Thursday, October 23, 2008

Flash News : பின்னூட்டப் பெட்டி மற்றும் டெம்ப்ளேட் தொல்லைகள் - சில விபரங்கள்!

Publish Post

இன்று நமது பதிவர்களில் சிலருக்கு பின்னூட்டப் பெட்டி திறப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிகின்றது. பிளாக்கரில் செய்யும் அப்டேட்களால் இந்த பிரச்சினை நிகழ்ந்துள்ளது போல் தெரிகின்றது. ப்ளாக்கர் டெம்ப்ளேட் இல்லாமல் மற்ற டெம்ப்ளேட் வைத்துள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமான உள்ளது.

அதாவது Post a comment என்பதை இடுகையின் கீழே அழுத்தும் போது, அது மீண்டும் இடுகையிலேயே நிற்கின்றது. ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ள பின்னூட்டம் தட்டச்சும் பெட்டியுடன் கூடிய பின்னூட்டப் பெட்டி அமைப்பு தானாக இடம் மாறியுள்ளது காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால்
Dash Board, Settings, Comments சென்று Comment Form Placement என்பதில் Embedded below post என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அதை என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு கீழே சென்று Save செய்து கொள்ளுங்கள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அதே போல் சிலருடைய பதிவுகளைத் திறக்கும் போது பதிவு திறக்காமல் சிறிது நேரம் அடம் பிடிக்கின்றது. அப்போது கணிணி சுத்தமாக செயல் இழந்து விடுகின்றது. நிறைய பேர் தங்களுடைய டெம்ப்ளேட்டில் தேன்கூடு மற்றும் சிரிப்பான்களுக்கு சில நிரலிகளை பயன்படுத்துகிறோம்.

தேன் கூடு செயல்பாட்டில் இல்லையாததால் அதனால் தாமதமாகின்றது. எனவே அதை எடுத்து விடுவது நல்லது.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி

<!--thenkoodu-comments-ping-code-->
<b:if cond='data:blog.pageType == "item"'>
<b:if cond='data:post.numComments != 0'>
<script expr:src=' "http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=" + data:post.url + "&amp;postid=" + data:post.id + "&amp;blogurl=" + data:blog.url + "&amp;cmt=" + data:post.numComments' language='javascript'
type='text/javascript'>
</script>
</b:if>
</b:if>
<!--/thenkoodu-comments-ping-code-->

இரண்டாவதாக சிரிப்பான் (Smiley) தெரிய பலரும் தீபாவின் நிரலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதோ பிரச்சினை இருப்பதால் பதிவு திறக்கும் போது கணிணி ஸ்தம்பிக்கிறது. எனவே அதையும் நீக்கி விடுங்கள்.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி
<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>

வேறு பிரச்சினைகள் இருந்தால் அதையும், அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதிலையும் கூறிச்செல்லலாம்.

இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!
லஞ்ச் பிரேக்கில் வந்த அவசரத்தில் பதிவு போட்டதால் தலைப்பு தட்டச்சும் போது எழுத்துப் பிழையாகி அர்த்தம் அனர்த்தமாகி விட்டது. அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன்.

37 comments:

கானா பிரபா said...

நீர் ரெம்ப நல்லவரு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.

Anonymous said...

என்னுடையது Fullpage இல் தான் உள்ளது. இப்பவும் பிரச்சனை உள்ளதா சகோதரா?

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
நீர் ரெம்ப நல்லவரு ;)
//

இது ஒரு பிழை இருக்கு

நீர் ரொம்ப நல்லது அப்படின்னுத்தான் இருக்கணும்! (ஒருவேளை கானா அப்படி சொல்லி பின்னூட்டப்பொட்டி தப்பா பிரிண்ட் பண்ணுது போல?!!!)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.
//

மறுக்கா கூவிக்கிறேன்!

கையெல்லாம் நடுங்குது இதுல வேற நாளைக்கு வீக் எண்ட் :(((( (என்னால கமெண்ட்ஸ் போட முடியாதா??????)

ராமலக்ஷ்மி said...

இன்று Dashboard-ல் Embedded below post-யை உபயோகிக்குமாறு கூகுளாரின் அறிவிப்பைப் பார்த்துச் சும்மாப் போகாமல் செட்டிங்...பின்னர் கமெண்ட்ஸில் போய் பார்த்தால் தானாகவே இடம் மாறி இருந்ததைப் பார்த்தேன். சரின்னு சேவ் செய்தால் நீங்க சொன்ன பிரச்சனை. பிறகு...ஹிஹி, உங்க பதிவு பார்க்கும் முன்னர் நானாவே அங்கு போய் Full Page-க்கு மாறி விட்டேன்.[பரவாயில்லையே, எனக்கும் இதெல்லாம் செய்யத் தெரியுதே:)!]

//இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)//

நல்லாயிருக்கே அட்வர்டைஸ்மெண்டு:)!

ஆயில்யன் said...

//இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)///

அங்க போனா அங்க பின்னூட்ட பொட்டி ஒபன் ஆகலை அப்படி பிரச்சனை இருந்தா இந்த லிங்கு போக சொல்றீங்கா இப்படியே போய்ட்டு போய்ட்டு வந்தாச்சு!

இப்ப நான் எப்பிடி உங்க பதிவுலேர்ந்து வெளியேறுவது????????????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...
//இது ஒரு பிழை இருக்கு//

எங்கே நான் கண்டு பிடிச்ச பிழையைத்தான் சொல்ல வருகிறீர்களோ என நினைத்தேன் ஆயில்யன்:).

தமிழ் பிரியன், typing error edit செய்யுங்க. Falsh அல்ல Flash.

ஜே கே | J K said...

ஆமாண்ணே. எனக்கு கூட அப்படிதான் ஆச்சு. அப்புறம் சரி பண்ணினேன்.

சின்னப் பையன் said...

நீர் ரெம்ப நல்லவரு ;)

கிரி said...

பலருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்

MyFriend said...

நெஜமாலுமே நீதான்யா நல்லவன். :-)

anujanya said...

தமிழ்,

நீங்க உண்மையிலேயே நல்லவருதான். எனக்கே தெரியாம என்ன கண்றாவியோ செய்துட்டோம்னு பயந்தேன். மிக்க நன்றி.

////முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.//

ஹா ஹா. ரசித்தேன்.

அனுஜன்யா

cheena (சீனா) said...

நன்றி தமிழ் பிரியன் - தேன்கூடு எடுத்துட்டேன்

KARTHIK said...

நன்றி

Anonymous said...

தகவலுக்கு நன்றி தமிழ்.

Thamiz Priyan said...

//கானா பிரபா said...
நீர் ரெம்ப நல்லவரு ;)///
அண்ணே! புகழாதீங்க... கூச்சமா இருக்குதுல்ல.. :) வெட்க வெட்கமா வருது பாருங்க

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.///
ஆமாக்கா! நமக்கு கட்ம தானே முக்கியம்.. கை, காலெல்லாம் எனக்கு நடுங்குச்சுன்னா பாத்துக்கங்க

Thamiz Priyan said...

///Thooya said...

என்னுடையது Fullpage இல் தான் உள்ளது. இப்பவும் பிரச்சனை உள்ளதா சகோதரா?///
அக்கா உங்க பதிவில் ஸ்மைலி இருக்கு... அதான் திறக்கும் போது படபடவென எரர் அடிக்குது... அந்த நிரலை எடுத்துடுங்க

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//கானா பிரபா said...
நீர் ரெம்ப நல்லவரு ;)
//
இது ஒரு பிழை இருக்கு
நீர் ரொம்ப நல்லது அப்படின்னுத்தான் இருக்கணும்! (ஒருவேளை கானா அப்படி சொல்லி பின்னூட்டப்பொட்டி தப்பா பிரிண்ட் பண்ணுது போல?!!!)///

அண்ணே! எப்படின்னே இதெல்லாம்... உங்களால மட்டும் முடியுது. கீப் இட் அப்!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.
//

மறுக்கா கூவிக்கிறேன்!

கையெல்லாம் நடுங்குது இதுல வேற நாளைக்கு வீக் எண்ட் :(((( (என்னால கமெண்ட்ஸ் போட முடியாதா??????)///

சேம் பிளட்ட்டு

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
இன்று Dashboard-ல் Embedded below post-யை உபயோகிக்குமாறு கூகுளாரின் அறிவிப்பைப் பார்த்துச் சும்மாப் போகாமல் செட்டிங்...பின்னர் கமெண்ட்ஸில் போய் பார்த்தால் தானாகவே இடம் மாறி இருந்ததைப் பார்த்தேன். சரின்னு சேவ் செய்தால் நீங்க சொன்ன பிரச்சனை. பிறகு...ஹிஹி, உங்க பதிவு பார்க்கும் முன்னர் நானாவே அங்கு போய் Full Page-க்கு மாறி விட்டேன்.[பரவாயில்லையே, எனக்கும் இதெல்லாம் செய்யத் தெரியுதே:)!]
//இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)//
நல்லாயிருக்கே அட்வர்டைஸ்மெண்டு:)!///

அக்கா! தம்பி எனக்கே தெரியும் போது உங்களுக்கு இன்னும் அழகா தெரிஞ்சு இருக்கும்..:)
ஆட் நல்லா இருக்கா? ஹா ஹா ஹா

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)///
அங்க போனா அங்க பின்னூட்ட பொட்டி ஒபன் ஆகலை அப்படி பிரச்சனை இருந்தா இந்த லிங்கு போக சொல்றீங்கா இப்படியே போய்ட்டு போய்ட்டு வந்தாச்சு!
இப்ப நான் எப்பிடி உங்க பதிவுலேர்ந்து வெளியேறுவது????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!///

ஹா ஹா ஹா.. உள்ளேயே சுத்துங்க நல்லா ஜாலியா இருக்கும்.. ;)))

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
ஆயில்யன் said...
//இது ஒரு பிழை இருக்கு//
எங்கே நான் கண்டு பிடிச்ச பிழையைத்தான் சொல்ல வருகிறீர்களோ என நினைத்தேன் ஆயில்யன்:).

தமிழ் பிரியன், typing error edit செய்யுங்க. Falsh அல்ல Flash.///

நன்றி அக்கா! அவசரமா பதிவு போட்டுட்டு வேலை ஓடும் அவசரத்தில் இருந்தேன். தட்டச்சில் தவறு செய்து விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி! சரி செய்து விட்டேன்.

Thamiz Priyan said...

///ஜே கே | J K said...

ஆமாண்ணே. எனக்கு கூட அப்படிதான் ஆச்சு. அப்புறம் சரி பண்ணினேன்.///
அண்ணனா? தள இந்த ஜே கேயை என்னன்னு கேளுங்க?
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...

நீர் ரெம்ப நல்லவரு ;)////
ரொம்ப நன்றி ச்சின்னப் பையன்!

Thamiz Priyan said...

///கிரி said...

பலருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்///
நன்றி கிரி!

Thamiz Priyan said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

நெஜமாலுமே நீதான்யா நல்லவன். :-)///
எல்லாம் கேட்டுக்கங்க.. .நான் நல்லவன். மை பிரண்ட் அக்காவே சொல்லிட்டாங்க.. ;))

Thamiz Priyan said...

///அனுஜன்யா said...
தமிழ்,
நீங்க உண்மையிலேயே நல்லவருதான். எனக்கே தெரியாம என்ன கண்றாவியோ செய்துட்டோம்னு பயந்தேன். மிக்க நன்றி.
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னன்னா பின்னூட்டம் வரவும் மாட்டேங்குது ..போடவும் முடியமாட்டேங்குது ..இதனால் கடமை யாற்ற முடியாமல் பதிவுலக வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது.. நன்றி.//
ஹா ஹா. ரசித்தேன்.
அனுஜன்யா///
நன்றி அனுஜன்யா! மிக்க நன்றி!

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...

நன்றி தமிழ் பிரியன் - தேன்கூடு எடுத்துட்டேன்///
நன்றி சீனா சார்!

Thamiz Priyan said...

///கார்த்திக் said...

நன்றி///
நன்றி கார்த்திக்!

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...

தகவலுக்கு நன்றி தமிழ்.///
நன்றி வேலன் சார்!

Anonymous said...

//அக்கா உங்க பதிவில் ஸ்மைலி இருக்கு... அதான் திறக்கும் போது படபடவென எரர் அடிக்குது... அந்த நிரலை எடுத்துடுங்க//

நீங்கள் மேலே சொன்ன ஸ்மைலி கோட் இல்லை..வேறு ஏதும் இருக்குமோ? எப்படி அறிவது?

துளசி கோபால் said...

எனக்கும் இது ஒரு பிரச்சனையா இருந்துச்சு.

நேத்து நம்ம கோவியார் பதிவைப் பார்க்கலையா?

அவர் சொன்னபடிச் செஞ்சு இப்ப எல்லாம் நன்றே:-)
கண்ணன் காட்டிய வழி!!!

Thamiz Priyan said...

///Thooya said...

//அக்கா உங்க பதிவில் ஸ்மைலி இருக்கு... அதான் திறக்கும் போது படபடவென எரர் அடிக்குது... அந்த நிரலை எடுத்துடுங்க//

நீங்கள் மேலே சொன்ன ஸ்மைலி கோட் இல்லை..வேறு ஏதும் இருக்குமோ? எப்படி அறிவது?///

உங்கள் பதிவின் சோர்ஸ் பார்த்ததில் அதில் ஸ்மைலி வரவ்ழைக்கும் கோட் உள்ளது. அதில் ஏதோ பிரச்சினை உள்ளது. சரி செய்யுங்கள்!
உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன்.

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...
எனக்கும் இது ஒரு பிரச்சனையா இருந்துச்சு.
நேத்து நம்ம கோவியார் பதிவைப் பார்க்கலையா?
அவர் சொன்னபடிச் செஞ்சு இப்ப எல்லாம் நன்றே:-)
கண்ணன் காட்டிய வழி!!!///
ஆமா டீச்சர்! அந்த பதிவை நேற்று கவனிக்கவில்லை.. இருந்தாலும் இதுவும் இருக்கட்டும்.

Anonymous said...

டெஸ்ட்