொம்ப நல்லவங்க போல இருக்குண்னா.. :))

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...

ம்ம்ம்ம்...கதையும், குறளும் சூப்பர்...ஏன் பினாத்தல்ன்னு தலைப்புல போட்டீங்க???///
இப்படி மொத்தமா நிறைய விஷயத்தை சொன்னா பினாத்தரதுன்னு சொல்வோம்... ;))

Thamiz Priyan said...

/// தமிழன்...(கறுப்பி...) said...

அண்ணே வர வர உங்க பதிவுகள் ஜனரஞ்சகமா இருக்கு..///
என்ன வச்சு காமெடி கீமெடி பண்னலையே???

Thamiz Priyan said...

///தமிழன்...(கறுப்பி...) said...

ஜனரஞ்சக பதிவர்னு நான் எழுதினதுல தப்பில்லையே அண்ணே...//
ஹிஹிஹி நன்றி தமிழன்!

Thamiz Priyan said...

///தமிழன்...(கறுப்பி...) said...
சின்னக்கதை நல்லாருக்கு...///
நன்றி தமிழன்!

Thamiz Priyan said...

///தமிழன்...(கறுப்பி...) said...

\\
அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது.
\\

இன்னும் இரண்டு வருசம் இருப்பிங்களா ?///

எனக்கே தெரியலை தமிழன்! அக்காமா ரினிவல் செஞ்சாச்சு.. பார்ப்போம் கடவுளின் எழுத்து எப்படின்னு.. :)

Thamiz Priyan said...

///தமிழன்...(கறுப்பி...) said...

\\
சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.
\\

;)
கார்த்திகாவை நிறையப்பேருக்கு பிடிச்சிருக்கு அப்படிங்கிறதுதான் அர்த்தம்...!///
ஹிஹிஹிஹி உங்களுக்கும் தானே தமிழன்!

Thamiz Priyan said...

///புகழன் said...
பூனை கதை நல்லாயிருக்கு,
யானை கதை எப்ப போடுவீ்ங்க///
சீக்கிரமே போட்டுடலாம்.. வெயிட் பண்ணுங்க.. ;)

Thamiz Priyan said...

///நான் மட்டும் said...

இப்ப ரோட்டு ஓரமா நடக்குறவங்க மேலதான் லாரி பஸ் எல்லாம் ஓட்டுறாங்க...பேசாம நடு ரோட்டுல நடக்கலாம் போல..///
செம ஐடியாவா இருக்கும் போல இருக்கே.. நீங்க மட்டும் இருக்கும் ஊரில் வேண்டுமானால் அப்படி செய்யலாம்.. ;)

Thamiz Priyan said...

///ஜீவன் said...

ஓகே! குட்!நல்லாருக்கு!///
நன்றி ஜீவன்!

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வணக்கமண்ணே!

நல்லா இருக்கு உங்க மிக்ஸ் !

அப்புறம் நீங்க எழுதிய குறள் கதை போல கல்லூரி படிக்கும் போது “திருக்குறள் கதை” போட்டியில் எழுதிய கதை நினைவுக்கு வருது. 2ம் பரிசு பெற்ற அதை ஒரு பதிவாக போடுவோம்.///

ஆமா சுடர்! போடுங்க.. வந்துடுறோம்.. :)

Thamiz Priyan said...

/// வடகரை வேலன் said...

நல்லாத்தானே போய்ட்டிருக்கு. ஏன் பினாத்தல்னு சொலறீங்க.

குறள் கதை நல்லா இருக்கு. இரண்டு வருட நீட்டிப்புக்கு வாழ்த்துக்கள்.

நிறைய வங்கிகள் உங்களுக்கு ரசிகர்களா இருக்காங்க போல இருக்கு என் தொழிலுக்கு கொஞ்சம் நிதி உதவி செய்ய சிபாரிசு ப்ளீஸ் :-).///

நன்றி வேலன் சார்! வராங்க.. ஆனா எனக்கே கடன் தர மாட்டேன்கிறாங்க.. :_

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...
பூனை கதை சூப்பர்..
நாளைக்கு யானை கதைங்களா????///

ஹிஹிஹிஹி சொல்லிட்டா போச்சு... ;))

Thamiz Priyan said...

///வெண்பூ said...

நல்லா பெனாத்துறீங்க..உங்கள ஏன் இனிமே பெனாத்தல் பிரியன்னு கூப்புடக்கூடாது???////
வாணாமுங்க.. நம்ம தமிழ் பிரியனுக்கு நிகரான பெயர் கிடைக்காது.. ;))

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
//ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். //
இப்படிச் சொல்லிட்டா துளசி மேடம் விட்டுருவாங்கன்னுதானே நினைச்சீங்க!
//துளசி கோபால் said...

ஷ்ரத்தா


பெருசோ சிறுசோ பூனையைக் கதம் செஞ்சதுக்கு.......(-://

இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.
இன்னொண்ணு, இப்படித் திட்டம்போட்டு வேலை செய்ய மனுசனுக்குத்தான் தெரியும்.//
அட, ஆமாம்:(. இதுக்குதான் டீச்சர் வேணும் அப்பப்போ நம்மக் காதைத் திருகுவதற்கு:)!///

நானே டீச்சரிடம் தப்பி பிழைச்சு வந்திருக்க்ற்ன்.. மாட்டி விடாதீங்க அக்கா.. ;))

கண்மணி/kanmani said...

தமிழ்ப்பிரியன் ஆர் யூ ஆல்ரைட்?

Thamiz Priyan said...

///Thooya said...

பெரிய பூனைக்கு நேரம் சரியில்லை போல... ;)///
தூயாக்கா! வருகைக்கு நன்றி... இதைத் தான் விதி என்று சொல்வார்கள்!