Saturday, October 11, 2008

மக்கள் டிவி’ கார்த்திகாவைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்!

.
.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்குப் பிறகு விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது மக்கள் டிவி. சினிமா, சீரியல்கள் அவை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை. மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் விரும்பிப் பார்ப்பது சொல் விளையாட்டு மற்றும் தமிழ் பேசு தங்கக் காசு மற்றும் செய்திப்பகுதி. அய்யா தொலைக்காட்சி என்பதால் மருத்துவர் ஐயாவின் புகழ் பாடுவதாக இருந்தாலும் பொதுவாக செய்திகளை விரும்பிப் பார்ப்பேன்.

இதில் முக்கியமாக சொல்ல வந்ததது சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சி பற்றித்தான். நேரடி ஒளிபரப்பாகவும், தொலைபேசியில் பேசும் வகையிலும் இருக்கும் நிகழ்ச்சி இது. மொத்தம் மூன்று சுற்றுக்களைக் கொண்டது. முதல் சுற்றில் தொலைக்காட்சி திரையில் வரும் குடுவையில் எழுத்துக்கள் பல இலக்கின்றி ஓடிக் கொண்டு இருக்கும். அவைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் வாக்கியத்தை சொன்னால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இரண்டாம் சுற்றில் திரையில் சில எழுத்துக்கள் தோன்றும். அவைகளை வைத்து குறைந்தபட்சம் பத்து வார்த்தைகள் சொல்ல வேண்டும். அதில் வெற்றி பெற்றால் பசுமைத் தாயகம் உள்ளிட்ட புத்தகங்கள் பரிசாக கிடைக்கும்.

மூன்றாம் சுற்றில் ஒரு புகைப்படத்தில் மீது ஒளிவட்டம் வரும். அதில் இருக்கும் பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பட்டுப் புடவை பரிசாக கிடைக்கும்.

இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்திகா தான். கார்த்திகா திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள். நல்ல அழகு தமிழில் எப்போதும் சிரிப்புடன் அவர் நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும். தற்போதைய தொலைக்காட்சி காம்பியர்களில் நன்றாக நடத்தக் கூடியவர்.அதனால் தான் தொகுப்பாளர்களில் கார்த்திகாவை மிகவும் பிடிக்கும். (தீபா வெங்கட் நல்லா இல்லியான்னு கேக்கப்படாது... அபி அப்பா கோச்சுப்பார்)

எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன். இதற்காகவே செல் பேசியில் எப்போதும் பணம் வைத்திருப்பேன். இதுவரை ஒருதடவை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. சில நேரங்களில் குடுவையில் இருக்கும் எழுத்துக்களைக் கூட்டி பெருக்கி சரியான வாக்கியத்தை வைத்து முயற்சி செய்தால் அதற்குள் நமது எதிரி யாராவது சொல்லி விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் பதில் தெரிகிறதோ இல்லையோ முயற்சி செய்கிறேன்.

என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.

வள்ளுவன் சொன்ன ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்று வாக்கு என்றென்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நண்பர் சுந்தரின் இந்த கவிதையை இங்கு தருவது பொறுத்தமாக இருக்கும்.

எழுத்துக்களை குடுவையினுள்
அடைத்துவிட்டு வாசிக்க சொல்கிறாய்
என் மனது குடுவையினுள்
இல்லை என்பது உணராமல் !

கட்டத்துக்குள் ஒரு சில எழுத்துக்கள்
வார்த்தைகளை உருவாக்க சொல்கிறாள்
என் மனதை கட்டம் கட்டியவள் !

நீ எப்போழுது வார்த்தையை
உருவாக்க சொன்னாலும்
"என்னவள் " என்றே சொல்வேன் !

யார் புகைப்படத்தையோ
மறைத்து விளையாடுகிறாய் !
என் புகைப்படம் எப்போழுது
ஒளித்து விளையாடுவாய் ?

உனக்கு பிடித்ததை பரிசாக
கொடுப்பதால், உனக்கே
திருப்பி தருவேன் என்கிற
நம்பிக்கை உனக்கு !

பட்டுப் புடவை பரிசு என்றாய் !

புகைப்படம் நன்றி : மரக்காணம் பாலா

டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))

உபரித் தகவல் :
அஞ்சாதே படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயலட்சுமி, கார்த்திகாவின் இளைய சகோதரி... படம்
மலேசிய நண்பனில் வந்த கார்த்திகாவின் பேட்டி

79 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு கார்த்திகா :)))))

மீ டூ எனக்கும் கூட இப்பலேர்ந்து நொம்ப பிடிக்கும் :)

ஆயில்யன் said...

//மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.
///

நம்பிக்கைத்தான் வாழ்க்கை (எனக்கு சொல்லிக்கிட்டேன்!)

ஆயில்யன் said...

//அய்யா தொலைக்காட்சி என்பதால் மருத்துவர் ஐயாவின் புகழ் பாடுவதாக இருந்தாலும் //

அட தமிழ்நாட்ல டிவின்னால அதானே :)))

ஆயில்யன் said...

//இதில் முக்கியமாக சொல்ல வந்ததது சொல் விளையாட்டு //

ஓ!

அப்ப முக்கியமில்லாத சொல்லவேண்டிய விசயங்கள் அடுத்த பதிவா வருமா?

ஆயில்யன் said...

//மூன்றாம் சுற்றில் ஒரு புகைப்படத்தில் மீது ஒளிவட்டம் வரும். அதில் இருக்கும் பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பட்டுப் புடவை பரிசாக கிடைக்கும்.
//

அடடே!
வெரிகுட்!

ஆயில்யன் said...

//இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்திகா தான். //

நல்லவேளை! எங்க நீங்க புது புது தமிழ்ச்சொற்கள்ன்னு சொல்லிடுவீங்களோன்னு ஒரு நிமிசம் பயந்தேபோய்ட்டேன் :))))

ஆயில்யன் said...

//எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன்.///

ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//நீ எப்போழுது வார்த்தையை
உருவாக்க சொன்னாலும்
"என்னவள் " என்றே சொல்வேன் !///

நானும் கூட சொல்வேன் என்னவள் என்று :)))

ஆயில்யன் said...

//இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))//

:(((

சாரி அவசரப்பட்டு இம்புட்டு கமெண்ட் போட்டுட்டேன் அழிச்சிடறேன் :((

ஆயில்யன் said...

மீ த பத்து !

உமக்கு ஊருக்கு போனா இருக்குது மொத்து!

தமிழ் அமுதன் said...

நிஜமா,
மக்கள் தொலைகாட்சியில் நல்ல பல நிகழ்ச்சிகள் வருகின்றன.
இந்த கார்த்திகாவின் தமிழும்.சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு!

நிகழ்ச்சிய நல்லாத்தான் கவனிச்சு இருக்கீங்க!!!

வெண்பூ said...

எல்லோருக்கும் கார்த்திகாவை பிடிப்பதற்கு காரணம் அவர் பேசும் தமிழ் இயல்பாக இருப்பதுதான். முழுவதும் தமிழில் பேச சிரமப்படாமல் அழகாக பேசுகிறார்..

உங்களுக்கு தெரியுமா? அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் திருமணம் ஆகிவிட்டது (அதனால என்ன? எனக்கும்தான் ஆயிடுச்சின்னு சொன்னீங்கன்னா உங்கள திருத்தவே முடியாது)... :)))))

cheena (சீனா) said...

மக்கள் தொலைக்காட்சி என்றாலே தமிழ் விளையாடும். அனைத்து நிகழ்ச்சிகளூமே ரசிக்கலாம். கார்த்திகாவினை ரசிப்பது தவறல்ல.

நிஜமா நல்லவன் said...

/மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை/

நம்பிட்டோம் தல...:)

நிஜமா நல்லவன் said...

/
இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்திகா தான். /

அதே...:)

Anonymous said...

/டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))/

சேச்சே...அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் அண்ணே....:)

செவத்தப்பா said...

மிகவும் பயனுள்ள பதிவு, பொதுஅறிவை வளத்துக்கொள்ள உபயோகமாயிருக்கும் என்பதைல் எள் அளவும் சந்தேகமில்லை! இந்நிகழ்ச்சியில் கூடுதலாகக் கிடைக்கும் விஷயமென்னவென்றால், நல்ல தமிழில் கார்த்திகா பேசுவது... நன்றி ஜின்னாஹ் (பதிவைத் தந்ததற்கு).

பரிசல்காரன் said...

சேம் ப்ளட் தோழர்!

எனக்கும் கார்த்திகாவை மிக மிகப் பிடிக்கும். மனைவியிடமே, கார்த்திகாவோட சிரிப்புக்கும், உச்சரிப்புக்கும்தான் நிகழ்ச்சியைப் பார்க்கறேன்னு சொல்லியிருக்கேன். கார்த்திகாவுக்கு கல்யாணமாயிடுச்சு!

நானும் முன்பு பலமுறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் ப்ரயத்தனப்பட்டிருக்கிறேன். இப்போது இல்லை!

ஜே கே | J K said...

ஏதோ ஒரு மாத இதழில் கூட பேட்டி வந்திருந்தது.

மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிறகு தமிழில் பேசுவதும், சேலை கட்டுவதும் ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லிருந்தாங்க.

சின்னப் பையன் said...

//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.
//

இப்படித்தான் நானும். ரொம்ப நாள் முயற்சித்து பிறகு எல்கேஜி சேர்ந்தபிறகு கடகடவென்று பேச ஆரம்பித்துவிட்டேன்......

பரிசல்காரன் said...

//ச்சின்னப் பையன் said...

Kalakkal Sathya! Supero Super!!

கானா பிரபா said...

கார்த்திகா நல்லா தான் தமிழ் பேசுகிறார். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ;)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வண்க்கம்.. நாந்தா மொக்கச்சாமி வந்திருக்கேன்..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆயில்யன் said...
நல்லா இருக்கு கார்த்திகா :)))))

சீக்கிரம் கல்யானம் பண்ண சொல்லுங்கண்ணே..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

///டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;))//

அப்படி சொன்னா வர்ர கஷ்டம் நமக்குத்தானே தெரியும்... :(

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//cheena (சீனா) said...
மக்கள் தொலைக்காட்சி என்றாலே தமிழ் விளையாடும். அனைத்து நிகழ்ச்சிகளூமே ரசிக்கலாம். கார்த்திகாவினை ரசிப்பது //

ஹலோ... அய்யா குரூப்லேர்ந்து ஆட்டோ வரும் பரவாயில்லயா?

சுரேகா.. said...

சர்ரி...நடக்கட்டும் நடக்கட்டும்

:)

மங்களூர் சிவா said...

//
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )
//

சரி போடலை

மங்களூர் சிவா said...

//
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )
//

நாங்கல்லாம் சொல்ல மாட்டோம்!! ஆனா..........:))

மங்களூர் சிவா said...

//
ஆயில்யன் said...

நல்லா இருக்கு கார்த்திகா :)))))

மீ டூ எனக்கும் கூட இப்பலேர்ந்து நொம்ப பிடிக்கும் :)
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

உபரித்தகவல் நன்று!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே உங்களுக்கு தமிழ் மேல நிரம்ப பற்று தான.,

லூங்கி

ஆப்பிள்

இதுக்கு சரியான தமிழ்ச்சொல் என்னன்னு

சொல்லுங்கணே..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//மங்களூர் சிவா said...
உபரித்தகவல் நன்று!//

தலைக்கு கல்யானம் ஆயிடுச்சில்ல..

அதான் ...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;))//

தலைவர இவங்கள நம்ப முடியாது...

நீங்க எதுக்கும் முன் ஜாமின் வாங்கிடுங்க... நானெல்லாம் அப்படித்தான்... :)))

புகழன் said...

மக்கள் டிவியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி “சின்னச் சின்ன ஆசை”

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். நன்றாக இருக்கும்.

முரளிகண்ணன் said...

சுவையான தகவல்களுடன் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு

முரளிகண்ணன் said...

சுவையான தகவல்களுடன் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் பிடிக்குமண்ணே ஆனா இப்ப மக்கள் ரிவி எங்க ஏரியாவுல வேலை செய்யறதில்லை...

தமிழன்-கறுப்பி... said...

கறுப்பு கலர்தானே அழகு அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

விஜயலட்சுமி சென்னை 28 படத்துலயும் வந்தாங்களே...:)

தமிழன்-கறுப்பி... said...

//
மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.
///

ஆமா நீங்க ஒரு காலத்துல ரம்பாவோட தீவிர ரசிகனா இருந்ததுக்கு நாங்க என்ன செய்ய முடியும்...;)

தமிழன்-கறுப்பி... said...

\\
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))
\\

கட்டாயமா அண்ணி கிட்ட சொல்லுவேன்...:)

தமிழன்-கறுப்பி... said...

சரியான கவிதை...

தமிழன்-கறுப்பி... said...

ஒரு தகவல்...

கார்த்திகா யாரோ ஒரு உதவி இயக்குனரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு ஒரு செய்தி வந்திச்சே...!

தமிழன்-கறுப்பி... said...

45...

gulf-tamilan said...

//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.//
போட்டிக்குதானே???

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
நல்லா இருக்கு கார்த்திகா :)))))
மீ டூ எனக்கும் கூட இப்பலேர்ந்து நொம்ப பிடிக்கும் :)///
ஹிஹிஹி... இப்ப அவங்க கணவருக்கு மட்டும் தான் அவங்களைப் பிடிக்கனுமாம்.. :(

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.
///
நம்பிக்கைத்தான் வாழ்க்கை (எனக்கு சொல்லிக்கிட்டேன்!)////
உண்மையை சொல்ல வர்ரவங்களை இப்படித்தான் சமுதாயம் நம்பிக்கை இல்லாம பார்க்குமாம்... உலக நியதிண்ணே... ;))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//அய்யா தொலைக்காட்சி என்பதால் மருத்துவர் ஐயாவின் புகழ் பாடுவதாக இருந்தாலும் //
அட தமிழ்நாட்ல டிவின்னால அதானே :)))///
நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க... உங்களுக்கு 100 மார்க் தரலாம்.. ;))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//இதில் முக்கியமாக சொல்ல வந்ததது சொல் விளையாட்டு //
ஓ!
அப்ப முக்கியமில்லாத சொல்லவேண்டிய விசயங்கள் அடுத்த பதிவா வருமா?///
அண்ணே! முடியல... விட்டுடுங்க.. அழுதுடுவேன்

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//மூன்றாம் சுற்றில் ஒரு புகைப்படத்தில் மீது ஒளிவட்டம் வரும். அதில் இருக்கும் பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பட்டுப் புடவை பரிசாக கிடைக்கும்.
//

அடடே!
வெரிகுட்!///
ஐய் ஆசையைப் பாரு? முதல்ல அண்ணி வரட்டும்.... அப்புறம் இருக்கு வேடிக்கை உங்களுக்கு

Thamiz Priyan said...

/// ஆயில்யன் said...

//இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))//

:(((

சாரி அவசரப்பட்டு இம்புட்டு கமெண்ட் போட்டுட்டேன் அழிச்சிடறேன் :((///

அப்ப நீங்களும் அந்த பட்டியலில் இருக்கீங்களா?.. இருங்கடி உங்களுக்கும் ஆகும்ல கல்யாணம் அப்ப வைக்கிறோம்... அண்ணிகிட்ட ஆப்பை எல்லாம்... ;)))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
மீ த பத்து !
உமக்கு ஊருக்கு போனா இருக்குது மொத்து!///
நாங்க கைப்புள்ள ரசிகருக... அடி வாங்கி வாங்கி மரத்து போச்சு. உங்களுக்கு தான் இன்னும் பழக்கமாகலை. கல்யாணம் ஆனது இருந்து மண்டகப்படி...;)))

Thamiz Priyan said...

///ஜீவன் said...

நிஜமா,
மக்கள் தொலைகாட்சியில் நல்ல பல நிகழ்ச்சிகள் வருகின்றன.
இந்த கார்த்திகாவின் தமிழும்.சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு!

நிகழ்ச்சிய நல்லாத்தான் கவனிச்சு இருக்கீங்க!!!///
ஆமாம் ஜீவன்! நன்றி!

Thamiz Priyan said...

///வெண்பூ said...
எல்லோருக்கும் கார்த்திகாவை பிடிப்பதற்கு காரணம் அவர் பேசும் தமிழ் இயல்பாக இருப்பதுதான். முழுவதும் தமிழில் பேச சிரமப்படாமல் அழகாக பேசுகிறார்..
உங்களுக்கு தெரியுமா? அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் திருமணம் ஆகிவிட்டது (அதனால என்ன? எனக்கும்தான் ஆயிடுச்சின்னு சொன்னீங்கன்னா உங்கள திருத்தவே முடியாது)... :)))))///

அண்ணே! நாங்கலெல்லாம் படிக்கும் காலத்திலேயே சினிமா பார்க்கும் போது கதாநாயகியை பார்க்கும் பழக்கமே கிடையாது... ( அப்ப வேற யாரைப் பார்ப்பீங்கன்னு கேட்டா நம்மளை எல்லாம் திருத்தவே முடியாது.. ;)) )

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...

மக்கள் தொலைக்காட்சி என்றாலே தமிழ் விளையாடும். அனைத்து நிகழ்ச்சிகளூமே ரசிக்கலாம். கார்த்திகாவினை ரசிப்பது தவறல்ல.////

பாருங்க சீனா சாரே சொல்லிட்டார். இனி பயமே இல்லை எனக்கு.. :))

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...
/மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை/
நம்பிட்டோம் தல...:)////
அண்ணே! நம்பித்தான் ஆகனும்... நாங்களெல்லாம் நல்லவங்க.. :))

Thamiz Priyan said...

/// நிஜமா நல்லவன் said...
/
இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்தகா தான். /
அதே...:)///
பாருங்கப்பா.. இவர் நல்லவராம்.. நாங்களும் நம்பிட்டோம்.. ;))

Thamiz Priyan said...

///கூட்டு களவானி said...
/டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))/
சேச்சே...அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் அண்ணே....:)///

யேய்! அவனா நீ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///செவத்தப்பா said...
மிகவும் பயனுள்ள பதிவு, பொதுஅறிவை வளத்துக்கொள்ள உபயோகமாயிருக்கும் என்பதைல் எள் அளவும் சந்தேகமில்லை! இந்நிகழ்ச்சியில் கூடுதலாகக் கிடைக்கும் விஷயமென்னவென்றால், நல்ல தமிழில் கார்த்திகா பேசுவது... நன்றி ஜின்னாஹ் (பதிவைத் தந்ததற்கு).///

நண்பரே! நீங்க உண்மையிலேயே நல்லவர் தான்.. :)

Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...

சேம் ப்ளட் தோழர்!

எனக்கும் கார்த்திகாவை மிக மிகப் பிடிக்கும். மனைவியிடமே, கார்த்திகாவோட சிரிப்புக்கும், உச்சரிப்புக்கும்தான் நிகழ்ச்சியைப் பார்க்கறேன்னு சொல்லியிருக்கேன். கார்த்திகாவுக்கு கல்யாணமாயிடுச்சு!

நானும் முன்பு பலமுறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் ப்ரயத்தனப்பட்டிருக்கிறேன். இப்போது இல்லை!///

பாத்தீங்களா? பரிசலும் நானும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறோம்... அண்ணே! நாமெல்லாம் நல்லவங்க.. நல்ல மாதிரி யோசிக்கிறொம். ஆனா இந்த மக்களுக்கு புரிவதில்லை பாருங்க... ;))))

Thamiz Priyan said...

///ஜே கே | J K said...

ஏதோ ஒரு மாத இதழில் கூட பேட்டி வந்திருந்தது.

மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிறகு தமிழில் பேசுவதும், சேலை கட்டுவதும் ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லிருந்தாங்க.////
ரொம்ப நன்றி J K. தளயைக் கேட்டதா சொல்லுங்க.. :)

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...
//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.
//
இப்படித்தான் நானும். ரொம்ப நாள் முயற்சித்து பிறகு எல்கேஜி சேர்ந்தபிறகு கடகடவென்று பேச ஆரம்பித்துவிட்டேன்......///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்களை உங்க மாமியார் கொடுமை செய்வதில் தப்பை இல்லை என இப்பத்தான் புரியுதுங்க.... ;))

Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...
//ச்சின்னப் பையன் said...
//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.
//
இப்படித்தான் நானும். ரொம்ப நாள் முயற்சித்து பிறகு எல்கேஜி சேர்ந்தபிறகு கடகடவென்று பேச ஆரம்பித்துவிட்டேன்......
//
Kalakkal Sathya! Supero Super!!///

இருங்க.. அண்ணிகிட்ட சொல்றேன்.. அப்புறம் வாயை எப்படி திறப்பீங்கன்னு தெரியும்.. ;))

Thamiz Priyan said...

///கானா பிரபா said...

கார்த்திகா நல்லா தான் தமிழ் பேசுகிறார். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ;)///

நன்றி பிரபா அண்ணே!

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆயில்யன் said...
நல்லா இருக்கு கார்த்திகா :)))))

சீக்கிரம் கல்யானம் பண்ண சொல்லுங்கண்ணே..///
பொண்ணு பார்க்கக் கூட ரெடியா தான் இருக்கோம்... தல ரெடி இல்லையாமே?... ;))

Thamiz Priyan said...

///சுரேகா.. said...
சர்ரி...நடக்கட்டும் நடக்கட்டும்
:)///
ஹிஹிஹிஹி ... நல்லது சுரேகா!

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
//
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )
//
சரி போடலை///
நன்றிண்ணே!

Thamiz Priyan said...

///மங்ளூர் சிவா said...
//
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )
//
நாங்கல்லாம் சொல்ல மாட்டோம்!! ஆனா..........:))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அண்ணே உங்களுக்கு தமிழ் மேல நிரம்ப பற்று தான.,
லூங்கி
ஆப்பிள்
இதுக்கு சரியான தமிழ்ச்சொல் என்னன்னு
சொல்லுங்கணே..///
எத்தனை நாளா இந்த கொலவெறியோட இருக்கீங்க.. :(

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;))//
தலைவர இவங்கள நம்ப முடியாது...
நீங்க எதுக்கும் முன் ஜாமின் வாங்கிடுங்க... நானெல்லாம் அப்படித்தான்... :)))///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///புகழன் said...
மக்கள் டிவியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி “சின்னச் சின்ன ஆசை”
வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். நன்றாக இருக்கும்.///
நன்றி புகழன்.. பார்க்க முயற்சி செய்கிறேன்.

Thamiz Priyan said...

//தமிழன்... said...

கறுப்பு கலர்தானே அழகு அண்ணே...///
கண்டிப்பா தமிழன்!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

\\
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))
\\

கட்டாயமா அண்ணி கிட்ட சொல்லுவேன்... ///
நீயெல்லாம் ஒரு தம்பியா? அவ்வ்வ்வ்வ்வ்வ் ;)

Thamiz Priyan said...

///முரளிகண்ணன் said...

சுவையான தகவல்களுடன் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு///
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

ஒரு தகவல்...

கார்த்திகா யாரோ ஒரு உதவி இயக்குனரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு ஒரு செய்தி வந்திச்சே...!////
அதனால நமக்கு என்ன தமிழன்?... ;))

Thamiz Priyan said...

///tamil144 said...

//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.//
போட்டிக்குதானே???///
ஹிஹிஹிஹி அதே தான்ப்பா

ஈரோடு கதிர் said...

kaarthika preganent now

ஆதவா said...

நாங்க(வீட்டில் உள்ள எல்லோரும்தான்) எல்லோருமே கார்த்திகாவோட ரசிகர்கள்தான்... அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு.. அழகான முகம். அம்சமான அவதானிப்பு...

வாழ்த்துகள்!!!